இடுகைகள்

ஆப்பிள் மூலம் சீனா லாபம் ஈட்டுகிறதா?

படம்
ஆம், இல்லை என்று கூற முடியாது. ஆனால் சீனா இதில் ஈட்டும் லாபம் குறைவுதான். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு உள்ள கோபம், அமெரிக்காவிற்கும் சீனாவுக்குமான வர்த்தக இடைவெளிதான். கடந்த ஆண்டில் மட்டும் 420 பில்லியன் டாலர்கள் இடைவெளி உருவாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் இதுகுறித்து, நாங்கள் சீனாவில் காசு குறைவு என்பதற்காக தயாரிக்கவில்லை. அங்கு தயாரிப்பதற்கான திறன்கள் உள்ளது என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இதை ட்ரம்ப் காது கொடுத்து கேட்க வாய்ப்பில்லை. அடிப்படையில் ஒரு முதலாளி உற்பத்திச்செலவு குறைவான இடத்தில்தானே கொடுத்து தன் பொருளை உற்பத்தி செய்வார். அதுதான் அவருக்கு அதிக லாபத்தைக் கொடுக்கும். வியாபாரத்தை சேவையாக யாராவது செய்வார்களா? குறைந்த முதலீடு அதிக லாபம் என்பதுதான் பெரும்பாலான வியாபாரிகளின் வணிக தந்திரம். ஐபோனின்(ஐபோன் எக்ஸ் ) தயாரிப்புச்செலவு ஒரு போனுக்கு 370 டாலர்கள். இந்த செலவு அமெரிக்காவில் செய்தால் சரி என்கிறார் ட்ரம்ப். இங்கு வரி அதிகம் என்பதால் பெரும்பாலும் சீனாவில் தயாரித்து அசெம்பிள் செய்து விற்பனைக்கான விஷயங்களை மட்டும் அமெரிக்க ஸ்டோர்களில், இணையத்தில் செய்

பனிமனிதன் நிஜமா?

படம்
பனிமனிதன் செய்தி நிஜமா? செய்தி: யெட்டி எனும் பனிமனிதன் பற்றி இந்திய ராணுவம் கூறிய செய்தி ஆய்வாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தியை ஆய்வாளர்களே நம்ப முடியாமல் திணறினர். மகாலு ராணுவ கூடாரம் அருகே யெட்டி பனிமனிதனின் பாதச்சுவடுகளைப் பார்த்தோம் என ட்விட் சேதி சொன்னது. மனிதர்களை விட நான்கு மடங்கு பெரிதான பனிமனிதனை இந்திய ராணுவம் கண்டுபிடித்தது என்பதை உலகில் பலரும் நம்பவில்லை. இதற்கான ஆதாரங்களை தொல்லியல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக அரசு செய்தி கூறுகிறது. பனிமனிதன் குறித்த ஆராய்ச்சி செய்துள்ள எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் டேனியல் டெய்லர், "35 அங்குல பாதச்சுவடு என்பது டைனோசர்களுக்கு ஒப்பானது. நான் நேபாளத்திற்கு பனிமனிதர் பற்றி ஆராய்ச்சி செய்யபோனபோது, அங்குள்ளவர் காலடித்தடம் பற்றி மரக்கரடி அல்லது இமாலயத்தின் கருங்கரடி குறித்து தகவல் பகிர்ந்தார். அதற்கான காரணங்களையும் கூறியபோது என்னால் அதனை மறுக்க முடியவில்லை"" என்று கூறுகிறார்.  அரசு அமைப்பு சரியான ஆதாரங்கள், ஆராய்ச்சிகளின்ற

விற்பனைக்கு வழிகாட்டும் ஆராய்ச்சிகள்! - விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள்

படம்
லாபத்திற்கான ஆராய்ச்சிகள்! செய்தி: அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் எனர்ஜி பேலன்ஸ் நெட்வொர்க்(GEBN), கலோரி குறித்து கூறிய கருத்து, ஆராய்ச்சித்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரம், பணபலம் குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளது. விவசாய, கல்வி பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்குப் பல்வேறு தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. இவை தொலைக்காட்சி, நாளிதழ்களில் வெளியாகி,  ஆராய்ச்சிக் கட்டுரைகளிலுள்ள விஷயங்கள் மக்களால் விவாதிக்கப்படுவது வழக்கம். மேற்சொன்ன செய்தியில் ஜிஇபிஎன் தன்னார்வ அமைப்பு, கலோரி குறித்து அறிக்கை வெளியிட்டு கருத்துக் கூறியது.  ஆனால் இந்த அமைப்புக்கு நிதியுதவி செய்வது பிரபல குளிர்பான நிறுவனம் என்பது தற்செயலானது அல்ல. நிதிப்பற்றாக்குறை! இந்தியாவில் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான உதவித்தொகை, ஆய்வகங்கள் ஆகியவற்றுக்கு பெரும் நிதியைச் செலவிடுகின்றன. இதனால் உணவுத்துறை பற்றிய ஆய்வுக்கு ஆராய்ச்சியாளர்கள் தனியார் நிறுவனங்களையே நம்பியுள்ளன. குளிர்பானங்களிலுள்ள அதிகப்படியான சர்க்கரை உடல் பருமனுக்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல்

தனிப்பட்ட திறன்களை நாடும் மாணவர்கள்!

படம்
பள்ளிக்கு வெளியே வானம்! செய்தி: இந்தியாவில் பள்ளிப்படிப்பு தாண்டி மொழிகள், புதுமைத்திறன், இசை, விளையாட்டு உள்ளிட்ட வகுப்புகளுக்கு பெற்றோர் செலவழிக்கும் தொகை அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் பள்ளியில் கற்பிக்கப்படும் கல்வி தாண்டிய பயிற்சிகளை முன்னர் யாரும் யோசித்ததில்லை. ஆனால், இன்று பள்ளிக் கல்விக்குச் செலவிடும் தொகையைவிட அதிகமாக செலவிட்டு ஜிம்னாஸ்டிக், இசை, நடனம், தற்காப்பு கலைகள், எழுத்துப்பயிற்சி ஆகியவற்றைக் கற்கின்றனர். என்ன காரணம்? வேலைவாய்ப்பு சந்தையும் அப்படி மாறி வருகிறது. இசை, தட்டச்சு, கணிதமொழிகள், கால்பந்து, சதுரங்கம், டென்னிஸ் போன்ற பயிற்சிகளுக்குக் குழந்தைகளை அனுப்புவது, அதற்கு செலவிடுவது  வழக்கமானதுதான். ஆனால் இன்று அதற்கென துபாயில் உள்ள அகாடமிக்கு கூட கல்வி கற்க அனுப்புகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். இதற்கான பட்ஜெட் 1.4 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை எகிறுகிறது. "நாங்கள் படிக்கும்போது கல்வி மட்டுமே வேலைக்கு செல்வதற்கான தகுதியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. வேலையில் பல்வேறு திறன்களையும் சோதிக்கிறார்கள்" என்கிறார் ப்யூச்சர்

புத்தகம் புதுசு - ஜூன் 26,2019

படம்
புத்தகம் புதுசு! American Predator: The Hunt for the Most Meticulous Serial Killer of the 21st Century by   Maureen Callahan அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த குற்றங்கள், சீரியல் கொலைகார ர்களின் பேட்டிகள், அவர்களைக் கண்டுபிடித்த போலீஸ்காரர்களின் அனுபவங்கள் என நூல் முழுக்க நிறைத்திருக்கிறார் எழுத்தாளர் மவ்ரீன் காலாஹன்.  Semicolon: The Past, Present, and Future of a Misunderstood Mark by   Cecelia Watson சுருக்கமாக செமிகோலனின் வரலாறு. இதனை எப்படி பயன்படுத்துவது, அதில் ஏற்பட்ட தவறுகள் என அனைத்தையும் நூலில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர் சிசிலியா வாட்சன்.  Stronghold: One Man's Quest to Save the World's Wild Salmon by   Tucker Malarkey   குடோ ரஹர் என்பவர் ந தி நீரிலுள்ள சால்மன் மீன்களைக் காக்க என்னென்ன முயற்சிகளைச் செய்தார் என்பதுதான் நூலின் மையம்.  பசிபிக் கடலின் வடமேற்கு பகுதியில் இயற்கையைக் காக்க குடோ செய்து முயற்சிகளை நேர்மையாக விளக்குகிறது இந்த நூல்.  நன்றி - குட்ரீட்ஸ்

மீன்களுக்கு உணவாகும் கார்பன் டை ஆக்சைடு!

படம்
கரியமிலவாயு இனி விலங்குகளுக்கு உணவு! விவசாயம், உணவுத்துறை மூலம் வெளியாகும் கரியமிலவாயுவை விலங்குகளுக்கு உணவாக்கும் தொழில்நுட்பத்தை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டீப் பிரான்ச் பயோ டெக்னாலஜி(Deep branch Biotechnology) நிறுவனம், கார்பன் டை ஆக்சைடை விலங்குகளுக்கு உணவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.  கார்பன் டை ஆக்சடை வெளியிடும் நிறுவனங்களோடு இணைந்துள்ள இந்த நிறுவனம், சிமெண்ட், மின்சாரம், ஆக்சிஜன், புரதம் ஆகியவற்றைத் தயாரிக்கிறது. இதிலுள்ள புரதச்சத்து மீன்களுக்கும் பிற விலங்குகளுக்கும் உணவிடப் பயன்படுகிறது. முதலில் இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்பான பாக்டீரியா, கார்பன் டை ஆக்சைடை உண்கிறது. இது வெளியிடும் வாயுவைப் பக்குவப்படுத்தினால், புரத உணவு தயாரிக்கப்படுகிறது.  2021 ஆம் ஆண்டு புரத உணவை தொழிற்சாலைகள் நிறுவி பெருமளவு தயாரிக்க டீப் பிரான்ச்  நிறுவனம், முடிவு செய்துள்ளது. கரியமிலவாயுவை பாக்டீரியா மூலம் புரத உணவாக்குவது 1970 ஆம் ஆண்டிலேயே உருவான ஐடியாதான். ஆனால் தற்போதுதான் அதனை வணிகரீதியில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

விபத்திற்கு வெப்பம்தான் காரணம்!

படம்
தமிழ்நாட்டில் கோடைக்காலங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்று ஜாலியாக பலரும் டீ குடித்தபடி பேசியது நிஜமாகி இருக்கிறது. கடந்த ஆண்டின் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 57 ஆயிரத்து 927 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதேசமயம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலங்களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை 5,346 .இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1077. கூறியது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆராய்ச்சித்துறை. பனிக்காலமான டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 2,163 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 390 பேர் இறந்துள்ளனர். இதற்கு போக்குவரத்துத்துறை என்ன சொல்கிறது? கோடைக்காலத்தில் மக்கள் பலரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்கிறார்கள். அதனால் வண்டிகள் சாலைகளில் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றன என்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் இஷ்டப்படி குறுக்குவழிகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல நடைபாதைகளில் பாதசாரிகளை நடக்கவிடாமல் அதில் பைக்குகளை ஓட்டுவது, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவையும் விபத்துகளுக்கு காரணம். மேலும் பலரும் ஹெல்மெட்டுகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதில்லை என அலுத்துக்கொள்கிற

சம ஊதியம் கனவல்ல - நாகலாந்து கிராமம் சாதனை

படம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு பெண் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் வளர்ந்துவரும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தியாவில் அது சாத்தியமாகி உள்ளது. குறிப்பாக, நாகலாந்து கிராமத்தில் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர். அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 30 ஆண்டுகளாக இதனை செய்து வருகின்றனர். நாகலாந்தின் சிசாமி மாவட்டத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. நாங்கள் முதலில் உழைப்பிற்கு ஊதியமாக தானியங்களைப் பெறும் வரையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் உழைப்பிற்கு சம்பளம் அளிக்கப்பட்டபோது, அதில் பெரும் இடைவெளியையும் வேறுபாட்டையும் உணர்ந்தோம் என்கிறார் 74 வயதான விவசாயக்கூலியான காஃப்கோ. சிசாமி மாவட்டத்தில் விவசாய வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள். பெரும்பாலான உதவிகளை நாடாமல் அவர்கள் உழைப்பது ஆச்சரியமாக உள்ளது. அங்கு வாழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. பெண்கள் சங்கம் அமைத்து ஆண்களின் சம்பளம், உழைப்பு ஒன்றாக இருந்தாலும் அதிகமாக இருப்பது குறித்து கேள்விகளை 2007 ஆம் ஆண்டு முதல் எழுப்பி ஊதியத்தை உரிமையாக பெற்றிருக்கிறார்கள். இங்கும் முன்னர் குடும்பத்தலைவராக ஆண்

அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்குமான தொடர்பு!

படம்
- அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்கும் தொடர்பு உண்டா? வெயில், மழைக்காலத்தின்போது பலரும் சந்திக்கும் பிரச்னை உடல் வறட்சி, சளி உள்ளிட்ட பிரச்னைகள், வெயில், வியர்வை, மழையின் ஈரம் ஆகியவற்றின்போது உடலில் நுண்ணுயிரிகளின் பாதிப்பால் படர்தாமரை, எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. அலர்ஜியின்போது உடலுக்குள் வரும் நோய்க்கிருமிகளை நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு எதிர்த்து போரிடுகிறது. அதன்பொருட்டு உடலின் பிற அமைப்புகளுக்கான சக்தி குறைகிறது. அதனால்தான் உடல் அலர்ஜியின்போது சோர்வுறுகிறது. அப்போது நீங்கள் வேறு வித உடல் உழைப்பில் ஈடுபட்டால், உடலில் நோய் எதிர்ப்பு பணிகள் நலிவுறும். நன்றி: லிவ் சயின்ஸ்

கொசு கடிப்பதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

படம்
சிலரை மட்டும் கொசு கடிக்க காரணம் என்ன? நண்பர்களோடு வெளியே செல்லும்போது சில இடங்களில் உங்களை மட்டும் கொசு கடிப்பதாக உணர்வீர்கள். சிலர் அங்கு கொசு இருப்பதையே உணராதவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் பல. அதில் முக்கியமானது நாம் வெளிவிடும் கரியமில வாயு. இதன் அடர்த்தியைப் பொறுத்தே கொசுக்கள் நம்மைக் குறிவைத்து தாக்குகின்றன. அடுத்து, பாக்டீரியாக்கள்( eptotrichia ,  Delftia ,  Actinobacteria Gp3  and  Staphylococcus ) தோல்வழியாக வெளியேறும் வியர்வையில் செய்யும் பல்வேறு வேதிவினைகள். இவை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் மற்றும் உடலின் தோல் வெப்பம் ஆகியவை கொசுக்களை சிலரை நோக்கி அதிகம் ஈர்க்கின்றன. கருப்பு நிறத்தை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன. நிஜமோ பொய்யோ கொசு கடித்தால் எந்த ஆராய்ச்சியும் வேண்டாம். பட்டென ஒரே போடு. சோலி முடிந்தது. நன்றி: லிவ் சயின்ஸ்

அதிகரிக்கும் சுயமருத்துவ சோதனைகள்

படம்
மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்னதாக நோய் பற்றி அறியும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. செகண்ட் ஒப்பீனியனாக நோய் பற்றி அறிவது செலவு குறித்தும், மருந்து குறித்தும் அறிய இது உதவுகிறது. அதேசமயம், உடலுக்கு தகுந்தாற்போல அல்லாது நோய் குறித்த பொதுவான தன்மைகளைப் படிக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை சைபர் காண்டிரியா என்று குறிப்பிடுகின்றனர். 205 ஐடி பணியாளர்களிடம் இது குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் 19.5 சதவீதம் பேர் இணையத்தில் நோய் குறித்து தகவல்களைத் தேடுவதும், 20 சதவீதம் பேர் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதுகுறித்து இணையத்தில் தேடுவதும் தெரிய வந்துள்ளது. 24.4 சதவீதம் பேர் பாடல், படங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் திடீரென  நோய் குறித்து இணையத்தில் தேடியுள்ளனர்.  10.7 பேர் நோய் குறித்து பாதிப்புகள் குறித்தும் படிக்கின்றனர். 17.6 சதவீதம் பேர் இணையத்தில் படித்த நோயின் பாதிப்பு தங்களிடம் உள்ளதாக நினைத்து அஞ்சி நடுங்குகின்றனர். இதில் இணையத்தில் உள்ள பாதிப்புகளால் 9.8 சதவீதம் பேர் கவலைப்பட்டுக்கொண்டே உள்ளனர். இணையத்தில் தான் படிப்பதை மருத்துவரிடம் விவரிக்கும்