இரவில் நான் உன் குதிரை
இரவில் நான் உன் குதிரை தினமும் முன்பு நேரமே கிளம்பும்போது சிலமுறை குதிரையை நான் காணத்தவறுவதுண்டு. அது குறித்து அப்போது எந்த கவலையுமில்லை. ஆனால் இப்போது எல்லாம் அது சிறந்த பொழுதுபோக்காக மாறியிருக்கிறது. அந்தக்குதிரை நல்ல வாளிப்பான பளபளக்கும் கொழுப்பு மினுமினுக்கு உடலைப் பெற்றிருந்தது. அதன் முடி பளபளவென இரு பின்களால் முன் தலை வரை இறுக்கமாக கட்டப்பட்டு பின் தலையில் அன்று என்ன உடையோ அதற்கேற்ப நிறம் கொண்ட ரப்பர்பேன்ட் இறுக்கமாக பிசிறின்றி சுற்றப்பட்டிருக்கும். உடை நேர்த்தியோ கூறவேவேண்டாம். கால்சட்டை இறுக்கமாக இருக்கும். நல்ல கடும் நிறத்துடன் அணியப்பட்டிருக்கும். குதிரையின் மேலுடல் வாளிப்பிற்கு ஏற்ப எதை அணிந்தாலும் அதன் எலும்புகள், உடல் சுழிவுகள் எதுவும் வெளியே அதிகமும் தெரியாது. கச்சிதமான உடல் அமைந்து உடை அணிந்து வந்தாலும் காலில்தான் சிக்கல். லாடம் அடிக்காது குதிரை சாலையில் நடக்க முடியாது அல்லவா? அதுபோல் இங்கு நான்கு வரி கொண்ட உயரமான குதிகால் குந்து காலணி அடிக்கடி காலை சுளுக்க விட்டு விடுகிறது. நான் பார்க்கும்ப