இடுகைகள்

சாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவை விட உத்தரப் பிரதேசத்தில் இறப்பு சதவீதம் குறைவுதான்! - யோகி ஆதித்யநாத், முதல்வர், உத்தரப்பிரதேசம்

படம்
                    யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வர் ஆக்சிஜன் , படுக்கை , மருந்துகள் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் அதிகளவு கோவிட் 19 இறப்புகள் நேர்ந்துள்ளதை ஏற்கிறீர்களா ? இந்த விவகாரத்தில் நாம் அரசியல் செய்யக்கூடாது . வளர்ந்த நாடுகளை விட பிற மாநிலங்களை விட எங்களது மாநிலத்தில் குறைவான இறப்புகளே நோய்த்தொற்றால் நடந்துள்ளன . நாங்கள்தான் முதல் மாநிலமாக ஆக்சிஜன் சப்ளையை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை செய்தோ்ம் . இங்கே அதிகளவு ஆக்சிஜனை தயாரிக்கும் ஆலைகள் இல்லாதபோதும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்தும் அதனை பெற்று வழங்கினோ்ம் . இதற்கான ஆக்சிஜன் உருளை தணிக்கை முறையையும் இங்கு அமல்படுத்தியுள்ளோம் . தடுப்பூசியை பெண்களும் , கிராமத்திலுள்ளவர்களும் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை . இவர்களை எப்படி ஊக்கப்படுத்தப் போகிறீர்கள் ? நாங்கள் மூடநம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம் . எதிர்க்கட்சியினர் தடுப்பூசி பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர் . கிராமத்தில் உள்ள மக்களுக்காக ஆப்களை உருவாக்கியுள்ளோம் . மக்களுக்கு உதவ 1,33,

பிறர் என்ன சொல்வார்களோ என்று எனது தலித் அடையாளத்தை மறைத்து வைத்தேன்! - நீரஜ் கெய்வான்

படம்
              நீரஜ் கெய்வான் இந்தி திரைப்பட இயக்குநர் கீலி புச்சி எனும் கதை உங்களுடைய தேசிய விருது வென்ற படமாக மாசானில் இடம்பெற்றதுதான் . அதனை சிறிய படமாக எப்படி உருவாக்கத் தோன்றியது ? வருண் குரோவரோடு கதையை எழுதும்போது , மேற்சொன்ன கதை மாசான் படத்திற்கு அதிக கனம் கொண்டதாக தோன்றியது . தர்மேட்டிக் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு இந்த கதையை உருவாக்கினோம் . இதில் நாயகர்கள் , எதிர்மறை நாயகர்கள் என யாரும் கிடையாது . ஒருவரின் குணநலன்களேதான இதில் எதிர்மறையாக பலவீனமாக மாறும் . சிறுபான்மை சமூகம் இன்றும் தங்களது வேலை , வாழ்க்கைக்காக போராடி வருகிறது . இதனை நாம் சற்று தனிமைப்படுத்தி பார்க்கவேண்டும் . சாதி வேறுபாடுகளை எப்படி வேறுபடுத்தி காட்டினீர்கள் ? இந்த விவகாரம் பற்றி நமக்கு முழுமையாக தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் . நான் பெண்களைப்பற்றி பேசினாலும் கூட ஆண்களால் அவர்களின் மாதவிடாய் வலியை உணர முடியாது என்பதே உண்மை . இதைப்போலத்தான் குழந்தைப் பிறப்பும் , பணியிடம் சார்ந்த தீண்டாமையும் கூட . இந்த ஐடியாவை நாங்கள் சிறுபான்மை சமூகத்துடன் இணைத்து எழுதினோம் . மெனோ

மகளை குழுவாக வல்லுறவு செய்தவர்களை நீதியின் முன்னே நிறுத்திய பாந்த் சிங்! - துணிவின் பாடகன் - தமிழில் கமலாலயன்

படம்
            துணிவின் பாடகன் பாந்த்சிங் நிருபமா தத் தமிழில் கமலாலயன் காம்ரேட் டாக்கீஸ் மார்க்சிய லெனினிய கட்சியைச் சேர்ந்த பாந்த் சிங் , இரண்டு கைகளையும் ஒரு காலையும் ஜாட் சாதி வெறியர்களால் இழந்தவர் . அதற்கு முன்னரே அவரது மகள் ஆதி திராவிட பெண்மணியின் உதவியால் இரு ஜாட் இனத்தவரால் பாலியல் குழு வன்புணர்வு செய்யப்பட்டவர் . அதற்காக அந்த பெண் நடத்திய சட்டப்போராட்டம் , கிடைத்த நீதி , அதற்குப் பிறகு அதன் விளைவாக பாந்த்சிங் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கப்பட்டது எல்லாம் வேதனையான சம்பவங்கள் . இந்த நூல் நேரடியாக பாந்த் சிங் என்பவருடைய வரலாற்றைப் பற்றி சொல்லவில்லை . கடுகு பூக்கள் பூத்த வயல் என்று காட்சி வர்ணனை தொடங்கும்போதே மனதிற்குள் ஏனோ சோக உணர்வு ஏற்படுகிறது . இது அந்த காட்சி காரணமாகவா , பாந்த்சிங்கின் வாழ்க்கையை நினைத்தா என்று தெரியவில்லை . நிருபமா தத் பல்வேறு கிராம்ங்களுக்கு சென்று மஹ்ஜாபி சீக்கியர்கள் எப்படி ஜாட் சாதிவெறியர்களால் சுரண்டப்படுகிறார்கள் . அவர்கள் வீட்டிலுள்ள வயது வந்த பெண்களை வல்லுறவு செய்வது அங்கு சமூக அங்கீகாரமாக உள்ளது . ஆ

கிடைத்த அன்பை பற்றிக்கொள்ள காதலன் எடுக்கும் முடிவு! - நீ கோசம் - ரவிதேஜா, மகேஸ்வரி

படம்
                நீ கோசம் ஓவியங்களை வரைந்துகொடுக்கும் கலைஞர் , கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பெண்ணை காதலிக்கிறார் . அவரது அப்பா தீவிரமான சாதி வெறியர் . தனது தம்பி பெண்ணை அவரே கைப்பட கொன்றிருக்கிறார் . இந்த காதல் ஜோடியின் திருமணத்தை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை . ரவிதேஜா முடிந்தவரை எளிமையான கதைக்கு நியாயம் சேர்க்க நடித்திருக்கிறார் . மகேஸ்வரியும் அப்படியே . ரவிதேஜாவின் மீது காதல் வந்துவிட்டபோதும் , அதை எப்படி சொல்வது , வீட்டில் ஏற்கமாட்டார்களே என தடுமாறுவது , இறுதியில் ரவியின் நிர்பந்தத்தால் அதனை ஏற்பது என கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார் .    படம் வணிகப்படமாக இருக்கவேண்டுமா , உணர்ச்சிகளைக் கொட்டும் இயல்பான படமாக வரவேண்டுமா என்பதில் இயக்குநருக்கு பல்வேறு குழப்பங்கள் உள்ளன . குத்துப்பாட்டு இல்லாத குறையை இறுதிப் பாடலில் கவர்ச்சிகர ஆடையை நாயகிக்கு கொடுத்து பீச்சில் ஆடப்பாடச்சொல்லி நிவர்த்தி செய்திருக்கிறார்கள் .    மகேஸ்வரியின் அப்பாவை சமாதானம் செய்து கல்யாணம் செய்துகொள்ள ரவி முனைகிறார் . அதற்கு அவர் மறுப்பு தெ

மனிதநேயத்தை ஒட்டியதே கலை! - அனாதைப் பிணங்களை எரிக்கும் திண்ணைநிலாவாசிகள் நாடககுழு தலைவர் பக்ருதீன்

படம்
            அனாதைப் பிணங்களை எரிக்கும் தியேட்டர் குழு ! சென்னையைச் சேர்ந்த திண்ணை நிலாவாசிகள் எனும் நாடக குழு , தங்களது செயல்பாடு தாண்டி சமூகப்பணிக்காக பாராட்டப்பட்டு வருகிறது . இக்குழுவினர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அனாதைப் பிணங்களை பெற்று அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர் . இதனை செய்யும் குழுவின் தலைவர் எம் . பக்ருதீன் . சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கலைஞர்களுக்கு தெரிவது அவசியம் . அதோடு சமூகத்திற்கான பணிகளிலும் அவர்கள் பங்களிக்கவேண்டும் என்று கொள்கையுடையவர் பக்ருதீன் . இங்கு யாரும் அனாதைகள் இல்லை . நாங்கள் எந்த சடங்குகளையும் பின்பற்றவில்லை . உடல்களை முறையாக பெற்று அதனை முறைப்படி அடக்கம் செய்கிறோம் என்றார் பக்ருதீன் . பொதுமுடக்க காலத்திலும் கூட நாறு பிணங்களை அடக்கம் செய்திருக்கிறது இந்த நாடக குழு . கோவில்படியில் செயல்படும் முருகபூபதியின் மணல் மகுடி நாடக குழுவில் நடிப்பு பயிற்சி பெற்றவர் பக்ருதீன் . 2015 ஆம்ஆண்டு சமூக செயல்பாட்டாளர் ஆனந்தி அம்மாளின் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறார் . ஆனந்தி அம்மாள் , அனாதைப் பிணங்களை பெற்று நல்லடக்கம் செய்து வந்தார் .

சாதி அரசியல் செய்து மக்களைப் பிரிப்பது பாமகவும், பாஜகவும்தான்! - தொல்.திருமாவளவன்

படம்
                தொல் . திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சாதி அரசியல் தமிழ்நாட்டை பிரித்துவிடும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ? ஆம் . நாங்கள் சாதி அரசியலுக்கு எதிரானவர்கள்தான் . சாதி அரசியல் செய்யும் கட்சிகளான பாமக , பாஜக ஆகியவற்றை இதற்குள் உள்ளடங்கியவையாக குறிப்பிடுகிறோம் . இக்கட்சிகள் மிக ஆபத்தானவை . பாஜக கட்சி , பிற்படுத்தப்பட்டவர்கள் ., தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்து வருகிறது . வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அவர்கள் வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து இப்படி கோரிக்கையை எழுப்புகிறார்கள் . இப்படி கோரிக்கையை வைத்து கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து தாங்கள் நினைத்த சீட்டுகளை பெற நினைக்கிறார்கள் . இந்த தந்திரமான நடவடிக்கை ஏறத்தாழ நடைமுறைக்கு ஏற்ற கோரிக்கையல்ல . இது மிரட்டல் அரசியலாக உள்ளது . அவர்கள் கோரிக்கைக்கு நாங்கள் எதிரியல்ல . ஆனால் அவர்கள் வன்னியர்களை முதன்மைப்படுத்துவதாக கூறுவது போலியானது . நீங்கள் ஈழத்தில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி கு

சாதி வன்முறைகளை மறைக்கவே இந்தியா அகிம்சை நாடு என்று கூறப்பட்டது! - அபர்ணா வைதிக், வரலாற்று ஆய்வாளர்

படம்
              வரலாற்று ஆய்வாளர் அபர்ணா வைதிக் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் லவ் ஜிகாத் முயற்சிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புழக்கமாகி நடைபெற வாய்ப்புள்ளதா ? இந்து என்பதை நம்மில் பலரும் கேட்டுப்பழகியது 19 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் என்பதை நினைவுகூருங்கள் . அப்போதிலிருந்து இந்து என்பது பெரும்பான்மையான பல்வேறு ஊடகங்களில் ஒலித்தபடிதான் இருக்கிறது . ஆனால் லவ் ஜிகாத் என்ற சட்டம் இப்போது குறிப்பிட்ட மாநிலத்திற்கான சட்டமாக உள்ளது . நாளை இது நாடு முழுக்க அமலாகும் வாய்ப்புள்ளது . லவ் ஜிகாத் என்ற சட்டம் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சட்டமாக இருந்தாலும் இது இந்து முஸ்லீம் என்ற இரு மதங்களைக் கொண்டது மட்டுமல்ல . முஸ்லீம் , கிறிஸ்துவ அமைப்புகள் உத்தரப்பிரதேசத்ததிலுள்ள சமர் , சந்தால் , தோம் , லாய் பேகிஸ் என்ற தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினரை தங்கள் மதத்திற்கு மாற்றிவந்தன . இதனால்தான் ஆரிய சமாஜமும் , இந்து மகாசபையும் இந்து மக்கள் எண்ணிக்கையில் குறைகின்றனர் என்று குரல் எழுப்பி பேரணிகளை நடத்தினர் . லவ் ஜிகாத் என்பதே மேல்சாதியைச் இந்து பெண்களை கிறிஸ்தவர்கள் , முஸ்லீம்கள்

ஏழை இளைஞனின் வாழ்க்கையை தகர்க்கும் சாதிய வன்மம்! கலர் போட்டோ 2020! ச சந்தீப் ராஜ்

படம்
              கலர் போட்டோ Director: Sandeep Raj Writers: Sandeep Raj , Sai Rajesh Neelam Stars: Suhas , Chandini Chowdary , Sunee     சாதி , நிறம் காரணமாக புறக்கணிக்கப்பட்டு உயிரை விடும் இளைஞனின் வாழ்க்கைதான் கதை . விஜயவாடா , மச்சிலிப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட ஆணவக்கொலை பற்றிய படம் . ஜெயகிருஷ்ணா , தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் . காலையில் பால் கறந்து ஊற்றும் வேலைகளை செய்துவிட்டு கல்லூரிக்கு வருகிறான் . பொறியியல் படித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்பதுதான் அவன் கனவு . பல்வேறு இடங்களிலும் அவன் திறமை தாண்டி அவன் சாதி , நிறம் பலருக்கும் குறையாக தெரிகிறது . இதனை எந்த சமரசமின்றி எதிர்க்கிறான் . இதற்கான பல்வேறு இடங்களில் எதிர்ப்புகளை சந்திக்கிறான் .   கல்லூரியில் மேல் சாதியைச்சேர்ந தீப்தி என்ற பெண்ணை கடவுளின் வேஷத்தி ல் பார்க்கிறான் . நண்பன் சொன்னது போல உடல் புல்லரிக்க அப்போதே காதலில் விழுகிறான் . ஆனால் அதனை அந்த பெண்ணுக்கு சொல்ல முடியவில்லை . காரணம் . தான் இருக்கும் நிறம் , சாதி என பல தடைகள் முன்னே

கோவிட் -19, வெறுப்பு பேச்சு, இனவெறியை ஜவாகர்லால் நேரு சமாளித்திருப்பாரா? 132ஆவது நேரு பிறந்த தினம் (14.11.2020)

படம்
      நேருவின் 132 ஆவது பிறந்ததினம் , இந்த ஆண்டு கடந்திருக்கிறோம் . நவீன சிற்பிகளில் ஒருவரான நேருவைப் போல நடப்பு ஆண்டில் தூற்றப்பட்டவர் யாரும் கிடையாது . இந்த நேரத்தில் அவரின் செயல்பாடுகளை நினைவுகூர்வோம் . நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் மறைந்தார் . அவரது பல்வேறு நடவடிக்கைகளை இன்று கடுமையாக விமர்சிக்கும் புருஷோத்தம் அகர்வால் அன்று சிறுபையனாக இருந்தவர் . நேருவின் பல்வேறு செயல்பாடுகளை நான் கடுமையாக விமர்சித்து இருக்கிறேன் . ஆனால் இந்திய நாட்டிற்காக தன்னையே வைத்துக்கொண்ட அந்த மனிதனின் நாட்டுப்பற்றை நான் மறக்கவே முடியாத . சீனா செய்த நம்பிக்கை துரோகம் நேருவின் இழப்பிற்கு காரணமாகியது . என்று பேசுகிறார் . அகர்வால் ஹூ இஸ் பாரத்மாதா என்று நூலை எழுதியுள்ளார் . இதில் நேரு , வல்லபாய் படேல் , வாஜ்பாய் ஆகியோரைப் பற்றிய தகவல்களை எழுதியுள்ளார் . உண்மையில் சிறந்த தலைவராக செயல்பட்ட மனிதரை இழந்துள்ளோம் . திறந்த புத்தகமாக இருந்து செயல்பட்டவரும் நானும் பல்வேறு விஷயங்களை கலந்தாலோசித்து இருக்கிறோம் . நேர்மையாக செயல்பட்ட தலைவர் அவர் என வல்லபாய் படேல் நேருவின் 60 ஆவது பிறந்தநாளில் ஆற்றிய உர