இடுகைகள்

அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கதவைத் தட்டும் வாழ்க்கை! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  பின்டிரெஸ்ட்/பிகேன்ஸ் நீங்கள் கதவு, ஜன்னல், ஆகியவற்றை மூடிவைத்துவிட்டு வீட்டுக்குள் வாழ்ந்தால் பாதுகாப்பாக, ஆபத்தின்றி இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது அப்படியானதல்ல. வாழ்க்கை, மூடிய கதவுகள், ஜன்னல்கள் மீது முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. அப்படி முட்டி திறந்தால் நீங்கள் இப்போது பார்ப்பதை விட விரிவான காட்சியைக் காணலாம். ஆனால் உங்கள் மனதில் உள்ள பயத்தால் ஜன்னல்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள். இதனால் வாழ்க்கை உங்கள் கதவை தட்டும் சத்தம் அதிகமாக கேட்க தொடங்குகிறது. வாழ்க்கை பற்றிய வெளிப்புற பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டால், அது உங்களை நோக்கி வந்து வெளித் தள்ளுவதற்கு தொடங்கும். வாரணாசி 16 டிசம்பர் 1952 தி கலெக்டட் வொர்க்ஸ் வால். 7   உங்களை மாற்றுவது எது?   நெருக்கடி, தலையில் விழும் அடி, சோகம், கண்ணீர் இவை எல்லாமே ஒரு நெருக்கடிக்கு அடுத்த நெருக்கடி என தொடர்ந்து நடக்கும்போது ஏற்படுபவைதான்.   நீங்கள் வேதனையால் இடைவிடாமல் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை. காரணம், நீங்கள் மாற்றத்திற்கு இன்னொருவரை நம்பியிருக்கிறீர்கள். யாருமே, பிரச்னையை நான் கண்டுபிடித்து த

என்னால் முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்! - பெரிதாகவே சிந்தியுங்கள் - ரியோ ஒகாவா

படம்
  ரியோ ஒகாவா, எழுத்தாளர்,ஆன்மிக தலைவர் பெரிதாக சிந்தியுங்கள் ரியோ ஒகாவா ஜெய்ஹோ பதிப்பகம் பக்கம் 135   ஹேப்பி சயின்ஸ் என்ற ஜப்பானின் மிகப்பெரும் ஆன்மிக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் ரியோ ஒகாவா எழுதியுள்ள நூல். இந்த நூலைப் பற்றிய விமர்சனத்தை நாம் எழுதிக்கொண்டிருக்கும்போது , அவர் கோஸ்ட் ரைட்டர்களை வைத்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக்கொண்டிருப்பார். இந்த நூலிலேயே 1,600 நூல்கள் எழுதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.   அப்படியான நூல்களில் ஒன்றுதான் இது. தமிழில் எஸ் ராமன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பில் குறை காண ஏதுமில்லை. நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது. சிறு சிறு கட்டுரைகளாக எழுதப்பட்டிருப்பது நல்ல ஐடியா. நூலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக்கொண்டால் நல்லது. ரியோ ஒகாவா, தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதை வாசகர்களுக்கு சொல்லும் அறிவுரையாக மாற்றிக்கொள்கிறார். குறிப்பாக, பிறர் நம்மீது வைக்கும் விமர்சனங்கள், வரையறைப்படுத்தல் என்பதை தனது சிறுவயது வாழ்க்கை, ஐக்யூ டெஸ்டில் பெறும் மதிப்பெண்களை வைத்து விளக்கியிர

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70! - அடுத்த சீன அதிபர் யார்?

படம்
  ஷி ஜின்பிங், சீன அதிபர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70 சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்திவருகிறார். இது அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு. மார்ச 2023இல் ஆட்சியை தக்கவைத்துள்ளவர், வாழ்நாள் முழுக்க அதிகாரத்தில் இருப்பதற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களை தனது அணியில் திரட்டியுள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்களை முற்றாக விலக்கியுள்ளார் என அசோசியேட் பிரஸ் தனது செய்தியில் கூறியுள்ளது. கடந்த ஜூன் பதினைந்தாம் தேதி அதிபர் ஷி ஜின்பிங் எழுபது வயதை எட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுடன பகை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அழுத்தத்தை சமாளித்து அதிகாரத்திலும் இருக்கிறார் ஷி ஜின்பிங். ஷி ஜின்பிங்கிற்கு எழுபது வயதாகிவிட்டது. அடுத்த அதிபராக யார் வருவார் என்ற கோணத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர்   சுன் ஹான் வாங் பார்டி ஆஃப் ஒன் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அடுத்து அதிபராக வருபவரின் சாத்தியங்களை அலசியிருக்கிறார். உண்மையில், சீனாவில் அடுத்த அதிப

உணவு வீணாவதால் உருவாகும் மீத்தேன் வாயு!

படம்
  ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகி வருகின்றன. உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், வீணாகிவருவதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. உணவு வீணாவது எந்தெந்த நிலையில் நேரிடுகிறது? உற்பத்தி, அதை ஓரிடத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வது, விற்பனை, வீட்டு பயன்பாடு என பல்வேறு செயல்களில் உணவு வீணாகிறது. உலக நாடுகளில் நாற்பது சதவீதம் உணவுப்பொருட்கள் அதன் விற்பனை நிலையில்தான் வீணாவது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சாப்பிட உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் வீணாவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுப் பொருட்கள் பட்டியால் தசை உருகி கிடக்கும் மக்களுக்கு சென்று சேருவது பல்வேறு உலகளவிலான பொருளாதார கொள்கைகளால் தடுக்கப்படுகிறது.   மக்களுக்கு பயன்படாமல் கெட்டு அழுகிப்போகும் பொருட்களால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவான மீத்தேனின் அளவு கூடுகிறது. உணவு வீணாவதால் உலகளவில் 28 சதவீத வேளாண்மை நிலங்களின் பயன்பாடு சீர்கெடுகிறது.   60 க்யூபிக் கி.மீ அளவு நீர் வீணாகிறது. வீணாகும் உணவை உற்பத்தி செய்யும் செயல்முறையில் வெளியாகும் கார்பன் அளவு 3.6 பில்லியன் டன் ஆகும். உணவை உற்பத்தி செய்ய ப

தற்கொலை செய்துகொண்ட கொலைக்குற்றவாளித் தந்தையை நிரபராதி என நிரூபிக்கப் போராடும் மகன்! ஹீலர்

படம்
  ஹீலர் கொரிய டிவி தொடர் ராகுட்டன் விக்கி தொண்ணூறுகளில் அரசுக்கு எதிராக வேன் ஒன்றில் சென்றபடி செய்திகளை ஒலிபரப்பும் புரட்சி பத்திரிகையாளர்களாக இருந்த ஐவர்களில் மூவர் மட்டுமே உயிரோடு இருக்கின்றனர். இருவர் இறந்துவிடுகிறார்கள். அதிலும் ஒருவர், அவரது ஆருயிர் நண்பராலேயே கொலை செய்யப்பட்டார் என காவல்துறை குற்றம் சாட்டுகிறது. அந்த குற்றச்சாட்டு விலக்கப்படுவதற்கு முன்னரே, குற்றம் சாட்டப்பட்ட நண்பர் ஜியோன் சிக் தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் நண்பர்களுக்குள் என்ன நடந்தது என யாருக்கும் தெரிவதில்லை. நண்பரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஒ ஜில் என்பவரின் மனைவி, அந்த நண்பர்கள் கூட்டத்தில் உள்ள கிம் மூன் சிக் என்பவரை மணந்துகொள்கிறார். அவளுக்கும் கொல்லப்பட்ட ஓ ஜில் என்பவருக்கும் பிறந்த பெண் குழந்தை, கிம் மூன் சிக் காரில் கூட்டிவரும்போது திடீரென   தொலைந்துபோகிறது. கிம் மூன் சிக், குப்பைக்கிடங்கு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார். ஆனால், அவரது ஆருயிர் நண்பர்கள் இறந்தபிறகு கொரியாவில் மகத்தான அரசியல் சக்தியாக, ஊடக தொழிலதிபராக மாறுகிறார். இது அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவர் மேல் சந்தேகத்தை ஏற்படு

மக்கள்தொகை பெருக்கமே, கார்பன் வெளியீட்டுக்கு முக்கியக் காரணம்!

படம்
  தொழில்துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னர், மக்கள் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளில் உழைத்து வந்தார்கள். பின்னாளில், தொழிற்சாலைகள் நகரத்தில் உருவாகின. அதைச் சுற்றி பல்வேறு உபதொழில்கள் தொடங்கப்பட்டன. தொழிலாளிகள் எந்திரம் போல அதிக நேரம் வேலை வாங்கப்பட்டனர். அவர்கள் வேலை செய்யும் இடத்தில் போதிய வசதிகளும் இல்லாமல் இருந்தன. தொழில்துறை வளர்ச்சி அதிகரித்தபோது வளிமண்டலத்தில் 48 சதவீத கார்பன் டை ஆக்சைடு கலந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வேளாண்மை பொருளாதாரத்தில் இருந்து பெரும் உற்பத்தி சார்ந்த தொழில்துறைக்கு மாறினர். இந்த தொழில்புரட்சி மெல்ல பிற நாடுகளுக்கும் பரவியது. இரும்பு, ஸ்டீல் ஆகியவற்றைத் தயாரிக்க அதிகளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. பொருட்களை கொண்டு செல்ல உதவி நீராவி எஞ்சினுக்கு முக்கிய ஆதாரமே நிலக்கரிதான். அன்று உலக நாடுகள் ஆற்றல் தேவைக்கு நம்பியிருந்த ஒரே பொருள், நிலக்கரிதான். தொழில்புரட்சி மேற்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுத் தந்தன. அதேசமயம் அவை நிலம், நீர், காற்றை   மாசுபடுத்தவும் செய்தன. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, நாட்டின்

வன உரிமைச் சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை - எம் கே ரஞ்சித் சிங், இயற்கைச்சூழல் செயல்பாட்டாளர்

படம்
  எம் கே ரஞ்சித் சிங் வனப்பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட அடிப்படையான விஷயங்களை செய்தவர், திரு. எம் கே ரஞ்சித் சிங். இவர் புலிகளைக் காப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளை செய்வதோடு, காப்பகங்களை உருவாக்கவும் உதவியுள்ளார். குஜராத்தின் வங்கானர் எனும் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர், ரஞ்சித் சிங். தனது செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் முக்கியமான வனப்பாதுகாப்பு செயல்பாட்டாளராக அறியப்பட்டு வருகிறார். பதினொரு வனப்பாதுகாப்பு சரணாலயங்கள், எட்டு தேசியப் பூங்காங்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளார். அவரிடம் புலிகளின் பாதுகாப்பு பற்றி பேசினோம். புலிகளின் பாதுகாப்பு திட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? 1972ஆம் ஆண்டு, புராஜெக்ட் டைகர் குழுவில் செயலாளராக இருந்தேன். அடுத்த ஆண்டு கைலாஷ் சங்கலா இந்த பதவிக்கு வந்தார். புலிகளை பாதுகாத்து அதன் எண்ணிக்கையை பெருக்குவதே எங்கள் குழுவின் நோக்கமாக இருந்த து. எங்கள் குழுவின் லட்சியத்தை எட்டியதாகவே நினைக்கிறேன். இந்த திட்டம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால்   நிறைய துணை விலங்கினங்களைக் காப்பாற்ற முடியாமலேயே போயிருக்க

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை வளைக்க முயலும் காவிக்கட்சி! - ரூட்டு புதுசு

படம்
  இன்ஸ்டாகிராம் இளைஞர்களை குறிவைத்து வளைக்கும் பாஜக இன்று சாதாரணமாக பாய் விற்கும் வியாபாரி கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு   மகிழ்ச்சியுடன் தனது பயண நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் இளைஞர்களின் வாழ்க்கை அதிவேகத்தில் பயணித்து வருகிறது. ஒரு நிமிட வீடியோ போதும் ஒருவரை பிரபலமாக்க.. இதில் எதையும் யோசிக்க வேண்டியதில்லை. டிவி பார்ப்பது போல... ரீல்ஸை  விரல்களால் தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே போகலாம்.  அரசியல் கட்சிகளில் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஏற்பாட்டை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.   சமூக வலைத்தளங்களில் மோடியின் அனைத்து செயல்பாடுகளும் ரீல்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர், இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் இருபத்தைந்து சந்திப்புகள் நடந்தன. இவை அனைத்துமே பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு ரீல்ஸ் வடிவில் வெளியாகின. இதை அப்போதே 2.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள். 40 ஆயிரம் பேர் லைக் போட்டு விரும்புவத

ஏழைகள், சிறுபான்மையினருக்கு எதிரான அநீதியை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - மல்லிகா சாராபாய், கேரள கலாமண்டல வேந்தர்

படம்
  தனது தாய் இறப்பின்போது.. மல்லிகா சாராபாய் மல்லிகா சாராபாய் பரதநாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய் மல்லிகா சாராபாய், கேரளா கலாமண்டலத்தின் தலைவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரான மல்லிகா, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் எம்பிஏ பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள தர்ப்பணா அகாடமியை முப்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த அகாடமியை மல்லிகாவின் பெற்றோரான விண்வெளி அறிவியலாளருமான விக்ரம் சாராபாயும், கேரளத்தின் அனக்கார வடக்கத் குடும்பத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் மிர்ணாளினி ஆகியோர் இணைந்து தொடங்கினர். கேரளத்தின் இடதுசாரி அரசு, கேரள கலாமண்டலத்தின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிஃப் முகமதுவை நீக்கிவிட்டு, மல்லிகா சாராபாயை நியமித்துள்ளது. மல்லிகா சாராபாய் பரதநாட்டிய கலைஞர், சமூகசேவகர், பத்ம பூஷன் விருது பெற்ற பிரபலம் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டியது. கலாமண்டலத்தின் வேந்தராக ஆனது எப்படிஇருக்கிறது? நாளிதழ்களில் படித்துத்தான் கலாமண்டலத்தில் வேந்தர், துணைவேந்தர் சார்ந்த விஷயங்களை அறிந்துகொண்டிருந்தேன். ஒருமுறை அகாடமியில் நாட்டிய நாடகத்திற்கான ஒத்திகை ச