உரையாடல் போல அமைதியும் பொருள் கொண்டதுதான் பகுதி நிறைவு
புரட்சி குறித்து பேசுவது சரி, ஆனால் அது குறித்த கனவு உடைந்துபோக, மாயைகள் அழிந்துபோன பின்பு வாழ்ந்து வரும் நிலையில் புரட்சி என்பது நீடிக்கின்ற தொடர்கின்ற ஒன்றுதானா? அப்படி கூறமுடியாது. மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் 68 ஆம் ஆண்டிற்கான உற்சாகத்தைக் கொண்டு அது விரக்தி நிலைக்கு மாறுவதை சுட்டிக் காட்டியிருப்பேன். குறிப்பிட்ட யாரையும் நான் கூறவிரும்பவில்லை எனினும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழலை சந்திக்கவேண்டிய அபாயம் எப்போதும் உள்ளது. எனது முதல் தொடர்ச்சியான வரிசைப் படங்களை எடுத்து முடிக்க (36 நாட்களில், பயணிக்கும் வீரர்கள், வேட்டைக்காரர்கள்) 5 ஆண்டுகள் தேவைப்பட்டன. பிறகு எடுக்கத் தொடங்கிய படம்தான் வரலாற்றின் அமைதி படமாகும். சிதெராவிற்குப் பயணம் படம் கம்யூனிசம், வரலாற்றின் இறுதி பெரும் கருத்தியல்கள் குறித்து பேசியது. ஒருமுறை அவை நிறைவுபெற்றால், அதனுள் பிறகு பார்க்க ஏதுமில்லை. அடையாளம் குறித்த சிதைவுகளுக்கு நாம் சாட்சியாக நிற்கிறோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் பேச புதிதாக ஏதும் இல்லாத நிலையில் வரலாற்றின் இறுதியில் நிற்கிறார்கள். என்னுடைய படங்கள் தனிப்பட்ட ஆழமா