இடுகைகள்

நூல் அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய கட்டுரை நூல்கள் - மனிதநேயத்தின் இருட்டுப் பக்கம்

படம்
புத்தக அறிமுகம் 1.தி புக் ஆஃப் டிலைட் , என்பது சுய முன்னேற்ற நூல் அல்ல. இந்தப் புத்தகம் . பூமியில் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க என்ன செய்யலாம் என சிறிய பேரகிராப்களாக கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் ரோக்சேன் கே. 2. அன்புக்கும் வெறுப்புக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இதனை நன்கு உணர்ந்தால்தான் புரிந்துகொள்ளமுடியும். இந்த நூலின் ஆசிரியரும் பல்வேறு ஆய்வுகள், செய்திகள் ஆகியவற்றை வைத்து மனிதநேயம், கருணைக்கு பின்னுள்ள கருப்பு பக்கங்கள் புட்டு புட்டு வைக்கிறார். இதில் உங்களுக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். அனைத்தும் தெளிவான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் என்பதோடு இதில் உளவியல் பக்கங்களும் வாசிக்க சுவாரசியம் கூட்டுகின்றன. 3. ஃபிகரிங் நூல் அன்பு மற்றும் உண்மை ஆகியவற்றைப் பற்றி வரலாற்று ஆளுமைகள் சொன்ன கருத்துகள், அவற்றின் மீதான பிறரின் பதில்கள், அதன் செல்வாக்கு குறித்து விளக்கியுள்ளார். வானியலாளர் ஜோகன்னஸ் கெப்ளர் தொடங்கி உயிரியல் ஆய்வாளர் ரேச்சல் கார்சன் ஆய்வுகளில் முடிகிறது. 

சந்தோஷ புத்தகங்கள்! - ஜனவரி ரிலீஸ்

படம்
ஜனவரி ஜனுஹேரி என இந்த ஆண்டுக்கான ட்ரெண்டுகள் கிளம்பிவிட்டன. ஜனவரி மாதத்திற்கான புத்தகங்களும் வெளியாகத்தொடங்கிவிட்டன. அதில் சில நூல்கள்: விழிகள் தெறிக்கும் நேரம் வரை படிப்பு, கடிகாரமுள் ஓவர்டைம் பார்க்கும் வேலை,  தொந்தி தள்ளும் வயிறு, பேங்க் பேலன்ஸைக் காட்டி அந்தஸ்தான கல்யாணம் என இவை இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா? ஹேப்பி எவர் ஆஃப்டர் நூலாசிரியர் பால் டோலன், இவற்றை மறுத்து தன் எழுத்து வழியே புது வழி காட்டுகிறார். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு விதம் எனும்போது மேலே சொன்ன விஷயங்கள் எப்படி அனைவருக்கும் ஒன்றுபோல செட்டாகும் என யோசிக்க வைக்கிறது . உலகெங்கும் நியூஸ் எங்கில்லை. பாரம்பரிய சேனல்கள், பத்திரிகைகள் தாண்டி சமூகவலைதளங்கள் புதிய செய்திகளைச் சொல்லும் அதிவேக ஊடகங்களாகி பல ஆண்டுகளாகிவிட்டன. இந்த செய்தி சுனாமிகளிடமிருந்த நமக்கான அந்தர உலகைக் காப்பாற்றி எப்படி வாழுவது என்பதை ஆசிரியர் மேட் ஹைக் சொல்லுகிறார். சந்தோஷம் எப்படி உருவாகிறது என யோசித்திருக்கிறீர்களா? தந்தி முதல் தினகரன் வரை இதனை எப்படி அணுகி கட்டுரை எழுதுவார்கள்? டோபமைன், செரடோனின் என அறிவியல் முறையி

மணலின் கதை!

படம்
அலமாரி! Autonomy: The Quest to Build the Driverless Car—And How It Will Reshape Our World   Lawrence D. Burns ,   Christopher Shulgan 368pp Ecco தானியங்கி கார் – ஆராய்ச்சிகள் றெக்கை கட்டிப் பறக்கும் இக்காலத்தில் ஆராய்ச்சிகள் எப்படி தொடங்கின என்பது பற்றிய வளர்ச்சியை இந்நூல் துல்லியமாக விவரிக்கிறது.   கூகுள் தானியங்கி கார் ஆராய்ச்சிக்கான ஆலோசகராக உள்ள லாரன்ஸ் பர்ன்ஸ் இந்நூலை எழுதியுள்ளது மற்றொரு பிளஸ் பாய்ண்ட். The World in a Grain: The Story of Sand and How It Transformed Civilization Vince Beiser   294 pages Riverhead Books நீர், காற்றுக்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது மணல். இதிலுள்ள சிலிகா, கணினித்திரைக்கு அடிப்படைப்பொருள்.   இயற்கை ஆதாரமான மணல் எப்படி உலகெங்கும் குறைந்து வருகிறது என்பதை உலகப்போர் கால வரலாற்று சம்பவங்களிலிருந்து இந்நூல் விளக்குகிறது. நவீன வாழ்வுக்கு மணல் எவ்வளவு அவசியம் என்பதை பத்திரிகையாளர் வின்ஸ் பெய்சர் விளக்கியுள்ளார்.

அமெரிக்க பெண்களின் வரலாறு!

படம்
நூல்வெளி ! How Schools Work: An Inside Account of Failure and Success from One of the Nation's Longest-Serving Secretaries of Education Arne Duncan 256 pp Simon Schuster ஒபாமா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் செயலராக இரநுத அர்னே டங்கன் அப்போது அவர் சந்தித்த சவால்கள் , தீர்த்த பிரச்னைகள் , மறக்கமுடியாத மனிதர்கள் , நவீனமாகாத சங்கங்கள் , பாடத்திட்ட குளறுபடிகள் என அத்தனையையும் நித்ய சத்தியமாக எழுதியுள்ளார் . Our Stories, Our Voices: 21 YA Authors Get Real About Injustice, Empowerment, and Growing Up Female in America Amy Reed 320 pp Simon Pulse அமெரிக்கப் பெண்களுக்கு வரலாற்றில் நிகழ்ந்த ஏற்றம் , இறக்கம் , அவமானம் , மகிழ்ச்சி ஆகியவை குறித்து ஏமி ரீட் , எலன் ஹாப்கின்ஸ் , ஆம்பர் ஸ்மித் , சந்தியா மேனன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் எழுதிய 21 கட்டுரைகளின் தொகுப்பு .

மரணங்களில் கற்ற அனுபவ பாடங்கள்!

படம்
நூல் முற்றம் ! All That Remains: A Life in Death by Sue Black 68 pages Doubleday ஃபாரன்சிக் துறையில் பேராசிரியராக பணியாற்றும் சூ பிளாக் , தன் துறையில் தினசரி சந்திக்கும் வன்முறை , கொலைகள் , இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றால் நிகழ்ந்த  மரணங்களை அறிவியல் முறையில் விளக்குகிறார் . சோகமல்ல ; புன்னகையுடன் படிக்கும் விதமான எழுத்து இவரின் பெரும்பலம் . The Big Ones: How Natural Disasters Have Shaped Us (and What We Can Do about Them) by Lucy Jones 256 pages Doubleday உலகில் நடைபெற்ற இயற்கை பேரழிவுகள் கலாசாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றி முன்னாள் நிலநடுக்க ஆய்வு வல்லுநர் லூசி ஜோன்ஸ் இந்நூலில் விவரிக்கிறார் . இயற்கை பேரழிவுகள் பல்வேறு கனிமங்களை , வளமான மண்ணை , தலைவர்களை , கட்டுமானங்களை , அரசுகளை உருவாக்கியது எப்படி என சுவாரசியமாக விவரிக்கிறார் ஆசிரியர் லூசி ஜோன்ஸ் .

மனிதர்களின் குறைகள் அவர்களை வெற்றியாளர்களாக்கியது எப்படி?

படம்
புத்தகம் புதுசு ! Human Errors: A Panorama of Our Glitches, from Pointless Bones to Broken Genes by Nathan H. Lents 55 pages,Houghton Mifflin Harcourt பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த உயிரினமாக மனிதர்கள் உடலில் உள்ள பல்வேறு நேர்த்தியற்ற விஷயங்களைப் பற்றி பேசுகிற நூல் இது . முழங்கால் மூட்டு , தேவையற்ற எலும்புகளைக் கொண்ட மணிக்கட்டு , ஒரே குழாயின் வழியாக உணவும் உண்ணவும் மூச்சுவிடவும் உள்ள தன்மை எப்படி மனிதர்களின் வெற்றிக்கு காரணமானது என நாதன் இந்நூலில் விளக்கியுள்ளார் . Rocket Men: The Daring Odyssey of Apollo 8 and the Astronauts Who Made Man's First Journey to the Moon by Robert Kurson 384 pages Random House அப்பல்லோ 8 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் நேரத்தில் அமெரிக்கா சந்தித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெருக்கடிகள் , அரசியல் நிலைமை ஆகியவற்றைப் பேசும் நூல் இது . ரஷ்யாவின் சாதனைகளை முந்தும் முனைப்பில் மனிதர்களை நிலவுக்கு அழைத்து சென்ற முதல் பயணத்தைப் பற்றிய சுவாரசியமாக எழுதியுள்ளார் ராபர்ட் கர்சன் . 

க்யூபாவை புரிந்துகொள்ள வாசிக்கவேண்டிய நூல்கள் இவைதான்!

படம்
என் தேசம் க்யூபா ! THE OTHER SIDE OF PARADISE: LIFE IN THE NEW CUBA BY JULIA COOKE க்யூபாவின் ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோவில் ஆட்சியின் கீழ் க்யூப மக்களின் தினசரி வாழ்க்கையை படம்பிடித்து காட்டும் படைப்பு இது . க்யூப வரலாறு , விபசார தொழில் , சான்டிரியா மதம் என பல்வேறு விஷயங்களை நேர்முகங்கள் மூலம் வாசகர்களுக்கு விளங்க வைக்கிறார் . CUBA ON THE VERGE: 12 WRITERS ON CONTINUITY AND CHANGE IN HAVANA AND ACROSS THE COUNTRY EDITED BY LEILA GUERRIERO க்யூப வரலாற்றை பனிரெண்டு எழுத்தாளர்கள் ( ஆறு க்யூப குடிமகன்கள் , ஆறு வெளிநாட்டவர்கள் ) புட்டு வைக்கும் நூல் . க்யூப பத்திரிகையாளர் ஆப்ரஹாம் ஜிம்னெஸ் எனோவா இந்நூலை தொகுத்துள்ளார் . பேஸ்பால் காதல் , எல்லை பிரச்னைகளால் கலைந்த உறவுகள் என மனிதநேய பக்கங்களையும் பேசுகிற புத்தகம் இது . FROM CUBA WITH LOVE: SEX AND MONEY IN THE TWENTY-FIRST CENTURY BY MEGAN DAIGLE வழிகாட்டி , உள்ளூர் மக்கள் , சக பயணிகள் அனைவருக்கும் க்யூபாவில் எச்சரிப்பது விபச்சாரம் குறித்துதான் .  க்யூப மக்களுக்கும் வெளிநாட்டவருக்க

சர்வரோக நிவாரணி நீர்!

புத்தகம் பேசுது! No Immediate Danger: Volume One of Carbon Ideologies   William T. Vollmann Hardcover, 624 pages  Viking பருவநிலை மாறுதல்கள் குறித்து பிரபல சூழல் எழுத்தாளர் வில்லியம் டி வோல்மன் எழுதியுள்ள முக்கிய நூல் இது . ஜப்பானின் ஃபுகுஷிமாவுக்கு பலமுறை சென்று கதிர்வீச்சை அளவிட்டு , பாதிக்கப்பட்டவர்களுடன் , அணு உலையை ஆதரிப்பவர்கள் என தனித்துவமாக   உரையாடிய அனுபவங்கள் எழுத்துக்களாகி உள்ளன . Water's Healing Powers: Religion or Science?   by   David Broward 290pages Amazon Kindle வாழ்க்கைக்கு அடிப்படையான நீர் தொன்மைக்காலத்திலிருந்து இன்றுவரை உயிர்கள் உருவாக்கத்திலும் , மருத்துவத்திலும் பயன்பட்டுவருகிறது . கருப்பை முதல் நாம் இயங்க காரணமான ரத்தம் வரை நீரே அடிப்படை . நீர் என்பது வேதிப்பொருட்கள் கொண்ட வாசனை நிறமற்ற திரவமா ? அல்லது எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்ட அரிய திரவமா என்பதை ஆசிரியர் டேவிட் ப்ரோவர்ட் விளக்குகிறார் .

காணாமல் போன ஐன்ஸ்டீனின் மூளை!

படம்
புத்தகம் புதுசு ! RUDY’S RULES FOR TRAVEL Life Lessons from Around the Globe by   Mary K. Jensen 256pp She Writes Press அமெரிக்காவைச் சேர்ந்த மேரி , அவரது கணவர் ரூடி ஆகியோரின் கலகலப்பு , திகில் , சாகச அனுபவங்களைக் கொண்டதே இந்நூல் . மெக்சிகோ , இந்தோனேஷியா , ஸகாட்லாந்து ஆகிய இடங்களுக்கு செல்லும் மேரி தம்பதி அந்த இடத்தைப் பற்றி விளக்கமாக சொல்வதை விட சூழலுக்கேற்ப எப்படி வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது என விவரிப்பது அருமை .     They Lost Their Heads!: What Happened to Washington's Teeth, Einstein's Brain, and Other Famous Body Parts by   Carlyn Beccia    208pages P Bloomsbury USA Childrens ஐன்ஸ்டீனின் மூளை , வாஷிங்டனின் விரல் , பதினைந்தாம் லூயியின் இதயம் ஆகியவை காணாமல் போவதன் பின்னணியில் டிஎன்ஏ , ஸ்டெம்செல் , மூளை , உறுப்பு தானம் ஆகியவறைப் பற்றி பேசுகிறார் ஆசிரியர் கார்லின் பெக்சியா .  

புத்தகம் புதுசு!

படம்
புத்தகம் புதுசு ! Ghost Boys by Jewell Parker Rhodes 192pp Little, Brown Books தன் பொம்மைத்துப்பாக்கியால் போலீஸ் மூலம் சுடப்பட்டு அநியாயமாக ஆவியாகிறான் பனிரெண்டு வயசு ஜெரோம் . அப்போது தன்னைப் போன்ற சூழலில் இறந்த எம்மெட் டில் என்ற சிறுவனை சந்திக்கிறான் ஜெரோம் . இருவரின் வாழ்வு வழியாக அமெரிக்காவில் நிலவிவரும் இனவெறி அவலத்தை விவரிக்கிறார் ஆசிரியர் . The Stone Girl's Story by Sarah Beth Durst 336pp Clarion மலையில் வாழும் சிற்பி , தன் அபூர்வ திறமையால் பாறைகளை விலங்குகளாக வடித்து ஸ்பெஷல் திறமையால் அதற்கு உயிரும் கொடுக்கிறார் . அதில் மாய்கா எனும் பனிரெண்டு வயது சிறுமியும் அடக்கம் . திடீரென சிற்பி இறந்துபோக , பாறைகளின் உடலிலுள்ள வடிவங்களும் காலப்போக்கில் மறைய , உயிருடன் உலாவிய விலங்குகள் இறக்கின்றன . தங்களை மரணத்திலிருநது காக்கும் சிற்பி தேடி சிறுமி மாய்கா செல்லும் பயணமே கதை .  

ஊக்கம் தரும் பெண்களின் சுயசரிதை நூல்கள்!

படம்
இந்தியாவில் சுயசரிதைப்படங்கள் க்ளஸ்டர் குண்டுகளாக உருவாகி வருகின்றன. இந்நிலையில் ஹாலிவுட்டிலும் கூட பெண்களை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளிவரக்கூடும். பல்லாயிரம் பேரை ஊக்கப்படுத்திய, உற்சாகப்படுத்திய சில பெண்களின் சுயசரிதை நூல்கள் இவை.  சுயசரிதை நூல்கள் !  HARRIET TUBMAN // MOSES OF THE UNDERGROUND RAILROAD முப்பது ஆண்டுகள் அடிமையாக வாழ்ந்த ஹேரியட் டப்மன் அவ்வாழ்விலிருந்து தப்பி தன் சகோதரிகளை , கணவரைக் காப்பாற்றினார் . 1856 ஆம் ஆண்டு ஹேரியட்டின் தலைக்கு 40 ஆயிரம் டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டது . 300 க்கும் மேற்பட்டவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டார் ஹேரியட் .  MALIE “EMMY” NOETHER // THE WOMAN EINSTEIN CALLED A "GENIUS" ஜெர்மன் யூத கணித ஆசிரியையான அமேலி எம்மி நோதரின் வாழ்க்கை கதை . பதினைந்து ஆண்டுகள் காசு வாங்காமல் ஆசிரியையாக பணியாற்றிய நோதர் , எர்லாங்கன் பல்கலையில் கற்க அனுமதி பெறவும் சிரமப்பட்டவர் . இன்று இயற்கணிதம் , இயற்பியல் தியரிகளுக்காக பெருமையுடன் நினைவுகூரப்படுகிறார் அமேலி . KITTIE SMITH // THE

புத்தகம் புதுசு!

படம்
புத்தகம் புதுசு ! A Feast of Science: Intriguing Morsels from the Science of Everyday Life by Joe Schwarcz 240 pages ECW Press சர்க்கரை உடலுக்கு நல்லதா , புற்றுநோயை தீர்க்க நுண்ணுயிரிகள் உதவுமா , தக்காளியில் மீனின் மரபணுக்கள் பயன்படுத்தப்படுகிறதா என எக்கச்சக்க கேள்விகளுக்கு மருத்துவர் ஜோ விடையளித்து வாசகர்களின் பதட்டம் தணிக்கிறார் . தினசரி வாழ்வில் வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும் விளக்கம் தருவது சிறப்பு . Not That Bad: Dispatches from Rape Culture by Roxane Gay 368 pages Harper இன்றைய உலகில் முன்னெப்போதையும் விட பெண்களுக்கு எதிராக பெருகி வரும் சம்பள பாகுபாடு , வல்லுறவு , வன்முறை ஆகிய நோய்க்கூறுகள் பற்றி ஏமி ஜோ பர்ன்ஸ் , லிஸ் லென்ஸ் , கிளாரே ஸ்வார்ட்ஸ் , நடிகர்கள் ஆலி ஷீடி , கேப்ரியல் யூனியன் ஆகியோர் தம் கருத்துக்களை கட்டுரையாக எழுதியுள்ளனர் . பாலின பாகுபாட்டால் வல்லுறவு விஷயங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூகத்தில் வாழ தைரியம் தரும் படைப்பு இது .