இடுகைகள்

சாதி, பாலியல் சீண்டல் ஆகியவற்றை சமாளித்து காதலிக்கும் காதலர்களின் கதை! லவ் ஸ்டோரி -தெலுங்கு

படம்
  லவ் ஸ்டோரி தெலுங்கு  இயக்கம் சேகர் கம்முலா இசை பவன் சிஹெச் சாதி, குழந்தை மீதான பாலியல் சீண்டல் என இரண்டு விஷயங்களையும் இயக்குநர் சொல்ல முயன்றிருக்கிறார். நாயகனுக்கு சாதி, நாயகிக்கு பாலியல் சீண்டல் என இரண்டு பிரச்னைகளை சொல்ல முயன்றதில் படமா, பாடமா, சீரியலா என இழுத்துவிட்டது.  ஆஹா தலைப்பு லவ் ஸ்டோரி. அதற்காக கிரியேட்டிவிட்டியாக காதல் எல்லாம் கிடையாது. டான்ஸ் அதையொட்டி வரும் காதல்தான் உள்ளே இருக்கிறது. அதை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். ரேவந்த், மௌனிகா என்ற பாத்திரங்களில் நாக சைதன்யா, சாய் பல்லவி இருவருமே எனர்ஜியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு போட்டி போட்டு இசை கொடுத்திருக்கிறார் பவன் சி.ஹெச். ரேவந்திற்கும், அவரது அம்மாவிற்கும் உள்ள உறவு இயல்பானதாக இருக்கிறது. படத்தின் உயிர்த்தன்மையே எதார்த்தம் குறையாத சில விஷயங்கள்தான்.  ஐயையோ சாதி, பாலியல் சீண்டல் என்ற இரு விஷயங்களுமே தனித்தனியே பார்க்கும்போது தீவிரமானவை. இதனை தனியாகவே படம் எடுக்கலாம். ஆனால் இரண்டையும் ஒன்றாக கொண்டு வரும்போது சிக்கலாகிறது.  ரேவந்த் பாத்திரம் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். முடிவெட்டக்கூட அவருக்கு ஊரில் அனுமதி

மத அடிப்படைவாதிகளால் ஏற்பட்ட உடல் வலியை விட நண்பர்களால் ஏற்பட்ட உள வலி பெரிது! - டிஜே ஜோசப்

படம்
  டிஜே ஜோசப்  எழுத்தாளர் 2010ஆம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.ஜே. ஜோசப் தேர்வுத்தாள் ஒன்றை தயாரித்தார். அதில் அவர் தேர்ந்தெடுத்த கேள்வி அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இதற்காக அவரை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தது. அந்த அமைப்பின் தொண்டர்கள் ஜோசப்பின் மணிக்கட்டை வெட்டி எறிந்தனர். அண்மையில் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதனை ந ந்தகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலில் தனது மனைவி, வேலை, மணிக்கட்டை இழந்தது பற்றி உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறார்.  உங்களது சுயசரிதை பிரசுரமானது தொடங்கி பரபரப்பாக விற்று வருகிறது. மலையாளத்தில் இந்த நூல் 2020ஆம் ஆண்டு வெளியானது.  இப்போது அதன் மொழிபெயர்ப்பு எ தவுசண்ட் கட்ஸ் ஏன் இன்னோசன்ட் கொசின்ஸ் அண்ட் டெட்லி ஆன்ஸ்ர்ஸ் வெளியாகயுள்ளது. என்ன தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறீர்கள்? மத அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவைதான் என்மீது பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட காரணம். இன்று அதே தன்மை இயல்பானதாக பார்க்கப்படுகிறது.  என்னுடைய வாழ்க்கையைப் பார்க்கும் ஒருவர் தீவிரவாதம் பற்றிய கருத்தை இரண்டாவத

இலவச மின்னூல் அறிவிப்பு - சைக்கோ டைரி

படம்
  சைக்கோ கொலைகாரர்கள், சீரியல் கொலைகாரர்கள் பற்றி நமது மனதிற்குள் நிறைய கேள்விகள் இருக்கும். கூடவே எப்படி அவர்களின் மனநிலை இப்படி குரூரமாக வன்ம மாக மாறியது என தெரிந்துகொள்ளும் ஆவலும் இருக்கும். அதற்கான பதில்களை இந்த நூல் அளிக்கும். விரைவில் இலவச நூலாக வெளியிடப்படும் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி! கோமாளிமேடை டீம் 

பருத்தி விவசாயின் தற்கொலை வழியாக விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டப் பார்வை! - நூல் அறிமுகம்

படம்
  நூல்கள் அறிமுகம் ராம்ராவ் ஜெய்தீப் ஹர்டிகர் ஹார்பர் கோலின்ஸ் 2014ஆம் ஆண்டு ராம்ராவ் பான்செல்னிவர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பூச்சிக்கொல்லியை குடித்து இறந்துபோன இவர்தான், விவசாயிகளின் தற்கொலையை தொடங்கி வைத்த பெருமையைக் கொண்டவர். அன்றிலிருந்து இன்றுவரை 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  கடந்த இருபது ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர் ஜெய்தீப், ராம்ராவ் வாழ்க்கை வழியாக விவசாயிகளின் வாழ்க்கை இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறார்.  ஆர்ட் சினிமா அண்ட் இந்தியாஸ் பார்காட்டன் ஃபியூச்சர் ரோச்சனா மஜூம்தார் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு சினிமா உலகம் எப்படி வளர்ந்தது, கலைப்படங்களுக்கான இடம், வணிக படங்களின் சந்தை, சத்ய ஜித்ரே, மிருணாள் சென், ரித்விக் கடக் ஆகிய இயக்குநர்களின் பங்களிப்பு பற்றி நூல் பேசுகிறது.  தி மிட் வே பேட்டில்  கௌதம் சிந்தாமணி ப்ளூம்ஸ்பரி 2019ஆம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமரானார்.  முதல் முறை ஆட்சியில் தயங்கியவற்றை இந்த முறை பெரும்பான்மை உதவ

குழந்தைகளுக்கு உணவளிக்கும் மதுரை பள்ளிக்கூட ஆசிரியர்கள்!

படம்
  மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்கள்! ஆசிரியர்களின் வேலை என்ன? மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் எடுப்பது,அவர்களை  கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடையச்செய்வது. வேறு என்ன இருக்கிறது என பலரும் நினைப்பார்கள். ஆனால் பெருந்தொற்று அனைத்தையும் மாற்றிவிட்டது. மதிய உணவுக்காகவே அரசுப்பள்ளியில் படிக்க சேர்ந்த குழந்தைகள் பலரும் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். எத்தனை பேர் திரும்ப பள்ளிக்கு வருவார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.  இந்நிலையில் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அவர்களை புதுமையான வழிகளில் கல்வியை கற்றுக்கொடுக்கவும் முயன்று வருகிறது. மார்ச் 2020 ஆம் ஆண்டு பெருந்தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு ஜூலை முதல் மாணவர்களுக்கு கல்வியை மரத்தடிக்கு மாற்றிக்கொண்டனர். இதனால் பிற பள்ளி மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து கற்று வருகின்றனர். கூடவே ஆசிரியர்கள் ஏழை மாணவர்களுக்கு தங்களது ஊதியத்தில் இருந்து 3000 ரூபாயை போட்டு சாப்பாடும் தயாரித்து வழங்கினர். இதைப் பார்த்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இன்று அப்பொற

வீட்டை கொலைசெய்த பெண்களின் உடல் உறுப்புகளால் அலங்கரித்த கொலைகாரர்

படம்
  மோசமான கொலைகாரர் ஜெப்ரி டாமரை இப்படி கூறலாம். இவரைப் பார்க்கும் யாரும் கொலைகளை இந்தளவு கொடூரமாக செய்திருப்பாரா என்று கூறவே முடியாது. ஒருவரைக் கொன்று பிறகு அவர்களோடு உடலுறவு செய்வது இவரது வழக்கம். கூடுதலாக உடல் உறுப்புகளை வெட்டி சாப்பிடுவது, அதனை குறிப்பிட்ட வகையில் ஜி.வெங்கட்ராம் புகைப்படம் போல அழகுபடுத்தி வைப்பது ஆகியவற்றை செய்திருக்கிறார்.  இவருக்கு அடுத்து இன்னொருவரைக் கூறலாம் என்றால் நேராக ஜப்பானுக்கு போக வேண்டும். அங்கு வாழ்ந்த இசெய் சகவா முக்கியமான கொலைகார ர். இவர் பிரெஞ்சு பெண்ணை கொலை செய்து அவரது முழு உடலையும் மெல்ல உணவாக்கி சாப்பிட்டார். பிறகு சாப்பிட்ட அனுபவத்தை நூலாக எழுதி மக்களுக்கு கொடுத்தார். எதற்கு.. யான் பெற்ற இன்பத்தை... அதேதான். இதற்காக அரசு இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது. வெளியே வந்தவர் ஏதாவது குற்றங்கள் செய்தாரா என்பது தெரியவில்லை.  வெறுக்க கூடிய கொலைகாரர் கார்ல் பன்ஸ்ராம். இவர் நான் கொலை செய்ய நினைப்பவர்களை கொல்வதுதான் திருப்தி தருகிறது. ஒட்டுமொத்த மனித இனத்தையே நான் வெறுக்கிறேன். கொள்ளை, கொலை, அழிப்பது, கொல்வது என்பதை நான் செய்ய நினைக்கிறேன். நான

குற்றங்களை செய்வதில் முதலிடம் யாருக்கு?

படம்
குற்றங்களை ஆவணப்படுத்துதல் குற்றங்களை ஆவணப்படுத்துவது என்பது கடினமானது. சில வழக்குகள் மிக நீண்டு பல ஆண்டுகளாக கோப்பில் இருக்கும். குற்றவாளிகளை பிடிக்கவே முடியாது. இதற்கு காரணம், வழக்குகளை காவல்துறையினர் சரியானபடி இணைத்து பார்க்காத துதான். இதன்படி பார்த்தால் முந்நூறு பேர்களை கொன்ற கொலம்பியாவைச் சேர்ந்த பெட்ரோ லோபஸ் முன்னாடி வருவார். கொலைகளை செய்த தில் இவருக்கு தங்கப் பதக்கம்தான் தரவேண்டும். இதற்கடுத்து,  ஹென்றி லீ லூகாஸ், ஓட்டிஸ் ஆகிய இருவரும் இருநூறு பேர்களை கொன்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களை காவல்துறை விசாரித்தபோது, தாங்கள் ஏழு பேர்களை மட்டுமே கொன்றதாக சொன்னார்கள். அடித்து கேட்டாலும் அப்படித்தாங்க சார் என்றார்கள்.   ஜெர்மனியைச் சேர்ந்த ப்ரூனோ லுட்கே, ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரேய் சிக்காட்லோ முறையே 85, 52 என ஆட்களை போட்டுத்தள்ளியவர்கள். இவர்களுக்கு அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜெரால்டு ஸ்டானோ வருகிறார். இவர் 41 பேர்களை கொன்றார். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந மோசஸ் சிட்கோல் என்பவர் 38 பேர்களைக் கொன்றுள்ளார். இவர்களுக்கு அடுத்துதான் கேரி ரிட்ஜ்வே, ஜான் வேய்ன்

இறந்துபோன பிணங்கள் வெடிக்குமா?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ!? பிணங்கள் வெடிப்பது சாத்தியமா? இறந்துபோனவரின் உடலில் ஏதாவது பேஸ்மேக்கர், அல்லது வேறு பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தால் அப்படி வெடிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி உடலை எரிக்கும்போது நீர்ச்சத்து குறைந்து தசைகள் இறுக்கமாகின்றன. அதனால் எழுந்து உட்கார வாய்ப்புகள் அதிகம். பிணத்தை தகனம் செய்பவர்கள் ராஸ்கோல் என தடியாலேயே நெஞ்சில் ஒரு போடு போட்டு அடக்குவார்கள். பிணம் படுத்துவிடும். மற்றபடி உடலிலுள்ள வாயுக்கள் காரணமாக உடல் வெடிக்கும் என்பது அரிதாகவே நடக்கம். அந்தளவு அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் கிடையாது.  உடல் அழுகிப்போகும் நிலையை பதப்படுத்தும் செயல் மட்டுப்படுத்துகிறது. இதனால் உடலிலுள்ள நுண்ணுயிரிகள் இறந்துபோன செல்களை தின்னும் செயல் தடைபடுகிறது. தசைகள் இறுக்கமடைந்தாலும் உடல் முழுக்க அழுகிப்போவதை தள்ளிப்போடலாம். அழுகும் உடலிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா ஆகிய வாயுக்கள் வெளியே வருகின்றன.  ஐஸால் படகு செய்து பயணிக்க முடியுமா? கேட்க நன்றாக இருந்தாலும் சாத்தியம் குறைவு. கடல் வெப்பநிலை அதிகரித்தால் ஐஸ் படகில் அல்லது கப்பலில் பயணிக்கும் பயணிகளின் கதி என்ன? இங்கிலாந்

குற்றங்களை எப்படி தடுப்பது?

படம்
  பெண்கள் குற்றங்களை ஆவணப்படுத்துபவராக செயல்பட முடியுமா? ஏன் முடியாது. செய்யும் வேலை என்னவென்று ஒருவருக்கு தெரிந்துவிட்டால் போதுமானது. இதில் ஆண், பெண் என தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. முதலிலேயே கூறியதுபோல இது குற்றம் தொடர்பான வேலை. இங்கு தனிப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை கவனித்து அடிப்படையான மனிதர்களின் குணங்களை பார்ப்பது முக்கியமானது.  குற்றவாளிகளுக்கு நெருக்கமாக... குற்றங்களை ஆவணப்படுத்துபவர் சிறைக்கு சென்று குற்றவாளிகளை நேர்காணல் செய்பவர். இப்படி பலமுறை அவர் குற்றவாளிகளை சந்தித்ததால், அவர் அவர்களின் நண்பராகிவிடுவாரா என்ன? உடனே மயிலை பிரியாணியில் பிரியாணியும், அஸ்மா மெஸ்சில் பத்து ரூபாய் பிரிஞ்சியும் சாப்பிட்டு நெருக்கமாகி பீச்சுக்கு கால்நடையாக நடந்துசெல்வார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.  இருவரும் சந்திக்கும்போது சிறைக்கம்பிகள் இருப்பது போலவே, நேரில் சந்தித்தாலும் இடைவெளி இருக்கும். குற்றவாளியின் மனநிலை, அவர் அடுத்து என்ன செய்வார், எப்படி யோசிப்பார் என்பது வரையிலான விஷயங்களை குற்றங்களை ஆவணப்படுத்துபவர்

ஆழ்மன சக்தியை குற்றங்களை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறார்களா?

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை என்பது இயல்பானதுதான். அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. சாதாரண மனிதர் படத்திற்கும், பார்ட்டிக்கும் செல்வதும் போன்ற பழக்கங்களை இவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், அவர்களுக்கேயான சில நண்பர்கள் குழுவை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு பேசுவார்கள், சுற்றுலா செல்வார்கள். மற்றபடி பிறரைப் போல வாழ்க்கை இயல்பாகத்தான் இருக்கும்.  வீட்டிலுள்ள நூலகத்தில் சுந்தர ராமசாமி, நகுலன், ஜெயமோகன், எஸ்.ரா, போகன் சங்கர் ஆகியோர் ஒரு வரிசையில் இருந்தால் இன்னொரு வரிசையில் குற்றவாளிகளைப் பற்றிய ஏராளமான நூல்கள் இருக்கும் மேசை டிராயரில் கொலைகளைப் பற்றிய புகைப்படங்கள் தகவல்கள், பைல்கள் இருக்கும். இதுதான் வேறுபாடு.  பொதுவாக வேலைகளைப் பற்றி பேசுவது குறைவாகவே இருக்கும். நகைச்சுவை என்றாலும் கூட அவல நகைச்சுவையாகவே அமையும். சிலசமயங்களில் இதனைக் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும். ஆனால் தினசரி அதிர்ச்சியை சந்திப்பவர்களுக்கு இது பெரிதாக தோன்றாது.  ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாமா அப்படி ஒரு சக்தியை குற்றங்களை ஆவ

காற்றில் மிதக்கும் மகரந்தத்தால் ஏற்படும் ஒவ்வாமை!

படம்
  மகரந்தத்தின் ஆபத்து ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் தாவரங்களின் மகரந்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மகரந்தம் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் ஆகியவற்றுடன் இணைந்து மக்களை பாதிக்கிறது. இது குறிப்பிட்ட பருவத்தில்தான் மக்களை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்கும். பொதுவாக ஒரு பொருளிலுள்ள புரதம்தான் ஒவ்வாமைக்கு முக்கியமான காரணமாக இருக்கும்.  கிராமங்களில்தான் அதிகளவு தாவரங்கள், மரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், நகரத்தினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நகர்ப்புறங்களில் பசுமைப்பரப்பு குறைந்துபோனதும், மாசுபாடு அதிகரித்து வருவதும்தான்.  இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான். சுற்றுப்புறத்தையும் உங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அவ்வளவேதான். மரங்களிலிருந்து மகரந்தம் உருவாகி ஒருவரைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஆப்பிள், பேரிக்காய் செர்ரி, பெர்ரி போன்றவை கூட ஒவ்வாமையைக் கூட்ட வாய்ப்புள்ளது. எனவே இவற்றிலிருந்து சற்றுதள்ளி இ