இடுகைகள்

உக்கிரபுத்தன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உகாண்டாவுக்கு பசு!- மோடி கிஃப்ட்

உகாண்டாவுக்கு பசு தந்த மோடி !   டெல்லியை விட குறைவான மக்கள் தொகை கொண்ட ருவாண்டா நாட்டிற்கு 200 பசுக்களை பிரதமர் மோடி தானமாக வழங்கியுள்ளார் . இரு நாட்டு நல்லுறவுக்கான பாலம் என இதற்கு பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது .   கிரிங்கா எனும் திட்டத்தின் அடிப்படையில் மோடி இந்தியப் பசுக்களை ருவாண்டாவிலுள்ள ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார் . பிறக்கும் முதல் கன்றுக்குட்டியை பக்கத்து வீட்டினருக்கு வழங்க கிராமம் வளர்ச்சியுறும் என்பது இந்திய அரசு நம்பிக்கை . இந்தியா உதவி செய்வதால் ருவாண்டா சீரழிந்த நாடு என எண்ணவேண்டாம் . அங்குள்ள நாடாளுமன்றத்தில் மூன்றில் இருபங்கு பெண் உறுப்பினர்கள் உண்டு . நேரம் தவறாத பொதுப்போக்குவரத்து , சுத்தம் ஆகியவை அந்நாட்டின் சொத்து . 1994 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் நிறைவடைந்த பின்னர் அந்நாட்டின் வளர்ச்சி இது . இந்தியா ருவாண்டாவுக்கு 400 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு பல்வேறு உதவித்தொகைகளையும் விவசாயம் , கலாசாரம் , பாதுகாப்பு , கால்நடைத்துறை திறன் பயிற்சிகளையும் வழங்கி சீனாவின் முற்றுகையை தடுத்து உறவை வளர்க்க முயற்சி செய்து வருகிறது .

கலப்படநீரை குடிப்பது ஈஸி!

கலப்பட நீர் இனி குடிநீர் !   பீகாரிலும் மும்பை , பெங்களூரு போன்ற நகரங்களிலுள்ள தீவிர குடிநீர் மாசுபாடு பிரச்னை உண்டு . பீகாரிலுள்ள சுலப் எனும் நிறுவனம் ' சுலப் ஜல் ' திட்டத்தின் அடிப்படையில் கலப்படநீரை குடிநீராக்க இவ்வமைப்பு முயற்சித்து வருகிறது . இலவசமல்ல ; ஒரு லிட்டர் குடிநீர் ரூ .50 பைசாதான் .      தினசரி ஏரி அல்லது குளங்களிலிருந்து பெறப்படும் மாசுபட்ட நீரை சுத்திகரித்து மிக குறைந்த விலையில் விற்பதே சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிண்டேஸ்வர் பதக்கின் உயரிய நோக்கம் . தினசரி 8 ஆயிரம் லிட்டர் நீர் என்பது தற்போதைய இலக்கு . 20 லட்சரூபாயில் இதற்கான தொழிற்சாலை அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது . டிசம்பரில் தொடங்கும் இம்முயற்சி வரவேற்பு பெற்றால் உலகில் குடிநீரை மிக குறைவான விலையில் தரமான முறையில் அளிக்கும் மாநிலமாக பீகார் உயர சான்ஸ் உண்டு .

செத்தது எத்தனை குழந்தைகள் - புள்ளிவிபரம் சொல்கிறார் அமைச்சர்

மூச்சுதிணறலால் குழந்தைகள் பலி !- கணக்குப்போட்டு வரும் அமைச்சர் மகாராஷ்டிராவில் கடந்த பதினொரு மாதங்களில் குழந்தைளின் இறப்பு பெருமளவு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தீபக் சாவந்த் தெரிவித்துள்ளார் .   தோராயமாக ஏப் .2017- பிப் .2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 13 ஆயிரத்து 500 குழந்தைகள் நிமோனியா , குறைந்த எடை , மூச்சுத்திணறல் தொடர்பான பிரச்னைகளுக்கு பலியாகியுள்ளனர் . குறைந்த எடை காரணமாக மட்டும் 22 சதவிகித குழந்தைகள் மரணித்துள்ளனர் என சுகாதார அமைச்சர் தீபக் சாவந்த் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார் . நிமோனியா மற்றும் தொற்றுநோய்களால் 7%, மூச்சுத்திணறலால் 14% என பிறந்த 28 நாட்களுக்குள் 65 சதவிகித குழந்தைகள் இறந்துபோயுள்ளனர் . "2017-2018 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 778. இதில் மும்பையில் மட்டும் 483 குழந்தைகள் இறந்துள்ளனர் " என கூட்டிக்கழித்து பதில் சொல்லியிருக்கிறார் அமைச்சர் சாவந்த் . அரசுக்கு புள்ளிவிபரம் சொல்வதை கைவிட்டு  குழந்தைகளை காப்பாத்துங்க அமைச்சரே !

திபெத்தில் வேலை செய்யும் சீனா!

திபெத்தில் வானிலை ஆய்வகம் ! திபெத்தின் எல்லையோரமாக தானியங்கி தட்பவெப்பநிலை ஆய்வகத்தை அமைக்கும் முயற்சியில் சீன அரசு துணிச்சலாக இறங்கியுள்ளது . திபெத்தின் அடிப்படை கட்டமைப்பை அப்டேட் செய்யும் முயற்சி இது . எல்குன்ஸ் கவுண்டி பகுதியிலுள்ள யுமாய் நகரருகே சீனா திட்டமிட்டு அமைக்கும் இந்த ஆய்வக முயற்சி , தரைப்படையின் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு விஷயங்களுக்கு எதிர்காலத்தில் உதவும் . திபெத்தின் வானிலையை சரியானபடி அறிந்தால் மட்டுமே விமானங்கள் பறக்கவும் ஏவுகணைகளை இலக்கு தவறாமல் வீசவும் முடியும் . தன் முப்படை ராணுவப்பிரிவுகளை சரியான தகவல் தொடர்பின்றி பிரித்து வைத்திருக்கும் இந்தியா இதற்கு பதிலடியாக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி மட்டுமே நம்மிடம் மிச்சமிருக்கிறது .

பிரம்மோஸ் பிரமிப்பு!

பிரம்மோஸ் சாதனை ! ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பாயும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா சோதித்து வெற்றி கண்டுள்ளது . 290 கி . மீ தூர இலக்கை துல்லியம் பிசகாமல் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை உலகிலுள்ள எந்த ஆயுதமும் இடைமறித்து தாக்க முடியாது . போர்விமானமான சுகோய் 30 MKI இல் பயன்படுத்தப்பட்டு வரும் பிரம்மோஸ் ஏவுகணையில் 300 கி . கி வரை வெடிமருந்துகளை எடுத்துச்செல்ல முடிவதோடு மலைக்குன்றுகளில் உள்ள இலக்கையும் எளிதாக தாக்கி அழிக்க முடியும் .  " தற்போது நடந்துள்ள சோதனை , பிரம்மோஸ் ஏவுகணையின் ஆயுளை அதிகரிக்கவும் புதிய எல்லைகளை தொடவுமே நடத்தப்பட்டது " என்கிறார் ஏவுகணை திட்ட இயக்குநர் சுதீர்குமார் மிஸ்‌ரா . இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது நமக்கான பெருமை .

ட்ரம்ப் தன் ட்ரைவருக்கு இழைத்த அநீதி!

ரீசைக்கிள் பூங்கா ! டெல்லியில் தேங்கும் அபரிமித கழிவுகளை என்ன செய்வதென குழப்பத்தில் கார்ப்பரேஷன் நிர்வாகம் தடுமாறி வருகிறது . டெல்லியில் தினசரி உருவாகும் திடக்கழிவு 10 ஆயிரம் டன்கள் , எலக்ட்ரானிக் கழிவுகள் 30 டன்கள் , உயிரியல் கழிவுகள் 70 டன்கள் , கட்டிடக்கழிவுகள் 4 ஆயிரம் டன்கள் , பிளாஸ்டிக் கழிவுகள் 800 டன்கள் என குவிந்து வருகிறது . இவை அனைத்தையும் மறுசுழற்சி செய்வது மிக கடினமான ஒன்று . டெல்லி மெட்ரோரயில் நிர்வாகம் இதற்கு வழி கண்டுபிடித்துள்ளது . கிழக்கு டெல்லியில் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் சாஸ்திரி பார்க் என்ற பெயரில் ரீசைக்கிள் பூங்காவை நிர்மாணித்துள்ளது . திறந்தவெளி அரங்கு , யோகா ஸ்பாட் உள்ளிட்டவற்றை கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கியுள்ளது பசுமை டச் . 42 ஆயிரம் ச . அடி கொண்ட இந்த பூங்காவில் செயற்கை ஏரி , பனிரெண்டு இரும்பிலான சிற்பங்கள் , மருத்துவ தாவரங்கள் , சோலார் விளக்குகள் ஆகியவையோடு இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் , மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளும் உண்டு .   2 இந்தியாவின் இடம் எது ?  உலகின் மிகப்பெரிய பொர

குப்பைகளால் ஒரு பூங்கா!- டெல்லியில் சாதனை

ரீசைக்கிள் பூங்கா ! டெல்லியில் தேங்கும் அபரிமித கழிவுகளை என்ன செய்வதென குழப்பத்தில் கார்ப்பரேஷன் நிர்வாகம் தடுமாறி வருகிறது . டெல்லியில் தினசரி உருவாகும் திடக்கழிவு 10 ஆயிரம் டன்கள் , எலக்ட்ரானிக் கழிவுகள் 30 டன்கள் , உயிரியல் கழிவுகள் 70 டன்கள் , கட்டிடக்கழிவுகள் 4 ஆயிரம் டன்கள் , பிளாஸ்டிக் கழிவுகள் 800 டன்கள் என குவிந்து வருகிறது . இவை அனைத்தையும் மறுசுழற்சி செய்வது மிக கடினமான ஒன்று . டெல்லி மெட்ரோரயில் நிர்வாகம் இதற்கு வழி கண்டுபிடித்துள்ளது . கிழக்கு டெல்லியில் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் சாஸ்திரி பார்க் என்ற பெயரில் ரீசைக்கிள் பூங்காவை நிர்மாணித்துள்ளது . திறந்தவெளி அரங்கு , யோகா ஸ்பாட் உள்ளிட்டவற்றை கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கியுள்ளது பசுமை டச் . 42 ஆயிரம் ச . அடி கொண்ட இந்த பூங்காவில் செயற்கை ஏரி , பனிரெண்டு இரும்பிலான சிற்பங்கள் , மருத்துவ தாவரங்கள் , சோலார் விளக்குகள் ஆகியவையோடு இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் , மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளும் உண்டு . 

ரயிலில் ராமாயண டூர்!

படம்
ராமாயணா டூர்! ஆன்மிகச்சுற்றுலாவுக்கு மக்களை ஈர்க்க  இந்திய ரயில்வே அதிரடியாக முடிவு செய்து  ராமாயணா எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை வரும் நவம்பர் மாதத்திலிருந்து இயக்கவுள்ளது . பதினாறு நாட்கள் கொண்ட ஆன்மிக பயணத்தில் செழிப்பான மக்கள் பங்கேற்று பயணிக்கலாம் . டெல்லியின் சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தியா , ஹனுமான் கார்கி , ராம்கோட் , கனக் பவான் கோவில் , நந்திகிராம் , சீதாமர்கி , ஜானக்பூர் , நாசிக் , ஹம்பி , ராமேஸ்வரம் வரை செல்லவிருக்கிறது . 800 பேர் பயணிக்கும் இந்த ரயிலில் நபர் ஒருவருக்கு தலா ரூ . 15, ஆயிரத்து 120 கட்டணம் வசூலிக்கப்படும் . இலங்கையில் ராமன் தொடர்பான இடங்களை பயணிகள் சுற்றிப்பார்க்கவும் இந்திய ரயில்வே 47 ஆயிரத்து 600 விலையில் (5 இரவு /6 பகல் ) சுற்றுலா பேக்கேஜூகளை வைத்துள்ளது .

சட்டப்படி மரணம் சாத்தியமே!

ஆராய்ச்சியாளர்களுக்கு விசா ! ஆராய்ச்சிபடிப்புதான் உங்கள் லட்சியமா ? உடனே கிளம்புங்கள் . இங்கிலாந்து உங்களுக்கு விசா தர காத்திருக்கிறது . நாட்டின் ஆராய்ச்சித்துறையை செழிப்பாக்க இங்கிலாந்து முடிவு செய்து விசா முறைகளை எளிமை செய்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்குவதற்கு வசதிகளை செய்துதரவுள்ளது . " இங்கிலாந்து ஆராய்ச்சித்துறையில் முன்னணி வகிக்கும் நாடு . உலகளவிலான ஆராய்ச்சியாளர்கள் இங்கு பயிற்சி பெறவும் பணிபுரியும் நாங்கள் வசதிகளை செய்துதரவுள்ளோம் " என்கிறார் குடியுரிமை அமைச்சர் கரோலின் நோக்ஸ் . UKRI எனும் அமைப்பு , நாட்டின் ஏழு ஆராய்ச்சி கவுன்சில்களை ஒருங்கிணைத்து ஆராய்ச்சிப்பணிகளை செய்யவிருக்கிறது . நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் அமைப்பில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால் விசா கெடுபிடிகள் நீக்கப்படுவது மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த மாணவர்களை அப்பணிகளுக்கு ஈர்க்கும் வாய்ப்புள்ளது .  2 பசி பரிதாபம் ! நாக்பூரிலுள்ள டடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் பாட்டிலில் தலை நுழைத்து சிக்கிக்கொண்ட ஓநாயை விலங்குநல ஆர்வலர்கள் காப்பாற்றி

இஸ்‌ரோ தேடும் விண்வெளி வீரர் யார்?

விண்வெளியில் இஸ்‌ரோ இந்தியர் அண்மையில் விண்வெளிக்கு வீரர்களை கொண்டு சென்று திரும்ப வரும் ஹியூமன் கேப்சூல் டெக்னிக்கை  ஹரிகோட்டா மையத்தில் இஸ்‌ரோ சோதித்துள்ளது . மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த சோதனை , விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக கேப்சூல் மூலமாக மீட்கும் Pad Abort Test(PAT) ஆகும் . விண்கலங்களை திரும்ப பயன்படுத்தும் RLV-TD சோதனையை இஸ்‌ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில் அடுத்த முக்கிய சோதனையாக சந்திரயான் 2 உள்ளது . அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படவிருக்கும் சந்திரயான் 2 வின் திட்ட மதிப்பு 800 கோடி . ரீயூஸபிள் விண்கல தொழில்நுட்பத்தை இந்தியா கண்டறிந்தாலும் இன்னும் மேலதிக முன்னேற்றம் தேவையாகவுள்ளது . " அடுத்த பத்தாண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்கல தொழில்நுட்பத்தில் இந்தியா முக்கிய இடம் பிடிப்பதோடு , பத்தில் ஒருபகுதி மட்டுமே இதற்கு செலவாகும் " என்கிறார் இஸ்‌ரோவின் முன்னாள் தலைவரான கிரண்குமார் . இஸ்‌ரோ பயன்படுத்தும் TSTO தொழில்நுட்பம் விண்வெளிக்கு வீரர்கள் செல்லும் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என இஸ்‌ரோ கூறியுள்ளது .

மகப்பேறு விடுமுறையால் பெண்களை தவிர்க்கும் நிறுவனங்கள்!

பெண்களைத் தவிர்க்கும் நிறுவனங்கள் ! கடந்தாண்டு மார்ச் 9 அன்று அமுலுக்கு வந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கான பிரசவகால விடுமுறை சட்டத்தால் பெண்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .  12 வாரங்களாக இருந்த பிரசவகால விடுமுறை அரசின் புதிய சட்டத்தால் 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது . இதனால் பல்வேறுவகை தொழில்பிரிவுகளில் பணியாற்றும் 12 கோடிக்கும் மேற்பட்ட பெண்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு விடுமுறைக்கு பின் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது . இரண்டு குழந்தைகளின் பிறப்புக்கு மட்டுமே அரசின் பிரசவ விடுப்பு ரூல்ஸ் பொருந்தும் . சுற்றுலா , சூப்பர்மார்க்கெட் , வணிகம் , உற்பத்திதுறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரசவவிடுப்பு முடிந்தாலும் பெண்களை திரும்ப பணிக்கு சேர்க்க தயங்குகிறார்கள் . இவ்வாண்டில் மட்டும் (2018-19), பதினெட்டு லட்சம் பெண்கள் இவ்வகையில் வேலையிழக்க வாய்ப்புள்ளதாக துறை வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர் . பெண்களுக்கான சம்பள விகித வேறுபாடு , புரமோஷன் உள்ளிட்ட பிரச்னைகளும் பன்னாட்டு நிறுவனங்களை கதிகலங்கவைத்துள்ளன .  2 குழந்த

பாலஸ்தீனத்தை நோக்கி ஈர்க்கும் சூப்பர் டான்ஸ்!

படம்
உலகை ஈர்க்கும் பாலஸ்தீன்  டான்ஸ் ! கண்ணீர்புகை குண்டுகள் , துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்துக்கொண்டிருக்க காசாவிலுள்ள பாலஸ்தீனியர்கள் அப்பின்னணியில் ஆடிய டான்ஸ் வீடியோதான் இணையத்தில் அதிரி புதிரி வைரல் . காசாவிலுள்ள பாலஸ்தீனியர்கள் காசா எல்லைப்பகுதியில் வெடிகுண்டுகள் முழங்கும் பின்னணியில் அராபிய நாட்டுப்புற நடனமான டப்கேவை முகத்தை மறைத்தபடி ஆடிப்பாடியதுதான் உலகினரையே ஆச்சரியப்படுத்தியுள்ளது . உலக மக்களின் கவனத்தை பெற பாலஸ்தீனிய அமைப்பினர் இத்தகைய புதுமை ஐடியாக்களை முயற்சித்து வருகின்றனர் . முன்னர் அவதார் பட கதாபாத்திரங்களைப் போல வேடமிட்டது பலருக்கும் நினைவிருக்கலாம் . கடந்த மார்ச்சில் இஸ்‌ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமுற்றது உலகறிந்த செய்தி . autospace:none'> 2016-17 காலகட்டத்தில் கிடைத்த 108 உதவித்தொகைகளில் 53 உதவித்தொகைகளை மகாராஷ்டிரா பெற்றது . மீதியுள்ள இடங்களை உத்தரப்பிரதேசம் , மத்தியப்பிரதேசம் , தமிழ்நாடு ஆகியவை பகிர்ந்துகொண்டன . முனைவர் படிப்புகளுக்கான இடங்களிலும் தலித் மாணவர்கள் அதிகரிக்க காரணம் ,

ஸ்காலர்ஷிப் வென்ற தலித் மாணவர்கள்!

படம்
வெளிநாட்டு உதவித்தொகை வென்ற தலித் மாணவர்கள் ! இவ்வாண்டின் பிப்ரவரி மாதம் வரை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும்  கல்வி உதவித்தொகைகளை பெறுவதில் மகாராஷ்டிரா மாநிலம் டாப்பில் உள்ளது .  அதிலும் தலித் மாணவர்கள் இதில் முன்னிலை வகிப்பது பெருமையான செய்தி . தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (NOS) திட்டத்தில் கிடைத்த 72 உதவித்தொகைகளில் நாற்பதை மகாராஷ்டிரா மாநிலம் தட்டிச்சென்றுள்ளது . தலா ஆறு கல்வி உதவித்தொகைகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளன . கடந்த மூன்று  ஆண்டுகளாக மகாராஷ்டிரா கல்வி உதவித்தொகைகளை ஈர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது . 2016-17 காலகட்டத்தில் கிடைத்த 108 உதவித்தொகைகளில் 53 உதவித்தொகைகளை மகாராஷ்டிரா பெற்றது . மீதியுள்ள இடங்களை உத்தரப்பிரதேசம் , மத்தியப்பிரதேசம் , தமிழ்நாடு ஆகியவை பகிர்ந்துகொண்டன . முனைவர் படிப்புகளுக்கான இடங்களிலும் தலித் மாணவர்கள் அதிகரிக்க காரணம் , மாநில அரசும் தலித் மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை திட்டத்தை ஒத்த பிளான்களை மேற்கொண்டுவருவதுதான் காரணம் என அதிகாரிகள் வட்டாரம் தகவல் கூறுகிறது . 

ஊட்டச்சத்துக்குறைவால் தவிக்கும் ஹைதராபாத்!

ஊட்டச்சத்து குறைந்த ஹைதராபாத் ! ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் 763 பேர்களிடம் (13-16 வயது ) செய்த ஆய்வில் நானூறுக்கும் மேற்பட்டோர் தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் தவிப்பது தெரியவந்துள்ளது . மாணவர்களின் வயதுக்கேற்ற உடல் எடை விகிதமும் 18.5 சதவிகிதத்திற்கு கீழே உள்ளது ஆந்திரா அரசின் மக்கள்நல திட்டங்களின் செயல்திறன் வீழ்ச்சிக்கு அலாரம் அடிப்பதாக உள்ளது . அடிப்படை வசதிகள் குறைவு , குடிநீர் போதாமை மற்றும் கழிவறை சுகாதாரமின்மை ஆகியவை மாணவர்களின் கல்வித்தரத்திலும் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது . எடைகுறைவு பிரச்னை மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 2.75 சதவிகிதம் என்றால் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவுகள் . இதில் சைவ உணவு சாப்பிடும் 151 மாணவர்களில் 102 பேர் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அரசின் மதிய உணவுத்திட்டம் கடந்து மாணவர்களின் வீட்டிலுள்ள பொருளாதார நிலையும் ஊட்டச்சத்து குறைவுக்கு முக்கிய காரணியாக உள்ளது .  நிபா ஒழிப்புக்கு இசை வீடியோ ! கேரளாவை கடந்த

தேர்தல் பிரசாரம் செய்ய ஃபேஸ்புக்குக்கு தடை!

படம்
தேர்தல் பிரசாரத்துக்கு தடை ! தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு தேர்தல் விளம்பரங்களை ஃபேஸ்புக்கிலும் தடைசெய்ய தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது . செக்‌ஷன் 126(1951) சட்டப்படி அரசியல் பிரசாரங்களை 48 மணிநேரத்திற்கு முன்னதாக தடைசெய்ய அரசுக்கு உரிமை உண்டு . தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும் புதிய பட்டன்களை அமைக்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது . இதற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்கும் பயனர்களின் எண்ணிக்கையும் 7 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது . தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான விதிமீறல்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் ட்விட்டர் மற்றும் யூட்யூப் ஆகிய இணையதளங்களுடன் ஒப்பந்தம் செய்ய தீர்மானித்துள்ளது . 2 ஹஜ்பயணிகளில் பெண்கள் அதிகம் ! சவுதி அரேபியாவிலுள்ள மெக்காவுககு புனிதபயணம் செய்யும் பயணிகளில் இம்முறை பெண்களுக்கு 47 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது இந்திய அரசு . கடந்தாண்டுவரை கணவருடன் செல்லும் பெண்களுக்கு மட்டுமே ஹஜ் பயண அனுமதி உண்டு என்ற விதி இந்தாண்டு தளர்த்தப்பட்டுள்ளது . நான்கு பேர் கொண்ட குழுவாகவும், 45 வயது க்கும் மேற்பட

விஸ்வரூப இந்தி!

படம்
விஸ்வரூபம் எடுக்கும் இந்தி !  இந்திய அரசு கிடைக்கும் சந்து பொந்தில் எல்லாம் இந்தியை திணிக்கும் முயற்சியில் 25 சதவிகித வெற்றி பெற்றுள்ளது . அதாவது , இந்தி 2001-2011 காலகட்டத்தில் நூறு மில்லியன் பயனர்களை பெற்றுள்ளது . பெரும்பாலான மொழிகளுக்கு ஆதாரமான சமஸ்கிருதமும் மேற்சொன்ன காலகட்டத்தில் 76 சதவிகித வளர்ச்சி காட்டி வியக்க வைத்துள்ளது . மக்கள் தொகை கணக்கெடுப்புபடி காஷ்மீரி - 22.97%, குஜராத்தி - 20.4%, மணிப்பூரி -20.4%, பெங்காலி - 16.63% ஆகியவை இந்தி , சமஸ்கிருதம் மொழிகளுக்கு அடுத்தபடியாக வளர்ச்சி காட்டியுள்ளன . இந்திய அரசின் பொதுமொழியான ஆங்கிலம் 14.67(2,60,000) சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது . பெரும்பாலான ஆங்கிலம் பேசும் மக்கள் மகாராஷ்டிரா , தமிழ்நாடு , கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு தெரிவிக்கிறது . ஆனால் உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகள் பெரியளவு வளர்ச்சியின்றி தடுமாறி வருகிறது . பட்டியலிடப்படாத பிலி மற்றும் பிலோடி ஆகிய மொழிகள் நூறுமில்லியன் மக்களின் மூலம் அழியாமல் பிழைத்துள்ளன .  2 க்யூஆர் வழியே பசுமைத்தகவல்கள் !