இடுகைகள்

போராட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை சவால்களை ஏற்காவிட்டால் அவர்களால் வெற்றி பெற முடியாது!

படம்
              உலக பெண்கள் தினம் வந்துவிட்டது . பெண்களுக்கு மரியாதை தரும் தினத்தில் அவர்களைப் பற்றி நான்கு வார்த்தை எழுதாவிட்டால் எப்படி ? ருச்சுதா திவேகர் ஊட்டச்சத்து நிபுணர் , எழுத்தாளர் நீங்கள் ஒன்றை விரும்பினால் போதும் . மற்றதெல்லாம் எளிமையானதுதான் . நான் மக்களின் வாழ்க்கைமுறையை மாற்றி அவர்களை உணவுமுறையை பின்பற்றச்செய்கிறேன் . அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன் . இது என்னை பெரிதும் உற்சாகப்படுத்துகிறது . மக்கள் நம்புகிற , ஆனால் நீங்கள் எதிர்க்கும் உணவு தொடர்பான மூடநம்பிக்கைகள் என்ன ? அரிசி சாப்பாடு ஒருவரை பருமனாக்கும் . மாம்பழம் நீரிழிவை ஏற்படுத்தும் . நெய் சேர்த்துக்கொள்வது கொழுப்பை அதிகரிக்கும் என்றி மூன்றை முக்கியமாக சொல்லலாம் . நீங்கள் ஊட்டச்சத்து நிபுணராக என்னென்ன போராட்டங்களைச் சந்தித்தீர்கள் . நான் தேர்ந்தெடுத்த துறை பிறரிடமிருந்து வேறுபட்டது என்பதால் எனக்கு வந்த சவால்களும் வேறுவிதமானவை . மும்பைக்காரி என்பதால் ஓரளவு சமாளித்துவிட்டேன் . மேலும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் கூட இதுபோலவே சவால்களை சந்தித்து வந்தவர்கள் எ

தேர்ச்சியை கணிக்க அல்காரிதங்களே சிறந்தவையா? - மாணவர்களை பிளவுபடுத்தும் அல்காரிதங்கள்

படம்
              தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம் ! இங்கிலாந்தில் கொரோனா தொற்று பிரச்னையால் , மாணவர்களின் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டு முந்தை ஆண்டு மதிப்பெண்களே வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது . ஆனால் இதற்கிடையில் அவர்களின் மதிப்பெண்களை மதிப்பிட கல்வி அமைச்சகம் அல்காரிதம் ஒன்றைப் பயன்படுத்தியது . இதன் விளைவாக வெளியான தேர்வு முடிவுகளில் ஏ கிரேட் மாணவர்கள் 40 சதவீதம் பேர் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் . ஆசிரியர்களின் கணிப்பை விட அல்காரிதத்தின் கணிப்பு முறை மாணவர்களின் தேர்ச்சி தரத்தை குறைத்துள்ளது நாடெங்கும் சர்ச்சையானது . மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடத்தொடங்கினர் . இப்பிரச்னையைத் தீர்க்க இங்கிலாந்து கல்வி அமைச்சகம் , ஆசிரியர்களின் யூக தேர்ச்சி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டது . அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும் அல்காரித முறையில் தேர்ச்சியை இழந்துள்ளனர் . இவர்கள் சட்டம் , இலக்கியம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் ஆவர் . அல்காரிதத்தில் ஆசிரியர்களின் பரிந்துரை , மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் ஆகியவை உள்ளீடு செய்யப்படவில்லை . என

விவசாயிகளை மத்திய அரசு கலந்து ஆலோசிக்காமல் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது! - கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர்

படம்
                கேப்டன் அம்ரீந்தர்சிங் பஞ்சாப் மாநில முதல்வர் காங்கிரஸ் கட்சி 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக உருவாக்கியிருந்தது . இன்று அதனை மறைத்து பேசுகிறது என குற்றம்சாட்டியுள்ளாரே ? மண்டிகளை நீக்கும் திட்டம் பற்றி… . ஆனால் காங்கிரஸ் கட்சி 2017 இல் ஏன் இப்போதும் கூட மண்டிகளை நீக்குவதாக கூறவில்லையே . நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியது தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதிக்கவேண்டும் என்பதுதான் . ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் . விவசாயம் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது விவகாரம் . இதற்கு மத்திய அரசு உள்ளே நுழைந்து வணிக விதிகளை வகுப்பது தேவையில்லாதது . இதை நாங்கள் விரும்பவில்லை . அப்படியென்றால் பிரதமர் மோடி உங்களை கலந்து ஆலோசிக்கவேண்டும் என்கிறீர்கள் . பிற விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசியிருக்கவேண்டும் என்பது உங்கள் கருத்து அப்படித்தானே ? ஆமாம் . ஆலோசித்தபிறகு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவது சரியான முறை . ஆனால் அரசியலமைப்பு நடைமுறையை ஒதுக்கி மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில் விவசாயிகள

சீர்திருத்தங்கள் தேவை என முதலில் அறிக்கை வெளியிட்டது விவசாய சங்கங்கள்தான்! - பியூஷ் கோயல்

படம்
          பியூஷ் கோயல்- indian express            உணவு மற்றும் வாடிக்கையாளர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு எந்த உத்தரவாதமும் தராத நிலையில் விவசாய சட்டம் எப்படி அவர்களுக்கு அதிகளவு வருமானத்தை உருவாக்கித்தரும் ? தனியாரிடம் பொருட்களை விற்கவேண்டும் என்ற அவசியம் இல்லை . அரசிடமும் கூட குறைந்த பட்ச கொள்முதல் விலைக்குட்பட்டு பொருட்களை விற்கலாம் . தனியார் நிறுவனங்களோடு அரசும் விற்பனையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வசீகரமான விலைகளை கொடுத்து பொருட்களை விற்க வைக்கலாம் . விவசாயிகள் மின்சார மசோதாவையும் கூட திரும்ப பெற கூறிவருகிறார்களே ? அவர்கள் கூறும் பல்வேறு விஷயங்களை அரசு கவனத்துடன் கேட்க தயாராகவே உள்ளது . அவர்கள் திரும்ப பெறும் மின்சார மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது . சட்டமாக இன்னும் மக்களவையில் நிறைவேறவில்லை . இந்த சட்டம் அமலானாலும் கூட விவசாயிகள் தாங்கள் செலுத்தும் மின்சாரக்கட்டணம் பெரியளவில் மாற்றப்படமாட்டாது . அறுவடைக்கழிவுகளை விவசாயிகள் எரித்தால் அவர

விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ளாமல் அறிவுரைகள் சொல்பவர்களே இங்கு அதிகம்! ஹன்னன் மொல்லா

                    ஹன்னன் மொல்லா , அனைத்திந்தியா விவசாய சங்கம் விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களை மாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் . இப்போது போராட்டம் எப்படியுள்ளதுழ விவசாயிகள் கடந்த ஆறுமாதங்களாகவே விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . ஆனால் அரசு கவனிக்கவில்லை . விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் சட்டங்களை நிறைவேற்றிவிட்டனர் . ஜனநாயக நாட்டில் அரசு இப்படி செயல்பட்டால் போராடங்களைத் தவிர வேறு என்ன வழி உள்ளது ? எனவே தலைநகருக்கு திரண்டு வந்து சட்டங்களுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் . அரசு சட்டங்களை மாற்றவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ? அரசு உருவாக்கிய மூன்று சட்டங்களை விலக்கிக்கொள்ளவேண்டும் . சிறு திருத்தங்கள் செய்வது சட்டங்களின் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்காது . போராட்டங்களுக்கு உலகளவிலான கவனம் கிடைப்பது அதனை பின்தங்க வைக்கிறதா ? குறிப்பாக காலிஸ்தான் தொடர்பான சர்ச்சை எழுகிறதே ? யாரும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவது இல்லை . நாங்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவும் தயாராக இல்லை . ஆனால் ஏராளம

பெருந்தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றி அறிந்துகொண்டேன் மானசி ஜோஸி

படம்
            பாட்மின்டன் - மானசி ஜோஸி இந்தியா டுடே, சுகானி சிங் பாராலிம்பிக்ஸ் 2021இல் உங்கள் திட்டம் என்ன? இதில் பாட்மின்டன் பிரிவு இல்லையே? நான் கலப்பு இரட்டையர் பிரிவில் ராகேஷ் பாண்டேவுடன் இணைந்து விளையாடப்போகிறேன். இவருடன் இணைந்து விளையாடி 2015இல் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி வென்றுள்ளேன். நாங்கள் இணைந்து விளையாடி போட்டிகளில் தகுதிபெற விரும்புகிறேன். அதிகளவு அழுத்தத்தை என்மேல் திணித்துக்கொள்ள விரும்பவில்லை. கடந்த ஆண்டு உலக சாம்பியனான பிறகு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தூதராக செயல்பட்டீர்கள். இதில் உங்களுக்கு என்ன பொறுப்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்? உறுப்புகளை இழந்த மக்களின் சார்பாக மட்டும் பேசுவதாக நினைக்கவேண்டாம். இதுபோல வாழும் மாற்றுத்திறனாளிகளின் சதவீதம் அதிகம். நான் இந்த பொதுமுடக்க காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பற்றி அறிந்துகொண்டேன். உங்களைப் போலவே பார்பி மாடல் உருவாக்கப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பெண்கள் பிரிவில் இதுபோல பெருமை பெற்ற இரண்டாவது இந்தியப்பெண் நான் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. பொம்மை என்னை சிறப்பாக நகல் செய்து உருவாக்கப்

மன்னருக்கு எதிராக ஜனநாயகத்தை முன்னெடுக்கும் மக்களின் போராட்டம் !

    தாய்லாந்து போராட்டம் தாய்லாந்தில் பல்வேறு மாதங்களாக ஜனநாயகத்தை வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர் . அவரை்கள் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர் . அண்மையில் உலக நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் தாய்லாந்து போராட்டம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது . பௌத்தர்கள் அதிகம் வாழும் நாடு தாய்லாந்து . 70 மில்லியன் (1 மில்லியன் -10 லட்சம் ) மக்கள் இம்மதம் தழுவியவர்கள் . 1932 முதல் அரசியலமைப்புச்சட்டம் இங்கு அமலில் இருக்கிறது . ஆனால் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற கலகத்திற்கு பிறகு ராணுவத்தின் ஆட்சிதான் பெருமளவு அங்கு நடந்து வந்தது . 2001 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டன . அதுவரை பிரதமராக இருந்த பாபுலிச தலைவரான தக்‌ஷின் ஷின வத்ரா , ராணுவத்தினால் பதவியிலிருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் . இந்த விவகாரம் நடந்த ஆண்டு 2006. இதுபோல ராணுவம் அங்கு நடந்துகொள்வது புதிதல்ல . 1976 ஆம் ஆண்டு அக் .6 அன்று தாய்லாந்திலுள்ள தம்மசத் என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் ஜனநாயகப் போராட்டத்தை ராணுவம் கடுமையாக ஒடுக்கியது . இத

விவசாய மசோதாக்களை எதிர்த்து நாங்கள் மக்களோடுதான் நிற்போம்! ஹர்சிம்ரத்கௌர் பாதல்

படம்
        ஹர்சிம்ரத்கௌர் பாதல்     ஹர்சிம்ரத்கௌர் பாதல் முன்னாள் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் எதற்காக மத்திய அமைச்சரவையிலிருந்து பதவியை ராஜினாமா செய்தீர்கள்? எனது கட்சியும் நானும் மத்திய அரசு அமல்படுத்திய மூன்று விவசாயத்துறை மசோதாக்களை தீவிரமாக எதிர்க்கிறோம். இவை விவசாயிகளுக்கு எதிர்ப்பானவை. அரசிடம் நான் என் தரப்பு வாதங்களை முன்வைத்தும் அவை பயன் தரவில்லை. அவை மக்களவையில் வெற்றி பெற்றுவிட்டன. வேறு வழியில்லாத நிலையில் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். விவசாயிகளுக்கான முன்னுரிமையை  எங்களது கட்சி முதலில் இருந்தே அளித்து வருகிறது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது நாங்கள் எங்களது கருத்தை ஜனநாயகப் பூர்வமாக முன்வைத்தோம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிடமும் எங்கள் மறுப்பை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லாமல் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தோம். இ்ப்போது விவசாயிகளுடன் இணைந்து மசோதாவுக்கு எதிராக போராடி வருகிறோம். மசோதா அங்கீகரிக்கப்படும்போது கேபினட்டில் இருந்ததாக கூறுகிறார்களே? நான் அதை மறுக்கவில்லை. அப்போதும் எங்கள் கட்சியின் ஆட்சேபங்க

அமெரிக்காவின் புதிய ஆயுதம்! - மக்களை விரட்ட புதிய ஆயுதம் உருவாக்கப்பட்டுவிட்டது

படம்
        sample image       அமெரிக்காவின் புதிய ஆயுதம் !   அமெரிக்க கடற்படையினர் தற்போது புதிய ஆயுதம் ஒன்றைச் சோதித்துவருகின்றனர் . கொலராடோ நகரைச் சேர்ந்த ஹர்கைண்ட் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் , மின் அதிர்ச்சி துப்பாக்கிகளை உருவாக்கி வருகிறது . இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்கா அரசின் பாதுகாப்புத்துறை நிதியுதவி அளிக்கிறது . இக்கருவியின் பெயர் ஸ்பெக்டர் (Small arms pulsed electronization tetanisation at extended range). இதனை நூறு மீட்டருக்கும் அதிகமாக தூரத்திலிருந்தும் மனிதர்கள் மீது இயக்கி தாக்க முடியும் என்று கூறுகிறது தயாரிப்பு நிறுவனம் . இத்தாக்குதல்களுக்கு உள்ளாகுபவர் , மின் அதிர்ச்சியால் தாக்கப்பட்டு மயங்கி விழுவர் . தற்போது வரை அமெரிக்காவில் பயன்படுத்தி வரும் டாஸர் என்ற கருவி வயர் மூலம் மனிதர்களுக்கு மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது . இது எட்டு மீட்டர் தூரத்திற்குள்தான் செயல்படும் . இதனால் ஏற்படும் அதிர்ச்சி , பாதிப்பு பற்றி சாதக , பாதக கருத்துகள் நிறைய இருக்கின்றன . ஆனால் அடிப்படையில் இதில் போலீசார் மூலம் தாக்கப்படுபவர் மின்னதிர்ச்சி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துவிடுவார்