இடுகைகள்

டைம் - இளம் தலைவர்கள் 2019

படம்
இளம் தலைவர்கள் - டைம் பத்திரிகை ஆண்டுதோறும் டைம் பத்திரிகை அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களை வரிசைப்படுத்தி வருகிறது. அதில் இடம்பெற்ற சிலர். பஸிமா அப்துல்ரஹ்மான் கட்ட டக்கலைஞர், இராக் அலபாமாவில் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2014 ஆம் ஆண்டு ஐஎஸ்  தாக்குதல் இராக்கில் தொடங்கியது. அமெரிக்க படைகள் உள்ளே வந்து தாக்க இராக்கின் பெரிய நகரான மொசூல் தரைமட்டமானது. 32 வயதில் பஸிமா இராக் திரும்பினார். இதற்குள் கட்டுமானத்துறையில் அவர் பட்டம் பெற்றிருந்தார். நாங்கள் இங்கு கட்டுமானங்களைத் தொடங்கியபோது ஆற்றலும் நீரும் குறைவாக செலவாகும்படி முயற்சித்தோம்.  கட்டுமானங்களை கட்டி அதனை சோதிக்க எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன.  2017 ஆம் ஆண்டு கேஸ்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இராக்கின் பசுமை கட்டட நிறுவனம் இது. செங்கற்களை விட களிமண்ணைப் பயன்படுத்தி இராக்கின் மரபான கலாச்சார முறையலில் கட்ட டம் கட்டுவதுதான் இவரின் ரகசியம்.  இராக்கில் மின்வெட்டு, நீர் பற்றாக்குறை ஆகியவற்றோடு மக்கள் வீட்டிற்கு செலவழிக்கவும் தயங்குகிறார்கள். காரணம், உள்நாட்டுப் பிரச்னைதான். எனவே, நாங்கள் வீட்டை மி

அறிவியல் பிட்ஸ்!

பிட்ஸ் 2030 ஆம் ஆண்டுக்குள் ஐ.நாவின் வறுமை ஒழிப்பைச் சாதிக்க தனிநபருக்கு தலா 140 ரூபாய் தினசரி அரசு வழங்கவேண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பிற ஆசிய நாடுகளுக்கு இத்தொகை ஒரு டாலர் மதிப்பில் உள்ளது. 42 நாடுகளைச் சேர்ந்த 143 மில்லியன் மக்கள் பசி, பட்டினியில் கிடந்து உழல்கின்றனர். ஆஃப்கானிஸ்தான், சூடான், காங்கோ, நைஜீரியா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் உணவு பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளன. 26 நாடுகள் சூழல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பால் 10 மில்லியன் மக்களும், உணவு பாதுகாப்பு பிரச்னையில் 23 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஹாம்ஸையர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அங்கு வாழ்ந்த 14 காட்டு தேனீக்கள் இனம் அழிந்துவிட்டது என கண்டறிந்துள்ளனர். கட்டடங்களில்  பசுமை தாவரங்களை வளர்த்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த போர்லாண்ட் பல்கலைக்கழகம் அறிக்கை அளித்துள்ளது.

1984 ஜார்ஜ்வெல் நூலுக்கு எழுபது வயது!

படம்
1984 ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நாவல். எரிக் பிளேர் என்பவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற பெயரில் இந்த நூலினை எழுதினார். இதில் வரும் ஸ்மித் என்பவர் அரசு அதிகாரி. நாளிதழ்களில் வரும் செய்திகளை கவனமான தணிக்கை செய்து அரசுக்கு ஆதரவாக மாற்றி எழுதி மக்களுக்கு பிரசாரம் செய்வதே பணி. இதில் டெலிஸ்க்ரீன் என்ற கருவி வரும். ஏறத்தாழ டிவி போல. ஆனால் இதனை நீங்கள் அணைக்க முடியாது. அதன் வழியாக நீங்கள் கவனிக்கப்பட்டு வருவீர்கள். இரண்டாம் உலகப்போரின் போது டிவி இருந்தாலும், அதனை அறிவியல் புனைவில் பயன்படுத்திய ஆர்வெல்,  முன்னதாகவே இதனை எழுதிவிட்டார். அப்போது ஜெர்மனியில் வீடியோ போன் சிஸ்டம்தான் உருவாக்கப்பட்டிருந்தது. நூல் எழுதிய காலகட்டத்தில் டிவி பார்க்கும் மோகம் அபரிமிதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு கூட அதிகம்தான். 2017 வாக்கில் மெல்ல டிவி செல்வாக்கிழந்து வருகிறது. இப்போது, டிவியின் இடத்தை இணையம், அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவை பிடித்து விட்டன. ஆனால் நூலில் வரும் அரசின் கண்காணிப்பு வேறுவகையாக மாறிவிட்டது. அமெரிக்கா, விசா கொடுப்பதற்கு முன்னே பயணிகளின் சமூக வலைத்தள கணக்குகளை ஆராய்ந்த பின்னரே நாட்டில் அனுமதிக்கும்

செர்னோபில் செல்லலாமா?

படம்
செர்னோபில் அணு உலை கசிவு, அதன் பாதிப்புகள் இன்றையவரைக்கும் உண்டு. மேலும் அங்கு இதற்கான சுற்றுலா திட்டங்களும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மனிதர் 3 மில்லிவெர்ட்ஸ் கதிர்வீச்சு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர் என்று அமெரிக்கன் கதிர்வீச்சு கல்லூரி அறிக்கை தகவல் சொல்லுகிறது. கதிர்வீச்சின் அளவு 1-20 எம்எஸ்விக்கும் குறைவாக மனிதர்கள் செல்கிறது. 50-200 அளவு என்பது மனிதர்களின் மரபணுக்களைப் பாதிக்கிறது. 200-1000 அளவு மாறும்போது, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும். 2000 எனும் அளவுக்கு கதிர்வீச்சு அதிகரிக்கும்போது கதிர்வீச்சு தொடர்பான நோய்கள் வரும். 10 ஆயிரம் அளவு என வரும்போது இறப்பு நேருகிறது. செர்னோபில்  அணுஉலையில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களை ஆராய்ந்தபோது, அவர்களின் உடலில் 8 ஆயிரம் - 16 ஆயிரம் கதிர்வீச்சு அளவு இருந்தது. இதன்படி 134 ஆட்கள் கடுமையான கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது. 2018 ஆம் ஆண்டு 60 ஆயிரம் பார்வையாளர்கள் உக்ரைனின் செர்னோபில் அணுஉலைக்கு வந்தனர். மேலும், இங்கு வரும் பார்வையாளர்கள் எதையும் தொட, உட்கார, கேமரா பொருட்களைப் பயன்படுத்த தடை உள்ளது.  நன்றி: லிவ்

நிலவுக்கு போகலாமா?

படம்
இஸ்ரோ சந்திரயானைத் தொடர்ந்து அதன் அடுத்த பார்ட்டுக்கு சென்றுவிட்டது. வரும் ஜூலை 15 ஆம் தேதி நிலவுக்கு அடுத்த பயணம் தொடங்குகிறது. சந்திரயான் 1 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இத்திட்ட மதிப்பு 978 கோடி ரூபாய். ஜிஎஸ்எல்வி 3 சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணில் கொண்டு செல்லவிருக்கிறது. 3.8 டன் எடை கொண்ட செயற்கைக்கோள் இது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செல்லும் இந்த ராக்கெட்டில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய கருவிகள் உண்டு. சந்திரயான் 2 செயற்கைக்கோளை சுமக்கும் ஜிஎஸ்எல்வி 4 டன் எடையைத் தூக்கிச்சுமக்கும் சமர்த்து கொண்டது. இதனை பாகுபலி என்று அழைக்கின்றனர். நிலவில் நிலவும் அசாதாரண சூழல்களைச் சமாளித்து ரோவர் அங்கு சரியாக இறங்குவது சாதனை. அத்தனை தகவல் தொடர்பையும் சரியாக ஒருங்கிணைப்பதும் அடுத்த சாதனை. இதில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 14 கருவிகளும், நாசாவின் கருவி ஒன்றும் உள்ளது. விக்ரம் எனும் ஆர்பிட்டரில் உள்ள ரோவர் நிலவில் இறங்கி 14 நாட்கள் சோதனை செய்ய உள்ளது. ரோவர் ஆர்பிட்டர் வழியே தகவல்களையும் படங்களையும் அனுப்ப உள்ளது. நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

குரல் மூலம் முகம் வரையும் ஏஐ!

படம்
உண்மைதான். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் வேகமும் இன்று அதிகமாகிவிட்டது. தற்போது ஒருவரின் குரலைக் கேட்டு யூகமாக அவரின் முகத்தை ஏஐ வரையத் தொடங்கியுள்ளது. நம் கண்களைப் பொத்தியபடி ஒருவர் வந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்கிறார் எனில், டக்கென் மூளை தன் நினைவடுக்கில் தேடி ஹாய் குமார் என சொல்கிறோமே அதேதான். ஆனால் அதனை செயற்கை நுண்ணறிவு பழகிவிட்டது என்பதே ஆச்சரியம்தானே. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஆடியோ கிளிப்புகளை வைத்து பயிற்சி கொடுத்து இதனை சாதித்திருக்கிறார்கள். ஸ்பீச் டு ஃபேஸ் எனும் வசதி தோராயமானதுதான். குரலை வைத்து ஆணா பெண்ணா என கணித்து தோராய அளவில் உருவத்தை வரைகிறது. செயற்கை நுண்ணறிவின் வசதியில் இது முக்கியமானது கூட. arxiv எனும் அறிவியல் இதழில் இந்த ஆராய்ச்சி குறித்து செய்தி வெளியாகியுள்ளது. எந்தளவு உண்மையான முகத்தோடு மேட்ச் ஆகிறது என நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நன்றி: லிவ் சயின்ஸ்

ஹிட்லரைப் பற்றி எழுதி உலகை எச்சரித்த முதல் பத்திரிகையாளர்!

படம்
டோரத்தி தாம்சன் டோரத்திக்கு நிறைய எதிரிகள் உண்டு. ஆனால் அவரே ஹிட்லருக்கும் முக்கியமான எதிரியாக மாறும் சூழலும் வந்தது. ரேடியோ மற்றும் நாளிதழ் வழியாக அமெரிக்கர்களுக்கு ஹிட்லரின் பாசிச வேகத்தை உணர்த்திய பத்திரிகையாளர் இவரே. 1893  ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று பிறந்தவர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர். குடும்பமே தீவிரமான மதாபிமானிகள். தாம்சனுக்கு ஏழுவயது இருக்கும்போது, இவரின் தாய் இறந்துபோனார். மூன்று குழந்தைகளை பார்த்துக்கொள்ள அவரது தந்தை இரண்டாவது மணத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் வரும் பெண் எப்படி மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்க முடியும்? பிரச்னை தலைதூக்க தாம்சன் தன் அத்தைகளின் வீடுகளில் வளர்ந்தார். குடும்ப துக்கம் தொண்டையை அடைக்கவில்லை. படிப்பில் அத்தனை வேகத்தையும் காட்டி 1914 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். பின் பெண்களுக்கான உரிமைகளுக்காக சில ஆண்டுகள் போராடினார். போராட்டம், உரிமை, பெண்களைக் குறித்த அக்கறை எல்லாம் சரிதான். ஆனால் சோறு முக்கியம்தானே? நியூயார்க், சின்சினாட்டி ஆகிய இடங்களில் பணியாற்றினாலும் காசு கிடைக்கவில்லை. வாழ்வதே போராட்டமாக மாறியது. தன்

புதிய புத்தகங்கள் அறிமுகம் - ஜூன் 2019

படம்
புதிய புத்தகங்கள் அறிமுகம் 10 Women Who Changed Science and the World Rhodri Evans  and  Catherine Whitlock அறிவியல் துறையில் உலகை கவனிக்க வைத்த மேரி க்யூரி முதல் ரேச்சல் கார்சன் வரையிலான பெண்களைப் பற்றி பேசும் நூல் இது.  Bottle of Lies: The Inside Story of the Generic Drug Boom by   Katherine Eban மருத்துவத்துறையில் ஜெனரிக் மருந்துகள் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளை ஆசிரியர் கேத்தரின் இபன் புட்டு வைக்கிறார்.  Superior: The Return of Race Science by   Angela Saini அறிவியல் துறையில் விஷமாய் உள்ளே நுழைந்த இனத்தூய்மை வாதம், தேசியவாதம் எப்படி உலகை பின்னிக்கு இழுத்துச்சென்றது என்பதை ஆஞ்சலா சைனி விளக்கமாக நூலில் எழுதியுள்ளார்.  Nuking the Moon: And Other Intelligence Schemes and Military Plots Left on the Drawing Board இராணுவத்தில் எதிரி நாடுகளை உளவறிய என்னென்ன திட்டங்களை தீட்டுவார்கள். உலகிற்கு அறியாத இப்படியும் நடக்குமா என்று எண்ணும் திட்டங்கள், தோல்வியடைந்த ஐடியாக்கள் ஆகியவற்றைக் குறித்த நூல் இது. சுவாரசியமாக படிக்கலாம்.  நன

அமெரிக்கர்கள் விரும்பும் மாயோ!

படம்
செல்லமாக மாயோ என்றழைக்கப்படும் முட்டை உணவு, உருளைக்கிழங்கு சாண்ட்விட்ச், மக்ரோனி சாலட் ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ். பிரான்சில் முட்டை மாயோனிசிற்கான சாம்பியன்ஷிப் போட்டியே நடத்துகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாயோனிஸ் என்ற பிராண்டில் விற்கும் மாயோவின் விற்பனை 6.7 சதவீதம் சரிந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முதலாக மாயோ பொருட்களுக்கான மாற்று பொருட்களின் அளவு 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது. உக்ரேன் நாட்டைச் சேர்ந்த ஆலெக் ஸோர்னிடிஸ்கி, பனிரெண்டு நிமிடங்களில் 8 பௌண்டு மாயோனிஸைச் சாப்பிட்டு வியக்க வைத்துள்ளார். அமெரிக்காவில் மயோனிஸ் பொருட்கள் 80 மில்லியன் அளவுக்கு விற்கிறது. ஓராண்டில் அமெரிக்காவில் சாப்பிடப்படும் மாயோனிஸின் அளவு 177 மில்லியன் காலன் ஆகும். நன்றி: க்வார்ட்ஸ் 

விவசாயிகள் தற்கொலை - மகராஷ்டிரா முந்துவது எப்படி?

படம்
விவசாயிகள் தற்கொலை விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும் என தந்தி தலைப்புச்செய்தி இன்று சொல்லுகிறது. ஆனால் அதே தினத்தில் மகாராஷ்டிரத்தில் 808 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது, தினசரி ஏழு விவசாயிகள் கடன்தொல்லை, சரியான விலை கிடைக்காத பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிராவின் 42 தாலூக்காக்களிலும் வறட்சி படமெடுத்து ஆடியதில் மக்களின் உயிர் பறிபோனதுதான் மிச்சம். ஆட்சியாளர்கள் எப்போதும்போல எண்களாக குறித்து வைத்துக்கொண்டனர். விதர்பா, மராத்வடா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இறப்பு நேர்ந்துள்ளது. விதர்பாவில் 344, மராத்வடாவில் 161, வடக்கு மகாராஷ்டிராவில் 244 என தற்கொலைகள் பதிவாகியுள்ளன. விவசாயிகள் கடந்த ஆண்டு கடன் தள்ளுபடி கோரி போராட்டம் நடத்தினர். அதைக் கண்டுகொள்ளாதது போல இருந்த அரசு, தேர்தல் நெருங்கியவுடன் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது. இத்திட்டத்திற்கு கிஷான் சம்மான் நிதி என்று பெயர் வைக்கப்பட்டது. நன்றி: எகனாமிக் டைம்ஸ் - பிரியங்கா ககோட்கர்.

சுடோகு விளையாடினால் மூளை கூர்மையாகுமா?

படம்
நேரம் கிடைக்கும்போது சிலர் இபுக் படிப்பார்கள். சிலர் போனில் கேம்ஸ் விளையாடுவார்கள். சிலர் அதில் ஆபாச படங்களைப் பார்ப்பார்கள். சிலர் சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டியை விளையாடுவார்கள். இதில் எது சிறந்தது என்று நான் கூறப்போவதில்லை. யாருக்கு என்ன தேவையோ அதைத்தானே செய்ய முடியும். மூளையை உசுப்புவது என்பது வியாபாரத்திற்கான விஷயம். சுடோகு, குறுக்கெழுத்துப்போட்டிகள் ஆகியவை இவ்வகையில் வரும என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஆதாரமின்றி பலரும் இதனை நம்புகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. 2016 ஆம் ஆண்டு இதுபோல மூளையை புத்துணர்ச்சி கொண்டதாக மாற்றுகிறோம் என்று விளையாட்டு பேக்கேஜை அளித்த நிறுவனம் வழக்கில் மாட்டிக்கொண்டது. பின் நிறுவனம் அல்சீமர் நோய் தீர்ப்பதற்கும், மூளையின் செயல்பாட்டை மாற்றுவதற்குமாக எந்த ஆதாரமும் கிடையாது என உறுதியானது. நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே சுடோகு விளையாடுவதை உங்கள் பொழுதுபோக்காக வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து கண்ணாடி போட்டா புத்திசாலி என்பது மாதிரியான உதாரணங்கள் வேண்டாம். அது ஆபத்து.