இடுகைகள்

சூரிய ஒளி, ஆக்சிஜன் பட்டால் மட்கிப்போகும் பிளாஸ்டிக்!

படம்
  செய்திஜாம் ஆஹா! மறுசுழற்சி! சூரிய ஒளி பட்டாலே மட்கும் வகையில் புதிய பிளாஸ்டிக் வகையை சீனாவின்  ஹூவாஸாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள தனித்துவமான மூலக்கூறுகள் ஒளி, தண்ணீர் பட்டால்  உடனே ஒரே வாரத்தில் மட்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்படி மட்கும்போது சக்சினிக் அமிலத்தை வெளியிடுகிறது. இதனை மருந்து தயாரிப்பில் அல்லது உணவு உற்பத்தியில் பயன்படுத்தமுடியும். இந்த பிளாஸ்டிக் ஆராய்ச்சி பயன்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.  https://www.indiatimes.com/technology/science-and-future/plastic-sunlight-disintegration-one-week-544896.html வெள்ளத்தில் நகரம்! மழை வெள்ளத்தில் சாலைகள் மிதக்கும் காட்சி! இடம், ஜெர்மனி, பிளெஸ்ஸம் அப்படியா! பற்றாக்குறை! குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்ச்சியானார்கள். இதனால் அங்குள்ள 20 மாவட்டங்களில் 3000 கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. பள்ளி தலைமையாசிரியர், கூடுதல் மாணவர்களை படிக்க வைக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை முறை, ஷிப்ட் முறை ஆகியவற்றை பின்பற்றலாம் என

சிறுநீரக அமைப்பு எப்படி செயல்படுகிறது? - அறியாத புதிய தகவல்கள்

படம்
            சிறுநீர் அமைப்பு எப்படி செயல்படுகிறது ? உடலில் அறுபது சதவீதம் நீர் உள்ளது . அப்படி நீர் இருப்பதுதான் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது . ரீனல் அமைப்புதான் உடலில் உள்ள நீரின் தன்மையைக் கட்டுப்படுத்தி தேவையில்லாத கழிவுகளை சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது . இந்த அமைப்புதான் சரியான அளவில் சிறுநீரை வெளியேற்றி உடலிலுள்ள நீரின் அளவை கண்காணிக்கிறது . இதில் பாதிப்பு ஏற்படும்போது மனிதர்களுக்கு கழிவுநீர் ரத்தத்தில் கலக்கும் ஆபத்து உள்ளது . சிறுநீர்ப்பையில்தான் பெரும்பாலான கழிவுநீர் தேக்கப்பட்டிருக்கும் . இதன் கொள்ளளவு எட்டும்போது சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் தோன்றும் . இதன் வேகம் அதிகரிக்கும்போதுதான் முட்டுச்சந்து என்றால் உடனே ஜிப்பை இறக்கி ஆக்ரோஷத்தை தணிக்கிறோம் . சிறுநீரகத்தில் நெப்ரான்கள் உள்ளன . இவற்றில் உள்ள ஃபில்டர்தான் , குளோமெருலஸ் . இதில் ரத்த நாளங்களின் வலையமைப்பு உள்ளது . இவற்றில் உள்ள சுவர் போன்ற அமைப்பு , கழிவுகளை வடிகட்டுகிறது . இப்படி வடிகட்டிய நீர் ட்யூபில் என்ற இடத்திற்கு செல்கிறது . சோடியம் , பொட்டாசியம் , புரதம் ஆகியவை உறிஞ்சப்பட்டு கழிவ

டிம் பெர்னர்ஸ் லீயின் ஆராய்ச்சிக்கு கிடைக்காத அங்கீகாரம்! - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
        சூப்பர் பிஸினஸ்மேன் ! டிம் பெர்னர்ஸ் லீ இந்த தலைப்பின் கீழ் இவரைப் பற்றி எழுதினாலும் கூட டிம் பெர்னர்ஸ் லீயை தொழிலதிபர் என்று கூற முடியாது . இணையத்தை இவர்தான் உருவாக்கினார் . இன்று உலகம் முழுக்க பல்வேறு ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப்பட்டு செயல்பட இவரது கண்டுபிடிப்பு முக்கியமான காரணம் . கிடங்கு ஒன்றில் பொருட்களை வைத்துக்கொண்டு இணையத்தில் கடையை திறந்து அதனை விற்க முடியும் தொ்ழில்நுட்பத்தை யாராவது முன்னர் சொல்லியிருந்தால் நம்புவார்களா ? இணையம் அதனை சாத்தியப்படுத்தியது .    வேர்ல்ட் வைட் வெப் என்பதை லீ கண்டுபிடித்தார் . இவரது உதவியின்றி கூகுள் , அமேசான் ஆகிய நிறுவனங்கள் உருவாகியிருக்கவே முடியாது . உலகம் முழுக்க உள்ள மக்கள் ஒன்றாக இணைய லீ வழியமைத்தார் . இன்டர்நெட் என்பதை ஏராளமான கணினிகள் இணைக்கப்பட்டுள்ளதை வைத்து வரையறுக்கலாம் . இன்டர்நெட்டை 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராணுவ அமைச்சகம் கண்டுபிடித்தது . 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 29 என்பதுதான் இன்டர்நெட்டின் பிறந்தநாள் என்று கூறலாம் . லீ , 1955 ஆம் ஆண்டு லண்டனில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார் . இவரது

மனிதர்களின் கதையைத்தான் புகைப்படங்கள் மூலம் சொல்ல நினைக்கிறேன்! - டேனியல் பிரைஸ்

படம்
  ஜொனாதன் டேனியல் பிரைஸ் ஃபேஷன் போட்டோகிராபர் புகைப்படக்காரராக மாற எந்த அம்சங்கள் உங்களைத் தூண்டின? சிறுவயதில் புகைப்படம் பற்றிய நிறைய நினைவுகள் இருந்தன. 1970களில் லண்டனில் எனது அம்மா பாடகராக வேலைசெய்துகொண்டிருந்தார். அவரது புகைப்படம்தான் இக்கலை மீதான என் முதல் ஈர்ப்பு. புகைப்படங்களை வைத்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தேன். ஆனால் 17 வயது வரையிலும் அதுபற்றிய தீவிரம் வரவில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம்களை பயன்படுத்தித்தான் நான் புகைப்படக்கலையைக் கற்றுக்கொண்டேன்.  உங்கள் வேலையை எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்? நான் பழைய நினைவுகளில் காதலன். எனது வேலையைப் பார்த்தால் அதனை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளுவீர்கள். ஆண்களை புகைப்படங்களாக எடுக்கும்போது மென்மையான டோன் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தின் வழியாக ஒரு கதையை சொல்ல முயல்கிறேன்.  உங்களது லென்ஸ் வழியாக நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? மனிதர்கள்தான் என்னுடைய ஆர்வமான பொருள். மனிதர்களை புகைப்படம் எடுப்பதன் வழியாகத்தான் அவர்களின் வாழ்கையை நான் அறிய முடியும். இந்த வகையில் தான் மக்களின் மனிதநேயத்தை ந

தடுப்பூசியை விமர்சிப்பவர்கள் தேச துரோகிகள்!- பன் பட்டர் ஜாம்

படம்
  எனதருமை மெகந்தியா நாட்டு மக்களே,  எனது உரையை பெருந்தொற்றையும் சமாளித்து வாழ்பவர்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எப்படி நோய்த்தொற்று என்பது அதிர்ச்சியை அளித்ததோ, எனக்கும் அதேபோல்தான் இருக்கிறது. இதனால் நோயுற்றவர்களை என்ன செய்வது என்று தெரியாமல், தொடர்புடைய மாநிலங்களே என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன்.  சில மாநில முதல்வர்கள் என்னுடைய பெருந்தன்மையைப் புரிந்துகொள்ளாமல்  தடுப்பூசி எங்கே, மருந்துகள் எங்கே என்று கேட்கின்றனர். அவை எங்களிடம் இருப்பு இருந்தாலும் அதிகபட்ச லாபத்திற்குத்தான் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்போம். அதுதானே சிறந்த வணிகமாக இருக்கமுடியும். இதை சிலர் விமர்சிக்கின்றனர். இவர்களுக்காகத்தான்  வீபா எனும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். அரசை குறைசொல்பவர்களை விசாரணையின்றி, ஆதாரங்களின்றி சிறையில் வைத்திருக்கும் சட்டம் இது. இதனால் அரசு, சிறப்பாக செயல்பட முடியும்.  செயல்பாடு என்பதை பேச்சு என்று புரிந்துகொள்ளுங்கள். நோய்த்தொற்று பாதிப்பால் வெளிநாடு செல்லும் விமானங்களை தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, நேரத்தை எப்படி போக்குவது  என தெரியவில்லை. மருத்து

பாகுபாடுகளை வெளிக்காட்டும் இமோஜி ஐகான்கள்! - புதிய இமோஜிகள் வெளியீடு

படம்
 செய்திஜாம்  ஆஹா! தேர்வில் வெற்றி! மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வில், 99.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர்களால் நடத்தப்படும் தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ”15,75,806 மாணவர்கள் பத்தாவதில் இணைந்தனர். இவர்களில் 15, 75,752 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 4.65 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது” போர்டு தலைவர் தின்கர் பாடீல் தெரிவித்தார்.  https://www.thenewsminute.com/article/maharashtra-board-class-10-results-declared-9995-students-pass-152459 இனவெறி கூடாது இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஸ்போர்டுக்கு ஆதரவாக திரண்டு குரல் கொடுக்கும் ஆதரவாளர்கள் இடம் பிரிட்டன், மான்செஸ்டர் அப்படியா!? என்ன உயரம்! சீனாவைச் சேர்ந்த பேஸ்கட்பால் வீராங்கனை ஸாங் ஸியூ, தனது அபார உயரத்தாலும், திறனாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பதினைந்து வயதுக்குட்பட்ட தேசிய பேஸ்கட்பால் போட்டியில் ஸாங் பங்கேற்றார். ஏழு அடி நாலு அங்குல உயரத்தில் உள்ள ஸாங், போட்டியில் 45 புள்ளிகளை எடுத்து தனது அணியை

யாத்திரைகளை விட மக்களின் உயிர் முக்கியம்! - புஷ்கர்சிங் தமி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்

படம்
  புஷ்கர் சிங் தமி உத்தர்காண்ட் முதலமைச்சர் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிவீட்டீர்களா? 50 சதவீத மக்களுக்கு முதல் தடுப்பூசியை வழங்கிவிட்டோம். மத்திய அரசு எங்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரித்தால் விரைவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கிவிடுவோம்.  சுற்றுலாபயணிகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்? பொதுமுடக்கத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்கள், இப்போது வெளியே வருகிறார்கள்.  இதனை அரசாக நினைத்து தடுக்க முடியாது. மக்கள்தான் வெளியே வருவதை அவர்களாகவே கட்டுப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.  உத்தர்காண்டில் சில மாதங்களில் பல்வேறு முதல்வர்கள் மாறிவிட்டார்கள். நீங்கள்  உங்கள் நிலையைப் பொறுத்து கடினமான முடிவுகள் எடுக்க முடியுமா? என்மேல் நம்பிக்கை வைத்த கட்சிக்கார ர்கள், தொண்டர்கள், பிரதமர் மோடி ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான முதல்வர் ஆவேன் என நினைத்தே பார்க்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.  கன்வார் யாத்திரைகளுக்கு அனுமதி மறுத்தது கடுமையான முடிவுதான் அல்லவா? இ

சொத்துக்காக நடக்கும் கொடூர கொலைகள்! - யுவர் சீக்ரெட்

படம்
  யுவர் சீக்ரெட் சீன டிவி தொடர் யூட்யூப் லூ பே சான், காவல்துறையில் தடயவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். டிடெக்டிவ் லாவோ கண்டுபிடிக்கும் கொலைகளுக்கான பிரேத பரிசோதனைகளை லூதான் சோதனை செய்து கண்டுபிடிக்கிறார். இருவருமே வேலை காரணமாக நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர். இந்த நிலையில் அங்கு தடயவியல் படிப்பின் இன்டர்ன்ஷிப்புக்காக கூ சூ என்ற இளம்பெண் வருகிறார். அவரைப் பார்த்ததும் லூ பே சான், இந்த பெண் எனக்கு தேவையில்லை என்று சொல்லுகிறார். ஆனால் அதற்கு அந்த பெண் குற்றவுணர்ச்சியுடன் பேசினாலும் நான் உங்களிடம்தான் வேலையைக் கற்றுக்கொள்வேன் எனக் கூறுகிறாள். உண்மையில் லூ பே சான், கூ சூ என்ற இருவரின் உறவு என்ன, லூ பே சான் எதற்கு  அந்த பெண்ணை வெறுக்கிறார், அவமானப்படுத்துகிறார் என்பதுதான் 37 அத்தியாயங்களைக் கொண்ட  டிவி தொடரின் மையம்.  குடும்ப ஆதிக்கம், சொத்துரிமை, போதைப்பொருட்கள் வியாபாரம் என ஏராளமான விஷயங்களில் கதை நகருகிறது. அடிப்படையான கதை என்பது லூ குடும்பத்திற்கும், கூ சூ குடும்பத்திற்குமான பிரச்னைதான்.  லூ குடும்பத்தில் பே சென் என்பவர் கார் விபத்தில் இறந்துவிட, அதில் இரட்டையரான லூ பே சான் என்பவர் மட்

இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவு என்னவாகும்?

படம்
  இந்தியாவின் ஆப்கானிஸ்தான் முதலீடு என்னவாகும்? தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டனர். இங்கிலாந்து, ரஷ்யா வரிசையில் அமெரிக்காவும் அங்கிருந்து வெளியேறிவிட்டது. ஆனால் இருபது ஆண்டுகளாக அங்கு முதலீடு செய்த இந்தியா அப்படி வெளியே ற முடியுமா என்று தெரியவில்லை. அணைகள், சாலைகள், வணிக ஆதார அமைப்புகள் என 3 பில்லியன் டாலர்களை இந்தியா ஆப்கனில் முதலீடு செய்துள்ளது. தலிபான்கள் தலைதூக்கத் தொடங்கிவிட்டால் அரசு ரீதியான உறவும் இருக்காது. இருபது ஆண்டுகளாக பராமரித்து வளர்த்த நட்பு நாடு. சார்க் நாடுகளில் இந்தியா மீது பாசம் காட்டும் ஒரே நாடு ஆப்கன்தான்.  அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி விட்டதால் அவர்களுக்கு இனி ஆப்கனோடு அரசியல் உறவுகள் இருக்காது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு ஆப்கனில் அமெரிக்க படைகளின்  உதவியுடன் இந்தியா மேம்பாட்டுத் திட்டங்களை செய்து வந்தது. சாலைகளை, அணைகள், மின்சாரம், மின்நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என பல்வேறு வசதிகளை இந்தியா உருவாக்கிக் கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் இந்தியா முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் கூட ஒப்பந்தம் வழியாக உருவானது. இந்த ஒ

வரி கட்ட மக்கள் வாழ்ந்தாக வேண்டும்!

படம்
  அன்புக்குரிய மெகந்தியர்களே,  பெருந்தொற்று காலத்தில் உடனடியாக பொதுமுடக்கத்தை கொண்டு வந்தபோது மக்கள் மகிழ்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்போதுதான் மகாத்மா போலவே பலரும் நடக்க தொடங்கினார்கள். அதுவும் நல்லதுதான். அப்போதுதான் மக்கள் நாடெங்கும் உள்ள சாலைவசதிகளைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள முடியும். இந்த நேரத்திலும் வெளிநாடுகளுக்காக ஆக்சிஜன் சப்ளை பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் பிராணவாயுவும், தடுப்பூசியும் கிடைக்காதபோது மெகந்தியர்களாகிய நாம் எப்படி மானமுடன் உயிர்வாழ முடியும்? நல்ல லாபத்திற்கு  ஆக்சிஜனை எனது நேசத்திற்குரிய நண்பர்கள் விற்றனர். இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மக்கள் நடக்கிறார்களே என சிலர் விமர்சனங்களை கிளப்புகிறார்கள். அதை பொய்யாக்க இதோ ஆக்சிஜன் டேங்கர் ஓட்டும் மனேஷிடம் பேசலாம். மனேஷ் எப்படி இருக்கீங்க? உங்களின் ஆசிர்வாதத்தில் நல்லா இருக்கேன்யா உங்க குழந்தைகள் படிச்சுட்டு இருக்காங்களா? என்னோட மூணு பிள்ளைங்களும் படிச்சுட்டு இருக்காங்க ஐயா மூணு குழந்தைகளை வளர்க்கிற அளவுக்கு உங்களிடம் பணம் இருக்குதா? ஜினாக்ஸ் கம்பெனி எங்களை அக்கறைய

பத்தாவது பெயிலா? கொடைக்கானலில் எனது வீட்டில் வந்து தங்குங்க!- புதுமை மனிதர் சுதீஷ்

படம்
  செய்திஜாம் ஆஹா! சமையல் சாதனை! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயணன், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் வென்றிருக்கிறார். இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த இவர் சமையல் நிகழ்ச்சியின் 13 ஆவது சீசனின் வெற்றியாளராகி 1.86 கோடி ரூபாயை வென்றிருக்கிறார். ”உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள மனிதர்களைக் கண்டுபிடியுங்கள். அவர்களை எப்போதும் உங்கள் பின்னால் வைத்துக்கொள்ளுங்கள். தினந்தோறும் உங்களை ஆச்சரியப்படுத்திக்கொள்ளும்படியுங்கள். இதை வாசிக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்டுள்ளார் ஜஸ்டின்.  https://www.indiatimes.com/entertainment/celebs/indian-origin-justin-narayan-wins-masterchef-australia-season-13-takes-home-rs-186-crore-544905.html காட்சிப்படம் ! காட்டுத்தீயை அணைக்க முயலும் விமானம்! இடம் அமெரிக்கா, வாஷிங்டன் அபாரம்! பசியின் மொழி! ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையத் உஸ்மான் அசார் மெக்சூசி. இவர் பசிக்கு மதமில்லை என்ற திட்டத்தை தொடங்கி ஐந்து நகரங்களில் உள்ள 1,500 மக்களுக்கு தினசரி உணவிட்டு வருகிறார். இதனை பத்து ஆண்டுகளாக செய்துவருபவருக்கு ஐ.நா அமைப்பு, காமன்வெல்த் பாய்ன்ட