இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரக்கமில்லாத ரவுடியோடு தொழிலதிபர் மகன் ஆடும் போங்காட்டம்!

படம்
            ஆட்டாடிஸ்தா நிதின் , காஜல் அகர்வால் தொழிலதிபரின் மகனான நிதின் , தனது அப்பா பெயரை சொல்லாமல் அவர் பாட்டிற்கு கல்லூரிக்கு செல்வது , நண்பர்களோடு சுற்றுவது , வம்பு வழக்குகளை இழுத்து வருவது என குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கட்டுப்படாமல் வாழ்கிறார் . சுருக்கமாக அவரது குடும்பத்தில் அவர் படிக்காதவன் . பிறர் படித்தவர்கள் . இந்த நிலையில் நிதின் , ரவுடிகளை அடித்து உதைக்கும்போது , அந்த இடத்தில் காஜலின் தோழிக்கு பிறந்தநாள் பார்ட்டி நடைபெறுகிறது . அந்த விழாவே சண்டையால் களேபரமாகி சங்கடமாகிறது . இதைப்பற்றி காஜல் காவல்துறையில் புகார் செய்கிறார் . அங்குதான் நிதின் மிகப்பெரிய பணக்காரர் வீட்டு பிள்ளை என தெரிய வருகிறது . இன்ஸ்பெக்டர் அவரை விட்டுவிடுகிறார் . ஆனால் நிதின் காஜலை விடுவதாக இல்லை . அவரை பின்தொடர்ந்து செல்கிறார் . நிதினின் அப்பா நாக பாபு , மனிதர்களின் வாழ்வை கெடுக்காத தொழில் செய்ய நினைப்பவர் . இவரின் தொழில் போட்டியாளர் ரகுவரன் . அவருக்கு நாக பாபுவை எப்படியேனும் தோற்கடித்தால் போதும் என்ற வெறி . இப்படி போட்டி போட்டதில் இருவரின் நிறுவனங்களும் கீழேத

வில்லியிடம் இருந்து காதலியை மீட்கும் நாயகனின் போராட்டம்!

படம்
  சகியா தெலுங்கு தருண், நவ்ஹீத் சைருஷி   கிராமத்தில் உள்ள சக்திவாய்ந்த பெண்மணியின் மகளை கூட்டி வர ஸ்விட்சர்லாந்து செல்லும் நாயகன், காதலில் விழுகிறார். பெண்மணி கூறியபடி அவரது மகளை கூட்டி வந்தபிறகுதான் தெரிகிறது. அந்தபெண்மணி, அவரது அம்மா கிடையாது. எதிரி குடும்பத்து பெண். பழிவாங்குதலுக்காக அவரை ஏமாற்றி தனது மகளென கூறி வரவைத்திருக்கிறார் என்று. இப்போது நாயகன் எப்படி அவரிடமிருந்து அந்த அப்பாவி பெண்ணை மீட்டு திருமணம் செய்கிறார் என்பதே கதை. படத்தில் ஒரே ஒரு உருப்படியான விஷயம் ஆங்கில நடிகையான நவ்ஹீத் சைருஷிதான். அவரை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். மற்றபடி படத்தில் பாத்திரமாக சந்தனா என்று வருகிறார். அதில் பெரிய மாற்றமோ, ஆச்சரியமோ இல்லை. லூசுப்பெண் போல காட்டுகிறார்கள். துயரம். அதிலும் அவர் ஒரே மாதிரியான உடையில் படத்தில் பெரும்பாலான நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறார். எதற்கு என அவருக்கும் தெரிவதில்லை. நமக்கும் தெரியவில்லை. ஹரி பாத்திரத்தில் தருண் நடித்திருக்கிறார். முதல் காட்சியில் தனது அண்ணன் பற்றி மாற்றிப் பேசி அவர் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள உதவுகிறார். ஆனால் அதற்குப் ப

பணக்காரப் பெண்ணை எப்படியேனும் கல்யாணம் செய்துவிட்டாலே வாழ்க்கை ஈஸி!

படம்
  அதிருஷ்டம் இயக்கம் சேகர் சூரி இசை தினா எம் ஏ   தத்துவம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் நாயகன் ஒருநாள் ஜோதிடம் பார்க்கிறார். அதில், அவருக்கு கல்யாணம் நடந்தால் இப்போதிருக்கும் அரி பரியான அவதி வாழ்க்கை இருக்காது என கூறப்படுகிறது. ஆனால், வேலையில்லாமல் சுற்றும் நாயகனை யார் கல்யாணம் செய்துகொள்வார்கள்? இப்படியான நேரத்தில் நண்பனின் ஆலோசனை பேரில் இளவரசி சுயம்வரத்தில் கலந்துகொள்கிறார். அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதே கதை.   இயக்குநர், கடினமான காலகட்டத்தில் தனது வாழ்க்கையையொட்டி இந்த கதையை யோசித்து எழுதியிருப்பார் போல. நம்பிக்கை, காதல், நட்பு என எந்த விஷயமும் படத்தில் ஒட்டவில்லை. ரீமாசென்னை கவர்ச்சிப் பாடல்களுக்கென பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிடுகிறார்கள். நாயகி கஜாலாவுக்கான பங்கு படத்தில் மிகவும் குறைவு. நாயகன் பகிரங்கமாக அவருக்கு பலாத்கார முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார். அதைக்கூட அவர் தனது அழகுக்கான அங்கீகாரமாக ஏற்று அவரைக் காதலித்து மணம் செய்துகொள்கிறார்.   படத்தில் ஒரே சுவாரசியமான விஷயம், நாயகிக்கு பலாத்கார முத்தம் கொடுத்துவிட்டு நாயகன

மணல் மாஃபியா தலைவனை கைது செய்ய முயலும் சிபிஐ அதிகாரி!

படம்
  மஃப்டி - கன்னடம் மஃப்டி (கன்னடம்) சிவராஜ்குமார், ஷான்வி, ஶ்ரீமுரளி ரோகணூர் என்ற ஊரில் உள்ள பாரதி ரத்தினவேல் என்ற மாஃபியா தலைவனை பிடிக்க அரசு முயல்கிறது. இதற்காக ஜனா என்ற சிபிஐ அதிகாரி, அண்டர்கவராக செல்கிறார். அவருக்கும் பாரதி ரத்னவேல் குழுவுக்குமான உறவு எப்படி அமைந்தது என்பதே கதை. மணல், மண், கனிமங்கள் என அனைத்தையும் அள்ளி வணிகம் செய்து ரோகணூர் என்ற ஊரில் பெரும் மாஃபியா தலைவனாக இருப்பவர் பாரதி ரத்னவேல். அவரை பிடிக்க அரசியல் கட்சிகள் அழுத்தம் தர சிபிஐ களமிறங்குகிறது. ஆனால், இந்த முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் பலரும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். தீயிட்டு கொளுத்தப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள். எனவே, சிபிஐயே திணறுகிறது. இந்த நேரத்தில் ஜனா என்ற அதிகாரியை   நியமித்து அண்டர்கவராக இரு என்று கூறுகிறது. அவரும் மெல்ல பாரதி ரத்னவேலின் மாஃபியா குழுவில் சேர்ந்து மெல்ல உயர்கிறார். துறைமுகத்தில் ரவுடியாக இருப்பவர், மெல்ல பாரதி ரத்னவேலின் ரோகணூர் பகுதிக்கு செல்கிறார். அங்கு சென்று அவரைப் பற்றி ஆதாரங்கள் சேகரிக்கத் தொடங்குகிறார். அதாவது, அவர் செய்யும் குற்றங்கள், தொழில்கள் பற்றியவை. பாரதி

நான் யார் என்ற கேள்வியை எழுப்புவதுதான் கலை! - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

படம்
  ஸ்டீபன் ஸ்பீல்பர்க், திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் திரைப்பட இயக்குநர். ஸ்டீபனுக்கு எழுபத்தாறு வயதாகிறது. ஜாஸ்   பாகங்ள், சேவிங் பிரைவேட் ரியான், மைனாரிட்டி ரிப்போர்ட், ஈ.டி எக்ஸ்ட்ரா டெரஸ்டெரியல், ஷிண்ட்லர் லிஸ்ட் ஆகிய திரைப்படங்களை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய தயாரித்த படங்களின் வணிக லாபம் 38.7 பில்லியன் டாலர்கள்.   சினிமாவின் சக்தியை எப்போது உணர்ந்தீர்கள்? இளமையிலேயே சினிமாவின் சக்தியை உணர்ந்தேன். திரைப்படங்களை பார்ப்பதன் வழியாக என்னுடைய பெற்றோருடனான உறவும் கூட மாறியது. குறிப்பாக என்னுடைய அம்மாவினுடைய உறவு. அவர், அப்பாவைக் கடந்து இன்னொருவரை காதலிப்பதை அறிந்தபிறகு, அவரை நான் என்னுடைய அம்மாவாக கருதவில்லை. ஒரு மனிதராக அவரை அனைத்து பலவீனங்களும் கொண்டவராக என்னை நானே பார்ப்பது போல பார்த்தேன். பத்தாண்டுகளுக்கு   எனது அம்மாவை,   அவராகவே கருதிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தது குடும்பத்தில் வேறு எவரையும் விட அவரை நெருக்கமானவராக உணரச் செய்தது. உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய சுயசரிதை படங்களை எடுக்க நினைத்துள்ளீர்களா? எனது அம்மா, எப்போது திரைப்படங்களில் நமது கதையைச் சொல
  ஓப்பன் மைண்ட்ஸ் 2023 விக்ரமாதித்ய மோட்வானே 46 இந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் உதவி இயக்குநர். 2010ஆம் ஆண்டு உடான், 2013ஆம் ஆண்டு லூட்டெரா ஆகிய மறக்க முடியாத திரைப்படங்களை உருவாக்கியவர். தனது சினிமா பயணத்தில் தொடக்க கால சினிமா செட்டில், மிக இளம் வயது கொண்ட நபராக இருந்து தற்போது செட்டில் அதிக வயதான நபராக மாறியிருக்கிறார். அப்போதும் இப்போதும் மாறாத காதலுடன் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். 1940ஆம் ஆண்டில் இந்தி சினிமா உருவாக்கப்பட்டதை ஜூப்ளி என்ற வெப் சீரியசாக எடுத்து வருகிறார். ‘’கதை சொல்லும் முறை, பாத்திரங்கள் என அனைத்துமே வேறுபட்டவை’’ என ஜூப்ளி வெப் சீரிஸ் பற்றி கூறுகிறார். இந்தி சினிமாவின் வெளியை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டு செல்லும் நவீன இயக்குநர்களில் மோட்வானே முக்கியமானவர். ஆபிரஹாம் வர்கீஸ் 68 மருத்துவர், எழுத்தாளர் ஒரு மருத்துவர் நூல் எழுதுவதாக இருந்தால் என்ன எழுதுவார்? அவரது அறுவை சிகிச்சைகள், திறன் வாய்ந்த நுட்பங்கள், காப்பாற்றிய மனிதர்கள் இப்படித்தானே? ஆனால் ஆபிரஹாம் எழுதிய நாவலான தி காவ்னன்ட் ஆஃப் வாட்டர், அதன் கதை அளவில் புகழ்பெற்று பல

பணம் விரயமாகும் வழித்தடம்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  பணம் விரயமாகும் வழி 27.1.2022 அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘நீரெல்லாம் கங்கை’ என   பெயரிட்டு அமேஸான் தளத்தில் பதிப்பித்திருக்கிறேன். ஜானகிராமம் நூலை படிக்க நினைத்தேன். நூல் 806 பக்கம். போனில் படிக்க முடியாது. எனவே, அமீஷின் ராமாயண புனைவுக்கதையை படித்துக்கொண்டு இருக்கிறேன். பவித்ரா ஶ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பில் நூல் நன்றாக உள்ளது. கவிதக்கா, அண்மையில் பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு வந்துவிட்டார். ஈரோடு போகும் வேலை இருந்தால் சென்று பாருங்கள். நீங்கள் பேசவில்லை என வருத்தப்பட்டார். ‘சாங் ஷி’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். பத்து வளையங்களின் சக்தி என படத்தின் கதையை விளக்கினால் சலவைத்தூள் விளம்பரம் போலவே இருக்கும்.   சீன கலாசாரம் சார்ந்து அமெரிக்க படத்தை எடுத்திருக்கிறார்கள். இவரின் பாத்திரத்தையும் அவெஞ்சரில் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன். பள்ளிகள் இனியும் திறக்கவில்லை என்றால், நான் துளிர் இதழுக்கு கட்டிய ஆண்டு சந்தா முழுக்க வீண்தான். பணம் வீணாவது ஏதோ ஒருவகையில் நடந்துகொண்டே இருக்கிறது. வினோத் மேத்தா பற்றிய நூலை இன்னு

தனித்துவமான பாத்திரங்களின் இயல்பை பேசும் மின்னூல்! - What an idea sirji

படம்
  பொதுவாக மசாலா படங்களில் பரிசோதனை முயற்சிகளை நிறைய இயக்குநர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் இன்று வரும் புதிய இயக்குநர்கள் அதையும் ஒரு கை பார்க்கிறார்கள். இன்று தியேட்டரில் வெளியாகும் படம் கடந்து ஓடிடி என்பது தனி ஒரு வணிகமாக மாறிவருகிறது.  வணிகப் படங்களில் தனித்துவமான பாத்திரங்களை நெருக்கடிகளுக்கு பணியாமல் உருவாக்கி வெற்றி பெற வைப்பது கடினம். அப்படியான சில பாத்திரங்களை மட்டுமே இந்த நூல் பேசுகிறது.  படம் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் கூட சில பாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது. சினிமா என்பது நம் ரத்தத்தோடு கலந்த ஒன்றாக மாறி வெகு காலமாகிறது. அப்படியான சில மசாலா படங்களில் பாத்திரங்களைப் பற்றி பேசி அதன் உளவியலை ஆராய்வதே நூலின் நோக்கம். நூலின் அனைத்து படங்களும், பாத்திரங்களும் மகத்தானவை என்று கூறமுடியாது. எனது மனதிற்கு வித்தியாசமான பாத்திரங்கள் என்று தோன்றியவற்றை எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்தால் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி! லாய்ட்டர் லூன் நூலைப் பெற... https://www.amazon.in/dp/B0C8MQP59X

சினிமாவில் உள்ள தனித்துவமான பாத்திரங்கள் பற்றிய நூல்! - விரைவில் அமேஸானில் வெளியீடு

படம்
 

தன்னைச்சுத்தி நடக்குறதை கவனிக்கிறதும், திறந்த மனசோட இருக்கிறதும் பத்திரிகைக்காரனுக்கு முக்கியம்!

படம்
  பாலசுப்பிரமணியன், ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன்   பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன் சினிமாவில் இருந்து எது உங்களை பத்திரிகை நோக்கி ஈர்த்தது? எனக்கு சினிமா மேல எப்பவும் ஆர்வம் இருந்தது கிடையாது. சொல்லப்போனா, சினிமால இருந்ததே ஒரு நிர்பந்தம். பத்திரிகைக் கனவுதான் என்னைத் துரத்திக்கிட்டே இருந்தது. உங்களுக்கு பத்திரிகை ஆர்வம் எப்போது வந்தது? சின்ன வயசுலேயே. பனிரெண்டு வயசுலேயே கையெழுத்து பத்திரிகை நடத்தியிருக்கேன். சந்திரிகா அப்படின்னுட்டு. இப்போது வரும் பத்திரிகைகளைப் படிக்கிறீர்களா? இன்றைய தமிழ் இதழியலை எப்படி பார்க்கிறீர்கள்? ம்ஹூம்.. நான் எதையும் படிக்கிறதில்ல. கண்ணு சுத்தமா தெரியலை. எப்பவாது, எதையாவது வாசிக்கணும்னு தோணினா பேரனைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கிறதோட சரி. வீட்டுல ஹிண்டு மட்டும்தான் வாசிப்பேன். ஆபீஸ்லதான் மத்த பத்திரிகைகள் வாசிக்கிறதெல்லாம். ஆபீஸோட போன பல விஷயங்கள்ல அந்த வாசிப்பும் ஒண்ணு.   ஒரு பத்திரிகை ஆசிரியராக , மிகவும் முக்கியமான தருணம் என எதைச் சொல்லுவீர்கள்? நான் ஆனந்தவிகடனில் இருந்த ஐம்பது வருஷங்களும

மீசையை முறுக்கி சவால் விட்டுத் திருடும் மாதவன்! - மீச மாதவன், கிரேஸி கோபாலன் - கேரக்டர் புதுசு

படம்
  மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் மலையாளம் திலீப் (மாதவன் நாயர்)   கிரேஸி கோபாலன், மீசை மாதவன் என இரு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் திலீப் நடித்தார் என்பதல்ல. இரண்டு படங்களிலும் நாயகன் திருடன். ஆனால் அப்படி மாறியதற்கு இறந்தகாலத்தில் நெகிழச்செய்யும் ஃபிளாஷ்பேக் உண்டு. அதை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.   மாதவன் நாயர். இந்தப் பெயரைச் சொன்னாலே ஊரில் உள்ள அனைவருக்குமே அவர் திருடன் என்பது தெரியும். மலையாளத்தில் கள்ளன் என்கிறார்கள்.   மீசை மாதவன் என்பதுதான் அவன் பட்டப்பெயர். ஊர் மக்கள் யாராவது அவனிடம் லொள்ளு பேசி கோபம் வந்து மீசை முறுக்கினால் அன்று, சம்பந்தப்பட்டவர் வீட்டுக்குள் முக்கியமான ஏதாவது ஒரு பொருளேனும் களவு போகும். அதை தடுக்கவே முடியாது. அந்தளவு திருட்டில் ஜெகஜாலன். திருட்டில் ரிடையர்டாகி கால் ஆணி வந்துவிட்ட முன்னாள் திருடரிடம் வித்தை கற்ற ஆள், மாதவன். ஊருக்குள் புதிய பொருட்களை வாங்க முடியாத சிலர், மீசை மாதவனிடம் எனக்கு இந்த பொருட்கள் வேண்டுமென்று சொல்லி, ஆர்டர் செய்து காசு கொடுத்து வாங்குவதும் உண்டு. மாதவனைப் பொறுத்தவரை அவனுக