இடுகைகள்

கணிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படிப்பதற்கு பொருளாதாரமும், சூழலும் தடையாக இருக்க கூடாது! - ஆனந்த் குமார், பீகாரின் சூப்பர் ஆசிரியர்!

படம்
                    பொருளாதாரம் எனது படிப்பை குலைத்துவிட்டது ! ஆனந்த்குமார் . பாட்னாவில் வாடகைவீட்டில் இருந்த அந்த சிறுவனை பள்ளி செல்வதற்காக அதிகாலையில் காலைத் தொட்டு எழுப்புவது தந்தை ராஜேந்திர பிரசாத்தின் வழக்கம் . ஒருநாள் அப்படி எழுந்த சிறுவன் , எதற்கு இப்படி எழுப்புகிறீர்கள் என்று கேட்டான் . நான் நீ பிற்காலத்தில் செய்யும் சாதனையைப் பார்க்க இருப்பேனா என்று தெரியவில்லை . ஆனால் நீ அந்த உயரத்திற்கு செல்ல நான் என் பங்கினை செய்துவிடவேண்டும் . எழுந்து பள்ளிக்கு கிளம்பு என்று சொன்னார் . கணிதத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த் குமாருக்கு கேம்பிரிட்ஜில் படிக்க இடம் கிடைத்தும் கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் அக்கனவு கனவாகவே போய்விட்டது . இவரது பல்வேறு கட்டுரைகளை ஆய்வு இதழ்கள் வெளியிட்டுள்ளன . 1994 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறந்துவிட பொருளாதார சிக்கலால் படிப்பை கைவிடவேண்டிய சூழல் . நகரத்தின் தெருக்களில் அப்பளம் விற்றபடி நிலைமையை சமாளித்திருக்கிறார் . பிறகு பல்வேறு தனியார் நிறுவனங்களில் கணிதம் கற்பித்திருக்கிறார் . 1992 இல் கணிதம் தொடர்பான கிளப் ஒன்றை தொடங்கியவர் பின்னாளில்

பெரிய கேள்விகளை விட சிறிய கேள்விகளுக்கு விடை தேடுங்கள்! - எல். மகாதேவன், ஹார்வர்ட் பேராசிரியர்

படம்
    கரையான் புற்றில் அறிவியல் உள்ளது ! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எல் . மகாதேவன் , தினசரி வாழ்க்கையில் பார்க்கும் விஷயங்கள் மூலம் அறிவியலை விளக்கி வருகிறார் . தினசரி வாழ்க்கையில் பார்க்கும் பல்வேறு விஷயங்களுக்கு அறிவியல் காரணங்களை பலரும் கூறுவதில்லை . அப்படி கூறினாலும் அது மாணவர்களுக்கு கொட்டாவியை வரவழைக்கும் . இதிலிருந்து மாறுபட்டு அறிவியலை விளக்குகிறார் ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் எல் . மகாதேவன் . அப்ளைடு மேத்தமேட்டிக்ஸ் படித்தவரின் மேசையில் உள்ள பல்வேறு கருவிகள் , பொருட்கள் அனைத்துமே தினசரி வாழ்க்கையில் உள்ளவைதான் . அவற்றின்மூலமே எளிதாக அறிவியலை விளக்குவது இவரின் பாணி . சிறிய கேள்விகளுக்கு விடை தேடி அவற்றின் மூலம் நிறைய தெரிந்துகொள்ளலாம் என்று சொல்லும் மகாதேவன் சீரியோஸ் விளைவு ( “Cheerios effect” ) என்பதை தினசரி பாலில் கலந்து உண்ணும் உணவு மூலம் விளக்குகிறார் . இயற்பியலையும் , கணிதத்தையும் தினசரி வாழ்க்கையில் கையாளும் பொருட்கள் மூலம் விளக்கும் , மகாதேவன் 300 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார் . 1

வாழ்க்கையை கணக்கு சூத்திரங்களாக அணுகும் பேராசிரியர் வாழ்க்கையில் உணர்ச்சிகளை முக்கியமாக கருதும் மனைவி வந்தால்... பர்பெக்ட் அண்ட் கேஸூவல் 2020

படம்
            பர்பெக்ட் அண்ட் கேஸூவல் சீன டிவி தொடர் 24 எபிசோடுகள் Title: Perfect and Casual Chinese Title: 完美先生和差不多小姐 / Wan Mei Xian Sheng He Cha Bu Duo Xiao Jie Broadcast Website: MGTV Broadcast Date: September 28, 2020 Air Time: Monday, Tuesday 20:00 (2 eps) on first week, Sunday-Monday subsequent weeks, 4 eps released early for VIP (See Viewing Calendar ) Genre: Romance Language: Mandarin Episodes: 24 Director: Li Shuang Origin: China உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் கணித சூத்திரங்களாக பார்க்கும் புள்ளியியல் பேராசிரியர் ஒருவரும் , மனிதர்கள் மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களை நம்பும் கல்லூரி மாணவியும் ஒன்றாக இணைகிறார்கள் . அதற்கு பேராசிரியரின் தாத்தாவுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முக்கியமான காரணம் , புள்ளியல் துறையில் படிக்கும் யுன் ஷூ என்ற மாணவியை , பேராசிரியர் ஸாங் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துகொள்கிறார் . அந்த உறவு ஒப்பந்தம் என்ற எல்லையைக் கடந்து காதல் சாலையில் பயணித்ததா , இல்லையா என்பதுதான் டிவி தொடரின் மையப்புள்ளி பேரா

கணிதம் சொல்லி உலகை வசப்படுத்திய ஆசிரியை!

படம்
கணித நுட்பங்களை கற்றுத்தரும் ஆசிரியை!  பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபி குமாரி, தன் புதுமையான கணித நுட்பங்களால் மாணவர்களை கவர்ந்து வருகிறார்.  2014ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபிகுமாரி மாணவர்களுக்குக் கற்பிக்க தொடங்கினார். புதுமையான நுட்ப வழிகளில் கணிதத்தைக் கற்றுத் தந்தவர், மாணவர்களை ஈர்க்கத் தொடங்கினார். ஒன்பதைப் பெருக்க விரல்களை எப்படி கால்குலேட்டராக பயன்படுத்துவது என்று இவர் கற்பிக்கும் வீடியோ இணைய உலகில் அதிகம் பகிரப்பட்டது. இதனால் பலருக்கும் அறிந்த முகமாக ரூபி குமாரி மாறினார். இவரின் கற்றல்முறை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் வரை ஈர்க்க, பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. பீகாரின் பங்கா எனும் சிறுநகரில் பிறந்தவர் ரூபிகுமாரி. முதல் தலைமுறையாக கல்வி கற்க விரும்புபவர்களுக்கு எளிய முறையில் கணிதத்தை பயிற்றுவிக்க நினைத்தார். ஆனால் இந்த எண்ணம் அவ்வளவு எளிதில் நிறைவேறவில்லை. 250 மாணவர்களுக்கு தனது புதுமையான கற்றல் முறையில் கற்பித்தார்.  “நான் விளையாட்டு மூலம் பாடங்களை சொல்லிக்கொடுத்தது மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பிடிக்கவி

சிறந்த அறிவியல் நூல்கள் 2019!

படம்
சிறந்த அறிவியல் மற்றும் இயற்கை நூல்கள் 2019 The Weil Conjectures  Karen Olsson இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கணிதவியலாளரான ஆண்ட்ரே வெல் மற்றும் தத்துவவியலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சைமன் வெல் ஆகியோரை நினைவுகூரும் நூல். கணிதமும், தத்துவமும் இணைந்து பயணிக்கும் நூல் வாசிப்பதற்கு புதுமையாக உள்ளது.  Something Deeply Hidden Sean Carroll பால்வெளி பற்றி பல்வேறு உண்மை மற்றும் வதந்திகள் நிலவுகின்றன. அங்குள்ள சூழல்கள், விதிகள், செயல்பாடுகளை இயற்பியலாளர் சீன் காரல் எளிமையாக புரியும்படி விளக்கி எழுதியுள்ளார். Superheavy Kit Chapman தனிம வரிசை அட்டவணையில் உள்ள அடர்த்தியான நிலையில்லாத தனிமங்கள் எப்படி நம் வாழ்க்கையை மாற்றின என்று ஆசிரியர் கிட் சாப்மன் விளக்கியுள்ளார். இதில் இடம்பெறும் தனிமங்கள் எப்படி இயற்கையில் கிடைக்கின்றன என்று கூறுவது சுவாரசியமாக உள்ளது. The NASA Archives: 60 Years in Space  Piers Bizony, Andrew Chaikin and Roger விண்வெளியில் சாதனை படைத்து வரும் நாசாவின் அறுபது ஆண்டு நிகழ்ச்சிகளை ஆவணமாக்கி இருக்கிறார்கள். 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், ஓ

கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் சம்பார்க் பௌண்டேஷன் அமைப்பு!

படம்
வினீத் நாயர், நிறுவனர் சம்பார்க் அமைப்பு   கிராமப்புற தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  கல்வியில் இந்திய அரசு கூடுதலாக கவனம் செலுத்தினாலும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் குறைவாகவே உள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்கத் தெரியவில்லை.  99க்கு பிறகுள்ள எண்களை சொல்லுவதில் தடுமாற்றம் உள்ளது. தொடக்க கல்வியில் வாசிப்பு, எழுத்தில் இத்தனை தடுமாற்றங்களை மாணவர்கள் கொண்டிருந்தால், அவர்கள் மேல்நிலைக்கல்வியில் எப்படி சாதிப்பார்கள்? இதில் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் பழமையான கற்றல்முறைகளின் பங்கும் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 36 சதவீதம் மாணவர்கள் தொடக்க கல்வியோடு நின்றுவிடுகிறார்கள். இதைத் தடுக்க தொழில்நுட்பத்தோடு இணைந்த ஆசிரியப்பணி ( Technology-driven pedagogy) தேவைப்படுகிறது. ஆங்கிலவழியில் மாணவர்களுக்கு கற்பித்தாலும்,கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அம்மொழியை எப்படி பயிற்சி செய்வார்கள்? மொழிப்பாடங்களை திறம்பட கற்றுத்தரும் திறன் ஆசிரியர்களுக்கு இல்லையென

அபாகஸ் மூலம் கணிதம் வளருமா? - ஜப்பானில் புதிய முயற்சி!

படம்
கணிதத்தில் வெல்ல அபாகஸ் பயிற்சி! ஜப்பான் மாணவர்கள் தேசிய அளவிலான கணிதப்போட்டிகளில் வெற்றிபெற அபாகஸ் பயிற்சியை செய்து வருகின்றனர். உலகம் முழுக்கவே கணிதம் பற்றிய அறிவைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். அதேசமயம் மரபான பல்வேறு கணிதப்பயிற்சிகளை கைவிட்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் அபாகஸ். இதனை இன்னும் ஜப்பான் மாணவர்கள் கைவிடாமல் பயின்று வருகின்றனர். அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கணிதப்போட்டியில் அபாகஸ் பயிற்சியின் திறன் உணரப்பட்டது. போட்டியில் கேட்கப்பட்ட கணிதக்கேள்வி ஒன்றுக்கு விடை ட்ரில்லியனில் வந்தது. இதனைக் கணினி, கால்குலேட்டர் எனத் தேடி எழுதுவதில்  தடுமாற்றம் இருந்தது. அப்போது அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவர்கள் எளிதாக விடை கண்டுபிடித்து எழுதினர்.  ஜப்பானில் 1970 ஆம்ஆண்டு கற்றுத்தரப்பட்ட அடிப்படை கணிதப் பயிற்சி அபாகஸ். பின்னர் அரசுப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இன்று தனியார் பள்ளிகளில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனைக் கற்றுவருகின்றனர். கூடுதலாக, கணிதத் திறனுக்கான பயிற்சியாக அபாகஸ் மாறிவிட்டது. ஜப்பானில் அபாகஸை சோரபன் (Soroban) என்று குறிப்பிடுகின

பிட்ஸ் - பை என்பதன் மதிப்பு!

படம்
பை எனும் எண்ணின் மதிப்பை வேலூரைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா, 70 ஆயிரம் எண்களை நினைவுபடுத்திச் சொல்லி கின்னஸ் சாதனை செய்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச்  21 அன்று இச்சாதனையை இவர் செய்தார். இவருக்கு முன்பாக, சாவோ லூ என்ற சீனர் 67,780 எண்களை மனப்பாடாக கூறியதே சாதனையாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு அகிரா ஹராகுசி என்பவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் 1,17,000 பை எண்களை மனப்பாடம் செய்து கூறினார் என்கிறது தி கார்டியன் பத்திரிகை.  இப்படி எண்களை நினைவுபடுத்தி கூறுவதை கணிதத்தில் பைபிலாலஜி (piphilology) என்று குறிப்பிடுகின்றனர். பை என்ற எண்ணுக்கான மொழியை கணிதவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு பிலிஸ் (Pilish ) என்று பெயர். 2010 ஆம் ஆண்டு மைக் கீத் என்பவர் இது பற்றி நாட் எ வேக் என்ற நூலை இம்மொழியில் எழுதினார். நன்றி: லிவ் சயின்ஸ்

ராமானுஜன் இயந்திரம் - இஸ்ரேல் ஆய்வாளர்கள் சாதனை!

படம்
கணிதமேதை ராமானுஜனின் கணிதம், இன்று கணினித் துறைகளிலும் பயன்பட்டு வருகிறது. 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து தானாகவே கணிதத்தை பரிசோதனை செய்து அதில் சாதனைகளைச் செய்தவரை இந்தியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இங்கிலாந்து அரவணைத்துக்கொண்டது. தற்போது அவரின் கணிதம் மூலமாக பை மற்றும் இ என்ற நிலை எண்களுக்கான விளக்கங்கள் கிடைத்துள்ளன. 1914 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கல்வி கற்க சென்றார் ராமானுஜன். அங்கு அவருக்கு பேராசிரியர் ஹார்டி என்பவர் அறிமுகமானார். இவர் மூலமே ராமானுஜனின் பல்வேறு தியரங்கள் மக்களுக்கு அறிமுகமானது. ராமானுஜன் தானாகவே கற்று போட்ட பல்வேறு கணக்குகள் சரியானவை என்று பின்னர் உறுதியாயின. ஆனால் அவர் பிறரை ஒப்புக்கொள்ள வைக்கும் முறையை கடைபிடிக்கவில்லை என்கிறார் வார்விக் பல்கலையைச்சேர்ந்த ஆசிரியரான செலிமர். இதுபற்றி இஸ்ரேல் விஞ்ஞானிகள் ராமானுஜன் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவர்கள் செய்துள்ளது சோதனை கணிதம் என்ற முறையில் நல்ல முயற்சிதான். ஆனால் இது புதிதான யோசிக்கும் முறை அல்ல என்கிறார்  செலிமர். நன்றி: நியூ சயின்டிஸ்ட்

கணிதம் மீது நம்பிக்கை வைத்து வென்றேன்!

படம்
1980 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆமி வில்கின்சன், ஹார்வர்டு பல்கலையில் இளங்கலை படித்தார். நான் அங்கு படித்தபோது, பெண் பேராசிரியர்களே கணித துறையில் இல்லை. நான் அங்கு ஆசிரியராக பணியாற்றத் தொடங்கியபோது, முதலில் கடினமாக இருந்தது. பின்னாளில், எனக்கு என்மீது நம்பிக்கை வரத்தொடங்கிய பின்தான் வகுப்புகளில் கற்பித்தலை அனுபவித்து செய்யத் தொடங்கினேன் என்று பேசினார் வில்கின்சன். இத்துறையில் கணிதவியலாளராக நீங்கள் கண்டறிய கேட்கும் கேள்விகள் என்ன? இப்போது சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வட்டப்பாதை குறித்தும், அது நிலையானதா, என்பது போன்ற கேள்விகளை கேட்டு விடைகளை ஆராயலாம். பரிணாம வளர்ச்சியில் உருவான சூரியக் குடும்பத்தைப் பற்றிய பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஆராய்ச்சி செய்ய முடியும். கணிதவியலாளராக பணியாற்ற ஒருவரின் ஆளுமை முக்கியப் பங்காற்றுகிறதா? நிச்சயமாக. நெகிழ்வுத்தன்மை கொண்டிருப்பது இப்பணியில் அவசியம். கணித ஆராய்ச்சியில் சவால்களைச் சந்திக்கும் நிலையில் பொறுமை தேவை. இயல்பாகவே கணித ஆராய்ச்சியாளர்களுக்கு குறிப்பிட்ட தர நிலையில் இருப்பார்கள். அதனையே தம் ஆராய்ச்சியில் எதிர்பார்ப்பார்கள். இ

கணிதம் நடைமுறைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவுமா?

படம்
நேர்காணல் "கணிதம் நடைமுறை பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவும் " அமெல் பென் அப்டா (AMEL BEN ABDA)  துனிசியா நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர் அமெல் பென் அப்டா, ENIT நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கணிதத்தின் இன்வர்ஸ், ரெசிப்ரோசிட்டி கேப் ஆகிய கணிதப்பிரிவுகளில் பங்களித்து வருகிறார். கணித ஆராய்ச்சி குறித்து ஊக்கத்தூண்டுதல்கள் உங்கள் நாட்டில் உண்டா? நான் பதினொரு வயதில் கணிதம் மீதான ஈர்ப்பை உணர்ந்தேன். அடுத்த ஆண்டே கணிதத்தை என் வேலைக்கானதாக தீர்மானித்து அதில் கவனம் செலுத்த தொடங்கினேன். 1956 ஆம் ஆண்டு துனிசியா நாட்டுக்கு விடுதலை கிடைத்தபிறகு, கல்வியில் கவனிக்கத்தக்க முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. முதல் அதிபரான ஹபீப் பர்ஜியூபா, கல்விக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியுள்ளார். ஆனால் இதில் மாணவிகளுக்கான, பெண்களுக்கான தனி கல்வித்திட்டங்கள் கிடையாது. இங்கு மிகச்சிறந்த கணிதப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. துனிய கணிதவியலாளர்கள் மேல்படிப்பிற்காக பிரான்சுக்கு சென்று கல்வி கற்று நாடு திரும்புகின்றனர். இதனால் துனிசியாவில் சிறந்த கணிதவியலாளர்களின் குழு உருவா

பெண்களுக்குத் தேவை வாய்ப்புகள்தான் கருணை அல்ல!

படம்
நேர்காணல் வாய்ப்பு கொடுத்தால் பெண்களாலும் சாதிக்கமுடியும்! அலெசாண்ட்ரா செலெட்டி (ALESSANDRA CELLETTI) இத்தாலியைச் சேர்ந்த கணிதவியலாளர் அலெசாண்ட்ரா செலெட்டி, ரோம் டோர் வர்கட்டா பல்கலையில் கணிதவியலாளராக பணியாற்றி வருகிறார். அலெசாண்ட்ரா, டைனமிக்கல் சிஸ்டம்ஸ், காம் தியரி, செலஸ்டிகல் மெக்கானிக்ஸ் (வளிமண்டல இயக்கவியல்) ஆகி பங்களிப்புக்காக பாராட்டப்பெற்றவர். ஆராய்ச்சிக் கட்டுரைகளோடு பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். கணிதத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்கள்.உங்களது பள்ளிப்பருவத்திலிருந்தே கணிதம் மீது ஈர்ப்புடையவராக இருந்தீர்களா? எனக்கு இப்போது அந்த காலத்தை நினைவுகூர்ந்து பார்த்தால், ஐந்து வயதில் உறவினர் ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. உனக்கு என்னவாக ஆசை என்று கேட்டார். நான் கணிதம் படிக்கப்போகிறேன் என்று கூறியது மங்கலாக நினைவு இருக்கிறது. செலஸ்டிகல் மெக்கானிக்ஸ்என்று அன்று சொல்லியிருக்கமுடியாது. கணிதம் இல்லாமல் இளம் வயதில் அறிவியல் குறும்படங்களை எடுக்கும் ஆசை தோன்றியது. நீங்கள் அறிவியல் பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் செயல்படுகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம

கணிதத்தில் சைகைமொழி!

படம்
கணிதத்தில் சைகை மொழி டாக்டர்  ஜெஸ் போலேண்ட் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியலாளர், கணிதத்தை சைகை மொழி மூலமாக விளக்குகிறார். யூடியூப் வீடியோக்களின் வழியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இவர் உதவி வருகிறார். அவரிடம் செய்த நேர்காணலின் சுருக்கம் இது. நீங்கள் கணிதத்தின் முக்கியமான பதங்களை இணையத்தில் சைகைமொழி மூலம் விளக்க முயற்சித்துள்ளீர்கள். இதற்கான ஆர்வம் பிறந்தது எப்படி? நான் தற்போது மான்செஸ்டர் பல்கலையிலுள்ள அறிவியல் கழகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு பொருள் மற்றும் சாதனங்கள் துறை ஆசிரியராக உள்ளேன். நான் டெராஹெர்ட்ஸ் கதிர்வீச்சு குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஒற்று மின்னணுப் பொருட்கள் (optoelectronic), செமி கண்டக்டர்  குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். நான் செவித்திறன் குறைபாடு உடையவள். இதன் காரணமாக நான் பயன்படுத்தும் கருவியோடு பிறந்ததிலிருந்து போராடி வருகிறேன்.  திடீரென என் கேட்கும் திறன்கள் குறைய, நான் பிரிட்டிஷ் சைகைமொழியை கற்கத்தொடங்கினேன்.  அறிவியல் வார்த்தைகளுக்கான சைகைமொழி குறியீடுகளைக் கண்டுபிடித்து பயன்படுத்த தொடங்கினேன்.  ஸ்காட்டி

பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய சவால்கள் உண்டு!

படம்
Add caption நேர்காணல் டாக்டர். லீ ஜிங், விக்டோரியா பல்கலைக்கழகம்(புள்ளியியல்துறை) புள்ளியியல் துறை மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? கணிதத்துறையில் மாணவராக படித்துக்கொண்டிருந்தபோது உளவியலாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் புள்ளியியல் துறையில் பல்வேறு சோதனைகளை செய்துகொண்டிருந்தேன். கணித தியரி மற்றும் சமன்பாடுகளின் மீதான ஆர்வம் பெருகியிருந்தது. எனக்கு புள்ளியியல் துறை சவாலானதாகவும், அத்துறை சார்ந்தவர்களின் படைப்புகளைக் காண்பதிலும் பேரார்வம் கொண்டிருந்தேன். நீங்கள் என்னென்ன துறைகளில் ப்ராஜெக்டுகளைச் செய்திருக்கிறீர்கள்? நான் நியூரோஇமேஜ் என்பதை ப்ராஜெக்டாக எடுத்து செய்தேன். இதன்மூலம் அதிகளவிலான தகவல்களை, எப்படி கையாள்வது அதனை தகவல் அறிவியல் துறையில் எப்படி பயன்படுத்துவது என கற்றுக்கொண்டேன். கடந்தாண்டு பல்வேறு ஆராய்ச்சி தலைப்புகளில் ப்ராஜெக்டுகளை முயற்சித்தேன். அதில் இரண்டு ஆய்வுகள், பத்திரிகைகளில் வெளியிடப்பட உள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் நீங்கள் என்ன சாதித்திருப்பீர்கள்? நான் வெற்றிகரமான ஆராய்ச்சியாளராக இருப்பேன் என்று நினைக்கிறேன். பல்வேறு ஆய்வு

42 என்ற எண்ணின் ஸ்பெஷல் என்ன?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி 42 என்ற எண்ணுக்கு என்ன சிறப்பு? தொன்மைக்காலத்தில் எகிப்தியர்கள் 42 என்ற எண்ணை சாத்தானாக நினைத்தனர்.  ஆன்மாவுக்கான தீர்ப்பை இவை எழுதுகின்றன என்பது அவர்களின் பயம். கணித ஒலிம்பியாட்டில் 42 முக்கியமான ஸ்கோர். பை என்ற எண்ணின் அடுத்த இடத்தில் 424242 என எழுதிப் பார்த்தால், 242, 422 என்ற எண்கள் இடம்பெறும்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்