காடுகளை பாதுகாக்க அர்ப்பணிப்பாக பணியாற்றும் பழங்குடி காவலர்கள்!

 

















தேசியப்பூங்காவை பாதுகாக்க மெனக்கெடும் பழங்குடி மக்கள்!

ஒடிஷா மாநிலத்தின், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சிமிலிபால் தேசிய பூங்கா (Similipal National Park ) அமைந்துள்ளது. தேசியப்பூங்கா 2,750 சதுர கி.மீ. பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இது, புலிகள் காப்பகம் என்பதால், பாதுகாப்பிற்கென 700 பாதுகாப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள், இங்குள்ள மரங்களோடு விலங்கினங்களையும் நன்கு அறிந்துவைத்துள்ளனர். 

பாதுகாப்பு உதவியாளர்கள், மரங்களில் ஏற்பட்டுள்ள நோய், இலையில் ஏற்படும் மாறுபாடு,  பட்டுப்போன மரம் என எதையும் கவனிக்காமல் விடுவதில்லை. இதன் விளைவாக, சிமிலிபால் பூங்காவில் முன்னர் நடந்த சட்டவிரோத மரக்கடத்தல், காட்டுத்தீ  சம்பவங்கள் குறைந்துவருகின்றன. உதவியாளர்கள், காட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை உடனே ஜிபிஎஸ் முறையில் தெரிவிக்க தனி ஆப் உள்ளது. அதன் பெயர், எம்எஸ்டி ஆர்ஐபிஇஎஸ் (Monitoring System for Tigers: Intensive Protection and Ecological Status MSTrIPES). 

இந்த ஆப் வழியாக புலிகள் காப்பகம் பற்றிய பல்வேறு தகவல்களை எளிதாக பதிவு செய்யமுடியும். படைகள்  எங்கு இருக்கின்றனவோ அதுபற்றிய தகவலையும் ஆப் பதிவு செய்துகொள்கிறது. இதன்மூலம் குற்றச்செயல் நடைபெறும் இடத்தை உடனே அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். 

சிமிலிபால் தேசியப் பூங்காவில் பணியாற்றும் பாதுகாப்பு உதவியாளர், தினசரி 10 கி.மீ. தொலைவுக்கு ரோந்து செல்லவேண்டும். இவர்களுக்கு தினசரி ஊதியமாக தலா ரூ.315 வழங்கப்படுகிறது. 2002ஆம் ஆண்டு தன்னார்வ தொண்டு நிறுவனமான சங்ரம் (Sangram), வனத்துறையுடன் இணைந்து பாதுகாப்பு உதவியாளர்களை பணிக்கு அமர்த்தியது. ”நாங்கள் தேசியப்பூங்காவை வரைபடமாக்கி பிரித்து ஒருவருக்கு 2 சதுர கி.மீ. பரப்பு என ஒதுக்கியுள்ளோம். இதன்படி 700 ஊழியர்கள் இதனை  பராமரிக்கிறார்கள்” என்றார் பரிபடாவில் உள்ள பிராந்திய வனத்துறை பாதுகாப்பு தலைவரான எம் யோகஜெயானந்தா. 

தேசியப்பூங்காவிற்கு அருகிலுள்ள கிராமங்களிலுள்ள மக்களையே வனத்துறை, பாதுகாப்பு உதவியாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளது. இதனால் அங்கு நிலவிய வேலைவாய்ப்பின்மையும் சற்று குறைந்துள்ளது. அகண்ட் ஷிகார் (akhand shikar)எனும் காட்டு விலங்குகளை வேட்டையாடும் விழா, இங்குள்ள பழங்குடி மக்களிடம் இருந்தது. இப்போது விழாவின்போது வேட்டையாடுவதற்கு குறிப்பிட்ட அளவிலான டோக்கன்களை வனத்துறை பழங்குடிகளுக்கு வழங்குகிறது.  




Green knights of mayurbhanj

(satyasundar barik) 

hindu 24.4.2022

http://www.similipal.org/

https://www.wwfindia.org/about_wwf/critical_regions/national_parks_tiger_reserves/similipal_tiger_reserve/

https://www.thehindu.com/society/on-earth-day-we-salute-the-700-forest-assistants-who-safeguard-odishas-similipal-national-park/article65299005.ece

https://sangram.org.in/about-us/save-simlipal/

https://www.villagesquare.in/meet-similipals-young-forest-protection-assistants/


Images -Pixabay

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்