இடுகைகள்

கூட்டுறவு வங்கிகளை கையகப்படுத்தும ரிசர்வ் வங்கி! - கூட்டுறவு வங்கிகள் வாழுமா? வீழுமா?

படம்
இந்து தமிழ் ஆர்பிஐயின் பிடியில் கூட்டுறவு வங்கிகள்! கடந்த பிப்ரவரி மாதம், ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டில் தலையிடுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. மும்பையில் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி திவாலான செய்தியை அறிந்திருப்பீர்கள். போலி கணக்குகள் மூலம் ஹெச்டிஐஎல் (HDIL) நிறுவனத்திற்கு 4,355 கோடி ரூபாய் கடன்தொகை, வழங்கப்பட்டிருப்பதை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. இதனால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். சிலர் அதிர்ச்சியால் இறந்தும்போனார்கள். இதுபோன்ற பொருளாதார குளறுபடிகளையும், சட்டவிரோத செயல்பாடுகளையும் தீர்க்கவே ரிசர்வ் வங்கி, நாட்டிலுள்ள 1,500 கூட்டுறவு வங்கிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் மாதம், நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். வங்கி ஒழுங்குமுறைச்சட்டம் 1949 இன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குமுறைப்படுத்த அதிக அதிகாரம் வழங்கப்படுக

மண்ணீரலை கல்லீரலாக பயன்படுத்த முடியும்! - ஆராய்ச்சித் தகவல் புதுசு

படம்
கல்லீரல் - போல்ட்ஸ்கை தமிழ் கல்லீரலுக்கு மாற்றாக மண்ணீரல்! உடலிலுள்ள பல்வேறு உறுப்புகளுக்கு மாற்று உறுப்புகள் தேடுவது கடினமாகி வருகிறது. மருத்துவ அறிவியல் வசதிகள் முன்னேறினாலும், கொடையாளி தன் உறுப்பை தானமாக கொடுத்தால் மட்டுமே நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலிக்கு கல்லீரக்குப் பதிலாக மண்ணீரலைப் பொறுத்தி வெற்றி கண்டுள்ளனர். இதன் காரணமாக, மனிதர்களுக்கும் செயலிழந்த கல்லீரலை அகற்றிவிட்டு, அவர்களது உடலிலுள்ள மண்ணீரலை மாற்று உறுப்பாகப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. சீனாவிலுள்ள நான்ஜியாங்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லெய் டாங் தலைமையிலான குழுவினர், எலி மீது மண்ணீரல் சோதனை செய்து வென்றுள்ளனர். எலியின் உடலில் பெரும்பகுதி கல்லீரல், அகற்றிவிட்டு, மண்ணீரலைப் பொறுத்தியுள்ளனர். இதில் கல்லீரல் திசுக்களை செலுத்தி, வளரச்செய்தனர். எட்டு வாரங்களுக்குப் பிறகு எலியின் உடலில் பொருத்தப்பட்ட மண்ணீரலில் கல்லீரலில் உள்ளது போன்ற ரத்தக்குழாய்கள் உருவாகியிருந்தன. இச்சோதனையைப் பற்றி எதிர்மறையாக இரு கருத்துகள் கூறப்படுகின்றன. ”ரத

இந்தியா மின் வாகனங்கள் தயாரிப்பில் பின்தங்க என்ன காரணம் தெரியுமா?

படம்
மின்வாகன தயாரிப்பில் சுணக்கம்? இந்திய அரசு, சீனாவிலிருந்து பெருமளவில் மின் வாகன பாகங்களை இறக்குமதி செய்துவருகிறது. தற்போது இருநாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னைகளால், அரசு வாகன பாகங்களின் இறக்குமதியைக் குறைக்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக, மின்வாகனங்கள் தயாரிப்புத்துறை தடுமாற்றத்தில் உள்ளது. தற்போது உலகளவில் மின் வாகனங்கள் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு, சீனா. மின் வாகனங்களுக்கு அரசு முன்னர் அளித்த வரவேற்பால், ஹைபிரிட் வகை வாகனங்களுக்கு கூட வரவேற்பு குறைந்துபோனது. தற்போது, அரசு என்ன முடிவு எடுக்குமோ என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நகம் கடித்தபடி காத்திருக்கின்றன. ”சீனா இத்துறையில் 60 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. மின் வாகனங்களில் பயன்படுத்தும் கன்வர்ட்டர், இன்வெர்ட்டர், டிசி மோட்டார்கள் என பல்வேறு பாகங்களையும் தயாரிப்பதற்கான உற்பத்தி திறன்களை அந்நாடு கொண்டுள்ளது” என்கிறார் துறை வல்லுநரான சூரஜ் கோஷ். மின்வாகனங்களை வாங்குவதில் உள்ள கடினமான விஷயம், அதன் விலைதான். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐசிஇ (Internal Combustion engine) பயன்படுத்துவதற்கு முக்கியக் காரணம், எரிப

விவசாயிகளின் பொருட்களை விற்க உதவும் தானிய வங்கி! - பீகார் தொழில்முனைவோரின் சாதனை

படம்
கிஷோர் குமார் ஜா - தானியவங்கி பீகாரைச்சேர்ந்த கிஷோர் ஜா, பிரவீன் குமார் ஆகிய இரு இளைஞர்கள், எர்கோஸ் நிறவனத்தின் மூலம், விவசாயிகளுக்கான தானிய வங்கியைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் விவசாயிகளின் அறுவடையான தானியங்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து அளிப்பதோடு, அதனை நல்ல விலைக்கு விற்கவும் உதவுகின்றனர். எர்கோஸ் நிறுவனம், தொடங்கப்பட்டு கடந்த ஐந்த ஆண்டுகளில் ஏராளமான விவசாயிகளுக்கு நம்பிக்கை தந்துள்ளது. ”இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்களை இவர்கள் விளைவிக்கிறார்கள். தானியங்களை விளைவித்தால், 40 முதல் 50 குவிண்டால்கள் வரும். ஆனால் இவர்கள் அத்தானியங்களை பெரிய மண்டிகளிலோ, சந்தையிலோ விற்பதில்லை. இதனால், குறைந்த வருமானம் பெற்று வந்தனர். இவர்களுடைய பொருட்களுக்கு சரியான விலை கிடைத்தால் உற்சாகம் பெறுவார்கள் என நினைதோம்” என்கிறார் எர்கோஸ் நிறுவன இயக்குநர் கிஷோர் ஜா. விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, அவர்களின் தானியங்களை பாதுகாத்து வைக்கும் சரக்கு கிடங்கு வசதி, சந்தைகளின் விலை நிலவரங்களை அறியத்தருவது ஆகியவற்றை எர்கோஸ் நிறுவனத்தினர் செய்

விமானங்களின் மாசுபாட்டைக் குறைக்கும் புதிய தொழில்நுட்பம்! - ஸ்வீடன் நாட்டின் சாதனை!

படம்
ஃபேமிலி டிராவலர் விமான சேவை மூலம் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கிறது. இரண்டு ஜெட் எஞ்சின்கள் 2,721 கிலோகிராம்   எரிபொருளை எரிப்பதன் மூலம் 8,618 கிலோகிராம் கார்பனை காற்றில் உருவாக்குகின்றன. ஸ்வீடன்வாசிகள் இதனை ஃபிளைக்ஸ்காம் (flykskam) என்கின்றனர். சூழலுக்கு இழைக்கும் அநீதி என்கிறார்கள். கார்பன் சுவடின்றி விமான பயணங்களை செய்ய முடியும் என்றால் நன்றாக இருக்கும்தானே? ”இது சாத்தியம்தான். நாங்கள் சூரிய ஆற்றல் மற்றும் காற்று மூலம் பெறப்படும் எரிபொருளை பயன்படுத்தும்படி ஜெட் எஞ்சின்களை வடிவமைத்துள்ளோம்” என்கிறார் ஸ்வீடன் தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆல்டோ ஸ்டெய்ன்ஃபீல்டு. சின்கேஸ் எனப்படும் எரிபொருளை காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை ஈர்த்து ஆக்சிஜனுடன் வினைபுரிய வைத்து தயாரிக்கிறார்கள். இதற்கான சோலார் அமைப்பு,   மேட்ரிட் நகரின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் உயரமுள்ள கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மூலம்தான் சின்கேஸ் தயாரிக்கப்படுகிறது. இதனை மண்ணெண்ணெய் மூலக்கூறாக மாற்றி ஜெட் எஞ்சின்களில் பயன்படுத்துகிறார்கள். மோஸ்டோல்ஸ் சுத்திகரிப்பு நி

லிவ் இன் உறவிலிருந்து திருமணத்திற்கு டேக் ஆப் ஆகும்போது ஏற்படும் காமெடி களேபரங்கள்! - லூகா சுப்பி 2019

படம்
லிவ் இன் உறவும் அதன் பக்க விளைவுகளும்தான் கதை லூகா சுப்பி இயக்கம்: லக்ஷ்மண் உடேகர் எழுத்து: ரோகன் சங்கர் ஒளிப்பதிவு: மிலிந்த் ஜோக் பின்னணி: கீட்டன் சோதா பாடல்கள் தனிஷ்க் பக்ஷி, அபிஜித் வகானி, வொய்ட் நாய்ஸ் கல்யாணம் செய்துகொள்ளாமல் லிவ் இன் உறவில் சேர்ந்து வாழும் இருவர், முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று தீர்மானிக்கும்போது அவர்களின் குடும்பத்தில் நடக்கும் களேபரங்கள்தான் கதை. ஒருவரையொருவர் எப்படி புரிந்துகொள்வது? மதுராவில் உள்ள லோக்கல் டிவியில் ஸ்டார் ரிப்போர்டராக இருக்கிறான் வினோத் குட்டு குமார் சுக்லா. அவனுக்கு அனைத்து சர்வரோக பிரச்னைகளையும் தீர்த்து வைப்பவன் கேமராமேன் அப்பாஸ் ஷேக். அங்கு, இன்டர்ன்ஷிப் செய்ய வருகிறாள் பழமைவாத அரசியல்வாதி விஷ்ணுவின் மகள் ரேஷ்மி. அவளைப் பார்த்ததும் படத்தின் ரீமிக்ஸ் பாடல் பின்னணியில் ஒலிக்க, பெப்சி பாட்டிலை திறந்தது போல குட்டுவுக்கு காதல் பொங்குகிறது. ரேஷ்மி உன்னை காதலிக்கிறேன்தான் ஆனால் கல்யாணம் எல்லம் ஓவர். சேர்ந்து வாழ்வோம் பிடித்திருந்தால்தான் கல்யாணம் என லிவ் இன் உறவை ரிப்பன் வெட்டி தொடங்குகிறார்கள். அதற்கேற்ப டிவியில் இதற்காகவே

புற்றுநோயுடன் போராடும் ரஜினி ரசிகனும், அவனின் சாகாத காதலும்! - தில் பேச்சாரா 2020

படம்
புற்றுநோய் வந்த இருவரின் காதல்தான் கதை தில் பேச்சாரா (இந்தி) 2020 இயக்கம் முகேஷ் சப்பாரா திரைக்கதை   சஷாங்க் கைத்தான், சுப்ரோதிம் சென் குப்தா ஒளிப்பதிவு சத்யஜித் பாண்டே இசை ஏஆர்ஆர் இரண்டு புற்றுநோயாளிகளுக்கு இடையில் ஏற்படும் மென்மையான காதலும், வலிமையான உணர்ச்சிகளும்தான் கதை. உடல் இறந்தாலும் மனதில் ஈரமாக உள்ள அன்பைத்தான் படம் வலியுறுத்துகிறது. இம்மானுவேல் ராஜ்குமார் ஜூனியர், எலும்பு புற்றுநோய் நோயாளி. ஆனால் அதன் சுவடுகளே தெரியாமல் ஜாலியாக ஆட்டம், பாட்டம் என்று சுற்றிக்கொண்டிருப்பவன். அவனுக்கு எதிர்ப்பதமாக சோகமே உருவாக உடல்நலம் பாதிக்கப்படுகிறதே என அபிமன்யூ வீரின் இசையைக் கேட்டு வாழ்ந்துகொண்டிருப்பவள் கிஸி பாசு. இவளுக்கு தைராய்டு புற்றுநோய். உடலோடு எப்போது ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். இந்த இருவரும் கல்லூரியில் நடக்கும் விழா ஒன்றில் ஒருவரையொருவர் பார்க்கின்றனர். கிஸி பாசுவைப் பார்த்தவுடனே இம்மானுவேலுக்கு மணி அடித்து லைட் எரிந்து இன்னும் என்னென்னவெல்லாமோ ஆகிறது. ஆனால் இம்மானுவேல் என்கிற மேனியை தவிர்க்கவும் முடியவில்லை. காரணம், இடைவிடாமல் பேசியே கிஸி பாசுவை காதலிக்க வைக்கிறான்.

விவசாயத்துறையில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தவேண்டும்! - பர்னிக் சித்ரன் மைத்ரா

படம்
cc பர்னிக் சித்ரன் மைத்ரா ஆர்தர் டி லிட்டில் நிறுவன தலைவர் இந்தியாவின் வேளாண்மை எப்படி உள்ளதாக நினைக்கிறீர்கள்? இந்தியா சுதந்திரம் பெற்றபிறகுதான் விவசாயத்தில் நிறைய முன்னேற்றங்களைக் கண்டது. இப்போதும் கூட 60 சதவீத விவசாய வளர்ச்சியைத்தான் இந்தியா பெற்றுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கான சரியான விலை கிடைக்கவிடாமல் தடுப்பது ஏபிஎம்சி சட்டமும், இடைத்தரகர்களும்தான். இதற்கு விதிவிலக்காக பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரம் உள்ளன. அரிசி, கோதுமை மட்டும் விலைப்பிரச்னையில் சிக்காமல் உள்ளது. விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இன்றுவரை அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையை விட 50 சதவீதம் குறைந்த விலையே கிடைத்து வருகிறது. இதன்காரணமாக வேளாண்மை காரணமாக பொருளாதாரத்திற்கு கிடைக்கும் வளர்ச்சி 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பிற வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த பொருளாதார வளர்ச்சி 100 முதல் 300 சதவீதமாக உள்ளது. வேளாண்மை செய்வது சூழலுக்கு உகந்த தொழிலாக மாறியுள்ளது என்கிறீர்களா? வேளாண்மை தொழிலானது 52 சதவீத தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. உள்நாட்டு உற்பத்தியில் இதன் அளவு 13 சதவீதமாக உள

ஃபேஷன் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய புரட்சிக்காரி! - ஜெனிபர் ஹைமன்

படம்
ஜெனிபர் ஹைமன் - சிஎன்பிசி ஜெனிபர் ஹைமன் 2008ஆம்ஆண்டு நவம்பர் மாதம் என்னை ஒரு இளம்பெண் சந்திக்க வந்தார். அவர் ஃபேஷன் உடைகளை இணையம் மூலம் வாடகைக்கு வழங்கலாம் என்று சொன்னார். எனக்கு அந்த ஐடியா புதுமையாக இருந்தது. சரி என்றதும் அவர் ரென்ட் ஆன் தி ரன்வே என்ற நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தில் 20 பெண்களை இணைத்துக்கொண்டு நூறு கோடி மதிப்புள்ள நிறுவனமாக அதனை மாற்றியுள்ளார். வெறும் உடைகளை வணிகமாக பார்க்காமல் அதிக உடைகளை பயனர்களை வாங்கச்செய்யாமல் விழிப்புணர்வு செய்வது, சூழலுக்கு உகந்த உடைகளை உருவாக்குவது என அவரின் பல செயல்பாடுகள் நமக்கு பெரும் ஆச்சரியம் தருவன. அவர் இன்னும் என்ன ஆச்சரியங்களை செய்வார் என்று காண காத்திருக்கிறேன். ஜெனிபர் ஹைமன், 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். ரென்ட் தி ரன்வே என்ற ஃபேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். டைனே வோன் பர்ஸ்டன்பர்க்

சிறப்பான கதாபாத்திரங்களை உருவாக்கும் எழுத்தாளர்! - ரியான் மர்பி

படம்
ரியான் மர்பி இ ஆன்லைன்  ரியான் மர்பி என்னுடைய தொலைபேசி அலறுகிறது. எடுத்து பேசினால் மறுமுனையில் குரல் நான் ரியான் மர்பி பேசுகிறேன் என்கிறது. எனக்கு ரியான் மர்பியை அறிமுகம் கிடையாது என்று உறுதியாக சொல்லுவேன். அவர் டிவியில் பல்வேறு புதுமைகளைச் செய்தவர். டிவி நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுபவர், அதுபோன்ற நிகழ்ச்சி டிவிகளில் எப்போதும் வந்தது இல்லை என்று சொன்னார். அந்த கதாபாத்திரம் எனக்கு பெரும் புகழைப் பெற்றுத்தரும் என்று அவர் கூறிக்கொண்டே சென்றார். இதுபோன்ற வாக்குறுதிகளை நான் நிறைய கேட்டுவிட்டேன் என்பதால் அதனை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றதும், அவர் போனில் சொன்ன அத்தனை விஷயங்களும் தப்பாமல் நடந்தன. உண்மையில் அதனை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லைதான். ரியான் மர்பி அப்படிப்பட்டவர்தான். குழந்தை போல தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். யாரும் யோசிக்காத முறையில் யோசித்து ஐடியாக்களை சொல்லுவார். நம்மை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் நகைச்சுவை உணர்வைக் கொண்டவர் அவர். இவற்றை அனைத்தையும் தாண்டிய நட்புணர்வான இதயம் கொண்டவர். தான் நினைத்த கதாபாத்திரங

நேர்மையான உண்மைகளை வெளிப்படையாக பேசும் பத்திரிகையாளர் ! கெய்ல் கிங்

படம்
டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் 2019 கெய்ல் கிங் - சிபிஎஸ் நியூஸ் கெய்ல் கிங் 1954ஆம் ஆண்டு அமெரிக்காவில் மேரிலாண்டில் பிறந்த பத்திரிகையாளர் கெய்ல்கிங். தற்போது 62 ஆகும் இவர் சிபிஎஸ் டிவியின் காலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். ஓப்ரா வின்ப்ரேவின் இதழின் ஆசிரியரும் இவரே. துருக்கியில் அன்காரா பகுதியில் தனது சிறுவயதை கழித்தவர், பின்னாளில் குடும்பத்தோடு அமெரிக்கா வந்து சேர்ந்தார். கெய்ல், உளவியல் பட்டதாரி. பால்டிமோரில் உள்ள தனியார் டிவியில் தொகுப்பாளராக பணிக்குச்சேர்ந்தார். பின்னாளில் தொகுப்பாளர் பணியைவிட்டுவிட்டு அதே டிவியில் செய்தியாளரானார். தி கெய்ல் கிங் ஷோ என்ற நிகழ்ச்சியை டிவியில் தொடங்கினாலும் முதலில் அது வெற்றிபெறவில்லை. இதேபெயரில் ரேடியோவிலும் கூட நிகழ்ச்சியை செய்தார். இவருக்கு புகழ் தேடி தந்தது சிபிஎஸ் டிவியில் செய்த காலை நிகழ்ச்சிதான். பல்வேறு பிரபலங்களை நேர்காணல் செய்த முக்கியமான பத்திரிகையாளர், ஊடகவியலாளர் என்று இவரைக் கூறலாம். கெய்ல் கிங்கை வெறும் பத்திரிகையாளர் என்று கூறிவிடமுடியாது. அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அவரை மிகவும் நெருங்கிய நண்பராகவே உணருவார்கள். அந்தள