டெல்லியில் அழிக்கப்படும் மரங்கள்!
சொகுசுக்காக அழிக்கப்படும்
மரங்கள்!
இந்தியாவில் தலைநகரமான
டெல்லியில் காற்று மாசு விவகாரம் உலகளவில் சூழலியல் தளங்களில் முக்கிய செய்தியானது. இதில்
பலரும் அறியாத விஷயம் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் 16 ஆயிரத்து
500 மரங்கள் குடியிருப்பு வசதிக்காக அநீதியாக வெட்டப்பட்டு வரும் அவலம்.
டெல்லியின் சரோஜினி
நகர், நௌரோஜி நகர், நேதாஜி நகர், தியாக்ராஜ்
நகர், மொகமத்பூர், கஸ்தூர்பா நகர் னிவாஸ்புரி ஆகிய இடங்களிலுள்ள மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி கொடுத்ததால் விளைந்த
விபரீதம் இது. "குடியிருப்பு வசதிக்காக என்று கூறி மரங்களை
வெட்டினால் இப்பகுதிகளிலுள்ள குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர்
பாதிக்கப்படமாட்டார்களா?" என கேள்வி எழுப்புகிறார் மரங்களைக்
காக்க போராடிவரும் ஜட்கா.ஆர்க் வலைதள நிறுவனர் சிக்லா குமார்.
ஒரு மரம் வெட்டப்பட்டால் பத்து மரக்கன்றுகளை நடுவது வனத்துறை விதி.
1500 மரங்கள் வெட்டப்பட்டுவிட்ட நிலையில் மீதி மரங்களை காப்பாற்ற ஜட்கா.ஆர்க் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறது.
i