இடுகைகள்

தொழிலை தொடங்கி நடத்த நெஞ்சம் முழுக்க துணிச்சல் கொண்டவர்! - கடிதங்கள்

படம்
தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்று காலை 5.45க்கு தாம்பரம் பஸ் பிடித்தேன். கணியம் சீனிவாசன் சார் வீட்டுக்கு போவதுதான் திட்டம். சானடோரியம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிவிட்டு பஸ் டிப்போவில் ஒருமணிநேரம் உட்கார்ந்திருந்தேன். அங்கு தினசரி பேப்பர்களை வாங்கிப்படித்தேன். பிறகு, எழுந்து சாலையைக் கடந்து எதிரே தெரிந்த உணவகத்திற்கு சென்று நான்கு இட்லிகளை சாப்பிட்டேன். பிறகு, அருகில் இருந்த காய்கறிக்கடைக்கு சென்று பழங்களை வாங்கினேன்.  பிறகுதான் சீனிவாசன் சாரை அழைத்தேன். பைக்கில் வந்து வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் முதலில் அவர்கள் வீட்டுக்குப் போனபோது வியன் என்ற பையன் இருந்தான். இப்போது கைக்குழந்தையோடு இயல் என்ற சிறுமியும் இருந்தாள். அந்தளவு இடைவெளி ஆகிவிட்டது. நிறைய நேரம் பேசிவிட்டு, வீட்டில் சாப்பிட்டுவிட்டு சில புத்தகங்களை படிக்க வாங்கி வந்தேன்.  ரிச்சர்ட் பிரான்சன் - என் சொக்கன் எழுதிய நூலை அவரது வீட்டிலேயே படித்துவிட்டேன். 174 பக்கம்தான். தொழில் அதிபர்களைப் பற்றி படிப்பது எப்போதும் எனக்கு பிடித்தமானது.ரிச்சர்டின் வாழ்க்கையில் அவரது

மாரடைப்பில் இறந்துபோன பேசாத தாய்மாமன்! - கடிதங்கள்

படம்
நூலகத்திற்கு நூல்களை வழங்குதல் அன்பு நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? அண்மையில் எனது தாய்மாமன்களில் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். பெரிய காரியம் காரணமாக அலைந்துகொண்டிருக்கிறேன். இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டோடு பேச்சுவார்த்தையே இல்லாதவர், கந்தசாமி மாமா.  கடந்த மூன்று ஆண்டுகளாக அம்மாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். இதெல்லாம் அவரது இறந்து கிடந்த உடலைப் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. அம்மா கண் ஜாடை காட்ட, அவரது உடலை தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். விரைவில் ஆபீஸ் செல்லவேண்டும். வரச்சொல்லி அழைப்பு வந்துவிட்டது. கொரோனா காரணமாக சம்பளத்தையும் குறைத்துவிட்டார்கள். இருக்கும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள சம்பள வெட்டையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.   வீட்டிலிருந்து வேலைபார்க்கும் போது தஞ்சை ப்ரகாஷ், தி.ஜானகிராமன், வர்க்கீஸ் குரியன் ஆகியோரின் நூல்களைப் படித்தேன். அதுவே மகிழ்ச்சி. திருவண்ணாமலையில் கிடைத்த நம்மாழ்வார் நூல்கள், எனது படிப்பிற்காக வாங்கிய அனிமேஷன் நூல்களை வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு கொடுத்துவிட்டேன். நிறைய நூல்களை வைத்துக

பெயரை மாற்றிக்கொள்ள தயாராகும் பேஸ்புக்!- என்ன காரணம்?

படம்
  பெயரில்  என்ன இருக்கிறது? பொதுவாக அனைவரும் இப்படி சொல்லுவார்கள். ஆனால் பிராண்ட் பெயர்களைப் பொறுத்தவரை கவனமாக தேர்வு செய்யவேண்டும். இல்லையெனில் பெயர் மக்களின் மனதில் பதியாது. வணிகமே குப்புற விழுந்துவிடும்.  ஸோமாடோ இன்று இந்திதான் தேசிய மொழி என லொள்ளு பேசும் உணவு சேவை நிறுவனம். அதன் இயக்குநர் தமிழர்களுக்கு சமூக வலைத்தளம் வழியாக சகிப்புத்தன்மை பற்றி பாடம் நடத்தியதையும் நாம் பார்த்தோம். ஸோமாடோ, 2010இல் உருவானபோது அதன்பெயர் ஃபுடிபே என பெயர் வைக்கப்பட்டது. பிறகு இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் பெயரை ஸோமாடோ என்ற பெயரை மாற்றி பிராண்டிங் செய்தனர். இப்போது வெற்றிகரமாக மக்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி பாடம் எடுக்குமளவு நிறுவனம் வளர்ந்திருக்கிறது.  நெட்பிளிக்ஸ் இன்று உலகமெங்கும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனம். இதன் வேகத்திற்கு அமேசான், டிஸ்னி கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பாரம்பரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு நெட்பிளிக்ஸ் திரைப்பட விருதுகளையும் பெற்று வருகிறது. இதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிப்பி. துணை நிறுவனர் மார்க் ராண்டோல்ப் வேறு பொருத்தமான பெயர் கிடைக்கும் வரை இந்தப்

புறக்கணிக்கும் கலாசாரம்! - நமது முதுகெலும்பு உறுதியாக நேராக இருக்கிறதா?

படம்
  புறக்கணிப்பு கலாசாரம் ட்விட்டரில் பெரும்பாலான போராட்டங்கள் புறக்கணிப்போம் என்றே தொடங்கி வருகின்றன. இவற்றை பெரும்பாலும் தேசபக்தி கூட்டம்தான் முன்னெடுக்கிறது. இவற்றில் பெரிய புத்திசாலித்தனம் ஏதும் இருக்காது. கிறுக்குத்தனமாக ஒன்றை புரிந்துகொண்டு உடனே புறக்கணிப்போம், கொடி பிடிப்போம் என ஹேஷ்டேக்கை கட்டைவிரலால் அழுத்திக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட போராட்டங்களை அசலான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப ஆளும் ஒன்றிய அரசின் ஐடி விங் ஆட்கள் செய்கிறார்கள். அல்லது அப்படி செய்பவர்களுக்கு காசு கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள்.  இந்தியர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும் உறுப்பு, காது. அதில் கேட்கும் செய்திகளை மோசமாக பிறருக்கு சொல்ல பயன்படும் உறுப்பு வாய் என்று கூறுவார்கள். அந்த வகையில் போலிச்செய்திகளுக்கும் வெறுப்பை உண்டாக்கவும் ட்விட்டர் முக்கியமான கருவியாகிவிட்டது.  ஃபேப் இந்தியாவின் விளம்பரம் முன்னர் டாடாவின் தனிஷ்க் நிறுவனத்தின் மதமாற்றுத்திருமணத்தைப் பேசிய ஏகத்துவம் என்ற விளம்பரத்திற்கு மனது புண்பட்டுவிட்டது என ஓலங்களை எழுப்பினார்கள். விளம்பரத்திற்காக இந்த கூச்சலா என பதறிப்போன த

மரபணுமாற்ற அரிசியால் மாட்டிக்கொண்ட இந்திய அரசு!

படம்
  மரபணுமாற்ற பயிர் அண்மையில் பிரான்சில் அரிசிமாவு வணிகர், இந்தியாவிலுருந்து நொய்யரிசி 500 டன்களை வாங்கியிருக்கிறார். அதில் மரபணுமாற்ற சமாச்சாரங்கள் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அந்த அரிசியை ஏற்றுமதி செய்தவர், மகாராஷ்டிராவை சேர்ந்த வணிகர் ஒருவர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற பொருட்களை விற்பதற்கு பயன்படுத்த தடை உள்ளது. எனவே, இந்திய வணிகர் மரபணு மாற்ற பொருட்கள் இல்லை என்று சொல்லி அதற்கான சான்றிதழை வாங்கி இணைத்துத்தான் அனுப்பியிருக்கிறார். அப்படியிருந்தும் சோதனையில் மரபணுமாற்ற பொருட்கள் சிக்கியிருக்கின்றன.  அரிசியை அரைத்து மாவாக்கி அதனை மிட்டாய், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பேக்கரி உணவுகளை தயராக்கின்றனர்.  இந்தியா அரிசி விற்பனையில் முன்னிலை வகிக்கும் நாடு. கடந்த ஆண்டு 18 டன்களுக்கு தானியங்களை விற்று 65 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது. இதில் வருமானம் பெற்றுத்தந்தது பாஸ்மதி அரிசிதான். இந்த அரிசியை மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்கள் நேபாளம், வங்கதேசம், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்கின்ற

காவரி ஆற்று வெள்ளம் போல அலைபுரளும் காமம்! கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வேலை இப்போது முழுக்க இணையம் சார்ந்து மாறிவிட்டது. சமாளித்து செய்து வருகிறேன். கரமுண்டார் வூடு நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன். கள்ளர்களுக்கும் பள்ளர்களுக்குமான பல்லாண்டு கால உறவை நாவல் பேசுகிறது. கள்ளர்களின் ஆவேசமும், கட்டற்ற காம உறவுகளும் பள்ளர்களுக்குள் உருவாக்கும் மோதல், பிரிவினை பற்றியதே நாவல். இதனை பேச்சு மொழியில் எழுதியுள்ளார் தஞ்சை ப்ரகாஷ்.  தஞ்சையில் வாழும் கள்ளர், பள்ளர் மக்களை இயக்குவதும், செயலின்மையை ஏற்படுத்துவதுமாக காமமே உள்ளது. காவிரி ஆற்றில் கட்டப்பட்ட பழமையான கரமுண்டார் வூடு அங்கு வரும் வெள்ள நீரின் தன்மைக்கு ஏற்ப தன்னை சமாளித்துக்கொண்டதா இல்லையா என்பது கூட குறியீடுதான். அடுத்து அங்கு அந்த வீட்டை தலைமை ஏற்க வரும் ஒருவனுக்காக பல்வேறு வகையிலும் காத்திருப்பது கதையை வாசிக்க வைக்கும் இடம். வயதான காலத்திலும் கரமுண்டார் ஆண் வாரிசுக்காக மனைவியின் பின்னாடியே சுற்றுவதும், உமா, உடலின் பொறுமலை சகிக்க முடியாமல் கலியனைத் தேடிப்போவதும், காத்தாயம்மா பத்தாயக்கட்டுக்குள் தன்னை இருத்தியப

கள்ளம் இல்லாத மனத்துடன் கலையை வளர்க்க முயல்பவனின் கதை! - கடிதங்கள்

படம்
  கள்ளம் -எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்பு நண்பர் முருகுவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஆர்ச்சீவ்.ஆர்க் என்ற தளத்தில் பள்ளத்தாக்கு என்ற சிறுகதையைப் படித்தேன். மைதிலி என்ற பெண்ணின் சுதந்திர வாழ்கையைப் பேசுகிற கதை. தஞ்சை ப்ரகாஷின் மொழியில் பெண்கள் தைரியமாகவும், தனித்துவமாகவும் எழுந்து நிற்கிறார்கள். முக்கியமான அம்சம், மைதிலியைப் பெண் பார்க்க வரும் ஆண்கள் பற்றியது.  வர்க்கீஸ் குரியன் எழுதிய  எனக்கும் ஒரு கனவு  நூலை இரண்டாம் முறையாக படித்தேன். குரியன் போன்றவர்களின் அர்ப்பணிப்பு மீதான ஈர்ப்பு எனக்கு குறையவே இல்லை. திரிபுவன்தாஸ் படேலின் பேச்சைக் கேட்டு பணிபுரிய ஒப்புக்கொண்ட வர்க்கீஸின் முடிவு முக்கியமானது. விவசாயிகளை வலுவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் அமுலுக்கு முக்கியமான பங்குண்டு.  1950 முதல் 1988ஆம் ஆண்டுவரை மேலாளர் பதவியில் ரூ.5 ஆயிரத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு வேலை செய்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அரசியல்வாதிகளில் சுயநலமாக செயல்பட்ட ஜெகஜீவன்ராம் போன்றோரை நேரடியாகவே விமர்சித்து எழுதியிருக்கிற துணிச்சல் பாராட்டத்தக்கது. குரோடி, ஜெகஜீவன்ராம், நேரு, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகியோ

இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் சைக்கோ டைரி நூலை வாசிக்கலாம்! - இணைய முகவரி இதோ!

படம்
  சைக்கோ டைரி இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் சைக்கோ டைரி நூலை வாசிக்க முடியும். விருப்பமிருந்தால் தரவிறக்கலாம். இல்லையெனில் நூல் போலவே அப்படியே வாசிக்கலாம்.  நன்றி இணைய முகவரி https://ia902307.us.archive.org/3/items/the-heist/psycho%20diary.pdf

திரைப்படங்களில் உணர்ச்சிகளை உருவாக்குவது கடினமானதுதான்! - சத்யஜித்ரே நூற்றாண்டு - நேர்காணல்

படம்
  சத்யஜித்ரே நூற்றாண்டு 2021 சத்யஜித்ரே வங்காளத்தைச் சேர்ந்த முக்கியமான திரைப்பட இயக்குநர். அவரின் நூற்றாண்டை முன்னிட்டு ஆங்கில மாத இதழான பிரன்ட்லைன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணல் இது.  செஸ் பிளேயர்ஸ் படத்தில் நவாப்புகளைப் பற்றி பேசியிருப்பீர்கள். குழந்தையாக இருக்கும்போது நீங்கள் லக்னோவிலிருந்து கல்கத்தா வந்தவர். எப்படி இதனை சித்திரித்தீர்கள்? நல்லது. அங்கு நவாப்புகள் யாருமில்லை. அங்கு எனது மாமா மட்டுமே இருந்தார். அதுல்பிரசாத் சென் எனும் அவர்தான் வங்காள பாடல்களுக்கு இசையமைத்து வந்த பிரபலமான ஆள். நாங்கள் அவரின் வீட்டுக்கு அருகில் வசித்ததால், பாடல்களை உருவாக்கப்படுவதையும் உருதை நல்ல முறையில் உச்சரிப்பதையும் அறிந்திருந்தேன். லக்னோவில் உள்ள பாரம்பரிய முறையும் எனக்கு தெரிந்த ஒன்றுதான். நான் லக்னோவிற்கு நடிகை அக்தாரி பாயை பார்க்கப் போனேன். ஜல்சாகர் என்ற படத்தில் அவரை நடிக்க வைக்க கேட்கலாம் என்று யோசனை இருந்தது. அங்கு அவருடைய கணவர் வழக்குரைஞராக இருந்தார். அவரின் உடல்மொழியைப் பார்த்தேன்.எனவே அவரை நவாபாக நடிக்க வைத்தேன்.  எனவே நான் சிறுவனாக இருந்தபோத

இறுதியாத்திரை அனுபவத்தில் அப்பாவின் நினைவுகள்! - கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்றுதான் இங்கு வெயில் லேசாக அடிக்கிறது. விரைவில் சென்னை ஆபீசுக்கு வேலைக்கு வரச்சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.  அறையில் தங்கவில்லை என்றாலும் வாடகையை மாதம்தோறும் கொடுத்து வருகிறேன். அறையைத் தக்க வைக்க வேறு வழியில்லை. எம்.டி. வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலைப் படித்தேன். 130 பக்கம் கொண்ட நாவல் இது. புற்றுநோயால் இறந்துபோன அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு வரும் நான்கு மகன்களைப் பற்றிய கதை. நான்கு மகன்களின் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு, அப்படி எப்படி இருந்தார் என்பதை விவரிக்கிறார் ஆசிரியர்.  கேரளம், இலங்கை என பயணிக்கும் கதையில் அனைத்து இடங்களையும் சிறப்பாக அனுபவித்து உணரும்படி எழுதியிருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், மொழிபெயர்ப்பாளரான சைலஜாதான். பொருளாதாரத்தில் முக்கியமான வார்த்தைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பான நூலில் இன்னும் நூறு பக்கங்கள் மிச்சமுள்ளன.  அம்பேத்கரின் இந்துமத தத்துவம் என்ற நூலை எடிட்டர் கே.என்.சிவராமன் பரிசாக வழங்கினார். அதன் இரு பகுதிகளைப் படித்துள்ளேன். இன

எட்கர் ஆலன்போவின் இறந்தகாலம், நிகழ்காலத்தை ஒப்பிடும் கதை! - கடிதங்கள்

படம்
  அன்பு முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா?  எட்கர் ஆலன்போவின் மம்மி பற்றிய கதையை இப்போது வாசித்தேன். இன்னும் இரண்டு கதைகள் பாக்கியாக உள்ளது. எகிப்திலிருந்து பெறப்பட்ட மம்மிக்கு மின்சாரம் அளிக்கப்பட அது பேசத் தொடங்கிவிடுகிறது. அந்தக்காலம், இந்தக்காலம் என உரையாடல் தீராத விவாதமாகிறது.  பீடிஎப் வடிவில் நிறைய கதைகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு நேரமொதுக்கி படிக்கவேண்டும். குரங்கு வளர்க்கும் பெண் - மோகனரங்கன் மொழிபெயர்த்த கதைகள் படித்தேன். இதில் அனைத்து கதைகளும் வாசிக்க நன்றாக இருந்தன. கார்சியா மார்க்வெஸ் எழுதிய கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை என்ற கதை நீளமானது. வாசிக்க மனம் கனக்கக் கூடியதும் கூட. ஓய்வூதியத்தை 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து வாழும் ராணுவ வீரர் ஒருவரின் கதை.  உள்நாட்டுப் போர்களால் சீரழிந்த நாட்டை உரையாடல்கள் வழியாக அறிய முடிகிறது.  தலைப்பில் அமைந்த குரங்கு வளர்க்கும் பெண், இங்கர் என்ற பெண் மீது ஒருவருக்கு ஏற்படும் காதலை  விவரிக்கிறது. இது பித்தேறிய காதல்வகை. ரேமண்ட் கார்வர் எழுதிய நகர கதைகள் சிறியவை என்றாலும் படிக்க சிறப்பானவை.  நன்றி ச.அன்பரசு 6.1.2021