இடுகைகள்

சினிமா விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பகடை காய்களாக உருளும் மனிதர்களின் வாழ்க்கை! - லூடோ - அனுராக் பாசு

படம்
                லூடோ இயக்கம் , கதை , திரைக்கதை ஒளிப்பதிவு , தயாரிப்பு அனுராக் பாசு இப்படி ஒருவரே அனைத்தும் செய்வதால் படம் நன்றாக இருக்குமோ என பலரும் நினைப்பார்கள் . ஆனால் படம் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது . நான்கு கதைகள் . நான்கு ஜோடிகள் . அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளான நூல்கண்டு போல குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது . இதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்தான் கதை . அனைவரின் வாழ்க்கையிலும் வரும் முக்கியமான கதாபாத்திரம் சட்டு ( பங்கஜ் திரிபாதி ). வைரத்தை வைத்துள்ள பில்டர் பிந்தரை போட்டுத்தள்ளிவிட்டு ஓ பேட்டாஜி பாடலைக் கேட்டுக்கொண்டே தன்னுடைய ஏரியாவுக்கு வருகிறார் . இவர்தான் கதையின் மையப்புள்ளி . இவரிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலைபார்த்து காதல் செய்துகொண்டு ஒழுங்காக திருந்தி வாழ நினைத்தவன் பிட்டு . சட்டுவின் வலது கரமாக விளங்கியவன் . அவனை போலீசில் பணம் கொடுத்து ஆறு ஆண்டுகள் உள்ளே தள்ளுகிறான் . இதனால் பிட்டுவின் காதல் வாழ்க்கை நாசமாகிறது . மனைவி தாலியை சிறைக்கு வந்து கழற்றி எறிந்துவிட்டு செல்கிறாள் . அவர்களது குழந்தைக்கு அவனை யார் என

ப்ரீலான்ஸ் டிடெக்டிவ் கொலைக்குற்றத்திற்கு தீர்வு கண்டுபிடிக்கிறார்! - ஆக்சிடென்டல் டிடெக்டிவ் 2015

படம்
        Director: Kim Joung-hoon Writer(s): Kim Jung-Hoon The crux of the film is loosely inspired from Strangers on a Train    புத்தக கடை நடத்திவருகிறார் இளைஞர் ஒருவர். அவருக்கு மணமாகிவிட்டது. அவருடைய மனைவி வேலைக்கு சென்றபிறகு அந்த நகரில் நடந்த கொலைக்குற்றங்களை அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காண்பது இளைஞருக்கு பிடித்தமான வேலை. அவர் காவல்துறையில் சேர முயன்று தோற்றுப்போனவர். எனவே, காவல்துறையில் சேராமலேயே நம்மால் குற்றங்களை தீர்க்கமுடியும் என காவல்நிலையத்திற்குள் போய் தனக்கு தெரிந்த விஷயங்களை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி அவமானப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் காவல்நிலையத்தில் உள்ள அவரது நண்பரே கொலை வழக்கு ஒன்றில் அநியாயமாக மாட்டிக்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற இளைஞர் நினைக்க, அவருக்கு இன்ஸ்பெக்டர் உதவிசெய்தால் அதுதான் படத்தின் மையமான புள்ளி   படம் முழுக்க கொரியப்படங்களுக்கு உண்டாக குடும்பம், பாசம், நேசம், நெகிழ்ச்சி , காமெடி என அனைத்தும் கொண்டதாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நாயகனுக்கான எந்த காட்சியும் கிடையாது. ஏன் சண்டையில் கூட அத்தனை அடிகளையும் வாங்கி மருத்துவமனையில் முனகிக்கொண்டே படுத்தி

விமான விபத்தில் குடும்பத்தை கொன்ற தீவிரவாதிகளை உணர்ச்சிவசப்படும் பெண் பழிவாங்க முடியுமா? தி ரிதம் செக்ஷன் 2020

படம்
      Director: Reed Morano Produced by: Barbara Broccoli, Michael G. Wilson Writer(s): Mark Burnell  ரெகுலரான பழிக்குப்பழி கதைதான். பழி வாங்குபவள்  கொஞ்சம் மனிதநேயம் பார்த்து இறப்பவனுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள் என நினைத்துப் பார்த்து கண்ணீர் விடுபவளாக இருந்தால்.... அதுதான் தி ரிதம் செக்ஷன் படத்தின் கதையும் கூட.  பிளாக் லைவ்லி(ஸ்டெபானி), ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவி. அவளது அன்பான குடும்பம் விமானத்தில் பயணிக்கிறது. ஆனால் அதில் பிளாக் லைவ்லியால் பயணிக்க முடியவில்லை. அதேசமயம் அந்த விமானம் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் அதில் பயணித்த அத்தனை பேரும் இறந்துபோகிறார்கள். ஆனால் இதனை செய்த யூ17 என்பவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. அவனுக்கு எதிராக தடயங்கள் இல்லை என சிஐஏ கைவிரித்து விடுகிறது.    குடும்பம் ஒட்டுமொத்தமாக இறந்துபோனதால், தவிக்கும் ஸ்டெபானி மனமுடைந்து போதைக்கு அடிமையாகிறாள். விபசாரம் செய்து வருகிறாள். எல்லாம் பிழைத்திருக்கத்தான். அவளது குடும்பத்தின் திடீர் இழப்பை அவளால் தாங்க முடிவதில்லை.  அப்போது அவளை சந்திக்கும் செய்தியாளர் அவளுக்கு விமான வெடிப்ப

வொயிட் காலர் டிரெஸ்ஸில் ரத்தவெறியாட்டம்! எ கம்பெனி மேன் 2012

படம்
        Movie: A Company Man Country: South Korea Release Date: Oct 18, 2012 Director: Im Sang Yoon    ஹியூங் டூ என்பவர் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் விற்பனை பிரிவில் வேலை பார்க்கிறார். அவரின் உடைகள், ஆபீஸ் அப்படி தோற்றம் காட்டும். ஆனால் ஆபீசிற்கு கீழே  உள்ள பாதாள அறைகளில் முழுக்க யாரை போட்டுத்தள்ளவேண்டும் என அசைன்மெண்டை நிறைவேற்றும் ஆபீஸ், துப்பாக்கிகள், பிளான் என அனைத்தும் தயாரிக்கப்படுகிறது. என்சிஎம் என்ற அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார் ஹியூங் டூ. ஒருமுறை போலீஸ் அலுவலகத்தில் நடக்கும் அசைன்மெண்டில், ஒருவனைக் கொல்ல பள்ளியை விட்டு இடைநின்ற ஆளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அவனைக் கொன்றுவிடுவதுதான் திட்டம். ஆனால் அவனது இளம் வயது ஹியூங்கை யோசிக்க வைக்கிறது. அதனால் அவனை உயிர்பிழைக்க வைத்து, பராமரிக்கிறார். அவனது குடும்பத்திற்கு பண உதவிகளை செய்கிறார். ஒருகட்டத்தில் பிறரை கொலை செய்யும் நிறுவனத்தின் வேலை கூட ஹியூங்கிற்கு எதற்கு இந்த வேலை என்று தோன்றுகிறது. அப்போதுதான் அவருக்கு ஆபீசில் கொலைகளை பிறருக்கு செய்யச்சொல்லி வழங்கும் இயக்குநராக பணி உயர்வு கிடைக்கிறது.  அதேசமயம் அவர் காப்பாற்றி

அமைதியான முகம், வன்முறையில் நிறைந்து தளும்பும் மனது! தி டிராப் - டாம் ஹார்டியின் தாண்டவம்

படம்
              தி டிராப் Director: Michaël R. Roskam Writer(s): Dennis Lehane Based on"Animal Rescue" by Dennis Lehane Music by Marco Beltrami [1] Cinematography Nicolas Karakatsanis   செச்சன்ஸ் எனும் குற்றவாளி குழுக்களின் பணத்தை பரிமாறும் இடமாக பார் ஒன்று உள்ளது. அதன் உரிமையாளர் மார்வ். இவரின் சொந்தக்காரர் பாப் அங்கு பார் டெண்டராக பணிபுரிகிறார். அங்கு திடீரென நடைபெறும் கொள்ளையால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கொள்ளையில் இழந்த பணத்தை செச்சன்ஸ் கேட்கிறார்கள். பாப், மார்வ் இருவரும் தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லிவிடுகிறார். பாப் மட்டும் கொள்ளையடித்தவனின் வாட்ச்சை அடையாளம் சொல்லிவிடுகிறான். உண்மையில் அந்த கொள்ளையை திட்டமிட்டது யார், அதன் பின்னணியில் உள்ள துரோகி யார் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நேரடியான சண்டைக்காட்சி எதுவும் கிடையாது கிளைமேக்ஸ் காட்சியை தவிர. ஆனால் படம் முழுக்க எப்போது யார் யாரை அடித்துக்கொள்வார்களோ என்ற அழுத்தம் நம்மை பரபரப்பிற்குள்ளாக்குகிறது. குறிப்பாக பாப் சகினோஸ்வ்கியாக நடித்துள்ள டாம் ஹார்டியின் நடிப்பு. எதற்கும் பதற்றப

தொன்மைக்காலத்திலிருந்து மக்களை துன்பத்திலிருந்து காக்கும் காவலர்கள்! - தி ஒல்டு கார்டு

படம்
            தி ஓல்டு கார்டு                     தி ஓல்டு கார்டு உலகை காக்கும் பணியில் ஆதி காலம் முதல் இன்று வரை ஈடுபடும் குழு ஒன்று உள்ளது. இவர்கள் ஒருவரையொருவர் கனவுகள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். தங்களோடு இணைத்துக்கொள்கிறார்கள். பிறருக்கு வயதானாலும் இவர்களுக்கு வயதாகாது. இவர்களின் உடலிலுள்ள மரபணுக்களை திருட மருந்து நிறுவனம் திட்டம் தீட்டுகிறது. இதற்கு காப்பான் குழுவிலுள்ள ஒருவரே உடந்தையாகிறார். அந்த சதியில் அவர்கள் வாழ்க்கை என்னவானது? துரோகியை கண்டுபிடித்தார்களா? உலகை காப்பாற்றும் பணியை தொடர்ந்தார்களா என்பதுதான் கதை படத்தின் தயாரிப்பாளரும், நாயகியும் சார்லீஸ் தெரோன்தான். எனவே அந்த குழுவின் பாஸ் கூட அவரேதான். கதை திடுக்கென தொடங்கி, குழந்தைகளை மீட்கும் பணியின்போதுதான், அவர்கள் யார், அவர்கள் சக்தி என்ன என்பது பார்வையாளர்களுக்கு அறிமுகமாகிறது. படத்தின் சிஜி சமாச்சாரங்கள் சிறப்பாக உள்ளன. அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பதற்கான அடிப்படைக் கதையை இப்படத்தில சொல்லி விட்டடார்கள். எனவே அடுத்த பாகங்கள் படமாக எடுக்கப்பட்டால் இப்படத்தை பார்ப்பது முக்கியம். கிறிஸ்துவர்கள் சிலுவைப் போரில் ஈடுபடும், மதம்தா

காதலை ஆயுதமாக்கி மோசடி செய்யும் தில்லாலங்கடி பெண்! நீ எவ்வரோ தெலுங்கு

படம்
      நீ எவ்வரோ தமிழில் யாரோ இவன் கண் தெரியாத செஃப் கல்யாண். 12 டேபிள்ஸ் என்ற உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரை சிறுவயது தோழியான அனு காதலித்து வருகிறாள். ஆனால் அவள் மேல் கல்யாணுக்கு பெரிய ஈர்ப்பில்லை. அந்த நேரத்தில் கல்யாணின் உணவகத்திற்கு வெண்ணிலா என்ற பெண் வருகிறாள். சாலையில் இருக்கும் வயதானவர் ஒருவருக்கு உணவு கேட்கிறாள். சில நாட்களின் சந்திப்பில் அவளை கல்யாணுக்கு கல்யாணமே செய்துகொள்ளலாம் என்று நம்பிக்கை பிறக்குமளவு பிடித்துவிடுகிறது. அப்போது பார்த்து கடனுக்காக அவளை சிலர் மிரட்டுகிறார்கள். பணம் கொடுத்து அவளை மீட்கலாம் என்று நினைக்கும்போது கல்யாணுக்கு விபத்து நேர்கிறது. விபத்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, கல்யாணுக்கு கண்பார்வையும் மீள்கிறது. எப்படி வெண்ணிலாவை அவன் மீட்கிறான் என்பதுதான் கதை. ஆதி(கல்யாண்) நடிக்கும் படத்தை நிச்சயமாக பார்க்கலாம் என்ற நம்பிக் கை இந்த முறையும் சோடை போகவில்லை. இதில் ரித்திகா சிங்கிற்கு பெரிய வாய்ப்பு இல்லை, முழுக்க டாப்சி பானுவுக்குத்தான் வரிந்து கட்டி நடிக்கும் வாய்ப்பு. அதையும் அவர் நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இரட்டை அர்த்த போலீ

நேசிக்கும் அனைவரும் பிரிந்துபோக நாயகன் எடுக்கும் முடிவு! - அவுட் ஆஃப் ஃபர்னாஸ்

படம்
  Out of the Furnace அவுட் ஆஃப் ஃபர்னாஸ் Director: Scott Cooper Produced by: Jennifer Davisson Killoran, Leonardo DiCaprio, Ryan Kavanaugh, Ridley Scott, Michael Costigan Writer(s): Brad Ingelsby, Scott Cooper     எளிமையான கதை. தம்பியை பாசத்தோடு மில்லில் வேலை பார்த்து சூதாட்ட கடன்களைக் கூட அடைத்து காப்பாற்றி வருகிறார் அண்ணன். ஆனால் தம்பியை தெருச்சண்டை விவகாரத்தில் போதைப்பொருள் மாஃபியா தலைவன் ஒருவன் கொன்றுவிடுகிறான். இதனால் அவனை பழிவாங்க அண்ணன் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.    படத்தில் வேகமான சேசிங், பொறி பறக்கும் சண்டைக் காட்சிகள் என ஏதும் இல்லை.  அப்பா மில் வேலை பார்த்து நோய் வந்து படுக்கையில் கிடக்கிறார். அவரைப்போலவே மில் வேலைக்கு செல்கிறார் அண்ணன். தம்பி ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வந்து தனக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கிறான். குறுகிய நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான். அப்போதுதான் தெருச்சண்டை போட்டு தோற்றால் அதிக பணம் கிடைக்கும் என தெரிகிறது. அதை நடத்துபவர்கள் பற்றி தெரியாமல் அதில் மாட்டிக்கொள்கிறான்.  படம் பழிக்குப்பழி வாங்குவது பற்றி அ

அணுகுண்டு ஆராய்ச்சிக்கு முன்னாள் உளவாளியை கடத்திச்செல்ல முயலும் சதி! - ஒகே மேடம் - கொரியா

படம்
  ஒகே மேடம்     ஒகே மேடம் கொரியா, வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு வரும் முன்னாள் உளவாளி ஒரு பெண். அவரை தென்கொரிய அரசு பாதுகாக்கிறது. காரணம் அவரது தந்தை ஒரு அணு விஞ்ஞானி. இந்த பெண் மூலம் அணு குண்டுகளை தயாரிக்கும் பணியை வடகொரியா செய்ய நினைக்கிறது. ஆனால் உளவாளியாக இருந்த பெண், மெல்ல குடும்பத் தலைவியாகி பலகாரக்கடை நடத்தி வருகிறார். கிடைக்கும் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு பெண் பிள்ளையைப் பெற்று படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அம்மாவின் ஜீன் ஸ்ட்ராங்காக பதிந்து இருப்பதால், சிறுமி பள்ளியில் சக மாணவர்களை புரட்டி எடுத்து விட்டே வீடு திரும்புகிறாள். அதேநேரம் அவளுக்கு பெற்றோர் தன்னை வெளியே எங்கும் கூட்டிச்செல்ல மாட்டேன்கிறார்கள் என்று வருத்தம் உள்ளது. அப்போது குளிர்பான நிறு்வனம் மூலம் ஹவாய் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அங்குதான் விதி குறிக்கிடுகிறது. அதே விமானத்தில் முன்னாள் உளவாளிப் பெண்ணை கடத்திச்செல்ல வடகொரியா ஆட்கள் வருகி்ன்றனர். அவர்களை எப்படி முன்னாள் உளவாளிப் பெண் சமாளித்து பிற விமானப் பயணிகளை காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. படம் காமெடி, உணர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் என நி

மனதை திருடும் கூட்டம்! பௌண்டி ஹன்டர்ஸ் 2016

படம்
      பௌண்டி ஹன்டர்ஸ் 2016          பௌண்டி ஹன்டர்ஸ் 2016 சீன, தென்கொரிய, ஹாங்காங் தயாரிப்பு இயக்கம் ஷின் டெரா இன்டர்போலில் வேலை செய்த இருவர்(லீசான், அயோ), அங்கிருந்து துரத்தப்படுகிறார்கள். அவர்கள் பிழைக்க ஏற்றுக்கொள்ளும் வேலை, தனிநபர்களுக்கு பாதுகாப்பு தருவது. அதிலும் முன்கோபத்தால் ஆவேசப்பட்டு லீசான் செய்யும் பல்வேறு செயல்களால் நண்பர்கள் இருவரும் வம்பில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு நிருபரை காப்பாற்றச் செல்கிறார்கள். அங்கு அந்த நிருபரைக் கொல்ல மூன்று பேரைக் கொண்டு குழு முயல்கிறது. அதை லீசான் அண்ட் கோ தடுக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. படம் சீரியசும், காமெடியும் கலந்து எடுத்த கொரியப்படம். இதில் லீ சான்(லீ மின் ஹோ)  பாத்திரம்தான் வீர தீர சாகசத்தில் முன்னே நிற்கும் பாத்திரம். இவர்களுக்கு, நிருபரைக் குண்டு வைத்து கொன்ற குழுத்தலைவியிடம்() சந்திப்பு ஏற்பாடாகிறது. அவர்களோடு இணைந்துகொண்டால்தான் உயிர்பிழைக்கும் நிலை. குழு தலைவிக்கு ஏராளமான சொத்து கிடக்கிறது. இதனால் பிரைவேட் ஜெட்டில் பறந்து, டைம்பாம்செட் செய்து மக்களைக் கொல்பவர்களை கண்டுபிடித்து மின்அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நம்பிய

சுயலநலமில்லாத அன்பு அனைத்தையும் சகித்துக்கொள்ளும்! அமரம் அகிலம் பிரேமா - ஜொனாதன் எட்வர்ட்ஸ்

படம்
    அமரம் அகிலம் பிரேமம்         அமரம் அகிலம் பிரேமம் ஜொனாதன் எட்வர்ட்ஸ் தமிழில் நாம் பார்த்து நெகிழ்ந்த அபியும் நானும் படம்தான். தெலுங்கில் வசனங்களை நறுக்கென்று எழுதி, பாசத்தில் சுயநலம் கூடாது என செய்தி சொல்லி படம் எடுத்திருக்கிறார்கள்.   படத்திற்கு பெரும் பலம் அப்பாவாக நடித்துள்ள ஶ்ரீகாந்த் ஐயங்கார். படத்தின் நாயகன் இவர்தான். படம் முழுக்க இவர் வருகிறார். நாயகன் அமர், அகிலாவாக நடித்த விஜய்ராம், சிவ்சக்தி சச்தேவ் ஆகியோர் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார்கள். படத்தின் முக்கியமான மையம், அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாசம். காதல் மகளின் மனதில் பூக்கும்போது காணாமல் போகிறதா இல்லையா என்பதுதான். அருண் பிரசாத் பாத்திரத்தைப் பொறுத்தவரை அவரே அனைத்து முடிவுகளை எடுக்க நினைப்பதில்லை. மகள் தான் செய்யும், செய்யப்போகும் விஷயங்களை தன்னிடம் சொல்லவேண்டும் என நினைக்கிறார். ஆனால் காதல் வரும்போது கள்ளத்தனம் அனைவரின் மனதிலும் குடியேறும்தானே? அகிலாவுக்கும் அப்படியே ஆகிறது. அப்பா அருண், கடும்கோபமாகி இனி அவள் என் மகள் கிடையாது என அனைத்து அன்பையும் வெறுப்பாக்கி காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். இதனால் எஞ்சினியர் ஆக