இடுகைகள்

டாஸ்மாக் விற்பனை சரிவு, மாசுபாட்டில் சௌகார்பேட்டை டாப் 1!

படம்
நடந்து முடிந்த ஒளி உற்சவத் திருவிழாவில் மார்வாடி, சேட்டுகள் கொண்ட சௌகார் பேட்டை மாசுபாட்டை அதிகம் நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை விட மாசுபாட்டின் அளவு குறைவு என்பது மகிழ்ச்சி. காற்றில் உள்ள அனுமதிக்கப்பட்ட மாசுக்களின் அளவு 100 எனும்போது, சௌகார்பேட்டையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதில் 128  மைக்ரோகிராம் எனும் அளவில் மாசுத்துகள்கள் அதிகரித்துள்ளன. பட்டாசுகளின் ஒலி அளவு 55 டெசிபல் பாதுகாப்பான அளவு என அரசு கூறியது. 73 டெசிபலில் பட்டாசு வெடித்து தீபாவளியை டரியல் ஆக்கி உள்ளனர் சென்னை குடிமகன்கள். அரசுக்கு அவசர உதவியை நாடி 27 போன் அழைப்புகள் வந்துள்ளன. தீபாவளி ராக்கெட்டை மூடிய வீட்டுக்குள் விட்டு தீப்பற்றியது, பைக்கில் தீப்பற்றியது, ராக்கெட் எல்பிஜி கேஸில் தாக்கி தீப்பற்றியது என புகார்களின் பட்டியல் செல்கிறது. அரசு மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு தொடர்பான பிரச்சனைகளுக்காக 75 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். டாஸ்மாக்கில் தீபாவளி வருமானம் 355 கோடியாக உள்ளது. சாதாரண நாட்களில் வருமானம் 330 கோடி என்றால் விற்பனை வளர்ச்சியை புரிந்துகொள்ளலாம். மதுரை, சிவகங்கையில் குருபூஜை காரண

பட்டாசுக் குப்பைகளை என்ன செய்வது?

பங்குனித்தேர் விழாவின் போது மயிலாப்பூரில் சோறு எப்படி மூலைக்கு மூலை சிதறிக் கிடக்குமோ, அதைவிட அதிகமாக பட்டாசு குப்பைகள் இன்று தமிழகம் முழுக்க கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது. சென்னை நகரம் இந்த தீபாவளிக்கு 82 டன் குப்பைகளை உற்பத்தி செய்திருக்கிறது. இதிலும் அடையாறு, ராயபுரம் பகுதி பட்டாசு குப்பைகளை உற்பத்தி செய்த தில் முன்னிலை வகிக்கும் பகுதிகள். இதனை தூய்மை செய்யும் பணியில் 19 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடையே மழை வேறு பெய்வதால், பணியாளர்களுக்கு பதிலாக குப்பைகளை அதுவே ஓரங்கட்டி விடுகிறது. பட்டாசுக் குப்பைகளில் வேதிப்பொருட்கள் இருக்கின்றன என்பதால், அதனை திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியிலுள்ள திடக்கழிவு நிலையத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். இங்கு ஆபத்தான திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். கடந்த ஆண்டு உருவான பட்டாசு குப்பைகளின் அளவு 90 டன்கள். தூய்மை பணியாளர்கள் வேலைக்கு முன்னதாகவே வந்து பணிகளை செய்துள்ளனர். சாதாரண நாளில் சென்னையில் 5250 டன்கள் குப்பை உருவாகிறது. மாநகராட்சி வீட்டுக்கழிவுகள் மற்றும் ப

நாயைப் போல இறந்தார் ஐஎஸ் தீவிரவாதித் தலைவர் அல் பக்தாதி!

படம்
புஷ் சதாமை ஒழித்தார். பாரக் ஒபாமா, பின்லேடனை தீர்த்து கட்டினார். இந்த வரிசையில் டிரம்ப், அல் பக்தாதியை நாயைப்போல சுட்டு கொன்றிருக்கிறார். நாய் வார்த்தை நாம் கூறியதல்ல. டிரம்பே தன் ஸ்டைலில் சொன்ன வார்த்தை. ஞாயிற்றுக்கிழமை. நாம் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்த போது, 8 அமெரிக்க  விமானங்கள் ஈராக்கின் விமானத்தளத்திலிருந்து கிளம்பின. அவை நேராக சிரியாவை நோக்கி சென்றன. 70 நிமிஷ பயணத்தில் மேற்கு சிரியாவிலுள்ள பாரிஷா எனுமிடத்தை அடைந்தன. டெல்டா ஃபோர்ஸ் படையின் ஆதரவுடன் அமெரிக்க விமானங்கள் பக்தாதி பதுங்கியிருந்த இடத்தை நோக்கி தாக்கத் தொடங்கின. கமாண்டோக்கள் ஐஎஸ் தீவிரவாதிகளின் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அல் பக்தாதி தன் மூன்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தரைக்கு கீழே இருந்த பதுங்குமிடத்திற்கு சென்றார். அவர் தற்கொலை குண்டுகளைக் கொண்ட ஆடைகளை அணிந்திருக்கிறாரோ என கமாண்டோக்கள் அஞ்சினர். இதனை அறிய  ராணுவ நாய்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இறுதியில் தப்பிக்க முடியாத பக்தாதி, குண்டுகளை வெடிக்க வைத்து தன் மகன்களோடு தற்கொலை செய்துகொண்டார். அல் பக்தாதி கொலைத் திட்டத்திற்

சீரியல் கொலைகாரர்களுக்கான வரையறை!

படம்
unspalsh.com அசுரகுலம் ரத்த தடங்களைத் தேடி சீரியல் கொலைகார ர்களுக்கும் மற்றவர்களுக்கு என்ன தொடர்பு என முதலில் நாம் தெளிவாக வேண்டும். குடும்பத்திலுள்ள உள்ளவர், தன்னுடைய ரத்த சொந்தத்தைக் கொல்கிறார். என்ன காரணம், சொத்து என போலீஸ் முடிவு செய்து உள்வட்ட விசாரணையில் கேசை மூடிவிடும். ஆனால் சைக்கோ கொலைகாரர்கள் விஷயத்தில் யோசிப்பதே வேறுவிதமாக இருக்கவேண்டும். அமெரிக்க அரசின் எஃப்பிஐ, சீரியல் கொலைகார ர்களுக்கு மூன்று கொலைகள் செய்யவேண்டும் என்ற வரையறையை வைத்திருக்கிறது. இன்று அவை மாறிவிட்டன என்றாலும், குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று கொலைகள்  என்பது சீரியல் கொலைக்காரர் என அடையாளப்படுத்துவதற்கான முதல் பாய்ன்ட். பின்னர் கொலை எப்படி நடந்தது, பாலியல் வல்லுறவு, சித்திரவதை ஆகியவை இதில் சேர்க்கப்பட்டன. அமெரிக்காவில் இப்போது இனவெறி தூண்டுதலாக துப்பாக்கியை எடுத்து பள்ளிகளிலோ, தியேட்டர்களிலோ சென்று சுடும் பழக்கம் இருக்கிறது. அதனை திரள் கொலைகள் என வகைப்படுத்தலாம். இதில் சீரியல் கொலை என்ற பதம் உதவாது. ஒருவருக்கு மனநலம் பாதித்து அதன் விளைவாக நிறையப் பேரை கொல்கிறார். தனக்கு சரியான சமயத்தில் உதவாத

உறக்கம் உயிரைப் பறிக்கிறதா? - இங்கிலாந்தில் அடிக்கிறது அலாரம்!

படம்
giphy.com  ஐரோப்பிய நாடுகளில் விரைவில் ஓட்டுநர்களின் உறக்கப் பிரச்னையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் புதிதாக தயாரிக்கப்படும் கார்களில் விபத்தைக் குறைப்பதற்காக முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இவை 2022 இல் அமலுக்கு வரும்.  காரில் உறக்கத்தைக் கண்காணிக்கும் கருவி, கருப்புப்பெட்டி ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. என்ன காரணம், அதிகரித்து வரும் விபத்துகள்தான். 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஐரோப்பாவில் 25 ஆயிரத்து 300 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் விபத்துகளால் படுகாயமுற்றுள்ளனர். இந்நாடுகளில் சாலை விபத்துகளில் பலியாகுபவர்களின் எண்ணிக்கையை  2030க்குள் 7 ஆயிரமாக குறைக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஓட்டுநருக்கான மேம்பட்ட உதவி அமைப்புகளை( ADAS) உருவாக்குவதற்கான அறிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரலில் உருவாக்கியது. இதில் 15 புதிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறவிருக்கின்றன. “நீங்கள் இந்த வசதிகளை காரில் முதன்முறையாக பாதுகாப்பு சீட்பெல்ட் அறிமுகமானது போலத்தான் பார்க்கவேண்டும்” என்கிறார் ஐரோப்பிய யூனியன

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை! - இந்தியா செய்ய வேண்டியது என்ன?

படம்
giphy.com ஊட்டச்சத்து பற்றாக்குறை! இந்தியாவில் தொற்றாநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஐந்து வயது முதல் ஒன்பது வயது குழந்தைகள், இளம் வயதினர்களில் பத்து வயது முதல் பத்தொன்பது வயது கொண்டவர்களும் தொற்றாநோய்களில் அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய ஊட்டச்சத்து ஆய்வு முடிவுகள் (CNNS) கூறுகின்றன. இந்த ஆய்வு, 2016 முதல் 2018 வரையில் நடந்த நுண்ணூட்டச்சத்து ஆய்வாகும். இதன் விளைவாக பள்ளி செல்லும் குழந்தைகளில் பத்தில் ஒருவருக்கு முன்கூட்டியே நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பாக விரிவாக செய்த ஆய்வில், குழ்ந்தைகளுக்கு ஏற்படும் தொற்றாநோய்களின் பாதிப்பு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதம் பேரும்,  பள்ளி செல்லும் சிறுவர்களில் 22 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்துக் குறைவு பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மக்கள்தொகை அதிகம் கொண்ட பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன. ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஊட்டச்சத்து பாதிப்பு குறைவாக காணப்பட்டது.  குழந்தைக

நீலநிற சீஸ் என்ன செய்யும்?

படம்
மிஸ்டர் ரோனி நீலநிற சீஸை உண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமா? சரிவிகிதமான உணவைச் சாப்பிட்டால்தான் உடல் சரியாக இயங்கும். நீங்கள் கூறும் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டால் மட்டும் பாக்டீரியாக்களை எதிர்கொள்வதற்கான வழி பிறந்துவிடாது. ஆன்டி பயாடிக் மருந்துகள் கூட இன்று பாக்டீரியாக்களுக்கு எதிராக தேங்கி விட்டன. பாக்டீரியாக்களில் பலவீனமாக உள்ளவற்றை மட்டுமே அவை எதிர்கொண்டு தாக்கி அழிக்கின்றன. பென்சிலினை சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தினால் நீங்கள் சொன்னது போல, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. வயிற்றிலுள்ள நன்மை, கெடுதல் செய்யும் பாக்டீரியா என அனைத்துமே அழியும் விளைவுதான் ஏற்படும். எனவே மருந்தை மருந்தாக பயன்படுத்துவதே நல்லது. நன்றி - பிபிசி

கற்பழிப்பிலும் காட்டிய கருணை - பாபிக்கு ஆப்பு!

படம்
பாபி ஜோ லாங் 3 பாபிக்கு மனைவியிடம் மூன்று முறை இசைவாக செக்ஸ் அனுபவித்தாலும் ஏதோ ஒன்று குறைந்தது. எனவே, அவரிடம் உடலுறவு அனுபவிப்பதைக் குறைத்துக்கொண்டு தனக்கான இரையை வெளியில் தேடத் தொடங்கினார். புளோரிடாவில் உள்ள மியாமி, ஓக்லா ஆகிய ஏரியாக்களைத் தேர்ந்தெடுத்தார். முந்தை அத்தியாயத்தில் சொல்லியிருப்பது போலத்தான். பொருட்களை விற்கும் விளம்பரங்களை உள்ளூர் நாளிதழில் படித்துவிட்டு முகவரியைக் குறித்துக்கொள்வார். பின் நேராக நடையைக் கட்டி, வீட்டைச் சுற்றி நோட்டமிடுவார். பெண்கள் இருப்பது தெரிந்தால் களத்தில் இறங்கிவிடுவார். வீட்டுக்குள் சென்று பொருட்களின் விலை விசாரிப்பார். வலுவான ஆண்கள் இல்லையென்றால் ரைட் என பெண்களை மிரட்டி, கட்டிப்போட்டு முடிந்தளவு வன்புணர்வு செய்துவிடுவார். அவ்வளவுதான். விடுவென கிளம்பி வந்துவிடுவார். இம்முறையில் 1980 -83 வரையில் பதினைந்து வல்லுறவுகளை வெற்றிகரமாக செய்தார். பின்னர் புகார் போலீசுக்குப் போனது.  தீவிரமாக பாபியைத் தேடினர். அதோடு விட்டார்களா?  வான்ட் ஏட் ரேபிஸ்ட் (want ad rapist) என்ற பெயரில் நோட்டீஸ் அடித்து ஒட்டி தேடி வந்தனர். பாபிக்கு இதெல்லாம் சுத்தமா

தூய இந்தி மொழி சாத்தியமில்லை! - சேட்டன் பகத்

படம்
டில்லியில் புதிய அரசு எப்போது ஆட்சி அமைத்தாலும் இந்தி சார்பான ஆதரவை எப்போதும் காட்டுவார்கள். காங்கிரஸ் முதல் பாஜக வரை இந்தி பிரசார சபையில் நின்று மொழி வீரம் பேசுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் இவர்கள் என்ன சாதிக்கிறார்கள் என்று இதுவரையிலும் புரியவில்லை. இந்தியா பன்மைத்துவமான தேசம். அரசு கூறும் புள்ளிவிவரங்களில் இந்தி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து, தெலுங்கு, மராத்தி, தமிழ் என இடம்பெறுவது மாறவே இல்லை. பின் எதற்கு இந்தி படி என்று காட்டுக்கத்தல் வட இந்தியாவிலிருந்து எழுகிறது. காரணம், ஆட்சியில் உள்ளவர்கள் பிராமணர்கள் என்ற காரணம்தான் தேடினால் தட்டுப்படுகிறது. பாஜக நேரடியாக சமஸ்கிருதத்தை நோக்கி பயணித்துவருகிறது. இந்தி என்பது சமஸ்கிருதம் எனும் லட்சியத்தை அடைய உதவும் படகுதான். பிறகு இந்தியை கைவிட்டு விடுவார்கள். இன்றைய இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா முதற்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் வரை இந்தி விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் இந்தி பேசுகிறார்கள் என்பதை அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களே சொல்லுகின்றன. பின் என்ன? எதற்கிந்த

ஓயின் பாட்டில்களை கிடைமட்டமாக வைப்பது ஏன்?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி ஓயின் பாட்டில்களை கிடைமட்டமாக வைப்பது ஏன்? இப்படியெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கவேண்டும் என்பதால்தான். சும்மா ஜாலிக்காக சொன்னேன். பொதுவாக பாட்டிலை மூடியுள்ள கார்க் தன் ஈரப்பதத்தை இழக்க கூடாது என்பதுதான் கான்செஃப்ட். கிடைமட்டமாக ஒயின் பாட்டிலை வைக்கும்போது அதன் தரம்  கூடுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். பாட்டிலிலுள்ள நொதித்தலும் சீராக நடைபெறுகிறது. நன்றி - பிபிசி

வெயில், மழையால் மனநிலை மாற்றங்கள் நடக்குமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி வெயில் அதிகரிக்கும்போது நமக்கு ஏன் கோபம் அதிகரிக்கிறது? வரிசையில் ரேஷன் வாங்க நிற்கிறீர்கள். அப்போது டீன் ஒருவன் கேசுவலாக உள்ளே வந்து அண்ணே அரிசியைப் போடுங்க என்று கார்டை நீட்டினால், டேய் வரிசையில் வந்து நில்லு என்று சொல்லுவீர்கள்தானே?  அனைவரும் கடையில் நின்று பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது குறுக்கே ஒரு சிறுவன் புகுந்து இந்த லிஸ்டுல இருக்குற பொருட்களைக் கொடுங்க அங்கிள் என என்று சொன்னாலும் இதே போலத்தான் நமக்கு கோபம் பொங்கும். ஆனால் இந்த கோபத்திற்கும் அன்று உதித்த சூரியனுக்கும் தொடர்பு இருக்கிறது. 1990 களில் இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், வெயில் அதிகமாக இருந்தபோது குற்றச்சம்பவங்கள் 2.7 சதவீதம் அதிகரித்ததாக கண்டுபிடித்தனர். இது இந்த நாடு மட்டுமல்ல, வெயில் அதிகமாக உள்ள நாடுகளில் அனைத்திலும் கோபக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களும் நிறைந்து உள்ளன. 2016 ஆம் ஆண்டு டெக்ஸாசிலுள்ள டெக் பல்கலைக்கழகத்தில் இரண்டு விளையாட்டு வீர ர்களிடையே இச்சோதனையை செய்தபோது, வெயில் அதிகமாக இருந்தபோது நிறைய பந்துகளை பௌல் செய்து அலம்பல் செய்த