இடுகைகள்

குவாய் ஆப் பயங்கரம் - சீனா ஆப்பின் அத்துமீறல்!

படம்
குழந்தைகளை வீழ்த்தும் சீன ஆப்ஸ்! – ச.அன்பரசு பதினைந்து நொடி வீடியோதான். அதிரவைக்கிறது ஆபாச காட்சிகள். வீடியோ காட்சியில் பனிரெண்டு வயது சிறுமி, நீலநிற லெஹங்கா, வெல்வெட் ஜாக்கெட் அணிந்து ஆபாசமான குத்துபாடலுக்கு சிறுவனோடு பாட்டுப்பாடியபடி அந்நியோன்யமாக இழைந்து ஆடுகிறாள். கீழே கமெண்ட்டுகளில் சிறுமி இன்னும் உடையைக் குறைத்து ஆட ஊக்கப்படுத்துகிறது வக்கிரமான இணையவாசிக்கூட்டம்.   இது அமெரிக்காவில் நடக்கவில்லை. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களில் வைரலாக பெருகிவரும் சீன ஆப்ஸ்களில் ஒன்றான குவாய்(Kwai) கைவண்ணம் இது. பதினைந்து நொடிகளில் ஸ்மார்ட்போனில் அரங்கேறும் ஆபாச வீடியோக்கள் இந்தியாவில் சீன ஆப்ஸ் வழியாக கிடுகிடுவென தரவிறக்கமாகி வருகின்றன. வீடியோக்களை ஜொள்ளு வழிய பார்த்துவிட்டு ஆடைக்குறைப்புக்கு ஆஃபர் கேட்டு கமெண்டுகளை எழுதுபவர்களில் ஆண்களே அதிகம்.  சரி எப்படி குழந்தைகள் இதுபோல நடனமாட ஒப்புக்கொள்கிறார்கள்?  ஆப்ஸ்கள் இதுபோல நடனமாட பல்வேறு போட்டிகளை நடத்தி ரூ.30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பரிசுகளை வழங்குகிறார்கள். “வைரலாக பரவும் பதினைந்து நொடி வீடியோக்கள் நூதன கு

பெண்கள் படுகொலை - இங்கிலாந்து கொடூரம்!

படம்
இங்கிலாந்தில் பெண்களைக் கொல்லும் கணவர்கள்! இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் பெண்கள் தங்கள் காதலர்களால் அல்லது கணவர்களால் கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 105 பெண்களுக்கு(76% ) தங்களை கொன்றவர்கள் யாரென்று தெரியும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் வுமன் எய்டு திட்ட இயக்குநர் கரென் இங்கலா. 46% பெண்களின் முன்னாள் காதலர்கள், கணவர்களாலும், 17%  நண்பர்கள், அலுவலக நண்பர்கள், உறவினர்களாலும், 12% ஆண் குடும்ப உறுப்பினர்களாலும், 10% தங்கள் மகன்களாலும் கொல்லப்படுவதை ஆய்வு நிரூபித்துள்ளது. பெரும்பாலான பெண்கள் ஏறத்தாழ 59% பேர் வீட்டிலுள்ள ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்யப்படுகின்றனர். இதில் பாதிக்கும் மேலான க்ரைம்கள் பிரேக் அப் செய்த முன்னாள் காதலர்களால்(ஓராண்டுக்குள்) நிகழ்கிறது. பெண்களின் மீதான வக்கிரம் என்பது அவர்கள் இறந்தபின்னும் அவர்களது உடலை சிதைப்பதில் உள்ளது. இறந்த பெண்களை பார்ப்பவர்களை மிரட்டும்  விதமாக கோரமாக சிதைப்பது 42% இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் கொலையான பெண்ணை கொலையாளமி அதிகபட்சமாக 175 முறை கத்தியால் குத்தியிருந்தார்.  "ஊடகங்களில் வரும் பெண்களின் படுகொலை க

தள்ளாடும் ஒபாமாகேர்! - ட்ரம்ப் அதிரடி

படம்
டெக்சாஸைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஒபாமா கேர் காப்பீட்டு திட்டத்தை சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பளித்து தலைப்புச்செய்தியில் இடம்பிடித்துள்ளார். ரீட் ஓ கானர் அந்த காப்பீட்டுத்திட்டத்தை அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளார். காப்பீட்டுத்திட்டத்தில் இணைய வேண்டும் அல்லது வரி கட்டவேண்டும் என்பது ஒபாமா கேரின் சாராம்ச திட்டம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியரசு கட்சி ஆளுநர்கள், உறுப்பினர்கள் தற்போது அதனை சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி முடக்கியுள்ளனர். பதினேழு மில்லியன் மக்களின் உடல்நலனை உறுதிசெய்த ஒபாமாகேர் திட்டம் இனி கிடையாது. ஏறத்தாழ 2017 ஆம் ஆண்டு குடியரசு கட்சி தலைவர்களே ஆதரித்த சட்டம்தான் இது. ஒபாமா கேர் சட்டமானபோது மக்களிடம் அதற்கிருந்த ஆதரவு இன்று 53 சதவிகிதமாக ஆதரித்துள்ளது. தற்போது இதற்கான விளம்பரம், செயல்பாடு ஆகியவற்றை முடக்குவதற்கான முயற்சிகளை அதிபர் ட்ரம்ப் செனட் சபை உறுப்பினர்கள் மூலம் வெற்றிகரமாக தொடங்கிவிட்டார். "பல்லாயிரம் அமெரிக்க குடும்பங்களை வருத்திய ஒபாமாகேர் அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றம் கூறியது வரவே

புத்தக அறிமுகம்!

படம்
முத்தாரம் லைப்ரரி! The Future of Capitalism: Facing the New Anxieties   Paul Collier 256pp, harper மேற்கத்திய நாடுகளின் கருத்தியலான முதலாளித்துவம் சந்தித்துவரும் பிரச்னைகள், அதிலிருந்து மீள்வதற்கு அக்கருத்தியல் செய்யும் முயற்சி, ட்ரம்ப், பிரெக்ஸிட், வலதுசாரி அரசுகள் ஆகிய காரணங்களை ஆசிரியர் பால் கொலியர் விளக்குகிறார். Turned On: Science, Sex and Robots Kate Devlin   288pp, Bloomsbury sigma அறிவியல் வளர்ச்சியால் அதிகரிக்கும் செக்ஸ் ரோபாட்டுகள் எப்படி சமூகத்தை மாற்றும் எனவும், ரோபாட்டுகளுடனான உறவு குறித்தும் ஆசிரியர் விரிவாக விவரிப்பது அச்சுறுத்துகிறது.

பிரபலங்களின் சிறுவயது வேலை என்ன?

படம்
நியூஸ் ஆளுமைகள்! வால்ட் டிஸ்னி 1911 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி, தன் சகோதரர் ராய் மற்றும் தந்தை எலியாஸூடன் சேர்ந்த கான்சாஸ் டைம்ஸ் பத்திரிகையை 700 பேர்களுக்கு விநியோகித்து வந்தார். அதிகாலையில் 3.30 க்கும் எழுபவர், பள்ளிக்கு செல்வதற்குள் நாளிதழ்களை விநியோகிக்கும் பணியை 15 ஆம் வயது வரை செய்து வந்தார். மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் அட்லாண்டா ஜர்னல் கான்ஸ்டிடியூசன் என்ற பத்திரிக்கையை தன் அப்பாவுக்கு உதவியாக விநியோகித்து வந்தார் மார்ட்டின். கிடைத்த பணம் புத்தகங்களை வாங்க உதவுமே! சில ஆண்டுகளிலேயே பத்திரிகையின் விநியோக மைய உதவியாளரான மார்ட்டின், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாறு குறித்த செய்திக்கு கண்டனம் தெரிவித்து அரசியலில் முதல் அடி எடுத்து வைத்தார். ஆலன் பீன் நாசாவின் அப்போலா 12 திட்டத்தில் விண்வெளி வீரராக சென்று வந்த ஆலன் பீன், சிறுவயதில் ஸ்டார் டெலிகிராம் என்ற பத்திரிகையை விநியோகித்து முன்னேறியவர்தான்.”தினசரி காலையில் எழுந்து இருள் படர்ந்த சாலைகளில் நாளிதழ்களை எடுத்துசெல்வது புதிய அனுபவம்” என்கிறார் ஆலன்பீன்.    

அகராதிகளை எப்படி தயாரிக்கிறார்கள்?

படம்
அகராதி –- பிட்ஸ்! புழக்கத்திலுள்ள ஒரு வார்த்தையை பல்வேறு சான்றுகளை பார்த்து பின்னரே அகராதியில் தயாரிப்புக்குழு சேர்க்கும். லெக்சிகோகிராபர் அதனை மக்கள் எந்த காலத்தில் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறார் என்ற நோக்கில் ஆராய்வர். பின் அகராதியின் முதன்மை ஆசிரியர் குறிப்பிட்ட வார்த்தையை சேர்ப்பதை தீர்மானிப்பார். 16-17 ஆம் நூற்றாண்டுகளில் அகராதிகளில் எளிதான வார்த்தைகளை சலித்துதான் கண்டுபிடிக்கவேண்டும். அந்தளவு புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை அகராதிக்குழு பயன்படுத்தியிருக்கும். மொழியியலாளர் ராபர்ட் காவ்ட்ரே லத்தீன், ஹீப்ரு உள்ளிட்ட மொழிகளிலிருந்து எடுத்த வார்த்தைகளை தொகுத்து A Table Alphabeticall என்ற அகராதியாக 1604 ஆம் ஆண்டு வெளியிட்டார். அமெரிக்க உச்சரிப்புடன் வெப்ஸ்டர் அகராதியை 1828 ஆம் ஆண்டு உருவாக்கிய நோவா வெப்ஸ்டர், இதற்கான சமஸ்கிருதம் உள்ளிட்ட 26 மொழிகளை கற்றார். 1843 ஆம் ஆண்டு வெப்ஸ்டர் இறந்தபின், ஜார்ஜ்- சார்லஸ் மரியம் என்ற சகோதரர்கள் அகராதி பதிப்பிக்கும் உரிமையை வாங்கி மரியம் – வெப்ஸ்டர் அகராதியை உருவாக்கினர். 1884 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வெளியிடப்பட்

குடும்ப வன்முறையை ஆதரிக்கும் ரஷ்ய அரசு!

படம்
நேர்காணல்! "அரசுக்கு சாதாரண தாக்குதல்களுக்கும் குடும்ப வன்முறைக்கும் வேறுபாடு தெரியவில்லை" யூலியா கார்புனோவா, ஆய்வாளர்(மனித உரிமை கண்காணிப்பகம்) தமிழில்: ச.அன்பரசு ரஷ்ய பெண்களுக்கு வீட்டில் இழைக்கப்படும் வன்முறைச்சம்பவங்களுக்கு தண்டனை கிடையாது என்பது உண்மையா? ரஷ்யாவில் குடும்ப வன்முறைகளுக்கென தனிச்சட்டம் கிடையாது. பெண்களை தாக்குபவர்களுக்கு தாக்குதல் சட்டப்பிரிவில் தண்டனை உண்டு. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அரசு இந்த சட்டத்தையும் பலவீனமாக மாற்றியுள்ளது சரியான அணுகுமுறை அல்ல. குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு இனி தீர்வு கிடைப்பது மிக கடினம். அரசு, தாக்குதல்களுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் உள்ள வேறுபாடு புரியாததே இதற்கு காரணம். சட்டத்தின் தண்டனையை சற்று விளக்குங்களேன். குடும்பத்திலுள்ள ஒருவர் பெண்களை தாக்கினால் அவர் ஓராண்டுக்கு கைது செய்யப்படமாட்டார். பார்க்கிங் குற்றத்திற்கு விதிக்கப்படும் வகையில் சிறிய அபராதத்தை கட்டினால் போதும். இது கணவர்களுக்கு உங்கள் மனைவியை தாக்கினாலும் பிரச்னையில்லை என க்ரீ

குட்டி தொழிலதிபர் ஆதித்யன் ராஜேஷ்!

படம்
துபாயில் டெக் கம்பெனி! - பதிமூன்று வயது அதிபர்! கேரளாவைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ், பதிமூன்று வயதில் தொழில்நிறுவனத்தை தொடங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். துபாயில் வசிக்கும் ஆதித்யன், போரடிப்பதற்கான இணைய வடிவமைப்பு, லோகோக்களை செய்யத்தொடங்கி ஆர்வமாகி இன்று மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கியுள்ளார்.  ஐந்து வயதில் கணினியின் கீபேடுகளை தட்டத்தொடங்கி பதிமூன்று வயதில் அப்ளிகேஷனை உருவாக்கி டிரிநெட் சொல்யூஷன்ஸ்  என்ற நிறுவனத்தை தன் பள்ளி நண்பர்களை வேலைக்கு வைத்து நடத்தி வருகிறார் குட்டி தொழிலதிபர் ஆதித்யன் ராஜேஷ்.  "கேரளாவின் திருவில்லாதான் என் சொந்த ஊர். ஐந்து வயதில் துபாய்க்கு இடம்பெயர்ந்தோம். அப்போது அப்பா கணினியில் டைப் செய்வதை கற்றுத்தந்தார். " என டெக் பயணத்தின் நதிமூலம் சொல்லுகிறார் ஆதித்யன்.  பதினெட்டு வயதானால்தான் அதிகாரப்பூர்வ கம்பெனி நிறுவனராக முடியும் என்பதால் கோடிங்கும் கையுமாக கம்பெனியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார் ஆதித்யன். 

எல்விஸ் பிரெஸ்லி சிக்னல்!

படம்
பிட்ஸ்! டான்ஸ் சிக்னல்! ஜெர்மனியிலுள்ள ஃபைட்பெர்க் நகரில் அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் சிக்னேச்சர் நடன ஸ்டைல்களில் போக்குவரத்து சிக்னல்களை அமைத்துள்ளனர். எல்விஸ் பிரெஸ்லி அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றிய 1958-60 காலத்தில் ஜெர்மனி வந்ததை நினைவுகூரும் வகையில் சிக்னல் விளக்குகள் அரசின் அனுமதி அமைக்கப்பட்டுள்ளன.இதற்கான செலவு ரூ.74 ஆயிரத்து 339 ஆகும். ஸ்டண்ட் சாதனை! ஸ்விட்சர்லாந்திலுள்ள எபிகோன் பகுதியிலுள்ள மால் ஒன்றில் ஃப்ரெடி நாக் என்ற சண்டை பயிற்சியாளர் அசாதாரண சாதனை செய்தார். கயிற்றில் நாற்காலியை செட் செய்து பேலன்ஸ் செய்து ஒன்றல்ல இரண்டல்ல எட்டரை மணிநேரம் தாக்குப்பிடித்து மக்களை வாய்பிளக்க வைத்துள்ளார். சாப்பிட்டுக்கொண்டும் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டும் ஃப்ரெடி இச்சாதனையை செய்துள்ளார். வணிக மாலின் முதலாமாண்டு கொண்டாண்டத்திற்காகவே இச்சாதனை. கைகளால் ஸ்கேட்டிங்! ஜெர்மனியின் பாக்ஹோல்ட் பகுதியைச் சேர்ந்த மிர்கோ ஹான்சென் கைகளில் ஸ்கேட்டிங் சக்கரங்களை பொருத்து 164 அடி பயணித்து 8.55 நிமிடங்கள் தாக்குப்பிடித்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். “நான்கு ஆண்டுகள் செய்

தனியார் செயற்கைக்கோள்! - புதிய சந்தை உருவாகிறது.

தனியார் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியர்! அண்மையில் ஸ்பேக்ஸ்எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பிய செயற்கைக்கோளுக்கு சொந்தக்காரர் கிரிஷ்நாயர் என்ற இந்தியர். நான்காண்டுகளுக்கு முன்னர் அனுப்பிய ஹாம்சாட் செயற்கைக்கோளுக்கு மாற்றாக Exseeed Sat1 செயற்கைக்கோளை தற்போது அனுப்பியுள்ளனர். கேரளாவின் நெய்யான்டிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கிரிஷ் நாயர், கடந்தாண்டு அஷார் ஃபரான் என்ற நண்பருடன் இணைந்து எக்ஸீடு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். “இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் நிறுவனம் எங்களுடையது” என பெருமைப்படுகிறார் கிரிஷ்.  தற்போது வணிகரீதியில் பயன்படுத்துவதற்கான விண்கலனை தயாரிக்கும் முயற்சியிலுள்ளார் கிரிஷ் நாயர். மிலிட்டரி அகாடமியில் படித்தவரான கிரிஷ், அப்ளைடு பிஸிக்ஸ் படித்து விபத்தினால் அதனை கைவிட்டார். பதினேழு வயதிலேயே நேவிகேட்டர் மீடியோ இன்டலிஜென்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் கிரிஷ். “வணிகரீதியில் நிறைய நிறுவனங்கள் செயற்கைக்கோள் தயாரிப்பில் இறங்கினால் அறிவியல் தொழில்துறையில் புதிய ஐடியாக்கள் கிடைக்கும்” என்கிறார் கிரிஷ்.

பொதுப்போக்குவரத்து இலவசம்!

படம்
பொதுப்போக்குவரத்து இலவசம்! லக்ஸம்பர்க் நாடு, உலகிலேயே முதல்முறையாக தன் நாட்டிலுள்ள பொதுப்போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. சோஷலிச தொழிலாளர் கட்சி, பசுமைக்கட்சி ஆகியவற்றோடு கூட்டணி அமைத்த ஜனநாயக கட்சி தேர்தலில் வென்றுள்ளது. ஆட்சிக்கு வந்த எக்ஸேவியர் பெட்டல், சூழல் மாசுபாடுகளை குறைக்கவும், போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்கவும் ஆலோசித்து வந்தார். தற்போது அரசின் பேருந்துகள், ட்ராம்கள், ரயில்கள் அனைத்தும் இலவசம் என அதிரடியாக அறிவித்து மக்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். சராசரியாக ஒரு லட்சம்பேர் வசிக்கும் லக்‌ஸம்பர்க் நகருக்கு பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளிலிருந்து தினசரி 2 லட்சம் பேர் பணிக்காக உள்ளே வந்து செல்கின்றனர். இதன்விளைவாக இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஓட்டுநர் 33 மணிநேரங்களை(2016) வீணாக இழக்க நேரிடுகிறது. நகரின் 2 ஆயிரத்து 590 கி.மீ தொலைவுக்குள் தற்போது இரண்டு மணிநேரம் மணிக்க 2 யூரோக்கள் செலவாகிறது. அரசின் உத்தரவு இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே செல்லும். இதோடு போதைப்பொருட்களை பயன்படுத்த சட்டப்ப