இடுகைகள்

விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலதாமதம் ஆன காதலை மீட்டெடுக்க முயலும் அறுவை சிகிச்சை வல்லுநர்!

படம்
  நாட் டூ லேட் 11 எபிசோடுகள் சீன டிராமா ராக்குட்டன் விக்கி ஆப் பள்ளிக்காலத்தில் டிங் ரான், தன்னுடன் படிக்கும் மாணவியைக் காதலிக்கிறான். அவன் அகவயமானவன். எனவே, தனது உணர்வுகளை வெளிப்படையாக உணர்த்த முடியவில்லை. அவன் காதலிக்கும் மாணவிக்கும் டிங் ரான் மீது விருப்பம்தான். காதல்தான். ஆனால், அதை அவள் வெளிப்படையாக டேட்டிங் பண்ணலாமா என்று கூறும்போது, டிங் ரான் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் மறுத்துவிடுகிறான். காலம் கடக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்த முறை, டிங் ரானின் அப்பா, அவன் காதலித்த பெண்ணின் அம்மாவை மணம் செய்துகொள்ள போகிறார். இதனால் டிங்ரான், அவனது முன்னாள் காதலி என இருவருமே ஒரே வீட்டில் வாழவேண்டிய நிலை. அக்கா, தம்பி என உறவு மாறும் சூழ்நிலை. ஒன்றாக வாழும் சூழ்நிலையில் அதுவரை மறைந்திருந்த காதல் புதிதாக துளிர்விடத் தொடங்குகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.  தொடரில் மொத்தம் ஆறு பாத்திரங்கள்தான். முக்கியப்பாத்திரங்கள். அதனால் பழி, வஞ்சம், துரோகம், வன்முறை என பிரச்னை இல்லாமல் பார்க்கலாம். ரசிக்கலாம். பதினொரு எபிசோடுகள்தான். நேரமும் மிச்சம் பாருங்கள்.  டிங் ரா

அம்மாவை எரித்துக்கொன்ற நான்கு நபர்களை பழிவாங்க முயலும் பரதநாட்டிய மாஸ்டர்!

படம்
  செஸ்  திலீப், பாவனா, சலீம்குமார், அசோகன் விஜய் கிருஷ்ணன் பரதநாட்டியம் சொல்லித்தரும் பள்ளி நடத்துகிறார். அவரது அம்மா, அவனுக்கு அதை கற்பித்திருக்கிறார். அம்மா, காவல்துறையில் வேலை செய்யும் ஒருவரை விரும்பி இணைந்து வாழ்கிறார். திருமணம் செய்துகொள்வதில்லை. இது விஜய்க்கு வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் அவன் அம்மா வருத்தப்படுவாள் என எதையும் கூறுவதில்லை. அவனது பள்ளிக்கு பாவனா கல்லூரி மாணவி வருகிறாள். கல்லூரி ஆண்டுவிழாவில் ஆடும் பரதநாட்டிய பயிற்சிக்காக விஜய்யின் உதவியை நாடுகிறாள்.  அங்கு அவனிடம் பயிற்சி செய்து ஆடி கல்லூரியில் முதல் பரிசு வெல்கிறாள். அதோடு அவளுக்கு விஜய்யை பிடித்திருக்கிறது. இருவரும் சாதி, மதம், அந்தஸ்து பார்க்காமல் காதலிக்கிறார்கள். ஆனால் நாயகியின் தாத்தாவுக்கு அதெல்லாம் குறையாக தெரிகிறது. குறிப்பாக, விஜய்யின் அப்பா யாரென்று கேட்க அவனால் உண்மையைக் கூறமுடியவில்லை. இப்படியாக காதலி, கல்யாணம் என இரண்டுமே கனவு போல கலைந்து போகிறது.   படம் காதலைப் பற்றியதல்ல. பழிவாங்குவதைப் பற்றியது. விஜய்யின் அப்பா, மரணப்படுக்கையில் இருக்கும்போது அவனையும், மனைவியையும் அழைத்து எனது சொத்துகள் ஒரே மகனான உ

கொள்ளையர்களின் நகையை திருடி ஊரிலுள்ள கடனை அடைக்க முயலும் YSR தொண்டன்!

படம்
  குபேர்லு சிவாஜி, அலி, கிருஷ்ண பகவான் அருங்காட்சியம் ஒன்றை மும்பை கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்த நகையை விவேகானந்தா காலனி என்ற இடத்தில் பதுக்கிவைத்துவிட்டு, கொள்ளைக்கூட்ட தலைவனது தம்பி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோகிறார். அந்த நகைகள் யாருக்கு கிடைத்தது கொள்ளைக்கூட்டத்திற்கா, காவல்துறைக்கா என்பதே கதை.  ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி என்ற அரசியல் தலைவருக்கான முகஸ்துதியாக எடுக்கப்பட்ட படம். படத்தில். தன் குடும்பத்தை கவனிக்காமல் ஊருக்காக உழைப்பவராக சொத்துக்களை மக்களுக்காக இழப்பவராக நாயகன் வருகிறார். அவருடைய மாமா அலி. இருவரும் சேர்ந்து பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றுப்போகிறார்கள். வீடுகட்டித்தரும் மோசடி திட்டத்தில் மக்களை ஈடுபடுத்தி மாட்டிக்கொள்கிறார்கள். பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்காக ஏற்கெனவே நிறைய சொத்துக்களை விற்றுவிடுகிறார்கள். மீதியிருப்பது வீடு மட்டுமே. மோசடி செய்ததால் குறிப்பிட்ட நாளில் பணத்தை கட்டாவிட்டால் அவர்களது ஒரே சொத்தாக உள்ள வீடும் பறிபோகும் நிலையில் நகரத்திற்கு பணம் சம்பாதிக்க வருகிறார்கள். நாயகனும் அலியும் பணம் சேர்த்தார்களா இல்லையா என்பது இன்னொரு கிளைக்

ராயலசீமா காரப்பொடியை லெக்பீஸில் தடவி சாப்பிட்டால்... அல்லரே அல்லரி - வேணு, நரேஷ், பார்வதி மெல்டன், மல்லிகா கபூர்

படம்
  அல்லரே அல்லரி  வேணு தொட்டம்பள்ளி, அல்லரி நரேஷ், மல்லிகா கபூர், பார்வதி ஷெல்டன் வேணு சிறுவயதில் இருக்கும்போது அவரது அத்தை. தனது கணவரைக் கொன்ற இருவரைக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார். கொலை செய்யவேண்டிய ஆட்களில் ஒருவர் மட்டுமே மிச்சமிருக்கிறார். அவரை தனது தம்பி மகனை வைத்து கொன்றுவிட்டு, அதற்கு பிரதியுபகாரமாக தனது மகளை திருமணம் செய்து கொடுப்பது அவரது திட்டம். அது நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.  இப்படி கேட்டாலே நிறைவேறாது என்பதுதான் விஷயம். அதேதான். வேணு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அங்கு வரும் இளம்பெண் வயிற்றில் கருவோடு இருக்கிறாள். தற்கொலைக்கு முயன்றவளை அரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார். அவளது கர்ப்பத்திற்கு காரணம் யார் என தெரிந்துகொண்டு அவனைக் கூட்டிவந்து கல்யாணம் செய்து வைக்கிறார். இவரது தலையீட்டால் இன்னொரு பெண்ணின் திருமணம் நின்றுபோகிறது. அந்த பெண் தன் கல்யாணம் நின்றதால் செலவு செய்த ஏழு லட்ச ரூபாயைக் கேட்கிறார். நாயகன் மாதசம்பளம் வாங்கும் மருத்துவர் என்பதால், தான் கல்யாணம் செய்து வைத்த ஆட்களிடமே போய் காசு கேட்கிறார். ஆனால் அவர்களோ காசு தர முடியாது என்கிறார்கள். அ

மாணவர்களை வலுவானவர்களாக மாற்ற முயலும் பலவீனமான தற்காப்புக்கலை ஆசிரியர்!

படம்
  வீக் டீச்சர்  மாங்கா காமிக்ஸ் நாம்கூங் இனக்குழுவில் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இதில், கடைசியாக உள்ள பையன் பலவீனமாக இருக்கிறான். அதற்கு முக்கியமான காரணம், சிறுவயதில் அவனுக்கு மர்ம நபர் கொடுக்கும் விஷ மாத்திரை. அந்த மாத்திரை காரணமாக அவனது உடலில் விஷம் பரவி, அவனது ஆன்ம ஆற்றலை குன்ற வைக்கிறது. அவனை எல்லாருமே இழிவாக பேசுகிறார்கள். நாம்கூங் குடும்பத்தின் அவமானம் என பேசுகிறார்கள். யாருமே அவனுக்கு ஆதரவாக இருப்பதில்லை. அவனது அண்ணன்கள் கூட பாராமுகமாக இருக்கிறார்கள்.  முரிம் கூட்டமைப்பில் உள்ள ஒயிட் அகாடமியில் நாம்கூங் மே சேர அவனது அப்பா உத்தரவிடுகிறார். அவன் அங்கிருந்து மூன்று மாதங்களில் திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் என்பது அண்ணனின் உத்தரவு. அப்படி வரவில்லை என்றால் மூத்த அண்ணனே அங்கு வந்து கூட்டிச்கொண்டு வந்துவிடுவதாக கூறுகிறார். எனவே, வேகமாக வலிமையாக முயல்கிறான். அங்கு செல்பவனுக்கு பார்க்கவே பலவீனமாக உள்ள ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார். உண்மையில் அவர் டிமன் பிளவர் லீக் என்ற படுகொலை குழுவின் கேப்டன் கிவி என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. உண்மையில் அவர் யார் என்று

வணிகம் மூலமே எதிரிகளை நசுக்கி அழிக்கும் வீரனின் ஏகபோக வணிக வாழ்க்கைக் கதை!

படம்
  ஆர்டினரி மேன் இமிக்கிரேட் டு முரிம் வேர்ல்ட் மாங்கா காமிக்ஸ்  ஜோ வீ, நவீன உலகில் வறுமையான சூழ்நிலையில் இருக்கிறான். அவன் கையில் பணமில்லை. உணவுகளை டெலிவரி செய்யும் வேலையை செய்தபடி படிக்கிறான். பொருளாதார பிரச்னைகளால் காதலும் கடந்துபோகிறது. அம்மாவையும் மருத்துவம் செய்து காப்பாற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையி்ல் உணவு டெலிவரி செய்பவனை சொகுசு கார் ஒன்று மோதி சாய்க்கிறது. அப்போது கழுத்தில் உள்ள சிவப்பு முத்து டாலர் கீழே விழுகிறது. தனது ஒரே குடும்ப சொத்தான அதை கையில் தொடுகிறான். இறந்துபோகிறான். மறுபிறப்பு எடுக்கிறான்.  கொல்லர் குடும்பத்தில் பிறக்கிறான். ஒரு அண்ணன், தங்கை என இருவர் இருக்கிறார்கள். வட்டிக்கு கடன் வாங்கித்தான் உணவே சமைத்து சாப்பிடும் நிலை. இதை ஜோ தனது புத்திசாலித்தனத்தால் மாற்றுகிறான். ஒரு வணிகரிடம் வட்டிக்கு கடன் வாங்கி உழவுப்பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்கிறான். இதற்கான ஒப்பந்தம், சம்பளம் ஆகியவற்றை நவீன உலகில் வாழ்ந்த அனுபவம், செய்த வேலையிலிருந்து கிடைத்த அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான். ஏறத்தாழ அனைத்தும் முதலாளித்துவ உத்திகள். ஆனால், அதை முரிம் உலகில் பல

துரோகம் செய்த இனக்குழு தலைவரை மறுபிறவி எடுத்து பழிவாங்க கிளம்பும் வீரனின் பயணம்!

படம்
  மூன் ஸ்வார்ட் எம்பரர் மாங்கா காமிக்ஸ் டிமோன் செக்டில் உள்ள ஆட்களுக்கு காசுக்கு அடிமையாக விற்கப்பட்ட வீரன், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இறந்துபோகிறான். இறக்கும் கடைசி நேரத்தில் புத்த துறவி மூலம் மறுபிறவி வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் வாய்ப்பை அவன் எப்படி பயன்படுத்தி டிமோன் செக்ட் இனக்குழு தலைவரை அழிக்கிறான் என்பதே கதை. இந்த கதை இன்னும் நிறைவடையவில்லை.  மறுபிறவியில் கூட டிமோன் செக்ட் ஆட்களிடம்தான் நாயகன் அடிமைச் சிறுவனாக இருக்கிறான். ஏற்கெனவே டிமோன் செக்ட் ஆட்கள், அடிமை சிறுவர்களை எப்படி சித்திரவதை செய்து பிறரை கொலை செய்ய பயிற்சி வழங்குவார்கள் என்பது தெரியும். எனவே, அவர்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு, சில பெண்களைக் காப்பாற்றி அவர்களின் மூலம் தங்குவதற்கான இனக்குழு  ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். இனக்குழுவில் நிர்வாகியின் உதவியாளராக பணிக்குச் சேர்கிறான். டிமோன் செக்டில் பயன்படுத்தும் கலைகளை நேரடியாக கற்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், அடிப்படையான ஆன்ம ஆற்றல் சக்தியை மட்டும் உருவாக்கிக்கொள்கிறான். அவனுக்கு மின்னல் சக்தியை அடிப்படையாக கொண்ட வூ ஜின் என்ற வீரரின் வழிகாட்டுத

வாள் துறவியின் வாரிசாகும் புத்தகப்புழு!

படம்
  ஸ்வார்ட்ஸ்மேன் ஸ்காலர் மாங்கா காமிக்ஸ் நூலகமே கதி என கிடக்கும் கல்வியாளன், தற்காப்புகலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதன் வழியாக வாள்வீச்சு பற்றிய அறிவைப் பெற்று சாதனை செய்யும் கதை. சிறப்பான கதை. அதை மெல்ல கூறியவிதமும் அருமை. நாயகன் பெயர் வூன். தலையில் தொப்பி ஒன்றை வைத்துக்கொண்டு வருகிறான். அவனைப் பார்க்கும் யாருக்குமே அப்பாவியான நூல்களை மட்டுமே படிக்கும் ஆள் என்ற எண்ணமே வரும். ஆனால், தற்காப்புக்கலை பற்றிய கேள்விகள் வந்தால், அதில் பதில்களைக் கூறுவதோடு வீரரின் தவறுகளைக் கூறி அதை செய்துகாட்டி திருத்தவும் செய்கிறான். அங்குதான் பலரும் ஆணவத்தை விட்டு அவனை மாஸ்டர் என பணிந்து போகிறார்கள். மரியாதை கொடுக்கத் தொடங்குகிறார்கள்.  வூனுக்கு நிலையான மாத சம்பளம் என்பதே லட்சியம். வேறு எதையும் அவன் பெரிதாக யோசிப்பதில்லை. குழந்தைபோலவே கள்ளமின்மையோடு இருக்கிறான். ஆனால், அவனைச் சுற்றி இருப்பவர்கள் அவனை பயன்படுத்திக்கொள்ள ஏராளமான திட்டங்களை தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் அவனை சீண்டும்போது அவன் கொடுக்கும் பதிலடி நினைத்துப் பார்க்க முடியாத வலியைத் தருகிறது. தற்காப்புக்கலை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி

உலக அனுபவத்திற்காக பேய்கிராமத்தை விட்டு வெளியேறும் வைத்திய வீரன்!

படம்
  மில்லினியம் அல்செமிஸ்ட் மாங்கா காமிக்ஸ் 100-- பேய்க்கிராமம் எனும் இடம் சபிக்கப்பட்ட இடம். அங்கு செல்பவர்கள், திரும்ப உலக வாழ்க்கைக்கு வரவே முடியாது. இங்கு, திருடர்கள், கொள்ளைக்காரர்கள், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வாள் வீரர்கள் என பலரும் வந்து வாழ்கிறார்கள். இங்கு வீரர் ஒருவர் தனது முதலாளி குழந்தையை மரத்தில் கொண்டு வந்து விடுகிறார். அழும் குழந்தையின் வாயில் துணியை திணித்துவிட்டு  செல்கிறார். அது யார் வீட்டு குழந்தை, ஏன் அதை அழாமல் வாயில் துணி வைத்து பாதுகாக்கிறார்கள் என்பது கதையில் பின்னாடி வரும் என நம்பலாம்.  அந்த குழந்தைதான் நாயகன். அவன், குழந்தையாக இருக்கும்போது பேய் கிராமத்தில் வாழும் நான்கு முதியவர்கள் எடுத்து வளர்ப்பு தந்தைகள் போல கவனித்து வளர்க்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்டவர்கள். குழந்தைக்கு தங்களது இனக்குழுவின் பல்வேறு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். மருத்துவம், திருட்டு, வாள்வீச்சுக்கலை, பொறிகளை அமைப்பது, ஆயுதங்களை உருவாக்கும் கலை என அனைத்தையும் பல்லாண்டுகள் கற்கிறான். கதையில் நம்மை ஆச்சரியப்படுத்துவது, நாயகன் தனக்கென சாப்பிட்டு வலிமை

பெற்றோரால் அடித்து துன்புறுத்தப்படும் சிறுவன், தற்காப்புக்கலை கற்று கொள்ளைக்காரனாக மாறும் கதை!

படம்
  நைன் ஹெவன்ஸ் ஸ்வார்ட் மாஸ்டர்  மாங்கா காமிக்ஸ் 70-- ரீட்மாங்காபேட்.காம் சிறந்த வாள் வீரனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவன் இயோன் ஜூக்கா. அம்மா பிரசவத்தின்போது இறந்துவிடுகிறார். முதல்மனைவியை விட இரண்டாவது மனைவி மீது காதல் கொண்ட அப்பா, மனைவி இறப்புக்கு காரணம் மகன்தான் என அவனை வெறுத்து ஒதுக்குகிறார். வெறுப்பும் விரக்தியும் அவரை நோயுறச்செய்கிறது. இதனால் இயோன், அவரது முதல் மனைவியான சித்தியிடம் சிக்கி வன்கொடுமைகளை அனுபவிக்கிறார். அடித்து உதைக்கப்படுகிறார். கழித்து கட்டப்பட்ட உணவை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இந்த சூழ்நிலையில் குடும்பத்தின் பாரம்பரிய கலைகளை அவர் அடைத்து வைக்கப்பட்ட அழுக்கு அறையில் கற்கிறார். மொத்தம் பத்து ஆண்டுகள் இப்படி பயிற்சியில் போகிறது. இறுதியாக கலைகளைக் கற்றுக்கொடுத்த கண்ணாடி, தேர்ச்சி பெற்றவுடன் அவனை வெளியே வழியனுப்பி வைக்கிறது. இதுபற்றி அவனது சித்தி அறிவதில்லை. குடும்ப கலையைக் கற்க தனது மூத்த மகனை, கணவரின் தம்பி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்.  இயோன் உயிர்தப்பி ஓடி காட்டுக்குள் மயங்கி விழுகிறான். அங்கு அவனை கொள்ளையர்கள் குழு கண்டெடுத்து தங்களோடு வேலை செய்ய வைத்துக்கொள

முற்பிறப்பில் சிறந்த வாள் வீச்சு வீரன்; மறுபிறவியில் வாள்வீச்சில் தடுமாறுகிற பலவீனமான இளைஞன்!

படம்
  சாவோட்டிக் ஸ்வார்ட் காட் மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம் 150--- முந்தைய பிறப்பில் வாழ்ந்த சிறந்த வாள் வீரன், ஒரு போரில் எதிரியைக் கொன்றுவிட்டு படுகாயமுற்று இறந்துபோகிறார். அவர் இறக்கும்போதுதான், சோல் ஸ்வார்ட் எனும் புதிய சக்தியைப் பெறுகிறார். அதை முதல்முறையாக பயன்படுத்தி எதிரியை வீழ்த்துகிறார். அவரது ஆன்மா மறுபிறப்பெடுக்கிறது. சாங்கியாங் எனும் அதிக வலிமை இல்லாத குலத்திற்கு செல்கிறது. அங்குதான் வாள் வீரர் குழந்தையாக பிறக்கிறார். பிறந்து சில ஆண்டுகளிலேயே நூல்களை வாசிப்பது. நடப்பது என அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். சிறுவயதில் தீவிரமாக ஆன்ம ஆற்றல் பயிற்சியில் ஈடுபட்டதால், உடலில் வாள் வீச்சுக்கு தேவையான ஆற்றல் குறைந்துபோகிறது. இந்த நிலையில் அவரை வாள் வீச்சுக்கான செயின்ட் ஃபோர்ஸ் இருக்கிறதா என சோதிக்கிறார்கள். அந்த தேர்வில் சாங் தோல்வியடைகிறான். எனவே, அவனை சுற்றத்தார், ஊர், வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் கூட கேலி செய்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே சாங் செய்த பல்வேறு பயிற்சிகள் அவனை வலிமை கொண்டவனாக மாற்றுகின்றன. ஒரு மரக்கிளை ஒன்றை ஒடித்து வாள் போல பாவித்து அவனது சகோதரனை தாக்கி மார்ப

மறுபிறப்பெடுத்து வந்து தீயசக்தி இனக்குழுவை அழிக்கப் போராடும் இரவு வீரன்! இம்மார்டல் இன்விசிபிள்

படம்
  இம்மார்டல், இன்விசிபிள் மாங்கா காமிக்ஸ் ரீட்மாங்காகாமிக்ஸ்.காம் 150---- தீயசக்தியைச் சேர்ந்த இனக்குழுவில் உள்ள நாயகன், மக்களுக்கு பீதியூட்டிய தற்காப்புக்கலை மாஸ்டர். அனைத்து நாடுகளிலும் பொது எதிரியாக கருதப்பட்டு துரத்தப்படுகிறார்.  பின்னாளில், எதிரிகளால் வெட்டி படுகொலை கொல்லப்படுகிறார். ஆனால் அவர் மனதில் நம் வாழ்க்கையை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியவில்லை என்ற கருத்து இருக்கிறது. இதனால் அவர் மீண்டும் பிறப்பெடுக்கிறார். மறுபிறப்பில், சென் என்ற வணிக குடும்பத்தைச் சேர்ந்தவரின் வாரிசாக பிறக்கிறார். அப்பா, வணிகர். அம்மா, புகழ்பெற்ற வாள் வீராங்கனை. அம்மாதான், மகன் கோ உன்னுக்கு அடிப்படை தற்காப்புக்கலை பயிற்சிகளைக் கற்பிக்கிறார். தினசரி மறக்காமல் பயிற்சி செய்யவேண்டும் என கூறுகிறார். அதுவே கோ உன்னுக்கு போதுமானதாக இருக்கிறது. அம்மா சொல்லிக்கொடுத்த கலைகளோடு, அவன் முற்பிறவியில் கற்ற தீயசக்தி கலைகளையும் சேர்த்து பயிற்சி செய்கிறான்.  அவன் அம்மா முற்பிறவியில் எதிரிகளுடன் சண்டையிட்டு இறுதியாக இறந்துபோகிறார். எனவே, அந்த சூழ்நிலையை கோ உன் மாற்ற முயல்கிறான். தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அம்மாவின் வாள