இடுகைகள்

நீர்மூலம் மின்சாரம் தயாரிப்பது சூழலுக்கு கேடுதான்

படம்
ஜெய்ராம் ரமேஷ் உங்களுக்கும் ஜிடி அகர்வாலுக்குமான நட்பு குறித்து கூறுங்களேன் 2010 ஆம் ஆண்டு நான் காங்கிரசில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தபோது அகர்வால் உண்ணாவிரதமிருக்கப்போவதாக அறிவித்தார். அப்போது அவரை சந்தித்து அவரின் கோரிக்கைகளை கேட்டேன். ஐஐடி கான்பூரில் சிவில் எஞ்சினியரிங் பேராசிரியராக அகர்வால் பணியாற்றிய போது என்னுடைய தந்தை மும்பை ஐஐடியில் அதேதுறையில் பேராசிரியராக இருந்தார். என்ன கோரிக்கைகளை அவர் உங்களிடம் முன்வைத்தார்? கோமுக் - உத்தர்காசி பகுதியை இயற்கை பகுதியாக அறிவிக்க கோரியதோடு, பாகிரதி, பாரோன் கடி, பால மனேரி ஆகிய இடங்களில் நடைபெறும் மின்சார நிலைய பணிகளை நிறுத்த கோரினார். இது குறித்து என்னுடைய  Green Signals: Ecology Growth and Democracy in India .  குநூலில் எழுதியுள்ளேன். பாரோன் கடி -பால மனேரி திட்டம் தொடங்கப்படவில்லை. ஆனால் லோகரினாக் மின்சார நிலைய திட்டத்திற்கான பணிகளில் ரூ.1000  கோடி(NTPC) செலவிடப்பட்டுவிட்டது. எனவே அத்திட்டத்தை நிறுத்தமுடியாத நிலை. இதனை எப்படி சுற்றுச்சூழல் துறை அனுமதித்தது என்பதும் எனக்கு புரியவில்லை. நான் இதுகுறித்து பிரதமர் மன்மோக

எழுத்தாளராக பாக்.கில் வாழ்வது கடினம்!

படம்
நேர்காணல்! “பாகிஸ்தானில் எழுத்தாளராக உயிர்வாழ்வது கடினம்!” முகமது ஹனிஃப், பாகிஸ்தானிய எழுத்தாளர் தமிழில்: ச.அன்பரசு பாகிஸ்தான் அரசியலைப் பற்றி வெளியே இருந்துதான் எழுதமுடியும் என தி கார்டியன் நாளிதழில் எழுதியுள்ளீர்கள். அப்படியென்ன பிரச்னையை சந்தித்தீர்கள்? பாகிஸ்தானில் பத்திரிகையாளர்கள் பலருக்கும் மூச்சுவிடமுடியாத சூழல்தான் உள்ளது. Dawn நாளிதழில் நான் சென்றாண்டு எழுதிய கட்டுரைக்காக அதன் துணை ஆசிரியர் ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார். என்னால் பிறரின் வாழ்க்கை அபாயத்தில் சிக்குவதை நான் விரும்பவில்லை. பாகிஸ்தானிலிருந்து வெளிநாட்டு பத்திரிகைகளில் எழுதினாலும் தேசதுரோகி என சித்தரிக்கப்படும் அபாயம் அங்கு நிலவுகிறது. எ கேஸ் ஆஃப் எக்ஸ்ப்ளோடிங் மேங்கோஸ் நூலில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்த வழி பற்றி விவரித்திருந்தீர்கள். புதிய நூலான ரெட் பேர்ட்ஸ் எழுதுவதற்கு எளிதாக இருந்ததா? நாவல் எழுதுவதிலுள்ள ஆபத்து, உங்களுக்கு சலிப்பு ஏற்படாமல் எழுதுவதோடு வாசகருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே. தொடங்கிய நாவலை வெற்றிகரமாக முடிக்கவேண்டும

ஜனநாயக இந்தியாவின சிற்பி!

படம்
நவீனச்சிற்பி நேரு! 1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக செங்கோட்டையில் இந்தியக்கொடி ஏற்றிய நேரு, மக்களிடையே உரையாற்றினார். 1948 ஆம் ஆண்டு பிப்.12 அன்று காந்தியின் இறுதிச்சடங்கி் நேரு பங்கேற்றார். தில்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட காந்தியின் அஸ்தி, கங்கையில் கரைக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிற்கு 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரு, பிலாய் மற்றும் பொகாரோ இரும்பு தொழிற்சாலைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுவந்தார். ஸ்டாலின்கிரேட்டில் மின்நிலைய கட்டுமானத்தை பார்வையிடுகிறார் நேரு.    1959 ஆம் ஆண்டு மே21   அன்று, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிட டிசைனை பிரதமர் நேருவிடம் விளக்குகிறார் மருத்துவமனை இயக்குநர். 1961 ஆம்ஆண்டு அணிசேரா இயக்க மாநாட்டில் எகிப்தின் காமல் அப்தெல் நாசர், யூகோஸ்லேவியாவின் ஜோசப் டில்டோவுடன் நேரு அமர்ந்திருக்கிறார்.  

நீதிமன்றத்தை விட நாடாளுமன்றமே உயர்ந்த அமைப்பு

படம்
முத்தாரம் Mini அயோத்தியாவில் ராமர்கோவில் கட்ட தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளீர்கள். இதனை விளக்குங்களேன். கோவிலை கட்ட 400 ஆண்டுகளாக முயற்சி நடைபெற்றுவருகிறது. இது புதியகோரிக்கை அல்ல. முகலாயர்கள், ஆங்கிலேயர்களின் வருவாய்த்துறை ஆவணங்களில் ராமர் பிறந்த இடம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 1872-2003 காலகட்ட ஆவணங்களில் கோவில் இருந்ததும், அழிக்கப்பட்ட விவரங்கள் உள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக பாஜக சொல்லிவருகிறதே? ராமர்   கோவிலை கட்டும் லட்சியத்தில் பாஜக பின்வாங்கவில்லை. அதன் நிலைப்பாடு மாறினாலும் அதன் பொறுப்பு நீர்த்துப்போகவில்லை. ராமர்கோவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது தனிநபர் மசோதா எதற்கு? இது கோர்ட்டை அவமதிப்பதாகாதா? நாடாளுமன்றம் நீதிமன்ற வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய அதிகார மையம். 1950 ஆம் ஆண்டு ஜமீன்தாரி முறையை ஒழித்தபோது கூட சரியான முடிவை நாடாளுமன்றம் எடுத்தது. தனிநபர் மசோதா கொண்டு வந்தது கோர்ட் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதோ, அவமதிப்பதோ ஆகாது. கோர்ட் தீர்ப்பை கட்சிகள் மீறப்போவதில்லை. இவ்விஷயத்தில் அவ

நித்தம் வேண்டும் ரத்தம்!

படம்
நித்தம் வேண்டும் ரத்தம்! அலெக்ஸாண்டர் பிச்சுஸ்கின்(1974-) பள்ளியில் நடந்த அவமானங்களால் துவண்ட ரஷ்யாவின் பிச்சுஸ்கின், தாத்தாவின் தூண்டுதலால் செஸ்சில் வித்தகரானார். தாத்தா இறந்துபோக,ஆவேசமானவர் இலவச வோட்கா காட்டி 48 நபர்களை கொன்றார். பின்னாலிருந்து ஒருவரின் மண்டையை சுத்தியலால் உடைத்து திறந்து துளையில் வோட்காவை ஊற்றி கொல்வது பிச்சுஸ்கினின் சிக்னேச்சர் ஸ்டைல். அனடோலி ஓனோபிரைன்கோ(1953-2013) உக்ரைன் விலங்கு என்றழைக்கப்பட்ட அனடோலி, தாய் இறந்தவுடன் தந்தை ஏற்காததால் காப்பகத்திற்கு அனுப்பபட்டவர். பெண்களை கற்பழித்து, குழந்தைகளை சித்திரவதை செய்து கொல்பவர் குடும்பமாக தீர்த்துக்கட்டி வீட்டுக்கு தீவைத்து ஆதாரங்களை அழித்துவிடுவார். 52 பேர்களை கொன்ற வனவியல் பட்டதாரி, சிறையில் மாரடைப்பால் இறந்தார்.   ஹெரால்டு சிப்மன்(1946-2004) இங்கிலாந்தில் 250 நபர்களை கொன்ற டாக்டர் டெத் என பெயரிடப்பட்ட ஹெரால்டு, டயாமார்பினை பயன்படுத்தி 80% வயதான பெண்களுக்கு பரலோக சீசன் டிக்கெட் வழங்கினார். பதினைந்து கொலைகளுக்கு கோர்ட் ஆயுள்தண்டனை தர தூக்குபோட்டு உயிரிழந்தார்.     

விண்கல மனிதர்கள்!

படம்
விண்கல மனிதர்கள்! 1961 ஆம் ஆண்டு ஏப்.12 அன்று சோவியத் ரஷ்யாவின் வீரர் யூரி ககாரின் வோஸ்டாக் 1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று முதல்வீரர்(108 நிமிடங்கள் இருந்தார்) என்ற சாதனை படைத்தார். இதேயாண்டில் மே 5 அன்று, அமெரிக்க வீரர் ஆலன் பி ஷெப்பர்ட் புராஜெக்ட் மெர்குரி திட்டத்தில் விண்வெளிக்கு சென்று 15 நிமிடங்கள் செலவிட்டார். 1963 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று சோவியத் பெண் வீரரான வாலென்டினா விளாதிமிரோவ்னா வோஸ்டாக் 6 விண்கலத்தில் விண்வெளி சென்ற சாதனை படைத்தார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று, சோவியத் வீரர் அலெக்ஸி லியோனோவ் முதன்முதலில் விண்வெளியில் நடந்த பெருமை பெற்றார். 1969 ஆம்ஆண்டு ஜூலை 20 அன்று அப்போலோ 11 விண்கலத்தில் நிலவில் இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் ஜூனியர் அதில் நடந்து சாதித்தனர். 1984 ஆம்ஆண்டு ஏப்.2 அன்று இந்திய விமானப்படையைச் சேர்ந்த ராகேஷ் சர்மா, சோவியத் விண்கலத்தில் ஏறி விண்வெளி தொட்டார்.  

கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு..

படம்
கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு.. "The Naked Roommate," by Harlan Cohen கல்லூரி செல்பவர்கள் வகுப்புகளைத் தாண்டி கல்லூரி வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்,நண்பர்களை அடையாளம் காண்பது, விடுதி அறை தூய்மை துணிதுவைப்பது அனைத்துக்கும் வழிகாட்டும் நூல் இது. “Outliers: The Story of Success," by Malcolm Gladwell 10 ஆயிரம் மணிநேரங்களை செலவிட்டு ஒரு விஷயத்தில் மாஸ்டர் ஆவது எப்படி என சுவாரசியமாக விவரிக்கிறார் கிளாட்வெல். "The Idiot," by Elif Batuman துருக்கி அகதி குடும்பத்தைச் சேர்ந்த செலின் ஹார்வர்ட் பல்கலையில் இணைகிறாள். அங்கு நட்பாகும் இவான், ஸ்வெட்லனா ஆகியோரின் மூலம் தனது வாழ்வை அடையாளம் காண்பதே நாவலின் கதை. "Exit West," by Mohsin Hamid தீராத வன்முறை நிகழும் தேசத்திலிருந்து தப்பி அகதியாக செல்லும் சயீத்-நாடியா எனும் இளம் காதல்ஜோடியின் போராட்டமே கதை. "This is Water," by David Foster Wallace   வாழ்வை தீர்மானிக்கும் கல்லூரிப்பருவத்தில் மதிப்பெண் பின்னால் ஓடாமல் திறமையாக வெல்ல இந்நூலிலுள்ள வாலஸி

ரத்தம் தெறிக்க ஒரு போர்! - ஃபைனல் ஃபேன்டஸி அதகளம்

படம்
Final Fantacy மூன்று அத்தியாயங்கள் வீடியோ வடிவில் பார்த்தேன். முதல் கதை, பூமியில் தாவரங்கள் உள்ளதா என தேடிவரும் பெண், அவளை நேசிக்கும் ராணுவ தளபதி, ஆராய்ச்சிகளை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் ராணுவத்தலைவர், பூமியை கட்டுப்படுத்திவிட்ட நுண்ணுயிரிகளின் கூட்டம் என கதை செல்கிறது.  நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் உதவி கிடைத்தால் மட்டுமே ஆராய்ச்சி செய்யும் நாயகி உயிர்பிழைக்கும் நிலை. ஆனால் அப்படியொரு ஆராய்ச்சி தேவையில்லை என ராணுவத்தலைவர் தடுத்து விண்ணிலிருந்து பூமியை ஏவுகணைகளால் தாக்குகிறார். இதற்கு அவருக்கு கீழேயுள்ள அதிகாரி எப்படி தனக்கு அட்வைஸ் சொல்லலாம் என்ற ஈகோவும் காரணம்.  சயின்டிஸ்ட் நாயகிக்கு காதலனான ராணுவத்தளபதியும் துணைநிற்க பூமியில் உதவி கிடைத்ததா? நாயகி உயிர்பிழைத்தாளா? என்பதே கதை. மெதுவாக நகரும் கதை பெரிய சோதனை. அதையும் மீறி பார்த்தாலும் நுண்ணுயிரிகளின் ஆற்றலுக்கு முன்னால் மனிதர்கள் பரிதாபமாக பலியாகிறார்கள். நாயகியும் மூத்த விஞ்ஞானி மட்டுமே இறுதியில் உயிர்பிழைக்கிறார்கள்.  Kings alive இது தேசத்தை ரத்தம் சிந்தி கைகால்களை உடைத்துக்கொண்டு தேசம் காக்கும்

கைவிடப்படும் தேவாலயங்கள்!

படம்
கைவிடப்படும் தேவாலயங்கள்! அமெரிக்காவில் பல்வேறு நகரங்களிலும் அதிகரிக்கும் வாடகை, பராமரிப்பு செலவு ஆகியவற்றால் தொன்மையான பல்வேறு தேவாலயங்கள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. பத்தொன்பதாவது நூற்றாண்டு கட்டிடமான செயின்ட் வின்சென்ட் டி பால் தேவாலயத்தில் 2000 ஆம் ஆண்டு முதலாக மக்களின் வருகை குறைந்து வந்தது. வேறுவழியின்றி அதனை விற்றனர். இன்று அந்த இடத்தில் அபார்ட்மெண்ட் உயர்ந்து நிற்கிறது. அங்கு தங்க வாடகை 4 ஆயிரம் டாலர்களை வசூலிக்கின்றனர். கடவுளே இனி அங்கு காசு கொடுத்துத்தான் தங்கமுடியும். அமெரிக்காவில் ஆண்டுக்கு 6-10 ஆயிரம் தேவாலயங்கள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 70 சதவிகித கிறிஸ்தவர்கள் இருந்தாலும் சர்ச்சுகளுக்கு நன்கொடை அளிப்பது மெல்ல தேய்ந்து வருகிறது. இவர்களை நோனெஸ் என்று  குறிப்பிடுகிறார்கள். தேவாலயங்கள் கண்முன்னே தூசி படிந்து இடிந்து போவதை தவிர்க்க மக்கள் அதனை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விற்று வருகின்றனர். விலை குறைவாக கேட்டாலும் அதனை காப்பாற்ற வேறுவழியே இல்லை. தெற்கு போஸ்டனிலுள்ள 140 ஆம் ஆண்டு வரலாறு கொண்ட செய

ஐரோப்பிய ராணுவம் சாத்தியமான கனவா?

படம்
ஐரோப்பிய ராணுவம் சாத்தியமா? ராணுவ உதவிகளுக்கு ட்ரம்பின் அமெரிக்காவை சார்ந்திருப்பது பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஆர்மி தேவை என்ற கோரிக்கையை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எழுப்பினாலும் நேட்டோ படைக்கு வேலையென்ன என இங்கிலாந்து இந்த யோசனையை மறுத்து வருகிறது. நகைமுரணாக ஐரோப்பிய ஆர்மி திட்டத்தை 1950 ஆம் ஆண்டு தடுத்ததே பிரான்ஸ் அரசு என்பதை அறிவீர்களா? ஐரோப்பிய ஆர்மி நிறைவேற வாய்ப்பு இப்போது கூடிவருவதற்கு பிரெக்ஸிட்டும், ட்ரம்ப் நேட்டோவிலிருந்து விலக முயற்சிப்பதும் முக்கியமான காரணம். இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதால் அதன் ராணுவ பலம் பெருமளவு குறையும் அபாயம் உள்ளது. பிரான்ஸ்,ஜெர்மனி என இரண்டு நாடுகளும் ஆயுத உற்பத்தி, தளவாடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்று பெரும் சக்தி வாய்ந்தவை கிடையாது. அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பாக இருக்க ரோமானியா, செக், டச்சு ஆகிய ராணுவங்களை இணைத்து ஐரோப்பிய ராணுவம் உருவாவது அவசியம். போருக்கு இல்லையெனினும் தங்களை பாதுகாக்கவாவது ஐரோப்பிய ராணுவம் அவசியம்.

உலகப்போரில் கருப்பின வீரர்களுக்கு நடந்த அநீதி!

படம்
மறக்கப்பட்ட கருப்பின வீரர்கள்! முதலாம் உலகப்போரின் 100 வது ஆண்டு. அமெரிக்க ஜெனரல் ஜான் பெர்ஸிங், 1,500 அமெரிக்க வீரர்களை பிரான்சில் படையில் இணைந்து போரிட்டதாக பெருமைப்படுகிறார். ஆனால் இப்போரில் பங்கேற்ற 3 லட்சத்து ,80 ஆயிரம் ஆப்பிரிக்க- அமெரிக்க வீரர்களின் பங்களிப்பை வெற்றிபெற்ற பின்பு யாரும் பேசவேயில்லை. “அமெரிக்க ராணுவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நிறவேற்றுமை இதற்கு காரணம். கருப்பின வீரர்களின் நினைவுகளை மக்களிடமிருந்து அழிக்கவே ராணுவம் முயற்சித்து வருகிறது” என்கிறார் அமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலையில் ஆப்பிரிக்க-அமெரிக்க வரலாற்று பேராசிரியரான சாட் வில்லியம்ஸ். “உலகம் ஜனநாயகத்திற்கேற்றதாக இருப்பது அவசியம்” என்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் 1917 ஆம் ஆண்டு போர் அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவில் இனவெறுப்புக்குள்ளான கருப்பின வீரர்கள் தம் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையில் ராணுவத்தில் சேர்ந்தனர். ஆனால் முதலில் அவர்களை ராணுவம் பணியில் சேர்க்க மறுத்துவிட்டது. பின்னர் அமெரிக்க அரசின் சட்டம் மூலமாக வீரர்கள் சேர்க்கப்பட்டனர். சமையல் சுகாதாரப் பணிகளை த