இதழாளர்களின் பைபிள் : நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்
இதழாளர் கையேடு சிவந்தி ஆதித்தனார் ராணிமுத்து பதிப்பகம் விலை ரூ. 20 நூலின் பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது எது மாதிரியான நூல் என்று. அதேதான். ஆனால் மிக எளிமையான கையேடாக எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தினத்தந்தி நாளிதழை வாங்கி நீங்கள் வாசித்து பார்க்கலாம். ஆமாம். தினந்தந்தியை நிறுவி அந்நிய மாநிலத்தவர்கள் பலருக்கும் தினமும் ஐந்து ரூபாயில் தமிழ் பழக வாய்ப்பளிக்கும் பத்திரிகையை தொடங்கியவர் ஆதித்தனார்தான் புத்தகத்தின் ஆசிரியர். நூலில் கூறப்படும் விதிகளை அனைத்தையும் தன் வாழ்நாளில் அவர் பெற்ற அனுபவங்களின் வழியேதான் கூறுகிறார் என்பதை நூலின் பின்புறம் இருக்கும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்பை வாசிப்பவர்களுக்கு எளிதாக புரிந்துவிடும். இன்றும் தினத்தந்தி பல இணையதளங்கள், தொலைக்காட்சிகள் வந்தாலும் தினமும் ஒருகோடி வாசகர்களை பெற்று எளிய மக்களின் செய்தி பத்திரிகையாக முன்னணியில் நிற்க காரணம் ஆதித்தனார் சொன்ன விதிகளை அந்நிறுவனத்தார் தொடர்ந்து பின்பற்றி வருவதுதான் காரணம் என்று நிகழ்கால உதாரணமே காட்டமுடியும். கா