இடுகைகள்

ஊழுறு தீங்கனி - புதிய இ-நூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்.

படம்
  ஊழுறு தீங்கனி, டாமினன்ட் / சப்மிஸிவ் உறவு, அதில் ஒருவர் எப்படி செயல்படுவது, கடைபிடிக்கவேண்டிய விதிகள், பயன்படுத்தும் பொருட்கள், வாழ்க்கை முறை பற்றிய அறியாத பல்வேறு தகவல்களை விளக்குகிறது. வெகுஜன மக்களுக்கு இந்த வாழ்க்கைமுறை புதிதாக இருக்கலாம். ஆனால், இப்படியான வாழ்க்கை முறையில் ஏராளமான மக்கள் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிறார்கள். இந்நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக டாமினன்ட் / சப்மிஸிவ் பற்றி தெளிவாக அறிந்துகொள்வதோடு, அந்த முறையில் வாழ விரும்பினால் கூட முதல் அடியை எடுத்துவைக்க முடியும். இதுபற்றிய மேற்கோள் நூல்களும், வலைத்தளங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலை வாசிக்க.... https://www.amazon.com/dp/B0CSJRKMPW

போட்டிபோடும் பெண்களின் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம்!

படம்
  போட்டி போடும் பெண்கள்  நாடாளுமன்றத்தில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க 33 சதவீதம் என சட்டமியற்ற வேண்டியிருக்கிறது. இதைக்கூட தேர்தலுக்கான கண்துடைப்பாகவே அரசியல் கட்சிகள் செய்கின்றன. உண்மையில் திறமையான பெண்களை சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறதா? புராணங்களைக் கூறி, உடலின் வரம்புகளை சுட்டிக்காட்டி முடக்குகிறதா? இதைப்பற்றி பெரிதாக யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம் பெண்கள் வீட்டு வேலைக்கென அடிமைபோல நடத்தப்பட்டதுதான். அவர்களை மனிதர்களாக பார்த்து கௌரவித்து நடத்தியவர்கள் குறைவான ஆட்களே.  உலகளவிலும் திறமையான பெண்களை தனிப்பட்ட வாழ்க்கையை கையில் எடுத்து அவர்களின் குணநலன்களை தவறாக பிரசாரம் காட்டி தரம் தாழ்ந்த வகையில் வீழ்த்துகிறார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பு, செய்த சாதனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.  மேற்குலகில் பெண்களுக்கான உரிமைகளை கேட்டு போராடும் அமைப்புகள் எழுபதுகளில் அதிகரிக்கத் தொடங்கின. அப்போது ஆராய்ச்சியாளர் ஜேனட் டெய்லர் ஸ்பென்ஸ் என்பவர், பெண்களைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தார். அவரின் சகாக்கள் ஆண்களின் திறமை அதை சமூகம் அங்கீகரிக்கும் விதம் பற்றி ஆய்வு செய்தனர். இதைக் கேள்விப்பட்டவர்

அதிர்ச்சிகரமான சம்பவமும், அதைப் பற்றிய நினைவுகளும்!

படம்
  அதிர்ச்சிகரமான நிகழ்ச்சியும், அதன் நினைவுகளும்  ஒரு அரசியல் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுகிறார். இதை அறிந்தவர்கள் முதலில் அதிர்ச்சியடைவார்கள். அதேசமயம், அது சம்பந்தமாக செய்திகளை நாளிதழ்களில் தேடிப்படிப்பார்கள். அந்த சமயம் தான் செய்துகொண்டிருந்தோம். யாருடன் இருந்தோம். பேசினோம் என்பது கூட நினைவில் இருக்கும். அதாவது, பல்லாண்டுகள் கடந்தாலும் கூட அவர்களால் அந்த அதிர்ச்சியான சம்பவங்களை துல்லியமாக நினைவுகூரமுடியும். எப்படி, அந்த அதிர்ச்சியான சம்பவத்தை நினைவை திரும்பத் திரும்ப அவர்கள் நினைவுகூர்ந்துகொண்டே இருப்பதால்தான். இதை உளவியல் ஆய்வாளர் ரோஜர் ப்ரௌன், 'ஃபிளாஸ்பல்ப் மெமரிஸ்' என்று குறிப்பிட்டார்.  1963ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகமே மறக்காது. இதை தொடர்புபடுத்தி திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நூல்கள், தொலைக்காட்சி தொடர்கள் கூட தயாரிக்கப்பட்டன. கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய இருவரையும் கூட எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே படுகொலை செய்யப்பட்டவர்கள்தான்.  சாதி, மத, மொழி வேறுபாடின்றி இருவரைய

டீப்ஃபேக் வீடியோக்கள் ஏற்படுத்தும் பதற்றம்!

படம்
  சில மாதங்களுக்கு முன்னர் சினிமா நடிகையான ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று வெளியானது. வீடியோ என்றதும் ரெட் ட்யூப், ஜாவ் குரு போல இருக்கும் என எதிர்பார்க்கவேண்டாம். கருப்பு நிற பனியன் அணிந்த பெண் லிஃப்டில் ஏறுகிறார். அவரின் மார்பகங்கள் வெளியே தெரியும்படியான உடை. அவர் வேறு யாருமல்ல ராஷ்மிகாதான். இந்த வீடியோ இணையத்தில் பரவியதும். அது தான் அல்ல என்று நடிகை சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை பதிவிட்டார்.  ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படத்தை பிறர் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு அவர் குறிப்பிட்ட பணத்தைக்கூட கொடுக்க நேரிடலாம். இதெல்லாம் தொடர்புடைய நபர் சார்ந்த விஷயம். விவகாரம். இதில் பிறர் கருத்து கூற பெரிதாக ஏதுமில்லை. அனிமல் என்ற இந்தி திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர்தான் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. அந்த படத்தில் ராஷ்மிகா, வாங்கிய காசுக்கு ஏற்ப நாயகனுடன் தெறமை காட்டியிருந்தார். அதைப் பார்த்தவர்கள் டீப்ஃபேக் வீடியோவே பரவாயில்லை என கமெண்ட் அடித்தனர். ஒருவரின் புகைப்படம், வீடியோவைப் பயன்படுத்த அனுமதி பெறுவது அவசியம். காப்புரிமை போன்றே இதை அணுக வேண்டும்.  க

தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்க சிறு குறுங்கத்தியோடு கிளம்பும் விஷ ராஜா!

படம்
  பாய்சன் கிங், வெனோம்கிங் மாங்கா காமிக்ஸ்  எப்படி சிலந்தி கடித்து மாணவன் ஒருவன் சிலந்தி மனிதன் ஆகிறானோ அதேபோல சென்டிபீட் எனும் விஷப்பூச்சியை ஜின் ஜகான் கடித்துக்கொல்கிறான். அதன் விஷம் உடலுக்குள் இறங்க சுயநினைவை இழக்கிறான். அவனது தாத்தா, பேரனின் உயிரைக் காப்பாற்ற மாத்திரை ஒன்றை அவனுக்கு கொடுக்கிறார். அந்த மாத்திரை ஜின்னின் உடலில் உள்ள ரத்தத்தை ஜெல் போல மாற்றி விஷம் அவனை பாதிக்காதவாறு மாற்றுகிறது.  மருத்துவ இனக்குழு, விஷ இனக்குழுக்களால் முழுமையாக தோற்கடிக்கப்படுகிறது. நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு பழிவாங்க சிறுவன் ஜின் எழுகிறான். அவனது பலமே சென்டிபீட் மூலம் உடலுக்குள் சேகரமான விஷம்தான். அதை வைத்து அவனை விட பலமடங்கு வலுவான எதிரிகளிடம் போரிடுகிறான். சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் அடிபட்டு உதைபட்டு நினைவிழந்து வீழ்ந்தாலும் தைரியத்தை இழப்பதில்லை. தான் தோற்றுவிட்டேன். தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எ்ன்பதை அவன் கூறுவதில்லை. அவனது மன உறுதியும் போர் திட்டங்களும் அவனோடு இருப்பவர்களுக்கும், சமயங்களில் அவனது எதிரிகளுக்கும் கூட திகைப்பை ஏற்படுத்துகிறது.  மருத்துவ இனக்குழு அழிக்கப்பட்டு

குப்பை என அவமானப்படுத்தப்படும் நாயகனின் எழுச்சியும், போராட்டமும்!

படம்
  காட் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்  ரீட்மாங்காபேட்.காம் ஜின் ஃபேன் என்பதுதான் நாயகன் பெயர். ஆனால் அதை விட அதிகமாக ட்ராஷ் என அவரை வசைபாடும் சொல்தான் கதையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜின்னுக்கு அவரது தாய் மூலமாக சிறு பாம்பு ஒன்று ஆன்ம ஆற்றல் விலங்காக மாறுகிறது. ஆனால், அதன் சக்தி என்ன அதை எப்படி வளர்ப்பது என அவருக்கும் தெரிவதில்லை. அவரது அப்பாவுக்கும் தெரிவதில்லை. ஜின்னின் அண்ணன் முறை உறவுகள் கூட தற்காப்புக்கலை சக்தியில் தளர்ச்சியில் உள்ளவனை அடித்து உதைக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென அவனின் ஆன்மாவை அழுத்தி இன்னொரு ஆன்மா உள்ளே வருகிறது. அதுதான் நவீனகாலத்தில் உள்ள இளைஞன் ஒருவனின் ஆன்மா. விபத்தில் இறந்தவன், தொன்மைக் காலத்தில் உள்ள ஜின் ஃபேனின் உடலுக்குள் புகுகிறான். சொல்லும்போது இருக்கும் ஆச்சரியம். கதையாக படிக்கும் போது வற்றிவிடுகிறது.  எதிர்கால உலகில் இருந்து வருபவன், தொன்மைக்காலத்தில் உள்ளவர்களை விட நவீனமாக யோசிக்கவேண்டும். திட்டமிடவேண்டும் அல்லவா? ஆனால் அப்படியான ஐடியா ஏதுமின்றி தற்காப்புக்கலை கற்று மெல்ல முன்னேறுகிறான். அதுதான் கதையை சாதாரண கதையாக மாற்றுகிறது. லின் ஃபேனின் அப்பா சிறந்

அநீதிக்கு எதிரான குரலாக ஒலிக்கும் ஆக்ரோஷ இசை!

படம்
  மெட்டல் மியூசிக்  நிக்கோல் ஹார்னிங் 104 பக்கங்கள் ஹெவி மெட்டல் இசை இன்று தமிழ் சினிமாவுக்கும் வந்துவிட்டது. பிராந்திய மொழி சினிமாவுக்கு வருவதற்கு வேண்டுமானால் தாமதமாகி இருக்கலாம். ஆனால், எழுபது எண்பதுகளில் அந்த இசையை ரசிக்கும் பலர் உலகமெங்கும் உருவாகிவிட்டார்கள்.   இசைவிழாக்களுக்கு செல்பவர்கள் பிறருக்கு அதைப்பற்றி சொல்வது குறைவு. சொன்னாலும் புரிந்துகொள்ளவேண்டுமே? இங்குள்ள இசைஞானிகளுக்கு ஹெவி மெட்டல் என்பது இரைச்சல் என்பதாகவே மாறாத கருத்துண்டு. கிணற்றுத் தவளைகளுக்கு அகங்காரம் எப்போதுமே அதிகம்தான்.  ஹெவி மெட்டல் இசை எதற்கு உருவானது, அதன் பின்னணி, அதில் பிரபலான இசைக்குழுக்கள், அவர்களின் புகழ், வீழ்ச்சி, பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட விமர்சனங்கள், சமூகம் வேறுபட்ட இசையை எப்படி புரிந்துகொண்டது, உள்வாங்கியது என்பதைப் பற்றி நிக்கோல் ஹார்னிங் விரிவாக விளக்கியுள்ளார்.  சமூக அமைப்பில் உள்ள பிரச்னைகளை எதிர்க்க நினைப்பவர்கள், அதில் பொருந்திபோக முடியாதவர்கள் மெட்டல் இசையை உருவாக்குகிறார்கள். அதைக் கேட்பவர்களும் இப்படியான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லையென்றாலும் பரவாயில்லை. தலையை மேலும்

மனிதர்கள் தங்களை எப்படி வெளியுலகத்தில் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்?

படம்
  கல்யாணம் என்றால் உற்சாகமான புன்னகை, சிரிப்பு இருக்கும். ஒருவர் இறந்துவிட்டார், அவரின் ஈமச்சடங்களில் வருத்தம், துயரம் இருக்கும். அங்கு போய் இறந்தவருக்கு மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூற முடியாது. இதெல்லாம் ஒருவர் அனுபவப்போக்கில் கற்றுக்கொள்வதுதான். கற்றபிறகு ஆக்சன் சொல்லாமலேயே நடிக்க வேண்டியதுதான்.  பிடிக்காது என்றாலும் கூட வாழ்க்கையில் நிறைய இடங்களில் டோண்ட் கொஷின் தி எமோஷன் என மனதிற்குள்  சொல்லிக்கொண்டு சில நாடக தருணங்களை செய்யவேண்டியிருக்கும். அதை தவிர்க்க முடியாது. சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்பதற்கென யூனிஃபார்ம் ஆடைகளை அணிந்த பெண்கள், ஆண்கள் இருப்பார்கள். இவர்கள் அணிந்துள்ள ஆடை, நகை, இவர்களை சுற்றியுள்ள பொருட்கள் அனைத்துமே கலை இயக்குநர் தோட்டாதரணி போடும் செட் போலவே இருக்கும். குறையே சொல்ல முடியாது. நட்சத்திர ஹோட்டல்களில் குறிப்பிட்ட பிரபல செஃப் வரும் தினங்களில் இதுபோல வரவேற்பும், மரியாதையும் இருக்கும். எதற்கு இதெல்லாம், இதெல்லாம் உண்மையா என்றால் கிடையாது. ஒருவரின் பாக்கெட்டில் உள்ள பணம் இன்னொருவரின் கையில் வரவேண்டும். அதற்காகத்தான்

இந்தியாவிற்கு தேர்தலை இலக்காக கொள்ளாத தலைமை தேவை! - ரகுராம் ராஜன், பொருளாதார வல்லுநர்

படம்
  பொருளாதார வல்லுநர், முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம்ராஜன்  நேர்காணல்  உலகப் பொருளாதாரம், இந்தியாவின் நிலை என இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்? ஆண்டு தொடங்கும்போது உலகப்பொருளாதாரத்தின் முன் நிறைய கவலைகள் இருந்தன. இந்தியாவைப் பற்றி கவலைப்படவும் நிறைய விஷயங்கள் உள்ளன. அமெரிக்க பொருளாதாரம் மெல்ல வேகம் இழந்ததற்கான அறிகுறிகளை கண்டோம். இந்த பாதிப்பு கடுமையாக அல்லது மென்மையாக இருக்குமா என்பதுதான் கேள்வி. கடினமாக இருக்கும் என்பதுதான் அடையாளம் கண்ட விஷயம். எனவே, முழு உலகமும் இந்த வழியில் பயணிக்கிறது.  பெருந்தொற்று காலத்தில் இருந்து சீன பொருளாதாரம் பெரிதாக முன்னேற்றமடையவில்லை. ஐரோப்பிய பொருளாதாரமும் கூட வேகம் பெறவில்லை. தொய்வடைந்துதான் உள்ளது. இந்தியாவைப் பார்த்தால், இந்தாண்டு சிறிது வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் இந்த விஷயங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  எந்தெந்த விஷயங்களை, முக்கிய அம்சங்களை கவனமாக பார்க்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?  2021ஆம் ஆண்டு தொடங்கி வெளிநாட்டு முதலீடுகள் குற

தனிநபர் சுதந்திரத்திற்கு மதிப்பளித்த உளவியலாளர் சாலமன் ஆச்!

படம்
  தனிநபர் சுதந்திரம்  வெளிநாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக மதிப்புண்டு பிற மூன்றாம் உலக நாடுகளை விட அங்கு கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கிறார்கள். ஆனால் அதேசமயம் மறைமுகமாக கண்காணிப்பும் களையெடுத்தலும் உண்டு. இன்று வலதுசாரிகளின் தலையெடுப்பால் கண்காணிப்புச் சட்டங்களும், சர்வாதிகார நிர்வாக முறைகளும் என நிலைமை வெகுவாக மாறிவருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கருத்து சுதந்திரம் சார்ந்த பாதைக்கு வந்து சேர பலநூறு ஆண்டுகள் பிடித்தன இந்த நாடுகளில் குழுக்களை விட தனிநபர்களுக்கே அதிக மதிப்புண்டு. ஜப்பான், ஆப்பிரிக்கா, ஃபிஜூ ஆகிய நாடுகளில் குழுக்களுக்கும் அவர்களின் கருத்துகளுக்கும் மதிப்புண்டு.  தொடக்க கால அமெரிக்காவில், கம்யூனிசம் பேசினால் அவர்களை கைது செய்து சிறையில் வைத்து சித்திரவதை செய்வது வழக்கம். சொந்தகருத்துகளை பேசியவர்களை, மனித உரிமைக்கு குரல் கொடுத்தவர்களை தேசதுரோகி என்று கூறிவிடுவார்கள். இப்படி மனதிலுள்ள கருத்துகளை வெளிப்படையாக பேசும் தனிநபர்களை குறிப்பாக கம்யூனிஸ்டுகளை கைது செய்யும் வழக்கத்தை தொடங்கியவர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான ஜோசப் மெக்கார்த்தி. இவரது ச