இடுகைகள்

நேரடி சாட்சியத்தில் ஏற்படும் பிழைகளை கண்டறிந்த உளவியலாளர்!

படம்
  ஒரு மோசமான விபத்து நடைபெற்றிருக்கும். அதை பல்லாண்டுகளுக்கு பிறகும் சம்பவ இடத்தில் இருப்பவர் நினைவுகூரலாம்.அதற்கு என்ன காரணமாக இருக்கும்? அந்த விபத்தில் அவருக்கு சம்பந்தமான யாரோ ஒருவர் மாட்டிக்கொண்டு இறந்திருப்பார். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அதி்ர்ச்சியை விபத்து சம்பவம் உருவாக்கியிருக்கும். காலப்போக்கில், இதை ஒருவர்  எத்தனை முறை மீள கூறினாலும் அதில் தகவல்கள் மாறிப்போயிருக்க வாய்ப்பகள் உள்ளது. குறிப்பாக எதனால் தூண்டப்பட்டு விபத்து சம்பவத்தை ஒருவர் நினைவுகூருகிறார் என்பது முக்கியம்.  கார்கள் இரண்டு சாலையில் எதிரெதிரே வருகின்றன. திடீரென மோதிக்கொள்கின்றன. இதைப் பார்த்தவர்களிடம் கார்களின் வேகம், உடைந்த பொருட்கள், அங்கு சுற்றியிருந்த பொருட்கள் பற்றி கேள்வி கேட்டால் பலரும் பலவிதமாக பதில்களை கூறுவார்கள். இதிலுள்ள உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம். இதைத்தான் உளவியலாளர் ஆய்வு செய்து கண்டுபிடித்து கூறினார். இதற்கான அவசியம் என்ன வந்தது? நீதியைக் காப்பாற்றத்தான்.  அப்போது நீதிமன்றங்களில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகம் வந்தன. இதில் நேரடி சாட்சிகள் முக்கியப்

புரட்சித்தலைவன் புதிய இ நூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  லினக்ஸ் இயக்கமுறைமையை உருவாக்கி உலகம் முழுக்க புதிய புரட்சியை ஏற்படுத்தியவர், லினஸ் டோர்வால்ட்ஸ். விண்டோஸ் இயக்கமுறைமையை எதிர்க்கும் இலவச மென்பொருள் இதுவே. ஆனால், வெகுஜன அளவில் அந்தளவு பிரபலம் ஆகவில்லை. இன்று தமிழக அரசு மடிக்கணினிகளில் விண்டோஸ் மென்பொருளுடன் கூடவே லினக்ஸூம் உள்ளது. லினஸ் டோர்வால்ட்ஸ் யார், அவர் செய்த புரோகிராமிங் செயல்பாடு, இலவச மென்பொருள் இயக்கம் என பல்வேறு விஷயங்களை புரட்சித்தலைவன் எனும் இந்நூல் சுருக்கமாக விளக்குகிறது. நூலை வாசிக்க....  https://www.amazon.in/dp/B0CPXS98VH நன்றிக்குரியோர் கணியம் சீனிவாசன் கே என் சிவராமன் அஸ்ரத் ஹக்கீம் மீகா மைக்கேல் எஸ் ஆர் எலக்ட்ரிகல் சரவணன் 

கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

படம்
ஆதிக்கவாதியாக ஒருவர் செயல்பட முடிவெடுத்துவிட்டார். சரி, ஆனால், அவர் முதலில் சில கேள்விகளை அவராக கேட்டுப் பார்த்து அதற்கான பதில்களைப் பெறவேண்டும். அப்போதுதான் தான் ஏற்கவேண்டிய பொறுப்பு பற்றி தெளிவாக அறிய முடியும். இப்போது கேள்விகளைப் பார்ப்போம். நீங்கள் குரூரமான அல்லது இரக்கம் கொண்ட ஆதிக்கவாதியா? நீங்கள் சாடிஸ்டா? ஆம் எனில் உங்களை எப்படி வரையறை செய்வீர்கள்? உங்கள் இணையர் மாசோசிஸ்டாக இருந்தால் அது உங்களை பாதிக்குமா? ஒரு இணை அல்லது பல இணையர்களை பயன்படுத்துபவரா? பல இணையர்களை பயன்படுத்துபவர் என்றால் அதில் கட்டுப்பாடுகளைக் கொண்டவரா? உங்கள் இணையர்களுக்கான விசுவாச விதிகளை தனியாக வகுத்து வைத்தீர்களா? அது உங்களுடையதிலிருந்து மாறுபடுமா? ஆதிக்கவாதியாக இருப்பது பிறரை விட உங்களை தனித்து காட்டுவதாக நினைக்கிறீர்களா? ஒரு உறவுக்குள் குறிப்பிட்ட விதிமுறைகளை மதித்து நடப்பது என்பது எந்தவகையில் முக்கியமானது? கீழ்படிபவரைத் தண்டிப்பது உண்டா? ஆம் என்றால் எப்படி? இணையர்களுக்குள் முரண்பாடு வந்தால் அதை எப்படி கையாள்வீர்கள்? உங்களுக்கு சட்டென கோபம் வருமா? அப்படி வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்? ஒரு மாசோசி

ஆதிக்கவாதியாக ஒருவரை மாற்றும் பயிற்சி

படம்
ஆதிக்கவாதியாக ஒருவரை பயிற்சி மூலம் மாற்ற முடியுமா? இதற்கான பதில் சற்று குழப்பமானது. அவர் தனக்குள் ஏன், எதற்கு, எப்படி, அவசியமா என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும். தான் கொண்டுள்ள உறவில் சலிப்பு ஏற்பட்டு தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்கிறார் என்றால் ஆதிக்க/அடிமை உறவு கெட்டுபோய்விட்டது என்பதற்கான அறிகுறி என புரிந்துகொள்ளலாம். இயற்கையாக ஒருவர் ஆதிக்கவாதி குணம் கொண்டவராக இல்லை. ஆனால் பயிற்சி மூலம் மாற்றமுடியுமா என்றால் முடியும். கதையில் ஒரு நடிகர் நன்றாக நடிக்கிறாரா என்று பார்த்து அதற்கேற்ப படத்தின் முடிவை இயக்குநர் கௌதம் எழுதுகிறாரே, அதுதான் இங்கு கான்செப்ட். ஒருவர் எந்தளவு ஆதிக்கவாதி பாத்திரமாக தன்னை மாற்றிக்கொள்ளமுனைகிறார் என்பதே இதில் முக்கியம். அதைப் பொறுத்து பயிற்சியாளர் பயிற்சிகளை அமைப்பார். பயிற்சி கொடுப்பவருக்குமே இது கடினமான பயணம்தான். ஒருவர் தன்னை சிறந்த வாகன ஓட்டுநர் என்று சொல்லிக்கொள்ளலாம். பிரச்னையில்லை. ஆனால் தனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்லிக் கொடுப்பது கடினம். அப்படி கற்பிப்பது அனைவருக்கும் கைவராது. ஏன் ஆதிக்கவாதியாக மாற நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த தவற

பாஸ்வேர்டால் பணயக் கைதியாகும் வாழ்க்கை

படம்
  பாஸ்வேர்ட்டால் வதைக்கப்படும் வாழ்க்கை  ஒவ்வொருமுறை விண்டோஸ் ஓஎஸ்ஸை எஸ் ஆர் எலக்ட்ரிகலுக்கு எடுத்துச்செல்லும்போதும் நான் மறந்துவிடும் விஷயம் ஒன்றுண்டு. அதுதான் பாஸ்வேர்ட். விண்டோஸ் கணினியில் இணையத்தில் இணைத்தால் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டிற்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. பிறகு, கணினிக்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. இதை பதிவு செய்து மொபைலில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிந்து கணினியை இயக்குவதற்குள் வாயில் நுரைதள்ளிவிடும். அந்த நேர பதட்டத்தில் பாஸ்வேர்டுகள் நினைவுக்கு வந்து தொலைவதில்லை என்பதுதான் தனித்துயராக மாறுகிறது. கணினி பழுதுபார்க்கும் அண்ணனோ, பாஸ்வேர்டை இந்த முறையும் மறந்துவிட்டாய்தானே என கிண்டலாக பார்ப்பது மாறவே இல்லை. இதன் பிரச்னைகளைப் பார்ப்போம்.  லினக்ஸ் ஓஎஸ்ஸைப் பொறுத்தவரையில் அவர்கள் இயங்குவதே பாஸ்வேர்டில்தான். அதை வைத்துத்தான் டெர்மினலை இயக்க முடியும். மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யமுடியும். ஜினோமில் உங்கள் கணக்கு தொடங்க, கூகுள் கணக்கை இணைத்தால் போதுமானது. அப்போதுதான் இதற்கு தனியாக பாஸ்வேர்ட் கேட்கவில்லையே என மனம் நிம்மதி அடைந்தது. இது கொஞ்சம் ஆறுதலான ஓஎஸ்.  இணையத்தில் இயங்க கூகுள் மெய

ஆப்பிரிக்க கண்டத்தின் வேளாண்மை பொருளாதாரத்தை மேம்படுத்த முயலும் இளம்பெண் கேட் கலோட்!

படம்
  கேட் கலோட் என்ற பெண்மணி கென்யா நாட்டைச் சேர்ந்தவர். இவர்,2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமினி என்ற தகவல்தள நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், ஆப்பிரிக்காவில் உள்ள விவசாய நிலங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது.  மண்வளம்,ஈரப்பதம், மழை ஆகிய தகவல்களை செயற்கைக்கோள் மூலம் சேகரித்து வருகிறது. கலோட்டின் நோக்கம், விவசாயிகளுக்கு காலநிலை பற்றிய தகவல்களை  எஸ்எம்எஸ் வழியாக வழங்குவதுதான். இதன் மூலம் அவர்கள் பயிர்களை கவனித்து வளர்க்கலாம், லாபம் பெறலாம். ஆப்பிரிக்க கண்டமே இதன் மூலம் லாபம் பெறும். இந்த திட்டத்தை சற்று விரிவாக பார்ப்போம்.  மொத்தம் ஆறு செயற்கைக்கோள்கள் வானில் அலைந்து திரிந்து ஆப்பிரிக்காவின் 11.7 மில்லியன் சதுர மைல் நிலப்பரப்பு பற்றிய காலநிலை தகவல்களை சேகரிக்கும். இதை வைத்து காலத்தே பயிர் செய்து, பராமரித்து லாபம் பெறலாம். வெள்ளம், பூச்சி தாக்குதல், மழை பற்றிய தகவல்கள் விவசாயிகளுக்கு போன் வழியாக அனுப்பி எச்சரிக்கப்படும். ஆப்பிரிக்க கண்டமே வேளாண்மையை அடிப்படையாக கொண்டதுதான். எனவே, அதை மேம்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவ முடியும்.  உலகளவில் உள்ள விவசாயம் செய்யப்படாத தரிசு

புதிய இ நூல் - புரட்சித் தலைவன் அட்டைப்படம் வெளியீடு

படம்
  லினஸ் டோர்வால்ட்ஸின் வாழ்க்கை சிறு மின்நூலாக.... விரைவில்....

24/7 அந்தரங்க வாழ்க்கை விற்பனைக்கு! - டிக்டாக் லைவில் இணையும் மக்கள்!

படம்
  அடுத்தவரின் வாழ்க்கையை எட்டிப்பார்ப்பது ஒருவித கிளுகிளுப்பான உணர்வைத் தருகிறது. அதனால்தான் மக்கள் பிக் பிரதர், பிக் பாஸ், ஆகிய நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு அதில் உள்ள பங்கேற்பாளர்களின் குணங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதுபற்றிய காரசார விவாதங்கள் நடைபெறுகின்றன. உண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சம்பளம் உண்டு. அங்கு உருவாகும் பிரச்னைகள் அனைத்துக்குமே எழுத்துப்பூர்வ திரைக்கதை உண்டு. இதெல்லாம் அறிந்தாலுமே மக்கள் உணர்வுபூர்வமான சண்டை, கைகலப்புகளுக்கும் தங்களை மீறி ஒன்றிவிடுகிறார்கள்.  இது சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த வகையில் ஜெட்டிஜேம்ஸ், ஆட்டும்ரேயான் என்ற இளம் தம்பதிகள் தங்களின் மூன்று வார வாழ்க்கையை அப்படியே டிக்டாக் லைவ்வில் ஒளிபரப்பினார்கள். வீட்டில் மொத்தம் ஒன்பது கேமராக்கள். படுக்கை அறை, கழிவறையில் கூட கேமரா உண்டு. ஐந்தூறு மணி நேரங்கள் இணையத்தில் தங்களுடைய அந்தரங்க வாழ்க்கையை ஒளிபரப்பி காசு சம்பாதித்தனர்.  லைவ் என்பதால் இதில் நேரடியாக கமெண்டுகளை அடிக்கலாம். பெரும்பாலானவை எதிர்மறையாக இருக்கும். சில கட்டளையிடுவது போல இருக்

சூழலுக்கு இசைந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் தடுமாறும் லீகோ!

படம்
  லீகோ குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதை அறிவீர்கள். இந்த நிறுவனம் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான அடிப்படை ஆதாரம், கச்சா எண்ணெய்தான். ஆனால் சூழலியல் கட்டுப்பாடு, அதைப்பற்றிய அறிவு மக்களுக்கு அதிகரித்து வருவது நிறுவனத்திற்கு சங்கடமாகி வருகிறது.  எனவே லீகோ தனது உற்பத்தியை மாசுபாடு அதிகம் ஏற்படுத்தாத மறுசுழற்சி செய்யும் பொருட்களுக்கு மாற்றி வருகிறது. தற்போது அக்ரிலோனைட்ரில் பூட்டாடையின்  ஸ்டைரீன்  சுருக்கமாக ஏபிஎஸ் என்ற பொருளை பயன்படுத்தி வருகிறது. இதை மறுசுழற்சி செய்யலாம். உயிரியல் ரீதியாக மட்க கூடியது. ஆனால் அதற்கான காலம் அதிகம்.  தற்போது, லீகோ பிராண்டின் மதிப்பு ஏழு பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த நிறுவனம் சூழலுக்கு உகந்த பொருளை கண்டுபிடித்து அதை உற்பத்திக்கு பயன்படுத்தினால் மட்டுமே வணிக வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லீகோ நிறுவனம், ஆர்பெட் எனும் பிளாஸ்டிக்கை பற்றி பெருமையுடன் கூறியது. இதை பயன்படுத்தி மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்கலாம் என்றது. ஆனால் இந்த வகை பிளாஸ்டிக்கும் கூட லீகோவிற்கு உத

இனிக்க இனிக்க காதல், நகைச்சுவை என நகரும் பொறியியல் மாணவர்களின் வாழ்க்கை!

படம்
  மேட் தெலுங்கு இசை பீம்ஸ் சிசிரிலோ ஹைதராபாத்தில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் எஞ்சினியரிங் கல்லூரி வளாகத்திற்கு ஒரு மாணவன், இரவுநேரத்தில் வேகமாக வருகிறான். அங்கு கட்டப்பட்டுள்ள கயிற்றில் தட்டிவிட்டு கீழே விழுகிறான். எதிரே பார்த்தால் நிறைய மாணவர்கள் நிற்கிறார்கள். கீழே விழுந்த மாணவன், அந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டு பிறகு என்னமோ பீதியடைந்து அங்கிருந்து தப்பியோட முயல்கிறான். ஆனால் சீனியர் மாணவர்கள் அவனை பிடித்து கட்டி வைத்து தலைவர் சீனியர் வரும்வரை காத்திருக்கிறார்கள். அவர் பெயர் லட்டு. அவர், தானும் இப்படித்தான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தப்பியோட முயன்றதாக சொல்லி தனது கதையைக் கூறுகிறார். படம் தொடங்குகிறது.  மனோஜ்,அசோக், தாமோதர் என மூன்று நண்பர்களின் பெயர்தான் படத்தின் தலைப்பு. இந்த பாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தாமோதர் பாத்திரத்தில் நடித்த நடிகர். இவரது காமெடி சென்ஸில் தியேட்டரே அதிர்கிறது. அதிலும் படத்தின் கடைசி ட்விஸ்ட் இருக்கிறதே? ஏமாந்துவிட்ட சோகம், வருத்தம் அதை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துவார். அதேசமயம் நண்பர்கள் சிரிக்க, எதுக்க