பசுமை பேச்சாளர்கள் 13 வில்லியம் மெக்டோனஹ் ச.அன்பரசு
பசுமை பேச்சாளர்கள் 13 வில்லியம் மெக்டோனஹ் ச . அன்பரசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் மெக்டோனஹ் முக்கியமான சூழலியல் கட்டுமான கலைஞர் , ஆலோசகர் , எழுத்தாளர் . ஜப்பானின் டோக்கியோவில் 1951, பிப் .20 அன்று பிறந்த வில்லியம் , டர்த்மவுத் கல்லூரியிலும் பின்னர் யேல் பல்கலையிலும் தன் படிப்பை நிறைவு செய்தார் . 1981 ஆம் ஆண்டு தான் கற்ற கட்டுமான கலையில் பயிற்சியைத் தொடங்கினார் . பசுமை கட்டிடங்களை உருவாக்குவதே வில்லியமின் லட்சியம் . இதனை அவர் நைக் , கேப் , ஹெர்மன் மில்லர் ஆகிய நிறுவனங்களுக்கு வடிவமைத்த அலுவலகங்களின் அமைப்பிலிருந்தே அறியலாம் . William Mcdonough + Partners எனும் வில்லியமின் நிறுவனம் பசுமை கட்டுமானங்களில் முதலிடம் வகிக்கிறது . வர்ஜீனியா , சான் ஃபிரான்சிஸ்கோ , சார்லாடெஸ்வில்லே ஆகிய இடங்களில் இவரது நிறுவனம் செயல்படுகிறது . வர்ஜீனியா பல்கலையின் கட்டுமானத்து தலைவராக செயல்பட்ட இவர் , தன் செயல்பாட்டிற்காக , அதிபர் விருது (1996), டைம் இதழில் பிளானெட் ஹீரோ (1999) அங்கீகாரத்தையும் பெற்றார் . மிச்சிகனிலுள்ள ஃபோர்டு தொழிற்சாலையை பசுமை கட்டிடமாக மாற்றியது தனித்து