இடுகைகள்

மேகன் ராபினோ - பெண்களுக்கான உரிமைப் போராளி

படம்
  மேகன் ராபினோ - கால்பந்து உலகின் கலகத் தலைவி மேகன் ராபினோ மேகன் ராபினோ தனது இணையரான சூ பேர்டுடன்... மேகன் ராபினோ – கால்பந்து உலகின் உரிமைப் போராளி   பெண்கள் கால்பந்துபோட்டிகளை ஆக்ரோஷமானதாக மாற்றி அதை லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும்படி செய்த அமெரிக்க விளையாட்டு வீரர்களில் முக்கியமானவர் மேகன் ராபினோ. இவரது தந்தை கட்டடங்களை கட்டித்தரும் ஒப்பந்ததாரர். அம்மா, ஹோட்டல் ஒன்றில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். ராபினோவுக்கு, அவருடன் பிறந்த இரட்டையரான சகோதரி ஒருவர் உண்டு. தற்போது 38 வயதாகும் மேகன் ராபினோ, இளம் வீரர்களுக்கு முன்மாதிரியான வீரர்.   ஐந்து அடி ஏழு அங்குலம்   உள்ள இவர், பெண்களுக்கு சம ஊதியம், பால்புதுமையினருக்கு விளையாட்டு அணியில் விளையாட உரிமை ஆகியவற்றை கேட்டு போராடி வருகிற போராளி. டச் மோர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சூ பேர்ட் என்ற தனது காதலருடன் இணைந்து தொடங்கி நடத்தி வருகிறார். அமெரிக்காவில் ராபினோவுக்கு பெண்கள் மத்தியில் பெரும் மரியாதை உண்டு. அதை அவர் களத்திலும் களத்திற்கு வெளியிலும் சம்பாதித்துக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.   2019ஆம் ஆண்டு அமெரிக்க பெண்கள் கால்பந்து

ரஷ்யாவின் கிரெம்ளினுக்கு பணிந்து மக்களைக் காட்டிக்கொடுக்கும் டெலிகிராம் ஆப்!

படம்
  டெலிகிராம் ஆப் - ரஷ்யா அரசின் உறவு டெலிகிராமை வளைக்கும் ரஷ்யா ரஷ்யாவுக்கு பணிந்துபோகும் டெலிகிராம் நிறுவனம்! டெலிகிராம் என்றில்லை. எந்த ஒரு டெக் நிறுவனமும் குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள அரசுகளின் விருப்பத்திற்கு, விதிகளுக்கு பணிய வில்லை என்றால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அதை தடை செய்வார்கள். வருமான இழப்பை டெக் நிறுவனத்தை நிலைகுலைய வைக்கும். இந்த நிலையில் நிறுவனம் அரசுடன் பரஸ்பர சகாய ஒப்பந்தத்திற்கு வந்தே ஆக வேண்டும். டெலிகிராம் கூட பரவாயில்லை. நெருக்கடி கொடுத்து அதை கீழே வீழ்த்தினார்கள். ஆனால், மெட்டாவின் குறுஞ்செய்தி, சமூக வலைத்தள நிறுவனங்கள் உலகமெங்கும் சர்வாதிகார அரசுகளிடம் மண்டியிட்டு காசு வாங்கிக்கொண்டு இயங்கி வருகிறார்கள். மெட்டா அதிக பயனர்களைக் கொண்டுள்ள நாடுகளில் கலவரம், போராட்டம், இனவெறி என அமைதி இல்லாத நிலையே நிலவுகிறது. இதை எந்த ஊடகங்களும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.   ரஷ்யாவில் உள்ள அரசியல் சமநிலை குலைவைப் பற்றிய செய்திகளை நாளிதழில் படித்திருப்பீர்கள். டிவி சேனல்களில் செய்தித்தொகுப்புகளையும் பார்த்திருப்பீர்கள். அங்குள்ள தனியார் கூ லிப்படை ராணுவமே, அரசின் நகரங்க

மனதிற்கு தேவையான விடுமுறை!

படம்
  நிறையபேருக்கு வேலை கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. லிங்க்டு இன் தளத்தில் கூட புலம்பல்கள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் வேலை செய்வதிலும் அதில் உண்டாகும் மன அழுத்தத்தை போக்கிக்கொள்வதும் பெரும் பிரச்னையாகத்தான் இருக்கிறது.   சில நிறுவனங்களில் உலகின் சூழல்களை புரிந்துகொள்ளாமல் ஆறுநாட்கள் வேலை நாட்களாக வைத்திருப்பார்கள். ஞாயிறு என்ற ஒருநாளில் ஒருவர் எங்கு போய்விட்டு வந்து திங்கட்கிழமை வேலைக்கு உற்சாகமாக வர முடியும் என்ற பொது அறிவு கூட இல்லை.   ஞாயிறு நிறைய கடைகள் இயங்காது. அவர்களுக்கும் ஓய்வெடுக்க ஒரு நாள் வேண்டுமே? இதில் அவர்களையும் குறை சொல்ல முடியாது. இந்த லட்சணத்தில் மனதை விடுமுறைக்கு ஏற்றபடியாக மாற்றிக்கொண்டால் என்ன என்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். ஆய்வில், 441 அமெரிக்க பணியாளர்கள் பங்கு பெற்றனர். ஆய்வை கேஸி மோகில்னர் ஹோம்ஸ் என்ற யுசிஎல்ஏ பல்கலைக்கழக பேராசிரியர் நடத்தினார். அதாவது வெளியில் எங்கும் செல்லாமலேயே மனநிலையை விடுமுறையில் இருப்பது போல மாற்றிக்கொள்வதுதான் மையப்பொருள். இப்படி மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் வேலையில் மன அழுத்தம் கொள்வதில்லை.   தொய்வடையாமல் பணிபுர

எனது அனுபவம் சார்ந்து உணர்ந்த அறிவியல் உண்மைகளை பேசுகிறேன்! ஆண்ட்ரூ ஹூயூபர்மன், ஆய்வாளர்

படம்
  ஆண்ட்ரூ ஹூயூபர்மன், நரம்பியல் ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹூயூபெர்மன் நரம்பியல் ஆய்வாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பல்லாயிரம் மக்கள் உங்களது அறிவியல் பாட்காஸ்டை கேட்கத்தொடங்கியுள்ளார்களே எப்படி? மக்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அறிவியலைக் கற்க வேண்டுமென விரும்புகிறார்கள். இப்போது நான் கூறுவது சற்று உணர்ச்சிகரமான வாசகங்களாக தோன்றலாம்.   உயிரியல் என்பது அழகானது. அதிலுள்ள உயிரினங்கள் போலவே நாமும்   உருவாகி வந்தவர்கள்தான். நம்மைப் பற்றிய அறிவியலும், நம்மைக் கடந்து பிற உயிரினங்களையும் பார்ப்பது சுவாரசியமான ஒன்று. பொதுவான அறிவியலாளர்களை விட ஹூயூபர்மன் லேப் பாட்காஸ்டிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் இதை பாட்காஸ்ட் கேட்கும் நேயர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் இதற்கு காரணம் என நினைப்பது, மக்களிடம் நேரடியாக கருத்துகளை பகிர்வதுதான் என்பேன். ஆடியோவாக இருந்தாலும், செய்தி துணுக்காக இருந்தாலும் என்னுடைய அனுபவம் சார்ந்து அதை பேசுகிறேன். ஆழமான கவனித்தலின் அடிப்படையில் இருப்பதால், மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்

என்னால் முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்! - பெரிதாகவே சிந்தியுங்கள் - ரியோ ஒகாவா

படம்
  ரியோ ஒகாவா, எழுத்தாளர்,ஆன்மிக தலைவர் பெரிதாக சிந்தியுங்கள் ரியோ ஒகாவா ஜெய்ஹோ பதிப்பகம் பக்கம் 135   ஹேப்பி சயின்ஸ் என்ற ஜப்பானின் மிகப்பெரும் ஆன்மிக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் ரியோ ஒகாவா எழுதியுள்ள நூல். இந்த நூலைப் பற்றிய விமர்சனத்தை நாம் எழுதிக்கொண்டிருக்கும்போது , அவர் கோஸ்ட் ரைட்டர்களை வைத்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக்கொண்டிருப்பார். இந்த நூலிலேயே 1,600 நூல்கள் எழுதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.   அப்படியான நூல்களில் ஒன்றுதான் இது. தமிழில் எஸ் ராமன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பில் குறை காண ஏதுமில்லை. நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது. சிறு சிறு கட்டுரைகளாக எழுதப்பட்டிருப்பது நல்ல ஐடியா. நூலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக்கொண்டால் நல்லது. ரியோ ஒகாவா, தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதை வாசகர்களுக்கு சொல்லும் அறிவுரையாக மாற்றிக்கொள்கிறார். குறிப்பாக, பிறர் நம்மீது வைக்கும் விமர்சனங்கள், வரையறைப்படுத்தல் என்பதை தனது சிறுவயது வாழ்க்கை, ஐக்யூ டெஸ்டில் பெறும் மதிப்பெண்களை வைத்து விளக்கியிர

கொல்லப்பட்டவர்களின் வாயில் மின்ட் மிட்டாய்! - டெ மீ வாட் யூ சீ - கே டிராமா -2020

படம்
  டெல் மீ வாட் யூ சா கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப் பள்ளிச்சிறுமி சூ, பள்ளி முடிந்து வெளியே வருகிறாள். அவளைக் கூட்டிப்போக அவளது அம்மா வரவில்லை. சற்று வசதியான தோழி குடையுடன் அவளை கூட்டிக்கொண்டு போகிறாள். வழியில் வாய் பேச முடியாத சூவின் அம்மா, குடையுடன் சாலையைக் கடந்து மகளின் பெயரை அழைத்துக்கொண்டே வருகிறாள்.   சூவுக்கு தனது தோழியிடம் தனது தாய் வாய் பேச முடியாத   ஊமை என கூற வெட்கமாக இருக்கிறது. அவள் தன்னை அழைக்கும் அம்மாவை புறக்கணித்துவிட்டு செல்கிறாள். அவளது அம்மா, சாலையைக்கடக்கும்போது கார் ஒன்று அவளை மோதித் தூக்கியெறிந்துவிட்டு நிற்காமல் செல்கிறது. சூ அதிர்ச்சியடைந்து அம்மாவை நோக்கிப் போகிறாள். அம்மா, அங்கேயே அடிபட்டு இறந்துபோகிறாள். இறக்கும்போதும் கூட குடையை மகளுக்கு கைகாட்டிவிட்டு மரணிக்கிறாள். மழையிலும் கூட சூ, அம்மாவை மோதிய காரில் உள்ள இருவரைப் பார்த்துவிடுகிறாள். காரின் எண்ணையும் காவல்துறைக்கு கூறுகிறாள். போலீஸ்காரர்கள் அதை கண்டுபிடிக்க மெனக்கெடுவதில்லை. ஏழையின் குரல் என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது? அதே கதைதான். ஆனால் சூ, தனது அம்மா இறந்துபோனதற்க

26 ஆண்டுகால மர்மம் - சிறுமி ஜோன்பென்னட்டை கொன்றது யார்?

படம்
  ஜோன்பென்னட் கல்லறை ஜோன் பென்னட்டின் குடும்பம் குற்றவாளியைக் கண்டறிய முடியாத ஆறுவயது சிறுமியின் கொலை வழக்கு! 1996ஆம் ஆண்டு. அமெரிக்காவின் பௌல்டர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி. மொத்த நாடுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்தது. கொலராடோ பௌல்டர் காவல்நிலைய அதிகாரிகள் என அனைவருமே விழா கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி அலைகழிக்கப்படும் என அவர்கள் அறியவில்லை. அடுத்தநாள் காவல்நிலையத்திற்கு அழைப்பு ஒன்று வந்தது. ஆறு வயது சிறுமி, அவளது வீட்டின் கீழ்தளத்தில் இறந்து கிடக்கிறாள் என்று. அதிகாரிகள் உடனே ரோந்து வண்டியை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போனபோது இறந்துபோன சிறுமியின் பெயர் ஜோன்பெனட் ராம்ஸே என தெரிய வந்தது. அப்பாவித்தனமும், மலர்ந்த புன்னகையுமாக பேரழகியாக வளர்ந்து வரும் சாத்தியங்கள் கொண்டவள். அவள் வீட்டிலேயே அடித்தும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டு கிடந்தாள்.   சிறுமியின் அம்மா, பாட்ஸி, அழகுப்போட்டிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர். இவரது கணவர் ஜான் ராம்ஸே கணினி பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஜானுக்கு, பாட்ஸி இரண்டாவது மனை

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 நிறைவுப்பகுதி - ஜெரோதா நிதின் காமத், சசிதரூர், சல்மான் ருஷ்டி, நந்தன் நீல்கேனி

படம்
  சல்மான் ருஷ்டி, எழுத்தாளர் சசிதரூர், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தொழில்நுட்ப ஆலோசகர் நந்தன் நீல்கேனி நிதின் காமத், ஜெரோதா ஓப்பன் மைண்ட்ஸ் 2023 சல்மான் ருஷ்டி 76 எழுத்தாளர் இந்தியாவை மையப்படுத்திய விக்டரி சிட்டி என்ற நாவலை வெளியிட்டார். நியூயார்க்கின் சட்டாகுவா என்ற இடத்தில் நூல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தீவிரவாதி ஒருவனால் கடுமையாக தாக்கப்பட்டார். ஈரான் நாட்டின் அயதுல்லா கோமெய்னி என்ற மத அடிப்படைவாத தலைவரால் தூண்டுதல் பெற்ற ஆள்தான் தாக்குதலுக்கு காரணம். சல்மான் ருஷ்டி. தனது கற்பனைக்கு கொடுத்த பெரிய விலை இத்தகைய தாக்குதல் என கூறலாம். விக்டரி சிட்டி நாவல், விஜயநகர பேரரசரைப் பற்றிய புனைவை மையமாக கொண்டது. இதற்கு முன்னர், மிட்நைட் சில்ரன் என்ற ஒரு நாவலை இந்தியாவின் சுதந்திரத்தை மையமாக வைத்து எழுதினார் ருஷ்டி. மத அடிப்படைவாதிகளை தூண்டிவிடும் அளவுக்கு கற்பனை வளம் கொண்ட எழுத்துக்கு சொந்தக்காரர். மாய அழகு கொண்ட எழுத்துக்களால் பேரரசர்கள் மறைந்துவிட்ட உலகிலும் புகழ்பெற்று பேசப்படுகிறார் ருஷ்டி. எதிர்காலத்திலும் அவரது நாவல்கள் புகழ்பெற்று விளங்கும் என்பதை மறுக்க முடி