இடுகைகள்

குடும்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பத்தின் மரபணு தொடர்பில்லாத, ஆண்மையற்ற ஒருவனின் வாழ்க்கைப் போராட்டம்! ஸ்ட்ராங்கஸ்ட் அபாண்டட் சன் - மங்கா காமிக்ஸ்

படம்
  ஸ்ட்ராங்கஸ்ட் அபாண்டட் சன் 200+--- (சீனா) மங்கா காமிக்ஸ்   தொன்மைக் காலத்தில் நடைபெறும் போரில்,   வலிமையான   இனக்குழு, ஷே லுயான் எனும் இனக்குழுவைத் தாக்கி முழுமையாக அழிக்கிறது. இந்த தாக்குதலில் ஒரு மாணவன் மட்டும் தாக்கப்பட்டாலும் உயிரோடு இருக்கிறான். இந்த போர் நடைபெற்றது கூட அவன் மாஸ்டர் சம்பந்தப்பட்டதுதான். அவனது மாஸ்டராக உள்ள பெண்மணியை, இன்னொரு இனக்குழுவில் உள்ளவர் மணக்க விரும்புகிறார். ஆனால் மாஸ்டருக்கு விருப்பமில்லை. எனவே, திடீர் போர் நடத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறது. அதாவது அதிகாரம் உள்ள ஆண் மணம் செய்ய விரும்பினால, பெண் தனது உடலை விட்டுக்கொடுத்துவிடவேண்டும். அப்படி இணங்காவிட்டால் அவளையும் அவளைச் சார்ந்தவர்களையும் கொல்வது சீன கலாசார வழக்கம்.   இந்த வகையில்,   ஒட்டுமொத்த மாஸ்டர் சார்ந்த இனக்குழுவே இறந்துவிடுகிறது. தனது, மாணவனுக்காக மாஸ்டர் முன்னே நின்று தனது உயிரைவிடுகிறார். மாணவன் காப்பாற்றப்பட்டாலும் அவனது ஆன்மா முன்ஜென்ம நினைவுகளோடு நவீன உலகிற்கு வருகிறது. பொதுவாக இப்படி அமைக்கப்படும் கதையில், நவீன வாழ்க்கை வாழும் மனிதர், சோங்கியாக, பலவீனமாக, நிறைய அவமானங்களை சந்திப்

மகனின் திருமணத்தின்போது அம்மாவின் அந்தரங்கம் வெளியே கசிந்தால்... மஜா மா - மாதுரி தீட்சித்

படம்
  மஜா மா இந்தி மாதுரி தீட்சித், கஜராஜ் ராவ், சைமன் சிங்   அமெரிக்காவில் வேலை பார்க்கும் இளைஞருக்கு காதல் பூக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் காதலியின் பெற்றோர் வசதியானவர்கள். அதேசமயம் பையன் மட்டுமல்லாமல் அவன் மணம் செய்துகொள்ளும் குடும்பம் பாரம்பரியமாக கலாசாரம் கொண்டதாக அமைய வேண்டும் என பெண் வீட்டார் நினைக்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் மணமகனின் அம்மா லெஸ்பியன் என்ற உண்மை தெரிய வருகிறது.. இதனால் நடக்கும் சமூக, குடும்ப களேபரங்கள்தான் கதை. எல்ஜிபிடியினரின் கதையை தைரியமாக எடுத்து இயக்கி அவர்களின் பிரச்னைகளை கூற முனைந்த இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள். பல இயக்குநர்களும் பிற்போக்கில் புராணம், இட ஒதுக்கீடு, வன்முறை என செல்லும்போது சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் உணர்ச்சிகளை, வாழ்க்கையை சொல்ல முயன்றிருக்கிறார் மஜா மா இயக்குநர். இந்த படமே, மாதுரி தீட்சித்தின் நடிப்பை நம்பியுள்ளது. அவரும் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அப்பா, மகன், மகள் என தான் பலமென நம்பிய குடும்ப உறுப்பினர்கள் பலரும் அவர்களின் சுயநலத்தை மட்டுமே மனதில் வைத்து நடந்துகொள்வதைப் பார்த்து விரக்தி கொள்க

இரு குடும்பங்களின் பகையைத் தீர்க்கும் காரியஸ்தன் - காரியஸ்தன் - திலீப், அகிலா சசிதரன், ஹரிஶ்ரீ அசோகன்

படம்
  காரியஸ்தன் - மலையாளம் -திலீப் அகிலா சசிதரன் - திலீப் - காரியஸ்தன் காரியஸ்தன் திலீப், அகிலா சசிதரன், சுரேஷ் வெஞ்சரமூடு, ஹரிஶ்ரீ அசோகன் நட்பாக பழகிய இரு குடும்பங்கள் பிரிந்துகிடக்கின்றன. குடும்பங்கள் பிரிவதற்கு காரணமான ஒருவரே பின்னாளில் அதை ஒன்றாக சேர்க்க முயல்கின்றார் ஒருவர். அவ்வளவே கதை. வடக்கு, கிழக்கு என இரு குடும்பங்கள் முதலில் சுவர்களே இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. இரண்டு குடும்பங்களுமே மூடநம்பிக்கை கொண்ட ஆணாதிக்க வாதி குடும்பங்கள்தான். தங்கள் குடும்பத்திற்குள் திருமண உறவு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் கிழக்கு குடும்பத்தைச் சேர்ந்த மூத்தபிள்ளைக்கு, ஏற்கெனவே ஒரு காதல் இருக்கிறது. ஆனால்,அவரது அப்பா சொன்னதால் அவரது பேச்சையும் உடனே தட்டமுடியவில்லை. டௌரி பணமாக பத்து லட்சத்தையும் பெண் வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் ராஜன் என்ற கல்யாண மாப்பிள்ளை, சுசீலன் என்பவரிடம் டௌரிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, வடக்கு குடும்பத்திடம் பணத்தை சேர்க்குமாறு சொல்லிவிடுகிறார். பிறகு, கல்யாண வீட்டிலிருந்து தப்பி, தனது காதலியோடு ரயிலில் ஏறப்போகிறார். இவர்களது காதலை அறிந்து ராஜனுக

தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நண்பனைக் கண்டுபிடித்து குடும்பத்தின் திருட்டு பழி நீக்கும் வளர்ப்புமகன் - கல்யாண

படம்
  கல்யாண சௌகாந்திகம் மலையாளம்  திலீப், திவ்யா உண்ணி, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார் முதல் காட்சியில் ஜெயதேவ் சர்மா(திலீப்), சகோதரர்கள் இருவரிடமிருந்து தப்பி ஓடுகிறார். வைத்தியர் ஒருவரிடம் வேலை செய்யும் நண்பரிடம் அடைக்கலம் தேடுகிறார். ஆனால் அவரிடம் சகோதரர்கள் வந்து ஜெயதேவைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவர் அவனைப் பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர்கள் நம்புவதில்லை. இதனால் அவர், ஜெயதேவை தப்பிக்க வைக்க வேறு மார்க்கம் தேடுகிறார். அப்போதுதான் வைத்தியர், அடிக்கடி வணங்கும் வைத்திய குரு ஒருவரின் சீடராக நடிக்க வைக்கலாம் என முடிவெடுக்கிறார். இதன்மூலம், வைத்தியரிடம் கணக்கு வழக்கில் மோசடி செய்த பிரேமதாஸ் என்பவரும் ஜெயதேவிற்கு நட்பாகிறார். அவர், வைத்தியச் சாலையில் உள்ள வசுமதி என்ற பெண்ணை விரும்புகிறார். ஜெயதேவ், வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் பேத்தியான ஆதிரையின் பல்வேறு பிரச்னைகளை சொல்லி தன்னை நம்ப வைக்கிறார். ஆதிரைக்கும், ஜெயதேவ் தனது பிரச்னை தொடர்பாக தேடி வரும் ஆளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதுதான் மீதிக்கதை. படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்கவேண்டாம். அப்படி பார்த்தால் திலீப்பின

குற்றங்களை அடையாளம் காண்பதில் பயன்படும் பல்வேறு கோட்பாடு முறைகள்

படம்
  குற்றத்தை எப்படி புரிந்துகொள்வது, இதில் பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் உள்ளன. உளவியல், சமூகவியல், பொருளாதாரம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். அதற்கு ஏற்ப அவரவர் துறை சார்ந்த கருத்துகளைச் சொல்லி குற்றங்களை பிறருக்கு புரிய வைக்கலாம். சமூகவியல் அடிப்படையில் ஒருவரின் சமூகம், அவரின் இனக்குழு, குடும்ப நிலை, வேலை செய்பவரா, வேலை கொடுப்பவரா என்றெல்லாம் பகுத்தாய்ந்து  குற்றத்தின் அடிப்படையை நோக்கம் என்ன என்று கண்டறியலாம். பத்தொன்பதாவது நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் பெயர், சீசர் லாம்ப்ரோஸா. இவர், பரம்பரையாக வரும் குணங்கள்  காரணமாக ஒருவர் தவறுகளை செய்கிறார். இப்படி தவறு செய்யும் குணம் நட்பு மூலமாகவும் இன்னொருவருக்கு பரவலாம். குடிநோயாளிகள் நிறைய குற்றங்களை செய்கிறார்கள் என கருத்துகளை எழுதினார். பரவலாக்கினார். வறுமையான சூழ்நிலை, கல்வி அறிவின்மை ஆகியவை குற்றங்களுக்கு முக்கியமான காரணங்கள் என்று கூறினார். மூன்றில் ஒரு பங்கு குற்றவாளிகள் பிறக்கும்போது குற்றவாளிகள் என்று எழுதினார். பிற்காலத்தில் லாம்ப்ரோஸாவின் ஆய்வுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. குற்றங்களை செய்யும்

நல்லவர், கெட்டவர் யார், எங்கிருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கும் கிராமத்து சிறுமி -

படம்
    தி ஸ்கூல் ஆஃப் குட் அண்ட் ஈவில்   ஒரு கிராமம். அங்கு சோபியா என்ற சிறுமியும், அகதா என்ற சிறுமியும் நண்பர்களாக வாழ்கிறார்கள். இதில் சோபியாவுக்கு கிராமத்தில் வாழ்வதில் விருப்பமில்லை. தனித்துவம் கொண்டவள் என அவளது அம்மா சொன்னது சோபியாவுக்கு அடிக்கடி மனதில் ஒலிக்க, பகல் கனவு கண்டபடி வாழ்கிறாள். கிராமத்திலுள்ள சுடுகாட்டின் அருகில் வாழ்கிறாள் அகதா. அவளது அம்மா, மந்திரவாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை மந்திரவாதி ஆக்குவதுதான் அவளது லட்சியம்.   ஆனால் அகதாவுக்கு   அமைதியாக வாழ்ந்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நேரத்தில் சோபியாவுக்கு புத்தக கடையில் உள்ளவர், மந்திரப் பள்ளி பற்றி சொல்லுகிறார். எனவே, அவள் தான் எப்படியாவது மந்திரப்பள்ளிக்கு சென்று இளவரசியாகி சந்தோஷமாக இருக்கவேண்டும் என நினைக்கிறாள். இதை வேண்டுதல் மரத்தில் எழுதி வைக்கிறாள். ஆனால் அகதாவுக்கு சோபியா தன்னை விட்டு செல்வதில் விருப்பமில்லை. கிராமத்தில் அவள்மீதும், அவளது அம்மா மீதும் பாசம் காட்டுபவள் சோபியா மட்டும்தான். பிறர் அவளை மந்திரவாதி என்று சொல்லி தீயிட்டு எரிக்க நினைக்கிறார்கள். சோபியா எங்கு சென்றாலும் தானும் வருவேன் எ

குடும்பத்துடன் கொலை செய்பவர்களின் மனநிலை

படம்
  1870ஆம் ஆண்டில் ஹெல் பெண்டர்ஸ் என்ற புகழ்பெற்ற கொலைகார குடும்பம் இருந்தது. இப்படி நான் கூறுவது 1873க்குப் பிறகுதான். அதற்கு முன்வரை ஆன்மிக அனுபவம் என்று சொல்லி பெண்டர் குடும்பம் வழிப்போக்கர்களை வீட்டுக்கு அழைத்து சோறிடுவார்கள். பிறகு சுத்தியலை வைத்து மண்டையை சிதறடித்து ஆட்களைக் கொன்று அவர்களின் பணத்தை சுருட்டுவதுதான் பெண்டர்களின் பாணி. உடல்களை பூத்தோட்டத்தில் புதைத்து விடுவார்கள்.   மருத்துவர் வில்லியம் என்பவரின் தம்பி, பெண்டரின் வீட்டிற்கு கேட்டியின் ஆன்மிக அனுபவத்தை பெற வந்தார். வந்தவர் அப்படியே சுத்தி மூலம் அடிக்கப்பட்டு முக்தி அடைந்துவிட்டார். இதை தெரியாத மூடரான வில்லியம் தம்பியைக் காணவில்லை என புகார் கொடுத்துவிட்டார். அந்த நேரம் மழை சீசன் வேறு. மழைபெய்து பூத்தோட்டம் முழுக்க இளகிப்போக புதைத்த பிணங்கள் வெளியே வந்துவிட்டன. காவல்துறை பெண்டரின் குடும்பத்தை பிடிக்கும்   முன்னேர அனைவரும் தப்பி விட்டார்கள். பத்தாயிரம் டாலர்களுக்கு மேல் ஆட்களைக் கொன்று சுருட்டியது பெண்டர் குடும்பம் என காவல்துறை அறிக்கை வெளியிட்டது.   கொலைக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் கிடையாது. கொலை தொடர்

குடும்பங்களை அழிக்கும் டெர்மினேட்டர் - அனடோலி

  மனிதர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால் சூழ்நிலை கொந்தளிப்பாக மாறும்போது அவர்களின் உள்ளே உள்ள ஆவேசம் வெளியே தெரியவரும். காதலோ, நட்போ, தொழிலோ ஏதோ ஒருவகையில் ஒருவருக்கு ஏமாற்றம் தருகிறது. சில சமயங்களில் ஒட்டுமொத்த உலகமே தன்னை வஞ்சித்ததாக ஒருவர் உணரும்போது வஞ்சகர் உலகத்தை பழிவாங்க குற்றங்களில் ஈடுபடுகிறார். இந்த வகையில் கோபம், வன்மம், பழிக்குப்பழி, உடலுறவுக்கான சாகச உணர்வு ஆகியவை மனிதர்களை பெரும்பாலும் கொலைகளை செய்ய வைக்கிறது. பாகிஸ்தானின் லாகூரில் ஜாவேத் இக்பால் இப்பபடிப்பட்ட மனிதர்களில் ஒருவர். தெருவில் வாழும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு உணவு, இருப்பிடம் தருகிறேன் என கூட்டிச் சென்று கொன்று அமிலத்தில் கரைத்துவிடுவார். இரு சிறுவர்களை அடித்ததாக அவர் மீது காவல்துறை புகார் இருந்தது. ஆனால் காவல்துறை அதை தீர விசாரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் நூறு தாய்களை அழவைக்கும் செயலை செய்தார். ஆம். நூறு சிறுவர்களைக் கொன்று உடலை அமிலத்தில் கரைத்து அந்த நீரை பாதாள சாக்கடையில் விட்டார். நான் நினைத்தால் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களை கொன்றிருக்க முடியும். ஆனால் என் மனதில் நூறு தாய்களை அழ வைக்கவேண்டும்

சமூகத்தில் தனியாக வாழ்வது சாத்தியமா?

படம்
அகம் புறம்  ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   கே.ஒருவர் ஏன் சமூகத்தில் வாழ வேண்டும், அவர் தனியாகவே வாழ முடியுமே? ப. உங்களால் தனியாக வாழ முடியுமா? கே.நான் சமூகத்தில் வாழ்வதற்கு ஒரே காரணம், எனது பெற்றோர் இங்கு வாழ்வதுதான்.. ப. உங்களுக்கு வேலை கிடைத்து, நல்ல வாழ்க்கை அமைந்தால் நீங்கள் சமூகத்தில் வாழ மாட்டீர்களா? நீங்கள் தனியாக வாழ முடியும் என நினைக்கிறீர்களா? நீங்கள் உண்ணும் உணவு, அணியும் உடை ஆகியவற்றுக்காக இன்னொருவரை சார்ந்திருக்கிறீர்கள். இங்கு யாரும் தனியாக வாழ்ந்துவிடமுடியாது. தனியாக இருப்பது என்பது ஒருவர் இறக்கும்போது மட்டுமே நடக்கும். வாழும்போது வாழ்க்கை என்பது உங்கள் அப்பா, அண்ணன், வணிகர், பிச்சைக்காரர் என யாராவது ஒருவரைச் சார்ந்துதான் அமையும். நீங்கள் இந்த உறவுகளுக்குள் உள்ள முரண்பாடுகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. உங்களுக்குள் எந்த முரண்பாடும் எழவில்லையென்றால், நீங்கள் தனியாக வாழ்வது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. கே. நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த சமூகத்தில் நாம் சுதந்திரமாக இருக்க முடியாதா? ப. நீங்கள் மனிதர்கள் கொள்ளும்

சமூகம் என்பது என்ன?

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. சமூகம் என்பது என்ன? ப. சமூகம் , குடும்பம் என்றால் என்ன என்று பார்ப்போம். இதை நாம் படிப்படியாக கண்டுபிடிக்க முயல்வோம். எப்படி சமூகம் உருவாக்கப்பட்டது, குடும்பம் என்றால் என்ன இதுதான் எனது குடும்பம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.   இந்த அமைப்பில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை ஆகியோர் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், உடை, நகைகள் என தனியாக உள்ளன. இதைப்போலவே பிறரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். குடும்பம் என்பது ஒருவரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கானது. அப்பா, மகனைப் பாதுகாப்பார். அவரின் சொத்துக்களும் அப்படித்தான் குடும்பத்தினரால் பாதுகாக்கப்படும்.   இப்படித்தான் குடும்ப அமைப்பு செயல்படுகிறது. உங்களது குடும்பத்தைப் போலவே தான் பிறரது குடும்பமும் உள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இன்னொரு வெளி நபர் வரக்கூடாது என்பதற்காக சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பம், அதிக சொத்து, அதிக வாகனங்கள்,   உடைகளை என வாழ்கின்றனர். இவர்கள் பிற குடும்பங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகின்றனர். மேலும், சட்டங்களை

குடும்ப பாசத்தால் வெட்டியாக சுற்றும் நாயகன் காட்டும் வீரம்! ஆறடி புல்லட் - கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ்

படம்
  ஆறடி புல்லட்  இயக்கம் பி கோபால் இசை மணி சர்மா  கோபி சந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், அபிமன்யூசிங் கட்டுமானத் தொழிலை சொந்தமாக தொடங்க நினைக்கும் இளைஞன், கோபி சந்த். ஆனால் அப்பா அவன் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இதனால் அவன் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். அதுவும் கூட அப்பாவின் சிபாரிசில்தான். அங்கு சென்றாலும் கூட தவறாக வேலை செய்பவர்களை வாயால் திட்டி கையால் அடித்து காலால் உதைக்கிறான். இதனால் வேலை போகிறது. என் குடும்பம்தான் எனக்கு முக்கியம் என வந்துவிடுகிறான். இப்படி இருக்கும் சூழலில் விஜயவாடாவில்  உள்ள காசி என்ற ரவுடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் அவனுக்கும் அவன் நேசிக்கும் குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.  படத்தில் காமெடி என்பது பிரம்மானந்தம் வரும்போதுதான். அதுவரை நாயகனே சிறியதாக காமெடி செய்ய முயல்கிறார். அதெல்லாம் பெரிதாக எடுபடவில்லை.  குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் நாயகனின் லட்சியம். அதற்காக சுய தொழில் செய்ய நினைக்கிறான். ஆனால் குடும்பத்திடம் அவனுக்கான பாசம் எப்படி உள்ளது என்பதைக் காட்ட ஆக்சன் காட்சிகள்தான் ஒரே சாட்சி. மற்றபடி வேற

ஆண்களே பிடிக்காத காதலியின் தாயாரின் மனதை மாற்றும் காதலனின் மெகா குடும்பம்! - ஆடவாலு மீக்கு ஜோகார்லு - சர்வானந்த், ராஷ்மிகா

படம்
  ஆடவாலு மீக்கு ஜோகார்லு இயக்கம் கிஷோர் திருமலா  இசை டிஎஸ்பி  சர்வானந்த், ராஷ்மிகா மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள்  கணவரால் ஏமாற்றப்பட்டு ஆண்களே ஏமாற்றுக்கார ர்கள் என  தள்ளிப்போகும் காதலியின் தாயின் மனதை மாற்றும் காதலனின் கதை.. சிரஞ்சீவியின் குடும்பம் கூட்டு குடும்பமாக வாழ்கிறது. தாய் ஆதி லட்சுமியின் தங்கைகள் அனைவருமே ஒன்றாக கூடி வாழ்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே ஆண் வாரிசு என்றால் அது சிரஞ்சீவிதான். இதில் பத்மாவதி என்ற சித்திக்கு மட்டும் குழந்தைகள் கிடையாது.  அவளுக்கு சிரஞ்சீவி தான் எல்லாமே. ஏனென்றால் அனைவருமே தங்கள் குடும்பத்தின் ஆண் வாரிசான சிரஞ்சீவி மேல் அன்பை பொழிகிறார்கள். இப்படி வளருபவனுக்கு திருமணம் என்று வரும்போது இந்த பெண்களே அதை பல்வேறு குறைகள் சொல்லி தட்டிக்கழிக்கிறார்கள். முதலில் பரவாயில்லை என நினைக்கும் சிரஞ்சீவி பிறகு வருத்தப்பட ஆரம்பிக்கிறான். பிறகு இவர்கள் பெண்களை வேண்டாம்  என்று சொன்ன நிலை மாறி அவர்கள் சிரஞ்சீவியை மறுக்கும் நிலை உருவாகிறது. கூடுதலாக சிரஞ்சீவி சில பெண்களைச் சென்று பார்த்தால்  அவர்களுக்கு நல்ல வரன்கள் குதிர்கிறது என பேச்சும்  ஊருக்குள் க