இடுகைகள்

தாய்நாட்டிற்கு ஏதும் நிகரல்ல! - காலெட் ஹூசைனி

படம்
 நேர்காணல் “சொர்க்கம் கூட தாய்நாட்டிலுள்ள வீட்டிற்கு நிகராகாது” காலெட் ஹூசைனி, ஆஃப்கன் எழுத்தாளர். ் பதினொரு வயதிலேயே ஆஃப்கானிஸ்தானை விட்டு பிரிந்துவிட்ட உங்களுக்கு கனவாக இருந்த வீடு, பிரிவு எழுதுவதற்கான தூண்டுதலா? நான் எழுதியுள்ள நான்கு புத்தகங்களிலும் வீடு, தாய்நிலத்தை பிரிவது என்பதுதான் மையம். தாய்நிலத்தை பிரிவது எனக்கு மட்டுமல்ல மத்திம வயதிலிருந்து என் குடும்பத்திற்கே அதிர்ச்சிதான். வேர்களை இழந்து அமெரிக்காவில் மீண்டும் வாழ்வை தொடங்குவது எளிதானதாக இல்லை. புதிய நூலான சீ பிரேயரை நாவலாக அல்லானல் நெடுங்கவிதையாக எழுதியது ஏன்? கடந்தாண்டு அகதிகளுக்கான நன்கொடை விழாவில் சீ பிரேயர் சிந்தனை தோன்றியது. 2015 ஆம் ஆண்டு இறந்த ஆலன் குர்தி என்ற சிரிய சிறுவனே இந்நூலின் கரு. எளியமக்களின் வாழ்வில் போர் திணிக்கப்பட கடத்தல்காரர்களின் அகப்பட்டு குழந்தைகளை பாதுகாக்க போராடும் தந்தைகளின் கதை என்னை நெடுங்கவிதையாக இந்நூலை எழுத தூண்டியது. சோவியத் ஆக்கிரப்பின்போது ஆஃப்கனிலேயே தங்கியிருந்தால் என்னவாகியிருப்பேன் என யோசித்ததுண்டா? ராணுவ வீரர் (அ) அகதி ஆகியிருப்

பிளாசிபோ தெரியுமா?

படம்
போலி மாத்திரைகளின் சக்தி! காய்ச்சலின்போது பாட்டி வைத்து தந்த கோழி சூப் அல்லது அம்மாவின் கஷாயம் நிவாரணம் தந்ததாக நினைக்கிறீர்களா? இதைத்தான் மருத்துவ வட்டாரத்தில் பிளாசிபோ விளைவு என்கிறார்கள். சில உளவியல்ரீதியிலான நோய்களுக்கும், மருந்தின் விளைவுகளை அறியவும் மருத்துவர்கள் கொடுக்கும் சர்க்கரை அல்லது உப்பு கலந்த மாத்திரைகள் நோயாளிகளின் நோய்களை பெருமளவு குணப்படுத்தியுள்ளது. “மத்திய ரக மாத்திரைகளை விட சிறிய மற்றும் பெரிய மாத்திரைகள் தம் நோய்க்கு சிறப்பான தீர்வு தருவதாக நோயாளிகள் நினைக்கின்றனர்” என்கிறார் ஹார்வர்டு மருத்துவப்பள்ளியின் பிளாசிபோ ஆய்வு இயக்குநர்(PiPS) ஜான் கெல்லி. வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் போலிமாத்திரைகள் வலியை மறக்க வைப்பதாக நோயாளிகள் நம்பும்போது அவர்களுக்கு ஓபியாய்டு தேவைப்படுவதில்லை. இதன்மூலம், ஓபியாய்டு அடிமைத்தனத்தை தடுக்கலாம். அடுத்தமுறை தலைவலி வரும்போது, ஆஸ்பிரினுக்கு பதிலாக சர்க்கரை மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள். குணம் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் மனம் அவ்வளவு சக்தி வாய்ந்தது. பிளாசிபோ என்பது நோயாளிகளின் பிரச்னைகளை கண்டறிய தரப்படும்

மூளையில் புதிய நியூரான்!

படம்
மூளையில் புதிய நியூரான்! மூளை ஆராய்ச்சியில் ரோஸ்ஹிப் நியூரான் எனும் புதியவகை நியூரானை அமெரிக்காவின் ஆலன் மூளை அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரோஸ்ஹிப் நியூரான் கண்டறியப்பட்டுள்ள நியோகார்டெக்ஸ் பகுதி பொருட்களை அடையாளமறிந்து புரிந்துகொள்ளவும், மொழியைப் பேசவும், சிந்தனை செய்வதையும் கட்டுப்படுத்துகிறது.  முதலில் எலியிடம் நியூரான் சோதனையை செய்த ஆலன் ஆராய்ச்சிக்குழு பின்னர் பல்வேறு விலங்குகளிடம் சோதனையை மேற்கொண்டது. “நம்மைப்போன்ற மூளையமைப்பு கொண்டது எலி என்பதால்தான் அதனை சோதனை செய்ய தேர்ந்தெடுத்தோம். பெரிய மூளை அமைப்பு கொண்ட டால்பின், குரங்கு ஆகியவற்றை ஆராயும்போதுதான் ரோஸ்ஹிப் நியூரான்களின் வேறுபாட்டை உணரமுடியும்” என்கிறார் குழுவின் தலைமை ஆய்வாளரான எட் லெய்ன். ஆறு அடுக்குகள் கொண்ட மூளை அடுக்கில் 16 பில்லியன் நியூரான்கள் உள்ளன. இதில் ஆய்வாளர்கள் முதல் அடுக்கை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். காரணம், நேர்மின் தூண்டலைக் கொண்ட இன்கிபிட்டரி நியூரான்கள் இவ்வடுக்கில் அதிகம். “தானம் பெற்ற நியூரான்களிலுள்ள திசுக்களில் ஆய்வுகளை செய்து வருகிறோம். இதன் மூலம் நிய

சூழல் திட்டங்களுக்கு மைக்ரோசாஃப்ட் உதவி!

படம்
மானியம் தரும் மைக்ரோசாஃப்ட்! மைக்ரோசாஃப்ட்டின் AI For Earth திட்டத்தின் மூலம் உலகை மாற்றும் சூழல் திட்டங்களுக்கு ஆசிய அளவில் 50 மில்லியன் டாலர்கள் மானியம்(16 திட்டங்கள்) அளிக்கப்பட்டு வருகிறது. 45 நாடுகளில் 147(விவசாயம், பல்லுயிர்த்தன்மை, நீர், வெப்பமயமாதல்) சூழல் திட்டங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிதியளித்துவருகிறது. கீழ்காணும் திட்டங்களை மைக்ரோசாஃப்ட் ஆதரித்துள்ளது. டாக்டர் முனீஸ்வரன் மாரியப்பன், பெங்களூரு பெங்களூரைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சி மற்றும் சூழலியலுக்கான அசோகா அறக்கட்டளையைச் சேர்ந்தவர் டாக்டர் முனீஸ்வரன் மாரியப்பன். இவர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த Hoolock Gibbon to the Phayre’s Leaf Monkey உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்கவும், இருப்பிடங்களை கண்காணிக்கவும் ஏஐ உதவியை நாடியுள்ளார். அங்கிதா சுக்லா, டெல்லி லக்னோவின் சிறுநகரில் பிறந்த அங்கிதா சுக்லா, டெல்லி ஐஐடி முனைவர் படிப்பு மாணவி. தலைநகரில் சுற்றியலையும் குரங்குகளின் எண்ணிக்கை, தடுப்பூசி, புகைப்படங்களை அடையாளமறிய ஆப்பை உருவாக்கி குரங்கினத்தை பாதுகாக்க முயற்சித்து வருகிறார். அர்ச்சனா சௌத்ரி, ம

இந்தியாவில் பல் தடயவியல்!

படம்
டென்டல் துப்பறிவாளர்! 2012 ஆம் ஆண்டு வல்லுறவு செய்யப்பட்டு இறந்த மாணவியை ஆய்வு செய்த தடயவியல் மருத்துவர்களில் மரு.ஆஷித் ஆச்சார்யாவும் ஒருவர்.   தசைகளை போல சிதைவடையாத பற்கள் மூலம் வல்லுறவு நிகழ்வுகளை எளிதில் அடையாளம் காண முடியும். ஆண்டுக்கு இந்தியாவில் 26 ஆயிரம் பல் மருத்துவர்கள் உருவாகின்றனர். அதில் முதுகலை எட்டுபவர்களின் எண்ணிக்க 3 ஆயிரம். அதிலும் பாரன்சிக் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் மிக சொற்பம். பற்களை ஆராய்வதற்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 10 என தடயவியல் சங்கத்தலைவர் சாம்ராஜ் கூறுகிறார். குற்றவாளியைக் கண்டறிய பற்களின் கடி தடயங்கள், அடையாளம் தெரியாத பிணங்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றுக்கும் பற்களை ஆராய்வது அவசியம். இவை பின்னாளில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும்போது வரும் தகவல்களுடன் ஒத்துப்போகும் ஆச்சர்யங்களையும் டாக்டர் ஹேமலதா பாண்டே சந்தித்துள்ளதாக கூறுகிறார். இவர் இங்கிலாந்தில் தடயவியல் தொடர்பான படிப்பை படித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவருகிறார். “வெளிநாடுகளில் பற்களை ஆராய்வது பரவலானது என்றாலும் இந்தியாவுக்கு அது ப

செலவழிக்கும் பணம் வீணாக கூடாது - சித்தார்த் ராய் கபூர்

படம்
யுடிவியின் முகவரி.. 50 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளவர். தற்போது ராய் கபூர் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை தொடங்கி பதினைந்து படங்களை தயாரித்து வருகிறார். அவர் வேறுயார்? சித்தார்த் ராய் கபூர்தான். நடிகை வித்யாபாலனின் கணவர்.  புதிய திறமையான ஆட்களை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா? தயாரிப்பாளராக திரைப்படத்திற்கு நிறைய கருக்களை எழுதும் எழுத்தாளர், நடிகர்கள் தேவை. புதிய இயக்குநர்களின் கதைக்கு புதுமுகங்கள் சரிபட்டு வருவார்கள் என்றால் அதனை தடுக்க மாட்டேன். ராஜ்குமார் குப்தா, நீரஜ்பாண்டே, திபாகர் பானர்ஜி, விக்கிரமாதித்திய மோட்வானே ஆகியோரை அப்படித்தானே யுடிவி அறிமுகப்படுத்தியது. படங்களை தயாரிப்பது எப்படி  பிடித்தமானதாகியது? படங்களை உருவாக்குவதை நேசிப்பதால்தான். செலவழிக்கும் பணம் வீணாக கூடாது. இரண்டு, கிரியேட்டிவிட்டியில் தடை இருக்க கூடாது என இரண்டு விஷயங்களையும் நான் கவனிக்கிறேன். இயக்குநரின் சிந்தனையோடு சேர்ந்து இயங்குவதை முக்கியமானதாக கருதுகிறேன். மார்ட்டின் ஸ்கார்சி போன்ற இயக்குநர்கள் சினிமா இறந்துவிட்டது என கூறிவருகிறார்களே? சினிமா எங்கேயும் போய்விடாது. சினிமாவின்

வேலைவாய்ப்பு கொடுத்தால் எங்களை நாங்களே பார்த்துக்கொள்வோம்!

படம்
சந்திரசேகர் ஆசாத்... ஊடகங்களுக்கு ராவணன்.  உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பீம் ஆர்மியின் தலைவர். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இவருடன் கூட்டு சேர விரும்புகின்றன. ஆசாத், ஒளித்து மறைத்தெல்லாம் பேசவில்லை. பாஜகவை எதிர்த்துதான் தேர்தல் என்று கூறிவிட்டார். பீம் ஆர்மியை எப்படி தொடங்கினீர்கள்? கன்ஷிராமின் கருத்துக்களை படித்து அமைப்பு தொடங்கலாம் என நினைத்தபோதுதான் உள்ளூர் பள்ளியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு சாதிரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டன. அதனை சமாளிக்க பீம் ஆர்மியை தொடங்கினோம். பாரத் இக்தா மிஷன் என்பது இதனை முன்னர் அழைத்து வந்தோம். உங்களது குடும்பத்தினரது கோரிக்கையை கேட்டுத்தான் உங்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டதா?  இந்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என்னை கைது செய்து சிறையிலடைத்தது. சிறையிலிருந்து வெளியே வந்தாலும் என்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் கைவிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு வெல்லும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. செப்.14 ஆம் தேதியோடு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்து வைக்கும் காலம் முடிந்துவிட்டது. என் மீது குற்றத்தை உறுதியாக்கும் ஆதாரங்கள்

மகிழ்ச்சிக்கென பள்ளிகளில் வகுப்புகள் தொடக்கம்.!

படம்
happy வகுப்புகள்! இந்தியத் தலைநகரான டெல்லியில் ஆயிரத்து ஐநூறு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கதை சொல்வது, குடும்ப உறுப்பினர்களில் பிடித்தவர்களை பற்றி எழுதுவது உள்ளிட்டவையே மாணவர்களுக்கான டாஸ்க்குகள். மகிழ்ச்சிக்கென எதற்கு வகுப்பு? என்று கேட்டால் உலகை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். மாணவர்களுக்கு தேர்வு, பணியாளர்களுக்கு வேலை, தொழிலதிபர்களுக்கு பிஸினஸ் என மூளையைத் தின்னும் பட்டியலிடப்பட்ட வேலைகள்தான் பிரச்னை.  இதிலிருந்து காக்கவே டெல்லி கல்வி இயக்குநரகம் அரசு பள்ளிகளில் மகிழ்ச்சி வகுப்புகளை தொடங்கி போட்டித்தேர்வு, உச்சமதிப்பெண்கள் என தடுமாறும் மாணவர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க முயற்சித்து வருகின்றன. கல்வி மட்டுமல்ல கார்ப்பரேட் தொழில்துறையினரும் பணியாளர்களின் மனச்சோர்வை குறைத்து கிரியேட்டிவிட்டியை அதிகரிக்க மகிழ்ச்சி வகுப்புகளை ஹேப்பி ஹோ (அ) கார்ப்பரேட் குருக்களின் நிறுவனங்களை அழைத்து வந்து நடத்துகிறார்கள்.  இந்தியாவில் முதல் மாநிலமாக மத்தியப்பிரதேசம், பூடான், அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிலிருந்து ஆலோச

2018 உணவு டிரெண்ட்: வீகன்

படம்
வீகன் உலகிற்கு வெல்கம்! – பால் பொருட்களை விலக்கி பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தவிர்த்து பழங்கள், காய்கறிகள், பருப்புகள், கொட்டைகளை உண்பதே வீகன் டயட். வெப்பமயமாதல் சூழலில் இறைச்சி, காய்கறிகளை விளைவிக்க செலவாகும் இயற்கை வளங்களை கூட்டிக்கழித்து பார்த்து குறைவான மாசுபாட்டை கொண்ட சரியான உணவுமுறை என வீகன்தான் என வீகன் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். கனடாவைச் சேர்ந்த தடகள வீரர் பிராண்டர் பிரேஸியர், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட் ஜூரெக் ஆகிய புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் வீகன் டயட்டை பின்பற்றுபவர்களே. கொழுப்பு உணவுகளை ஆதாரமாக கொண்ட பேலியோ டயட்டைப்போலவே வீகன் டயட்டை தொடக்கத்தில் தயக்கத்துடன் பின்பற்றிய இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இறைச்சி, முட்டை, கோதுமை, தேன், பால் பொருட்கள் ஆகியவை வீகன் டயட்டில் தவிர்க்கப்படவேண்டியது அவசியம்.   வீகன் டயட்டில் பொதுவாக பின்பற்றப்படும் ஏழு முறைகள் உள்ளன. பழங்கள், காய்கறிகள், பருப்புகள்,கொட்டைகள் கொண்டது முதல்வகை. மேற்சொன்ன பொருட்களை 48 டிகிரி செல்சியஸ வெப்பத்தில் சமைத்து உண்பது இரண்

தேசியவிருது ஆசிரியர்!

படம்
பெண்கல்விக்கு பாடுபடும் ஆசிரியர்! ஹரியானாவின் மேவத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பஸ்ருதீன்கான், பெண்குழந்தைகளின் இடைநிற்றல் அளவை குறைத்து ஆசிரியர் தினத்தில் இந்தியப் பிரதமரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மேவத் நகரில் படிக்கும் மாணவர்களில் 20 சதவிகிதப் பேர் இடைநின்றுவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அறிவியல் மற்றும் கணித ஆசிரியரான பஸ்‌ருதீன்கான், உடான் எனும் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி கல்வி, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். 1993 ஆம் ஆண்டு ஜார்புரி கிராமத்தில் தன் கல்விப்பணியை 20 மாணவர்களுடன் தொடங்கிய பஸ்‌ருதீன்கான், இரண்டு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை 57 ஆக மாற்றிக்காட்டினார். பின் சிரோலி கிராம பள்ளியில் 96 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கையை 638 ஆக உயர்த்தி சாதித்தவர், நூறு சதவிகித தேர்ச்சி சாதனையையும் நிகழ்த்தினார். தற்போது தப்பன் நகர நடுநிலைப்பள்ளியில் காலை 7 முதல் இரவு 7 வரை பணியாற்றுகிறார். 25 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றும் பஸ்‌ருதீன்கான், இதுவரை பள்ளியின் அடிப்படை கட்டமைப்புக்காக   என்ஜிஓக்கள் உதவிகோரி ரூ.1.7 கோடி பெற்றுத்தந்துள்ளார். “குழந்தைகளோடு உங்க

தலித் சொல்லை நீக்கிய இந்திய அரசு!

படம்
ஆஃப்கன் காதல்! காதலர்களுக்கு உலகிலுள்ள எந்த தடைகளும் பிரச்னையில்லை. ஆனால் உறவுகள், சொந்தங்கள் ஆட்சேபித்தால் திருமணம் எப்படி சிதறும் என்பதற்கு ஆஃப்கன் காதலே சாட்சி. ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஃபரீதுல் ரஃப்தாய், ஃபேஸ்புக் மூலமாக வலைவீசி உ.பியின் கலிலாபாத் நகரைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பானார். பின் சாட்டிங்கில் போனை தேய்த்து பேசி காதல் வளர்த்தவர்கள் கல்யாணத்திற்கும் ரெடி. காதல் விவகாரம் தெரிய வந்த இருதரப்பு பெற்றோர்களும் கூட ஓகே சொல்லிவிட்டனர். திருமணவிழா உ.பியிலுள்ள பெண் வீட்டில் தடபுடலாக ஏற்பாடானது. பங்கேற்ற உறவுகள், சொந்தங்கள் திடீரென கல்யாணம் நடக்ககூடாது. நம் பெண்ணை இன்னொரு நாட்டிற்கு அனுப்புவது சரியல்ல என்று குழந்தையாக அடம்பிடித்து போராடி அதையே சாக்காக வைத்து கல்யாணத்தை நிறுத்திவிட்டனர். ஆஃப்கன் மாப்பிள்ளை ரஃப்தாய், நெதர்லாந்திலிருந்து வந்திருந்த அவரது உறவினர்கள் அனைவரும் சமாதானம் பேசினர். ஆனால் பெண்ணின் தந்தை மகளை படிக்கவைக்கப்போகிறேன் என்று கூற ஆஃப்கன் மாப்பிள்ளை விரக்தியுடன் ஊர் திரும்பியுள்ளார். 2 தலித்துன்னு சொல்லாதீங்க! இந்தியாவிலுள்ள செய்தி சேன