இடுகைகள்

உக்கிரபுத்தன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூப்பர் ஆட்சியர் சுகாஸ்!

படம்
பெண்களைக் காக்க மறந்த இந்தியா ! பேச்சளவிலும் விளம்பரங்களிலும் ' பேட்டி பச்சாவோ ' என இந்திய அரசு கூறினாலும் வல்லுறவு , பாலியல் தாக்குதல் , கடத்தல் சம்பவங்களில் இந்தியா முதலிடத்திலுள்ளதாக அண்மையில் வெளியான தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் செய்த ஆய்வு கூறுகிறது . முதலாவதாக இந்தியாவும் அடுத்தடுத்த இடங்களில் ஆப்கானிஸ்தானும் , சிரியாவும் இடம்பெற்று அதிர்ச்சியளித்துள்ளன .   அண்மையில் வெளியான 2016 தேசிய குற்றப்பதிவு ஆணைய (NCRB) அறிக்கையில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருக்கிறது . சைபர் குற்றங்களின் அளவு 6.3% உயர்ந்துள்ளது . இதில் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் ஏற்படும் வன்முறை சம்பவங்களின் விகிதம் 32.6%. பாலியல் வல்லுறவில் டாப் இடங்களில் மத்தியப்பிரதேசமும் (4,882), உத்தரப்பிரதேசமும் (4,816) மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் (4,189) போட்டா போட்டியிடுகின்றன . இந்தியாவில் குற்ற சராசரியின் அளவு 55.2% என்றால் தலைநகரான டெல்லியில் மட்டும் பெண்கள் மீது அதிகரித்துள்ள குற்றங்களின் விகிதம் 160.4% உயர்ந்து கிறுகிறுப்பு தருகிறது .

தாய்ப்பால் குடித்தால் அழகு கெடும்!

படம்
இடம்பெயரும் சூழல் அகதிகள்! போர் , வன்முறை , அரசியல் சீர்குலைவுகளால் 68.5 மில்லியன் மக்கள் தாய்நிலத்தை இழந்து சூழல் அகதிகளாக உலகை வந்து வருகின்றனர் என்கிறது ஐ . நா அறிக்கை . இதில் மியான்மர் மற்றும் சிரியா நாடுகள்  50 சதவிகிதத்திற்கும் அதிகமான அகதிகளை உருவாக்கி வருகிறது .  " அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கொள்கைகளை உருவாக்கினால்தான் அகதிகள் பிரச்னையை எளிதாக அணுகமுடியும் " என்கிறார் ஐ . நாவின் அகதிகள் கமிஷனரான ஃபிலிப்பினோ கிராண்டி . 16.2 மில்லியன் மக்கள் கடந்தாண்டு அகதிகளானார்கள் எனில் தினந்தோறும் 44 ஆயிரத்து 500 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள் ; அதாவது 2 நொடிகளுக்கு ஒருவர் எனும் விகிதத்தில் என தகவல் தருகிறது ஐ . நா அமைப்பு . சிரியாவில் 6.3 மில்லியன் ,  பாலஸ்தீனத்தில் 5.4 மில்லியன் , ஆஃப்கானிஸ்தானில் 2.6 மில்லியன் , தெற்கு சூடானில் 2.4. மில்லியன் , மியான்மரில் 1.3 மில்லியன் என எகிறிய அகதிமக்கள் ஜெர்மனி , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலமாகியுள்ளனர் . " ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வருபவர்களில் 85 சதவிகிதம் வறுமையான ,

இன்னோவோ காரை மறுத்த சிம்பிள் அமைச்சர்!

படம்
இன்னோவா கூடாது ; பார்ச்சூனர் போதும் ! மக்கள் பணி என்பதற்காக அமைச்சர்கள் தங்கள் சொகுசை குறைத்துக்கொள்ள வேண்டுமா என்ன ? கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமதுகான் அப்படித்தான் சொல்லியிருக்கிறார் . கர்நாடகாவின் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் ஸமீர் அகமதுகான் , அரசு வழங்கிய டொயோட்டாவை உறுதியாக ஏற்க மறுத்துவிட்டார் . எளிமையாக வாழ ஆசைப்படுகிறாரா என்ன ? அப்படியெல்லாம் இல்லை . அது சின்ன காராம் . எனவே , பெரிய சைசில் உள்ள ஃபார்ச்சூனர் கொடுத்தால்தான் ஆச்சு என கண்டிஷன் போட்டுள்ளார் அமைச்சர் ஸமீர் . " நான் சிறுவயதிலிருந்தே பெரிய கார்களில் பயணப்பட்டவன் . எனவே முன்னாள் முதல்வர் சித்தராமையா பயன்படுத்திய ஃபார்ச்சூனர் காரை கொடுத்தால் போதும் . முதல்வருக்கு விளம்பரம் தேவையில்லை . அமைச்சராகிய நான் சாலையில் போகும்போது அமைச்சரின் கார் என மக்களுக்கு தெரிய வேண்டாமா ? " என பணிவாக பேட்டியளித்தார் அமைச்சர் . அரசு ஸமீர் கேட்டபடி காரை வழங்கியதை நாம் சொல்லவும் வேண்டுமோ ? சிம்பிள் ஆசை , சின்சியர் அமைச்சர் ! 2 இந்தியா ரொம்ப பிஸி ! இந்தியா ஐடி துறையினர் மட்டுமல்ல இந்தி

செய்தியாளரை அழ வைத்த அதிபர் ட்ரம்ப் !

படம்
லீகல் கஞ்சா! உலகெங்கும் 125 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வந்தாலும் பெரும்பாலான நாடுகளில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பொருள் மரிஜூவானா . அண்மையில் கனடா ஜி 7 நாடுகளில் முதல்நாடாக கஞ்சா மீதான தடையை நீக்கி மாற்றி யோசித்துள்ளது . இன்னும் ஓராண்டுக்குள் கனடாவில் கஞ்சா சட்டப்பூர்வமாக விற்பனைக்கு வரும் . " செனட்டில் நாம் கொண்டுவந்துள்ள மசோதாவின் மூலம் கஞ்சா விற்பனையை சட்டவிரோத மனிதர்களின் கைகளிலிருந்து வெளிக்கொண்டு வந்துள்ளோம் " என்று ஏகத்துக்கும் பெருமைப்பட்ட  கனடா பிரதமர் ஜஸ்டின் மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி இது . லீகல் செய்தால் கருப்பு மார்க்கெட்டிலிருந்து கஞ்சாவை வெளிக்கொண்டுவந்து அரசு கண்காணிக்க முடியும் . கஞ்சா அடிமைத்தனம் என்பது 9 சதவிகிதம் என்பதால் புகையிலை (32%), மது (15%), கோகைன் (16%) ஆகியவற்றை விட பாதிப்பு குறைவானதே . இத்தாலி மற்றும் இஸ்‌ரேல் கார்டல்களுக்கு செல்லும் பேரளவிலான வருவாய் இனி கனடா அரசுக்கு மட்டுமே சொந்தம் . உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதோடு வருமானமும் உயரும் .   நியூஸ்‌ரீடரை அழவைத்த ட்ரம்ப் அமெரிக்க அதிபர

டெல்லியில் அழிக்கப்படும் மரங்கள்!

படம்
சொகுசுக்காக அழிக்கப்படும் மரங்கள் ! இந்தியாவில் தலைநகரமான டெல்லியில் காற்று மாசு விவகாரம் உலகளவில் சூழலியல் தளங்களில் முக்கிய செய்தியானது . இதில் பலரும் அறியாத விஷயம் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் 16 ஆயிரத்து 500 மரங்கள் குடியிருப்பு வசதிக்காக அநீதியாக வெட்டப்பட்டு வரும் அவலம் . டெல்லியின் சரோஜினி நகர் , நௌரோஜி நகர் , நேதாஜி நகர் , தியாக்ராஜ் நகர் , மொகமத்பூர் , கஸ்தூர்பா நகர்  னிவாஸ்புரி ஆகிய இடங்களிலுள்ள மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி கொடுத்ததால் விளைந்த விபரீதம் இது . " குடியிருப்பு வசதிக்காக என்று கூறி மரங்களை வெட்டினால் இப்பகுதிகளிலுள்ள குழந்தைகள் , முதியோர்கள் ஆகியோர் பாதிக்கப்படமாட்டார்களா ?" என கேள்வி எழுப்புகிறார் மரங்களைக் காக்க போராடிவரும் ஜட்கா . ஆர்க் வலைதள நிறுவனர் சிக்லா குமார் . ஒரு மரம் வெட்டப்பட்டால் பத்து மரக்கன்றுகளை நடுவது வனத்துறை விதி . 1500 மரங்கள் வெட்டப்பட்டுவிட்ட நிலையில் மீதி மரங்களை காப்பாற்ற ஜட்கா . ஆர்க் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறது . i

செஃப்பின் உயிரைக்காப்பாற்றிய முஸ்லீம்!

படம்
பிரபல செஃப்பை காப்பாற்றிய முஸ்லீம்! கருணைக்கு மதமில்லை என்பதை பிரபல செஃப் விகாஸ் கண்ணா தன் செயலின் மூலம் நிரூபித்துள்ளார் . மும்பை கலவரத்தில் தன்னைக் காப்பாற்றிய முஸ்லீம் குடும்பத்தை சந்தித்து இஃப்தான் உணவருந்தி ஃபிளாஷ்பேக்கை அசைபோட்டுள்ளார் செலிபிரிட்டி சமையல்கலைஞர் . 1992 ஆம் ஆண்டு மும்பையில் கலவரம் வெடித்தபோது ஷெரட்டன் ஹோட்டலில் பயிற்சியாளராக இருந்தார் விகாஸ் . கட்கோபார் ஏரியாவிலிருந்த சகோதரர் என்னவானார் என்ற பயத்தில் அவரைத் தேடிப்போனபோது , கலவரக்காரர்கள் துரத்த , முஸ்லீம் குடும்பத்தினர் இரு நாட்கள் அடைக்கலம் கொடுத்து உயிர்காத்து உதவியுள்ளனர் . அதோடு விகாஸின் சகோதரரையும் தேடி அழைத்து வந்து விகாஸை ஒப்படைத்துள்ளனர் . " கண்ணீரும் நெகிழ்ச்சியும் நிறைந்த அச்சம்பவத்தில் உதவிய முஸ்லீம் குடும்பத்தை நினைவுகூரவே ரம்ஜான் நோன்பை அன்றிலிருந்து இன்றுவரை கடைபிடித்துவருகிறேன் " என சமூகவலைதளத்தில் உணர்வெழுச்சியுடன் எழுதியுள்ளார் விகாஸ் .

ஆசிய அமெரிக்கர்களை ஒதுக்கும் ஹார்வர்டு!

படம்
ஹார்வர்டில் தலைதூக்கும் இனவெறி ! ஆசிய அமெரிக்க மாணவர்களை இனவெறியுடன் நடத்துவதாக 388 ஆண்டுகள் தொன்மையான அமெரிக்க கல்விநிறுவனமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . கடந்த 2000-2015 வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்ளை செய்து தேர்வுகள் எழுதினாலும் தனிப்பட்டரீதியில் அட்மிஷன் ரேட்டிங்குகளை ஆசிய மாணவர்கள் குறைவாகவே பெற்றுள்ளனர் . இது ஒரு விதியாக உருவாக்கப்படாவிட்டாலும் ஆசிய - அமெரிக்க மாணவர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாகுபாடுடன் அணுகுவது 2013 ஆம் ஆண்டே விமர்சிக்கப்பட்டது ." ஆசிய அமெரிக்க மாணவர்களின் அட்மிஷன் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 29% உயர்ந்துள்ளது .  இதிலிருந்தே மாணவர்களை பாகுபாடுடன் நாங்கள் நடத்தவில்லை என்பது நிரூபணமாகிறது " என்கிறார் ஹார்வர்டு அதிகாரிகளில் ஒருவர் .      2 இந்துப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம்கள் ! கர்நாடகாவின் வித்யாபுரத்திலுள்ள ஜானவஸதி காலனியைச் சேர்ந்த பவானி , திடீர் மாரடைப்பால் இறந்துபோனார் . திர

தவிக்கும் 9 லட்ச அகதிகள்!

படம்
அப்டேட்டாகும் ஐஐடி ! இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடிகளும் தன் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளன . தற்போது செயல்பட்டு வரும் 23 ஐஐடிக்கள் பாடத்திட்டத்தை வெறும் தொழில்நுட்பம் என மட்டும் அமைக்காமல் கலை , சமூகம் , மனிதநேயம் தொடர்பான விஷயங்களை உட்புகுத்த முடிவுசெய்துள்ளதாக ஐஐடி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது . " பொறியாளர்களை புதுமைத்திறன் கொண்டவர்களாக உருவாக்க இப்புதிய மாற்றங்கள் உதவும் " என்கிறார் டெல்லி ஐஐடி பேராசிரியர் ராம்கோபால் ராவ் . ஐஐடி இசை , இசைக்கருவிகள் தொடர்பான பாடங்களை உருவாக்க தொடங்கியுள்ளது . இதற்கு முக்கியக்காரணம் , பிற பட்டதாரிகளைப் போலவே ஐஐடியன்களுக்கும் வேலையின்றி தவித்ததுதான் காரணம் . பொருளாதார அறிவியல் , உளவியல் , தத்துவம் ஆகியவையும் தனிபடிப்புகளாக ஐஐடிகளில் விரைவில் இடம்பெறும் .  2 தாய்மண்ணை இழந்த ஒன்பது லட்சம் அகதிகள் ! சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் காரணமாக இவ்வாண்டில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் . கடந்த ஏழாண்டுகளில் இடம்பெயர்ந்த அகதிகளில் இந்த எண்ணிக்கையே அதிக

குழந்தை தொழிலாளர்களின் இறப்பு!

படம்
ஜூனியரைக் காப்பாற்றிய சீனியர் ! என்கவுண்டரில் சமூக விரோதிகளை கொல்லத்தயாராகும் போலீஸ் உயிரை தியாகம் செய்யவும் ரெடியாக இருக்கவேண்டும் என்பதை டெல்லி சீனியர் போலீஸ் தன் செயலின் மூலம் உணர்த்தியிருக்கிறார் . டெல்லியில் நடந்த என்கவுண்டரில் சப் இன்ஸ்பெக்டர் பிஜேந்தர்சிங் தேஸ்வால் தன் உடலை கவசமாக்கி சீறிய தோட்டாக்களை தடுத்து தன் ஜூனியர் கான்ஸ்டபிள் குர்தீப் சிங்கின் உயிர் காத்துள்ளார் .25 வயதான குர்தீப்சிங்குக்கு குழந்தை பிறந்து மூன்றுமாதமாகியுள்ளது . ராஜேஷ் பார்தி உள்ளிட்ட ரவுடிக்குழுவினர் நான்கு பேர் ஸ்பாட்டில் கொல்லப்பட்டனர் . இத்தாக்குதலில் சிறப்பு பிரிவைச் சேர்ந்த எட்டுபேர் காயமுற்றனர் . போலீசின் சிறப்பு பிரிவில் பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றிவரும் பிஜேந்தர்சிங் தேஸ்வால் இதுவரை இருமுறை குண்டடி பட்டுள்ளார் . நட்புக்காக தன் உயிரையும் கொடுக்க துணிந்த பிஜேந்தரின் வீரச்செயலை போலீஸ் வட்டாரம் புகழ்ந்து பேசிவருகிறது . மரணவிளிம்பில் குழந்தைகள் ! உலகம் முழுவதும் 5-17 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 15.2 கோடி . இதில் 7.3 கோடி குழந்தைகள் மிக ஆபத்தான த

மக்களுக்கு மது! பசுவுக்கு வாழ்க்கை!

படம்
வீரர்களுக்கு சம்பளம் கட் ! அண்மையில் ஹரியானா அரசு விளையாட்டு வளர்ச்சிக்காக செய்த அதிரடியாக மாநில வீரர்களின் சம்பளத்தை கட் செய்துள்ளது . எதற்கு ? விளையாட்டு வளர்ச்சிக்காக . நம்புங்கள் . ஹரியானா அரசின் விளையாட்டுத்துறை , அனைத்து மாநில விளையாட்டு வீரர்களும் தம் சம்பளத்தில் மூன்றில் ஒருபகுதி சம்பளத்தை விளையாட்டு கவுன்சிலில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது . " வர்த்தகரீதியான அல்லது மாநில அரசின் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தம் ஊதியத்தில் மூன்றில் ஒருபகுதியை விளையாட்டு கவுன்சிலில் செய்து விளையாட்டு வளர்ச்சிக்கு உதவ வேண்டும் " என அறிக்கையில் ஹரியானா விளையாட்டுத்துறை தகவல் தெரிவித்துள்ளது . இதற்கு மல்யுத்த வீராங்கனை கீதாபோகத் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .   மக்களுக்கு மது ! பசுவுக்கு வாழ்க்கை ! இப்படியெல்லாம் ஐடியா கொடுக்கும் மங்குணி அமைச்சர்கள் யார் என்றே தெரியவில்லை . ராஜஸ்தானில் அப்படி ஒரு ஐடியாவை செயல்படுத்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள் . ராஜஸ்தானில் எவ்வளவு மது குடிக்கிறீர்களோ அந்தளவுக்கு பசுக்கள் நலமாக வாழும் . அங்

50 ஆயிரம் சிறுதொழில்கள் மூடப்பட்டதன் காரணம் என்ன?

படம்
குறுந்தொழில்களை கொன்ற ஜிஎஸ்டி ! தமிழ்நாட்டில் கடந்த 30 மாதங்களில் வார்தா புயல் , பணமதிப்பு நீக்கம் , ஜிஎஸ்டி உள்ளிட பிரச்னைகளால் 50 ஆயிரம் குறுந்தொழிலகங்கள் மூடப்பட்டுவிட்டன என சிறு , குறு தொழில்துறை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது . 2016-17 ஆண்டில் தமிழ்நாட்டில் 2.67 லட்சம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கிவந்தன . தற்போது அதில் அதன் எண்ணிக்கை 2.18 லட்சமாக சுருங்கிவிட்டது . இதில் பணியாற்றிய 5 லட்சம் பேரின் வேலையும் பறிபோயுள்ளது .  "8-10 சதவிகிதம் பேர் மட்டுமே வங்கி நிதியுதவி பெற்று தொழில் தொடங்கியவர்கள் . பிற தொழில்முனைவோர் அனைவரும் தனியார் நிதிபெற்றவர்கள் . பணமதிப்பு நீக்கம் , ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் ஆகிய சிக்கல்களில் சிறுகுறு தொழில்கள் தடம்புரண்டுவிட்டன " என்கிறார் சிறு மற்றும் குறு தொழில் (TANSTIA) சங்கத்தலைவரான சி . கே . மோகன் . உத்யோக் ஆதார் மெமோரண்டம் (UAM) தகவல்களை ஊடகங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்கிறது அரசுத்தரப்பு .   தொழில்துறைக்கான