இடுகைகள்

தத்தமது பிள்ளைகளின் நலனுக்காக திருமணம் செய்துகொள்ள நினைக்கும் பெற்றோர்! - பாஸ்கர் ஒரு ராஸ்கல்

படம்
பாஸ்கர் ஒரு ராஸ்கல் இயக்கம் சித்திக் வசனம்: ரமேஷ் கண்ணா ஒளிப்பதிவு: விஜய் உலகநாதன் இசை அம்ரிஷ் மலையாளத்தில் சிறப்பாக ஓடிய படம், தமிழில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறப்பாக இருக்கிறதா என்றால் என்னவோ போல உருவாக்ககப்பட்டிருக்கிறது.   அரவிந்த சாமி மட்டுமே படத்தின் பலம் படித்த தொழிலதிபர். அவருடைய மகனுக்கு படிப்பு வரவில்லை. அதற்கு பதிலாக எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீசாக அடிதடி, வெட்டுக்குத்து, இடத்தை கப்ஸா செய்வது, கட்டப்பஞ்சாயத்து என அனைத்து விஷயங்களும் கைவருகிறது. இந்த நிலையில் அவரது சிறுவயது மகன், அவரது ஆக்ரோஷ கனல்கண்ணன் சண்டைகளால் அவரை அப்பா என்று கூப்பிடவே தயங்குகிறான். அம்மா இல்லாத பையன் என்பதால் பாஸ்கர் அவனை பெரிதாக கண்டிப்பதில்லை. இந்த சூழ்நிலையில் பாஸ்கர், தனது மகனின் பள்ளிக்கூட தோழியை சந்திக்கிறான். அச்சிறுமியின் தாயை அவனுக்கு பிடித்திருக்கிறது. அவளுக்கும் பாஸ்கரைப் பிடித்திருக்கிறது. ஆனால் அதனை வெளிப்படையாக சொல்ல தயங்குகிறார்கள். இதனை உடைத்து பேசினால் பாஸ்கரின் மகன், அவனது பள்ளித்தோழி என இருவருக்குமே பெற்றோர் கிடைத்துவிடுவார்கள். சிறுவன், சிறுமி நினைத்தால் போதுமா? வி

இடதுசாரி அரசை எதிர்த்து போராடும் துணிச்சலான அரசியல்வாதி! - ஜூவான் குவைடோ

படம்
ஜூவான் குவைடோ  ஜூவான் குவைடோ வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல்வாதி, தைரியமாக அளவில்லாத துணிச்சலுடன் வெனிசுலா அதிபர் மதுரோவை எதிர்த்து வருகிறார். 35 வயதான இவர் முன்னர் பாப்புலர் வில் என்ற கட்சியில் உறுப்பினராக இருந்தார். எழுத்தார் காப்ரியல் கார்சியா மார்க்வஸ், லத்தீன் அமெரிக்காவில் தனது தினசரி வாழ்க்கையில் பார்ப்பதை மாய எதார்த்தவாத எழுத்துக்களாக எழுதினார். அதற்கு வாழும் சாட்சியாக இருப்பவர், ஜூவான் குவைடோதான். ஆளும் அரசுக்கு எதிராக துணிச்சலுடன், உற்சாகமாக, ஊக்கத்துடன் செயல்பட்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து சாதனை செய்திருக்கிறார் குவைடோ. நாட்டிலுள்ள பலரும் சிறுபிள்ளைத்தனமான சுயநல அரசியலில் ஈடுபட்டு மறைமுகமாக மதுரோவுக்கு உதவிக்கொண்டிருந்தனர். ஆனால் குவைடோ எந்த இடத்திலும் மக்களின் ரத்தம் சிந்தாமல் போராட்டங்களின் வழியாக எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். மக்கள் மீதுள்ள நம்பிக்கை, உளச்சான்று கொண்ட அறிவுடன் செயல்பட்டு வருகிறார் குவைடோ. இது போதாதா மாற்றங்கள் நடைபெறுவதற்கு? ஜூவான் மானுவேல் சான்டோஸ்

மக்களுக்காக வன்முறை களமான நாட்டை சீர்திருத்த முயலும் இடதுசாரி அரசியல்வாதி! - அம்லோ(Amlo)

படம்
மிட்ச் மெக்கானல்- பயோகிராபி மிட்ச் மெக்கானல் அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. தற்போது அமெரிக்காவின் செனட்டராக இருக்கிறார். வாஷிங்டன் பல்வேறு சிதைவுகளை, குற்றச்சாட்டுகளை சந்தித்துவருகிறது. அமெரிக்காவில் கூடும் மக்களவையில் ஜனநாயகத்தை காப்பாற்ற உழைத்து வரும் முக்கியமான தலைவர்களின் மிட்ச் மெக்கானலும் ஒருவர். சில அரசியல்வாதிகளின் உழைப்பால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்மை ஏற்படுகிறது என்றால் மிட்ச் மெக்கானல் மூலம் மக்களுக்கு நிறைய நன்மைகளை கிடைத்திருக்கின்றன. மக்களுக்கு உதவும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேறுவதற்கு உதவிகளைச் செய்தவர் இவர். ஜான் போஹ்னர் லோபஸ் ஆப்ரடார் - அம்லோ லோபஸ் ஆப்ரடார் 12 ஆண்டுகள் காத்திருந்து மெக்சிகோவின் அதிபராகி இருக்கிறார் அம்லோ. அவரின் நீளமான பெயரின் சுருக்கம்தான் அம்லோ. இடதுசாரி அரசியல்வாதி என்பதோடு எளிமை விரும்பியும் கூட. தனக்கு கொடுக்கப்பட்ட அதிபர் மாளிகை லாஸ் பினோஸைக் கூட வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். தினசரி காலை ஏழுமணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்துவிடுவார் என நிறைய பிளஸ் விஷயங்கள் உண்டு. தனது

இடியாப்ப சிக்கல்களைக் கொண்ட நாட்டின் தலைவர்! - இம்ரான்கான்

படம்
பாக். பிரதமர் இம்ரான்கான்/the week இம்ரான்கான் 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி உலக கோப்பை வெல்ல வழிவகுத்தவர். லாகூரில் உள்ள மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையைக் கட்டியவர்,   குழந்தைகள் படிப்பதற்கான பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் செய்தபிறகு இருபது ஆண்டுகள் கழித்துதான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். பாகிஸ்தான் தெரீக் இன்சாஃப் என்ற கட்சியைத் தொடங்கி இன்று பாகிஸ்தான் பிரதமராக இருக்கிறார். தங்களின் அண்டைநாடுகளான சீனாவைப் போல வசதியான நாடு அல்ல பாகிஸ்தான். வளைகுடா நாடுகளைப் போல சிறப்பான கட்டமைப்புகளையும் ஏற்படுத்த முடியாமல், அரசு தனக்கான செலவுகளுக்கே பிற நாடுகளிடம் கையேந்தும் நிலையில் உள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் இளைஞர்கள் 67 வயதான இம்ரான்கானை நம்பித்தான் வாக்களித்திருக்கிறார்கள். ராணுவம், மத அடிப்படைவாதிகளிடம் நட்புகொண்டிருக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் இவரைச் சுற்றி வலம்வருகிறது. சரியான ஆலோசகர்கள் இல்லாமல் நிர்வாகம் செய்கிறார் என்று பலரும் புகார்களைச் சொல்லுகிறார்கள். ஏராளமான முரண்பாடுகளைக் கொண்ட நாட்டை அவர் ஆண்டுகொண்டிருக

தங்கைகளுக்கு கல்யாணம் செய்ய அண்ணன் செய்யும் தில்லுமுல்லு! - கத்தி காந்தாராவ்

படம்
கத்தி காந்தாராவ் 2010 இயக்கம் இ.வி.வி சத்யநாராயணா வசனம் பிரசாத் வர்மா ஒளிப்பதிவு அடுசுமிலி விஜயகுமார் இசை மல்லிகார்ஜூனன் காவல்நிலையத்தில் அப்பாவின் விருப்ப ஓய்வு காரணமாக கான்ஸ்டபிள் வேலை அவரது மகனுக்கு கிடைக்கிறது. அப்பா, தனது வேலையை மகனுக்கு கொடுத்ததால் குடும்பத்தில் உள்ள இரு தங்கைகளுக்கும் அவன்தான் திருமணம் செய்து வைக்கவேண்டும். அதுவரை அவன் திருமணம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கிறார். அதோடு, அதனை முத்திரைத்தாளில் பதிவு செய்து கையெழுத்தும் வாங்கிக்கொள்கிறார். இந்த நிலையில் மகனுக்கு காதல் வருகிறது. அவன் என்ன முடிவெடுத்தான் என்பதுதான் கதை.  ஆஹா படம் முழுக்க நரேஷ், வேணு மாதவின் காமெடிதான் பின்னி எடுக்கிறது. பார்க்கில் காதலர்களை மிரட்டு காசு பிடுங்குவது அக்காக்களின் கணவர்களுக்கு வரதட்சணை கொடுக்க தில்லுமுல்லு செய்வது, தங்கைக்காக கமிஷனரையே மிரட்டுவது என வேறு லெவலில் நடித்திருக்கிறார். இறுதியில் தன் மாமனார் கிராமத்தில் பிரசிடெண்ட் ஆகவும் சூப்பர் ரூட் போட்டுக்கொடுத்து அனைவரின் மனதையும் வெல்கிறார்.  காம்னாவைப் பொறுத்தவரை காதலுக்கு அதிக நேரமில்லை, முழுக்க பாடல்களுக்கு மட்டும் பரவசமாக வந

அறிவியல் அமைப்புகளில் உள்ள பிராமணர்களுக்கிடையே ஏற்படும் போட்டி! - பொறுப்புமிக்க மனிதர்கள்

படம்
மெரினா புக்ஸ் பொறுப்புமிக்க மனிதர்கள் மனு ஜோசப் தமிழில்: க.பூரணச்சந்திரன் எதிர்வெளியீடு இந்த நாவல் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நாவல். விருது என்ற விஷயம் இல்லாமலே நாவல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. முழுக்க அவல நகைச்சுவை சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அறிவியல் மையம் ஒன்றில் பிராமண ஆராய்ச்சியாளர்களுக்குள் நடக்கும் நீயா? நானா போட்டிதான் கதை. அரவிந்த் ஆச்சார்யா இயற்பியல் ஆய்வு மையத் தலைவர். அவர் பெருவெடிப்பு என்ற கொள்கையை மறுப்பவர். இவரது தலைமையின் கீழ் மேம்பட்ட பிற நாடுகள் செய்யும் அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை. அத்தனையையும் ஆச்சார்யா தேவையற்ற செலவு, வீண் ஆராய்ச்சி என்று தடுக்கிறார். அவரது கீழுள்ள நம்பூதிரி அவர் சார்ந்த ஆதரவாளர்கள் அனைவரும் அரவிந்த் ஆச்சார்யாவை எதிர்க்கின்றனர். ஆனால் மத்திய அமைச்சர் அரவிந்த் ஆச்சார்யாவை நம்புகிறார். ஆனாலும் ஆச்சார்யாவுக்கு சரிவு பெண்ணின் மூலம் தொடங்குகிறது. மனைவி ஊருக்கும் சென்றிருக்கும் போது, ஆய்வு மையத்தில் உயிரியல் தொடர்பான ஆராய்ச்சி செய்யும் இளம்பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார். பின்னாளில் குற்றவுணர்ச்ச கொண்டு மனைவியிடம் அந்த விவரங்களை சொல்லிவி

பல்லவ வம்சத்தினரை வேரறுக்கத் துடிக்கும் மல்ல எதியின் கொலைவெறித்தாண்டவம்! - அத்திமலைத்தேவன் 3

படம்
அத்திமலைத்தேவன் 3 காலச்சக்கரம் நரசிம்மா வானதி பதிப்பகம் ப. 745 இந்த நாவலில் பல்லவர்கள் வம்சம் முடிவை நெருங்குவதற்கான அனைத்து விஷயங்களும் நடைபெறுகிறது. அவனிசிம்மன் வித்யுகா என்ற நடனபெண்மணியுடன் உறவு கொண்டு மகனை பெறுகிறான். ஆனால் அரியணை என்று வரும்போது பிரிய நாயகியின் மகன், மகேந்திர பல்லவனுக்கு வாய்ப்பு என்று நினைத்து வித்யுகாவை கொல்ல ஏற்பாடு செய்கிறான். இதனால் கோபம் கொல்லும் அவன் மகன் குணபரன், பல்லவ வம்சத்தை பழிவாங்க சபதம் செய்கிறான். இதைத் தாண்டி அவனை ஆதரிக்கும் குடும்பத்திற்கும், அவன் தங்கையாக நினைத்த பெண்ணுக்கும் அரச குடும்பம் இழைக்கும் அநீதி அவன் ரத்தத்தை கொந்தளிக்க வைக்கிறது. இதனாலும் பிரக்ஞதாரா செய்த சில நுட்பமான தந்திரங்களாலும் பல்லவ வம்சத்தில் ஏராளமான மரணங்கள் நடக்கின்றன. இந்த நூலில் சிங்க மல்லன் எப்படி தேவ உடும்பரத்தை பெறுகிறான் என்பதை காலச்சக்கரம் நரசிம்மா அழகாக விவரித்துள்ளார். அத்திமலையான் கோவிலில் நவரத்ன பல்லவி தற்கொலை செய்துகொண்டுள்ள இடத்திலிருந்து, புதிர்கள் விடுபடத் தொடங்குகின்றன. ஜெயவர்மன் ஒலைச்சுவடியை கொடுத்துச் சென்ற அஞ்சில் அணங்கு குடும்பத்திலிருந்து வந்த ப

செயற்கை நுண்ணறிவை சமூக வலைத்தளத்தில் கொண்டு வந்த தலைவர்! - ஸாங் யீமிங்

படம்
ஸாங் யீமிங் இன்று உலகையே குறுகிய நேரம் கொண்ட வீடியோக்களால் ரசிக்க வைக்கும் பைட் டான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இவர்தான். செயற்கை நுண்ணறிவு கொண்ட சமூக வலைத்தளங்களின் இயக்கத்தை இவரே ஊக்கமுடன் தொடங்கி வெற்றிகண்டிருக்கிறார். இன்று இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் செயலி இவருடையதுதான் அமெரிக்க நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு முன்பே ஏ.ஐ முறையில் சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட விருப்ப அடிப்படையில் செய்திகளை வழங்கத் தொடங்கியவர் இவர். எளிமையாகவும் வசீகரமாகவும் பேசக்கூடிய தொழிலதிபர்களில் இவர் முக்கியமானவர். புதிய கண்டுபிடிப்புகளின் காதலன். புதிய கண்டுபிடிப்புகள் நடைமுறையில் சாத்தியமா இல்லையா என்பதை விட அவற்றைப் பற்றி கற்பனை செய்வது எனக்கு பிடிக்கும் என்று கூறுபவர், விரைவில் டிக்டாக் நிறுவன தலைமையகத்தை இங்கிலாந்தில் அமைக்க கூடும். கை ஃபு லீ benjamin பெஞ்சமின் நேடான்யூ தற்போது கோவிட் -19 பெருந்தொற்றுக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத அரசை எதிர்த்து இஸ்ரேலில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதுதவிர தற்போதைய பிரதமரான பெஞ்சமினுக்கு வேறு தலைவலிகளும் உண்டு. அவர் மீத

நியூசிலாந்தின் முன்னுதாரணத் தலைவர் ஜெசிண்டா ஆர்டெர்ன்!

படம்
ஜெசிண்டா ஆர்டெர்ன சிரில் ராம்போசா டைம் 2019 செல்வாக்கு பெற்ற தலைவர்கள் சிரில் ராம்போசா தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அரசியல் தலைவர் சிரில் ராம்போசா. சோவிடோ நகரில் பிறந்தவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் அதிபராக உள்ளார். இதற்கு முன்னர், சமூக உணர்வு கொண்ட வணிகராக செயல்பட்டார். தேர்தலில் நிற்கும்போது அவருக்கு வயது 66. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் சார்பாக நின்று வென்றார். மக்களின் வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு என பல்வேறு விஷயங்களோடு போராடி வருகிறார். ஒரே இரவில் மாற்றங்கள் நடந்துவிடாது என்று கூறியவர், சிறப்பான நாட்டை உருவாக்க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி உழைத்து வருகிறார். விவியன் வால்ட் ஜெசிண்டா ஆர்டெர்ன் நியூசிலாந்தில் கிறிஸ்ட் சர்ச்சில் நடந்த தாக்குதல் உலகம் முழுக்க பெரும் பயத்தை ஏற்படுத்தியது. தீவிரவாதி அத்தகையை பயத்தையே ஏற்படுத்த விரும்பியிருந்தார். ஆனால் அதனை அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா எதிர்கொண்ட விதம் உண்மையில் பாராட்டுக்குரியது. குற்றவாளியை குறிப்பிட்ட மதம் என்று குறிப்பிடாமல் கைது செய்தார். தான் நடத்திய தாக்குதலை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்திருந்த விஷயத்தை கண்டறிந்து அதன

ராப் இசையால் சமூக பிரச்னைகளைப் பேச முடியும்! - பரவும் ராப், ஹிப்-ஹாப் இசைக்குழுக்கள்

படம்
swadesi சமூகப் பிரச்னைகளை தீர்க்கும் இசை ! இன்று திரைப்படங்கள் சமூக பிரச்னைகள் பற்றி பேசுவது குறைந்துவிட்டது . அரிதாகவே சில முதுகெலும்பு உள்ள இயக்குநர்கள் பிரச்னைகளை சந்தித்து படங்களை வெளியிடுகிறார்கள் . அவையும் பார்க்கப்படுவது மக்கள் கையில்தான் உள்ளது . ஆனால் தனியிசை பாடல்களாக இசைக்கலைஞர்கள் வெளியிடும் பாடல்கள் இணையம் வழியாக எளிதாக மக்களைச் சென்று சேர்கிறது . இதனை இந்தி திரைப்படம் கல்லி பாய் முதன்முதலில் தொடங்கி வைத்தது . இப்படத்தில் இசைக்கலைஞர் டிவைனின் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டது . மேல்நாட்டுப் பாடல்களை பார்த்தால் அழகான செட் , ஃபெராரி காரில் வந்து தன்னை மறந்து போன காதலியைப் பற்றி பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்கள் . இன்று அதற்கு மாற்றாக சமூக பிரச்னைகளைப் பற்றி பாடத்தொடங்கியிருக்கிறார்கள் . தமிழில் அறிவு அப்படியொரு பணியை செய்துகொண்டிருக்கிறார் . ahmer javed வட இந்தியாவில் தாராவி குடிசையில் பிறந்த வளர்ந்த ராப் பாடகர்கள் இனம் , மத வேறுபாடுகள் , ஏழைகளின் பிரச்னை , பாகுபாடு என்ற பல்வேறு விஷயங்களையும் அனைவரும் அறிய பாடி வருகிறார்கள் . அஹ்மர் ஜாவேத் , அர்ஷத் மாலிக் ஆகியோர் இவ

பெண்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் பெண்களின் குழு - கூல் கன்யா

படம்
நம்பிக்கை மனிதர்கள் வனிஸ்கா கோயங்கா (vaniska goenka) “ எனக்கு திடீரென ஒரு உண்மை தெரிந்தது . பல்வேறு அலுவலகங்களிலும் கூட பெண்களின் சதவீதம் குறைவுதான் . எனவே அவர்களுக்கு உதவ முடிவெடுத்தேன் . அதற்காகவே அவர்களுக்கான பணி ஆலோசனைகளை வழங்க கூல் கன்யா (Kool Kanya) என்ற அமைப்பைத் தொடங்கினேன் .” என்று உற்சாகமாக பேசுகிறார் வனிஸ்கா . ஒருமுறை வனிஸ்காவின் வீட்டில் குடும்ப வியாபாரத்தை அவருடைய தந்தைக்கு பிறகு யார் பார்த்துக்கொள்வது என்று பேசிக்கொண்டிருந்தனர் . அவருடைய தந்தைக்கு இரு மகள்தான் இருந்தனர் . அதுதான் , நான் இருக்கிறேனே என்று வனிஸ்கா நினைத்தார் . ஆனால் அவரை பொருட்டாகவே குடும்பத்தினர் கருதவில்லை . பின்னாளில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனத்தை வனிஸ்கா நிர்வாகம் செய்தார் . அப்போது தன்னைச் சுற்றிலும் பார்த்தபோதுதான் குடும்பத்தினர் அப்படி கவலைப்பட்டு பேசியதன் காரணம் புரிந்தது . அவர் அலுவலகத்தில் அவர் மட்டும்தான் ஒரே பெண் . அனைவரும் ஆண்களாகவே இருந்தனர் . 2019 இல் கூல் கன்யா என்ற நிறுவனம் தொடங்கியபோது , அந்த நிறுவனம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகளை