இடுகைகள்

ஏஐ மூலம் பாப் ஸ்டாரை உருவாக்கி வருகிறேன்! - கிரைமெஸ் (கிளெர் பௌச்சர்)

படம்
  இசைக்கலைஞர் கிரைமெஸ் (கிளெர் பௌச்சர்) இசைக்கலைஞர் கிரைமெஸ்   (கிளெர் பௌச்சர்) தொழில்நுட்பம் சார்ந்த இசைக்கலைஞர். இவர், எலன் மஸ்கை மணந்து இரு குழந்தைகளைப் பெற்றார். குழந்தைகளுக்கு எக்ஸ், ஒய் என பெயரிடப்பட்டுள்ளன. எலன், எக்ஸ் என்ற தனது குழந்தையை தூக்கிக்கொண்டுதான் அலுவலக சந்திப்புகளை எதிர்கொள்கிறார்.தொழில்நுட்பம் மூலம் இசையை உருவாக்குவதில் புதுமையான நாட்டம் கொண்டவர் கிளெர். நீங்கள் உங்கள் குரலை இசை ஆல்பங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அளித்திருக்கிறீர்கள். கட்டற்ற உரிமையில் குரலை கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா? குரல் மட்டுமல்ல என்னுடைய முழு அடையாளத்தையே கொடுத்திருக்கிறேன். எதற்காக இப்படி செய்தீர்கள்? நான் நிகழ்ச்சி தயாரிப்பாளர், பொறியாளராக   இருக்க விரும்புகிறேன். நான் சிறந்த முறையில் பாடும் பாடகர் அல்ல. கூச்ச சுபாவம் கொண்டவள். தொடக்கத்தில் நான் உருவாக்கிய பாடல்களுக்கு வீடியோவில் தோன்றிப்பாட பாடகர்களை தேடினேன். யாரும் அப்படி பாட முன்வரவில்லை. மான்ட்ரியலைச் சேர்ந்தவள். சுயாதீனமாக செயல்பட்டேன் என்பதால் பிறருக்கு தயக்கங்கள் இருந்திருக்கலாம்.   பிற பெண் இசைக்கலைஞர்களோடு பாடும்போது என

உண்மையைத் தேடுவதே இளைஞர்களின் முதல்பணி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி மனிதர்கள் செய்யும் பணியில் இறுதியில் எஞ்சுவது அழிவும், அழிவும், விரக்தியும்தான். இதற்கு எதிரே சொகுசான பொருட்களும், கொடூர வறுமையும் நோயும், பட்டினியும் உள்ளன.   இதனோடு குளிர்பதனப்பெட்டியும், ஜெட் விமானங்களும்   இருக்கின்றன. இவை எல்லாமே மனிதர்கள் உருவாக்கியவைதான். நம்மால் உருவாக்க முடிந்தது இதைத்தானா, உண்மையில் மனிதர்களால்   செய்ய முடிந்த எந்திரங்கள் எவை?   துணி துவைக்கும் எந்திரங்கள், பாலங்கள், விடுதிகள் என மனிதர்கள் உருவாக்கிய பலவும் வேறுவேறு பொருட்களைக் கொண்டவை. மனிதர்கள் உண்மையாக உருவாக்கியது எதுவென தெரியாதவர்களுக்கு, அதில் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் செய்யமுடியாது. மனிதர்களின் உண்மையான பணி, உருவாக்கம் என்பது என்ன? உண்மையைத் தேடுவதும், கடவுளைக் கண்டடைவதும்தான் என்று கூறலாம். இந்த மூடிய செயல்பாடுகளில் அன்பு தட்டுப்படுவதில்லை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் செலுத்திக்கொள்ளும் அன்பே புதிய உலகை உருவாக்குகிறது. திங் ஆன் திஸ் திங்க்ஸ் எது உண்மை, கடவுள் யார் என்பதைத் தேடுவது உண்மையான தேடல். பிற விஷயங்கள் எல்லாம் இதற்கு பின்னே வ

தெரிஞ்சுக்கோ - மொழி, கொடி, மதம்

படம்
  தெரிஞ்சுக்கோ   - மொழி ஜிம்பாவே நாட்டில் பதினாறு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஒரு நாடு அங்கீகரித்துள்ள அதிகாரப்பூர்வ மொழிகளில் இதுவே அதிகம். இருபத்தொன்பது நாடுகளில் பிரெஞ்சு மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. உலகம் முழுக்க உள்ள எண்பது சதவீத பேசப்படும் மொழிகளை ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே பேசி வருகிறார்கள். உலக மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு இரு மொழிகளில்   எழுத, பேச தேர்ச்சி உண்டு. கத்தோலிக்க சர்ச்சின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் தனது செய்திகளை லத்தீன் உட்பட ஒன்பது மொழிகளில் மக்களுக்கு பகிர்கிறார். ஐ.நா அங்கீகரித்துள்ள ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் இவைதான். அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிய மொழி. விசில் ஒலிகளைக் கொண்டுள்ள மொழியை சில்போ என்று அழைக்கிறார்கள். கானரி தீவுகளில் உள்ள லா கோமெரா மக்கள்   ஐந்து கி.மீ. அளவில் விசில் ஒலியைக் கொண்டு தகவல் தொடர்பு கொள்கிறார்கள். 12.3 சதவீத மக்கள் சீனாவின் மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள்.   கொடி பாரகுவே நாட்டின் தேசியக்கொடி ஓராண்டில் நான்கு முறை மாற்றப்பட்ட வரலாறு கொண்டது. 1811-1812 காலகட்டத்தில் இப்படி சீர்திருத்த

மதுவில் கலக்கப்பட்ட விஷம் - மனைவியா, தோழியா -யார் கொலையாளி?

படம்
  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் கேசி மெக்பெர்சன் பொமெராய். இவரை சுருக்கமாக கேசி என அழைக்கலாம். மருந்துகள் விற்கும் விற்பனைப் பிரதிநிதி. இவர் செய்யும் வேலையை அவரே சொன்னால்தான் தெரியும். ஏனெனில் பார்க்க திரைப்பட நடிகர் போல தோற்றம் கொண்டவர். அதனால் சில ஆண்டுகள் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். அவர் பார்பரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். உண்மையில் கேசிக்கும், பார்பராவுக்கும் எந்தவிதத்திலும் கணவன் மனைவி   என்ற பொருத்தமே கிடையாது. பார்க்கும் யாரும் மனதில்   நொடியில் இந்த உண்மையை உணர்வார்கள். ஆனால் சட்டப்பூர்வமாக தம்பதிகளாக வாழ்ந்தனர். கேசிக்கு கடல் நீரில் சர்ஃபிங் செய்வதில் நிறைய ஆர்வம் உண்டு. எனவே, தனது மனைவியுடன் அங்குலியாவில் தனியாக வீடு வாடகைக்குப் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டார். அருகிலேயே கடலும் இருக்கையில் அவருக்கு மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. ஆனால் எல்லாமே டிசம்பர் 2018ஆம் ஆண்டோடு சரி. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருக்க கேசியும், அவரது பள்ளி   கால நண்பர் காலெப் கில்லெரியும் இறந்து போனார்கள்.

விநோதரச மஞ்சரி - புயல்

படம்
  விநோத ரச மஞ்சரி புயல்களுக்கு யார் பெயர் வைத்தது என கேட்கத் தோன்றும் அளவுக்கு பல்வேறு பெயர்களை உலக நாடுகள் சூட்டி வருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் தனக்கு பிடிக்காத அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி டிரெண்டிங்கை தொடங்கினார். அமெரிக்காவில் 1950களில் பெயர் சூட்டும் வழக்கம் தொடங்கியது. அடுத்து, இதிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கோரி ரோக்ஸி போல்டன் போராடினார். எனவே, அவருக்காக 1979ஆம் ஆண்டில் இருந்து புயல்களுக்கு பெண்களின் பெயரும் வைக்கப்படத் தொடங்கியது. உலக வானிலை அமைப்பு, புயல்களுக்கான பெயர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கிறது. இந்த பட்டியல் நம்மூரில் உள்ள அ, ஆ, இ, ஈ போல அந்த ஊரில் ஏ,பி,சி, டி என வரிசைக்கிரமமாக உருவாக்கப்படுகிறது. மொத்தம் 21 பெயர்கள் இடம்பெறும். க்யூ, யூ, ஒய், இசட் ஆகிய ஆங்கில எழுத்துகள் விலக்கப்பட்டன. இந்த பெயர்கள் 2020,2021 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன. ஆலங்கட்டி மழை   பெய்வது வீட்டில் கல் எறிவது போல இருக்கும். இதே வகையில் நாய், பூனை, தவளை ஆகியவை புயலில் வானில் இருந்து பொழிவதுண்டு. இன்னொரு இடத்திலிருந்து

தெரிஞ்சுக்கோ - நகரங்கள்

படம்
  தெரிஞ்சுக்கோ இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில்,   பதிமூன்று ஆறுகள் ஓடுகின்றன. இந்த நகரம் ஆண்டுக்கு 1-15 செ.மீ என்ற அளவில் கீழே முழுகிக்கொண்டு இருக்கிறது. 1966-1987 காலகட்டத்தில் ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜாவிக் நகரில் வியாழக்கிழமை டிவி பார்ப்பதற்கு தடை இருந்தது. சீனாவில்31.18 பெய்ஜிங் நகரில் 699.3 கி.மீ. தொலைவுக்கு இருப்பு பாதையும், 405 ரயில் நிலையங்களும் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் மூன்று தலைநகரங்கள் உண்டு. பிரிடொரியா, நாட்டின் தலைநகர். கேப் டவுன், சட்டம் இயற்றப்படும் நகரம், பிளோம்ஃபான்டெய்ன், நீதிமன்றம் இயங்குவதற்கானது. இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில்   900 தேவாலயங்கள் உள்ளன. மங்கோலியாவின் உலானபாட்டர் நகரில் பதிவான தோராய ஆண்டு வெப்பநிலை -1.3 டிகிரி செல்சியஸ். 1801-1821 காலகட்டம் வரையில் தென் அமெரிக்காவின் ரியோ டி ஜெனிரோ போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகராக செயல்பட்டது. அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ் image - pinterest

மக்கள்தொகை பெருகிய உலக நாடுகளின் நகரங்கள்!

படம்
    அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்கள் டோக்கியோ ஜப்பான் 37.34 மில்லியன் நாட்டின் முக்கியமான பொருளாதார அரசியல் தலைநகரம். பிறப்பு சதவீதம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள்தொகை பெருக்கம் என்ற அந்தஸ்தை 2030இல் இழக்க வாய்ப்புள்ளது. டெல்லி இந்தியா 31.18 மில்லியன் முகலாயர்களின் கட்டுமானங்களைக் கொண்ட பழைய நகரம்.   பெயர்களை மாற்றி வைத்தாலும் வரலாற்றை அழிக்க முடியாது அல்லவா?   தொன்மைக் காலத்தில் இருந்தே அரசின் அதிகாரத் தலைநகரம். ஷாங்காய் சீனா 27.80 மில்லியன் சீனாவின் வணிகம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் இந்த நகரில்தான் நடைபெறுகின்றன. விண் முட்டும் கட்டிடங்கள், பல்கலைக்கழகங்கள் என கட்டுமானங்களுக்கு, வணிகத்திற்கு பெயர் பெற்ற நகரம். சாவோ பாலோ பிரேசில் 22.24 மில்லியன் புனிதர் பாலின் பெயர் வைக்கப்பட்ட நகரம். இங்கு 111 இனக்குழுக்கள் வசிக்கின்றனர். மெக்சிகோ சிட்டி மெக்சிகோ 21.92 மில்லியன் சியரா மாட்ரே மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள நகரம்.   கடலுக்கு மேலே 2,240 மீட்டர் உயரத்தில் உள்ளது.   டாக்கா வங்கதேசம் 21.74 மில்லியன் கங்கை ஆற்றுப்பகுதியில் அமைந்த

கனவில் வன்முறை செய்யும் மனிதர்கள் - பாராசோம்னியா ஆபத்து

படம்
  பாராசோம்னியா ஆபத்து   இன்சோம்னியா பிரச்னையே பலருக்கும் தீரவில்லை. ஆனால், இப்போது வந்திருப்பது பாராசோம்னியா. இன்சோம்னியா பிரச்னை   என்பது தூக்கமின்மை. தூங்காமல் ஏதோ ஒன்றை இரவிலும் செய்துகொண்டிருப்பார்கள். தூங்கும் நேரம் மிக குறைவாக இருக்கும். பாராசோம்னியாவில் வன்முறையான செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக குற்றவழக்குகளும் பதிவாகி வருகின்றன. குற்றவாளி கொலையை, திருட்டை செய்கிறார் என்றால் அதற்கென ஒரு காரணம் வேண்டும் அல்லவா? தூக்கத்தில் செய்யும் விஷயங்கள் ஒருவருக்கு நினைவிலேயே இல்லாதபோது அவரை நீங்கள் என்ன செய்வீர்கள்? இங்குதான் கிராமர் போர்னிமன் துணைக்கு வருகிறார். இவர், ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் என்ற அமைப்பில் வேலை செய்துவருகிறார். நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து என பறந்து சென்று பாராசோம்னியா பற்றி விளக்கம் கொடுத்து வருகிறார். நீதிபதிகளுக்கு, ஜூரிகளுக்கு தூக்கத்தில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்ய முடியும் என்பது பற்றிய தெளிவும் அறிவும் கிடையாது. எனவே, கிராமர் அதை அவர்களுக்கு விளக்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. நர

அதிகரிக்கும் கொலைக்குற்றங்கள் - தடுமாறும் அமெரிக்க காவல்துறை

படம்
  கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ஹாக்கின்ஸ். இவர் 2019 ஆம் ஆண்டு தொடங்கி மாகாணமெங்கும் புகைப்படங்களைக் கொண்ட பில்போர்டுகளை வைத்து வருகிறார். அதில், படுகொலையாகி குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத மனிதர்களின் முகங்கள் உள்ளன. எங்களை கொன்றவர்கள் யார்? என தலைப்பிட்டு புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தகவல் கொடுக்க காவல்துறையின் தொடர்புஎண் உள்ளது. ஹாக்கின்ஸ் எதற்கு இப்படி செய்கிறார்? ஏனெனில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் ஆறு   அன்று, அவரது மகன் ரெகி பத்தொன்பது வயதில் தெருவில் சுடப்பட்டு படுகொலையாகி கிடந்தார் 27 ஆண்டுகளாகியும் காவல்துறையால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. முயற்சிக்காமல் இல்லை ஆனால் குற்றவாளி கிடைக்கவில்லை.   அந்த ஆண்டில் நடைபெற்ற 838 கொலைகளில ரெகியும் ஒருவராக பட்டியலில் ஆவணப்படுத்தப்பட்டார். மகன்தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த   ஹாக்கின்ஸ் மனதளவில் நொறுங்கிப்போனார். அவர் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஹிப் ஹாப் இசைக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த இளைஞன், அங்குள்ள உள்ளூர் குழுக்களில் சேர்ந்து சிறுசிறு கடத்தல்களுக்கு குருவியாக செயல்பட்டு பின்னாளில் உயிர் இழந்துள்ளான். ரெகி என்ற ஹாக்கின

குளத்தில் இருந்து காணாமல் போன இளம்பெண்! - இருபது ஆண்டுகளாக தேடிவரும் காவல்துறை

படம்
  மோலி பிஷ் மசாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள வாரன் பகுதியைச் சேர்ந்தவர் மோலி பிஷ். இவர், 2000ஆம் ஆண்டில்   சிறுவர்கள் குளிக்கும் குளம் ஒன்றில் லைஃப் கார்டாக வேலை செய்துகொண்டிருக்கும்போது காணாமல் போனார், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த நீலநிற நீச்சலுடை மட்டுமே காவல்துறைக்கு கிடைத்தது. ஆனால் அவரது உடல் அல்லது வேறு பொருட்கள் என எதுவுமே கிடைக்கவில்லை. மோலியின் குடும்பத்தினர், காணாமல் போன மகளின் பெயரில் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி, குழந்தைகளை கண்காணிக்கவென சில பொருட்களை பெற்றோருக்கு வழங்கி வருகின்றனர். மகள் தொடர்பான வழக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. கமின்ஸ் என்ற குளத்தில் மோலியின் சகோதரர் ஜான் லைஃப் கார்டாக   வேலை செய்து வந்தார். எனவே, பள்ளியில் படித்து வந்த மோலிக்கு பதினாறு வயதில் தானும் லைஃப் கார்டாக வேலை செய்யவேண்டுமென ஆசை பிறந்தது. ஆனால் வேலைக்கு சேர்ந்த எட்டே நாட்களில் காணாமல் போய்விட்டார். அம்மா மேகிக்கு, மகள் ஆபத்தான இடத்தில் வேலை செய்கிறாளே என பயம் இருந்தும் மகள் உறுதியாக கூறியதால் மனதை சமாதானம் செய்துகொண்டார். ஆனால் அது நிலைக்காது என அவரும் கூட நினைத்த