இடுகைகள்

மின்சாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணு உலை!

படம்
  இகோர் குர்சாடோவ் முதல் அணுஉலை  இன்று வளர்ந்த நாடுகள் அமைதி என்று பேசுவதற்கு காரணமே, முதுகுக்கு பின்னால் வைத்துள்ள அணு ஆயுதங்கள்தான். யாராவது அமைதிக்கு மறுத்தால் அடுத்த அடி மரண அடியாக, அந்நாட்டின் மீது அணு குண்டுகளை வீசுவார்கள். இதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்க நாடு நடத்திய தாக்குதலைக் கூறலாம். அந்த நாட்டின் பல தலைமுறைகள் கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இரண்டு குண்டுகளை வீசி அந்நாட்டை முழுமையாக அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அமெரிக்காவைத் தாண்டி ஜப்பான் இன்று உழைப்பால் பல படிகள் உயர்ந்து நிற்கிறது.  இரண்டாம் உலகப்போர் சமயமே அணு உலை சார்ந்த முன்னேற்றங்கள் தொடங்கிவிட்டன. வெடிகுண்டுகள் தயாரிக்க மட்டுமல்ல. அணுசக்தியை பயன்படுத்தி அணு இணைப்பு, பிளப்பு முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  முதல் அணு உலை சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் ஆண்டு உலகில் முதன்முறையாக மின்சாரம் தயாரிப்பதற்கென நிறுவப்பட்ட அணு உலை இதுவே. இந்த ஆண்டோடு சோவியத் யூனியனில் அணு உலை நிறுவப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. இதன் செயல்பாடு 1954 தொடங்கி 2002 ஆம் ஆண்ட

குறைந்த விலையில் சோலார் பேனல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன!

படம்
  குறைந்த விலையில் சுடச்சுட சூரியன்!  சோலார் தகடுகள் மூலம் சூரிய ஆற்றலை சேமிப்பது முன்னர் இருப்பதை விட விலை குறைவானது . அடுத்த இருபது ஆண்டுகளில்  சூரிய சக்தியே முக்கியமான ஆற்றல் ஆதாரமாக இருக்கும் என உலக ஆற்றல் முகமை (IEA) கூறியுள்ளது.  உலக ஆற்றல் முகமை, தற்போது அமைக்கப்படும் சூரிய ஆற்றல் தகடுகளால் இத்துறை அடுத்த இருபது ஆண்டுகளில் 80 சதவீதம் வளரும் என்று கூறியுள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கரிக்கு மாற்றாக முக்கியமான ஆற்றல் ஆதாரமாக 2025இல் சூரிய ஆற்றல் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறைந்தவிலை என்பதால் முதலீட்டாளர்கள் இத்துறையில் முதலீடு செய்ய அதிகவாய்ப்புகள் உள்ளன. இதன் விளைவாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கூடலாம்.  1883ஆம் ஆண்டு முதன்முதலாக சோலார் பேனல் கண்டறியப்பட்டது. அப்போது சூரிய ஆற்றலைத் தேக்கும் திறன் 1-2 சதவீதமாக இருந்தது. பல்லாண்டு கால ஆராய்ச்சிகளால் ஆற்றலைத் தேக்கும் திறன் மெல்ல முன்னேறி வருகிறது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம், சோலார் செல்களின் ஆற்றல் தேக்கும் திறன் 18.2 சதவீதமாக மேம்பட்டது. புதிய சாதனையாக 2019ஆம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் இ

இ ஸ்கூட்டர்கள் - சந்தையில் களைகட்டும் பிராண்டுகள்

படம்
  ஆங்கில தனியிசைப் பாடல்களை இதனை நிறையப் பார்த்திருப்பார்கள். இப்போது பார்க்கப்போகும் இ ஸ்கூட்டர்களை இப்போதுதான் தமிழ் நடிகர்கள் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.  உனாகி மாடல் ஒன் இதில் ஹோவர் போர்டு கிடையாது. ஆனால் அசத்தலான வடிவமைப்பு பிரேக் அமைப்பு முறை ஆகியவை அசத்துகிறது. இதனை சூழலைப் பாதிக்கும் வாகனங்களுக்கு பதிலாக வாங்கலாம்.  விலை 89,900 ப்யூர் ஏர் புரோ இதன் முன் சக்கரம் 500 வாட்ஸ் சக்கரம் கொண்டது. பத்து இன்ச் சக்கரங்கள் எளிதாக தடைகளை சமாளித்து கடக்க உதவுகிறது. நகரை ஜாலியாக சுற்றி வர ப்யூர் உதவும்.  விலை 59,900 சீக்வே நைன்பாட் மேக்ஸ் ஜி30 இ 2 நிறைய அப்டேட்டுகளுடன் வந்துள்ள ஸ்கூட்டர் இது. பார்க்கவும் அழகாக இருக்கிறது. எளிமையாக இருக்கிறது.  விலை  79,900 ஜியோமி  மி எசன்ஷியல் பட்ஜெட் விலையில் இ ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றால் நீங்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். இதில் பிரேக் சிஸ்டம், ஆற்றல், பேட்டரி என இரண்டுமே சிறப்பாக உள்ளது.  விலை 34, 700 ஜியோமி மி புரோ 2 600 வாட்ஸ் பவருடன் இயங்கும் ஸ்கூட்டர். பெரிய அம்சங்கள் கிடையாது. ஆனால் பட்ஜெட்டிற்குள் வாங்க வேண்டும் என்பவர்களுக்கான ஸ்கூட்டர் இது.

எல்இடி பல்பை கண்டுபிடித்த ஜப்பானிய இயற்பியலாளர் இசாமு அகாசகி!

படம்
      இசாமு அகாசகி     இசாமு அகாசகி 1929-2021 2014 ஆம் ஆண்டு அகாசகி மேலும் இரண்டு அறிவியலாளர்களோடு சேர்ந்து நோபல் பரிசு வென்றார் . அகாசகி , ஹிரோஷி அமானோ , சுஜி நகமுரா ஆகியோரோடு சேர்ந்து அகாசகி நோபல் விருது வென்றார் . இதைப்பற்றி அகாடமி , பிறர் தோற்றுப்போன அறிவியல் விஷயங்களில் இம்மூவரும் வெற்றி கண்டனர் . தொண்ணூறுகளில் இம்மூவரும் நீலநிற ஒளி உமிழும் டயோடு ஒன்றைக் கண்டுபிடித்தனர் . இதனை புரட்சிகர மாற்றம் என்று கூறினர் . முப்பது ஆண்டுகளாக மூவரும் நீல நிற ஒளியை ஒளிரும் செமி கண்டக்டர்களை உருவாக்கினர் . அகாசகி என்ற இயற்பியலாளர் 92 வயதில் மறைந்துள்ளார் . இவர்தான் மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்யும் எல்இடி முறையைக் கண்டுபிடித்தார் . எல்இடி பல்புகள் ஒரு லட்சம் மணிநேரம் ஆயுளைக் கொண்டவை . இதில் ப்ளூரசென்ட் பல்புகள் 10 ஆயிரம் மணி நேரங்களைக் கொண்டவை . குண்டுபல்புகள் ஆயிரம் மணிநேரம் மட்டுமே தாக்கு்ப்பிடிக்கும் . எல்இடி பல்புகள் பிற பல்புகளை விட நான்கு மடங்கும் . குண்டுபல்புகளை விட 20 மடங்கும் எரிபொருள் சிக்கனம் கொண்டவை . 2010 ஆம் ஆண்டு மேஜோ பல்கலைக்கழகம

வணிகரீதியான மின்விளக்குகள் கடந்து வந்த பாதை! - இதில் பங்களித்த முக்கியமான அறிவியலாளர்கள்

படம்
              வணிக ரீதியான மின் விளக்குகள் சர் ஹம்பிரி டேவி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியலாளர் டேவி , பிளாட்டினம் இழை மீது தனது பேட்டரியைப் பயன்படுத்தினார் . அவரது சோதனை பயன் கொடுத்தது . பின்னாளில் இந்த முறை நல்ல பயன் கொடுத்தது என்றால் அச்சமயம் பிளாட்டினம் பெரியளவு ஒளிரவில்லை . ஆனாலும் பின்னாளில் இந்த முறை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது . வாரன் டி லா ரூ 1840 ஆம் ஆண்டு வேதியியலாளரும் , வானியலாளருமான ரூ , பிளாட்டினம் காயில் பொருத்தப்பட்ட வேக்குவம் குழாயில் மின்சாரத்தை செலுத்தினார் . இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் விளக்குகளுக்கான அடிப்படை இதுதான் . ஆனால் இதற்கான செலவுதான் கூடுதல் . எனவே மக்களிடையே புகழ்பெறவில்லை . ஜீன் ராபர்ட் ஹூடின் 1852 ஆம் ஆண்டு ஹூடின் தனது எஸ்டேட்டில் மின் விளக்குகளை வெளிப்படையா ஒளிர வைத்தார் . ஆனால் இந்த மின்விளக்குக்கான முறையான தொழிற்சாலை , விலைகுறைந்த பல்புகள் என அவர் திட்டமிடவில்லை . எனவே வணிக ரீதியான பல்புளள் விற்பனைக்கு வரவில்லை . ஜோசப் ஸ்வான் பிரிட்டிஷ் இயற்பியலாளர் சூழலுக்கு உகந்த பல்புகளை கண்ட

உலகில் அதிகளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும்!

படம்
  மில்லியன் வோல்ட் மின்சாரம்! உலகிலேயே அதிகளவு மின்சாரத்தை எங்கு தயாரிக்கலாம்? நீரில், காற்றில், சூரிய ஒளி  என்கிறீர்களா?. இப்பதில்களை ரப்பர் கொண்டு அழியுங்கள். மின்னல் மூலம்தான் அதிகளவு மின்சாரத்தை நாம் பெற முடியும்.  ஜேம்ஸ் ஃபிராங்கிளினுக்கும் கூட இது தெரியும். ஆராய்ச்சியாளர்கள் இன்றுவரை மின்னலிலிருந்து பெறும் ஆற்றலை அளவிட முயற்சித்து வருகின்றனர். நூற்றாண்டுகளாக சென்சார்களை வைத்து முயன்றும் கூட மின்னல்களை சரியான முறையில் கவனிக்க முடியவில்லை.  ஊட்டியில் ஆராய்ச்சியாளர்கள் செய்த புதிய ஆய்வு குறித்த செய்தி பிஸிகல் ரிவ்யூ லெட்டர்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு டிச.1 அன்று ஊட்டியில் நடந்த இடிமின்னல்கள் அளவிடப்பட்டன. பதினெட்டு நிமிடங்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் 1.3 ஜிகாவோல்ட்ஸ் மின்சாரம் கடத்தப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது வட அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை விட பத்து மடங்கு அதிக அளவு ஆகும்.  ”இதையொட்டியே மழைமேகங்கள் ஆபத்தானவை என்கிறோம். இதில் வெளிப்படும் வெப்பத்தை நீங்கள் எதில் வெளியேற்றினாலும் அது பேரழிவாக மாறும் ” என்கிறார் டாடா அடிப்படை ஆராய்ச்சி மைய

அப்பாவை அம்மா காதலிக்க வைக்க போராடும் மகனின் போராட்டம்! - பேக் டூ தி ப்யூச்சர்

படம்
                பேக் டூ தி ப்யூச்சர் முதல்பாகம் . Director: Robert Zemeckis Produced by: Bob Gale, Neil Canton Writer(s): Robert Zemeckis, Bob Gale இதில் மார்டி தனது நண்பரும் ஆராய்ச்சியாளருமான எம்மட் தயாரித்த கால எந்திரத்தில் விபத்தாக பயணிக்கிறார் . அதுவும் கூட தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்கத்தான் . இந்த கால எந்திரம் சிறப்பாக பயன்பட்டிருக்கிறது . எப்படியென்றால் , குறிப்பிட்ட மெஷின் என்றால் அதனை பயன்படுத்துவது கடினமாக இருக்கும் . ஆனால் படத்தில் அதனை காராக பயன்படுத்தி விட்டார்கள் . இதனால் வேறு காலத்திற்கும் அதனால் பயணிக்க முடியும் . இதனால் லாஜிக் பெரிதாக இடிக்கவில்லை . மார்ட்டியின் அப்பா கோழையாக இருக்கிறார் . அவரை அவரது உடன் படித்த நண்பர் பல்வேறு வகையில் ஏமாற்றுகிறார் . மார்டிக்கு தனது அம்மா எப்படி அப்பாவை திருமணம் செய்தார் என்பதே புரியமாட்டேன்கிறது . அந்தளவு அசடாக இருக்கிறார் அவரது அப்பா . 1985 லிருந்து ் 1955 ஆம் ஆண்டுக்கு செல்லும்போது அப்பா , அம்மாவுக்கு இடையிலான காதலை கண்டுபிடிக்கிறார் . இவர் அவர்களது காதல் நடைபெறும் காலகட்டத்திற்கு முன்னரே சென்று வ

உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்! - மின்சாரம், டின் உணவுகள், வயர்லெஸ் தகவல்தொடர்பு, பிளாஸ்டிக்

படம்
                    மகத்தான கண்டுபிடிப்புகள் மின்சாரம் 1752 இதனை கண்டுபிடிப்பு என்று கூறமுடியாது . மின்னல் , இடியைப் பார்த்து அதிலிருந்து மின்சாரம் வருவது பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள் . எனவே இதனை கண்டறிந்தனர் என்று கூறலாம் . கி . மு 600 ஆண்டிலே இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது வந்த து . ஆனாலும் கூட பெஞ்சமின் பிராங்களின் கண்டுபிடிக்கும் வரை வெளியில் சொல்லும் முன்னேற்றங்கள் மின்சாரத்தில் ஏற்படவில்லை . இதனைப் பயன்படுத்தி மைக்கேல் பாரடே எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்குவதற்கான முயற்சிகளை செய்தார் . மின் அமைப்புகளை முதலிலேயே சிறப்பாக அமைத்துவிட்டதால் தாமஸ் ஆல்வா எடிசன் க ண்டுபிடித்த பல்பு எளிதாக விற்பனையானது இதன் அர்த்தம் ,, முதலில் வணிக மார்க்கெட்டை கண்டுபிடித்தபிறகு பொருளை விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் . இதனால்தான் கண்டுபிடிப்புகளை விட மார்க்கெட்டிங்கிற்கு கவனம் கொடுத்த தாமஸ் ஆல்வா எடிசன் ஜிஇ எனும் நிறுவனத்தை உருவாக்க முடிந்தது . டின் உணவுகள் வெளிநாடுகளில் டின் உணவு இல்லையென்றால் மக்கள் வாழ்வதே கடினம் . காரணம் அங்கு நிலவும் குளிருக்கு உணவை சமைத்

ஸ்மார்ட் சாலைகளுக்கு வேறு என்ன ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்?

படம்
          ஸ்மார்ட் சாலைகளுக்கு வேறு என்ன ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர் ? அமெரிக்காவைச் சேர்ந்த இன்டகிரேட்டட் ரோட்வேஸ் நிறுவனம் , சாலைகளை டச் பேடு போல அமைக்க முயன்று வருகிறது . இதன்மூலம் ஸ்மார்ட் கார்களை எளிதாக சார்ஜ் செய்துகொள்ளமுடிவதோடு செல்லும் சாலை பற்றிய தகவல்கள் , அருகிலுள்ள ஹோட்டல்கள் , கடைகள் பற்றிய விவரங்களை அறியமுடியும் . கான்சாஸிலுள்ள லெனெக்ஸா என்ற சாலைகை அரை கி . மீ தூரத்திற்கு இம்முறையில் அமைத்து சோதித்து வருகிறது இந்த நிறுவனம் . அடுத்து , க்வார்ட்ஸ் கிரிஸ்டல்கள் மூலம் சாலைகளை அமைக்கும்போது கார்களின் அழுத்தம் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என்பது மற்றொரு ஐடியா . இது புதிய ஐடியா கிடையாது . 1880 இல் இந்த ஐடியாவை உருவாக்கிவிட்டனர் . செயல்படுத்திப் பார்க்க இப்போதுதான் தயாராகி இருக்கின்றனர் . லான்காஸ்டர் பல்கலைக்கழகம் இதற்கான ஆராய்ச்சி நிதி 4.5 மில்லியன் பவுண்டுகளை பெற்றுள்ளது . ஐரோப்பிய நாடுகளில் பனி உறைவது பெரும் பிரச்னை . இதனை சரிசெய்ய சாலைகளுக்கு கீழே மெட்டல் ரிப்பன்களை அமைத்து பனி சாலையில் குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் அதனை உருக்குவது பிளான் . இ

எத்தனை ஜூல் ஆற்றல் மனிதனைக் கொல்லும்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
            எத்தனை ஜூல் ஆற்றல் மனிதனைக் கொல்லும்? ஒரு ஜூல் என்பது ஆற்றலின் ஒரு யூனிட் அளவு. இங்கிலாந்தைச் சேர்ந்த பிரஸ்காட் ஜூல் என்பவர் இதனை கண்டுபிடித்தார். நீரை வெப்பப்படுத்த தேவையான ஆற்றல் அளவை ஜூல் என கணக்கிடுகிறார்கள். ஒரு கிராம் நீரை ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் அளவு ஒரு ஜூல் எனலாம். மின்சார அளவில் ஒரு நொடியில் செலவாகும் ஒருவாட். ஆப்பிளை ஒரு மீட்டருக்கு உயர்த்தும் அளவு ஆற்றல், என  குறிப்பிடலாம். பத்து ஜூல் அளவு ஆற்றல்  ஒருமனிதரைக் கொல்ல போதுமானது என்று கூறுகிறார்கள். விமானநிலையம், பள்ளிகளில் இதயம் திடீரென நின்றுபோனால் அதனை துடிக்க வைக்க ஏஇடி எனும் கருவியைப் பயன்படுத்துவார்கள். இதில் 360 முதல் 400 ஜூல் மின்சாரம் உருவாகிறது. இவை முதலில் பயன்படுத்தியபோது நிறைய நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் இதன் அளவு 120 ஜூல்களாக குறைக்கப்பட்டது.   image -pxhere

எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்று யோசிக்கலாம் வாங்க!

படம்
  cc   எதிர்கால வாழ்க்கை இப்படித்தான் ! சுவர்கள் வீடியோகேம் பாத்திரங்களுக்கு மட்டும்தான் காயங்களை குணப்படுத்திக்கொள்ளும் திறன் இருக்குமா என்ன ? வீட்டுச்சுவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள கோட்டிங் மூலம் எளிதில் சரி செய்யலாம் . இதிலுள்ள மைக்ரோகேப்சூல்தான் இப்பணியைச் செய்கிறது . ஸ்டோலோடுசன் என்ற நிறுவனம் , நீரை உள்ளேவிடாத பெயின்டை உருவாக்கியுள்ளது . 500 நிறங்களில் கிடைக்கும் இந்த பெயின்ட் மூலம் வீடுகளின் சுவர்கள் , தலைமுறைகளுக்கும் பொலிவை இழக்காது . ஜன்னல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் ஜன்னல் அமைப்பை கண்டறிந்துள்ளனர் . அறைக்குள் வெளிச்சம் மூலம் கிடைக்கும் வெப்பத்தை தடுக்கமுடியும் . இதிலுள்ள நானோ கிரிஸ்டல்ஸ் அமைப்பு அறைக்குள் வரும் 90 சதவீத புற ஊதாக்கதிர்களைத் தடுக்கிறது . வெளிச்சத்தையும் , வெப்பத்தையும் தடுக்கும் வேளையில் , நானோகிரிஸ்டல் மின் அமைப்பு வெளிச்சம் மூலம் கிடைக்கும் வெப்ப சக்தியை மின்னாற்றலாக சேமித்துக்கொள்கிறது . பாதுகாப்பு இனிமேலும் பாதுகாப்பிற

இனி தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தை இ வாகனங்களே தீர்மானிக்கும்!

உதய் சிங் மேத்தா, கூடுதல் இயக்குநர், கட்ஸ் நீங்கள் கூறும் சூழலுக்கு உகந்த மாறுதல்கள், போக்குவரத்து வாகனங்களால் வேலையிழப்பு ஏற்படுமே? வேலையிழப்பு மட்டுமே நேராது. புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். அதுபற்றியும் நீங்கள் யோசிக்கவேண்டும். எலக்ட்ரிக் வாகனங்களின் கொள்கையிலேயே இதில் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். புதிய எலக்ட்ரிக் வாகனங்கள், அதற்கான உதிரிபாகங்கள், பேட்டரிகள், பழைய வண்டிகள் என இச்சந்தையில் மாறுதல்களை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. குறைந்த கார்பனை வெளியிடுவது நகர்ப்புற அளவிலேனும் சாத்தியமாகுமா? நகர்ப்புறங்களுக்கும் கிராம ப்புறங்களுக்கும் போக்குவரத்து வசதி அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. உள்ளூர் அளவில் வாகனங்களை தயாரிப்பது மட்டுமே இதற்கான தேவையை ஈடுகட்டும். மாநில போக்குவரத்துத்துறை, மண்டலரீதியான போக்குவரத்துத்துறை அலுவலகம், போக்குவரத்து காவல்துறை, நகராட்சி ஆகியோரின் ஆதரவின்றி வாகனங்களை பயன்படுத்துவது கடினம். இதில் அதிர்ஷ்டவசமாக அரசு இ - வாகனங்களை ஆதரிக்கிறது. இதனால் , கோல்கட்டா போன்ற மாநிலத்தில் இ வாகனங்கள் அதிகரித்து வ

ஸ்மார்ட்மீட்டர் மின்சார சேவையை ஒழுங்குப்படுத்தும்!

படம்
2017ஆம்ஆண்டு இந்திய அரசு, ஸ்மார்ட் மீட்டரை வீடுகளில் பொருத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியது. இதன்விளைவாக, எல்இடி விளக்குகளின் விலையை 80 சதவீதம் அளவுக்கு குறைத்தது. சாதாரண மின் மீட்டர்களை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.அது மின்கட்டணத்தை அளவிடுவதற்காக இருக்கும். ஸ்மார்ட் மீட்டர் உங்களது மின்பயன்பாடுகளை அளவிட்டு அதற்கான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்வோம். எதற்கு இப்படி சேகரிக்கவேண்டும் என கேள்விகள் எழலாம். மின்சார சேவைகளை வழங்கும் பல்வேறு அரசு நிறுவனங்கள் மின்சார வீணடிப்பால் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இதனை தீர்க்கவே ஸ்மார்ட் மீட்டர் எனும் முயற்சி. இதற்காக தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இயக்குநர், சௌரப் குமார் இதுபற்றி பேசினார் இத்திட்டம் பற்றி விளக்குங்கள். நாங்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை இந்தியாவிலுள்ள டில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய இடங்களில் நிறுவியுள்ளோம்.  நாங்கள் டில்லியில் மட்டும் பத்து லட்சம் மீட்டர்களை நிறுவியுள்ளோம். பீகாரில் இப்போதுதான் பணிகளைத் தொடங்கியுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் ஐந்து நிறுவனங்கள் மூலம் மீட்டர்களை நிறுவி வருகிறோம். ஸ்மார்ட் மீட்