இடுகைகள்

மக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்கல் மோதும் கிராம மக்களின் நிலை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  18.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது. சூரியனைப் பார்க்கவே முடியவில்லை. டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை. அதற்கும் போட்டி போட்டு ர.ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள். சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும்?  ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர். அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி. அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை. இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள், மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.  இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன். மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது. படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன. அவற்றையும் இனி படிக்க வேண்டும்.  துப்பறியும் சாம்பு - 2 200 பக்கங்களைத் தாண்டிவிட்டேன். தேவனுடைய

பச்சை விரியனின் தாக்குதலுக்கு பலியாகும் மக்கள்!

படம்
   பச்சை விரியனின் விஷத் தாக்குதல்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாம்புகளால் மனிதர்கள் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு, 64 பாம்புகள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 15 பாம்பினங்கள் விஷத்தன்மை கொண்டவை. இதில் க்ரீன் பிட் வைப்பர் எனும் பாம்பினத்திலுள்ள பல்வேறு வகை பாம்புகளால் தான் மனிதர்கள் அதிகம் கடிபட்டுள்ளனர். இந்த பாம்பின் விஷத்தை ஹீமோடாக்ஸிக் ( Hemotoxic venom)என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கண்ணாடி விரியன், புல் விரியன் ஆகிய பாம்பினங்களை விட க்ரீன் பிட் வைப்பரின் விஷம் கடுமையானதல்ல. காணப்படும் நிலப்பரப்பைப் பொறுத்து பாம்பின் விஷம் மாறுபடுகிறது. மேற்குவங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் பாம்புகள் ஒரே இனத்தில் பல்வேறு துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவை. பாம்புகள் பல்வேறு வகையான விஷத்தன்மைகளைக் கொண்டுள்ளன. ஹீமோ டாக்ஸின் (Hemotoxin) என்பது, சிவப்பு ரத்தசெல்களை அழிக்கிறது. உடலின் இயல்பான ரத்தம் உறைதலைத் தடுக்கிறது. நியூரோடாக்ஸின் (Neurotoxin), மனிதர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மேலும், சைடோடாக்ஸின் (Cytotoxin), உடலின் செல்களைத் த

சூழல் பற்றிய விழிப்புணர்வால் மக்கள் பயன் பெறுவார்கள்! பிரபு பிங்காலி, பொருளாதார பேராசிரியர்

படம்
  சூழலில் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை! பிரபு பிங்காலி, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை மற்றும் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். புது டில்லியில் இயங்கும் டாடா கார்னெல் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார்.  உணவு அமைப்பு முறைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்தியது எது? வேளாண்மையில்  உணவு உற்பத்தி, விளைபொருளை விவசாயிகளிடமிருந்து பெறுவது, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். இதில், நாம்  போதிய கவனம் செலுத்துவதில்லை. விவசாயி, விளைபொருள், விற்கும் சந்தை, உணவுப்பொருட்களுக்கான தேவை, நகரங்களின் உணவு நுகர்வு, உணவின் தரம், ஊட்டச்சத்துகள் என உணவு அமைப்பு முறை, ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது.  காலநிலை மாற்றங்களால் இந்தியா எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கிறது? வங்கம் - பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தான் நெல், கோதுமை ஆகிய பயிர்கள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசம், பீகார் என சென்றால், அங்குள்ள கிராமங்களின் வறுமையையும் அறியலாம். வெப்பமயமாதல்

அரசு உதவியின் மக்களே அமைக்கும் காற்றாலை!

படம்
  மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை! இங்கிலாந்தின் பிரிஸ்டல் அருகில் உள்ள மக்கள் குழுவினர், தாங்களே நிதி திரட்டி காற்றாலை அமைக்க முயன்றுவருகின்றனர். லாரன்ஸ் வெஸ்டன் என்ற பகுதியிலுள்ள மக்கள்தான் தாங்களே நிதி திரட்டி 150 மீட்டரில் காற்றாலையை அமைக்க முடிவெடுத்துள்ளனர். காற்றாலைக்கு  அரசின் எந்த உதவியும் பெறவில்லை.  4.2 மெகாவாட் திறனில் காற்றாலையை அமைக்கவுள்ளனர். இதில் 3 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். மிஞ்சும் மின்சாரத்தை பிறருக்கு விற்க முடிவெடுத்துள்ளனர்.  “மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை திட்டம் இது. இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது மக்களின் கரிம எரிபொருட்களால் ஏற்படும் வறுமை அளவு குறையும். ” என்றார்  லாரன்ஸ் வெஸ்டன் பகுதியில் வாழ்பவரான மார்க் பெப்பர்.  இப்பகுதி மக்கள் இப்படி தூய ஆற்றல் தரும் காற்றாலை திட்டத்தை உருவாக்க அரசை அணுகியுள்ளனர். ஆனால் பல்வேறு அனுமதி பெறுவது என திட்டம் நடைமுறைக்கு வருவது காலதாமதமாகிவந்திருக்கிறது. எனவே, மக்களே நிதி திரட்டி செய்துவிடலாம் என களமிறங்கிவிட்டனர். வணிகரீதியாக அமைக்கப்படும் காற்றாலைகளை விட மக்கள் குழுவாக இணைந்து நிறுவும் காற்றாலை  அதிக பயன்

தொன்மைக்கால மக்களை அழித்த எரிமலைக் குழம்பு!

படம்
தொல்குடியிருப்புகளை மூழ்கடித்த எரிமலைக் குழம்பு! மெக்ஸிகோவின் உள்ள மெக்ஸிகோ சிட்டியில் அமைந்துள்ளது, போபோகாடெபெட்ல் (Popocatepetl) எரிமலை. உலகிலேயே ஆபத்தான எரிமலை என்று புவியியல் வல்லுநர்களால் கூறப்படும் எரிமலை இது. கடந்த 23 ஆயிரம் ஆண்டுகளாக லாவா குழம்பை வெளித்தள்ளி வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளை அறியும்போது, எளிதாக எதிர்கால வெடிப்புகளைக் கணிக்க முடியும் என புவியியல் வல்லுநர்கள் நம்புகிறார்கள். இதற்காக, லாவா குழம்பு, இதனால் உருவான பாறைகளையும் ஆய்வு செய்து கனிமங்களை  அடையாளம் கண்டறிந்து வருகிறார்கள்.  ”நாங்கள் இப்போது செய்யும் ஆராய்ச்சி மூலமாக எரிமலை வெடிப்பு நடந்தபோது உள்ள சூழ்நிலைகளை அறிய முடியும். ஒருவகையில் எரிமலையின் கடந்தகால வரலாற்றை மறு உருவாக்கம் செய்ய தகவல்களை சேகரித்து வருகிறோம்” என்றார் புவியியல் ஆய்வாளர் இஸ்ரேல் ராமிரெஸ் உரைப்.  ஹவாயில் உள்ள எரிமலைகளில் வெடிப்பு வேகமும், அடர்த்தியும் குறைவு. நிலப்பரப்பில் தினசரிக்கு 1 - 33 மீட்டர் நீளத்திற்கு பரவுகிறது. ஆனால்  மெக்சிகோவில் உள்ள போபோ எரிமலை வெடித்து வெளியேறும் லாவாவின் அடர்த்தி அதிகம். லாவா குழம்பில் ஏர

மக்கள் இனக்குழுவிற்கு அதிகாரம் தேவை - மெலிசா லின் பெரல்லா, என்ஆர்டிசி

படம்
  மெலிசா லின் பெரல்லா வழக்குரைஞர், சூழல் செயல்பாட்டாளர் சூழல் நீதி என்ற விவகாரம் காலப்போக்கில் எப்படி மாறியுள்ளதாக நினைக்கிறீர்கள்? முதலில் சூழல் பணிகளை அதன் முடிவு எப்படியிருக்கும் என நினைத்து அதை சோதிப்பேன். இப்போது அதை செய்யும் முறை எப்படி இருக்கவேண்டுமென யோசித்து செய்து வருகிறேன். உள்ளூர் இனக்குழு மக்கள், அவர்களின் ஒருங்கிணைப்பாளர், தலைவர்களுக்கு உதவும்படி செயல்பாடுகளை நான் மாற்றி வருகிறேன்.  சூழல் நீதி என்பதை வருமானம் குறைந்த வறுமை நிலையிலுள்ள மக்கள் குறைந்த மாசுபாடு கொண்ட செயல்களை செய்யுமாறு சூழலை அமைத்துக்கொடுப்பதே எங்கள் பணி. இதன் மூலம் மக்கள் இனக்குழுவின் அதிகாரம் கூடும்.  என்ஆர்டிசியில் தங்களுடைய பணியை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? மாசுபாட்டைக் குறைத்துக்கொள்வதோடு மட்டுமே என்ஆர்டிசி அமைப்பு நிறுத்திக்கொள்வதில்லை. அவர்கள், இனக்குழு சார்ந்த மக்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி பற்றியும் யோசிக்கிறார்கள். பசுமை பரப்பை உருவாக்க மக்களுடன் சேர்ந்து உழைத்து வருகிறோம்.  சிறுவயதில் ஆசியர் என்பதற்காக கேலி, கிண்டல் செய்யப்பட்டது காரணமாகவே வழக்குரைஞர் ஆனீர்களா? நான் என்னுடைய இனம், மதம், நிறம்,

பழங்குடி மக்களின் விதைவங்கி!

படம்
  பழங்குடி மக்களின் விதைவங்கி! ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள மலைப்பகுதி மாவட்டங்கள் பாகுர், கோட்டா. இங்கு வாழும் பழங்குடி மக்கள் இனமான பகாரியா, விதை வங்கிகளை உருவாக்கியுள்ளனர். இந்த விதை வங்கியில், தாங்கள் பயிரிடும் தொன்மையான பயிர் ரகங்களைப் பாதுகாத்து வருகின்றனர். தொடக்கத்தில் நிலங்களில் பயிரிடுவதற்கான பயிர்களை உள்ளூர் வட்டிக்காரர்களிடம் பெற்று வந்தனர்.  பயிர்களை நடவு செய்து கடுமையாக உழைத்து பன்மடங்காக பெருக்கினாலும் கூட சரியான விலைக்கு விற்கமுடியவில்லை. மேலும் அவர்களின் உணவுக்காக கூட விளைந்த பயிர்களை பயன்படுத்தமுடியவில்லை. வட்டிக்காரர்களின்  பயிர்க்கடனை அடைக்க விளைந்த தானியங்களை மொத்தமாகவே விற்க வேண்டியிருந்தது. பல்லாண்டு காலமாக பாகுர், கோட்டா மாவட்டங்களில் வாழ்ந்த பழங்குடிகளின் வாழ்க்கை இப்படித்தான் நடந்து வந்தது.  பழங்குடி மக்கள், 2019ஆம் ஆண்டு நான்கு விதை வங்கிகளை உருவாக்கினர். இதற்கு டிராய்ட் கிராஃப்ட், பத்லாவோ பௌண்டேஷன், சதி ஆகிய மூன்று நிறுவனங்கள் உதவியுள்ளனர். இதற்குப் பிறகு, பயிர்களை வட்டிக்காரர்களிடம் கடனுக்கு வாங்கும் பிரச்னை மெல்ல குறைந்துவிட்டது.   பழங்குடி மக்கள் நாட்டு

கிராம மக்களுக்கு சுகாதாரமான நீர் தேவை - நீதா படேல்

படம்
  சுகாதாரமான நீருக்காக போராடும் பெண் செயல்பாட்டாளர்! இந்தியாவில் நீரைப் பாதுகாக்கும் பல்வேறு தொன்மையான முறைகள்  உண்டு. தற்போது குடிநீர் பற்றாக்குறை தீவிரமாக எழத் தொடங்க, தொன்மையான நீர் சேகரிப்பு முறைகள் நடைமுறைக்கு வரத்தொடங்கியுள்ளன. இவற்றை பிரசாரம் செய்பவர்களில் ஒருவர்தான், குஜராத்தைச் சேர்ந்த நீதா படேல்.  குஜராத்தில் பழங்குடிகள் வாழும் மாவட்டங்களாக டங் (Dang), நர்மதா (Narmada), பாருச்  (Bharuch)ஆகியவை கடுமையான நீர்பஞ்ச பாதிப்பு கொண்டவை. இந்த மாவட்டங்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவை. இங்கு, நீர்  மேம்பாட்டு பணிகளுக்காக  நீதா படேல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். இதன் விளைவாக, பழங்குடி மாவட்டங்களிலுள்ள 51 கிராமங்களில் வாழும் 30 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது.  பழங்குடி கிராமங்களில், மக்களின் ஆதரவுடன் குடிநீருக்கான கைபம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  தினசரி 90 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, பல்வேறு கிராமங்களுக்கு நீதா சென்றுவருகிறார். அங்குள்ள பெண்களுக்கு நீர் சேமிப்பு பற்றி பிரசாரம் செய்கிறார். இதுபற்றி பஞ்சாயத்துகளில்,  பேசும்படி கோரி வருகிறார். இதன்மூலம்

மக்களை புன்னகைக்க செய்ய நினைத்தேன்! பாலகிருஷ்ண தோஷி, கட்டுமானக் கலைஞர்

படம்
பி.வி. பாலகிருஷ்ணா தோஷி கட்டுமான கலைஞர்  பிரைட்ஸ்கர் பிரைஸ் என்ற கட்டுமான கலையின் நோபல் என்று அழைக்கப்படும் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள். இதோடு ராயல் கோல்டு மெடல் பரிசும் கிடைத்துள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ரிபா அமைப்புடன் எனது தொடர்பு பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. கட்டுமானக் கல்வியை படித்தபோதிலிருந்து எனக்கு அந்த அமைப்புடன் நல்ல உறவு உண்டு.  நான் ரிபா அமைப்பின் நூலகத்தை பயன்படுத்தி வந்தேன். அங்கு படித்த நூல்களைப் பற்றிய நினைவுகள் எனக்கு இன்றும் இருக்கிறது.  அவை சிறப்பானவை. லே கார்பசியர் ரிபா தங்கமெடல் விருதை வாங்கும்போது நான் அவருடன் தான் இருந்தேன்.  லே கார்பசியரை எப்படி உங்களது குரு என்று சொல்லுகிறீர்கள்? ஒரு இடத்தில் வெளிச்சம் எப்படி இருக்கவேண்டும், அமைப்பு, மேசைகளின் இடம் பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறார். இதைப்பற்றி எழுதிய தாள் எனது மேசை டிராயரில் இப்போதும் உள்ளது. பின்னாளில் தான் அவர் வரைந்து வைத்த இடம் உண்மையில் கிடையாது என்றும், தாளில் மட்டும் தான் உருவானது என தெரிந்தது. ஆனால் அவரது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சரியப்படுத்தியது என்று தனியாக கூறவேண்டுமா என்ன? விலை குறை

காடுகளை பாதுகாக்க அர்ப்பணிப்பாக பணியாற்றும் பழங்குடி காவலர்கள்!

படம்
  தேசியப்பூங்காவை பாதுகாக்க மெனக்கெடும் பழங்குடி மக்கள்! ஒடிஷா மாநிலத்தின், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சிமிலிபால் தேசிய பூங்கா (Similipal National Park ) அமைந்துள்ளது. தேசியப்பூங்கா 2,750 சதுர கி.மீ. பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இது, புலிகள் காப்பகம் என்பதால், பாதுகாப்பிற்கென 700 பாதுகாப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள், இங்குள்ள மரங்களோடு விலங்கினங்களையும் நன்கு அறிந்துவைத்துள்ளனர்.  பாதுகாப்பு உதவியாளர்கள், மரங்களில் ஏற்பட்டுள்ள நோய், இலையில் ஏற்படும் மாறுபாடு,  பட்டுப்போன மரம் என எதையும் கவனிக்காமல் விடுவதில்லை. இதன் விளைவாக, சிமிலிபால் பூங்காவில் முன்னர் நடந்த சட்டவிரோத மரக்கடத்தல், காட்டுத்தீ  சம்பவங்கள் குறைந்துவருகின்றன. உதவியாளர்கள், காட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை உடனே ஜிபிஎஸ் முறையில் தெரிவிக்க தனி ஆப் உள்ளது. அதன் பெயர், எம்எஸ்டி ஆர்ஐபிஇஎஸ் (Monitoring System for Tigers: Intensive Protection and Ecological Status MSTrIPES).  இந்த ஆப் வழியாக புலிகள் காப்பகம் பற்றிய பல்வேறு தகவல்களை எளிதாக பதிவு செய்யமுடியும். படைகள்  எங்கு இருக்கின்றனவோ அதுபற்றிய தகவலையும் ஆப் ப

மக்களுக்கு துணையாக நிற்கும் இரு நண்பர்களின் வெட்டுக்குத்து கதை!

படம்
  மகாநந்தி ஸ்ரீஹரி, சுமந்த், அனுஷ்கா இயக்கம் வி சமுத்ரா ஒருவழியாக படம் முடிந்தபோது.... கதையின் கரு நண்பர்களுக்குள் வரும் முட்டல் மோதல், நம்பிக்கை தான் கதை.  ஆந்திராவில் உள்ள கிராமம். அங்கு தனது நிலபுலன்களை விற்று ஊர் மக்கள் வேலை செய்வதற்கு தொழிற்சாலை கட்ட நினைக்கிறார் சுவாமி நாயுடுவின் அப்பா. ஆனால், அதை ஊரில் உள்ள பணக்கார ர் ஏற்கவில்லை. அப்படி தொழிற்சாலைக்கு மக்கள் வேலைக்கு போனால் நமக்கு மதிப்பிருக்காது. நீ தொழிற்சாலை கட்டக்கூடாது என்று மிரட்டுகிறார். பிறகு ஒரு நல்லநாள் பார்த்து சுவாமி நாயுடுவின் பெற்றோரை வீடு புகுந்து தாக்கிக் கொல்கிறார்.  இதனால் சுவாமிநாயுடுவும் அவரது தங்கையும் அனாதை ஆகிறார்கள். படம் இப்படித்தான் தொடங்குகிறது.  பிறகு சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் எதிரிகளை பழிவாங்கிய சுவாமி நாயுடு ஊரில் பெரிய ஆளாக மாறியிருக்கிறார். அவருக்கு வலது இடது என இரு கரமுமாக இருப்பவன்தான் சங்கர். பார்த்தால் அண்ணன் தம்பி போல  தோன்றும் ஆனால் இருவரும் நண்பர்கள். சுவாமி நாயுடுவைப் பொறுத்தவரை அப்பாவின் கனவை நிறைவேற்றுவதுதான் பேஷன், ஆம்பிஷன், கனா எல்லாமே. இப்படி தொழிற்சாலை கட்டி முடிக்கும்போது எத

வாடிக்கையாளர்களை உருவாக்குவதே நிறுவனத்தின் சாமர்த்தியம்!

படம்
  வாடிக்கையாளர் தான் தெய்வம்!   அண்மையில் ஊடகவியலாளர் கோகுலவாச நவநீதன் ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர்களே தெய்வம். தெய்வத்திற்கு கடன் கொடுக்கும் தகுதி எனக்கில்லை எழுதியிருந்தது. இந்த வாசகத்தை எளிமையாக கடன் கிடையாது என்று எழுதலாம். ஆனால்  என மளிகை கடைக்காரர் கிரியேட்டிவாக யோசித்து வாடிக்கையாளரையும் உயர்த்திப்பிடித்து, தனது கடன் கிடையாது கொள்கையையும் சொல்லிவிட்டார்.   ஹூவெய்யின் வணிக சூத்திரமே இதுதான். ரென்  நடத்தும் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை தொடர்பானது. தினசரி ஏராளமான கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் நடக்கும் துறை. இதில் எப்படி அவர் வாடிக்கையாளர்களை பொருட்படுத்தாமல் இருக்க முடியும். அப்படி செய்தால், அவரது நிறுவனம் விரைவில் வீழ்ந்துவிடும் அல்லவா? இந்த வணிக கொள்கைக்கு பெயர்தான் கஸ்டமர் சென்ட்ரிசிட்டி.   வாடிக்கையாளரின் சூழல், குணம், தேவை புரிந்து பொருட்களை தயாரித்து வழங்குவது. இதைத்தான் ஹூவெய் ரென் தனது ஊழியர்களுக்கு வகுப்பெடுத்து சொல்லித் தருகிறார். அதிக மாறுதல்களை சந்திக்காத அணுசக்தி துறையில் சில முதலீடுகளை ரென் செய்துள்ளார

போரில் கிடைத்த வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்!

படம்
  ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி இரண்டு மாதங்களாகிவிட்டது. இதுதொடர்பாக நிறைய வார்த்தைகளை நாம் கேட்டுவருகிறோம். அதைப்பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.  கொய்ட் quit ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பயன்படுத்த வேண்டாம் என்ற நிறைய நாடுகள் முடிவெடுக்க நினைத்தன. அப்படி செய்தால் போர் நின்றுவிடுமே என ஐரோப்பிய யூனியன் கூட ரஷ்யாவின் நிலக்கரியை மட்டும் பயன்படுத்த மாட்டோம் என கறாராக கூறிவிட்டது.  நாடோ nato உக்ரைன் ஐரோப்பாவின் நாடோ படையில் சேரக்கூடாது என்பதுதான் ரஷ்யாவின் பயம். அதற்காகவே உக்ரைனை தாக்கி அதனை சல்லி சல்லியாக நொறுக்கி வருகிறது. ஆனால் ரஷ்யாவின் வேகத்தில் இதுவரை நாடோவில் சேராமலிருந்த ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளும் கூட சேர்ந்தால்தான் என்ன என்ற முடிவுக்கு வந்துவிட்டன.  ஷி ஜின்பிங் xi jinping சீனா, இல்லாமல் இனி உலகில் எதுதான் நடந்துவிடும். இதன் நிரந்தர அதிபரான ஷி, எப்போதும் போல ரஷ்யாவை ஆதரிக்கிறார். ஒருவகையில் சீனாவின் இந்த ஆதரவுநிலையால் தைவான், ஹாங்காங் ஆகிய நகரங்கள் அடுத்தது நாமதானோ என பீதியில் உள்ளன.  லூகாசென்கோ lukashenko இவர் பெலாரஸ் நாட்டின் சர்வாதிகாரி அலெக்ஸாண்டர் லூகாசென

நிலநடுக்க பொது எச்சரிக்கை அமைப்பின் முன்னேற்றம்!

படம்
  நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்! ஒரு நாட்டின் பரப்பில் நடைபெறும் தட்பவெப்பநிலை மாற்றங்களை அரசு அமைப்புகள் துல்லியமாக கண்காணிக்கின்றன. அமெரிக்காவின்  நாசா அமைப்பு, பல்வேறு செயற்கைக்கோள்கள் மூலம்  மாகாணங்களில் ஏற்படும் நிலப்பரப்பு ரீதியான மாற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்கிறது. இதனோடு தேசிய கடல் மற்றும் சூழல் அமைப்பும், அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பும்(USGS) இணைந்து பணியாற்றுகின்றன. தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றன.  கூடுதலாக, அமெரிக்க அரசு அமைப்புகள்,  தனியார் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. இதனால், அடிப்படை அறிவியல் கேள்விகளுக்கும், கடினமான சவால்களை பற்றிய ஆய்வுகளை செய்யமுடிகிறது.  தற்போது நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் நுட்பங்கள் (Earthquake Early Warning EEW)வேகமாக முன்னேறி வருகின்றன.  இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்க அரசும், தனியாரும் இணைந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுதான். இதன்மூலம் நிலநடுக்கத்தால் பலியாகும் ஏராளமான மக்களைக் காப்பாற்ற முடியும்.  நிலநடுக்கம் ஏற்படும் நிலநடுக்கவெளி மையத்தில் (Epicenter) நிலநடுக்க சென்சார்களை பொருத்துகின்றன

தற்போது புழக்கத்தில் உள்ள கொரானோ பெருந்தொற்றுக்கான மருந்துகள்!

படம்
  Baricitinib மேம்படுத்தியவர் எலி லில்லி - இன்சைட் கார்ப்பரேஷன் வகை  ஜானஸ் கைனாஸ் திறன் மக்கள் இறப்பதை 50 சதவீதம் குறைத்துள்ளது.  நிலை இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்பு  இதனை ஏற்றுள்ளது. சந்தையில் முழங்கால் வலிக்காக பயன்படும் மருந்து இது.  Sotrovimab மேம்படுத்தியவர் கிளாக்ஸ்கோஸ்மித் கிளைன் நிறுவனம் பிரிவு மோனோசினோல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது.  நிலை இந்தியாவில் காத்திருப்புதான் பதில். இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம், மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  Paxlovid மேம்படுத்தியவர் பைசர் பிரிவு ஆன்டி வைரல் திறன் இறப்பு எண்ணிக்கையை 88 சதவீதம் குறைக்கிறது. தடுப்பூசி போடாத மக்களை இறப்பிலிருந்து காக்கிறது.  நிலை இந்தியா ஒப்புதல் அளிக்கவில்லை. எப்டிஏ, அமெரிக்க அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.  Regncov மேம்படுத்தியவர் ரீஜெனரோன் பிரிவு  மோனோகுளோனல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பை 81 சதவீதம் காக்கிறது. டெல்டா, ஓமிக்ரானுக

நோய்த்தொற்று கிருமிகளை எளிதாக அழிக்கும் தொழில்நுட்பம்!

படம்
வைரஸைக் கொல்லும் புதிய தொழில்நுட்பம்!  அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த தனியார் தியேட்டர் நிறுவனம், விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் வரும் இந்தி சினிமா நடிகர் சல்மான்கான் ”தியேட்டர்களுக்கு செல்வது பாதுகாப்பானதா?” என்று கேட்பார். இதற்கு தியேட்டர் நிறுவனம் ”வைரஸ் நியூட்ரலைசர்  ஒன்றை நிறுவியுள்ளோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காற்றில் உள்ள வைரஸ்களைக் கூட இக்கருவி கொல்லும்” என நம்பிக்கையுடன் கூற விளம்பரம் நிறைவடைகிறது.  தியேட்டர்களில் நிறுவப்பட்டுள்ள புதிய வைரஸ் நியூட்ரலைசர் கருவியை கேரளத்தைச் சேர்ந்த ஆல்அபவுட் இன்னோவேஷன் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. கருவியின் செயல்பாட்டைப் பார்த்த 22 நாடுகளிலும் இதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.  இந்திய ஆயில் கார்ப்பரேஷன், இந்தியன் ஏர்ஃபோர்ஸ், ஐக்கிய அரபு அமீரக மாளிகை, டிபி வேர்ல்டு, யுஎஃப்ஓ மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் ஆல் அபவுட் இன்னோவேஷன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன.   தற்போது கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, 10 ஆயிரம் வைரஸ் பாதுகாப்பு கருவிகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இக்கருவிக்கு, வோல்ஃப் ஏர் மாஸ்க் என்று பெயர். இதனை மாநிலத்திலுள்

அணைகளை எதிர்த்துப் போராடும் இயற்கை போராளி மேதா பட்கர்!

படம்
    இயற்கை செயல்பாட்டாளர் மேதா பட்கர் மேதா பட்கரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இயற்கை சார்ந்த இதழ்களில் இவரைப் பற்றி அதிகம் வந்திருக்கும். நர்மதா நதியில் கட்டப்படும் அணைகளை தடுத்து போராட்டங்களை நடத்திய வகையில் உலகம் முழுக்க பிரபலமானார். நர்மதா பச்சா அந்தோலன் எனும் அமைப்பை கட்டமைத்து அணையால் ஏற்படும் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என போராட்டம் நடத்தினார்.  இயற்கைப் போராளி மேதா பட்கர் சர்தார் சரோவர் எனும் அணையைக் கட்டக்கூடாது என 22 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய உறுதியான மனம் கொண்டவர் மேதா பட்கர். இந்த போராட்டங்கள் கூட 32 ஆண்டுகள் கள ஆய்வுகள், விவாதங்களுக்கு பிறகே நடைபெற்ற ஒன்று. டாடாவின் சமூக அறிவியல் கழகத்தில் சமூகப் பணி படிப்பில் எம்.ஏ படித்தவர் மேதா. மும்பையில் வாழும் குடிசைவாசிகளுக்கான வீடு கோருதல், ஆந்திராவில் கோவ்வாடா அணு உலை திட்டத்திற்கு எதிர்ப்பு, ஆக்கிரப்பு வீடுகளுக்கு எதிர்ப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கங்களில் அரசியல்வாதிகள் இருப்பதற்கு எதிர்ப்பு என மேதா பட்கர் ஏராளமான பிரச்னைகளுக்கு போராடியுள்ளார்.    சாதி, மதவாதம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள

தானியங்களின் காந்தி - வந்தனா சிவா!

படம்
      இயற்கை செயல்பாட்டாளர் டாக்டர் வந்தனா சிவா    உலகிற்கே ஆபத்து மான்சான்டோ வடிவில் வருகிறது என்று சொன்ன துணிச்சலான இயற்கை செயல்பாட்டாளர் வந்தனா சிவா. மான்சான்டோவின் தற்போதைய பெயர் பேயர். பெயர் மாறினாலும் இவர்களின் விவசாய பேராசையும், வணிகமய புத்தியும் மாறவில்லை. இதற்கு எதிராக வந்தனா சிவா போராடி வருகிறார். இன்றைய விவசாயத்தில் பெரு நிறுவனங்கள் உள்ளே நுழைந்து அதனை வன்முறையாக்கி உள்ளனர் என பேசி வருகிறார்.  வந்தனா சிவா உலக மய கொள்கைகளுக்கு எதிராகவும் உணவு தற்சார்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் வந்தனா சிவா. மரபணு பொறியியல் பற்றிய படிப்பை படித்த வந்தனா சிவா, 1960ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கிய பசுமை புரட்சி அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்றுவரை தீவிரமாக விமர்சித்தும் அதற்கான தீர்வுகளை முன்வைத்தும் வருகிறார். மரபணுமாற்ற பயிர்களை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார்.  1991ஆம் ஆண்டு நவதான்யா எனும் நிறுவனத்தை தொடங்கினார். இதன் பொருள் ஒன்பது தானியங்கள் என்பதாகும். பெரு நிறுவனங்கள் குறிப்பிட்ட பணப்பயிர்களை மட்டுமே விவசாயிகளை விதைக்க கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலை வேளாண் சூழலை கெடுக்கும்

முஸ்லீம்களின் மீதான வெறுப்பை இயல்பானதாக்குகிறது பாஜக! - மனித உரிமை வழக்குரைஞர் அமான் வதூத்

படம்
  மனித உரிமைகள் வழக்குரைஞர் அமான் வதூத் முஸ்லீம்களை இப்படி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவது அரசின் மிகப்பெரிய திட்டம் என்று கூறுகிறீர்களா? ஆமாம். இது பெரிய திட்டத்தின் சிறிய பகுதிதான். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, பிற மாவட்டங்களிலிருந்து மக்கள் எதற்கு இங்கு வந்து தங்கவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இந்திய அரசியலமைப்புச்சட்டம் 19(டி, இ எஃப்) ஆகியவற்றின் படி இந்தியாவில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சென்று குடியேறி வாழலாம். அதற்கான உரிமை அம்மக்களுக்கு உண்டு.  மக்களை வெளியேற்றும்போது நான்கு மசூதிகளை இடித்தார்கள் ஆனால் அங்குள்ள கோவிலை எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறதே உண்மையா? மக்கள் கோவிலின் அருகே குடியிருந்தார்கள் என அரசு வாதிடுகிறது. ஆனால் கோவில் மக்களின் வாழிடத்திலிருந்து தூரமாகவே இருந்தது.  மக்களின் குடியிருப்புகளிலிருந்து அவர்களை வெளியேற்றிய அரசு, அவர்களுக்கான மறுவாழ்வு குடியேற்றங்களை அமைத்து தருவதாக கூறியது. ஆனால் அத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லையே? 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந

செவ்வாயில் புத்தம் புதிய நகரம்!

படம்
  செவ்வாயில் புத்தம் புதிய நகரம்! செவ்வாயில் மக்களை குடியமர்த்துவதற்கான நகரத்தை அமைக்க சீனா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன.  அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹோம் விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2117ஆம் ஆண்டில் அங்கு நகரம் அமைப்பதற்கான திட்டத்தை அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்குப்பிறகு சீனாவின் தியான்வென் 1 என்ற விண்கலம் செவ்வாய்க்கு அங்குள்ள சூழல்களை ஆராய அனுப்பி வைக்கப்பட்டது. மூன்றாவதாக, அமெரிக்க நாசாவின் பெர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாயிலுள்ள வேதியியல் பொருட்களைப் பற்றி ஆராய அனுப்பி வைக்கப்பட்டது.  உலக நாடுகளிடையே செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் சங்கம் என்ற அமைப்பு, செவ்வாயில் நகரத்தை அமைப்பதற்கான திட்டங்களை அனுப்பி வைக்க கோரியது. இதற்காக, உலக நாடுகளிலிருந்து 175 குழுக்கள் நகர வடிவமைப்பு திட்டங்களை அனுப்பி வைத்துள்ளன. இதில் பங்கேற்ற சோனெட் எனும் குழுவின் திட்டத்தைப் பார்ப்போம். .நுவா நகரம் எனும் இத்திட்டப்படி செவ்வாயில் நிலத்திற்கு கீழே வீடுகள