இடுகைகள்

காதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறுப்புதான குற்ற கும்பலால் மனைவி, மகளை இழக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வாழ்க்கைக் கதை!

படம்
  ஜோசப்  மலையாளம்  இயக்குநர் - பத்மகுமார் இசை -ரஞ்ஜின் ராஜ்  வேலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜோசப். கொலைகளை எளிதாக துப்பறிந்து கண்டுபிடிக்கும் திறமை கொண்டவர். இவருக்கு ஒரு மகள் உண்டு. மனைவி விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவரை மணந்துகொள்கிறார்.  ஜோசப்பிற்கு ஐந்து விசுவாச நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது மது அருந்திவிட்டு மலை உச்சியில் பாட்டு பாடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இங்கு ஒரு திருப்புமுனையாக ஜோசப்பின் மனைவி விபத்தில் சிக்குகிறார். மூளைச்சாவு அடைந்ததாக சொல்லி உறுப்பு தானம் செய்ய மருத்துவமனையில் கேட்கிறார்கள். முன்னாள், இந்நாள் கணவர்கள் இருவரும் ஒப்புதல் தருகின்றனர். ஆனால் முன்னாள் கணவரான ஜோசப்பிற்கு, ஸ்டெல்லா இறந்துபோனது வருத்தம் தருகிறது. அவர் இறந்துபோன இடத்திற்கு சென்று பார்த்து அது விபத்தல்ல கொலை என்று நண்பர்களுக்கு கூறுகிறார். யார் கொலையாளி,என்ன காரணம் என்பதை படம் நிதானமாக பேசுகிறது. இறுதியாக வரும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. மனதை ரணப்படுத்துபவை.  படத்தின் தொடக்கத்தில் திலீஸ் போத்தன், அரசு அதிகாரி கொடுக்கும் மெடல் ஒன்றை வாங்குகிறார். அவர் நினைவுகளின்

ஆதிக்கவாதியாக ஒருவரை மாற்றும் பயிற்சி

படம்
ஆதிக்கவாதியாக ஒருவரை பயிற்சி மூலம் மாற்ற முடியுமா? இதற்கான பதில் சற்று குழப்பமானது. அவர் தனக்குள் ஏன், எதற்கு, எப்படி, அவசியமா என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும். தான் கொண்டுள்ள உறவில் சலிப்பு ஏற்பட்டு தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்கிறார் என்றால் ஆதிக்க/அடிமை உறவு கெட்டுபோய்விட்டது என்பதற்கான அறிகுறி என புரிந்துகொள்ளலாம். இயற்கையாக ஒருவர் ஆதிக்கவாதி குணம் கொண்டவராக இல்லை. ஆனால் பயிற்சி மூலம் மாற்றமுடியுமா என்றால் முடியும். கதையில் ஒரு நடிகர் நன்றாக நடிக்கிறாரா என்று பார்த்து அதற்கேற்ப படத்தின் முடிவை இயக்குநர் கௌதம் எழுதுகிறாரே, அதுதான் இங்கு கான்செப்ட். ஒருவர் எந்தளவு ஆதிக்கவாதி பாத்திரமாக தன்னை மாற்றிக்கொள்ளமுனைகிறார் என்பதே இதில் முக்கியம். அதைப் பொறுத்து பயிற்சியாளர் பயிற்சிகளை அமைப்பார். பயிற்சி கொடுப்பவருக்குமே இது கடினமான பயணம்தான். ஒருவர் தன்னை சிறந்த வாகன ஓட்டுநர் என்று சொல்லிக்கொள்ளலாம். பிரச்னையில்லை. ஆனால் தனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்லிக் கொடுப்பது கடினம். அப்படி கற்பிப்பது அனைவருக்கும் கைவராது. ஏன் ஆதிக்கவாதியாக மாற நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த தவற

இனிக்க இனிக்க காதல், நகைச்சுவை என நகரும் பொறியியல் மாணவர்களின் வாழ்க்கை!

படம்
  மேட் தெலுங்கு இசை பீம்ஸ் சிசிரிலோ ஹைதராபாத்தில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் எஞ்சினியரிங் கல்லூரி வளாகத்திற்கு ஒரு மாணவன், இரவுநேரத்தில் வேகமாக வருகிறான். அங்கு கட்டப்பட்டுள்ள கயிற்றில் தட்டிவிட்டு கீழே விழுகிறான். எதிரே பார்த்தால் நிறைய மாணவர்கள் நிற்கிறார்கள். கீழே விழுந்த மாணவன், அந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டு பிறகு என்னமோ பீதியடைந்து அங்கிருந்து தப்பியோட முயல்கிறான். ஆனால் சீனியர் மாணவர்கள் அவனை பிடித்து கட்டி வைத்து தலைவர் சீனியர் வரும்வரை காத்திருக்கிறார்கள். அவர் பெயர் லட்டு. அவர், தானும் இப்படித்தான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தப்பியோட முயன்றதாக சொல்லி தனது கதையைக் கூறுகிறார். படம் தொடங்குகிறது.  மனோஜ்,அசோக், தாமோதர் என மூன்று நண்பர்களின் பெயர்தான் படத்தின் தலைப்பு. இந்த பாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தாமோதர் பாத்திரத்தில் நடித்த நடிகர். இவரது காமெடி சென்ஸில் தியேட்டரே அதிர்கிறது. அதிலும் படத்தின் கடைசி ட்விஸ்ட் இருக்கிறதே? ஏமாந்துவிட்ட சோகம், வருத்தம் அதை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துவார். அதேசமயம் நண்பர்கள் சிரிக்க, எதுக்க

நேசிக்கும் காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்துகொடுக்க கொடுக்க முன்வரும் காதலன்!

படம்
  சீகா ஃப்ரம் ஶ்ரீகாகுளம்  இயக்குநர் - eshwar அல்லரி நரேஷ், மஞ்சரி, ஷ்ரத்தா தாஸ், வேணு, எம்எஸ் நாராயணா நரேஷ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு உடல் பலம் குறைவு என்றாலும் புத்திசாலித்தனமும் சமயோசிதமும் அதிகம். அதைப் பயன்படுத்தி கல்லூரியில் பெண் ஒருத்தியை வல்லுறவு செய்பவனை தடுக்கிறான். இப்படியானவன், அங்கு படிக்கும் பேரழகியான பெண்ணை பிளான் செய்து மடக்குகிறான். ஆனால் பிறகுதான் தெரிகிறது. அவளின் அப்பா ஊரிலேயே பெரிய ரௌடி என. உயிரு முக்கியம்ப்பா என முடிவெடுத்து காதலெல்லாம் வேண்டாம். உனக்கு உங்கப்பாவே நல்ல பையனா பார்ப்பாரு கட்டிக்கோ என சொல்லி ஜகா வாங்குகிறான். ஆண் காதலிப்பது பிரச்னையில்லை. அந்த ஆணை பெண் காதலிக்கத் தொடங்கினால்தானே கதை தாறுமாறாக ட்விஸ்ட் ஆகிறது. அதுதான் இங்கும் நடக்கிறது. அந்தப்பெண் கட்டினால் நரேஷைத்தான் காதலிப்பேன் என அடம் பிடிக்கிறாள். இறுதியாக நரேஷ் தனக்கு நிச்சயம் முடிந்து கல்யாணம் ஆகும்வரை ஊரில் வந்து இருந்தால் போதும். தான் அவனை விட்டுவிடுகிறேன் என கூறுகிறாள். அது எப்படியான பொறி என தெரியாமல் நரேஷ் அவளுடைய ஊரான கர்னூலுக்கு செல்கிறான்.  அங்கு என்ன நடந்தது, நரேஷூ

உடல் மனதை பகிர்ந்தாலும் தனித்துவத்தை இழக்காமல் ஒருவரால் காதலிக்க முடியுமா?

படம்
வாழ்க்கையில் சோறு தின்பதற்கு தரித்திரம் துரத்தாமல் இருப்பவர்கள், நிச்சயம் தான் யார் என்பதற்கான தேடுதலை செய்வார்கள். இதற்காக சினிமா நடிகர்கள் படிக்கும் ஆன்மிக புத்தகங்களை தேடுவது, ஞான யோகியான ரமணரின் ஆசிரமத்தில் அடம்பிடித்து நுழைவது என செய்வார்கள். அடிப்படையான நோக்கம் தான் எதற்கு பிறந்திருக்கிறோம், என்ன செய்யப்போகிறோம், அதாவத நம் மூலம் என்ன நடக்கவிருக்கிறது என அறிவதுதான். ஒருவருக்கு கண்முன்னே இரு பாதைகள் உண்டு. ஒன்று மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த பாதை. அடுத்து, கடினமான அதிருப்தியான பாதை. வாழ்க்கைக்கான அர்த்தம் தேடுவது என்பதே மோசமான வாழ்க்கையை சமாளிக்கும் பொருட்டுதான் என்று உளவியலாளர் எரிக் ஃப்ரோம் கூறுகிறார்.  அன்புகொண்ட வாழ்க்கையே நல்ல மனிதனை உருவாக்குகிறது என எரிக் நம்பினார். வாழ்க்கை உணர்ச்சிகரமான விரக்தியைக் கொண்டது. ஒரு மனிதர் இயற்கையிலிருந்து தன்னை பிரித்துப் பார்க்கிறார். அவரின் இன்னொரு பகுதி, பிறரோடு தன்னை இணைத்துப் பார்த்து பொருத்திக்கொள்ள முயல்கிறது. இயற்கையிலிருந்து மனிதர்கள் வேறுபட்டு இருப்பதற்கான காரணம், அவர்களின் புத்திசாலித்தனம்தான். அறிவு கூடும்போது மெல்ல இயற்கையிலி

ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

படம்
  பார்ன் அகெய்ன் கே டிராமா 32 எபிசோடுகள் இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது. செய

தனது குற்றவுணர்ச்சியைத் தீர்க்க மகளை மணம்செய்து கொடுக்க முயலும் அப்பா!

படம்
  பிரேமண்டா இதேரா  வெங்கடேஷ், ப்ரீத்தி ஜிந்தா மோதல், காதல் டெ்ம்பிளேட்டில் கிராமத்து காதல் கதை.  வெங்கடேஷ் ஹைதராபாத்தில் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர். தனது சக நண்பனின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறார். அங்கு கிராமத்து பெரிய புள்ளி ஒருவரின் மகளைப் பார்க்கிறார். அவர்தான் ஷைலஜா. எப்போதும் பட்டு உடையில் சுற்றிவருகிற அழகானபெண். ப்ரீத்தி ஜிந்தாவுக்காகவே இந்த படத்தைப் பார்க்கலாம். அந்தப்பெண்ணுக்கும் வெங்கடேஷூக்கும் மோதல் உருவாகி பிறகு காதல் வளர்கிறது.  கல்யாண சமையல் அறையில் ஷைலுவின் துப்பட்டா மீது தீப்பிடிக்க அதை ஓடிச்சென்று தூக்கி எறிந்து காக்கிறார் நாயகன். உடனே நாயகிக்கு வெட்கம் பூக்க, காதல் மெல்ல அரும்புவிடுகிறது. தொடக்க காட்சி தொடங்கி வெங்கடேஷ் ரயிலில் கிளம்பும்வரை இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. காட்சி ரீதியாகவே இருவரும் ஆசையாக வேட்கையுடன் பார்த்துக்கொள்கிறார்கள். வெட்கப்படுகிறார்கள். ஏக்கப்படுகிறார்கள்.  ஷைலுவின் அப்பா தனது நண்பன் தனக்கு செய்த நன்றிக்கடனுக்காக அவனது மகனை படிக்கவைக்கிறார். அப்படியும் குற்றவுணர்ச்சி தாளாமல் மகளை மணம் செய்துகொடுக்க நினைக்கிறார்.இங்கு

கடமையில தவறாத தங்கமான பையன், காதலியின் தலைமறைவான அப்பாவுக்கு உதவுவாரா? - பாபு பங்காரம்

படம்
 பாபு பங்காரம் இயக்கம் மாருதி வருவாய்த்துறை அதிகாரி சாஸ்திரி தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது சக அதிகாரியை கொன்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதைபற்றி விசாரிக்க கிருஷ்ணா எனும் மனிதநேயமும் கருணையும் கொண்ட உதவி கமிஷனர் வருகிறார். ஆதரவற்ற சாஸ்திரி குடும்பத்திற்கு தனது அடையாளம் கூறாமல் உதவுகிறார். அந்த குடும்பத்தில் மூத்த பெண் ஷைலஜா மீதுகாதல் கூட கொள்கிறார். இந்த குடும்பத்து பெண்களை மல்லேஸ்வரன் என்ற ரவுடி, சாஸ்திரி எங்கே என கேட்டு மிரட்டுகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா யார் குற்றவாளி என கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.  கர்ப்பிணிப்பெண், குழந்தையை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற தனக்கு சிகிச்சை வேண்டாம் என்று சொல்லி இறந்துபோன ஜமீன்தாரின் பேரன், கிருஷ்ணா. ரவுடிகளை அடித்து உதைத்தாலும் அவர்களை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்து பிறகு லாக்கப்பில் தள்ளும் கருணை மனமுடையவன். இந்த குணம் தாத்தாவிடம் இருந்து வந்தது. இந்த குணங்களை அவன் கடமைக்காக சற்று தள்ளிவைத்து ரவுடி மல்லேஸ்வரன் ஆட்களை அடித்து உதைக்க வேண்டியதிருக்கிறது. முதலில் அதற்கு சற்று தயங்குகிறார்.  இனி கருணை க

தொழிலதிபரான மனைவி சொத்தை அபகரிக்க திட்டம் போடும் கணவர்!

படம்
  மணி மணி ஜேடி சக்ரவர்த்தி, பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் மணி படத்தின் இரண்டாவது பாகம். இந்த படத்தைப் புரிந்துகொள்ள முதல் பாகத்தை பார்ப்பது நல்லது. இல்லையெனில் முதல் நான்கு நிமிடங்களுக்கு போடும் காட்சிகளைப்பார்த்தால் கூட போதும்தான்.  ஆன்ட்டி ஜெயசுதா நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அவரிடம் போஸ், சக்ரவர்த்தி என இருவர் வேலை செய்கிறார்கள். அங்கு புதிதாக ஒரு பெண் வந்து வேலை கேட்கிறார். சக்கரவர்த்தி அவரின் அழகில் மயங்கி வேலைக்கு பரிந்துரை செய்கிறார். அந்த பெண் வந்தது முதலே சக்ரவர்த்தி மீது பிரியமாக இருக்கிறார். ஜெயசுதாவின் சொத்தை அபகரிக்க அவரது கணவர் சுப்பாராவ் முயல்கிறார். அதற்கு ரவுடி ஒருவரை அணுகுகிறார். அவர்தான் அலாவுதீன். சொத்தில் ஐம்பது சதவீதம் எனக்கு கொடுத்தால், ஜெயசுதாவை கொல்வதாக வாக்கு கொடுக்கிறார். இதற்கிடையில், சக்ரவர்த்தியால் பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வெளியே வருகிறார். இவர், சக்ரவர்த்தியைக் கொல்ல முயல்கிறார். இப்படி பல்வேறுகதைகள் நடக்கின்றன.  படத்தில் நாயகர்கள் என்று சொன்னால் பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் ஆகியோரைத்தான் சொல்ல வேண்டும். இரண்

தனது குடும்பத்தை அழித்த பணக்காரரை பழிவாங்க அலையும் கல்லூரி மாணவன்!

படம்
  கைதி சிரஞ்சீவி, மாதவி ஊரில் பணக்காரரின் மகளை காதலித்து,அதன் விளைவாக அப்பா, அக்கா, இறுதியாக தனது உயிரையே இழப்பவனின் கதை.  இந்த கதை ஒருவகையில் ஆந்திரத்தில் உள்ள சாதிக்கட்டமைப்பை மறைமுகமாக வெளிக்காட்டுகிறது. சிரஞ்சீவியும், மாதவியும் ஒரே கிராமத்தை்ச சேர்ந்தவர்கள். இருவரும் நகரில் சென்று ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நடனம்,நாடகம் ஆகியவற்றில் சேர்ந்து நடித்து இருவருக்கும் காதல் நெருப்பு பற்றிக்கொள்கிறது. மாதவிக்கு பெரியளவில் பணம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சிரஞ்சீவிக்கோ, மாதவியின் அப்பா வீரபத்திரனிடம் அடமானம் வைத்த வீட்டை மீட்க வேண்டும். விதவை அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என நிறைய கடமைகள் உள்ளன. இதனால் படிப்பில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. மாதவிக்கு அவனை காதலிப்பது தவிர வேறு வேலையில்லை.  இந்த நிலையில் தேர்வு எழுதியபிறகு சிரஞ்சீவி தனது கிராமத்திற்கு வருகிறான். அப்படி வரும்போது பேருந்தில் வருவதாக கூறுபவனை, மாதவி தனது காரில் கிராமத்திற்கு கூட்டி வருகிறாள். இதைப் பார்த்து கிராம முன்சீப், வீரபத்திரத்திடம் தகவல் கூற அவர் சி

முன்கோபம் கொண்ட நீதியைக் காக்கும் இளைஞன் ராபின்ஹூட்டாக மாறி அநீதியை எதிர்க்கும் கதை!

படம்
  தர்மா  விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார், தலைவாசல் விஜய், ஜெய்சங்கர் பணக்காரர்களைக் கொள்ளையடித்து அவர்களின் பணத்தை சேரி மக்களுக்கு பிரித்து கொடுக்கும் ராபின்ஹூட் கதை. அடிப்படைக் கதை இதுதான். இதை விரிவாக கூறவில்லை. குடும்ப பாசம், குடும்ப உறுப்பினர்களுக்கான முரண்பாடு, சண்டை என காட்டிவிட்டு படம் நகர்ந்துவிடுகிறது.  தர்மா, சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். வேலை பார்ட்டைம்தான். முக்கியமான வேலை சேரி மக்களுக்கு உதவி செய்வது. அங்கு காவல்நிலையத்தில் வல்லுறவு செய்த பெண்ணுக்காக இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொல்கிறார். இப்படித்தான் தர்மா நீதிமன்றம் செயல்படுகிறது. ஏழை மக்கள் தர்மாவை ஆதரிக்கிறார்கள். முஸ்லீம் பெண்மணி தர்மாவிற்காக பேசுகிறார். அவர் கண்பார்வையற்றவர். அவரின் பேத்தி, தர்மாவை ஒருதலையாக காதலிக்கிறாள். இவருக்கான காதல் காட்சி சற்று 18 பிளஸாக இருக்கும். அதனாலென்ன பார்த்து மகிழுங்கள். காதலை புரட்சிக்கலைஞர், கேப்டன் மறுத்துவிடுவார். ஆனால் அதைக் காரணமாக வைத்து இரண்டு, மூன்று பாடல்கள் வந்துவிடுகின்றன. கேப்டன் படம் என்றால் லியாகத் அலிகானின் பொறி பறக்கும் வசனங்களும், கோர்ட்டில் நின

கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் திருந்தி வாழ நினைக்கும்போது ஏற்படும் விளைவுகள்!

படம்
  உள்ளத்தில் நல்ல உள்ளம்  விஜயகாந்த், ராதா, ராதாரவி, வினுசக்ரவர்த்தி இயக்கம் மணிவண்ணன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நைனாவின் உதவியால் கள்ளக்கடத்தல் தொழிலுக்குள் நுழையும் ஒருவன், காதல்வயப்பட்டு தனது தொழிலை கைவிட முயன்றால் என்ன நடக்கும் என்பதே கதை.  சுபமாக முடியும் கதை கிடையாது. அதை முதலிலேயே கூறிவிடுகிறேன். படத்தில் அந்தமோசமான முடிவுக்கு நைனா பாத்திரம் மூலம் ஏற்கெனவே நம்மை தயார்படுத்திவிடுகிறார்கள். அதனால் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை, மைக்கேல்ராஜ் என்பவர், கடலை ஒட்டியுள்ள ஊரில் கள்ளக்கடத்தல் செய்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கிறார். இதனால் அவர் செய்வதை காவல்துறை கண்டுகொள்வதில்லை. அங்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஷீலா இதை தடுக்க நினைக்கிறார். இவரை மைக்கேல்ராஜ் பெரிதாக தடுக்கநினைப்பதில்லை. கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறார். உண்மையில் அவர் யார் என்பது சற்று சுவாரசியமாக உள்ளது.  நைனாவிடம் தொழில் கற்றவரான மைக்கேல் ராஜ், தான்செய்யும் தொழிலை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.இறுதியாக அவரோடு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த, இப்போதைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள ஷீலா சொல்

காஸனோவா, ஒரு பெண் மீது கொள்ளும் காதல் வழியாக உறவுகளின் மதிப்பை அறிந்துகொள்ளும் கதை!

படம்
                கிரேக்க வீருடு நாகார்ஜூனா , நயன்தாரா பெண்கள் என்றாலே உடல் இன்பத்திற்கு மட்டும்தான் என நம்பும் ஒருவர் சூழல்களால் மனம்மாறி குடும்பத்தை நேசிப்பதோடு , காதலித்த பெண்ணை திருமணம் செய்வதுதான் கதை . வெளிநாட்டு தொழிலதிபர் நாகார்ஜூனா . அவரும் , உறவு முறையில் மாமாவும் , நெருங்கிய நண்பன் என இணைந்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள் . தனது செல்வாக்கு , அழகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறத்தாழ 99 பெண்களை படுக்கையில் வீழ்த்துகிறார் கிங் நாகார்ஜூனா . பெண்களை போகப்பொருளாக பார்க்கிறார் . நெருக்கமான உறவை அவர் விரும்புவதில்லை . இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் . இந்த நேரத்தில் அவரால் செக்சுக்காக பயன்படுத்தப்பட்ட பெண் ஒருத்தி , அவருடைய சிஎஸ்ஆர் திட்டம் ஒன்றை வன்மத்தோடு உருக்குலைக்கிறாள் . இதனால் , அந்த பணியை ஒப்படைத்த நிறுவனம் நாகார்ஜூனா மீது வழக்கு போட்டு வெல்கிறார்கள் . அதிக அளவு தொகையில் அபராதம் கட்ட வேண்டும் என்பதே பெரிய பிரச்னை . இந்த நேரத்தில் கிங்கிற்கு இந்தியாவில் பூர்விகமான தாத்தாவிடமிருந்து போன் வருகிறது . அவர் , மகன் வயிற்று பேரனான கிங்க