இடுகைகள்

கஜகஸ்தானில் குழந்தைகளுக்கு நேரும் அநீதி!

படம்
கஜகஸ்தானில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடுமையாக வன்முறைக்கும் புறக்கணிக்கும் உள்ளாவதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறிவருகிறது. நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் கஜகஸ்தானில்  வன்முறைக்கு இலக்காவதோடு, குடும்பத்தைச் சந்திக்கவும் வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மித்ரா ரிட்மன். அக். 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் 27 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை நேர்காணல் செய்த தில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள 19 மாநில காப்பகங்களில் மனநிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் 2 ஆயிரம் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றன. இக்குழந்தைகளுக்கு சில மருந்துகளைக் கொடுத்து மயக்கமுறச்செய்து அவர்களை மனநல மருத்துவமனைகளுக்கு பணியாளர்கள் அழைத்துச் சென்று அழைத்துவிடுகின்றனர். இவர்களுக்கு சிசோபெரெனியாவுக்கு அளிக்கும் மருந்துகளை அளிப்பதுதான் பிரச்னை. இம்மருந்து அச்சிறுவர்களை 24 மணிநேரத்திற்கு தூக்கத்திலேயே வைத்திருக்கும் சக்தி கொண்டது. இங்கு வளரும் குழந்தைகளை பணியாளர்கள் தாக்குவது இயல்பாக இரு

மனதில் உறுதி வேண்டும்! - ட்யுராங்கோ அதிரடிக்கிறார்!

படம்
சத்தமின்றி யுத்தம் செய்! ட்யுராங்கோ அதிரடிக்கும் மனதில் உறுதி வேண்டும் - அத்தியாயம் 2 வ்யோமிங் பகுதியில் கொள்ளை கும்பலைப் புரட்டி எடுக்கும் நொண்டி நாயகன் ட்யுராங்கோவின் கதைதான் இது. முதல் அத்தியாயத்தில் துப்பாக்கித் தோட்டாக்களால் காயமுற்றவர், தானாக குதிரையில் ஏறி பயணிக்கிறார். அவரை கிழவர் ஒருவர் மனிதாபிமான முறையில் சிகிச்சை அளித்து உதவுகிறார். ஆனால் அதையும் அருகிலுள்ள ஃபீஸ்புல் சர்ச் ஊரிலுள்ள மக்கள் தவறு என்று கூறி தடுக்கின்றனர். அப்போது அங்கு கல்லஹன் எனும் குழு, வ்யோமிங் வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்து அடைக்கலமாகிறது. அந்தக்குழுவினரிலுள்ள ஸ்காட் என்பவன் பெண்ணிடம் தவறாக நடக்க கொலை செய்யப்படுகிறான். இந்த கொலை காரணமாக கொலைவெறி ஆகும் கல்லஹன் அந்த ஊர்க்காரர்களை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பாதிரியாரை தூக்கிலிட்டு சுட்டுக்கொல்கிறார். அவரின் மற்றொரு கூட்டத்தை ட்யுராங்கோ கொன்று விட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சையளித்த கிழவரைக் கொன்றதுதான் காரணம். இதற்குப்பிறகு அவர் ஃபீஸ்புல் சர்ச் ஊருக்குச் செல்கிறார்.  அந்த ஊர் மக்கள் அவருக்கு உதவினார்களா இல்லையா என்பதுதான

குழந்தைகளைக் கண்காணிக்கும் சீன அரசு!

படம்
பெரியவர்களுக்கு கேமிரா என்றால் சிறுவர்களுக்கு சீன அரசு ஸ்மார்ட் வாட்சுகளைத் தயாரித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இருக்கும் இடங்களை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். குவாங்சூ நகரில் மாவட்ட நிர்வாகம் 17 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச்களை இலவசமாகவே வழங்கியுள்ளது. இதன்மூலம் பெற்றோர் மாணவர்களைக் கண்காணிக்க முடியும் என்று சீன அரசு பதில் கூறியுள்ளது. இது ஒருவகையில் பாதுகாப்பு என்றாலும் அரசு கண்காணிப்பை மாணவர்களுக்கு வளர்ந்து வரும்போது பழக்கப்படுத்துகிறதோ என்ற எண்ணமும் பலருக்கும் எழுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் மாணவர்கள் குளம், குட்டை ஆகிய இடங்களுக்கு அருகில் போனால் உடனடியாக பெற்றோரின் போனுக்கு எச்சரிக்கை செய்தி வந்துவிடுகிறது. தன்னார்வமாக முன்வரும் பெற்றோர்களுக்கு மட்டுமே ஜிபிஎஸ், ரேடியோ சிக்னல்களில் இயங்கும் வாட்சுகள், பிரஸ்லெட்டுகளை தருவதாக அரசு கூறினாலும் உண்மை அதுவல்ல. பல்வேறு பள்ளிகளை அரசு ஸ்மார்ட் வாட்சுகளைப் பெற கட்டாயப்படுத்தி வருவதே உண்மை. இதன் விளைவுதான் ஜிபிஎஸ் ஆடைகளை மாணவர்கள் உடுத்துவதும். இந்த ஆராய்ச்சிகளை சீன ராணுவம் செய்துவருகிறது. பெய்டூ எனும் ஜிபிஎஸ் கண்காணிப்

கணிதம் மீது நம்பிக்கை வைத்து வென்றேன்!

படம்
1980 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆமி வில்கின்சன், ஹார்வர்டு பல்கலையில் இளங்கலை படித்தார். நான் அங்கு படித்தபோது, பெண் பேராசிரியர்களே கணித துறையில் இல்லை. நான் அங்கு ஆசிரியராக பணியாற்றத் தொடங்கியபோது, முதலில் கடினமாக இருந்தது. பின்னாளில், எனக்கு என்மீது நம்பிக்கை வரத்தொடங்கிய பின்தான் வகுப்புகளில் கற்பித்தலை அனுபவித்து செய்யத் தொடங்கினேன் என்று பேசினார் வில்கின்சன். இத்துறையில் கணிதவியலாளராக நீங்கள் கண்டறிய கேட்கும் கேள்விகள் என்ன? இப்போது சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வட்டப்பாதை குறித்தும், அது நிலையானதா, என்பது போன்ற கேள்விகளை கேட்டு விடைகளை ஆராயலாம். பரிணாம வளர்ச்சியில் உருவான சூரியக் குடும்பத்தைப் பற்றிய பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஆராய்ச்சி செய்ய முடியும். கணிதவியலாளராக பணியாற்ற ஒருவரின் ஆளுமை முக்கியப் பங்காற்றுகிறதா? நிச்சயமாக. நெகிழ்வுத்தன்மை கொண்டிருப்பது இப்பணியில் அவசியம். கணித ஆராய்ச்சியில் சவால்களைச் சந்திக்கும் நிலையில் பொறுமை தேவை. இயல்பாகவே கணித ஆராய்ச்சியாளர்களுக்கு குறிப்பிட்ட தர நிலையில் இருப்பார்கள். அதனையே தம் ஆராய்ச்சியில் எதிர்பார்ப்பார்கள். இ

உடல் தன்னைப பாதுகாத்துக்கொள்ளும் நிலை - ஹோமியோஸ்டேசிஸ்!

படம்
ஹோமியோஸ்டேசிஸ்! நம்முடைய உடல் 98.6 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்தால் மட்டுமே ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சரியாக இருக்கும். இல்லையெனில் உடல் உள்ளுறுப்புகள் மெல்ல செயலிழந்து போகும் அபாயம் உண்டு. இதைத்தான் ஹோமியோ ஸ்டேசிஸ் என்று கூறுகிறார்கள். இதனை உளவியல் சார்ந்தும் மருத்துவர்கள் அணுகுகிறார்கள். எப்படி என்றால், வெளியுலகைச் சார்ந்து சூழல் மாறினாலும் உடலின் நிலை மாறாமல் இருப்பது. இதனை ஏற்றும் மறுத்தும் பல்வேறு கருத்துகள் உள்ளன. உளவியலாளர் வால்டர் கனோன், தி விஸ்டம் ஆஃப் பாடி(1932) என்ற நூலில் இதுகுறித்து எழுதியுள்ளார். இதில் பாதிப்பு ஏற்படும் போது உடல் உறுப்புகள் மூளைக்கு தகவல்களை அனுப்புகின்றன. எதிர்மறை உணர்வு என்று சிக்னல் கிடைத்ததும், மூளை உடலின் வெப்பநிலையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறது. இதுவும் செயலிழக்கும் நிலையில் உயிர் பறிபோகிறது. வெப்பம் அதிகரிக்கும்போதும்போது ஏற்படும் பாதிப்பைப் போலவே, குளிர் கூடும்போது உடலில் நடுக்கும் ஏற்படுத்துவதன் வழியாக ரத்தம் தடையின்றி பாய்கிறது. நன்றி: லிவ் சயின்ஸ்

நிலவுச்சாதனை - 50 வது ஆண்டு!

படம்
நிலவில் மனிதர்கள் கால் வைத்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. நாசாவின் பெயர் சொல்லும் வரலாற்றுச் சாதனையில் பிற மனிதர்களின் வல்லுநர்களின் பங்களிப்பும் உள்ளது. உலக வானியல் யூனியன் 1955 ஆம் ஆண்டு கூடியது. வானியலாளர் ஜெரார்டு குய்ப்பர், நிலவுக்கு செல்வதற்கான வழிமுறைகளையும் வரைபடங்களையும் பலரிடமும் இச்சந்திப்பில் கோரினார். ஏனெனில் அப்போது ஓவியமாக வரைந்த படங்கள்தான் நம்மிடம் இருந்தது. இந்த கோரிக்கைக்குப் பிறகுதான் நிலவைக் காண்பதற்கான தொலைநோக்கிகள் தயாரிக்கப்படத் தொடங்கின. டக்சனிலுள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ஆய்வகத்தை அமைத்த ஜெரார்டு, நிலவை தொலைநோக்கிகள் மூலம் படம்பிடிக்கத் தொடங்கினார். அப்போது தேர்தலில் வென்ற ஜான் எஃப் கென்னடி, நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதே தனது கனவு என்று கூறி நாசாவை ஊக்கமூட்டினார். அதன்பிறகு ஜெரார்டு உழைப்பில் உருவான நிலவின் படங்கள் அரசின் தேசிய சொத்தாயின. இவருக்கு ஆங்கிலேயர் விட்டேகர் ஆராய்ச்சியில் உதவினார். அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிய ரோபோட்டிக் சர்வேயர் எடுத்த படங்களை விட இவரது தொலைநோக்கி படங்கள் பிரமாதமான தரத்தில் இருந்தன. அப்போலோ திட்டங்கள் தொடங

மௌனப் புயல் ட்யுராங்கோ - ரௌத்திரம் பழகு அத்தியாயம் 1

படம்
சத்தமின்றி யுத்தம் செய்! ட்யுராங்கோ கலக்கும் ரௌத்திரம் பழகு! கதையில் நீதி, நேர்மை இத்யாதிகளுக்கு இடமில்லை. ட்யுராங்கோ காசுக்கு கொலைகளை செய்யும் மௌன எமன். பேசுவது குறைவு. ரத்தப்பொத்தல் விழுந்த கையுடன் பத்து பேர்களை போட்டுத்தள்ளும் மனதிடம், உடல்பலம் கொண்டவன். தன் குடும்பத்திடமிருந்து விலகிப்போய் துப்பாக்கியும் தோட்டாக்களுமாக் வாழ்பவனை கடிதம் ஒன்று அமெரிக்காவின் பண்ணைக்கு வரவைக்கிறது. அங்கு வசிக்கும் ஹாரி லாங் என்ற அவரின் சகோதரர், அவனுக்கு பணம் தருவதாக கூறி அங்கு வரச்சொல்லி கடிதம் எழுதி அனுப்புகிறார். ஆனால் ட்யுராங்கோ அங்கு வரும்போது காரியம் மிஞ்சியிருக்கிறது. செனட்டர் ஹ்யூலெட் தன் பண்ணையை விரிவாக்க அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார். தனக்கு போட்டியாக கால்நடைப் பண்ணைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளுகிறார். லாரியும் அப்படி கூலிப்படையால் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் தோள், வயிறு, கை என பல்வேறு தோட்டாக்கள் துளைக்கப்பட்டு கீழே விழுந்து கிடக்கும்போதுதான் ட்யுராங்கோவுக்கு தெரிகிறது. பின் எப்படி எதிரிகளை வீழ்த்தி தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை.

விக்கிப்பீடியா சாதித்த கதை!

படம்
விக்கிப்பீடியா கூகுளின் யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் போலிச்செய்தி, தவறான செய்திகள், விதிமீறல், வணிகப்போட்டி காரணமாக சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதே நேரத்தில்தான் விக்கிப்பீடியா தன்னார்வலர்களின் பங்களிப்பால் நிதானமாக வளர்ந்து வருகிறது. தவறான தகவல்கள் குறித்து சில முறைப்பாடுகள் இருந்தாலும் நிதானமாக அவற்றைச் சரிசெய்து வளரும் விக்கிப்பீடியா கட்டற்ற அறிவுக்கான ஊற்றாக விளங்குகிறது. இன்று எதுபற்றியும் விக்கிப்பீடியாவைப் பாரேன் என்று சொல்லுமளவு இத்தளம் முன்னேறியுள்ளது. இதுபற்றிய டேட்டா உங்களுக்காக.... 1930 ஆம் ஆண்டு ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஹெர்பர்ட் வெல்ஸ் மற்றும் பால் ஆட்லெட் ஆகியோர் மனிதர்களின் அறிவை தொகுத்து என்சைக்ளோபீடியா ஒன்றை தயாரிக்க நினைத்தனர். 1993 ஆம் ஆண்டு இன்டர்நெட் வல்லுநர் ரிக் கேட்ஸ், இலவசமாக கட்டற்ற கலைக்களஞ்சியம் தேவை என்றனு கூறினார். இதன் பெயராக இன்டர்பீடியா என்று பரிந்துரைத்தார். 1995 ஆம்ஆண்டு  வார்டு கன்னிங்காம் முதல் விக்கி பீடியாவை உருவாக்கினார்.  ஹவாய் மொழி வார்த்தையான குயிக் என்பதிலிருந்து இது உருவானது. ஆப்பிளின் ஹைபர் கார்டு என

வெப்பமயமாதலால் அழியும் பூமி!

படம்
அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளை விட ஆபத்தானது. வெப்பமயமாதல் பிரச்னைகள்தான். இவைதான் இன்று நாட்டின் ஒரு பகுதியில் மேக உடைப்பையும் மற்றொரு இடத்தில் வறட்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 1600 களில் ஏற்பட்ட வெப்பமயமாதல் பல்வேறு உயிரிகளை துடைத்து அழித்தது. தற்போது ஏற்பட்டு வரும் 1 டிகிரி செல்சியஸ் உயர்வும் இத்தகையை பாதிப்பை ஏற்படுத்தும வாய்ப்பு உள்ளது. மே 2019 ஆம் ஆண்டு கார்பன் டை ஆக்சைடு பாதிப்பு மில்லியனில் 415.39 எனும் அளவுக்கு உயர்ந்துள்ளதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். கார்பன் டை ஆக்சைடு  3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயர்ந்துள்ளது. கார்பன் டை ஆக்சைடின் உயர்வை 2050க்குள் 0 அளவுக்கு கொண்டு வருவது அவசியம். உலகம் வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டால் கடல் நீர் மட்டம் 230 அடி உயரும். தொண்ணூறுகளோடு ஒப்பிட்டால் இன்று 500 சதவீத அளவுக்கு அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகிவருகின்றன. மேற்கு அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகினால், கடல் நீர் மட்டும் 8.2 அடி அளவுக்கு உயரும். நன்றி: க்வார்ட்ஸ்

அமெரிக்கா! - செனட் அவை செயல்பாடு!

படம்
அமெரிக்காவைப் பற்றிப் பேசாமல் எந்த வரலாற்றையும் எழுதிவிட முடியாது. காரணம், பிற நாடுகளை அழுத்தி உருக்குலைத்தேனும் தன்னை தக்கவைத்துக்கொள்ளும் பேராசை சுயநலம் அமெரிக்க அரசுகளுக்கு உண்டு. அதற்கு உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு பெயர்களை அச்சமயத்திற்கு ஏற்ப சொல்லுவார்கள். அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் என்று அழைக்கின்றனர். இதில் செனட் சபை, ஹவுஸ் ஆப் ரெஃப்ரசன்ட்ஸ் என இரு பிரிவுகள் உண்டு. இந்தியாவில் உள்ள மக்களவை, மாநிலங்களவை நினைவுக்கு வருகிறதா அதேதான். அமெரிக்காவின் காங்கிரசில்தான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு விவாதங்கள் நடைபெறும். செனட் அவை இங்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. இவர்கள் அதிபரின் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதற்கொண்டு தேர்ந்தெடுக்கும் அல்லது நிராகரிக்கும்  உரிமை உண்டு. ஒரு மாநிலத்திற்கு இரு செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் செனட் அவையில் நூறு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஹவுஸ் ஆப் ரெஃப்ரன்சன்டிவ்ஸ் மொத்தம் 435 உறுப்பினர்கள். பதவிக்காலம் இரண்டே ஆண்டுகள்தான்

பிட்ஸ் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர்

படம்
பிட்ஸ்! ஜிம்மி கார்ட்டர்.. 1.முப்பத்தி ஒன்பதாவது  அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜியாவில் 1924 ஆம் ஆண்டு அக்.1 அன்று பிறந்தார். 2.கார்ட்டருக்கு சிறிய வயதிலிருந்து  கப்பல் மாலுமியாக பணியாற்றவே ஆசை. அக்கனவிற்காகவே அன்னபோலிஸ் கப்பல் பயிற்சி அகாதெமியில் சேர்ந்த படித்து பட்டம் பெற்றார். அணு ஆயுதக் கப்பலில் பொறியியலாளராக பணியாற்றினார். 3.இருபத்து ஒன்பது வயதில் தந்தை திடீரென மரணமடைய, கப்பல் பணியை விட்டு வீடு திரும்பினார். கடையையும் நிலக்கடலைப் பண்ணையைப் பார்த்துக்கொண்டு வெற்றிகரமான வணிகரானார். 4.அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் வேலைகளைச் செய்துகொடுக்கும் பணியாளர்களுக்கு நன்றி சொல்லுவது, கார்ட்டரின் வழக்கம். 5.2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கார்ட்டர், அதிபராகும் முன்னர், ஜார்ஜியா செனட்டிலும், அதன் ஆளுநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 6. சிறுவயதில் தேவாலயத்தில் நன்கொடைக்காக வைத்திருந்த பணத்தைத் திருடிவிட்டார் கார்ட்டர். அதை அங்கேயே கண்டித்தார் அவரது தந்தை. வாழ்வை நல்வழிப்படுத்திய நல்ல நண்பர் என தன் தந்தையைக் குறிப்பிடுவார் கார்ட்டர். 7.