இடுகைகள்

புத்தாண்டில் மாறுவது என்னென்ன விஷயங்கள்?

படம்
giphy புத்தாண்டுகளுக்கு வாழ்த்துகள் சொல்லி காஜூ கத்திலி கொடுத்தால் போதுமா? இந்த ஆண்டில் நிறைய விஷயங்கள் மாறுகின்றன. ரயில் கட்டண உயர்வு புத்தாண்டு பரிசாக மத்திய அரசு நமக்கு அளித்துள்ளது. வேறு என்னென்ன விஷயங்கள் மாறுகின்றன என்று பார்ப்போம். சேமிப்புக்கணக்குக்கு காசு கிடையாது. சேமிப்பு கணக்கிலிருந்து நெப்ட் முறையில் யாருக்கு பணம் அனுப்பினாலும் சேவைக்கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனை இணையம் அல்லது மொபைல் மூலம் செய்து சோதித்துப் பாருங்கள். பாதுகாப்பு முக்கியம் தொழிலதிபர்களுக்கு லட்சக்கணக்கில் வாரிக்கொடுத்துவிட்டு வாராக்கடன் கணக்கு எழுதியதில் பெரிய வங்கி எஸ்பிஐ. தற்போது வாடிக்கையாளர்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்தால் கூட ஓடிபி கேட்கிறார்கள் இது இரவு 8மணியிலிருந்து காலை 8 மணி வரை அமலாகுமாம். உடையும் விண்டோஸ் விண்டோஸ் போன்களை உலகில் அரிதான மனிதர்களே தில்லாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் இதில் வாட்ஸ் அப் இயங்காது. பார்த்துக்கொள்ளுங்கள். உருப்படியான ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் வாங்குவது உங்களது சாமர்த்தியம். வலுக்கட்டாயமாக டிஜிட்டல்

எதிர்கால நம்பிக்கை மனிதர்கள் 2019 - 2020

படம்
பபி தாஸ், எம்ப்ராய்டரி கலைஞர் காலம் எல்லோருக்கும் ஒரேவித வாய்ப்புகளைத்தான் வழங்குகிறது. நாம் அதில் டிவி பார்க்கிறோமோ, அல்லது டிவியில் நம்மை பிறர் பார்க்கும்படி வேலை பார்க்கிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது. யாராக இருந்தாலும் துறை சார்ந்தவர்கள் தங்கள் துறையில் இவர் ஊக்கமூட்டும்படி வளர்கிறார் என்று நம்புவார்கள். அதனை பிறருக்கும் கூறுவார்கள். அப்படி சிலர் சிலரை சிறப்பாக வருவார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களைப் பார்ப்போம். அமர் கௌசிக், - 36 சினிமா இயக்குநர் அமர் கௌசிக்கின் பாலா, ஸ்த்ரீ படங்களைப் பார்த்து வியந்தேன். அதில் நிறைய மேம்படுத்தல்களை என்னால பார்க்க முடிந்தது. குறிப்பிட்ட பட்ஜெட்டில் கதையும் நிறைவாக நட்சத்திரங்களையும் வைத்து படம் செய்வது கடினம். இதனை அமர் கௌசிக் எளிதாக செய்கிறார். இவரின் கதை சொல்லும் முறையும் ரசிக்கும்படி இருக்கிறது. - சுஜய் கோஷ் - திரைப்பட இயக்குநர் சாரா அலிகான் 24, விக்கி கௌசல் 31 திரைப்பட நடிகை, நடிகர் இந்த இரு நடிகர் நடிகையும் நட்சத்திரங்களாகும் அந்தஸ்து பெற்றவர்கள். கதையின் தேர்வு, அதை வைத்து மக்களை ஈர்ப்பது என்று தொடங்கி இவர்களின் ம

கலகக்கார கோமாளி - ஜோக்கரின் முன்கதை

படம்
ஜோக்கர் இயக்கம் டாட் பிலிப்ஸ் ஒளிப்பதிவு லாரன்ஸ் செர் இசை ஹில்டர் 1981ஆம் ஆண்டு நடைபெறும் கதை. இதில் ஜோக்கர் எப்படி உருவானார் என்பதை விவரிக்கிறது. அடக்கமுடியாமல் சிரிக்கும் குறைபாட்டால் அவதிப்படும் ஆர்தர் பிளேக்கிற்கு, இக்குறைபாட்டால் தனிக்குரல் நகைச்சுவையாளராக வாய்ப்பும் பறிபோகிறது. ஒரு நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டு பேசுகிறார். ஆனால் அதனை நாடு முழுவதும் கிண்டல் செய்து பேசுகிறார் டிவி தொகுப்பாளரான ராபர்ட் நீரோ. முதலில் இதற்காக மகிழும் பீனிக்ஸ், பின்னர் அது தன்னை கிண்டல் செய்வதற்கான முயற்சி என கோபமாகிறார். அவர் அதற்கு பதிலாக என்ன செய்தார். என்பதை ஜோக்கர் படம் சொல்லுகிறது. படத்தின் நிறம், இசை என ஜோக்கரின் இருண்ட மனநிலையை சொல்வது போலவே உள்ளது. அனாதையாக பிறந்தவரை எடுத்து வளர்க்கும் அவரது தாய்க்கும் மனநிலை பிறழ்வு பிரச்னை அவரின் வாழ்வை பரிகசிக்கிறது. கோதம் நகரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் மருத்துவ சிகிச்சைகளை நகர நிர்வாகம் தடாலடியாக நிறுத்துகிறது. இதனால் ஏற்கெனவே சிதைந்த மனம் கொண்ட பீனிக்ஸின் சிரிப்பை நிறுத்தமுடியாமல் போகிறது. அவரின் கற்பனை உலகிலும் அவரா

சாவைப் பார்த்து அசல் பயம் லேது - வினய விதேயா ராமா!

படம்
வினய விதேயா ராமா - தெலுங்கு இயக்கம் - போயபட்டி சீனு ஒளிப்பதிவு - ரிஷி பஞ்சாபி, ஆர்தர் ஏ வில்சன் இசை - டிஎஸ்பி போயபட்டி சீனு படத்தில் கதை ஏதோ ஒருசமயம் தெரியும். ஒட்டுமொத்தமும் ஆக்சன் காட்சிகளில் கரைந்துவிடுவதுதான் நிஜம். பரசுராமரின் கையில் இருக்கும் கோடரி, வில்லன்களின் தலைகளை வெட்டி காற்றில் பறக்க விடுவது என அனைத்து விஷயங்களும் நீக்கமற படத்தில் இருக்கின்றன. ஆனால் படத்தின் குறை கதையில் இருக்கிறது. ஐயையோ தம்பி எப்படி வேலை செய்து அண்ணனை படிக்கவைக்கமுடியும்? அண்ணன்களை... அதோடு அவர் செய்யும் ஃபேன்டசி பயணங்களையும் நம்மால் யோசிக்க முடியவில்லை. கனல்கண்ணன் சண்டைக்காட்சிகளுக்கு பயங்கரமாக யோசித்திருக்கிறார். பல சமயங்களில் காட்சிகளை கனல் கண்ணனே யோசித்து எடுத்தாரோ எனும்படி ஆக்சன் காட்சிகளை அடுக்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு மரியாதை என்பது போல காட்சிகள் தொடங்கினாலும், படத்தில் அப்படியான செய்திகள் கிடையாது. சலங்கை கட்டி ஆடுவது கேவலம் என்பதற்காக அழும் பிரசாந்தின் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. நாயக துதிக்காட்சிகள் நிறைய இருக்கின்றன. கியரா அத்வானி பாடல்களுக்காக பயன்படு

அறிவியல் மற்றும் சூழலியல் நூல்கள் 2019! - வாசிக்க ரெடியா?

படம்
சிறந்த அறிவியல் மற்றும் இயற்கை நூல்கள் 2019 The Weil Conjectures  Karen Olsson     இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கணிதவியலாளரான ஆண்ட்ரே வெல் மற்றும் தத்துவவியலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சைமன் வெல் ஆகியோரை நினைவுகூரும் நூல். கணிதமும், தத்துவமும் இணைந்து பயணிக்கும் நூல் வாசிப்பதற்கு புதுமையாக உள்ளது.   Something Deeply Hidden Sean Carroll     பால்வெளி பற்றி பல்வேறு உண்மை மற்றும் வதந்திகள் நிலவுகின்றன. அங்குள்ள சூழல்கள், விதிகள், செயல்பாடுகளை இயற்பியலாளர் சீன் காரல் எளிமையாக புரியும்படி விளக்கி எழுதியுள்ளார்.  Superheavy   Kit Chapman  தனிம வரிசை அட்டவணையில் உள்ள அடர்த்தியான நிலையில்லாத தனிமங்கள் எப்படி நம் வாழ்க்கையை மாற்றின என்று ஆசிரியர் கிட் சாப்மன் விளக்கியுள்ளார். இதில் இடம்பெறும் தனிமங்கள் எப்படி இயற்கையில் கிடைக்கின்றன என்று கூறுவது சுவாரசியமாக உள்ளது.  The NASA Archives: 60 Years in Space Piers Bizony, Andrew Chaikin and Roger  விண்வெளியில் சாதனை படைத்து வரும் நாசாவின் அறுபது ஆண்டு நிகழ்ச்சிகளை ஆவணமாக்கி இருக்கிறார்கள்.

2019 டிரெண்ட்ஸ் தொடருமா? பகுதி 2

படம்
நடப்பு ஆண்டில் தொடரும் விஷயங்கள் அடுத்த ஆண்டும் தொடருமா என்று உறுதி கூற முடியாது. 2019 ஆம் ஆண்டு மக்களை வசீகரித்து கவனித்த வைத்த அவர்கள் பின்பற்றிய பேசிய, ரசித்த விஷயங்கள் இவை. புது மெட்ரோ ரயில் மோகம் டிக்கெட் விற்கிறதோ இல்லையோ, மக்கள் ஏறுகிறார்களோ இல்லையோ, மேம்பாலங்களில் மெட்ரோ தன் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தன. சாதாரண ஐந்து ரூபாய் டிரெயின்களை தடாலென நிறுத்தியதால், மெட்ரோ ரயிலில் மக்கள் பயணிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். எனவே மெட்ரோ ரயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் வென்றுவிட்டது.  முதலில் இலவசமாகவும் பின்னர் காசு கொடுத்தும் செல்ல தமிழர்கள் பழகினர். சென்னை, கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ கொடி பறந்தது. மனநலம் முக்கியம் இந்த ஆண்டு மனநலம் பற்றி பேசத்தொடங்கி திரியை பற்ற வைத்தது திருமதி தீபிகா படுகோன்தான். பின் அதனை மற்றவர்களும் பின்பற்றி, பிரஷர் ஜாஸ்திங்க என கமெண்டுகளை அள்ளித் தெளித்து அனுதாப வாக்குகளை அள்ளினர். பிட்காயின் பரிதாபம் ஆர்பிஐ, பிட்காயின் யூஸ் பண்றதைப் பார்த்தேன். பத்து ஆண்டுகள் சிறை தண்டனை என மிரட்டினாலும் அரசின் பிள

2019 டிரெண்டுகள் என்ன? பகுதி 1

படம்
giphy இன்புளூயன்சர்கள் இந்த வார்த்தையை அறிமுகம் செய்த து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட சமூக வலைத்தளங்கள்தான். இம்முறையில் இவர்கள் நவீனமான விளம்பர தூதர்களாக செயல்பட்டு ஆச்சி இட்லி மிளகாய் பொடி முதல் கார்கள் வரை விளம்பரம் செய்து சம்பாதித்தார்கள். கவிதை நேசர்கள் இம்முறை இலக்கியவாதிகளின் கவிதைகளை தாண்டி சாமானியர்களும் கவிதை பாடினார்கள். இதில் சிம்பிளாக அவர்களின் உறவு, பிரச்னைகள் ஆகியவை கவிதையாக வெளிவந்தன. நன்றாக இருந்த தோ இல்லையோ உலகம் இதை ரசித்து பாராட்டியது. இதற்கு முக்கியக் காரணம், நகரங்களில் உருவாகியுள்ள கிளப்புகள்தான். இங்குதான் ஓபன் மைக் சங்கதிகளில் இந்த கவிதைகளைப் பாடி இளைஞர்கள் குதியாட்டம் போட்டனர். இவை உடனுக்குடன் வைரலும் ஆனது. மொபைலே தியேட்டர் இந்தியர்களுக்கு எம்எக்ஸ் பிளேயர் கிடைத்தது, அதிலும் நெட்ஃபிளிக்ஸ் படங்கள் மாதம் 199 ரூபாய்க்கு கிடைத்தால் போதாதா? வார இறுதியில் தங்கள் நண்பர்களை விட போனுடன் கழித்த நவீன இளைஞர்கள் அதிகம். பார்க்கிங், பாப்கார்ன் செலவு பற்றி கவலைப்படாமல் வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வசதி செய்து அமேசான், நெட்ஃபிளிக்சுக்கு படம் கட்ட

ஆவியாக வந்து மகனுக்கு தாம்பத்திய பாடம் எடுக்கும் அப்பா- சோகடே சின்னி நயனா

படம்
சோகடே சின்னி நயனா - தெலுங்கு இயக்கம் கல்யாண் கிருஷ்ணா குருசலா கதை - திரைக்கதை பி. ராம் மோகன் ஒளிப்பதிவு பிஎஸ் வினோத் இசை  அனுப் ரூபன்ஸ் ஃபேன்டசியான கதை. கல்யாணமாகி சில ஆண்டுகளிலேயே  பங்காரு ராஜூ விபத்தில் இறந்து விடுகிறார். எப்போதும் பெண்களையே சுற்றி வந்துகொண்டிருப்பவர் அவர். அவருடைய மகனுக்கு முக்கியமான பிரச்னை வருகிறது. அதைத் தீர்க்க வருகிறார். அதோடு அவர் இறந்துபோனதற்கான காரணமும் தெரியவருகிறது. மேலும் அவரது குடும்பம் முழுக்க பலியாகும் வாய்ப்பும் உருவாகிறது. அதை எப்படி தடுக்கிறார், குடும்பத்தைக் காக்கிறார் என்பதே கதை. ஆஹா.. படம் முழுக்க நாகார்ஜூனாதான் தெரிகிறார். படத்தலைப்பை இளமையான வசீகரன் என்பதுதான். அதனை படம் முழுக்க நிரூபிக்கிறார். அப்பாதான் இதில் பவர். மகன் இதயநோய் வல்லுநர் என்பதோடு  மற்ற விஷயங்களிலும் டியூப்லைட். அத்தனையையும் நேர் செய்துவிட்டு குடும்ப பகையையும சிவபெருமானின் அருளைப் பெற்று தீர்த்து வைக்கிறார். பிரம்மானந்தத்தின் காமெடியும் சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ரம்யாகிருஷ்ணன், லாவண்யா திரிபாதி, அத்தை பெண்கள் என அத்தனைபேரும் கொள்ளை அழகு. நடிக்

சிறந்த ஸ்மார்ட் போன்கள் 2019

படம்
2019 சிறந்த ஸ்மார்ட் போன்கள் ஆப்பிள் 11 புரோ சிறப்பான கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் ஜி.வி. வெங்கட்ராம் போல புகைப்படம் எடுக்கும் தரத்தில் ஆப்பிளை அடித்துக்கொள்ள ஆளில்லை இத்துறையில் . ஏ13 பயோனிக் சிபியூ பிரமாதமாக இருக்கிறது. எந்த டாஸ்க்கிலும் சுணங்காத சிறந்த போன் இதுவே. சாம்சங் கேலக்ஸி 10 ஆப்பிளுக்கு போட்டி கொடுக்கும் அளவு தரம், விலை அனைத்தும் கொண்டது. சிறப்பான ஸ்க்ரீன் என்று சொன்னால் சாம்சங் முதலாளியே அடிக்க ஓடிவருவார். அதை வைத்துத்தானே மார்க்கெட்டையே பிடித்தார்கள். சிம்பிளான போன், நிறைய வசதிகள், எடை குறைவு என எதிர்பார்ப்பிற்கு மேலே சொல்லு என வசீகரிக்கிறது சாம்சங். கூகுள் பிக்சல் 4 வெகு நாட்களாக மார்க்கெட்டில் முன்னுக்கு வரத் துடித்து  சாதித்துவிட்டது கூகுள். பிக்சல் 4, 90 ஹெர்ட்ஸ் திரை, வேகமான முகமறிதல் திறக்கும் வசதி, ஸ்பேம் விளம்பரங்களை ஒதுக்கும் வசதி என நவீன இளைஞர்களுக்கான வசதியில் முன்னாடி செல்கிறது. இரவு வானத்தைக்கூட இந்த போன் மூலம் அழகாக படம் எடுக்க முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கேமராவின் ஜூம் செய்யும் வசதிகளும் பிரமிக்க வைக்கின்றன. கொடுக்க

நேற்று இன்று நாளை - நாஸ்டாலஜியா நல்லதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாஸ்டாலஜியா நல்லதா கெட்டதா? பொதுவாக நாம் கடந்த காலத்தில் செய்த தில்லுமுல்லுகள், போக்கிரித்தனங்கள், கோமாளித்தனங்கள் இவைதானே இன்று நம்மை வடிவமைத்துள்ளன. அதனால்தான் ஜென் இசட், மில்லினிய இளைஞர்களைக்கூட இறந்த காலத்திற்குள் சென்று பார்க்கும்படி திரைப்படங்கள் எடுக்கிறார்கள். இதன்மூலம் கடந்த காலத்தில் நடந்த சமாச்சாரங்களை சற்று கண்கொண்டு பார்க்கலாம். இன்றும் காமெடி என்றால் வடிவேலுவை பேசுபவர்கள் அடுத்து சபாபதி படத்து காமெடியில் சென்று முடிப்பார்கள். காரணம், அந்த பட கலைஞர்கள் இன்றைய கலைஞர்களுக்கு ஊக்குமூட்டுபவர்களாக இருந்திருப்பார்கள். பொதுவாகவே வரலாறு தெரிந்தால்தானே வரலாறு படைக்க முடியும் என்று கூறுவார்கள். அதுதான் விஷயம். இதில் எதிர்மறையான விஷயங்களை விட நேர்மறையான சங்கதிகள் நிறைய உள்ளன. எனவே நாஸ்டாலஜியாவுக்கு சென்று வருவது உங்களை புத்துணர்வாக்கும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

ஜென் இசட் இளைஞனின் காதல்கதை - சி லா சோ

படம்
சி லா சோ- தெலுங்கு இயக்கம் - ராகுல் ரவீந்திரன் இசை - பிரசாந்த் விகாரி ஒளிப்பதிவு எம் சுகுமார் திருமணத்திற்கு முன்னே போர்ச் கார் வாங்கவேண்டும், ஐரோப்பா டூர் போக வேண்டும் என லட்சியங்களை வைத்துள்ள இளைஞர், தன் திருமணத் துணையை எப்படி தேர்ந்தெடுக்கிறார் என்பதே கதை. தலைப்பு பற்றி கேட்டால் கல்யாண மாப்பிள்ளை என்று பொருள் சொல்கிறது விக்கிப்பீடியா. அதிலேயே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது படம். ஆஹா இளைஞர்களுக்கான படம். இதனால் நாயகன் சுசாந்த் ஷார்ட்ஸ் போட்டே பாதிநேரம் நடித்திருக்கிறார். இதனால் படமும் இயல்பாக வந்துள்ளது. கிடைத்த கேப்பில் எல்லாம் வெண்ணிலா கிஷோரின் காமெடி, இனிமையாக நம்மைக் கவர்கிறது. பஞ்சாபி பெண்ணான ரூகானி சர்மா உண்மையில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பிரசாந்த் விகாரி கிடைத்த  வாய்ப்பில் சிறப்பான இசையில் மனதை ரசிக்க வைக்கிறார். சிம்பிளான கதையில் பெண்களை கௌரவமாக காட்டியுள்ளதற்கு சபாஷ் சொல்லி இயக்குநர் ராகுல் ரவீந்திரனை பாராட்டலாம். ரோகிணி, அனுஹாசன், ஜெயப்பிரகாஷ் கொஞ்ச நேரம் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஐயையோ கதை என்று சொன்னால் பஸ் டிக்கெட