இடுகைகள்

தனியாக நிற்கும் அவுட்ஹவுஸ் மர்மம்!

படம்
தனியாக நிற்கும் அவுட்ஹவுஸ்! மிச்சிகனிலுள்ள செடார் ஏரி அருகே, அவுட் ஹவுஸ் ஒன்று உள்ளது. இது எதற்கு கட்டப்பட்டுள்ளது என்றால் பலரும்  பல கதைகளைப் பேசுவார்கள். இதனைக் கட்டியவர் பெயர் வில்லியம் நெல்சன். இவர் தன்னுடைய மனைவி மற்றும் ஏழு மகள்களிடமிருந்து சிறிது தனிமை விரும்பி இதனை அமைத்தார். இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த ஓய்வறையில் கழிவறை வசதிகள் உண்டு. பெரும்பாலும் ஏரியைச் சுற்றிப்பார்க்க வரும் பயணிகளே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். 1875 ஆம் ஆண்டு உருவான இந்த அவுட்ஹவுஸ் சிலமுறை தீ விபத்துகளைச் சந்தித்து மீண்டிருக்கிறது. நன்றி: அட்லஸ் அப்ஸ்குரா

தேர்தல் பத்திரத்தில் ஜெயித்த பாஜக!

படம்
அரசியல் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை ஆதரிக்கின்றன என்றால் அது நிச்சயம் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கும். அப்படி ஒரு திட்டம்தான், தேர்தல் பத்திரம். அரசு வங்கிகளில் இதனைப் பெற்று அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம் என்பதை பாஜக அரசு சட்டமாக்கியது. இதில் குறிப்பிட்ட கணக்கு எண் என்பதைத் தவிர வங்கியிடம் தேர்தல் பத்திரத்தை கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ஏதும் இருக்காது. இதில் பெரும்பாலும் பயன் பெற்றது பாஜகவே.  கடந்த ஆண்டில் யார் கொடுத்தது என்றே கணக்கின்றி 221 கோடி ரூபாய்களை லவட்டியது இக்கட்சி. இதில் காங்கிரஸ் பரிதாபமாக ஐந்து கோடி ரூபாயும் பிற கட்சிகள் மொத்தமாக சேர்த்தே 6 கோடி ரூபாயும் பெற்றன. மொத்தம் விற்ற தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 520 .  இதில் பாஜக பெற்ற நிதி அடிப்படையில் அதன் சதவீதம் 21.5%, காங்கிரஸ் 3.5% என்று உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அமரும்போது இத்தொகை அதிகரிக்க ஆண்டவனை வேண்டுவோம். பாரத வங்கி, இதுவரை விற்ற பத்திரங்களின் மதிப்பு 1,716 கோடி. இதில் பத்து லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான மதிப்பிலான பத்திரங்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. மொத்த மதிப்பில்

இங்கிலாந்தில் சூடு பறக்கும் சூழல் போராட்டம்!

படம்
இங்கிலாந்தில் வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக, மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இதில் முக்கியமானது, அவர்கள் விடுமுறை தினத்தன்று போராடுவதும் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்பதும்தான். ஆனால் அதற்காகவெல்லாம் அரசு சும்மா இருக்குமா? 2025 ஆம் ஆண்டிற்குள் கார்பனைக் குறைக்கும் நிர்பந்தம் இருக்கும் அரசை மேலும் போராட்டம் நடத்தி நெருக்கடியில் தள்ளியதற்காக, சுமார் 570 பேர்களை அரசு கைது செய்துள்ளது. இங்கிலாந்தின் ஹீத்ரு விமானநிலையத்தில் இளைஞர்கள் சூழல் தொடர்பான பாடல்களைப் பாடி போராடியதும் மக்களை உணர்ச்சிகரமாக போராட்டத்திற்கு அழைத்துள்ளது. போராட்டத்தில் அகாடமி அவார்டு வென்ற தாம்சன் என்ற நடிகையும் இணைந்துள்ளது போராட்டக்கார ர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பதிமூன்று முதல் பதினான்கு வரையிலான இளைஞர்கள் நாம்தான் பூமியின் கடைசி தலைமுறையா என்று கேள்வி கேட்டு வைத்த பேனர்கள் மக்களை போராட்டத்திற்கு தொடர்ந்து ஈர்த்து வருகிறது. என்னுடைய எதிர்காலம் பற்றிய பயத்தினால்தான் நான் போராட்டத்திற்கு வந்தேன். அதே பயம்தான் போராடுவதற்கான தைரியத்தையும் தந்தது என்று ராய

புற்றுநோய் தடுப்பதில் இந்தியாவின் இடம் என்ன?

படம்
கொல்லும் புற்றுநோய்! 2018 ஆம் ஆண்டு மட்டும் உலகெங்கும் 9.6 மில்லியன் பேர் புற்றுநோயால் மரணித்துள்ளனர். உலகில் இரண்டாவது பெரிய நோயாக மாறியுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் இழப்பு 1 ட்ரில்லியன் டாலர்கள். 2019 ஆம் ஆண்டு 280 நாடுகள் இதனைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. புற்றுநோய் ஏற்படும் நாடுகளில் டாப் 5 ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து. குறைவாக புற்றுநோய் பாதிப்பு கொண்ட நாடுகள் எகிப்து, ரோமானியா, சவுதி அரேபியா, இந்தோனேஷியா, கென்யா இந்தியாவின் இடம் 19. புற்றுநோயைத் தடுப்பதில் 64 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. இதில் 45 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள நாடுகள் கொள்கை, செயல்பாடு ஆகியவற்றில் மேம்பாடு தேவை என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மோசமானதாக இருந்தாலும் புற்றுநோயைத் தடுப்பதில் 81.3 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. புற்றுநோய் ஆராய்ச்சி, புகையிலையைத் தடுக்கும் கொள்கை ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதன்விளைவாக புகையிலைத் தடுப்பில் மொத்தமுள்ள 28 நாடுகளில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ஆனால் ப

மரணமாஸ் நீதிக்காவலன் - சைக்கஸ்

படம்
3rd-strike.com சைகஸ் மார்ஷல் சைகஸின் முக்கியப் பணி, நகரங்களில், பண்ணைகளில் வாழும் மக்களின் நிம்மதிகளைக் குலைப்பவர்களை அந்த இடத்திலேயே பொலிபோட்டு சட்டத்தை நிறைவேற்றுவதுதான். அப்பணியின்போது,  ஜிம் ஸ்டார்ட் என்ற சிறுவனைச் சந்திக்கிறார். அவர்கள் வாழும் பகுதியை கிளேட்டன் எனும் சைக்கோ ரவுடிக்குழு தாக்கவிருக்கும் செய்தி அறிந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்கிறார். ஆனால் ஜிம்மின் வாலிப அம்மா, அதற்கு மறுக்கு விளைவு பகீரென தினத்தந்தியில் அச்சிட்டு வெளிவருமே அந்த அளவுக்கு வக்கிரமாக இருக்கிறது. ஆம். ஜிம்மின் அம்மாவை அவரது கண்முன்னே பாலியல் வன்புணர்வு செய்து, அடித்து உதைத்து விரட்டுகிறது கிளேட்டன் குழு. இச்செய்தியைச் சொல்ல சைக்கஸைத் தேடி வருகிறான் ஜிம். சட்டம், திட்டம் இரண்டுக்கும் அடங்காத கிளேட்டன் கும்பலை சைக்கள் கழுகுகளுக்கு இரையாக்கினாரா, அப்போராட்டத்தில் அவருக்கு நேர்ந்த இழப்பு என்ன என்பதை ரத்தம் தெறிக்கச் சொல்லி இருக்கிறார்கள். தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் குழுவின் உழைப்பு அசுரத்தனமானது. மொழிபெயர்ப்பு சில இடங்களில் தட்டினாலும் மோசமில்லை. ஓவியங்களுக்கான உழைப்பு

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தோழன் யார்?

படம்
அட்லஸ் அப்ஸ்குரா ஸ்காட்லாந்தின் ஆர்க்னேயில் புதுமையான தொல்பொருள் புதுமை அரங்கேறியுள்ளது. தொல்பொருள் படிமத்திலிருந்து 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த நாயின் முகத்தை புதுப்பித்து வடிவமைத்துள்ளனர். மனிதனோடு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நண்பனாக புழங்கி வரும் அடிமை விலங்கு நாய் மட்டுமே. காலத்திற்கேற்ப மனிதர்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதால் மட்டுமே நாய் தாக்குப்பிடித்து வாழ்கிறது. இதைப்போல மற்றொன்றைக் குறிப்பிடலாம். பறவைகளில் அது காக்கை. ஐரோப்பிய சாம்பல் ஓநாயை ஒத்த உடல் அமைப்பைக் கொண்ட நாய் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் குவீன் கைர்ன்  எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நாயின் மண்டை ஓடு தொடர்பான படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டது. மேற்சொன்ன இடத்திலுள்ள கல்லறையில் நிறைய நாய்களின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன. நன்றி: அட்லஸ் அப்ஸ்குரா

நண்பனுக்காக ஆக்சன் அவதாரம் - டைகர்

படம்
iQlikmovies டைகர் (2015) இயக்கம்: வி ஆனந்த் ஒளிப்பதிவு: சோட்டா கே நாயுடு இசை எஸ்எஸ் தமன் சினிமாவில் நண்பர்கள் எதற்கு தேவைப்படுவார்கள்? காதலுக்குத்தானே. அதைத்தான் இதில் சந்தீப் கிஷன் தமனின் மாஸ் பிஜிஎம்மில் வில்லன்களை குமுறுகஞ்சி காய்ச்சி நமக்கும் பாடம் எடுக்கிறார்.  ராகுல் ரவீந்திரன், கல்லூரியில் படிக்கும்போது அவரின் அமுல் பேபி லுக்குக்கு மயங்கி காதலிக்க டார்ச்சர் செய்கிறார் காலேஜ் சேர்மனின் மகள். யெஸ் சீனியரின் காதல் டார்ச்சர்தான். அதற்காக கற்பனையாக டிவியில் வரும் பாடலின் சிச்சுவேனை இணைத்து கங்கா, வாரணாசி இந்து பல்கலைக்கழகம் என சொல்லி அச்சமயம் தப்பிக்கிறார். காலம் போட்ட கணக்கில் எல்லாமே மாறுகிறது. அவரின் கல்லூரிக்கு போட்டிக்காக வருகிறார் கங்கா என்ற பெண். யாரென்று பார்த்தால் யெஸ சீரத் கபூர்.  காலேஜே ராகுலின் காதலியைச் சேர்த்து வைக்கத் துடிக்க, கங்காவுக்கு தலைகால் புரியாமல் டென்ஷனாகிறது. ஒருவழியாக ஒரு வாரம் சேர்ந்து காதலியாக நடிக்க ஒப்புக்கொள்ள, ஒரே பாடல்  வழியாக விஷ்ணு(ராகுல் ரவீந்திரனின்) காதல் மனசு அவருக்கும் புரிகிறது. அப்புறம் என்ன கட்டிப்பிடி

2030 இல் உலகத்தை மாற்றுவது எது?

படம்
2030 இல் உலகம் என்னவாகும்? என்ன வேண்டுமானாலும் ஆகலாம். காரணம் தொழில்நுட்பம் அனைத்தும் எது உண்மை, பொய் என கணிக்கமுடியாதபடி மாறியிருக்கிறது. அரசின் கண்காணிப்பு, வணிகத்தின் உலகமயமாக்கம். இயற்கை வளங்கள் சுரண்டல், வன்முறை விளையாட்டுகள், இணையம் சார்ந்த நிதிபரிமாற்றம், கணினி பாதுகாப்பு, ஸ்மார்ட்போன் மேம்பாடு என பல்வேறு விஷயங்கள் மாற விருக்கின்றன. நிஜம் எது நிழல் எது? அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிந்தடிக் ஒபாமா வீடியோவை உருவாக்கியுள்ளனர். இதற்கு செலவான நேரம் பதினான்கு மணி நேரம்தான். இன்னொருவர் பேசிய வார்த்தைகளை ஒபாமாவின் உதட்டசையில் பேசிவிட முடியும் என்பதுதான் இவர்கள் நிரூபணம். இதனை ஒபாமாவின் பழைய வீடியோக்களோடு ஒப்பிட்டாலும் உங்களால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது. கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள். https://www.youtube.com/watch?time_continue=86&v=AmUC4m6w1wo சாப்பிடுவதை இனி நீங்கள் தீர்மானிக்க முடியாது உங்களின் டிஎன்ஏ பற்றி தகவல்களை எடுத்து சேமித்து விடுவதால், அதற்கு பொருத்தமான வெஜ், நான்வெஜ், வீகன் உணவுவக

விலங்குகள் தப்பித்து பிழைத்து வாழ முடியுமா?

படம்
பிபிசி அழிவிலிருந்து விலங்குகள் தாமே தப்பித்துக்கொண்டுவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. காரணம், நீங்களே லேஸ் சிப்ஸ் வாங்குகிறீர்கள். அதில் நண்பர்களுக்கு பகிர்ந்தது போக உங்கள் வீட்டு பெட் செல்லம் வாலாட்டி கெஞ்சினால் சிறிது கொடுப்பீர்கள். ஆனால் அதில் மிச்சம் வைத்து தூக்கிப்போடுவது வாய்ப்பில்லை அல்லவா? அதேதான் கான்செப்ட். ஒரு விலங்கு பசிக்காக வேட்டையாடும்போது, அதில் முழுமையாக இறங்கிவிடும். அந்த இனம் அழிவில் இருக்கிறதா என்பது பற்றி இங்கு கவலை அவசியமில்லை. பசி தீர்ந்தால்தான் அந்த விலங்கு உயிர்பிழைக்கும். பரிணாம வளர்ச்சி என்பது அடுத்தநொடி நிகழ்ந்துவிடாது. பல்லாண்டுகள் அதற்குத் தேவை. இதற்கும் கூட நம்மிலும் வலிய விலங்குகள், நோய்கள், இயற்கை இடர்பாடுகளைத் தாங்கி நடந்தால்தான் அது சாத்தியமாகும். குறிப்பிட்ட விலங்குகளை மட்டுமே வேட்டையாடி உண்ணும் விலங்குகள், பறவைகள் இயற்கையில் தாக்குப்பிடித்து வாழ்வது கடினம். நியூசிலாந்தில் ஹாஸ்ட் எனும் கழுகு, மோவா என்று பறக்கமுடியாத பறவையை மட்டும் வேட்டையாடி உண்ணும். அங்கு மனிதர்களின் பெருக்கம் அதிகமானபோது, இறைச்சிக்காக அப்பறவையை வேட்டையாடி

டைனமோக்கள் எலக்ட்ரிக் கார்களுக்கு உதவுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி டைனமோக்களைப் பயன்படுத்தினால் எலக்ட்ரிக் கார்களின் வேகத்தை அதிகரிக்க முடியுமா? இன்றைய கார்களில் கைனடிக் வகை ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான செட்டிங்குகள் உண்டு. பேட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு இந்த அமைப்பு மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கலாம். இப்போது கார்களின் சக்கரங்கள் இயங்கும்போது கிடைக்கும் ஆற்றல் பேட்டரிகளில் சேகரிக்கப்படுகிறது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.100 சிசி வண்டி என்றாலும் முழுத் திறனில் அது ஓடாது. எனவே சிறியளவிலான ஆற்றல் சேகரிப்பு மட்டுமே இப்போது சாத்தியமாகும். நன்றி: பிபிசி

மவுத்வாஷ் பயன்படுத்தலாமா?

படம்
பிபிசி குழந்தைகள் மவுத்வாஷ் பயன்படுத்தலாமா? 6-14 வரையிலான குழந்தைகள் ப்ளூரைடு கலந்த பற்பசை, மவுத் வாஷ் பயன்படுத்தும்போது, பற்கள் சொத்தையாகாமல் காப்பாற்றப்படுவது உண்மைதான். ஆனால் உணவு உண்ட பிறகு மவுத் வாஷ் பயன்படுத்தி பற்களின் நலம் காப்பாற்றப்பட்டதற்கு எந்த வித அறிவியல் ஆதாரங்களும் கிடையாது. எனவே பல் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு குழந்தைகளுக்கு மவுத்வாஷ் பரிந்துரைக்கலாம். நன்றி: பிபிசி