இடுகைகள்

மானத்தைக் காப்பாற்ற பகத் பாசில் செய்யும் முயற்சிகள்! - கடிதங்கள்

படம்
         மகேஷிண்டே பிரதிகாரம் - பகத் பாசில்   இனிய நண்பர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நோய் எதிர்ப்பு சக்திக்காக நெல்லிக்காய் லேகியம் சாப்பிட நினைத்தேன் . ஆனால் சியவனப்பிரகாசம்தான் கிடைத்தது . காதியில் கிடைத்த லேகியம் விலை குறைவு . ஆனால் திருப்தியாக இல்லை . கோட்டக்கல் வைத்தியசாலையில் சியவனப்பிரகாசம் வாங்கி சாப்பிடுகிறேன் . ஓரளவு நன்றாகவே இருக்கிறது . அலுவலகத்திலிருந்து முன்னணி பத்திரிக்கைக்கு சென்ற மருத்துவ இதழ் பெண் ஆசிரியர் , நிறுவன இயக்குநரால் மிரட்டப்பட்டது அலுவலகம் முழுக்க தெரிந்துவிட்டது . எதற்கு இந்தளவு ஆங்கார கோபம் ? முன்னணி நிறுவனம் குறித்த கோபம் எதற்கு ? அந்த நிறுவனம்தான் இதழ்களுக்கான பத்திரிக்கையாளர்களை பயிற்சி கொடுத்து தயாரிக்கிறது . ஏன் ? எங்கள் நிறுவன வார இதழின் ஆசிரியர் கூட அந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் . இதேபோல முன்னணி நிறுவனம் மட்டும் தனது பத்திரிகையாளர்களை மிரட்ட வேண்டுமென்றால் , அதற்கென தனி குழுவை உருவாக்கி முழுநேரமாக மிரட்டல் வேலைகளை செய்யவேண்டும் . அதிகாரம் குவியும் இடத்தில் அரசியல் இருக்கத்தானே செய்யும் . இந்த கேட

சாகித்தியக்காரனின் திறமையை இருட்டடிப்பு செய்துவிட முடியுமா? - கடிதங்கள்

படம்
     pixabay இனிய நண்பர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் வீட்டில் ஆத்தாவின் இறப்புக்குச் சென்றேன் . இரண்டு நாட்கள் இருந்துவிட்டு பிறகு சென்னைக்கு திரும்ப வந்துவிட்டேன் . சகோதரர் இன்னும் சில நாட்கள் இருந்து வேலைகளைப் பார்த்துவிட்டு கோவைக்கு செல்வார் . நான் வேலை செய்யும் வார இதழ் நிறுவனத்தில் வேலை செய்யும் உதவி ஆசிரியர்கள் , நிருபர்கள் பெயர் திடீரென இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது . அண்மையில் பெண்கள் இதழ் , மருத்துவ இதழ் ஆசிரியர்கள் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டனர் . இதன் காரணமாக எங்கள் நிறுவனத்தின் நிர்வாகம் கடுமையாக கோபம் கொண்டுவிட்டது போல . சாகித்தியக்காரனின் திறமையை இப்படி மறைத்துவைத்துவிட முடியுமா ? பணமும் , தன்னகங்காரமும் கண்ணை மறைக்கிறது என்றுதான் கூறவேண்டும் . குங்குமத்தில் தொடராக வரும் முகங்களின் தேசம் - ஜெயமோகன் எழுதுவதை வாசிப்பீர்கள் என நினைக்கிறேன் . நான் என் கைக்கு வரும் இதழில் முதலில் படிப்பது இதைத்தான் . ஈரோடு கதிரின் எழுத்து அப்படியே எஸ் . ரா போலவே இருக்கிறது . காலையில்தான் காலச்சுவடு இதழைப் பட

கொரியாவிலிருந்து கற்போம்!- புகழ்பெற்று வரும் வார்த்தைகள்

படம்
  இட்ஸ் ஓகே டு நாட் பி ஓகே  கொரோனா காலத்தில் நெட்பிளிக்ஸில் ஏகப்பட்ட கொரிய டிவி தொடர்களை பார்த்த மக்கள், அந்த மொழி வார்த்தைகள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி கூட குறிப்பிட்ட வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இப்படி பொது அறிவை வளர்த்துக்கொள்ளாவிட்டால் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எப்படி நிரூபிப்பது...  ஹலியு தென்கொரிய டிவி தொடர், படம், இசை, ஃபேஷன், உணவு ஆகியவற்றை எல்லாவற்றையும் இந்த சொல்லால் குறிக்கலாம்.  மன்ஹ்வா தென்கொரிய கார்ட்டூன்களைக் குறிக்கும் சொல். ஜப்பானிய மங்கா தாக்கத்தால் உருவான கார்ட்டூன், காமிக்ஸ் நூல்களை இப்படி சொல்கிறார்கள்.  டேபக் அற்புதம், ஆஹா என்று புகழ்கிறார்களே அதேதான்.  ஹாஜிமா  இப்படி செய்யாதே என்று கூறுவதற்குத்தான் இந்த கொரிய வார்த்தை. சாரங்கே என்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம். கே டிராமா என்றால் இந்த வார்த்தைகள் இல்லாமல் வசனங்களை அந்த நாட்டு இயக்குநர்கள் எழுதுவதே இல்லை.  முக்பாங் லைவாக தட்டு நிறைய உணவு வைத்துக்கொண்டு பார்வையாளர்களிடம் ஒருவர் பேசுவார். இப்படி லைவாக பேசும் வீடியோவை முக்பாங் என்கிறார்கள்.  ஐகூ அடக்க

பண்டோரா பேப்பர்ஸ்!- அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பை நடத்தும் பணக்காரர்கள்

படம்
  பண்டோரா பேப்பர்ஸ் - இந்தியன் எக்ஸ்பிரஸ் பண்டோரா பேப்பர்ஸ்  14 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து 11.9 மில்லியன் கோப்புகள் வெளியாகியுள்ளன. இந்த கோப்புகள் வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ள 29 ஆயிரம் போலி நிறுவனங்கள் பற்றியது. சிங்கப்பூர், நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர்களாக உள்ள நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.  வெளியாகியுள்ள கோப்புகள் பல்வேறு வெளிநாடுகள், அறக்கட்டளைகளில் உள்ள முதலீடுகள், பங்கு முதலீடுகள், வாங்கப்பட்டுள்ள நிலங்கள், ரொக்கம் ஆகியவற்றை விளக்குகின்றன. பண்டோரா பேப்பர் விவகாரத்தில் இந்தியாவின் பங்கு இருந்தால்தானே நமக்கு பெருமை? இதில் மொத்தம் 380 இந்தியர்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், அறுபது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கோப்புகளை ஆராய்ந்து உறுதிபடுத்தியுள்ளது.  பல்வேறு அறக்கட்டளைகளைத் தொடங்கி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்கள்தான் இந்த விவகாரத்தில் வெளியாகி இருக்கிறார்கள். இப்படி வரி  ஏய்ப்பு விவகாரம் வெளியாகும் போதெல்லாம் வரி குறைவாக உள்ள நாடுகளில் ஒருவர் நிறுவனம் தொடங்குவது குற்றமல்ல. சட்டரீதியானது என சில

தீவிரவாத இயக்கத்தின் நிதியாதாரத்தை முடக்கும் உலக அமைப்பு!

படம்
பினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது சாதாரண காரியமல்ல. இதற்கு உலக நாடுகள் துணிச்சலான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதில் முக்கியமானது, தீவிரவாத காரியங்களுக்கு உதவும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. அமெரிக்கா, தனது வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதம் வளர்க்கும் பல்வேறு செயல்பாடுகளை கண்காணிக்க ஆரம்பித்து தடுத்தது.  இதில் முழுமையான வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதல்ல விஷயம். இந்த முயற்சியில் அமெரிக்கா தெரிந்துகொண்ட விஷயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்துபவை.  இருபதாண்டுகளாக அமெரிக்க தீவிரவாதத்தை தடுப்பது என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நிதியளித்து வருகிறது. அதை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த அதற்கு கிடைக்கும் நிதியுதவி ஆதாரங்களைக் கண்டுபிடித்து தடுக்கவேண்டும். அப்போதுதான் நாடுகளில் நடைபெறும் பல்வேறு தீவிரவாத செயல்களை தடுக்கமுடியும். ஃபினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற அமைப்புதான் மேலே சொன்ன விஷயங்களை கூறியது. உலகம் முழுக்க தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அம

ஆங்கிலேயர் கால சீக்கிய குடும்பத்தின் வழியே வரலாற்றுப் பயணம்! - கடிதங்கள்

படம்
  விடியல் முகம் - முல்க்ராஜ் ஆனந்த் இனிய தோழர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். இந்த ஆண்டு குருபெயர்ச்சி உண்மையாகவே நிறைய செயல்பாடுகளை செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். எங்கள் அலுவலகத்தில் வேலை செய்து வந்த குங்குமம் நிருபர், கல்வி வேலை வழிகாட்டி ஆசிரியர் நீலகண்டன், தலைமை உதவி ஆசிரியர் கோகுலவாச நவநீதன், குங்குமம் தோழி ஆசிரியர் வள்ளிதாஸன், குங்குமம் டாக்டர் ஆசிரியர் ஆர்.வைதேகி ஆகியோர் வரும் நாட்களில் விடைபெற்று வேறு பத்திரிகை அலுவலகங்களுக்கு செல்லவிருக்கின்றனர்.  ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களது செயல்களும் முடிவுகளும்தான் பொறுப்பு. ஆனால் இவர்கள் அனைவரும் பேசி வைத்தது போலவே அடுத்தடுத்து வேலையிலிருந்து விடைபெறுவது பயமாக உள்ளது.  நான் முத்தாரம் இதழின் முழுப் பொறுப்பையும், சூரியன் பதிப்பக ஒருங்கிணைப்பு பணிகளையும் செய்து வருகிறேன். கூடவே குங்குமத்தின் உதவி ஆசிரியர் பணிகளையும் சுமக்கிறேன். இதை சுமத்தப்பட்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். இனி என்ன ஆகுமென தெரியவில்லை. தினகரனின் வியாழன் இணைப்பிதழான கல்வி மலருக்கான கட்டுரைகளையும் எடிட் செய்து தரச்சொல்லியிருக்கிறார்கள். தற்போது, புது

காலச்சுவடு 200ஆவது இதழில் உள்ள சிறுகதைகள் பற்றி...! கடிதங்கள்

படம்
  இனிய தோழர் முருகுவிற்கு, நலமா? காலச்சுவடு 200 ஆவது இதழ் வாசித்தேன். அரவிந்தன் அனுபவங்களைப் படித்தேன். ஸ்ரீராமின் கால வியூகம் குரு சிஷ்ய கதையில்  இது மற்றொரு கதை. எழுத்தாளர் மனம் செல்கிற பாதையைக் காட்டுவதாகவே உள்ளது. ஆசை, அகங்காரம் என பல விஷயங்களையும் , உறவு தந்திரங்களையும் வகுக்கிற வியூகம் இது.  போக்கிடம் - கே.என். செந்தில் எழுதியது.  சசி, மதி, லட்சுமணன், ஆறுமுகம் உள்ளிட்டோரின் வாழ்க்கை பந்தாடப்படும் சூழ்நிலை  மற்றும் சிக்கல்கள் பற்றிய கதை இது.  எங்கு கெட்டவார்த்தை பேசப்படவேண்டுமோ அங்கு கடும் வெறுப்புடன் வார்த்தைகளை பாத்திரங்கள் பேசுகிறார்கள். ஜே.பி. சாணக்யாவின் பெருமைக்குரிய கடிகாரம் நெடுங்கதையாக அமைந்திருக்கிறது. ஏமாற்றுகிறவன் புத்திசாலியா, ஏமாறுகிறவன் புத்திசாலியா என்பதை பேசி, நேசிக்கிற விஷயங்களாலேயே ஒருவன் வேட்டையாடப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறது கதை.  போலியாக இருந்தாலும் அதனை கலாபூர்வமாக பிலிப்ஸ் உருவாக்குவது ஆச்சரியமாக உள்ளது. கதையை படிக்கிற வாசகனே அதில் பங்கேற்பது போன்ற தன்மை நெடுங்கதையை படிக்கும்போது உருவாகிறது. இருநூறாவது இதழ் பற்றி மு

துயரத்தாரையாக வழிந்தோடும் வாழ்க்கை! - கடிதங்கள்

படம்
  pixabay பிரிய முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  உங்களுக்கும் எனக்குமான அறிமுகம் அந்தளவு ஈர்ப்பானதாக அமையவில்லை. இதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். தங்களின் அறிமுகத்தினால் என்னை நான் புதுப்பித்துக்கொண்டேன். கருத்துகளிலும், ஒரு விஷயத்தை அணுகுவதிலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.  தாங்கள் எனக்கு வாசிக்க கொடுத்த புத்தகங்கள் நீண்ட வாழ்வை வாழ்ந்த அயர்வையும், கர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையான ஒன்றல்ல.  தங்களின் அறிவை, அனுபவத்தை, மகிழ்ச்சியான நேரங்களை என்னோடு பகிர நினைத்ததே பெரிய வரமாக நினைக்கிறேன். யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு? அனைத்து நேரங்களிலும் நம் உணர்வை மொழியால் வெளிப்படுத்த முடிவதில்லை. தங்களை மார்புறத் தழுவ நினைக்கிறேன். பல்வேறு வழிகளில் மக்களுக்கு நன்மை கிடைக்க போராடும் உங்கள் போராட்டம் வெற்றி பெற இறையை வேண்டுகிறேன்.  இப்படி எழுதுவது கூட முழுமையாக நான் கூற விரும்புவதை கூறுகிறதா என்று தெரியவில்லை. ஓரளவு உதவுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். நான் எதைத்தேடிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. முன் ஒரு காலும் பின் ஒரு காலுமாக

நூல் வாசிப்புக்கான நம்பிக்கை முனையம்! - கடிதங்கள்

படம்
  முருகு அண்ணாவிற்கு,  நலமறியவும், நலத்துடன் இருக்கவும் ஆவலும் வேண்டுதலும்.  தற்போது சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது 3வது அத்தியாயம் வரை படித்திருக்கிறேன். தங்களின் கடுமையான பணிநெருக்கடிகளுக்கு இடையில் நிறைய நூல்களை வாசித்து விடுகிறீர்கள். இதுதான் என்னை நூல்களை வாசிக்க செய்யும் நம்பிக்கை முனையம்.  அறச்சலூர் பிரகாஷ் அண்ணன், சில படங்களைக் கொடுத்தார். அதனை நாளொன்றுக்கு ஒருபடம் என முடிவு செய்து பார்த்து வருகிறேன்.  தி குட், தி பேட், அண்ட் தி அக்லி படத்தை நேற்று பார்த்து முடித்தேன். வறட்சியான பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் ஆட்களின் வாழ்க்கைதான் படம். படம் முடியும் வரை யாரெனும் ஒருவர் இன்னொருவரின் தலையிலுள்ள தொப்பி பறக்க சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  பிரிதிவிராஜ் அவர்களின் திருமணத்திற்கு போய் வந்ததை சகோதரர் கூற அறிந்தேன். மணப்பாறை பயணம் எப்படியிருந்தது? பயணம் ஏதாவது ஒன்றை நமக்கு கற்றுத்தரும் என நினைக்கிறேன். புதிய செய்திகளை, மக்களை அறிய பயணம் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? வேலைக்காக ஓபிசி சான்றிதழ் வாங்கும் முயற்சிகளில் இருக்கிறேன். இதற்கு

இரண்டு பேர் இரண்டு பேருடனும் காதல்! - கடிதங்கள்

படம்
  பிரிய முருகுவிற்கு.... நலமுடன் திகழ வேண்டுகிறேன். சேட்டன் பகத்தின் நாவல் ஒன்றைப் படித்தேன். அதுபற்றித்தான் இந்த மடல்.  கோபால் மிஷ்ரா, ராகவ் காஷ்யப், ஆர்த்தி பிரதான் என இரண்டு ஆண், ஒரு பெண் என மூவருக்கு இடையிலான உறவுச்சிக்கல்களும், வாரணாசியின் வளர்ச்சி மாற்றங்களும்தான் கதை. இந்த மூவரில் ஒருவர் இதில் நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க எழுகிறார். அவர் வெற்றி பெற்றாரா, எப்படி வென்றார் என்பதை சேட்டன் பகத்தின் ரிவல்யூஷன் 2020 என்ற நாவல் பேசுகிறது.  நாவலை நீங்கள் வாசிக்கவேண்டியது அவசியம்.  ஒருவரின் புரட்சி குறித்த அறைகூவல் மற்றவரை விழித்தெழச் செய்யலாம. ஒவ்வொருவரும் அவரவர் பங்கை சமூகத்திற்கு தரவேண்டும். அப்படி பங்களித்தால்தான் சமூகத்திற்கு பல  மாற்றங்களைக் கொண்டு வரமுடியும்.  இந்த நாவலில் காதல் என்பது முழுக்க ஆர்த்தி என்ற பாத்திரத்தைச் சேர்ந்தது. ஆர்த்திக்கு, ராகவுடன் காதல் இருக்கும்போது கூட விரக்தியடையும் நேரத்தில் கோபாலுடன் உடலுறவு கொள்கிறாள். மில்லினிய கால வாசகர்களுக்கான நாவல் இது.  தற்போது வீட்டில் படிக்க கிடைத்த புத்தகம் பூவுலகுதான். வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு படிக்க சென

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எத்தனால் உற்பத்தி!

படம்
  உணவுப்பயிர்கள் எரிபொருளாகிறது... இந்திய அரசு எரிபொருளில், எத்தனால் கலக்கும் திட்டத்தை வைத்துள்ளது. தற்போது 8 சதவீதம் கலக்கப்படும் எத்தனாலின் அளவை விரைவில் இருபது சதவீதமாக்க அரசு யோசித்து வருகிறது. அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை இப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  எத்தனால் கடந்த ஜூன் மாதம், ஒன்றிய அரசு எத்தனால் உற்பத்தியை ஐந்தே ஆண்டுகளில் இருமடங்காக்க திட்டங்களை வகுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். இதற்காக எத்தனாலை உற்பத்தி செய்ய ஏதுவான பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்கவும், சூழல் தொடர்பான அனுமதியை கொடுக்கவும் தயாராக  இருக்கிறது அரசு. இதன் காரணமாக அரசிடம் உள்ள தானியங்கள் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதனால் இத்தானியங்கள் தேவைப்படும் மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.  அரசுக்கு புதிய எத்தனால் திட்டம் மூலம் ஆண்டுக்கு 4 பில்