இடுகைகள்

வெப்பமயமாதலால் பாதிக்கப்படும் மாநிலங்கள் எவை?

அறுபதுகோடி இந்தியர்களுக்கு ஆபத்து ! வெயில் அதிகரித்து மழைகுறையும் பருவநிலை மாறுபாடுகளால் இந்தியாவின் ஜிடிபி 2.8 சதவிகிதம் குறைத்து 2050 ஆண்டு மக்களின் வாழ்க்கை முறையே மாறும் என உலகவங்கி எச்சரித்துள்ளது .  மேற்சொன்ன சூழல்களால் பெரிதும் பாதிக்கப்படப்போவது மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டம்தான் . ஏறத்தாழ 10 சதவிகித அளவு பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்படவிருக்கிறது . வெப்பநிலை உயர்வால் இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு இடங்களிலும் பெய்யும் மழையின் அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது . பருவநிலை மாறுபாட்டால் 2050 ஆம் ஆண்டு ஏற்படும் பொருளாதார இழப்பு 1.1 ட்ரில்லியன் டாலர்கள் . இந்திய மாவட்டங்களில் ஏற்படும் நுகர்வு இழப்பு மதிப்பு 400 பில்லியன் டாலர்கள் . சத்தீஸ்கர் , மத்தியப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் 9 சதவிகிதம் பாதிப்பு ஏற்படுவதாக கருதப்படுகிறது . மகாராஷ்டிராவிலுள்ள பத்து மாவட்டங்கள் அதிக பருவ மாறுதல் விளைவுகளை காணவிருக்கின்றன . " வெப்பநிலை மாறுதல் என்பது மெதுவாக நிகழும் பேரழிவு . இதுபற்றி   நாம் வி

இந்தியாவில் மலையேற்றம் செல்ல ஹாட்ஸ்பாட்டுகள்!

ட்ரெக்கிங் சவால் ! Stok Kangri 20 ஆயிரம் அடி உயரத்திலுள்ள ஸ்டோக் பகுதி , இமாலயத்தின் தூய அழகை 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தரிசிக்க உதவும் . ஒன்பது நாட்கள் பயணம் செய்ய முயலும் இப்பகுதியில் ஸன்ஸ்கார் மற்றும் இந்தஸ் ஆற்றுப்பகுதி உங்கள் ஆன்மாவை விழித்தெழச் செய்யும் . கட்டணம் 18 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது .  Pin Parvathy இமாலயத்தின் பழமையான மலையேற்ற வழி இது . 17 ஆயிரத்து 450 அடி உயரத்தில் ஜிலுஜிலுவென 20 டிகிரியில் சாகச அனுபவத்தை அனுபவிக்கலாம் . கட்டணம் 24 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது . Bara Bangal   குலு , காங்ரா பள்ளத்தாக்கு பகுதிகளை இணைக்கும் மலையேற்றம் இது . 26 ஆயிரத்து 775 ரூபாயை கந்துவட்டி வாங்கியாவது தேற்றினால் பதினாறாயிரத்து 70 அடியில் ஜூன் - அக் மாதத்தில் ஜாலி செய்யலாம் . புதிதாக மலையேற்றம் செல்பவர்கள் Beasehund, Parashar lake, chopta tunganath ஆகிய பகுதிகளை விசிட் செய்யலாம் . தலைவலி , வயிற்று பொருமல் , வாந்தி என இதற்கான மருந்துகளை முன்கூட்டியே எடுத்துச்செல்வது நல்லது .

ஒலியை மிஞ்சும் சூப்பர் ஜெட்!

நாசாவின் சூப்பர்சோனிக் ! நாசாவின் ஆர்ம்ஸ் ‌ ட்ராங் விமான ஆராய்ச்சி மையத்தின் F/A-18 விமானத்தை விமானி ஓட்டும் வீடியோவை அண்மையில் வெளியிட்டுள்ளது . மணிக்கு 767 மைல் கி . மீ என ஒலியையும் மிஞ்சும் வேகத்தில் செல்லும் விமானம் என்பது இதன் ஸ்பெஷல் . விமானியின் திறனை சோதிக்க நடந்த சோதனையல்ல . நாசா தயாரித்துள்ள எக்ஸ் -59 என்ற சூப்பர்சோனிக் விமானத்தை சோதிப்பதற்கான முன்மாதிரி சோதனை இது . அமெரிக்கா 1973 ஆம் ஆண்டு சூப்பர்சோனிக் விமானத்தை தடை செய்துவிட்டது . மண்டையைப் பிளக்கும் அதீத ஒலியே தடைக்கு காரணம் . ஒலியின் வேகத்தை மிஞ்சி விமானம் செல்லும்போது காற்றின் மூலக்கூறுகளில் ஏற்படும் அழுத்தம் சோனிக் பூம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர் . 2016 ஆம் ஆண்டு நாசா லோக்கீது மார்ட்டின் நிறுவனத்திற்கு 20 கோடிரூபாயை வழங்கி அதிக ஒலியெழுப்பாத சூப்பர்சோனிக் ஜெட்டை (X59) உருவாக்கும் திட்டத்தை அளித்தது . 2021 ஆம் ஆண்டு இவ்விமானம் நாசாவுக்கு அளிக்கப்படலாம் . அரசின் தடையை நாசா விலக்கிக்கொள்ள கோரி ஏற்கப்பட்டால் ஒலியையும் மிஞ்சி மக்கள் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் .

ஹாங்காங்கில் மொழிப்போர்!

சீனா ஆக்கிரமிப்பில் ஹாங்காங் ! பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் , 1997 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் கைப்பிடிக்குள் வந்துவிட்டது . அதிகாரப்பூர்வ மொழியான கன்டோனீஸ் மறைந்து தற்போது சீனாவின் மாண்டரின் பரவிவருவதை அந்நாட்டு மொழியியல் வல்லுநர்கள் பதட்டத்துடன் கவனித்து வருகின்றனர் . இருபதாண்டுகளாக ஹாங்காங் குடிமக்கள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் போராடிவருகின்றனர் . மொழி , வணிகம் என அனைத்திலும் ஹாங்காங்கை ஆக்கிரமிக்க சீன அதிபர் ஜின்பிங் முயற்சி எடுத்து வருகிறார் . கேரி லாம் தலைமையிலான ஹாங்காங் அரசு கல்வி , சுற்றுலா என கிடைத்த இடத்தில் மாண்டரின் மொழியை புகுத்தி வருகிறார் . ஹாங்காங்கில் 80 சதவிகிதம் பேர் காண்டனீஸ் மொழியை பேசிவருகின்றனர் . எழுபது சதவிகித தொடக்கப் பள்ளியில் மாண்டரின் மொழி வழியாகவே பாடம் நடத்தப்படுகிறது . சீனாவை வேலைவாய்ப்புக்கு சார்ந்திருப்பதால் மாண்டரின் மொழியை படிக்கும் கட்டாயம் ஹாங்காங் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது . இதனை மாற்ற சான் லோக் ஹாங் உள்ளிட்ட தன்னார்வலர்களின் அமைப்புகள் (SLH) முயற்சித்து வருகின்றன . குவாங்சூ உள்ளிட்ட பகுதிகளில் காண்டனீஸ் மொழி அற

மகப்பேறு விடுமுறையால் பெண்களை தவிர்க்கும் நிறுவனங்கள்!

பெண்களைத் தவிர்க்கும் நிறுவனங்கள் ! கடந்தாண்டு மார்ச் 9 அன்று அமுலுக்கு வந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கான பிரசவகால விடுமுறை சட்டத்தால் பெண்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .  12 வாரங்களாக இருந்த பிரசவகால விடுமுறை அரசின் புதிய சட்டத்தால் 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது . இதனால் பல்வேறுவகை தொழில்பிரிவுகளில் பணியாற்றும் 12 கோடிக்கும் மேற்பட்ட பெண்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு விடுமுறைக்கு பின் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது . இரண்டு குழந்தைகளின் பிறப்புக்கு மட்டுமே அரசின் பிரசவ விடுப்பு ரூல்ஸ் பொருந்தும் . சுற்றுலா , சூப்பர்மார்க்கெட் , வணிகம் , உற்பத்திதுறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரசவவிடுப்பு முடிந்தாலும் பெண்களை திரும்ப பணிக்கு சேர்க்க தயங்குகிறார்கள் . இவ்வாண்டில் மட்டும் (2018-19), பதினெட்டு லட்சம் பெண்கள் இவ்வகையில் வேலையிழக்க வாய்ப்புள்ளதாக துறை வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர் . பெண்களுக்கான சம்பள விகித வேறுபாடு , புரமோஷன் உள்ளிட்ட பிரச்னைகளும் பன்னாட்டு நிறுவனங்களை கதிகலங்கவைத்துள்ளன .  2 குழந்த

குற்றமனநிலையை குறைக்க மின்சாரம் உதவுகிறது!

குற்றங்களை குறைக்கும் மின்சாரம் ! மூளையில் மின் அதிர்ச்சி கொடுத்தால் ஐம்பது சதவிகித குற்றங்களை குறைக்கலாம் என பென்சில்வேனியா பல்கலைக்கழகமும் , நானியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது . transcranial direct-current stimulation (tDCS) எனும் முறையில் செய்யும் இச்சிகிச்சையை 81 ஆரோக்கியமான மனிதர்களிடம் செய்து இதனைக் கண்டுபிடித்துள்ளனர் .  " மூளையில் வன்முறை எண்ணங்களை உருவாக்கும் பகுதியை அடையாளம் கண்டுவருகிற முயற்சி இது " என்கிறார் ஆராய்ச்சியாளர் ராய் ஹாமில்டன் . எலக்ட்ரிக் ஷாக் என்பதிலிருந்து வேறுபட்ட சிகிச்சை முறை என்பதோடு மூளையின் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மின்சாரம் பாய்ச்சப்படும் . இம்முறையில் தோலில் சிறு எரிச்சல் ஏற்படுத்தும் அளவு மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது . இதன் தீவிர வடிவமே deep brain stimulation (DBS). டிபிஎஸ் பார்க்கின்சன் நோயாளிகளுக்கு கடைசி சிகிச்சைமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது . இத்தாலியைச் சேர்ந்த செர்ஜியோ கானவெரா 2014 ஆம் ஆண்டு இதுகுறித்த கட்டுரையில் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடுபவர்களை  நியூரோஸ

உளவியல் மருந்துகள் உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள்!

புத்தகம் புதுசு ! How to Change Your Mind: The New Science of Psychedelics by Michael Pollan 480 pages Allen Lane உளவியல் மருந்துகள் உலகில் என்னமாதிரியான விளைவை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஆராயும் நூல் இது . எல்எஸ்டி 1940 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டபின் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவு ஆறுதல் கிடைத்தது . மனதின் உளவியலை மாற்றும் எல்எஸ்டி , சிலோசைபின் , டிஎம்டி ஆகிய மருந்துகள் நோயாளிகளின் மனநிலையில் ஏற்படுத்திய மாற்றங்களை ஆய்வு நோக்கில் ஆராய்ந்துள்ளார் ஆசிரியர் . Tesla: Inventor of the Modern by Richard Munson Hardcover, 320 pages W. W. Norton Company நிக்கோலா டெஸ்லா ரேடியோ , ரோபாட் , ரிமோட் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றின் பிரம்மா . கண்டுபிடிப்புகள் அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யத் தெரியாததால் உலகம் டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளை அவர் இறந்த பின்னரே அறிந்தது . செல்போன் , லேசர்ஒளி , இணையம் உள்ளிட்டவற்றின் ஐடியாக்களை முன்னமே உருவாக்கிவிட்டார் டெஸ்லா . மழைநாளில் பிறந்தது முதல் நியூயார்க் ஹோட்டலில் இறக்கும்வரை டெஸ்லாவின் வாழ்வை பதிவுசெய்யும் சுயசரித நூல் இது .

புதிய டெக் பொருட்களை வாங்க ரெடியா?

மார்க்கெட்டுக்கு புதுசு ! Sony RX100 VI காம்பேக்ட்டான அழகான கேமரா அப்படியென்றால் விலையும் சுருக்கெனத்தானே இருக்கும் . 20.1 எம் . பி கேமரா , 24 எஃப்பிஎஸ் , 4K வீடியோ என அனைத்தும் காசுக்கேற்ற கச்சிதம் . இதுவரை இல்லாத அளவு க்ளோஸ் ஜூம் இக்கேமராவின் ஸ்பெஷல் . Atom 4G Rugged Smartphone ஆண்ட்ராய்டு 8.1 ஓஎஸ்ஸில் இயங்கும் சிறியரக போன் இது . கொரில்லா கிளாஸ் , கைரேகை ஸ்கேனர் , இரண்டு சிம்கள் என வாட்டர்ப்ரூப் வசதியுடன் கிடைக்கிறது . வாட்டர் ப்ரூப் என்பதற்காக நீரில் தூக்கி எறிந்துவிடாதீர்கள் . சிறியது என்பதால் தேடிக் கண்டுபிடிப்பதும் கஷ்டம் . Chris - digital assistant for drivers ட்ரைவர்களுக்கான வழிகாட்டி . வண்டி ஓட்டும்போது போன் பயன்படுத்தமுடியாது எனவே கிறிஸ் எனும் டிஜிட்டல் உதவியாளரை பயன்படுத்தலாம் . உங்கள் செய்திகளை படிப்பதோடு , பாடல்களை இசைப்பது செல்லுமிடத்திற்கு வழிகாட்டுவது உள்ளிட்டவற்றை வழிகாட்டி கிறிஸ் செய்வார் .    

எக்ஸ்ட்ரா ரிஸ்க் எடுப்பது யார்?

ஏ்ன் ? எதற்கு ? எப்படி ? -Mr. ரோனி ஏன் சிலர் மட்டும் கொஞ்சம் எக்ஸ்‌ட்ரா ரிஸ்க் எடுக்கிறார்கள் ? ரிஸ்க் எடுத்து ரஸ்க் மட்டுமல்ல மீல்ஸ் சாப்பிடும் ஆட்கள் உலகில் மிகச்சிலர்தான் . இது பாலினத்தைப் பொறுத்தே பெரும்பாலும் அமைகிறது . பியூட்டி குயின்கள் பார்க்கிறார்கள் என்றால் இளைஞர்கள் ரிஸ்க் எடுக்க முயற்சிப்பது வாடிக்கை . ஆண்கள் உடல்ரீதியான பல்வேறு சவால்களை ஏற்கிறார்கள் என்றால் பெண்கள் சமூகரீதியிலான சவால்களை ஏற்று சாதிக்கிறார்கள் . பொதுவாக சாகசம் எனும் வீரச்செயலை எதற்கு செய்கிறார்கள் ? அந்த அனுபவம் தரும் பயம் கலந்த பரவசத்திற்காகத்தான் . :

மனவியல் பிரச்னைகள்!

உளவியல் போர் ! Dissociative Identuty Disorder ஒருவரின் மனநிலையில் ஏற்படும் ஆளுமைப் பிறழ்வு . தீவிரமான வல்லுறவு , தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் இப்படி மாறுவார்கள் . Hallucinations நிஜமா , நிழலா என்று அறியாதபடி மனம் உருவாக்கும் மாயக்காட்சிகளுக்கு இப்பெயர் . பார்ப்பது , நுகர்வது , சுவைப்பது , உணர்வது என அனைத்தும் மாயமானவையாக இருக்கும் . பார்க்கின்சன் , ஸிஸோபெரெனியா ஆகியவற்றின் முன்னோடியாக இது ஏற்படும் . Mass Hysteria சமூகரீதியாக ஏற்படும் அழுத்தங்களால் , பாதிப்புகளால் பதட்டம் , எரிச்சல் , ஆர்வம் உள்ளிட்ட உணர்ச்சிகளின் உந்துதல் இது . Schizoperenia மூளையில் ஏற்படும் குறைப்பாட்டில் மாயக்காட்சிகள் , உடலுக்கும் மூளைக்குமான செயல்பாட்டில் தடுமாற்றம் ஏற்படுகிறது . Pareidolia தீவிர இறைபக்தியாளர்களுக்கு தோன்றும் மாயக்காட்சி . முருகன் மயில்வாகனத்தில் நெடுஞ்சாலையில் தோன்றுவது போன்றவை இப்படிப்பட்டவையே .

விநோத சுவாரசியங்கள்

பிட்ஸ் ! மிக அரிதாக மனிதர்களின் பார்வையில் படும் பாப்கேட் , வடஅமெரிக்காவில் அதிகம் வாழும் விலங்கு . லீகோ வார்த்தையின் மூலவார்த்தை keg godt. அர்த்தம் , நன்றாக விளையாடுங்கள் என்பதுதான் . ஸ்கொயர் டான்ஸ் எனும் நாட்டுப்புற நடனம் அமெரிக்காவின் 24 மாநிலங்களில் அதிகாரப்பூர்வ நடனமாக உள்ளது . குளிர்ச்சியால் ஏற்படும் சளித்தொல்லைக்கு (icecream headaches) sphenopalatine ganglioneuralgia என்று பெயர் . கோடைக்காலம் முழுமைக்கும் தூங்கி ஓய்வெடுப்பதை estivation என்று குறிப்பிடலாம் .