இடுகைகள்

பிளாஸ்டிக்குகளின் உற்பத்தியை குறைக்காமல் மறுசுழற்சி செய்வதில் பயன் உண்டா?

படம்
  விஷமாக பரவும் பிளாஸ்டிக்குகள்! இன்று உள்ளூர் தொடங்கி புகழ்பெற்ற ஆற்றுக்கரையோரங்களில் சென்று பார்த்தால் எங்கும் நிறைந்துள்ளது பரந்தாமன் மட்டுமல்ல பிளாஸ்டிக்கும் கூடத்தான் என்று தெரிந்துகொள்வீர்கள். அந்தளவுக்கு ஷாஷேக்கள், குழந்தைகளின் பொம்மைகள், பாலிதீன் கவர்கள், சோப்பு உறைகள், எண்ணெய் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், அலுமினிய பாயில்கள் ஏராளமாக கிடைக்கும். உள்ளூர் நிர்வாகங்களும் இவற்றை அள்ளுகின்றன. ஆனாலும் இதன் எண்ணிக்கை குறைவதாக இல்லை. மறுசுழற்சி செய்யும்படியான பிளாஸ்டிக்கை தயாரிக்காதபோது தொழிற்சாலைகளை மூடச்சொல்லி உத்திரவிடும் தைரியமும் நெஞ்சுரமும் அரசுக்கு இல்லை. எனவே, பிளாஸ்டிக்குகள் இன்று குடிநீரில், உணவில், காய்கறிகளில் கூட கலக்கத் தொடங்கிவிட்டன. அதைபற்றிய விரிவான கட்டுரையைப் பார்ப்போம்.  மூன்றாம் உலக நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றுவரையில் மனிதர்கள் உருவாக்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை பதினொரு பில்லியன் மெட்ரிக் டன் என நேச்சர் ஆய்விதழ் தகவல் கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் ஆண்டுக்கு 30

உண்மையை மறைக்காதபோது எதுவும் உங்களுக்கு சவாலாக இருக்காது - காஸ்டர் செமன்யா

படம்
  காஸ்டர் செமன்யா  விளையாட்டு வீரர் ரேஸ் டு பி மைசெல்ஃப் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளீர்கள். இதற்கான அவசியம் என்ன? நீங்கள் அமைதியான நல்ல மனநிலையில் இருக்கும்போதே சொல்ல வேண்டிய கதையை சொல்லவேண்டும். இந்த நேரத்தில் எனது ஆதரவு தேவைப்படுவோர்களுக்கு உதவுகிறேன். எனது கதை, வாய்ப்பு மறுக்கப்படுவோர்களுக்கானது. இதன் வழியே நீங்கள் யாரோ அப்படியே ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என நினைக்கிறேன்.  நீங்கள் வளரும்போது சிறந்த கால்பந்து வீரராக இருந்தீர்கள். அந்த விளையாட்டு புறவயமானது என்றும் எழுதுவது அகவயமானது என்றும் கூறியிருந்தீர்கள். உங்களது தேர்வாக அகவயமானதை தேர்ந்தெடுத்திருந்தீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? கால்பந்து விளையாடும்போது நீங்கள் தனியாக இருக்கமாட்டீர்கள். குழுவாக இருப்பீர்கள். அணியில் உருவாகும் பிரச்னைகளை குழுவாக அமர்ந்து தீர்க்க முயல்வீர்கள். சிலசமயங்களில் அவற்றை தீர்க்க முடியாமல் கூட போகலாம். ஆனால் தனிப்பட்ட வீர்ராக இயங்கும்போது வெற்றி, தோல்வி என்பது எனக்குமட்டுமே உண்டு. ஆனால் அப்படி இயங்கும்போது எனது மனதில் சுதந்திரத்தை உணர்கிறேன். எதற்கும் கவலைப்படுவதில்லை.  உங்கள் மனைவியை முதன்முதலாக வீரர்களி

உலகப்புகழ்பெற்ற தொழில்நுட்ப கலகத் தலைவன் லினஸ் டோர்வால்ட்ஸ்! - சாப்ட்வேர் ரெபல் நூல் விமர்சனம்

படம்
  லினஸ் டோர்வால்ட்ஸ் - சாஃப்ட்வேர் ரெபல் 88 பக்கங்கள் கொண்ட சிறுநூல். இலவச மென்பொருள் இயக்கம், அதன் நோக்கம் பற்றி கூறுவதோடு பின்லாந்தில் பிறந்த லினஸ் டோர்வால்ட்ஸின் வாழ்க்கை பற்றியும் சுருக்கமாக விவரிக்கிறது. பொதுவாக ஒருவரின் சுயசரிதை என்பது அவரின் பலங்களை விஸ்வரூபமாக காட்டி பலவீனங்களை கீழே அமுக்குவதுதான். இந்த நூலில் லினஸ் பற்றிய பெரிய ஆச்சரியங்கள் ஏதுமில்லை. அவர் லினக்ஸ் என்ற ஓஎஸ்ஸை உருவாக்கி இலவச இயக்கமுறையாக இணையத்தில் பதிவிடுகிறார். இதை கோடிக்கணக்கான நிரலாளர்கள் மேம்படுத்துகிறார்கள். அதன் வழியாக லினக்ஸ் குழுவினர் உருவாகிறார்கள். இவர்களே இலவச மென்பொருள் என்பதை பின்னாளில் வளர்த்தெடுக்கிறார்கள்.  இந்த நூலில் நாம் என்ன படித்து தெரிந்துகொள்ளலாம்? லினஸ் டோர்வால்ட்ஸ் தான் கோடிங் எழுதிய லினக்ஸை காசுக்கு விற்றால் அவர் தனி ஜெட் விமானம் வாங்கியிருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை. எதனால் அவர் வணிகநோக்கில் வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை என்று நூல் பேசுகிறது. நூலில் பில்கேட்ஸ் மீதான பகடி பக்கத்திற்கு பக்கம் இருக்கிறது. அதிலும் அவரைப் பற்றி லினஸ் சொல்வது தனிவகை.  இலவச மென்பொருட்கள் எதனால் உலகிற

ஜனநாயகம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடியது - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

படம்
  ஜனநாயக வழியில் என்னை தூக்கி எறிய முடியாது - ஷேக் ஹசீனா என்னை அழிக்கவேண்டுமென்றால் கொல்லவேண்டும். மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார் என்று  கூறி தனது வழியில் நாட்டை ஆட்சிநடத்திக் கொண்டு செல்கிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. 170 மில்லியன் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியாக, நாட்டின் பிரதமராக எழுபத்து நான்கு வயதிலும் உறுதியாக நிற்கிறார்.  மத்திய கிழக்கு நாடுகளை விட அதிக முஸ்லீம்கள் வாழும் நாடு. அரசியலமைப்பு நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. ஆனால் ராணுவ ஆட்சி காலம், நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாத இருட்டுக்குள் கூட்டிச்சென்றது. இதெல்லாம் கடந்து 2009ஆம் ஆண்டு தொடங்கி நீண்டகாலமாக அங்கு ஆட்சி செய்வது ஹசீனாதான். எனது பெரும் பலமே மக்கள்தான். என்னுடன் மக்கள் நிற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறுபவர், இந்திய பிரதமர் இந்திராகாந்தி, இங்கிலாந்து பிரதமர் மார்க்கரேட் தாட்சர் ஆகியோர் செய்த தேர்தல் சாதனைகளை கடந்து நிற்கிறார்.  வங்கதேசத்தில் புகழ்பெற்ற வலிமை பெற்ற இரு கட்சிகள் உண்டு. ஒன்று, ஹசீனாவின் ஆவாமி கட்சி, அடுத்து வங்கதேச தேசியவாத கட்சி. அண்மையில் தேசியவாத கட்சி, வங்கதேசத்தில் பிரதமரு

ஆசைகளை மனதில் மறைத்து வைத்தால் ஏற்படும் ஆபத்தான நிலைமை!

படம்
  உளவியலில் தன்னுணர்வற்ற நிலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலை என்பது ஒருவரின் வாழ்பனுவத்தைக் கடந்த இயல்புடையது. கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. தன்னுணர்வற்ற நிலையில் நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துகள் சேகரமாகின்றன. இதனால்தான் இந்த கருத்து மீது ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் சிக்மண்ட் உளவியலாளர் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அன்றைய காலத்தில் தன்னுணர்வற்ற நிலை பற்றிய ஆராய்ச்சி, வேகமாக நடைபெறவில்லை. இந்த காலத்தில் ஃபிராய்ட் செய்த ஆராய்ச்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அவர் ஒருவரின் சிந்தனை, அனுபவம் ஆகியவை தன்னுணர்வு, தன்னுணர்வற்ற நிலை ஆகியவற்றில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி விரிவாக விளக்கினார்.  சார்கட்டிடம் பணியாற்றும்போது, ஹிஸ்டீரியா நோயாளிகளுக்கு ஹிப்னாசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுவை ஃபிராய்ட் கவனித்தார். நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளால் ஹிஸ்டீரியா குறைபாடு ஏற்படுகிறது என சார்கட் கருதினார். பிறகு வியன்னா திரும்பிய சிக்மண்ட் ஃபிராய்ட், ஹிஸ்டீரியாவுக்கான சரியான சிகிச்சை முறையைக் கண்டறிய முயன்றார். அப்போது அங்கு புகழ்பெற்றிருந

புதிய நூல்கள் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
 

தனது குற்றவுணர்ச்சியைத் தீர்க்க மகளை மணம்செய்து கொடுக்க முயலும் அப்பா!

படம்
  பிரேமண்டா இதேரா  வெங்கடேஷ், ப்ரீத்தி ஜிந்தா மோதல், காதல் டெ்ம்பிளேட்டில் கிராமத்து காதல் கதை.  வெங்கடேஷ் ஹைதராபாத்தில் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர். தனது சக நண்பனின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறார். அங்கு கிராமத்து பெரிய புள்ளி ஒருவரின் மகளைப் பார்க்கிறார். அவர்தான் ஷைலஜா. எப்போதும் பட்டு உடையில் சுற்றிவருகிற அழகானபெண். ப்ரீத்தி ஜிந்தாவுக்காகவே இந்த படத்தைப் பார்க்கலாம். அந்தப்பெண்ணுக்கும் வெங்கடேஷூக்கும் மோதல் உருவாகி பிறகு காதல் வளர்கிறது.  கல்யாண சமையல் அறையில் ஷைலுவின் துப்பட்டா மீது தீப்பிடிக்க அதை ஓடிச்சென்று தூக்கி எறிந்து காக்கிறார் நாயகன். உடனே நாயகிக்கு வெட்கம் பூக்க, காதல் மெல்ல அரும்புவிடுகிறது. தொடக்க காட்சி தொடங்கி வெங்கடேஷ் ரயிலில் கிளம்பும்வரை இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. காட்சி ரீதியாகவே இருவரும் ஆசையாக வேட்கையுடன் பார்த்துக்கொள்கிறார்கள். வெட்கப்படுகிறார்கள். ஏக்கப்படுகிறார்கள்.  ஷைலுவின் அப்பா தனது நண்பன் தனக்கு செய்த நன்றிக்கடனுக்காக அவனது மகனை படிக்கவைக்கிறார். அப்படியும் குற்றவுணர்ச்சி தாளாமல் மகளை மணம் செய்துகொடுக்க நினைக்கிறார்.இங்கு

தானியங்கி முறையில் இயங்கும் கார்கள், அவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்!

படம்
  என்ஓஏ, என்ஏடி, என்சிஏ, ஏசிடிஎம் என்ற சொற்களை கேட்டால் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? இதெல்லாம் கார் தயாரிப்புத் துறையில் பயன்படுகிற சொற்கள். இப்போது டிரெண்டிங்கில் இருப்பது தானியங்கியாக இயங்கும் கார்கள்தான். அப்படி இயங்குகிற கார் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படி சொற்களை கண்டுபிடித்து வைத்து குழப்புகின்றன. உண்மையில் கார்களின் தானியங்கி இயக்க முறை என்பது ஒரே முறைதான். ஆனால் வெவ்வேறு பெயர்களில் தொழில்நுட்பத்தை பயனர்களுக்கு காட்டி மயக்க முயல்கின்றன.  லீ ஆட்டோவின் தொழில்நுட்பம் என்ஓஏ எனவும், ஹூவாய் என்சிஏ - நேவிகேஷன் க்ரூஸ் அசிஸ்ட் எனவும், டெஸ்லா - எஃப்எஸ்டி, எக்ஸ்பெங் நிறுவனம், எக்என்ஜிபி எனவும் பல்வேறு எழுத்துகளை இணைத்து புதுமையான பெயர்களை வைத்து வருகின்றன. இந்த கார் நிறுவனங்கள் லேசர், கேமரா ஆகியவற்றை பயன்படுத்தி தானியங்கி கார் சோதனைகளை செய்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துவது ஒரே தொழில்நுட்ப கருவிகள்தான். ஆனால் பெயர்களை மாற்றி வைத்து மக்களை ஏமாற்றி குழப்புகின்றன. இப்படி பயன்படுத்தும் கருவிகளுக்கு குறிப்பிட்ட தரம் இருக்கிறதா என்பதே கேள்விதான்.  பெரும்பாலான இதுபோன்ற சொல் வ

சிக்மண்ட் ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகள் மங்கத்தொடங்கிய காலகட்டம்!

படம்
  காலக்கோடு 1895 சிக்மண்ட் ஃபிராய்ட், ஜோசப் ப்ரூயர் ஆகியோர் இணைந்து ஸ்டடிஸ் ஆன் ஹிஸ்டீரியா என ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.  1900 சிக்மண்ட, இன்டர்பிரிடேஷன் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற நூலில் சைக்கோ அனாலிசிஸ் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார்.  1921 கார்ல் ஜங்க், தனது சைக்காலஜிகல் டைப்ஸ் என்ற நூலில் இன்ட்ரோவர்ட் எக்ஸ்ட்ரோவர்ட் என்ற கருத்துகளை வெளியிட்டார்.  1927 ஆல்ஃபிரட் அட்லர் என்பவரே தனிநபர் உளவியலுக்கான அடித்தளமிட்டவர். இவர் தி பிராக்டிஸ் அண்ட் தியரி ஆஃப் இண்டிவிஜூவல் சைக்காலஜி என்ற நூலை எழுதினார்.  1936 தி ஈகோ அண்ட் தி மெக்கானிச் ஆஃப் டிபென்ஸ் என்ற நூலை அன்னா ஃபிராய்ட் எழுதினார். 1937 பதினான்காவது சைக்கோ அனாலடிகல் மாநாட்டில் ஜாக்குயிஸ் லாகன், தி மிரர் ஸ்டேஜ் என்ற அறிக்கையை வெளியிட்டார்.  1941 சிக்மண்டின் கருத்துகளில் கரன் கார்னி வேறுபாடு கொண்டு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஃபார் சைக்கோஅனாலிசிஸ்  என்ற அமைப்பைத் தொடங்கினார்.  1941 எரிக் ஃப்ரோம், தி ஃபியர் ஆஃப் ஃப்ரீடம் என்ற சமூக அரசியல் உளவியல் நூலை எழுதினார்.  இருபதாம் நூற்றாண்டில் குணநலன் சார்ந்த ஆராய்ச்சிகளை அமெரிக்க உளவியலாளர்கள் தீவிரமாக செய்யத்

பாதுகாப்பில் மேம்படத்தொடங்கும் கேப்சா - புதிய மேம்பாடுகள் பற்றிய பார்வை

படம்
  கேப்சா என்பதை இணையத்தை பயன்படுத்துபவர்கள் உறுதியாக எதிர்கொண்டிருப்பார்கள். எழுத்துகளை, பாடல்களை தரவிறக்கும்போது திடீரென கேப்சா தோன்றும். சிறியதும் பெரியதுமான எழுத்துகள் வளைந்து இருக்கும். அதை சரியாக பதிவிட்டால் தரவிறக்கம் நடக்கும். இல்லையெனில் காரியம் கைகூடாது. எழுத்து, படம் என கேப்சா பல்வேறு வகையாக உள்ளது. இப்போது ஒலியைக் கூட கேப்சாவாக வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒலியைக் கேட்டுவிட்டு அதன் ஒற்றுமையை பதிவிடவேண்டும்.  கேப்சா எதற்காக, வலைதளத்தில் தகவல்களை ஹேக்கர்கள் திருடாமல் இருக்கத்தான். வலைதளத்தில் சிலர் கோடிங்குகளை பயன்படுத்தி, அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதை தடுக்கவே கேப்சா பயன்படுகிறது. கூகுள் ரீகேப்சா என்ற வசதியை வழங்குகிறது. இதில் ஒருவர் தனது வலைதளத்தை பதிவு செய்து உண்மையான பயனர் பற்றிய தகவல்களை அறியலாம். வலைதளத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து உண்மையானதா இல்லையா என ஆராய்ந்து கண்டுபிடிக்க கூகுள் உதவுகிறது. இன்று ஒருவர் தகவல்களை பாதுகாக்க இணையத்தில் உள்ள பாட்கள், அல்காரிகம், செயற்கை நுண்ணறிவோடு மோதவேண்டியுள்ளது.  கம்ப்ளீட்லி ஆட்டோமேட்டட் பப்ளிக் டூரிங் டெஸ்ட் டு டெல் கம்ப்யூட்