இடுகைகள்

சாதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெமினா - சாதித்த பெண்கள்! எளிய மக்களின் பிரச்னைகளை டிவியில் பேசிய தொகுப்பாளர்

படம்
          ஷானாஸ் ஹூசைன் ஆயுர்வேத அழகு கலைஞர் இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆயுர்வேத அழகுக்கலைஞர் இவர். தனது தந்தையிடம் கடன் வாங்கி மும்பை பிளாட்டில் தனது மருத்துவமனையைத் தொடங்கினார். முதலீடு 35 ஆயிரம் ரூபாய். வெளிநாட்டு முக அழகு கலைஞர்களிடம் பல்வேறு விஷயங்களை கற்றவர்தான்.ஆனால் ஆயுர்வேதம் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். செயற்கையான வேதிப்பொருட்கள் வேண்டாமே என்று யோசித்ததால் நேர்ந்த மாற்றம் இது. முதன்முதலில் ரோஸ் சார்ந்த ஸ்கின் டோனர் ஒன்றை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஏற்றம்தான். இன்று சந்தையில் இவரது நிறுவனத்தின் 375 பொருட்கள் பரபர விற்பனையில் உள்ளன. ஹார்வர்டு பல்கலையில் தனது பிராண்ட் பற்றி மாணவர்களுக்கு உரையாற்றியுள்ளார். அவர்களின் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றிலும் ஹூசைன் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 40 ஆயிரம் பேர்களுக்கு அழகுசிகிச்சை சார்ந்த பயிற்சியை வழங்கியுள்ளார் ஹூசைன். இவரது போர்ட்ரைட் ஓவியர் ஒன்றை ஓவியர் எஃப் ஹூசைன் வரைந்தார். அதனை லண்டன் கிரிஸ்டி நிறுவனம் ஏலத்தில் விற்றது. ஆயுர்வேத அழகு சிகிச்சையை உலகம் முழுக்க கொண்டுபோய

படிக்கும் வயதில் தொழிலதிபர்களாக சாதித்த மாணவர்கள்!

படம்
  லட்சங்களைக் குவிக்கும் இளம் தொழிலதிபர்கள் முன்னர் ஹார்வர்டு, கேம்ப்ரிட்ஜில் படித்துவிட்டு நிறுவனம் தொடங்கி வெற்றி பெறுவது பழங்கதையாகிவிட்டது. தற்போது படிக்கும்போது ஏதாவது நிறுவனம் தொடங்கி கல்லூரி படிக்கும்போது லட்சாதிபதியாக பல மாணவர்கள் மாறி வருகிறார். இதற்கு என்ன காரணம்? படிக்கும்போது பெற்றோர் துணையாக இருப்பார்கள். தொழில்முயற்சி என்றாலும் கூட எப்படியாவது உதவுவார்கள். ஆனால் முப்பது வயதில் உங்களை நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது நஷ்டமானாலும் அதனை நீங்களே ஏற்கவேண்டும் என மில்லினிய தத்துவம் சொல்லுகிறார்கள். இவர்கள் தங்களது முன்மாதிரி யாக கொள்வது ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ரிதேஷ் அகவர்வாலைத்தான். இவர் 17 வயதில் நிறுவனத்தைத் தொடங்கி, 22 வயதில் லட்சாதிபதியாகிவிட்டார். இவர் தந்த ஊக்கத்தினால் நிறைய டீனேஜ் இளைஞர்கள் துணிந்து தொழில்துறையில் காலடி எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ரத்தன் டாடா போன்றவர்களும் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் தேஷ்பாண்டே. இவர் தனது பெற்றோரிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஜெனரிக் மருந்துகளை

ரத்தசோகையைப் போக்கும் பிஸ்கெட்!

படம்
பெரு நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் 30 நாட்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை போக்கும் ஊட்டச்சத்து பிஸ்கெட்டை உருவாக்கி உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹிஸ்டரி டிவி சேனலில் ஜனவரி மாதம் 29ஆம் தேதி, உலகை மாற்றிய ஐடியா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நியூட்ரி ஹெச் என்ற பிஸ்கெட்டை தயாரித்த விவசாய பொறியியலாளருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அது ரத்தசோகையை போக்கும் என்பதுதான் பிஸ்கெட்டின் விசேஷம். இதைக் கண்டுபிடித்தவர் ஜூலியோ கேரி பாரியோஸ். ”’மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் இந்த பிஸ்கெட்டை சாப்பிடலாம். முப்பது நாட்களில் இதிலுள்ள புரத சத்தும மூலம் அவர்களின் ரத்தசோகை பிரச்னை தீர்ந்துவிடும் ’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரு நாட்டில் பாரியோஸின் நியூட்ரி ஹெச் பிஸ்கெட் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள 50 சதவீத குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. ரத்தசோகையை போக்கும் இந்த பிஸ்கெட்டில் அப்படி என்ன விஷயம் உள்ளது. கீன்வா எனும் தானியம், கோகோ, பொவைன் ஹீமோகுளோபின் ஆகிய மூன்று சேர்மானங்களே இந்த பிஸ்கெட்டை உ

தொழில் நாயகன் நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இயக்குநர்!

படம்
சத்யா நாதெள்ளா - நம்பர் 1 நீங்கள்தான் நம்பர் 1 தலைவராக ஃபோர்ப்ஸ் இதழில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், அவரே வெட்கப்படுவார். 1992ஆம் ஆண்டு மைக்ரோசாப்டில் சேர்ந்தவர், இன்று 129 பில்லியன் டாலர்கள் வருமானம் சம்பாதிக்கும் நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இவர் பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் போல ஊடகங்களில் அறிமுகம் கொண்டவர் அல்ல. ஆனால் சிறப்பான குழுக்களை அவர்களின் அரசியல் கடந்து உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். சிறந்த இயக்குநரின் தகுதி என்பது, குழுவாக மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் சக்தியை அவர்களுக்கே காட்டுவதுதான் என்கிறார். 2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட்ஸ் நிறுவன இயக்குநராக அறிவிக்கப்பட்ட சத்யா நாதெள்ளாவின் முன் நிறைய தடைகள் இருந்தன. நிறுவனம் எதிர்காலத்தில் எந்த தொழில்நுட்பத்தை பிடித்துக்கொள்ளவேண்டும் என்று தெரியாமல் இருந்தது. அதனை ஒழுங்கு செய்து பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து நிறுவனத்தின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கினார். மேக கணிய முறையை லினக்ஸ் கட்டமைப்பை இணைத்து வலிமையாக்கினார். நிறுவனத்தின் பலத்தோடு பலவீனங்களையும் அறிந்திருந்தார். அதுவே அவரை பலமாக்கிய

சீனாவில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்! - சீனாவின் நடவடிக்கை என்ன?

படம்
giphy.com நவ.11 ஆம் தேதி உலக அளவில் சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. தினம் என்று வந்தால் யாருக்கு கொண்டாட்டம்? ஆம். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்குத்தானே? 2009ஆம் ஆண்டிலிருந்து அலிபாபா நிறுவனம், இதனை மிகப்பெரிய விற்பனைக்கான நாளாக பார்க்கிறது. அப்படித்தான் தனது வலைத்தளத்தில் விளம்பரம் செய்கிறது. 2015 ஆம் ஆண்டு 140 மில்லியன் பார்சல்களாக இருந்த விற்பனை, 2017ஆம் ஆண்டு 331  மில்லியன் பார்சல்களாக உயர்ந்துள்ளது. நான்கில் ஒருவர் என ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு கூறியது சீனாவில் மட்டும் என நினைவில் கொள்ளுங்கள். இதனை எப்படி கற்பனை செய்யலாம் தெரியுமா? அமெரிக்க நாட்டிலுள்ள ஒட்டுமொத்த குடிமகன்களும் ஆளுக்கொரு பார்சல் வாங்கியுள்ளதாக கருதலாம். விற்பனை, சாதனை என மார்தட்டிக்கொள்வது சரிதான். ஆனால், இதனால் ஆண்டுதோறும் 9.4 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன என்று க்ரீன்பீஸ் அமைப்பு மற்றும் ஃப்ரீ டு பிளாஸ்டிக் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு சிங்கிள்ஸ் தினத்தில் அலிபாபா நிறுவனம் 22 பில்லியன் டாலர்களுக்கு வணிகம் ச

சக்திவாய்ந்த இந்தியப் பெண்கள்! - பிசினஸ் டுடே கௌரவம்!

படம்
நாடியா சௌகான், பார்லே அக்ரோ பிசினஸ் டுடே சக்தி வாய்ந்த பெண்கள் என்ற அட்டைப்பட கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் சாதித்த பெண்கள் இளம் தலைமுறையினருக்கு என்ன சொல்கிறார்கள்? ஃபால்குனி நாயர், நிறுவனர், நைகா. பெண்கள் உயர்பதவிகளை அடைய தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் நிறுவனத்தின் முக்கியமான பதவிகளைப் பெறமுடியும். உங்கள் விதி நீங்கள் சுமக்கும் பொறுப்பில்தான் இருக்கிறது. மைலீட் அகா வில்லியம்ஸ், தெற்காசியத் தலைவர், பிபிசி ஸ்டூடியோஸ் பெண்ணாக நீங்கள் பணியில் நிறைய போராட வேண்டும். உங்கள் வேலை தரும் சுதந்திரத்தை நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படக்கூடாது. குழுவில் உள்ளவர்களையும் அரவணைத்துச் செல்லும் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். நாடியா சௌகான், தலைவர், பார்லே அக்ரோ இன்று தொழில்துறையில் பெண்கள் முன்னேற நிறைய வாய்ப்புகள் உள்ளன. தேவை கொஞ்சம் ஆர்வமும், உழைப்பும்தான். உங்கள் உழைப்பே உங்களின் பெயரை பிறருக்குச் சொல்லும். அபூர்வா புரோகித், தலைவர் ஜாக்ரன் குழுமம் பெண்கள், தம்மை புதுப்பித்துக்கொண்டே இரு

பிட்ஸ் - இஸ்ரோவின் சாதனைகள்!

படம்
இஸ்ரோ - சாதனைத் துளிகள் 1981ஆம் ஆண்டு, இஸ்ரோவின் ஆப்பிள் செயற்கைக்கோள் மாட்டுவண்டியில் வைத்துக் கொண்டுவரப்பட்டது. மோட்டார் வண்டிகளில் கொண்டு வரும்போது, அதிலுள்ள உலோகங்களோடு ஆன்டெனாவின் சிக்னல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர். 2013 ஆம் ஆண்டு இஸ்ரோ, செவ்வாயை ஆராய்வதற்கான விண்கலமாக மங்கல்யானை விண்ணில் ஏவியது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற இத்திட்டத்தின் செலவு 450 கோடி ரூபாய். 2008ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்ற சந்திரயான் 1, நிலவில் தடம் பதித்த நாடுகளில் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குக் கொடுத்தது. இஸ்ரோ கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்த பணிகளுக்கான செலவுத்தொகை, நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டில் அடங்கிவிடும். இஸ்ரோவின் வர்த்தக ராக்கெட் ஏவும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் (Antrix), 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. 2016 -2019 வரையில் 239 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, 6,289 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.  இஸ்ரோ, பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சுபார்கோ தொடங்கியபிறகு ஆறு ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்டது. இன்று இஸ்ர

ஸ்கின்னி ஜீன்ஸ் டேட்டா!

படம்
ஸ இன்று டெனிம் ஜீன்ஸ்களில் நிறைய வகைகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் ஸ்கின்னி ஜீன்ஸ்கள். அவை பற்றிய டேட்டா இதோ.. 2006 ஆம் ஆண்டு டைம் இதழ், ஸ்கின்னி ஜீன்ஸ் விரைவில் உலகெங்கும் புகழ்பெறும் என்று கூறியது. அமெரிக்காவில் பெண்கள் ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இதன் அளவு 6 சதவீதம். 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஸ்கின்னி ஜீன்ஸ்களின் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் விற்கும் பெண்களுக்கான ஸ்கின்னி ஜீன்ஸ்களுக்கான அளவு 40 சதவீதம். ஆண்டுதோறும் விற்கும் ஸ்கின்னி ஜீன்ஸ்களின் அளவு 1.24 பில்லியன்கள் ஆகும் ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. நன்றி: க்வார்ட்ஸ் 

நடந்தால் நன்றாக இருக்கும் டெக் ஆசைகள்!

படம்
படத்தில் சில ஆச்சரிய விஷயங்களைப் பார்த்திருப்போம். அதுபோல வாழ்க்கையில் நடந்தால் சூப்பராக இருக்குமே என்று பலருக்கும் ஆசை இருக்கும். அப்படி சில விஷயங்களைப் பார்ப்போம். Learning by plugging in  (The Matrix) பத்தாயிரம் மணிநேரங்களை செலவழித்தால் நீங்கள் எந்த விஷயத்திலும் மாஸ்டர் ஆகிவிடலாம்தான். ஆனால் அதற்கு ஏது நேரம்? காதலன் பிரபுதேவா போல, சிங்கிள் நைட்டில் சாதனை டான்சராக மாறுவதுதான் பலரது லட்சியமும். மேட்ரிக்ஸ் படத்தில் சிலமணிநேரத்தில் சர்வகலா பைட் மாஸ்டராக கீனு ரீவ்ஸ் மாறுவாரே அதுதான் அனைவருக்கும் தேவை . சாத்தியமா? இதற்கு மூளையின் செயல்பாடுகளை அறிவது அவசியம். அதில் நியூரான்களில் ஒவ்வொரு செய்தியும் எப்படி சேமிக்கப்படுகிறது என்பதை அறிந்தால்தான், ஒரு மூளையிலிருந்து மற்றொருவருக்கு அந்த தகவல்களை கடத்தி மாஸ்டர் ஆக்க முடியும். மேற்சொன்ன ஐடியா சொல்ல எளிதாக இருந்தாலும் டெக்னிக்கலாக மிக சிக்கலானது.  தகவல்: செயின் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக உளவியலாளர் பீல்டர் போல்டியாக்.  Holodecks  (Star Trek) ஸ்டார்ட்ரெக் படத்தில் வரும் ஹோலோ டெக்ஸ் வசதி, பலரையும் பிரமிக்க வ

காதல் நாவல்களின் சாதனை!

படம்
Frank Joseph\pinterest காதலுக்கும், காமத்திற்கும் எப்போதுமே இந்தியாவிலும் சரி., உலகிலும் சரி மவுசு உண்டு. என்ன காரணம், எதார்த்தம் மோசம் என்றாலும் கனவிலும் கற்பனையாலும் நாம் அனைவராலும் விரும்பப்பட, அனைவரையும் விரும்பும் கதாபாத்திரமாகவே நினைத்துக்கொள்கிறோம். ரொமான்ஸ் நாவல்களும் இந்த தன்மையில் இருப்பதால் விற்பனையில் உலகமெங்கும் சக்கைபோடு போடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் காதல் நூல்களின் விற்பனை மதிப்பு 1.44 பில்லியன் டாலர்கள். இணைய உலகில் காதல் கதை எழுத்தாளருக்கு கிடைக்கும் சராசரி வருமானத்தொகை சதவீதம் 3. கடந்த ஆண்டு விற்ற இபுக் நாவல்களின் அளவு 70% இ.எல். ஜேம்ஸ் எழுதிய ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே நாவலில் நாயகி அனஸ்தாசியா ஸ்டீல் எத்தனை முறை உதட்டை கடித்தாள் தெரியுமா?  11 நூறுக்கும் மேற்பட்ட ரொமான்ஸ் நாவல்களை எழுதிக் குவித்தவர் டேனியல் ஸ்டீல். இவர் ஐந்து திருமணங்கள் செய்தவர். அண்மையில் தனது கணவரை 71 வயதில் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். மில்ஸ் அண்ட் பூண்ஸ் ரக நாவல்கள் ஆண்டுக்கு எவ்வளவு ரிலீசாகிறது தெரியுமா? 720 தினசரி இரண்டு மணிநேரம்  எழுதிய ஹெச்.எம். வார்டு

எவரெஸ்டில் சாதனை சமையல்!

படம்
எவரெஸ்டில் சாதனை சமையல் !- ச . அன்பரசு தங்கம் , வெள்ளி என எதுகொடுத்தாலும் போதாது போதாது என்பவர்கள் இதற்கு மேல் முடியாது என சொல்லி சரண்டர் ஆவது உணவில் மட்டும்தான் . அப்படி பல்லாயிரக்கணக்கான வயிறுகளை திருப்தியுடன் குளிர்வித்து தன் சமையல் சாதனைகளையும் நீட்டித்துக்கொண்டே செல்கிறார் லண்டனின் புகழ்பெற்ற சமையல்கலைஞரான வினீத் பாட்டியா . லண்டனின் செல்வாக்கான மனிதர்களின் லிஸ்டில் தவிர்க்க முடியாத சமையல் ஆளுமை . 30 ஆண்டு கிச்சன் அனுபவத்தில் பிரபலங்களின் நாக்குகளை தன் கைமணத்திற்கு அடிமையாக்கியவர் . மிட்செலின் ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒன்பது ஹோட்டல்களை நடத்தும் சமையல்கலைஞர் வினீத் பாட்டியா செய்யும் சமையல் எக்ஸ்பரிமெண்டுகளுக்கு வானமே எல்லை . தற்போது இவர் தொட்டுள்ளது எவரெஸ்ட் சிகரத்தை . எவரெஸ்டில் சமையல் செய்வதுதான் வினீத்தின் அடுத்த சவாலே சமாளி டாஸ்க் . மும்பையில் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்த வினீத்திற்கு விமானப்படையில் சேர்வதுதான் கனவு . எழுத்து தேர்வில் ஜெயித்தவருக்கு உடற்தகுதி மைனஸாக , விரக்தி அடைந்தவரின் வாழ்க்கையை அவர் பிடித்த சமையல்கரண்டி கரையேற்