இடுகைகள்

உலக கோப்பை போட்டியை வெல்வது மட்டுமே எனது கனவு! - மிதாலி ராஜ், கிரிக்கெட் வீரர்

படம்
  மிதாலி ராஜ்  மிதாலி ராஜ் கிரிக்கெட் வீரர் அண்மையில்தான் கேல் ரத்னா விருதை மிதாலி ராஜ் பெற்றார். இந்திய கிரிக்கெட் அணிக்காக இருபத்திரெண்டு ஆண்டுகள் விளையாடிய அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர். அவரிடம் பேசினோம்.  இருபத்தி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் விளையாடி வருகிறீர்கள். இப்படி ஊக்கமாக விளையாட என்ன காரணம்? இதற்கு ஒழுக்கமான விளையாட்டு பழக்கம்தான் காரணம். நான் வளர்ந்து வந்த இடத்தில் என் வாழ்க்கை குறிப்பிட்ட திட்டப்படி நடந்து வந்தது. இதனால்தான் என்னால் எளிதாக தோல்விகளிலிருந்து விடுபட்டு சவால்களை சந்திக்க முடிந்தது. நான் என்னை எப்போதும் பெட்டராக மாற்றிக்கொள்ள முயன்றுகொண்டே இருந்தேன். நான் எனது விளையாட்டை வேறு பரிணாமத்தில் மாற்ற நினைத்துக்கொண்டிருந்தேன்.  கேல்ரத்னா, ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக அதிக வெற்றி, பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், உங்களது சுயசரிதை படமாக்கப்படுவது என பல்வேறு விஷயங்கள் நிறைவேறி வருகிறது. இதில் நிறைவேறாமல் இருப்பது என ஏதேனும் இருக்கிறதா?  உலக கோப்பையை வெல்வது எனது லட்சியம். 2022ஆம் ஆண்டு இதற்கான வாய்ப்பு உள்ளது. இதுதான் கேக்கின் மீதுள்ள செர்ரி போன்ற பெருமை. நாங்கள் வெற்ற

யுபிஐ ஏற்படுத்தும் அதிவேக பிரிவினை! - சாதகங்களும் பாதகங்களும்

படம்
  யுபிஐ ஏற்படுத்தும் பிரிவினை! உங்கள் போன்தான் இனி வாலட்டாக இருக்கப் போகிறது என பில்கேட்ஸ் 1996ஆம் ஆண்டு சொன்னார். அப்போது அவர் அப்படி சொன்னது பலருக்கும் புரியாமல் இருந்தாலும் இப்போது நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இன்று போன்பே, பேடிஎம், வங்கி ஆப்களில் வாலட்டில் பணம் வைத்து இணையத்தில் பொருட்களை வாங்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறோம்.  பூம்பூம் மாட்டிற்கான தொகையை கூட யுபிஐயில் கொடுக்கலாம் என்றளவுக்கு நிலை மாறியதை, சிலர் பெருமையாக பேசுகிறார்கள். இடதுசாரிகள் பிச்சை எடுப்பதை நேரடியாக எடுத்தால் என்ன டிஜிட்டலாக எடுத்தால் என்ன என்று விமர்சிக்கிறார்கள். முதலில் சொன்னதை விட இரண்டாவது கேள்வியில் சற்று பொருள் உள்ளது.  யுபிஐ பிற வசதிகளை விட வேகமாக பணக்கார ர்கள் ஏழைகள் ஆகியோருக்கு இடையில் பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், செக்கை ஒருவர் வங்கிக்கு சென்று மாற்றுவது கடினமானது. வரிசையில் நிற்கவேண்டும். டோக்கன் போடுவது இதில் முக்கியமான அம்சம். இப்படி மாறும் பணம் சரியாக கணக்கில் வந்து விழ பதினைந்து நாட்கள் தேவை. இதில் வங்கி விடுமுறைகள் வந்தால் என்ன செய்வது? பொறு

நமது உடலில் தெரியும் நரம்புகள் நீலநிறமானவையா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மனிதர்களின் உடல் வெப்பநிலை வெப்பமயமாதலை கூட்டுமா? மனிதர்களின் உடல் வெப்பநிலை என்பது நூறு வாட் அளவுதான் இருக்கும். இதனை வழக்கொழிந்து போன குண்டு பல்பின் திறனோடு ஒப்பிடலாம். மக்கள்தொகை கூடினாலும் கூட வெப்பநிலை பெரிய பிரச்னையாக இருக்காது. பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புதான் சூரியனின் வெப்பம் பூமியில் அதிகம் படுவதற்கு காரணம். கரிம எரிபொருட்கள், பசுமை இல்ல வாயுக்களின் அளவுதான் வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம்.  நமது நரம்புகள் நீலநிறமாக இருப்பது உண்மையா? ரத்தம் சிவப்பாக இருக்க காரணம், ரத்த சிவப்பணுக்கள்தான். இதில்  ஆக்சிஜன் இருந்தால்  பளிச்சென சிவப்பாகவும், இல்லையென்றால் அடர் சிவப்பாகவும் மாறும். ரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது. கையில் பார்க்கும்போது நரம்புகள் சிலருக்கு புடைப்பாக நீலநிறமாக, அல்லது பச்சை நிறமாக தெரியும். இது ஒளியின் சிதறல்களால் ஏற்படுகிறது.  சிவப்பு நிறம், நீளமான அலைநீளம் கொண்டது. எனவே அது உடலில் எளிதாக பயணிக்க முடியும். இதனால் ரத்த த்தில் உள்ள ஹீமோகுளோபினால் இந்த நிறம் கிரகிக்கப்படுகிறது. நீலநிறம் என்பது குறைந்த அலைநீளம் கொண்டது. எனவே உடலா

ராஜஸ்தான் அரசு பள்ளியை டிஜிட்டல் மயமாக்கும் ஜினெந்தர் சோனி! - மாற்றம் பெறும் அரசுப்பள்ளிகள்

படம்
  2019 ஆம் ஆண்டு ஜினெந்தர் சோனி தன்னுடைய வேலையைக் கைவிட்டார். வேலையை விடுவது பெரிய விஷயமல்ல. அதில் அவர் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆன்லைன் பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இப்போது அதே மாதிரியை பின்பற்றி ராஜஸ்தானில் ஜூன்க்ஹூனு எனும் மாவட்டத்தில் அரசு பள்ளியை சிறப்பாக்கியிருக்கிறார்.  பொதுமுடக்க காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை  வழங்க ராஜஸ்தான் அரசு யோசித்தது. அதில்தான் ஜினெந்தர் சோனி உள்ளே வந்தார்.  பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், தனது சொந்த நிதி என எட்டு லட்சம் ரூபாயை செலவழித்து  40 ஆசிரியர்களை வைத்து வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். வீடியோக்கள் மேல்நிலை வகுப்புகளை படிக்கும் மாணவர்களுக்கானவை.  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜினெந்தரின் செயல்பாடுகளைப் பார்த்து ஆன்லைனில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார். இப்போது இப்படி பயிற்சி எடுக்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ரெஸ்யூம் கூட வீடியோக்கள்தான்.  முதலில் வீடியோக்களை உருவாக்கும் பணி ஆறிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை தொடங்

பருவநிலை மாற்றம் பற்றிய இளைஞர்களின் எதிர்வினைகள்!

படம்
  சூழல் பற்றிய கருத்து மேகேக் ஆனந்த், 16 வசந்த் வேலி பள்ளி, டெல்லி நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கவேண்டும். அதிக நுகர்வு சூழலை நிச்சயமாக பாதிக்கும். தங்களது வாழ்க்கை முறையை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்குவது நல்லது. நாளை என்று சொல்லாதீர்கள். இன்றே தொடங்குங்கள் ஸெனப் ஹபீப், 20 பி.டெக் மாணவி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது , குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது, கழிவுகளை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றை செய்தால்தான் நாம் வாழும் பூமியை, தாய்மடியை காப்பாற்ற முடியும். இது எதிர்காலத்தில் நமது குழந்தைகளைக் காப்பாற்ற உதவும். எனவே சூழலைக் காப்பாற்ற இப்போதே செயல்படலாம்.  தனிஷ்கா பேடி, 17 ஹெரிடேஜ் எக்ஸ்பரிமென்டல் பள்ளி குருகிராம் அதிகரித்து வரும் மக்கள்தொகைதான் பிரச்னை. இவர்களுக்கு தேவையான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. எனவே இப்பிரச்னையைத் தீர்க்க சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளூரில் கிடைக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதால், தேவையில்லாமல் உணவு வீணாகுவது நடைபெறாது. இதுதான் இன்னும் நீண்டநாள் உலகை நடத்திச்செல்ல உதவும். ஆரண்யக் கோஷ் மஜ

பிட்காயின் மீது கிளம்புது புது மோகம்! -

படம்
  பிட்காயின் கிரிப்டோகரன்சிகளை பலரும் வாங்கி விற்க முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் இதனை முறைப்படுத்த அரசு ஏதும் செய்யவில்லை. இதனை ரிசர்வ் வங்கி இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறலாம்.  முறைப்படுத்தல் இந்தியர்கள் பெரும்பான்மையோர் தங்களது சேமிப்புகளை  பிட்காயினில் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். வங்கியில் போட்டு வைத்தால் கிடைக்கும் வட்டியும் இப்போது குறைந்துவிட்டது. அதில் போட்டு வைத்து கடனை இன்னொரு  வட இந்திய வியாபாரிக்கு வட்டிக்கு கொடுத்துவிட்டால் சொந்தப்பணமும் காணாமல் போய்விடுமே? எனவே, வரி பிரச்னை இல்லாமல் பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் பிட்காயின் ரூபாய்க்கு எதிரிதான். பணமோசடிக்கும் பயன்படுத்தப்படலாம். அதனைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். முதலீடு செய்யும் பணத்தை ஒருவர் மோசடியில் பறிகொடுக்கவும் கூடுதல் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.  அனுமதி ஆர்பிஐ இதற்கு எழுத்துப்பூர்வ அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை. கிரிப்டோ கரன்சியை தடுப்பதற்கான சட்டத்தை ஆர்பிஐ உருவாக்கினாலும் அதனை மத்திய அரசு இன்னும் நாடாளுமன்றத்தில

வலைத்தள மார்க்கெட்டிங் மூலம் வளரும் கைத்தறி துணி வணிகம்!

படம்
  அரியலூர் அம்சவள்ளி - TNIE கைத்தொழிலைக் காப்பாற்றும் அரசின் வலைத்தளம்!  அரியலூரிலுள்ள எலையூரைச் சேர்ந்தவர், அம்சவள்ளி. இவரது வருமான ஆதாரமே கைத்தறிதான். அவரது வீட்டில் இடைவெளி இன்றி கைத்தறி இயக்கப்படும் சத்தம் வந்துகொண்டே இருக்கிறது. தொழிலுக்காக ஆதார பொருட்கள் இல்லாத காரணத்தால் தொழிலில் வருமானம் குறைந்துவிட்டது.  நாங்கள் மொத்தமாக சேலைகளை ஆந்திரா, கேரளத்திற்கு விற்று வருகிறோம். விலை 750 முதல் 1,500 வரை உள்ளது. பட்டுப்புடவையின் விலை 3 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வரும். பொதுமுடக்கம் காரணமாக சேலைகளுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளூரிலேயே விற்று வருகிறோம் என்றார்.  வருமானம் குறைந்துவிட்டதால், தனியார் பள்ளிக்கு அனுப்பிவைத்த இரு பிள்ளைகளில் ஒருவரை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார். தினசரி உணவுப்பொருட்களுக்கு ரேஷன் கடைகளையே நம்பியுள்ளார் அம்சவள்ளி. இப்போது அரசு நலிந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இணையத்தளத்தை தொடங்கி அதில் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பு உருவாக்கியுள்ளது. இதனால் அம்சவள்ளி தனது தொழில் குறித்த நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இப்போதுவரை வலைத்தளத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கான விற்பனை நடைப

கொசுவினால் எய்ட்ஸ் பரவாதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
 பதில் சொல்லுங்க ப்ரோ? சிரிஞ்சின் ஊசி மூலம் எய்ட்ஸ் பரவுகிறது என்றால் கொசு மூலம் ஏன் பரவாது? சிரிஞ்சிலுள்ள ஊசியைப் பயன்படுத்தி எய்ட்ஸ் உள்ளவருக்கு பயன்படுத்தி அதனை தூய்மைப்படுத்தால் அடுத்தவருக்கு பயன்படுத்தினால் எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  ஊசியில் ஏற்கெனவே உள்ள டி செல்களைப் பயன்படுத்தி வைரஸ் கிருமி தன்னை பெருக்கிக்கொள்ளும். இதனை பயன்படுத்துபவரின் உடலிலும் உடனே டி செல்களை தனக்கான ஊடகமாக பயன்படுத்தி பெருகத் தொடங்கும். கொசுவின் உடலில் எய்ட்ஸ் வைரஸ் சென்றாலும், அதற்கு டி செல்கள் அங்கு கிடைக்காது. எனவே அதன் செரிமான அமைப்பில் சேர்ந்துவிடும். மலேரியா ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் கொசுவின் வயிற்றில் ஏராளமாக பெருகுகின்றன. ஸ்போரோஸொய்டஸ் எனும் இவை, எளிதாக கொசுவின் எச்சிலில் கலந்து மனிதர்களை தாக்குகிறது.  ஆக்டோபஸ் எப்படி அடிக்கடி நிறம் மாறுகிறது? செபாலோபாட்ஸ் என்று அழைக்கப்படும் இனத்தில் ஆக்டோபஸ், ஸ்குவிட், கடில்ஃபிஷ் ஆகிய உயிரினங்கள் உண்டு. இவை அனைத்துக்கும் உள்ள ஒற்றுமை, எதிரிகளை எச்சரிக்க அடிக்கடி உடலின் நிறம் மாற்றும் என்பதுதான். இவற்றின் உடலில் நிறம் மாற்றும் நிறமிகள் உண்டு. இதற்கு, கு

பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்! - பேராசிரியர் மைக்கல் அப்பன்ஹெய்மர்

படம்
  மைக்கேல் அப்பன்ஹெய்மர் பருவநிலை மாற்றம் உலகில் பருவநிலை மாற்றத்திற்கு அதிக விலை கொடுக்கவேண்டியிருப்பவர்கள், குழந்தைகள்தான். இப்போது அவர்களே பிறருக்கும் சேர்த்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். யுனிசெப்பின் கணக்கீடுப்படி, ஒரு பில்லியன் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுமே பஞ்சம், வெப்ப அலைகள், வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.  1960ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, எதிர்வரும் ஆண்டுகளில்  குழந்தையின் பிறப்பு கூட மேற்சொன்ன சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காற்று மாசுபாட்டால் குழந்தைகள் 90  சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஏழைக்குழந்தைகள் அதிக விலையைக் கொடுக்கவேண்டும். 2030ஆம் ஆண்டில் 132 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 82.4 மில்லியன் மக்கள் வேறுவழியின்றி பிற இடங்களுக்கு இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். உணவு, நீர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளின் வீடுகள் இல்லாமல் போகும். கூடவே இயற்கை பேரிடர்களாக பஞ்சம், வறட்சி, வெப்ப அலைகளின் தாக்கமும் இருக்கும். 2 மைக்கேல் அப்பன்ஹெய்மர் மைக்கேல் அப்பன்

மனதை நிறைக்கும் ஆன்மிக அனுபவ பயணம்! - அருகர்களின் பாதை- ஜெயமோகன்

படம்
  சமணர்களின் கோவில் - ஜெயமோகன் வலைத்தளம் அருகர்களின் பாதை ஜெயமோகன் கிழக்கு  ரூ.285 (ராயப்பேட்டையிலுள்ள கிழக்கு பதிப்பகமே சென்று வாங்கினாலும் கூட ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டோம் என அன்போடு சொல்லிவிட்டனர்.) நூல் முழுக்க சமண வழிபாட்டிடங்களை தேடிச்செல்லும் எட்டுபேர் கொண்ட குழுவின் பயணத்தைப் பற்றியது. இதில் வரும் ஆரியர் வருகை, நாற்கர சாலை ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு பார்த்தால் நூல் முழுக்க பயணம் தொடர்பான செறிவான கருத்துகள் நிரம்பியுள்ளது என உறுதியாக கூறலாம்.  தொன்மைக் காலம் தொடங்கி இன்றுவரை சமண வழிபாட்டிடங்கள் வளர்ந்துகொண்டே வருகின்றன. கூடுதலாக அந்த மதம் சார்ந்தவர்கள் தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கோவில்களை வெண் சலவைக்கல் கொண்டு கட்டிக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக  கல்யாண்ஜி எனும் அமைப்பைச் சொல்லலாம். ஜெயமோகன் தன்னுடைய நண்பர்களோடு செல்லும் இடங்களில் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள் சமண தர்மசாலையினர்தான். இந்து மத அமைப்பினர் அல்ல. இது பற்றிய இடம் வரும்போது, ராமகிருஷ்ண மடத்தின் அணுகுமுறை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார் ஜெ. என்ன நோக்கம் என்பதே தெரியாமல் மடத்தை நிர்வாகம் செய்பவர