இடுகைகள்

வழக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னைச்சுத்தி நடக்குறதை கவனிக்கிறதும், திறந்த மனசோட இருக்கிறதும் பத்திரிகைக்காரனுக்கு முக்கியம்!

படம்
  பாலசுப்பிரமணியன், ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன்   பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன் சினிமாவில் இருந்து எது உங்களை பத்திரிகை நோக்கி ஈர்த்தது? எனக்கு சினிமா மேல எப்பவும் ஆர்வம் இருந்தது கிடையாது. சொல்லப்போனா, சினிமால இருந்ததே ஒரு நிர்பந்தம். பத்திரிகைக் கனவுதான் என்னைத் துரத்திக்கிட்டே இருந்தது. உங்களுக்கு பத்திரிகை ஆர்வம் எப்போது வந்தது? சின்ன வயசுலேயே. பனிரெண்டு வயசுலேயே கையெழுத்து பத்திரிகை நடத்தியிருக்கேன். சந்திரிகா அப்படின்னுட்டு. இப்போது வரும் பத்திரிகைகளைப் படிக்கிறீர்களா? இன்றைய தமிழ் இதழியலை எப்படி பார்க்கிறீர்கள்? ம்ஹூம்.. நான் எதையும் படிக்கிறதில்ல. கண்ணு சுத்தமா தெரியலை. எப்பவாது, எதையாவது வாசிக்கணும்னு தோணினா பேரனைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கிறதோட சரி. வீட்டுல ஹிண்டு மட்டும்தான் வாசிப்பேன். ஆபீஸ்லதான் மத்த பத்திரிகைகள் வாசிக்கிறதெல்லாம். ஆபீஸோட போன பல விஷயங்கள்ல அந்த வாசிப்பும் ஒண்ணு.   ஒரு பத்திரிகை ஆசிரியராக , மிகவும் முக்கியமான தருணம் என எதைச் சொல்லுவீர்கள்? நான் ஆனந்தவிகடனில் இருந்த ஐம்பது வருஷங்களும
படம்
  வழக்குரைஞர் பத்மலட்சுமி ஜெயாமோகன், கேரளா கேரளத்தில் சாதித்த முதல் பால்புதுமையின வழக்குரைஞர் கேரளத்தில் தினக்கூலி தொழிலாளரான மோகன் என்பவரின் மகள், பத்மலட்சுமி ஜெயாமோகன். இவர், பால்புதுமையின இனக்குழுவைச் சேர்ந்தவர். தான் யார் என்பதை அடையாளம் கண்டு பெற்றோருக்கு முதலிலேயே கூறிவிட்டார். பிள்ளை கூறியதைக் கேட்டு அவர்களும் அடித்து உதைக்காமல் ஆதரவாக இருந்த   காரணத்தால் இப்போது வழக்குரைஞராகி இருக்கிறார். இதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பத்மலட்சுமியின் பெற்றோர், தனது மகளின் இயல்பை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டதுதான். தங்களது மகளைப் பற்றி அறிய அதுதொடர்பாக இணையத்தில் நிறைய தேடி அறிந்துகொண்டனர். கூடுதலாக மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றிருக்கின்றனர். பெற்றோர் இந்தளவு ஆதரவாக இருந்தாலும் சுற்றமும், நட்பும், கல்விக்கூடமும், சமூகமும் அந்தளவு கரிசனம் காட்டவில்லை. இயல்புக்கு மாறான வினோதம் என்று பல்வேறு விஷ வார்த்தைகளை வசைகளை சொல்லி திட்டினாலும் இணையத்தில் உள்ளவர்கள் எதிர்மறை தன்மையை உருவாக்கினாலும் பத்மலட்சுமி ‘’நான் அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளப்போவதில்லை ஒருவர் வேலையில்லாமல் இண

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க குடியுரிமை அமைப்புகளுக்கும் நன்கொடை வழங்குவது அவசியம்!

படம்
  ஏசிஎல்யூ - அமெரிக்க குடியுரிமை சங்கம் அமெரிக்கன் சிவில் லிபர்டிஸ் யூனியன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்களா? இந்த அமைப்பு அமெரிக்காவில் இப்போதைக்கு முக்கியமான செயல் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறது. அங்கு பெண்கள் கருக்கலைப்பை சுதந்திரமாக செய்துகொள்ளும் முறையை ஒழித்துக்கட்ட சில மாகாணங்கள் முயல்கின்றன. இந்த பிற்போக்குத்தனத்திற்கு எதிராக பெண்களின் உரிமையை வலியுறுத்தி ஏசிஎல்யூ போராடி வருகிறது. இத்தனைக்கும் இந்த அமைப்பு மக்களிடம் நன்கொடை பெற்றுத்தான் நூறு ஆண்டுகளாக உரிமைகளைக் காப்பாற்ற போராடி வருகிறது. இப்படி அரசின் சட்டத்திற்கு எதிராக போராடுவதால் அமலாக்கத்துறை தன்னார்வ குடியுரிமை அமைப்பின் அலுவலங்களில் சோதனையெல்லாம் நடத்துவதில்லை. வெளிநாட்டு பணத்தை பெறுகிறார்கள் என்று சொல்லி கேலி, அவதூறு செய்வதில்லை. நிறுவனர்களை, உறுப்பினர்களை, தன்னார்வலர்களை காவல்துறை மூலம் மிரட்டுவதில்லை. முக்கியமான பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைப்பதில்லை. வெளிநாட்டு மக்களைப் போலவே இந்தியாவில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பணம் ஆன்மிக அமைப்புகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் செல்கிறது. எல்லா

ஏழைகள், சிறுபான்மையினருக்கு எதிரான அநீதியை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - மல்லிகா சாராபாய், கேரள கலாமண்டல வேந்தர்

படம்
  தனது தாய் இறப்பின்போது.. மல்லிகா சாராபாய் மல்லிகா சாராபாய் பரதநாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய் மல்லிகா சாராபாய், கேரளா கலாமண்டலத்தின் தலைவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரான மல்லிகா, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் எம்பிஏ பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள தர்ப்பணா அகாடமியை முப்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த அகாடமியை மல்லிகாவின் பெற்றோரான விண்வெளி அறிவியலாளருமான விக்ரம் சாராபாயும், கேரளத்தின் அனக்கார வடக்கத் குடும்பத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் மிர்ணாளினி ஆகியோர் இணைந்து தொடங்கினர். கேரளத்தின் இடதுசாரி அரசு, கேரள கலாமண்டலத்தின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிஃப் முகமதுவை நீக்கிவிட்டு, மல்லிகா சாராபாயை நியமித்துள்ளது. மல்லிகா சாராபாய் பரதநாட்டிய கலைஞர், சமூகசேவகர், பத்ம பூஷன் விருது பெற்ற பிரபலம் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டியது. கலாமண்டலத்தின் வேந்தராக ஆனது எப்படிஇருக்கிறது? நாளிதழ்களில் படித்துத்தான் கலாமண்டலத்தில் வேந்தர், துணைவேந்தர் சார்ந்த விஷயங்களை அறிந்துகொண்டிருந்தேன். ஒருமுறை அகாடமியில் நாட்டிய நாடகத்திற்கான ஒத்திகை ச

அசுரகுலம் 6 - உயிர்வேட்டை மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 6 - உயிர்வேட்டை அசுரகுலம் 6 - உயிர்வேட்டை நூலில் இதுவரை வாசிக்காத பல்வேறு தொடர் கொலைகாரர்கள் பற்றி விவரிக்கப்படுகிறது. முக்கியமாக அனைவருமே இளமைக்காலத்தில் கடுமையான வறுமை, பெற்றோரின் புறக்கணிப்பை, நோய்களை, குறைபாடுகளை அனுபவித்தவர்கள். உடல், மனம் ஆகியவை நோயுற அவர்களைச் சுற்றியுள்ள சூழலும் ஒரு காரணம்.  சமூகம், சட்டத்தின்படிதான் ஒழுங்கு நிலை குலையாமல் காப்பாற்றப்படுகிறது. மனிதர்களைக் கொல்வது சட்டத்தின்படி அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, தொடர் கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது மரணதண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் வலிக்கு பதிலடியாக வலி என அவர்கள் செல்லும் பாதை திரும்பி வரமுடியாத ஒன்று. உயிர்வேட்டை நூலில் தொடர்கொலைகாரர்களின் உளவியலை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். நூலை வாங்க..... https://www.amazon.in/dp/B0C2CNFT8N அட்டைப்படம் - பின்டிரெஸ்ட் 

சீரியல் கொலைகாரரின் மகன் தனது கணவனா என சந்தேகப்படும் போலீஸ் அதிகாரி - ஃபிளவர் ஆப் ஈவில்

படம்
  ஃபிளவர் ஆஃப் ஈவில் - கே டிராமா லீ காங் ஜி - மூன் சே வோன் - ஃபிளவர் ஆஃப் ஈவில் பிளவர் ஆஃப் ஈவில் கே டிராமா லீ காங் ஜி, மூன் சே வோன்   பே சியாங் என்பவர் தனது டிடெக்டிவ் மனைவி, மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பே சியாங்கிற்கு இரும்பு கைவினைப்பொருட்களை செய்வதுதான் வேலை. இந்த நேரத்தில், அவரை சந்திக்க டிவி நிருபர் வருகிறார். அவருக்கு பே சியாங்கின் கடந்த காலம் தெரியும். அதாவது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலைக்குற்றம் பற்றி.. இதனால் நிருபவரை பே சியாங் தனது வீட்டில் கீழறையில் கட்டிப்போடுகிறார். இந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர், சீரியல் கொலைகாரர் டியோன் சிக் என்பவரின் முறையில் கொலையாகிறார். அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததால் இப்போது கொலைகளை செய்தவர், அவரின் மகன் டூ சூ என ஊடகம், காவல்துறை முடிவு செய்கிறது. பழைய வழக்குகளை கையில் எடுத்து குற்றவாளி டூவை தேடத் தொடங்குகிறது. உண்மையில் டூ சூ வழக்கை ஆராயும் டிடெக்டிவ் மனைவிற்கு, கொலைகளை செய்வது தனது கணவரோ என சந்தேகம் வருகிறது. ஏனெனில் அவர் நள்ளிரவில் வெளியே சென்று வரும் நாளில்தான் கணவர் அணிந்துள்ள உடைபோல அணிந

கொடைக்கானலை உருக்குலைத்து வரும் பாதரசக் கசிவு!

படம்
  எழுத்தாளர் அமீர் சாகுல் கொடைக்கானலில் கசியும் பாதரசம் ஆங்கிலோ டச்சு   நிறுவனம் யுனிலீவர், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இந்திய நிறுவனம், இந்துஸ்தான் யுனிலீவர். இதன் தொழிற்சாலை கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு தொடங்கி தெர்மோகோல் தயாரிப்பு யுனிலீவரின் தொழிற்சாலையில் நடந்து வருகிறது. இங்கு சரியான பாதுகாப்பு அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக தொழிற்சாலையில் வேலை செய்த இருபத்தெட்டு பேர் உயிரிழந்தனர். 2001ஆம் ஆண்டு க்ரீன்பீஸ் அமைப்பும், உள்ளூர் மக்களும் இணைந்து போராடியதால் தொழிற்சாலை மூடப்பட்டது. தொழிற்சாலை மூடப்பட்டாலும் கசிந்த பாதரசத்தால் இயற்கை வளமும் கெட்டது. ஊழியர்களும் நரம்பு நோய்கள், சிறுநீரக பாதிப்பு ஆகிய சிக்கல்களுக்கு உள்ளாகினர். இதற்கு என்ன பதில் என சூழல் அமைப்புகளும், ஊழியர்களும் போராட 2016ஆம் ஆண்டு, யுனி லீவர் நிறுவனம் வேலை செய்த 591 முன்னாள் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக அறிவித்தது. இந்த விவகாரம் பற்றி முன்னாள் பத்திரிகையாளரும், க்ரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான அமீர் சாகுல் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஹெவி மெட்டல் ஹவ் எ குள

ஆதரவற்றோரைக் கொன்றால் உடையும் லாபம், உடலும் லாபம்!

படம்
  ‘’பழைய துணிகளை ஆதரவற்றோருக்காக கொடுங்கள்’’ என சிலர் வந்து வீட்டு படியேறி கேட்டிருப்பார்கள். அப்படி பெற்ற துணிகளை சலவை செய்து ரோட்டோரக்கடையில் போட்டு விற்பார்கள். இதுபோல மோசடிகள்   உலகமெங்கும் நடப்பவைதான். அதைத்தான் ஹார்மன் செய்தார். இவர் ஆதரவற்றோரை கொலை செய்து உடலை கறிக்கடைக்கும். உடைகளை பழைய துணிகள் விற்கும் சந்தையில் விற்றார். 1879ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹனோவரில் பிறந்தவர் ஹார்மன். ரயில்வேயில் தீயணைப்புத்துறையில் பணியாற்றும் தந்தைக்கு ஆறாவது பிள்ளை. அம்மா செல்லமாக வளர்ந்தார். இதனால், அப்பாவின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார். சக நண்பர்கள் விளையாட்டு என வெளியில் சுற்றும்போது ஹார்மன் பொம்மைகளை வைத்து வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். பதினாறு வயதில் ராணுவப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், வலிப்பு இடையறாமல் வந்த காரணத்தால் படிப்பை தொடர முடியவில்லை. திரும்பி ஹனோவருக்கு வந்த பிறகு சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த காரணத்தால், காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். ஆறே மாதங்களில் அங்கிருந்து தப்பி ஓடினார். சிறு குற்றங்கள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது ஆகியவற்ற

நெடுஞ்சாலை கொலைகாரருக்கு மாற்று! - அவருக்கு பதிலாக இவர்

படம்
  நீதியைக் காப்பாற்றுவதற்கு காவல்துறை உள்ளது. அதன் வழியாக நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி சட்ட ஒழுங்கை காப்பாற்றுகிறது. ஆனால் இப்படி நடக்கும் செயல்பாடுகள் எளிதானவை அல்ல. சரியாக நடக்கிறது என்றும் கூறமுடியாது. குற்றங்கள் நடந்து அவற்றை காவல்துறை அறிய முடியாமல் அல்லது செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க   தாமதமாகும்பொழுது குற்றவாளி என யூகித்தவர்களை மாட்டிக்கொடுப்பது வாடிக்கை. இதில் குற்றவாளி என காவல்துறையில் கூறப்படுபவர்களின் உறவினர்களே அவர்தான் குற்றவாளி என தனிப்பட்ட வன்மத்திற்கு இடம் கொடுத்து அவர்களை பழிவாங்கினால் எப்படியிருக்கும்? ஆபெல் என்பவரின் விவகாரத்தில் இப்படித்தான் உண்மைகள் வளைக்கப்பட்டன. அரசு அமைப்புகள் இதற்கு கூறிய பதில்களும்   என்னென்ன சொல்றான் பாருங்க என்ற ரீதியில் இருந்தன. ஐ-45 கொலைகாரர் என அழைக்கப்பட்டவர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவர் செய்த கொலைகள் அத்தனையும் நிஜம். ஹூஸ்டன், கால்வெஸ்டன் இடையிலான நெடுஞ்சாலைதான் 45 என குறிப்பிடுகிறார்கள். இந்த சாலையில் 1982-1997 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 42 சிறுமிகள், இளம்பெண்கள் காணாமல் போய் பிறகு பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். நா

வயிற்றைக் கிழித்து, கால்களை விரித்து, உடைகளைக் கிழித்து.. கண்டறிய முடியாத கொலையாளி

படம்
  அமெரிக்காவின் பிலெடெல்பியாவில் உள்ள ஃபிராங்க்ஃபோர்ட் மாவட்டம் திரைப்பட நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனால் புகழ்பெற்றது. ராம்போ படத்தில் முதல் பாகம் அங்குதான் எடுக்கப்பட்டது. அதற்கடுத்து புகழ் தேடிக் கொடுத்த விஷயம். குற்றம்.   அங்கு நடைபெற்ற ஏழு கொலைகள். கொலைகளுக்குத் தொடக்கம் 1985ஆம் ஆண்டுதான். ஆகஸ்ட் மாதம், நகர பராமரிப்பு தொழிலாளர்கள் ஒரு பெண்ணின் நிர்வாண உடலைக் கண்டனர். பெண்ணின் மார்பகம் வெளியே தெரியும்படி இருக்க, அவரது உடலில் இருபது கத்திக்குத்து காயங்கள் இருந்தன.வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது.   ஹெலன் பேடன்ட் என்ற அந்த பெண்மணி, பல்வேறு பார்களில் புழங்கி வருபவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. நான்கு மாதங்களுக்கு பிறகு அடுத்த கொலை நடைபெற்றது. இதில் அறுபத்தெட்டு வயது பெண்மணி அன்னா கரோல் மாட்டிக்கொண்டார். இக்கொலையிலும் அன்னாவின் வயிறு கிழிக்கப்பட்டு மார்பெலும்பு வெளியே தெரிந்தது. உடல் பாதி நிர்வாணமாக கிடந்தது. உடலில் ஆறு கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முதல் கொலை நடந்த இடத்திலிருந்து அன்னா கரோல் இறந்துபோனது பத்து கி.மீ. தொலைவில்தான். அன்னாவின் வீட்டுக்கதவு, திறந்துகிடக்க

குற்றவுணர்ச்சியால் கொலைகளை ஒப்புக்கொண்டவர் - எட்வர்ட்ஸ்

படம்
  எட்வர்ட்ஸ், மேக் ரே 1919ஆம் ஆண்டு அமெரிக்காவின் அர்கான்சாவில் பிறந்தவர். 1941ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இடம்பெயர்ந்தார். கனரக வாகனங்களை இயக்கும் தொழிலாளி. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கிய சாலைப் பணிகளை செய்த தொழிலாளர்களில் இவரும் ஒருவர். திருமணமாகி இரு குழந்தைகள் உண்டு. எட்வர்டுக்கு பதினாறு ஆண்டுகள் குற்ற வரலாறு உண்டு.இதை உலகம் பின்னாளில்தான் அறிந்தது.   22 உடல்களைக் கண்டெடுத்த காவல்துறையிடம் ‘’நான் செய்த கொலைகள் ஆறு மட்டும்தான்’’ என சாதித்தவர். நீதிபதியிடம் மின்சார நாற்காலியில் அமர வைக்கவேண்டும்   என்று கோரினார். கேட்டதை கொடுப்பதற்காக நீதிமன்றம் உள்ளது? சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, எட்வர்ட்ஸ் தற்கொலை செய்துகொண்டார். 1970ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புறநகரப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அதில் கொள்ளைக்காரர்கள் கொள்ளைப் பொருட்களோடு இரு சிறுமிகளையும் கடத்திக்கொண்டு வந்தனர். அதில் இரு சிறுமிகள், தங்களை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்தனர். ஆனால், ஒரு சிறுமியைக் காணவில்லை. அங்குதான் எட்வர்ட் வருகிறார். காவல்நிலையத்திற்கு வந்த எட்வர்ட், தான்தான் அந்த இன்னொரு சிற