தியோ ஏஞ்சலோ பவுலோஸ் சினிமா தத்துவம்
10 ஏஞ்சலோ பவுலோஸின் திரைப்படத் தத்துவம் ஜெரால்ட் ஓ கிரேடி – 1990 ஆங்கில மூலம்: டான் பைனாரு தமிழில் - லாய்ட்டர் லூன் செப். 2 ஞாயிறு தியோ ஏஞ்சலோ பவுலோஸின் ஏதேன்ஸ் அலுவலகத்திஃ அவரளித்த நேர்காணல் இது. கிரீக் திரைப்பட மையம் சார்ந்த ஜார்ஜ் காலோயேரோ பவுலோஸ் இருவருக்குமிடையே இடைமுகமாக செய்திகளை மொழிபெயர்த்தார். இப்பிரதியை மொழிபெயர்க்க உதவியவர்கள் ஸ்பீவ் தந்தோலாஸ் மற்றும் ஸ்பீஃபனோஸ் பாப்பஸாரியாஸ் ஆகியோராவர். 20 ஆண்டுகளில் நீங்கள் முழு நீளத்திரைப்படங்களாக எட்டு படங்களை உருவாக்கியுள்ளீர்கள். தங்களது படங்கள் ஐரோப்பா, ஜப்பான் உள்பட பல நாடுகளிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. ஆனால் இங்கே அமெரிக்காவிலோ உங்களது படங்கள் அரிதாகவே திரையிடப்படுகின்றன. பிப்ரவரி மாதம் நவீன கலை அருங்காட்சியகம் தங்களைக் குறித்து அறிமுகம் இயக்குநர்களான அண்ட்டோனியோனி, மிஸோகுயூசி, தர்க்கோவ்ஸ்கி என மதிப்பிடப்படும் தங்களின் திரைப்படங்கள் குறித்து அமெரிக்க மக்களுக்கோ, திரைப்பட விமர்சகர்களுக்கோ கல்வி நிறுவனங்களுக்கோ கூட தெரியவில்லை. முதல் பணியாக தங்களது திரைப்