இடுகைகள்

எண்ணெய் கம்பெனியை மூட சிறுமி நடத்திய போராட்டம்!

படம்
எண்ணெய்க்கு எதிரி ! பதினேழு வயதான நல்லேலி கோபோ எண்ணெய் துறைக்கு எதிராக ஒன்பது வயதிலிருந்து போராடி வருகிறார் . லாஸ் ஏஞ்சல்ஸில் எரிபொருளுக்காக ஹைட்ராலிக் முறையில் அகழ்ந்தெடுக்கும் கம்பெனிகள் நிலத்தை துளையிட்டபோது பிரச்னை தொடங்கவில்லை . மெல்ல காற்றில் கலந்த வேதிப்பொருட்கள் மக்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்களை தர ( மூக்கில் ரத்தம் வடிதல் , தீராத தலைவலி , வயிற்றுவலி ) ஏன் கோபாவின் உடலிலும் ஆஸ்துமா தலைகாட்ட போராட்டம் தொடங்கியது . கோபோ தன் தாய் உள்ளிட்ட மக்களுடன் இணைந்து நடத்திய போராட்டம் தற்காலிக வெற்றிபெற்றதோடு அமெரிக்க செனட்டரான பார்பராக பாக்ஸரின் ஆதரவையும் பெற்றுள்ளது . 2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்ட ஆலன்கோ ஆயில் நிறுவனம் , 2013 ஆம் ஆண்டு சூழல் ஆணையத்தால் மூடப்பட்டது ." நிறுவனத்தை மூட 30 ஆண்டுகளாக போராடிவருகிறோம் . திரும்ப திறக்கப்படும் என்கிறார்கள் . எதிர்காலத்தில் எனது பேரன் , பேத்திகள் கூட எண்ணெய் கிணறுகளை அதிசயம் போல எண்ணிப்பேசவேண்டும் என்பதே லட்சியம் " என்கிறார் கோபோ . இளம்புரட்சிப்பெண் விரைவில் மேல்நிலைக்கல்வியை நிறைவு செய்ய இருக்கிறார் .

குற்றவாளிகளை திருத்த செக்ஸ் தெரபி!

படம்
செக்ஸ் தெரபி ! இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கிறார்கள் . அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகளுக்கு செக்ஸ் தெரபியை நீதிமன்றங்கள் பரிந்துரைக்கின்றன . மீ டூ உள்ளிட்ட விவகாரங்கள் சாதாரண மனிதர்கள் போலவே பிரபலங்களின் பெயர்களும் வெளிவரத்தொடங்கியுள்ள நிலையில் இது முக்கியமான முயற்சி . அமெரிக்காவில் பாலியல் குற்றங்களில் 8 லட்சம் பேரின் தகவல்கள் பதிவாகியுள்ளன . நீதிமன்றம் மறுவாழ்விற்காக வாய்ப்பாக நாடெங்குமுள்ள 2,350 தன்னார்வலர்களான செயல்படும் உளவியல் நிபுணர்களிடம் சிகிச்சைக்கு பாலியல் குற்றவாளிகளை அனுப்புகிறது . உளவியல் சிகிச்சை சிறையில் அல்லது அரசு நிறுவனங்களில் நடைபெறுகிறது . மேட் , பெண்களிடம் உரையாடுவதில் தயக்கமிருந்தது . 30 வயதான அவருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்த சமயம் . சமூக வலைதளத்தில் சாட்டிங்கில் நட்பான பதினாலு வயது பெண்ணிடம் சூரியனுக்கு கீழுள்ள அனைத்தையும் பேசினார் ; பேசினார்கள் . செக்ஸையும்தான் . அப்பெண் மேட்டை சந்திக்க வரச்சொல்ல , வந்தது பெண் அக்கவுண்டில் பேசிய ப்ளூ சைரன் வைத்த போலீஸ்தான் . ஆளுமைப்பிளவு , மனச்சோர்வுக்கு பயிற்சிபெறு

சித்திரவதையில் வித்தகி!

படம்
விசாரணைத்திலகம் ஹாஸ்பெல் ! சிஐஏ அமைப்பின் இயக்குநராக கினா ஹாஸ்பெல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிபர் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டார் . சிஐஏவை நிர்வகிக்க ஹாஸ்பெல் தகுதியானவரா என விவாதங்கள் இன்றும் நிற்காமல் க்யூகட்டி வருகின்றன . சிஐஏ அமைப்பின் முதல் பெண் இயக்குநரான கினா ஹாஸ்பெல்லுக்கு வயது 33. செப் .11 தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை ஹாஸ்பெல் விசாரணை செய்த முறை சர்ச்சைகுரியதாக உள்ளது . ரகசிய போலீசாக பெரும்பாலும் செயல்பட்டுள்ள ஹாஸ்பெலின் வாழ்க்கை ரகசியங்கள் நிறைந்ததாகவே இன்றும் உள்ளது . கைதிகளை டார்ச்சர் செய்து விசாரிப்பதில் புகழ்பெற்றவர் என ஹாஸ்பெலை விமர்சிக்கிறது போலீஸ் வட்டாரம் . தாய்லாந்தில் அல்கொய்தா கைதிகளை ஹாஸ்பெல் டீல் செய்த விவகாரம் 2014 ஆம் ஆண்டு வெளியானது . 2002 ஆம் ஆண்டு அபு ஜூபைதா என்பவரை வாட்டர்போர்டிங் எனும் முறையில் ( கை , கால்களை கட்டிவைத்து முகத்தில் துணியால் மூடி அதன் மீது நீரைப் பாய்ச்சுவது ) உச்சபட்ச சித்திரவதைக்குள்ளாக்கினார் ஹாஸ்பெல் என்பது அபு ஜூபைதாவின் வழக்குரைஞர் தொடுக்கும் முக்கியக்குற்றச்சாட்டு . " சிஐஏ அதுபோன்ற

அர்மேனியாவின் புரட்சி பிரதமர்!

படம்
ரத்தம் சிந்தாமல் மாற்றம் ! அர்மேனியாவில் கடந்த மே 8 அன்று ஜனநாயக போராட்டக்காரர் நிகோல் பாஷினியான் இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ளார் . துருக்கி , ஜார்ஜியா , இரான் , அசெர்பைஜான் ஆகிய நாடுகளை எல்லையாக கொண்டுள்ள முன்னாள் சோவியத் ரஷ்யாவின் மாநிலமே அர்மேனியா . புரட்சிநாயகனான நிகோல் , தொண்ணூறுகளில் மாணவப் பத்திரிக்கையாளராக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று கவனமீர்த்தார் . அரசுக்கு எதிரான பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராக பணியாற்றியவர் , 2009 ஆம் ஆண்டு தெருப்போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியதற்கு பரிசு சிறைவாசம் . சிவில் கான்ட்ராக்ட் என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் வென்று எதிர்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார் . பின் கடந்த ஏப்ரலில் பிரதமர் செர்ஸ் சர்க்ஸ்யானுக்கு புடினோடு தொடர்பிருக்கிறதென நாடெங்கும் போராட்டம் வெடிக்க , வெல்வெட் புரட்சி தொடங்கியது . பின் இரு வாரங்களுக்கு பிறகு நாடாளுமன்றம் நிகோல்லை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது . ஐரோப்பாவுக்கு ஆதரவான நிகோல் 2.9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டை ரஷ்ய ஆதரவின்றி எப்படி தற்சார்புடையதாக மாற்றப்போகிறார் என்பதை அறிய உலக

"ஜப்பானியர்கள் நோபல் பரிசு பெறுமளவு இன்றும் திறமைசாலிகள்தான்"

படம்
முத்தாரம் Mini ஜப்பானும் இந்தியாவும் இணைந்து செய்யும் அதிவேக ரயில் ப்ரொஜெக்ட்டில் என்ன எதிர்பார்க்கலாம் ? ஜப்பானில் 1946 ஆம் ஆண்டு அதிவேக ரயில் அமைக்கப்பட்டது . எனக்கு அப்போது எட்டு வயது . 0.1% வட்டியில் 50 ஆண்டுக்குள் பணத்தை கட்டும் வகையில் ரயில்வே திட்டம் தொடங்கப்படவிருக்கிறது . ஜப்பானில் ஏற்படுத்திய மாற்றத்தை இந்தியாவிலும் அதிவேக ரயில் ஏற்படுத்தும் என நம்புகிறோம் . உங்களின் ரயில்வே திட்டம் மிக கூடுதலான செலவு என விமர்சனங்கள் வருகிறதே ? பாதுகாப்பான பயணத்தை அதிவேக ரயில்வே திட்டம் உறுதிசெய்யும் . மேலும் வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தையும் விரிவடையச்செய்ய வாய்ப்பு உள்ளது . ஜப்பானிய தொழில்நுட்பம் உள்ளூர் மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த பயனை தரும் . ஜப்பானின் சோனி வாக்மேன் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் ஏன் இன்று வருவதில்லை ? சோனி மற்றும் ஜப்பான் கார்கள் இன்றும் எங்கள் ஜப்பான் பெருமையின் சின்னங்களாக உள்ளன . இணையம் மற்றும் ஸ்டார்ட்அப் முயற்சிகளில் ஜப்பானியர்கள் பின்தங்கியுள்ளது உண்மை . அறிவியலில் பல்வேறு துறைகளிலும் ஜப்பானியர்கள் தம் த

தாய்மொழியை பிறமொழி உச்சரிப்பில் பேசுபவர்களுக்கு என்ன பெயர்?

படம்
பிட்ஸ் !   Unfriend என்ற வினைச்சொல் 1669 ஆம் ஆண்டு உருவானது . ஸ்வீடனில் ரத்த தானம் தருவோர்களின் ரத்தம் பிறரின் உடலில் பயன்படுத்தப்படும்போது , குறிப்பிட்ட நபரின் அலைபேசி எண்ணுக்கு நன்றி செய்தி அனுப்பப்படுகிறது . ஸ்விட்சர்லாந்தில் ஒரே ஒரு கினி வகை பன்றியை வளர்ப்பது குற்றம் . ஏன் ? தனிமையில் வாடுமே என்பதால்தான் . 1930 ஆம் ஆண்டு புனித வெள்ளி தினம் . பிபிசி ரேடியோவில் " எந்த செய்தியும் கிடையாது " என்ற செய்தியுடன் பியானோ இசை ஒலிபரப்பாகியது . ஸ்கூபி டூ காமிக்ஸில் ஸ்கூபியுடன் எக்கச்சக்கமாக பேய்களுக்கு பயப்படும் சேகியின் நிஜப்பெயர் , Norville Rogers. தாய்மொழியை பிறமொழி உச்சரிப்பில் பேசும் மூளைக் குறைபாட்டிற்கு Foreign Accent Syndrome என்று பெயர் .  

ஃபயர் சர்வீஸ் ஹாரனை மாற்றலாமா?

படம்
நெருப்பின் அலாரம் ! ஆம்புலன்ஸ் , தீயணைக்கும் வண்டியின் சைரன் ஆகியவற்றை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு வழிவிடுகிறோம் . எப்படி ? சிறுவயதிலிருந்து காதில் கேட்டு பார்த்து பழகிய ஒலி . ஆனால் நவீன யுகத்தில் எமர்ஜென்சி வசதிகள் இத்தனை வந்தபின்னும் மணி அல்லது சைரன் என ஏன் பயன்படுத்துகிறோம் ? 1990 ஆம் ஆண்டில் தேசிய தன்னார்வலர் நெருப்புத்தடுப்பு கவுன்சிலிலும் இதுதொடர்பாக பேசப்பட்டது . அப்போது மேரிலேண்டைச் சேர்ந்த கிரிஷ் ஹாஸ் என்பவர் பேஜர்ஸ் மற்றும் செல்போன்களை விட சைரன்கள் சிறப்பான தகவல்தொடர்புகருவியாக அவசர காலங்களில் பயன்படும் என உறுதியாக தனது வலைத்தளத்தில் எழுதினார் .  மேலும் வேறு ஒரு ஒலியை விட தொன்மையான சைரன் ஒலி மக்களுக்கு மிகவும் பழக்கமான ஒன்றும்கூட . எனவே ஒலி கேட்டால் மக்கள் உஷாராகிவிடுவார்கள் என்பதும் இதில் பிளஸ் பாய்ண்ட் . ஒன்டாரியோ பகுதி தீயணைப்பு நிலையம் பத்தாண்டுகளுக்கும் மேலாக சைரனை பயன்படுத்தவில்லை . ஆனால் ட்ராஃபிக்கில் தீயணைப்பு வீரர் சிக்கிக்கொண்டபோதுதான் சைரனின் அருமை தெரிந்து மீண்டும் அதனை பயன்படுத்த உத்தரவாகியுள்ளது .

வீக் எண்ட் பிட்ஸ்! சிங்கராஜா வித் சங்கிலி

படம்
பிட்ஸ் ! நோயாளியின் நண்பன் ! உத்தர்காண்ட்டைச் சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகேந்திர பகுகுணா , போக்குவரத்து பணியில் இருந்தார் . அப்போது அவ்வழியே வந்த  ராஞ்சி ரஜக்குக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட , அவரை  தோளில் சுமந்து யமுனோட்ரியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் . தோராயமாக 2 கி . மீ தோளில் ராஞ்சியை சுமந்து சென்று அவரின் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்காரர் பகுகுணாவின் மனிதநேயம் மக்களை நெகிழ வைத்துள்ளது . சிங்கராஜா வித் சங்கிலி ! விலங்குகளை காப்பாற்றவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி சொன்ன ட்விட்டர் மெசேஜ் , அவரின் ஆளுமைக்கே  ஆப்பு ஆகிவிட்டது . மானுக்கு பால் கொடுத்தும் , சிங்கத்தை கட்டிப்போட்டு அதன்முன்பு அப்ரிடியின் செல்லமகள் எடுத்தபோட்டோ இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளானது . " காட்டிலுள்ள சிங்கத்தை சங்கிலியில் கட்டிப்போட்டு விலங்கு பாச மெசேஜ் தேவையா ?" அப்ரிடியை தாளித்துவருகிறது இணைய உலகம் . டான்சுக்கு அப்பா துணை ! பெர்முடாவின் சிட்டிஹாலில் பள்ளிச்சிறுமிகளின் பாலே டான்ஸ் அமர்க்களமாக நடைபெற்றது . அதில் ஆச்சரியம் , டான

9 ஸ்டார்ட்அப் மந்திரம்! - ஜெயிப்பது எப்படி?

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம்! - ஜெயிப்பது எப்படி? 2016 ஆம் ஆண்டில் StayZilla, Dazo ஆகிய நிறுவனங்கள் தோற்று வீழ்ந்ததோடு , 200 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகள் மூடப்பட்டுவிட்டன . கிராப்ட்ஸ்வில்லா , சாஃப்ட்பேங்கின் முதலீட்டில் வாழும் ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும் பெருமளவு ஆட்குறைப்பை செய்துவருகின்றன . எங்கு தவறு ? என்ன பிரச்னை ? Zomato, Swiggy ஆகிய நிறுவனங்கள் உணவுத்துறையில் தாக்குப்பிடிக்கின்றன என்றால் அதைப் பின்பற்றிய பிற நிறுவனங்கள் என்னவாயின ? குறிப்பிட்ட ஸ்டார்ட்அப் ஐடியாவை முதலில் தேர்ந்தெடுப்பவருக்கான ஆதாயங்கள் பின்வருபவர்களுக்கு கிடைக்காது . ஃபிளிப்கார்ட்டின் ஐடியாவை காப்பியடித்து எக்கச்சக்க கம்பெனிகளை தொடங்கி , பணத்தை இறைக்கலாம் . மக்களின் மனதில் பதிய தெளிவான பிளான்களும் விநியோக முறைகளும் முக்கியம் . இந்த அம்சங்கள் இல்லையெனில் தொடங்கும் கம்பெனியில் செய்யும் முதலீடு , கடலில் கரைத்த பெருங்காயம்தான் . ஒவ்வொரு துறையிலும் முன்னணி கம்பெனிகள் நிச்சயம் இருப்பார்கள் . இ - வணிகத்தில் ஃபிளிப்கார்ட் , அமேசான் ; ஹோட்டலா ? ஓயோ ரூம்ஸ் , வாடகைக்காரா ? உ

ஸ்டார்ட்அப் மந்திரம் 8!- தோல்வி ஏன்?

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம்   ஸ்டார்ட்அப் தோல்வி ஏன் ? உலகளவில் அதிகளவு ஸ்டார்ட்அப் முயற்சிகள் உருவாவது இந்தியாவில்தான் . ஆனால் 90 சதவிகித ஸ்டார்ட்அப்கள் தோற்றுப்போகின்றன . காரணம் ? கிரியேட்டிவிட்டி இல்லை என ஃபோர்ப்ஸ் தளம் தகவல் தருகிறது . 2015-16 ஆம் ஆண்டு இந்தியாவில் 1,422 பேடண்ட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன . ஆனால் இதேகாலத்தில் ஜப்பானில் 44 ஆயிரத்து 235, சீனாவில் 29 ஆயிரத்து 846, தென் கொரியாவில் 14 ஆயிரம் பேடண்ட்டுகள் பதிவாகியுள்ளது . 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹேக்கத்தான் மாநாட்டில் இணையம் - 11.5%, ரோபாட் -11.5%, ஏஐ - 9.6%, ஆக்மெண்டட் ரியாலிட்டி - 7.7%, பாட்ஸ் - 5.7% ஆகியவை முன்னிலை பெற்றுள்ளன . ஸ்டார்ட்அப்பில் ஏன் ஐஐஎம் , ஐஐடி படித்தவர்களுக்கே முதலீட்டாளர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள் என மதுரை வாசகர் முத்துவேலன் கேட்டிருந்தார் . " ஐஐடி , ஐஐஎம் படிக்க மிக கடினமான தேர்வுகளை சந்தித்து வருவதால் , அவர்களின் பிஸினஸ் ஐடியா ஜெயிக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள் . இதற்கு மனம் தளராதீர்கள் . கல்வித்துறையில் பத்தாண்டுகள் அனுபவம் உள்ள

ஸ்டார்ட்அப் மந்திரம் 7!- உணவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, மருத்துவமனை

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் 7 உணவு டெலிவரியில் கொட்டும் காசு ! உணவுசேவைத் துறைக்கு வந்த ஸோமாடோ மற்றும் ஸ்விக்கி ஆகியோர் டெலிவரி தொகையை 35% குறைத்துள்ளனர் . ஸோமாடோ , தன் கட்டமைப்பு மூலம் உணவகங்களின் பிராண்டையும் பிஸினஸையும் விரிவாக்குகின்றன . இதில் ஸ்விக்கி , க்ளவுட் கிச்சன் என்ற புதிய டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறது ." தொழிலைத் தொடங்கிய 18 மாதங்களுக்கு சந்தையில் தாக்குப்பிடிக்க அதிக முதலீடு தேவை . அப்படி நிற்கமுடியாதபோது உங்கள் சந்தையும் வெற்றிபெற்றவர்களுடைய கைக்கு போய்விடும் அபாயம் உள்ளது " என்கிறார் முதலீட்டாளரான கணேஷ் . கைநிறைய காசு ! குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு - ரூ .350 ஹோட்டல் கமிஷன் - 20% பட்டுவாடா விலை - 18% நிர்வாக செலவு - 7% வருமானம் - 25% (Redseer நிறுவன தகவல்படி …) உணவு , மென்பொருள் மட்டுமல்ல விர்ச்சுவல் ரியாலிட்டியிலும் ஸ்டார்ட்அப்கள் தொடங்க நம்பிக்கை தருகிறார் ராகுல் தேஷ்பாண்டே . " எனக்கு சொந்த தொழில் தொடங்கும் பேராசை முதலிலேயே இருந்தது . நான் பாரத்த வேலையை விட்டுவிட்டு என் மனம் சொன்னபடி இதோஸ் டிசைன்ஸ் கம்