இடுகைகள்

கடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடனால் பாதிக்கப்பட்ட விவசாயியை அடையாளம் காண்பது இனி ஈஸி!- நபார்ட் வங்கியின் விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல்(FDI)

படம்
  நபார்ட் வங்கியை கேள்விப்பட்டிருப்பீர்கள். விவசாயத்திற்கான கடன்களை வழங்கிவரும் வங்கி இது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல் ஒன்றை உருவாக்க உள்ளது. இதன் மூலம் உண்மையில் உதவி தேவைப்படும் விவசாயிகளை எளிதாக அடையாளம் காண முடியுமாம்.  சின்ன டேட்டாவைப் பார்த்துவிடுவோம்.  தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய கடன் தள்ளுபடி தொகை ரூ.60 ஆயிரம் கோடி - 2008 2012 - 2013 ஆம் ஆண்டில் கடன் தள்ளுபடியை அறிவித்த மாநிலங்களின் எண்ணிக்கை 13 2019ஆம் ஆண்டு உ.பி அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை  36 ஆயிரம் கோடி 2017இல் மகாராஷ்டிர அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை 30 ஆயிரம் கோடி  இத்தனை தள்ளுபடி கொடுத்தபிறகுதான் ஒன்றிய அரசுக்கு உண்மை ஒன்று தெரிந்தது. நாம் சரியான ஆட்களுக்குத்தான் கடனை தள்ளுபடி செய்தோமா இல்லையா என்று. பஸ்ஸை விட்டு இறங்கியபிறகு கண்டக்டரிடம் மீதி சில்லறையை வாங்கவே இல்லையே என்பது போலத்தான் இதுவும். இருந்தாலும் அரசு யோசிக்கிறதே, அந்த மட்டில் அதனை பாராட்டித்தான் ஆக வேண்டும்.  கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வழங்கினாலும் கூட 60 சதவீத சிறு குறு விவசாயிகள் இப்பயன்களை பெற முடியவில்லை

கொத்தடிமைகளை மீட்ட பார்வதி அம்மாள்!

படம்
”என்னுடைய அப்பா, அவரது நண்பரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதனால் அவரிடம் நான் வேலை  செய்யும்படி சூழல் உருவானது. அப்பாவின் நண்பர் செங்கல் சூளை ஒன்றைத் தொடங்கினார். எனவே, எங்கள் குடும்பம் அங்கு வேலை செய்யத் தொடங்கியது. அதுதான் கொத்தடிமை முறை என்பது எனக்கு தெரியாது. ” செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றதும் பார்வதியின் கல்வி தடைபட்டது. தாத்தா, பாட்டி பார்வதியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினர். பள்ளியில் பிள்ளைகளை அடிப்பார்கள் என்று கூறி தடுத்துவிட்டனர். இதனால் வேலை மட்டுமே பார்வதி அம்மாள் அறிந்த விஷயம். காலையில் எழுந்தவுடன் பெற்றோருடன் வேலைக்கு செல்வார். பின்னாளில் மரம் வெட்டும் வேலைகளுக்கு சென்றார். இந்த வேலை, பார்வதியின் மாமனார் அவரது திருமணத்திற்காக வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக செய்யும்படி ஆனது.  பார்வதியும் அவரது கணவரும் அந்த செங்கல் சூளையில் சில ஆண்டுகள் வேலை செய்து கடனை கழித்தபிறகு வேறு சூளைக்கு மாறினார்கள். அங்கு முதலாளியிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்கள். இத்தொகையை வைத்து வீட்டுக்கு குடியேறி வாழ நினைத்தனர். இதற்குள் பிறந்த மூன்று குழந்தைகளை பார்வதி, அவரின்

பெண்களே நடத்தும் பூம்புகாரின் டால்பின் உணவகம்!

படம்
  டால்பின் உணவகம் நடத்தும் மீனவப் பெண்கள் பூம்புகாரில் உள்ள கடற்கரையோரமாக அமைந்துள்ளது. டால்பின் உணவகம். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூரைகளால் அமைந்து உணவகம் இது. கடற்கரையோரம் இதுபோல கடைகள் அமைவது பெரிய ஆச்சரியம் அல்ல. இதனை முழுக்க பெண்களே கூட்டாக பணம் போட்டு நடத்துவதுதான் ஆச்சரியமானது.  கடற்கரையோரமாக வாழும் பெண்கள், தொழில்முனைவோராக இருப்பது ஆச்சரியமல்ல. ஆனால் இப்படி முறையாக கடை தொடங்கி நடத்துவது வியப்பளிப்பதுதான். தங்களது இனக்குழுவில் உள்ள ஆண்கள், பெண்கள், போட்டி கடைகள் என நிறைய சவால்களைச் சந்தித்துத்தான் பெண்கள் டால்பின் உணவகத்தை நடத்தி வருகிறார்கள்.  பெருந்தொற்றுக்கு முன்னதாக, தினசரி 5 ஆயிரம் வரை வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆர்டர்களுக்கு ஏற்று உணவு தயாரித்தால்,  தொழிலில் உள்ள பெண்களுக்கு தலைக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கூறுகிறார்கள்.  டால்பின் உணவகம் நடத்துவதற்கான ஐடியா, உதவிகளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்னேகா என்ற அமைப்பின் எல் கிருஷ்ணன் செய்துகொடுத்துள்ளார். இந்த அமைப்பு, சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை கொடுத்து உதவியதோடு, பொருட்களை மதிப்புகூட்டி எப்படி விற்பனை செய்வது என பயிற்சி

மனதிலுள்ள உணர்வுகளை பிரதிபலிக்கும் ஸ்கொயட் கேம்! - ஷோபா டே

படம்
  இப்போது உலகமே நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஸ்கொயட் கேம்ஸ் என்ற வெப் சீரிசைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சிலர் பார்க்க முடியவில்லை என கூட வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒன்பது எபிசோடுகள் கொண்ட சீரிசை முழுமையாக பார்த்து விஷயங்களை புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கும்.  உலகம் முழுக்க 142 மில்லியன் மக்கள் இந்த வெப் தொடரை பார்த்துள்ளனர். தொடரை இயக்கிய இயக்குநர் ஹூவாங் டாங் ஹூயூக், அதனை சரியாக செய்யவேண்டுமென்ற மன அழுத்தத்தில் பற்கள் கூட விழுந்துவிட்டன என்று பேட்டியில் சொன்னார். தொடரில் ஒவ்வொரு கட்டமும் குழந்தைகளின் விளையாட்டுகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன.  உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியானது. 45.6 பில்லியன் டாலர்களை வெல்ல குழந்தைகளின் விளையாட்டை விளையாட வேண்டும். பார்த்தால் இந்தியாவின் கௌன் பனேகா குரோர்பதி விளையாட்டு நிகழ்ச்சி போல தோன்றலாம்.  போட்டியில் தோற்றால் வைல்ட்கார்ட் சுற்றெல்லாம் கிடையாது. நேரடியாக சாவுதான். வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். தோற்பவர்கள் உடனே கொல்லப்படுவார்கள். ரத்தம் சொட்டும் திரில்லர், வன்முறை, உணர்ச்சிகரமான காட்சிகளை

ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுகிறதா?

படம்
                  ஹால்மார்க் சட்டங்களால் பாதிப்பு உண்டா ? ஜூன் 16 முதல் தங்க நகைகள் , அதில் செய்யப்படும் கலை பொருட்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரம் அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது . இதுதொடர்பாக ஹால்மார்க் சட்டத்தையும் கடந்த ஆண்டே உருவாக்கியுள்ளது . இதுபற்றி பார்ப்போம் . ப்ரியூ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ் அங்கீகரித்த மையங்கள் மூலம் ஹால்மார்க் சா்ன்றிதழ்களை நகை தயாரிப்பாளர்கள் பெறலாம் . தங்க நகையின் தரம் இவ்வளவுதான் என்று மக்களிடம் கூறும் தரத்திற்கான சான்றிதழ்தான் ஹால்மார்க் ்என்பது . 22 கே 915 என்று முக்கோண வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதுதான் ஹால்மார்க் அங்கீகாரம் . இதில் நான்கு வகை உண்டு . தங்கம் எந்தளவு தூய்மையாக உள்ளது என்பதையு்ம் ஹால்மார்க் மூலம் அறியலாம் . 14, 18, 20,22 என பல்வேறு கேரட் தங்கங்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன . குறிப்பிட்ட நகை ஒன்றுக்கு ஹால்மார்க் சான்றிதழ் வழங்க அரசுக்கு ரூ . 35 பிளஸ் ஜிஎஸ்டி வரியோடு வழங்கவேண்டும் ஒருவரிடம் ஹால்மார்க் அங்கீகாரம் இல்லாத தங்கம் இருந்தாலும் கூட அதனை தங்க நகைக்கடையில் விற்கலாம் . அவர்கள் அதனை உருக

விவசாயம் நரகம் எனும் அப்பாவுக்கும், விவசாயம்தான் என் எதிர்காலம் என முடிவெடுக்கும் மகனுக்குமான போராட்டம்! - ஶ்ரீகாரம்

படம்
          Director: Kishor B Produced by: Ram Achanta, Gopichand Achanta Writer(s): Kishor B, Sai Madhav Burra (dialogues)         ஶ்ரீகாரம் விவசாயம் செய்யவேண்டாம் வாழ்க்கை நாசமாகிவிடும் என்று கூறும் அப்பாவுக்கும் . விவசாயம்தான் என் எதிர்காலம் என்று சொல்லும் ஐடி பையன் என இருவருக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை . மேலே சொன்னதுதான் படத்தின் முக்கியமான கதை . இதைச்சுற்றி , ஐ . டி துறை வேலை , அதிலுள்ள பிரச்னைகள் , படத்தின் நாயகனை கல்லூரி தொடங்கி வேலை செய்யும் கம்பெனி வரை துரத்தி காதல் செய்யும் சைத்ரா , கிராமத்தில் விவசாயத்தில் நஷ்டமாகி நகரத்திற்கு வந்து கூலிக்கு பிழைக்கும் மனிதர்கள் , வட்டிக்கு பணம் கொடுத்து அதற்கு அடமான நிலங்களை வாங்கி கொண்டு பணக்கார நிலக்கிழாராக மாறி ஊர் மொத்தமும் தன்னைப் புகழவே்ண்டும் , ஊரின் பெயரை ஏகாம்பர புரம் என மாற்றி வைக்கவேண்டும் என பேராசையுடன் வாழ்பவர் என கிளைக்கதைகள் உள்ளன . படத்தின் கதையைச் சொல்லும்போதே விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி நிறைய வீடியோக்களை சர்வானந்த் பார்த்திருப்பார் போல . படம் முழுக்க பொங்கல் தின்று காபி குடித்து வயிற்று பொருமல்

பொய் சொல்லி இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழையும் பொறியாளன், எதிரியை அன்பால் வெல்லும் கதை! - பர்சனல் டேஸ்ட் 2010

படம்
        பர்சனல் டேஸ்ட்  கொரிய தொடர் தொடரை இலவசமாக யூட்யூபில் பார்க்கலாம்.  எழுத்து  கிம் ஹி ஜூ இயக்கம் சன் ஹியூங் சுக், நோ ஜாங் சான்  கொரிய சூப்பர் ஸ்டார் லீ மின் ஹோ நடித்திருக்கிறார். தொடரில் முக்கியமான கதை,  லின் ஹோவின் எம் கட்டுமான நிறுவனத்திற்கும், மிராயே நிறுவனத்திற்கும் நடக்கும் தொழில்போட்டிதான் . லீ மின்ஹோவின் தந்தை மிராயேவில் வேலை செய்தாலும் கூட அவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்கியிருந்த வீடு கூட துரோகம் செய்த நண்பரால் கைப்பற்றப்படுகிறது. அப்படி துரோகம் செய்தவர்தான் மிராயே கட்டுமான உரிமையாளர். அவரை பழிவாங்கவேண்டும் என துடிப்பாக இயங்கும் லின் ஹோவுக்கு சரியான வாய்ப்பாக டேம் ஆர்ட் கேலரி திட்டம் வருகிறது. அதில்  போட்டியிடுகிறார்.  அந்த நிறுவனத்தினர் சாஞ்ஜோ எனும் கட்டுமான அமைப்பின் படி கட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் என்ற ரகசிய செய்தி லின் ஹோவிற்கு கிடைக்கிறது. அந்த அமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பேராசிரியர் பார்க் என்ற கட்டுமானக் கலைஞரின் வீட்டுக்கு சென்று ப்ளூபிரிண்டுகளை பார்க்க வேண்டும். ஆனால் அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். கொரியாவில் அவரது

ஸ்மார்ட்போன் ஆப் வழியாக மாட்டிக்கொள்ளும் மனிதர்கள்! - சீன ஆப்களின் இன்ஸ்டா லோன் பயங்கரம்!

படம்
                கடன் ஆப்கள் - கடன் பெற்றவர்களை அவமானப்படுத்திக்கொல்லும் கொடூரம் ! சீனாவைச் சேர்ந்த கடன் ஆப்கள் மூலம் கேரளம் , தமிழகம் , தமிழகம் மாநிலங்களைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்துள்ள நிலை வேதனைக்குரியது . எப்படி இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது ? மொபைல் ஆப்கள் மூலம் இன்ஸ்டன்டாக கடன்கள் கிடைப்பதுதான் இதனை பலரும் நாடிச்செல்லுவதற்கு முக்கியக் காரணம் , பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த பலரும் இந்த ஆப்களில் கடன் வாங்கியுள்ளனர் . கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் பலரும் வங்கியல்லாத பல்வேறு நிதிநிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு செயல்பட்டு வருகின்றன . இதில் கடன் வேண்டும் என்பவர்கள் தங்களை ஒரு செல்ஃபீ எடுத்து பதிவிடுவதோடு , ஆதார் கார்டு தகவல்களையும் தர வேண்டும் . கடன்களைப் பெற்றவர்கள் அதனை கட்டுவதற்கு 91 முதல் 360 நாட்கள் காலம் தருகிறார்கள் . கடன் பெற்றவர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு கடனை கட்டுவதற்கான நிர்ப்பந்த அழைப்புகள் தொடர்புடைய கடன் நிறுவனங்களிலிருந்து வரத்தொடங்கும் . போனில் கடன் ஆப்களை தரவிறக்கும்போது ஒருவரின் போன்புக் தகவல்கள் அனைத்தும் சீன நிறுவனங்களுக்க

வங்கிகளின் வகைகள் என்ன, அதன் தகுதி, திறன்கள்!

படம்
          பணம் கையாளப்பழகுவோம் வங்கிகளின் புதிய பிரிவுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாரம்பரியமான வங்கிகள் மட்டுமன்றி , நவீன காலத்திற்கேற்ப நிதி வங்கிகள் , சிறிய வங்கிகள் தொடங்கப்பட்டு வருகின்றன . இவ்வகை நிறுவனங்கள் பாதுகாப்பான சூழலில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன .     நிதி வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ .1 லட்சம் அளவுக்ககு மிகாமல் டெபாசிட் பெறலாம் . ஏடிஎம் , டெபிட் கார்டுகளை வழங்கலாம் . கிரடிட் வழங்க முடியாது . கடன்களை வழங்க முடியாது . நிதி வங்கிகள் மியூசுவல் பண்ட் மற்றும் காப்பீடு தொடர்பான சேவைகளை வழங்குகிறார்கள் . சிறு வங்கிகள் இவை சிறு , குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ .25 லட்சம் வரை கடன்களை வழங்குகின்றன . முறைப்படுத்தாத துறை சார்ந்து சிறு வங்கிகள் செயல்படுகின்றன . வணிகப் பிரதிநிதி   இவர் வங்கி சார்ந்து அதன் பிரதிநிதியாக செயல்படுபவர் . தொலைதூர கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்களை தேடிச்சென்று அவர்களுக்கு தேவையான வங்கிச் சேவைகளை வழங்குவார் . பிரதிநிதியின் பணிகள் வங்கிக்கணக்கு தொடங்க உதவுவது

தடுமாறும் மாநிலங்களின் வருமானம்!

படம்
சர்வதேச ரேட்டிங் நிறுவனமான மூடி, இந்தியாவின் வளர்ச்சிவீதத்தைக் குறைத்துள்ளது. இதனால் மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மாநிலங்களின் பங்களிப்பு இதில் குறைந்துபோனதுதான். நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டினாலும் தொடர்ச்சியாக இந்த வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசு பற்றாக்குறை பிரச்னையில் இருந்து தப்பிக்கும். 2019ஆம் ஆண்டு இந்திய அரசு 6.7 சதவீதம் அளவுக்கு உற்பத்தி பற்றாக்குறையை எதிர்பார்த்தது. மாநில அளவில் இது 3.7 சதவீதம் அளவுக்கு உள்ளது. ஜிஎஸ்டி உதவாதது ஏன்? நேர்முகம், மறைமுகமாக பல்வேறு வரிகள் இருந்தன. மத்திய அரசு அதனை மாற்றி 2017 இல் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. இதில் நேரும் இழப்பீடுகளுக்கு மாநிலங்கள் மத்திய அரசை நம்பியுள்ளன. இந்த இழப்பீட்டையும் அரசு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தரும், அதற்கு பிறகு வரி பங்கீடு படி கிடைக்கும் தொகை மட்டுமே மாநிலங்களுக்குச் சேரும். மாநிலங்களில் உற்பத்தி குறைந்து போனதால், ஆண்டுதோறும் பத்து சதவீதம் என வரிவருவாய் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, மாநிலங்களில் பொருளாதார வள

கடன் பத்திர வெளியீடு இந்திய அரசைக் காக்குமா?

படம்
flipboard.com  கடன் பத்திர வெளியீடு அரசைக் காக்குமா? இந்தியா, சரிந்துவரும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செலவுகளுக்கான நிதி திரட்டும் முயற்சியாக, இந்திய அரசு கடன் பத்திரங்களை ('Sovereign Bond') வெளியிட்டு வருகிறது. தற்போது புதிய நடவடிக்கையாக வெளிநாட்டினரும் இப்பத்திரங்களை வாங்க முடியும் என்ற அரசின் முடிவு, பொருளாதார வல்லுநர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அரசு தன் செலவுகளுக்கான நிதியை இருவழிகளில் பெறலாம். வரி மற்றும் பத்திரங்கள் வெளியீடு. வரியை உயர்த்துவது கடுமையான சட்டச்சிக்கல்களைக் கொண்டது. எனவே பல்வேறு நாடுகள் முதிர்வுகாலத்தைக் கொண்ட கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இதனை மக்கள் அல்லது நிறுவனங்கள் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அரசு, குறிப்பிட்ட முதிர்வுகாலத்தில் வட்டியுடன் கடன் பத்திரத் தொகையைத் திருப்பி தரவேண்டும். அரசு இப்பொறுப்பில் தவறினால், ரிசர்வ் வங்கி தொகையைத் திருப்பித் தரும்.  இதில் என்ன பிரச்னை? தன் செலவுகளுக்கான நிதி திரட்ட இந்திய அரசு உள்நாட்டுச்சந்தையில் பத்திரங்களை வெள

லவ் இன்ஃபினிட்டி: யார்க்கும் கடன் கொடுக்க மாட்டேன்

படம்
Pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அரசு கார்த்திக், பிருந்தாஸ்ரீனி நீ என்னதான் பேச மாட்டேன்னு சொன்னாலும் என்னோட மனசு கேட்கவே மாட்டேங்குது. அப்புறம் Mahadevi கிட்ட Question Paper காசு நீ கேட்டே. அது என்கிட்ட கேட்டது. நான் தராமல் இருப்பேனா? சொல்லு. அது திருப்பிக் கொடுத்தது. நான் வாங்கலை. அன்னிக்கு கை நீட்டுன்னு விளையாட்டா மகா சொல்ல நான் வெகுளியாக நீட்டிட்டேன். டக்குன்னு காசை கையில வெச்சிருச்சு. ஏமாந்துட்டேன். நான் யார்கிட்ட கடன் வாங்கினாலும் கொடுக்க மாட்டேன். யாருக்காவது கொடுத்தாலும் திருப்பித்தான்னு கேட்க மாட்டேன்.  ஏன்னா Friends குள்ள Rs problem  வந்துடும். நான் இதுவரை உன்கிட்டே காசே கேட்டதில்லை. இப்பத்தான் கண்டுபிடிச்சேன். Jolly யா எதுவும் எழுத முடியலை. ஆடிப் பண்டிகைக்கு ஸ்ரீராம் என் வீட்டுக்கு வரணும்னு சொன்னான். So அன்னிக்கு ஸ்ரீராம் கூடத்தான் program. எங்க வீட்டுக்கு எல்லாரையும் கூட்டிப்போறது பள்ளிக்கூட,த்துல இருந்தே தொடங்கியிருச்சு. நான் ரொம்ப பேதம் பார்க்கிறது இல்ல. Monthly Test ல ஒண்ணுமே எழுதலை. செல்வா புக்கைப் பார்த்து எழுதிருவான். அவன் ப