இடுகைகள்

மியாவாகி காடுகளை நகரங்களை பசுமையாக்குமா?

படம்
  மியாவாகி காடுகளை பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செய்து பார்த்து வருகிறார்கள். சாதாரண மரங்களை விட 30 மடங்கு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 30 ஆயிரம் விதைகளை ஊன்றி மியாவாக முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடியும்.  சிறிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக நிலப்பரப்பு சார்ந்த தாவரங்களை வளர்ப்பதுதான் மியாவாகி காடுகள் வளர்ப்பு முறை.  இந்த முறையில் இந்தியாவில் 24.3 சதவீதமும், சீனாவில் 23.4 சதவீதமும் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவர், இந்த காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார்.  குறிப்பிட்ட ஏரியாவை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கு விதைகளை ஊன்ற வேண்டுமோ அந்த மண்ணின் தரம், கார்பன் அளவு, மண்ணிலுள்ள பிஹெச் அளவு ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  மனிதர்களின் இடையூறின்றி தாவரங்கள் வளருமா என்று பார்த்துத்தான் மியாவாகி காடுகளை வளர்க்க முடியும்.  பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மியாவாகி காடு வளர்ப்பு முறையை உடனே எடுத்துக்கொண்டு செயல்படுத்தியுள்ளனர்.  சத்தீஸ்கர், குஜராத், கேரளா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களில் இந்த முறையை முயன்றுள்ளனர்

டீன் ஏஜ் இளைஞர்களுக்கான நூல்கள் 2015-2017

படம்
  2015 சிக்ஸ் ஆப் கிரௌஸ்  லெய் பர்டுகோ புனைவுக்கதையில் நாயகர்களுக்கும் எதிர்மறை பாத்திரங்களுக்கும் இடையிலுள்ள குண வேறுபாடுகளை லெய் நூலில் விளக்கியுள்ளார்.  2016 சால்ட் டு தி சீ ரூடா செப்டிஸ் கிழக்கு ப்ருஸ்யாவில் நடைபெறுகிற கதை. கிழக்கு ஜெர்மனிக்கு படகு வழியாக மூன்று பாத்திரங்கள் எப்படி செல்கிறார்கள், இவர்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல்கள்தான் கதை. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பிறகு நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டது.  2016 தி சன் ஈஸ் ஆல்ஸோ எ ஸ்டார் நிக்கோலா யூன் நியூயார்க்கில் நடைபெறும் காதல் கதை. எழுத்தாளர் டேவிட் யூன் மற்றும் நிக்கோலாவின் கணவர் ஆகியோருடனான காதல் சம்பவங்களை இந்த நாவல் தழுவியுள்ளது.  2016 வீ ஆர் தி ஆன்ட்ஸ் சாவுன் டேவிட் ஹட்சின்சன் பள்ளியில் கடுமையாக கேலி செய்யப்படும் ஹென்றி, உலகை காப்பாற்ற முயலும் கதை. உலகை ஹென்றி காப்பாற்றுவானா என்பதுதான் முக்கியமான அம்சம்.  2016 வென் தி மூன் வாஸ் அவர்ஸ்  அன்னா மேரி மெக்லெமோர் இரண்டு இளம் வயதினர் தங்களுக்குள் கொள்ளும் காதல் உறவுதான் கதை. உலகையே மறந்து இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறார்கள். இருவரும் எதிர்கொள்ளும் சவால்கள்தான் முக்கியமான அம்ச

குற்றங்களை ஆவணப்படுத்துபவருக்கும் போலீசாருக்குமான வேறுபாடு!

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துதல் காவல்துறை குழு, சிறந்த குழுவை கொண்டிருக்கவேண்டியது அவசியம். அதாவது, விருப்பு வெறுப்பு ஈகோ இல்லாமல் கொலை நடந்த இடத்தில் உள்ள விஷயங்களை காரண காரியத்தோடு ஆராயும் தன்மை  தேவை. அப்போதுதான் அவர்கள் குற்றங்களை ஆவணப்படுத்துவர் சொல்லும் தகவல்களை சரியாக உள்வாங்கி வேலை செய்யவேண்டும்.  குற்றங்களை ஆவணப்படுத்துபவர் பல்வேறு தகவல்களை சேகரிப்பார். அவற்றில் காவல்துறைக்கு எது பயன்படுமோ அதை மட்டுமே அவர்களுக்கு கோப்பாக எழுதி கொடுப்பார். அதை வைத்து உடனே குற்றவாளியை  பிடித்து வந்துவிட முடியாது. காவல்குழு துடிப்பான ஆட்களை கொண்டிருந்தால் குற்றவாளியை செவுளிலேயே போட்டு இழுத்து வந்துவிட முடியும். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், கொலை, கொலைக்கான காரண காரியங்கள் ஆகியவற்றை வைத்து விசாரணைக்கு உதவும்படியான விஷயங்களை தொகுத்து வைத்திருப்பவர் என்று கூறலாம்.அவர் சொன்ன தகவல்களை வைத்துக்கொண்டே உடனே குற்றவாளியின் வீடு தேடி போலீஸ் பேட்ரோல் காரை அனுப்பி வைக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  குற்ற ஆவணப்படுத்தல் வல்லுநருக்கும் காவல்துறையினருக்குமான வேறுபாடு இன்ஸ்பெக்டர், குற்றங்களை ஆவணப்

கொலையாளியின் இடத்தை கண்டுபிடிக்கும் நுட்பம்!

படம்
  ஒரு கொலையை சீரியல் கொலைகாரர் செய்துள்ளார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்..... மூளையைக் கொஞ்சம் யூஸ் பண்ணுங்க என ஹெக்கிமோக்ளு டிவி தொடரில் டாக்டர் அட்டீஸ் அடிக்கடி சொல்லுவார். அதே பஞ்ச்தான்.கொலை செய்யப்பட்டவர், கொலையான விதம், அதில் கிடைக்கும் தகவல்கள் என ஆராய்ந்து பார்த்துத்தான் முடிவுக்கு வரவேண்டும்.  இதனை சரியாக உணராமல் ஒருவர் முடிவெடுத்தால், கொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். போலீசாரும் வலையை வீசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். குற்றவாளியை பிடிப்பது கடினம்.  கொலைசெய்யப்பட்டவர் கூடுதல் போனஸாக வல்லுறவு செய்யப்பட்டிருந்தால் அதனை சீரியல் கொலைகார ர் செய்துள்ளார் என தீர்மானிக்கலாம். அல்லது கொல்லப்பட்டவரின் உடலில் ஏதாவது குறிப்பிட்ட அடையாளத்தை விட்டுச்செல்லலாம். குறிப்பிட்ட காவல்நிலைய  எல்லை தாண்டிக் கூட இதுபோல கொலை சம்பவங்கள் நடந்திருக்கலாம். எனவே, வேறு காவல் நிலையங்களில் நடந்துள்ள கொலை சம்பவங்களின் வரலாற்றையும் ஆராய வேண்டும். இதெல்லாம் சந்தேகத்தில்தான் செய்யவேண்டும். அடுத்த கொலை நடக்கும் வரை காத்திருந்தால் எளிதாக குற்றவாளியை பிடித்து விடலாம்.  கொலையாளியின் வசிப்ப

அலர்ஜிக்கான மருந்துகளும், இயற்கை மருத்துவ முறையும்!

படம்
  மாஸ்ட் செல் ஸ்டேபிலைசர்ஸ்  உடலில் வீக்கத்தை குறைத்து ஹிஸ்டாமைனின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். மூக்கில் அதிக சளி உருவாவதை தடுக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது. குரோமோலின், நெடோகுரோமில், லோடோஸாமினா ஆகியவை இந்த வகையைச் சேர்ந்த மருந்துகளாகும். இவற்றை மூக்கில் இன்ஹேலர் வழியாக உறிஞ்சலாம். அல்லது கண்ணில் மருந்தாக பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை இரண்டு வாரம் பயன்படுத்தினால் போதும். பயன்களை பார்க்க முடியும். தூக்கம், அரிப்பு, கண்களில் கண்ணீர் அதிகம் வருவது, எரிச்சல் ஆகியவை இந்த மருந்தை பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளாகும்.  ஆன்டிலியோகோட்ரைன்ஸ் இந்த மருந்து மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. இந்த மருந்து ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களின் நுரையீரலில் உள்ள நீர்மத்தை குறைக்கிறது. இவை மூக்கில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.  புரோன்சோடிலேட்டர்ஸ் ஒருவருக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவுகிற மருந்து இது. இதனை காப்பாற்றும் மருந்து என்று அழைக்கின்றனர். அறிகுறி தெரிந்தவுடனே

இளம் வயதினருக்கான சிறந்த நூல்கள் - 2018- 2021

படம்
  2018 சில்ட்ரன் ஆப் பிளட் அண்ட் போன் டாமி அடியெமி மேற்கு ஆப்பிரிக்க புனைவை அடிப்படையாக கொண்ட நூல். ஸெலி அடிபோலா என்ற இளம் வயது பாத்திரம்தான் நாயகன். தனது நாட்டிலுள்ள அழிந்துபோன மாயமந்திர சமாச்சாரங்களை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.  2018  டாரியஸ் தி கிரேட் ஈஸ் நாட் ஓகே அடிப் கொர்ரம் இரானுக்கு செல்லும் டாரியஸ் கெல்னர், தனது பயணத்தின் வழியே வாழ்க்கையை உணர்வதுதான் கதை. பதற்றம், தனிமைப்படுத்தல், இனக்குழு உணர்வு, அடையாளம் என பல்வேறு உணர்ச்சிகள் நாவலில் உள்ளன.  2019 ஃபிராங்லி இன் லவ் கொரிய அமெரிக்க மாணவன் ஃபிராங்க் லீ, பள்ளியில் படித்து வருகிறான். அங்கு அவன் வெள்ளை இனப் பெண்ணை காதலிக்கிறான். அவனது பெற்றோர் அவன் கொரியப் பெண்ணை காதலித்து மணக்கவேண்டுமென விரும்புகின்றனர். ஃபிராங்க் இரண்டு கலாசாரங்களுக்கு இடையில் அல்லாடி வாழ்க்கையை தேடி உணர்வதுதான் கதை.  லாரா டீன் கீப் பிரேக்கிங் அப் வித் மீ மாரிகோ டமாகி  ரோஸ்மேரி வலேரோ ஒ கானல் பள்ளியில் மிக அழகான பெண் லாரான் டீன்தான். அவள் ஃபிரெடி என்பவனின் பெண் தோழியாகிறாள். அந்த நாள் ஃபிரெடிக்கு முக்கியமானது. ஆனால் லாரா டீனின் மோசமான குணம் அதற்குப் பிறகுதா

ஒலிம்பிக்கில் சாதித்த மாற்றுப்பாலினத்தவர்கள்!

படம்
  ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மொத்தம் 183 மாற்றுப்பாலினத்தவர்கள் போட்டியிட்டனர். இது உண்மையில் முக்கியமான சாதனை. முப்பது நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களில் இதில் பங்கேற்றனர்.  சூ பேர்ட் - டயானா டாரசி பேஸ்கட் பால் விளையாட்டு வீரர்கள். அமெரிக்க அணியைச் சேர்ந்த இருவரும் ஐந்தாவது தங்கத்தை ஒலிம்பிக் போட்டியில் வென்றனர். இவர்களின் வெற்றியோடு அணியின் வெற்றியும் 55ஆக கூடியது. இந்த அணி கடைசியாக தோற்றது 1992ஆம் ஆண்டு .  நெஸ்தி பெடாசியோ குத்துச்சண்டை வீரர். வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டுக்காக பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் தோற்றபிறகு பத்திரிகையாளர்களிடம் இது மாற்றுப்பாலினத்தவர்களுக்கான போட்டியும் கூடத்தான் என்று சொன்னார். லட்சியம் தப்பாது நெஸ்தி.  டாம் டாலே  இங்கிலாந்தைச் சேர்ந்த நீச்சல் வீரர். தன்னை வெளிப்படையாக தன்பாலினத்தவர் என்று அறிவித்துக்கொண்ட துணிச்சல்கார ர். பத்து மீட்டர் டைவிங் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். போட்டிகளுக்கு இடையிலேயே தனது பதக்கத்தை வைத்து நாட்டிற்கு கொண்டு செல்வதற்கான பவுச

மோ(ச)டிகளின் தலைநகரம் டெல்லி!

படம்
  மோசடிகளின் தலைநகரம் டெல்லி! 2020ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பத்தொன்பது நகரங்களில் பணமோசடிகள் எங்கு அதிகம் நடைபெறுகிறது என ஆய்வு செய்யப்பட்டது. இதில் தேசிய குற்ற ஆவணகத்தின்  தகவல்படி டெல்லி முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் என்ற தலைப்பில் இந்த அறிக்கை கடந்த வாரம் வெளியானது.  பொருளாதார மோசடி சார்ந்து டெல்லியில் மட்டும் 4,445 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கடுத்த இடத்தில் மும்பை 3,927 குற்றங்களுடன் உள்ளது. ஜெய்ப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்து 3,127 குற்றங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் குற்றங்களின் அளவு என்பது ஜெய்ப்பூரில் 10.4 சதவீதமாக உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் 2.72, 2.13 சதவீதமாக உள்ளது. பாட்னா, லக்னோ, ஹைதராபாத் ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.  மொத்த வழக்குகளில் 44.5 சதவீத த்திற்கு டெல்லி காவல்துறையினர் சார்ஜ்ஷீட் பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக டெல்லியின் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதன் காரணமாக பொருளாதார குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  நொய்டா, காச

குற்றவாளியைப் பற்றிய தகவல்களை சேகரிப்பது எப்படி?

படம்
  நீதி கிடைக்குமா? தனிப்பட்டவருக்கு, சமூகத்திற்கு என நீதி கிடைக்க கொலை வழக்குகளில் தாமதமாகும். குறிப்பிட்ட வழக்குக்கு என சில மாதங்களை ஒதுக்கி வேலை செய்வார்கள். மற்றபடி ஏராளமான வழக்குகள், குற்றங்கள் நகரத்தில் நடக்கும்போது குறிப்பிட்ட வழக்கில் மட்டும் கவனம் செலுத்துவது என்பது கடினம். பா.ரா சொல்வது போல பல்வேறு வழக்குகளைக் கூட இன்ஸ்பெக்டர் கையாள முடியும். அந்த நேரத்தில் அந்த வழக்கு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினம். சாட்சிகள் பிறழ்வு , சாட்சிகளே இல்லாமல் இருப்பது, ஆதாரங்களில் அழிவது, பல்வேறு வழக்குகளை இணைத்து பார்க்காமல் வழக்குகளை பதிவது என நிறைய பிரச்னைகள் உள்ளன. குற்றவாளியைப் பற்றிய தடயங்கள் 1940-1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நியூயார்க் நகரத்தில் வெடிகுண்டு பீதி நிலவியது. அங்கு தி மேட் பாமர் என்ற மர்ம நபர், மரப்பெட்டியில் குண்டுகளை நிரப்பி கூடவே குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தார். காவல்துறை வேகமாக செயல்பட்டு குண்டுகளை வெடிப்பதற்கு முன்பே கையகப்படுத்தியது. குறிப்பில் கான் எடிசன் க்ரூக்ஸ் இது உனக்காகவே என்று எழுதியிருந்தது. இதில் ஒரு

கொலைகாரர்களை பின்தொடரும் உளவியல் சக்தி! -ரீலா? ரியலா?

படம்
  சாட்சிகளின் பிழை சீரியல் கொலைகாரர்களைப் பொறுத்தவரை சாட்சிகள் அதிகளவு பயன்பாடு கொண்டவர்கள் கிடையாது. யாராவது இதுபோன்ற லாரியைப் பார்த்தீர்களா என போலீசார் கொலைகார ர் ஒட்டி வந்த வண்டியைப் பற்றி கேட்பார்கள். அதற்கு நூறுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தாலும் அத்தனையும் ஒன்றுபோல பார்த்தேன் சார். ரிவார்டு எப்போ கொடுப்பீங்க என்றுதான் இருக்கும். எப்படி ஒரே நேரத்தில் இத்தனை பேர் லாரியைப் பார்த்திருப்பார்கள் என்ற லாஜிக் கேள்வியைக் கேட்டால் அனைத்து விஷயங்களும் அடிபட்டு போய்விடும்.  மேலும் கொலைகாரர்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க சொன்னால், இதுபோல இப்படித்தான் இருந்திருக்கும் என குத்துமதிப்பான விஷயங்களை சொல்லுவார்கள். இதை வைத்து என்ன செய்வது? தந்தியில் செய்தியாளர்களை விட்டு குறிப்புகளை கொடுத்து கட்டுரை எழுத வைக்கலாம். அவ்வளவுதான்.  உளவியல் சக்தி தம்மண்ண செட்டியார் எழுதிய புத்தகத்தை கண்கள் சிவக்க படித்தவர் வேண்டுமானால் கீழ் வரும் விஷயத்தை நம்பலாம். வேறு யாரும் நம்ப மாட்டார்கள். உளவியல் சக்தி கொண்டவர்களை காவல்துறை சில சமயங்களில் பயன்படுத்துகிறது. இவர்கள் கொலை நடந்த இடத்தைப் பார்த்து அமிதா பா  என மந்திர