இடுகைகள்

பிரிவினையின் தொடக்கம்!

படம்
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் படுகொலை! இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது இங்கிலாந்து அரசு திவால் நிலையில் இருந்தது. தனது வீரர்களை இந்தியாவில் அதற்கு மேல் தங்க வைக்கமுடியாத சங்கடத்தில் தவித்தபோது பிரிவினை அவலம் நிகழ்ந்து 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். 1946, மார்ச் 1946 ஆங்கிலேய அரசு அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக யோசித்து சிம்லாவில் இதுதொடர்பாக பேச முயற்சித்தது. காங்கிரஸ், முஸ்லீம் லீக் சார்பாக ஜின்னா, நேரு ஆகியோர் இதில் பங்கேற்றனர். சிறுபான்மையினரான முஸ்லீம்களின் தலைவரான ஜின்னா, காங்கிரசின் தலைமையில் இணைந்திருக்க சம்மதிக்காததால் மாநாடு தோல்வியுற்றது. அன்று ரேடியோவில் மக்கள் கேட்டது இச்செய்தியைத்தான். மாநாடு தோல்வியுற்றதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் தொடங்கின. 1946 ஆகஸ்ட் பிரிவினை குறித்த செய்தியை காந்தி கேட்டபோது மகாராஷ்டிராவிலுள்ள சேவா ஆசிரமத்திலிருந்தார்.  விரைவிலேயே கல்கத்தாவில் இந்துகள் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தபோது கலங்கிப்போனார்.  கண்ணுக்கு கண் என அடித்துக்கொண்டால் முழு உலகமும் பார்வையற்றுப்போய்விடும் என தனக்குள் வ

போதைக்கடவுள் பிறந்துவிட்டார்!

படம்
மெக்சிகோவின் போதை ராஜா!  பிடிக்கவே முடியாது. டஜன் கணக்கிலான ஆபரேஷன்கள் தோற்றுப்போக, இறுதியில் அமெரிக்க உளவுத்துறையும் மெக்சிகோ ராணுவமும் விரக்தியும் ஆயாசமுமாக கூறிய வார்த்தை இது. மெக்சிகோவின் ராட்சஷ கார்டெலான சினாவாலாவின் நிழல் தலைவரான குஷ்மனை பிடிப்பது அமெரிக்காவின் போதை ஒழிப்புத்துறைக்கு பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு மெக்சிகோ அதிபர் என்ரிக் பேனா, குஷ்மனை தந்திரமாக காவல்துறை மூலம் வளைத்துபிடிக்கும் வரை முழு உலகமும் பாராவின் முதல் வார்த்தையை மட்டுமே வலுவாக நம்பியது. ஒருமுறை அல்ல இருமுறை சிறையிலிருந்து தப்பித்த குஷ்மன் இம்முறை நியூயார்க் சிறையில் 14 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் தூண்டில் மீனாக மாட்டிக்கொண்டு விட்டார். வறுமையில் போதைக்கடவுள்! அமெரிக்காவுக்கும் மெக்சிகோ காவல்துறைக்கும் பல்லாண்டுகளாக கட்டைவிரலைக் கொடுத்து போதை பிஸினஸை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த தொழிலதிபர் ஜோக்குயின் எல் சாபோ குஷ்மன். 1957 ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் சியரா மாத்ரே மலைத்தொடர் சூழ்ந்த லா துனா கிராமத்தில் பிறந்தார். சூரியன் இ

மாற்றுத்திறனாளியின் வின்னிங் ஸ்டோரி!

படம்
 கேல்ரத்னா வீரரின் வெற்றிக்கதை! ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவ்லின் த்ரோ விளையாட்டு வீரர் தேவேந்திர ஜாஜாரியா, இந்திய அரசின் கேல்ரத்னா எனும் உயரிய அங்கீகாரத்துக்கு தேர்வாகியுள்ளார். இதில் என்ன ஸ்பெஷல்? மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஈட்டி எறிதலில் 2 தங்கங்களை பெற்றுத்தந்துள்ள ஒரே வீரர் ஜாஜாரியா. 'கேல்ரத்னா' பரிந்துரை பட்டியலில் விசேஷ இடமும் அதற்காகத்தான். அங்கீகாரங்கள்,கௌரவங்கள் வலியின்றி கிடைத்துவிடுமா என்ன? 1980 ஆம் ஆண்டு பிறந்த ஜாஜாரியாவுக்கு மரம் ஏறி விளையாடுவது என்றால் கொள்ளைப்பிரியம். அன்றும் அப்படி ஒரு மரத்தில் ஏறி நண்பர்களுடன் விளையாடியபோதுதான் நடந்தது அந்த விபரீதம். விளையாட்டு மும்முரத்தில் அருகிலிருந்து மின்கம்பியை கிளையென நினைத்து தொட, தூக்கியெறியப்பட்டு நினைவிழந்து வீழ்ந்த ஜாஜாரியா, கண்விழித்தபோது மருத்துவமனையில் கிடந்தார். மூளையில் தீராத வலியின் குத்தல். தலை திருப்பி கையை பார்த்தபோதுதான், இடக்கை வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது. "இடதுகை பொசுங்கி அகற்றப்பட்டபிறகு அனுதாப பார்வைகளுக்கு பயந்து

பெண் பைலட்டுகளை உருவாக்கும் பனஸ்தாலி பல்கலைக்கழகம்!

படம்
ஆகாயத்தில் சிறகு விரிக்கும் பெண்கள் - ச.அன்பரசு பெண்களை நுகர்விற்கான பொருளாக பலரும் சித்தரிக்கும் நிலையில் கல்வி மட்டுமே பெண்களுக்கு சிறகு தரும் என்ற லட்சியம் மாறாது செயல்பட்டு வருகிறது ராஜஸ்தானிலுள்ள பனஸ்தாலி பல்கலைக்கழகம். பெண்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுத்து இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை அளிக்கும் இங்கு, பெண்களுக்கான விமானப் பயிற்சி மையம் தனித்துவமானது. 1935 ஆம் ஆண்டு ராஜஸ்தானிலுள்ள தோங் மாவட்டத்தில் பனஸ்தாலி வித்யாபீடம் தொடங்கப்பட்டபோது இதில் சேர்ந்த சிறுமிகளின் எண்ணிக்கை வெறும் ஏழுதான். ஆனால் தற்போது நாடெங்கிலுமிருந்து பதினாறாயிரம் மாணவிகள் இங்கு கல்வி கற்கின்றனர். 850 ஏக்கரில் 28 கட்டிடங்களோடு பிரமாண்டமாக ஆச்சரியப்படுத்துகிறது பனஸ்தாலி பல்கலைக்கழகம். ஜெய்ப்பூர் அரசின் செயலாளராக பணிபுரிந்த ஹீராலால், பனஸ்தாலி(அன்று பன்தாலி) கிராமத்திற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்தார். அங்கிருந்த விவசாயிகளுக்கு கல்வி அறிவு புகட்ட தொடங்கியதுதான் பனஸ்தாலி வித்யாபீடத்தின் முதல்படி. "ஜாதி பேதமின்றி விவசாயிகளுக்கு கல்வி அறிவை வழங்குவதே தாத்தாவின் நோக

தாதா- போலீஸ் - புதிர் ஆட்டம்(Sacred Games)

படம்
சேகரெட் கேம்ஸ் - போலீஸ் - தாதாவின் புதிர் கண்டுபிடிக்கும் விளையாட்டு.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கருதப்பட்ட கணேஷ் கைடோண்டே என்ற தாதா போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்தாஜ் சிங்கிற்கு போன் செய்து மும்பை 25 நாட்களில் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என எச்சரிக்கிறார். அவரை பின்தொடர்ந்து கைது செய்ய முயற்சிக்கிறார் சா்தாஜ். ஆனால் அம்முயற்சியில் தாதா கணேஷ் கைடோண்டேவின் உடலை மட்டுமே பார்க்க முடிகிறது. கணேஷ் கூறிய வார்த்தைகளை நம்பி புலனாய்வில் இறங்கிய சர்தாருக்கு நினைத்து பார்க்க முடியாத அனுபவங்கள் நிகழ்கிறது. இறுதியில் அவர் மும்பையை சீரழிவிலிருந்து காப்பாற்றினாரா என்பதே முதல் சீசன்(எட்டு எபிசோடுகள்) கதை.  விக்ரம் சந்திரா எழுதிய 947 பக்க நாவல் வெப் சீரியசாக மாறியிருக்கிறது. முழுக்க சீரியஸ்தான். ஆனால் இதில் ரிலாக்ஸ் என்றால் கணேஷின் திருநங்கை காதலி குக்கூ(குப்ரா சைத்), மனைவி சுபத்ரா(ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே), சர்தாரின் கான்ஸ்டபிள் கடேகர்(ஜிதேந்திர ஜோஷி) மனைவி ஆகிய கதாபாத்திரங்கள். மற்றபடி சென்சார் இல்லையென்பதால் வெட்டுகுத்து, பாலுறவு காட்சிகள், ராஜஸ்ரீ தேஷ்பாண்டேவின் செக்ஸ் காட்ச

உடலுக்கு உப்பு எவ்வளவு தேவை?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? –- Mr.ரோனி உடலுக்கு உப்பு அவசியமா? உப்பு இல்லையெனில் உடல் இயங்குவது கடினம். நரம்பு அமைப்புகள், தசைகள் ஆகியவற்றிலுள்ள ரத்த அழுத்தத்தை மிகச்சரியாக பராமரிக்க உப்பு மிக அவசியம். எவ்வளவு தேவை? தினசரி ஒரு டீஸ்பூன் உப்பில் கால்பகுதி பயன்படுத்தினாலே போதும். ஆறு கிராம்களை தாண்டினால் உடலின் ரத்த அழுத்தம் தாறுமாறாக எகிறி உடல் பாதிப்புக்குள்ளாகும். மனிதர்களின் உடல் எடையில் நூறுகிராம் மட்டுமே உப்பின் பங்கு. பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், மிக்சர், கேக் வகைகளை அள்ளித்தின்றால் ரத்த அழுத்தம், இரைப்பை புற்றுநோய் வரையில் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஜெர்மனியர்களின் வைரஸ் எதிர்ப்பு செல்!

படம்
பிட்ஸ்! 1863 ஆம் ஆண்டிலேயே வெனிசுலா நாட்டில் குற்றங்களுக்கு மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. உலகில் நடந்த பல்வேறு ஆய்வுகளில் அடிப்படையில் மக்களால் அதிகம் விரும்பப்படும் நிறம் நீலம் என தெரியவந்துள்ளது. உலகை கொள்ளை கொண்ட கார்ட்டூன் கதாபாத்திரமான டிஸ்னி மிக்கி மௌஸின் அக்கா பெயர், அமேலியா ஃபீல்டுமௌஸ். ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளில் பனிரெண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகளை விளம்பரத்தில் நடிக்கவைப்பது சட்டப்படி குற்றம். நூறு ஜெர்மனியர்களில் ஒருவருக்கு எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மரபணுரீதியான பாதுகாப்பு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த மரபணுவுக்கு CCR5-delta 32 என்று பெயர். 1989 ஆம் ஆண்டு டிச.17 தேதியிலிருந்து ஒளிபரப்பாகும் தி சிம்ப்சன்ஸ் அனிமேஷன் கதையில் கதாபாத்திரங்களுக்கு நான்கு விரல்கள் மட்டுமே உண்டு. தி காட் என்ற கேரக்டருக்கு மட்டும் ஐந்து விரல்கள் இருந்தது. இன்றுவரை 644 அத்தியாயங்கள் ஃபாக்ஸ் டிவியில் ஒளிபரப்பாகியுள்ள ஹிட் அனிமேஷன் கதை இது.  

ஏஐ தொகுப்பாளர்! - சீனா அதிரடி

படம்
ஏஐ தொகுப்பாளர்! சீனாவின் அரசு டிவியான ஷின்ஹுவா, செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளரை சீனமொழி மற்றும் ஆங்கில செய்திக்கென அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. சீன தொகுப்பாளரான ஸாங் ஸாவோ என்பவரின் உருவத்தையும் குரலையும் பிரதியெடுத்தாற்போல உருவாகியுள்ள புதிய ஏஐ தொகுப்பாளர், செய்தி தயாரிப்பிற்கான செலவை குறைக்கவும் நேர்த்தியை அதிகரிக்கவும் உதவுவார் என்கிறது டிவி சேனல் தரப்பு. நாட்டின் இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களிலும் ஏஐ தொகுப்பாளர் தோன்றத்தொடங்கியுள்ளதை மக்கள் ஆர்வமுடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவுடன் தொகுப்பாளர் என்பது ஈர்த்தாலும் உதட்டு அசைவுகளும், குரலும் அவ்வளவு பொருத்தமாக அமையவில்லை என்பது உண்மை. அரசின் எண்ணத்திற்கேற்ப செய்தியை வளைத்து தணிக்கை செய்து வெளியிடுவது சீனாவுக்கு புதியதல்ல. சீனா, ஊடகங்களில் கூட மனிதர்கள் அவசியமில்லை என முடிவெடுத்துவிட்டது என ஊடகவியலாளர்கள் விமர்சித்துள்ளனர். பிரபலங்களை டிஜிட்டல் வடிவில் உயிர்பித்து கொண்டுவருவதை இனி செய்திகளிலும் மக்கள் பார்க்கலாம். செய்தியை கூறுபவரின் உச்சரிப்பு, முகத்தோற்றம் ஆகியவற்றுக்காக பார்ப்பது போய் ஒரேம

நீலநிற ஒளியே மருந்து!

படம்
ரத்த அழுத்தத்திற்கு நிறமே மருந்து! சர்க்கரை வந்தால் அதன் தோஸ்த் ரத்த அழுத்தமும் விரைவில் ஆஜராகிவிடும். என்ன செய்யலாம்? அருகம்புல் ஜூஸ், டீஷர்ட் நனைய உடற்பயிற்சி, டயட் கட்டுப்பாடு இதனோடு நீலநிறத்தையும் பயன்படுத்தலாம் என இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகம் ஆலோசனை கூறியுள்ளது. தினசரி 30 பேர்களை நீலநிற ஒளியில்(450 நானோமீட்டர்) வைத்து நடத்திய 30 நிமிட பரிசோதனையில் உடலின் ரத்த ஓட்டத்தை சுலபமாக்கி ரத்த பிளாஸ்மாவில் வெளியாகும் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து இதயநலம் காப்பது தெரிய வந்துள்ளது. நீலநிற ஒளி மன அழுத்தத்திலிருந்து மக்களை காப்பதோடு தொற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுவதாக ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. நீலம் மற்றும் பர்பிள் நிற உணவுகளில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் ஆந்தோசயோனின் ஆகிய ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலை நோயிலிருந்து காப்பாற்றுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறியுள்ளன. நீலம் மற்றும் பர்பிள் வகை உணவுகள், பொதுவாக நமது உணவுமுறையில் மிக அரிதான உணவுகள். இதயநோய், உடல்பருமன், சர்க்கரைக்கு எதிரான நோய்எதிர்ப்பை நீலம் மற்றும் பர்பிள் நிற காய்கறிகள் ஏற்படுத்துகின்றன.

ஆசியா பீபி உயிர்பிழைப்பாரா?

படம்
உயிர்பறிக்கும் மதநிந்தனை! மதநிந்தனை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணை   பாக்.உச்சநீதிமன்றம் விடுவிக்க, அதை எதிர்த்த பாகிஸ்தானிய கட்சி தலைவர்கள் சாலையில் திரண்டு போராடி வருகின்றனர். 2010 ஆம் ஆண்டு இஸ்லாமிய இறையான முகமதுவை அவதூறாக பேசியதாக ஆசியா பீபி மீது வழக்கு பதிவாகி மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆசியா பீபிக்கு ஆதரவாக சட்ட அமைப்புகள் களமிறங்கி போராடி அவரை விடுதலை செய்ய வாதிட்டன. உச்சநீதிமன்றம் வாதங்களின் அடிப்படையில் ஆசியாபீபியை விடுதலை செய்ய ஆணையிட்டதும் நாடெங்கும் அத்தீர்ப்புக்கு எதிராக மத தலைவர்கள் மக்களை திரட்டி போராடி வருகின்றனர். பாக்.அரசு ஆசியாபீபிக்கு எதிராக அப்பீல் ஏதும் செய்யவில்லை. மத தலைவர்கள் ஆசியாபீபிக்கு எதிராக திரண்டு சாலைகளை மறித்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவதாக் பாக்.பிரதமர் இம்ரான்கானுக்கு தலைவலி தொடங்கிவிட்டது. ஆசியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள் அடைக்கலம் தர முன்வந்துள்ள நிலையில் அவர் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். லாகூர், இஸ்லாமாபாத் நகரங்களில் போராட்டம் வெடி

பிரேசில் தேர்தலில் வாட்ஸ்அப் அநீதி!

படம்
பிரேசிலுக்கு வாட்ஸ்அப் உதவி! லத்தீன் அமெரிக்காவின் ஜனநாயக நாடான பிரேசிலில் முன்னாள் ராணுவ கேப்டனான ஜெய்ர் பொல்சோனாரோ வென்று அதிபராகியுள்ளார். தேர்தலுக்கு பத்து நாட்கள் முன்பு 3 மில்லியன் டாலர்களை வாட்ஸ்அப் நிறுவனத்து கொடுத்து போலிச்செய்திகளை பரப்பியுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 1991 ஆம் ஆண்டு பிரேசில் தேசிய காங்கிரசில் அங்கம் வகித்து வரும் பொல்சொனாரோ, “அனைத்து இசங்களுக்கும் இனி முடிவு” என்றே திடமாக கூறி ஆட்சிக்கு வந்துள்ளார்.  பிரேசிலின் Folha de São Paulo   பத்திரிகையில் நிருபர் பேட்ரிசியா காம்பஸ் மெலோ இதுகுறித்த செய்தியை அண்மையில் எழுதியுள்ளார். செய்தி பிரசுரமானவுடன் பதறிய பொல்சொனாரோ ஆதரவாளர்கள், பேட்ரிசியாவுக்கு மிரட்டல் அழைப்புகளை விடுத்தனர்.  கடந்தாண்டில் பிரேசில் புலனாய்வு நிருபர்களுக்கு 141 வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புலனாய்வு நிருபர்கள் சங்கம்(ABRAJI) தெரிவிக்கிறது. பல்வேறு தவறான புள்ளிவிபரங்கள், உணர்ச்சி கொந்தளிப்பான வாசகங்களை இடையறாது வாட்ஸ்அப்பில் பரப்பி வென்ற பொல்சொனாரோ ஆதரவாளர்களில் கையில் பிரேசில் மக்களின் நலன் உள்