இடுகைகள்

கணினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2020 ஆண்டின் சிறந்த கணினி மென், வன்பொருட்கள்!

படம்
      2020 ஆண்டின் சிறந்த கணினி மென் , வன்பொருட்கள் சிறந்த விபிஎன் புரோடான் விபிஎன் தகவல்களை சேமித்து வைக்காமல் சேவையை வழங்குகிறது . இதன் இமெயில் சேவை புகழ்பெற்றது . இதனை காசுகொடுத்து அல்லது இலவசமாக நீங்கள் பயன்படுத்தினாலும் சிறப்பாக செயல்படுகிறது . தனிப்பட்ட அந்தரங்கம் சார்ந்த பாதுகாப்பு என்பதில் கவனம் செலுத்துகிற ஸ்விட்சர்லாந்து கம்பெனியின் தயாரிப்பு . காசுதான் முக்கியம் என்று சிலர் சொன்னால் முல்வட் விபிஎன் என்ற மென்பொருளைப் பயன்படுத்தலாம் . பாஸ்வேர்டு கூட இல்லாமல் இதனை இயக்கலாம் . மாதம் ஐந்து டாலர்களை செலுத்தினால் சிறப்பான சேவையை அளிக்கிறார்கள் . இதிலேயே எலைட்டாக விபிஎன் வேண்டும் என்பவர்களுக்கு நார்டுவிபிஎன் தெரிந்திருக்கும் . அதனை மாதம் 11 டாலர்கள் செலுத்தி பயன்படுத்தலாம் . சிறந்த வெப்சைட் டிசைனர் விக்ஸ் வெப்சைட்டுகளை உருவாக்கும் துறையில் முன்னணியில் இருப்பது இப்போதைக்கு விக்ஸ்தான் . எளிமையான் வடிவமைப்பு , அனிமேஷன் , மொபைல் ஆப்ஸ்கள் என காசு கொடுத்தால் ஏகப்பட்ட ஆப்ஷன்களை கொடுக்கிறார்கள் . வெப்சைட்டை இணையத்தில் சேமித்தும் வைத்துக்கொள்ள இணையத்தில்

இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளை விரிவாக பேசும் நூல்

படம்
      புத்தகம் புதுசு! எ நியூ ஐடியாஸ் ஆப் இந்தியா ஹர்ஸ் மதுசுதன் ராஜீவ் மந்திரி வெஸ்லேண்ட் ப.384 ரூ.799 இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளை விரிவாக பேசும் நூல் இது. இத்துறையில் உள்ள ஆசிரியரின் அனுபவம் நூலின் பக்கங்களை வாசிக்க வைக்கிறது. ஹவ் டு ரைஸ் எ டெக் ஜீனீயஸ் சானெய்லா சயீத் ஹாசெட் ப. 256 ரூ. 599 நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக்கொண்டு கணினி தொடர்பான பல்வேறு தியரிகளை எப்படி கற்றுக்கொள்ளமுடியும் என பலரும் நினைப்பார்கள். ஆனால் அது சாத்தியம்தான் என்று சொல்லுகிறது இந்த புத்தகம். தி இன்கிரடிபிள் ஹிஸ்டரி ஆப் தி இந்தியன் ஓசன் சஞ்சீவ் சன்யால் ப.256 ரூ. 250 இந்தியப் பெருங்கடல் பற்றிய நிலப்பரப்புரீதியான வரலாற்றை பேசுகிறது இந்த நூல். நிறைய நுட்பமான தகவல்களை நூல் முழுக்க தூவியிருக்கிறார்கள். படித்து பரவசமடையுங்கள். குயின் ஆப் எர்த் தேவிகா ரங்காச்சாரி ப. 200 ரூ. 299 ஒன்பதாவது நூற்றாண்டில் ஒடிஷாவில் நடைபெறும் கதை. இதில் நாயகி பல்வேறு அரசியல் சதிகள், துரோகங்களை சந்தித்து எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். TNIE

ஐபிஎம் கணினியை மிஞ்சும் புதிய ரக குவாண்டம் கணினி!

படம்
          cc     புதிய குவாண்டம் கணினி !   அமெரிக்காவைச் சேர்ந்த ஹனிவெல் கணினி நிறுவனம் , உலகிலேயே சக்தி வாய்ந்த குவாண்டம் கணினியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது . ஹனிவெல் நிறுவனம் கூறியபடி , குவாண்டம் கணினி அமைந்தால் அது ஐபிஎம் நிறுவனத்தின் குவாண்டம் கணினிக்கு அடுத்தபடியாக அமையும் . பொதுவாக இக்கணினிகளின் கணக்கிடும் திறன் , தவறுகளின் எண்ணிக்கை ஆகியவை அதன் குவாண்டம் வால்யூம் அளவைப் பொறுத்து அமையும் . ஹனிவெல் குவாண்டம் கணினியின் அளவு 64 குவாண்டம் பிட்ஸாக உள்ளது . இது ஐபிஎம் கணினியின் திறனுக்கு அடுத்தபடியான திறன் கொண்ட கணினி ஆகும் . ” குவாண்டம் கணினியின் திறனை அளவிட 120 அல்காரிதம்கள் பயன்படுத்தப்படுகின்றன . எங்களது கணினி , அதிக தகவல்களைக் கொண்ட கணிதத்தை செய்யும் திறன் பெற்றது” என்கிறார் ஹனிவெல் நிறுவனத்தின் இயக்குநரான டோனி உட்லே . இக்கணினி , எந்திரவழி கற்றல் , வேதியியல் , பொருள் பற்றிய அறிவியல் ஆகிய துறைசார்ந்த அறிவைக் கொண்டது . மேலும் இக்கணினியின் திறன் காலத்திற்கேற்ப அதிகரிக்கும்போது , பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறன் பெற்று விளங்க வாய்ப்புள்ள

கொரோனாவை ஒழிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உதவுமா?

படம்
கொரோனாவுக்கு பல்வேறு மருந்துகள் கண்டறிய உலகம் முழுக்க ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். வைரஸ்களின் டிஎன்ஏ மாற்றிக்கொள்ளும் இயல்பால் அதனை அழிப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. எந்தெந்த வேதிப்பொருட்களை சேர்த்தால் வலிமையான மருந்தாக உருவாக்க முடியும் என சூப்பர் கணினியை நம்புகின்றனர் ஆய்வாளர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகம், சுமித் எனும் சூப்பர் கணினியை தங்களது ஆய்வுக்காக அணுகியுள்ளது. ஐபிஎம்மின் சூப்பர் கணினி எழுபதிற்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை ஒன்றாக கலந்து கொரோனாவிற்கான மருந்தை கூறியுள்ளது. சாதாரணமாக ஆய்வகங்களிலேயே மருந்துகளை கண்டுபிடிக்காமல் ஏன் கணினி மூலம் மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள்? காரணம், சாதாரணமாக ஆய்வு செய்து கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். வேதியியல் மற்றும் இயற்பியல் தெரிந்த நிபுணர்கள் மூலம்தான் நாங்கள் கணினிக்கான தகவல்களை உருவாக்கியுள்ளோம். வெறும் புரதங்களை மட்டும் கணினி கூறாமல் எந்த வேதிப்பொருட்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூட கணினி வரிசைப்படுத்தியுள்ளது என்கிறார் ஐபிஎம் கணினியைச் சேர்ந்த டேவ் துரக். நன்றி - டிஜிட்டல் டிரெண்ட்ஸ்

2020ஆம் ஆண்டின் அசத்தல் விளையாட்டுகள்

படம்
தி லாஸ்ட் ஆஃப் அஸ் பாகம் 2 சோனியின் தயாரிப்பு. அதற்கேற்ப அசரடிக்கும் சூழல்களும், சவால்களும் நாயகியான எல்லியைப் போலவே நம்மையும் அதிர்ச்சியடைய செய்கின்றன. இந்த விளையாட்டை விளையாடும் முன்பு இதற்கு முந்தைய பாகத்தை விளையாடிவிட்டு இதனை தொடுவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள மாற்றங்கள் தெரியும். சைபர் பங்க் 2077 எதிர்காலத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை டிஜிட்டல் இயந்திரங்கள் ஆக்கிரமிக்கின்றன. அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுகிறார்கள். பல்வேறு திரைப்படங்கள் உங்கள் மனதில் ஓடினால் அதற்கு ஹாலிவுட்தான் காரணம். இந்த விளையாட்டு அல்ல. இந்த கொடுமையை செஞ்சவன சுட்டுப் பொசுக்கணும் சார் என பொங்கினால் நீங்கள் இந்த விளையாட்டை மதர் பிராமிசாக விளையாடலாம் ப்ரோ. ஃபைனல் ஃபேன்டசி 7 இதுவும் சோனியின் கைவண்ணம்தான். பழைய கிளாசிக் விளையாட்டை ரீமேக்கியிருக்கிறார்கள். விளையாடிப் பார்த்துவிட்டு நீங்களே நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். அனிமல் கிராசிங் நினென்டோவின் விளையாட்டு. 2020க்கான தன் திட்டங்களை கம்பெனி நிறுத்திவிட்டதாக சொல்லும் நிலையில் இந்த விளையாட்டின் பொசிஷன் என்னவென்று யாரிட

தானியங்கி கார்களின் ஆண்டு தொடங்குமா?

படம்
giphy 2020 கேள்வி பதில்கள் தானியங்கி கார்கள் சாலையைத் தொடுமா? கூகுளின் வேமோ நிறுவனம் தானியங்கி கார்களுக்கான ஆராய்ச்சியில் உள்ளது. ஆனால் இதில் இன்னும் பல்வேறு கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. பயணிகளை சரியானபடி கவனித்து கார்கள் செல்லவேண்டியதில் பயிற்சி தேவைப்படுகிறது. இல்லாதபோது விபத்துகளை சந்திக்கவேண்டும். இந்த ஆண்டில் சாலைக்கு வர தானியங்கி கார்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.ஆராய்ச்சிகள் வேகம் பிடித்துள்ளதுதான் காரணம். தகவல்களை பாதுகாப்பதில் இனி டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுமா? நமது தகவல்கள் பாதுகாக்கப்படுமா? இணைய உலகில் இப்படியொரு கேள்வியா?இலவசம் என்று வரும் சேவைகள் எப்படி தகவல்களை பாதுகாப்பவையாக இருக்கும் என நம்புகிறீர்கள். ஐரோப்பிய யூனியன் போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தால்தான் அதெல்லாம் சாத்தியம்.விதிமுறைகளை கடைபிடித்தால்தானே அவையெல்லாம் நடைமுறைக்கு வரும். டெக் நிறுவனங்கள் அடிக்கடி அபராத பிரச்னையில் மாட்டுவதே விதிகளை கடைபிடிக்காத மூர்க்கமான வியாபார வெறிக்காகத்தான். பிரைவசி செட்டிங்குகளை நீங்களே செய்துகொள்ளுங்கள். நிறுவனங்களை அந்தளவுக்கு மட்டுமே நம்பலாம்.

கைதிகளுக்கு மறுவாழ்க்கை தருகிறது பின்லாந்து!

படம்
சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி! செய்தி: பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது. பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர். தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது. “இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வ

க்வெர்ட்டி கீபோர்டு எப்படி சந்தையில் வென்றது?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி க்வெர்ட்டி கீபோர்டை நாம் பயன்படுத்துவது எதற்காக? படத்தில் உள்ள டிசைனைப் போன்ற கீபோர்டைப் பயன்படுத்தித்தான் பல இலக்கியச் செல்வங்களை நவீன எழுத்தாளர்கள் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால் இந்த வடிவம்தான் தட்டச்சுப்பலகையில் உள்ளது. விக்கிப்பீடியா இம்முறை டைப் செய்ய சரியாக உள்ளது என்று கூறமுடியாது. ஆனால் தற்போது கீபோர்டு என்பதே பெரும்பாலும் க்வெர்ட்டி முறையைத் தான் பின்பற்றுகின்றன. 1860 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் லதாம் ஷோல்ஸ் என்ற டெக் மனிதர், இதுபற்றிய ஆராய்ச்சி செய்து வந்தார். ஏராளமான லே அவுட் விஷயங்களை வைத்து, எது அலுவலகத்திற்கு பயன்படும் என்று ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இறுதியாக 1867ஆம் ஆண்டு தனது லேஅவுட் ஒன்றை உருவாக்கி அதற்கு காப்புரிமையும் பெற்றார். இன்று நாம் பயன்படுத்தும் கீபோர்ட் ஏறத்தாழ ஷோல்ஸின் வடிவத்தை ஒத்ததுதான். அவரின் முதல் கீபோர்ட் அகரவரிசைப்படி உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக டைப் செய்ய பலரும் எழுத்துக்களைத் தேடிக்கொண்டு இருந்தனர். அப்போது மோர்ஸ் கோட் ரகத்திலும் டைப் செய்துகொண்டிருந்தனர். எனவே எஸ், இ, இசட் ஆகிய எழுத்துகள்

இணையம் என்பது ஜனநாயக பூர்வமாக மக்களுக்கானதே! - வின்ட் செர்ஃப்

படம்
நேர்காணல்  வின்ட் செர்ஃப் இணையம்  அமெரிக்காவின் ராணுவத்தின் மூலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. இணைய இணைப்பின் மூலம்தான் வெப் உருவாக்கப்பட்டது. எனவே இதில் குழம்பி நிற்கவேண்டாம். இப்போது இணையத்தின் மூலம்தான் நாம் அனைத்து விஷயங்களையும் பெறுகிறோம். வாழ்கிறோம். செய்திகளை பகிர்கிறோம். அலுவலகப் பணிகளையும் பலர் இனி க்ளவுட்டில்தான் செய்யமுடியும். மென்பொருள் நிறுவனங்கள் அதற்கான சேவைகளையும் தொடங்கிவிட்டனர். எனவே கணினி என்பது டைப் செய்வதற்கான கீபோர்டு, சுட்டுவதற்கான மௌஸ் மட்டும் கொண்டிருந்தால் போதுமானது. வன்தகடு என்பது மிக குறைவாக இருந்தாலே போதும். அனைத்தையும் நாம் இணையத்தில் சேமித்துக் கொள்ள முடியும். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வின்ட் செர்ஃப், படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 26. தகவல் பாக்கெட்டுகள் பற்றிய இவரும், ராபர்ட் கானும் சேர்ந்து உருவாக்கினர். டிசிபி , ஐபி எனும் புரோட்டோகால்களை உருவாக்கி ஆட்கள் இவர்கள். இன்றும் கூகுளுக்கான ஆலோசகர்களாக உள்ளனர். உங்களை இணையத்தின் தந்தை என்கிறார்களே? உண்மையில் இப்படி அழைக்கப்படுவது தற்செயலாக நடந்த நிகழ்

அரசின் அநீதியால் உயிர்துறந்த கணினி மேதை - ஆலன் டூரிங்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர் ஆலன் டூரிங் கணினி சாதனையாளர். இன்று அமேசான், கூகுள் எல்லாம் கோயில் கட்டி வழிப்படும் அளவுக்கு ஏ.ஐ விஷயங்களைச் செய்தவர். என்க்ரிப்ஷன் முறைகளைக் கண்டுபிடித்தவர். ஜெர்மனியைத் தோற்கடிக்க பிரிட்டிஷாருடன் இணைந்து உழைத்தார். ஆனால் அதற்கு பரிசாக பிரிட்டிஷ் அரசு, எதிரிக்கு உதவினார் என்ற பெயரில் ஆலனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. எழுத்தாளர் ஆஸ்கர் வைல்டும் இதேபோல் அப்போது கைது செய்யப்பட்டிருந்தார். அரசு அவரின் திறமையை விட தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டியெடுக்க முயன்று வெற்றியும் பெற்றது. இதன்விளைவாக ஆலன், இன்னொருவருடன் வைத்திருந்த ஓரினச்சேர்கை உறவு வெளிவர, மக்களால் இகழப்பட்டார். இதனால் இரண்டே ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்து இறந்தார். சயனைடு அவரின் படுக்கையறையில் இருந்து பெறப்பட்டது. அன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கருத்து நிலவி வந்தது. இதனை நியாயப்படுத்த பிரிட்டிஷ் அரசு, அவரின் மனநிலை சரியில்லை என்று கூறியது. அவர் தற்கொலை செய்துகொண்டது உண்மை. அதற்கான காரணம் என்ன என்று உறுதியாக தெரியவில்லை என்று அரசு கூறிவிட்டது. ஆனால் அரசி

மூளையை கணினியுடன் இணைத்து உணர்ச்சிகளையும் உருவாக்கலாமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் நம்முடைய மூளையை கணினியில் இணைக்கும்போது நம்முடைய உணர்ச்சிகளும் அதில் பதிவாகுமா? எலன்மஸ்க் ஏற்கனவே தன் எண்ணத்தைச் சொல்லி நியூராலிங்க் எனும் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார். எனவே நிச்சயம் எதிர்காலத்தில் நம்முடைய மூளை ஏதோவொரு கணினியில் இணைக்கப்படும். அப்போது நம் மூளையிலுள்ள கருத்துகள் எண்ணங்கள் உணர்ச்சிகளும் கணினியில் பதிவாகுமா? மூளையில் நியூரான்கள், கிளியல் செல்கள், ரத்தசெல்கள் இவற்றில் நடக்கும் வேதிவினைகள்தான் நம் எண்ணங்களுக்கு காரணம். ஒருவரின் உடலை விட்டு உயிர் பிரிந்தபின்னரும் கூட அவரின் மூளை மூலம் அவரின் எண்ணங்களை உயிரோடு வைத்திருக்க முடியும். இதனை பின்னர் இன்னொருவரின் உடலோடு கூட பொருத்தமுடியும் என்று வையுங்களேன். நினைவில் கொள்ளுங்கள். இயற்கையான மூளையிலிருந்து டிஜிட்டல் பிரதி உருவான பிறகு, இயற்கை மூளை குப்பையில் எறியப்பட்டு விடும். அதுவே உண்மை. அதற்குப்பிறகு மனித உடலை டிஜிட்டல் முறையில் செயற்கையாக நாமே வடிவமைத்துக்கொள்ள முடியும். இதற்கான சாட்சிகளை நாம் விரைவில் பார்க்கத்தான் போகிறோம். நன்றி: பிபிசி 

மனிதர்களை மூளையைச் சுரண்டுகிறாரா எலன் மஸ்க்?

படம்
மூளையைக் கட்டுப்படுத்தும் கேட்ஜெட்ஸ்! மூளையைக் கணினியுடன் இணைத்து ஆராயும் முயற்சிகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. கனடாவைச் சேர்ந்த எலன் மஸ்கின்  நிறுவனமான நியூரா லிங்க் (Neuralink) எனும் நிறுவனம், 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கம், மனிதர்களின் மூளையைக் கணினியுடன் இணைப்பதுதான். தன் திட்டங்களை ரகசியமாக வைத்திருந்த இந்நிறுவனம், தற்போது தன் ஆராய்ச்சிச் செய்தியை வெளியிட்டுள்ளது. மனிதர்களின் எண்ணங்களை இயந்திரங்கள் படிப்பதுதான் திட்டத்தின் நோக்கம். இம்முறையில் நம் தலைமுடியை விட மெல்லியதாக உள்ள எலக்ட்ரோட்ஸ் (மின்கடத்தி), மூளையிலுள்ள நியூரான்களை கண்காணித்து செயற்படுகிறது. 3000 எலக்ட்ரோட்ஸ் இம்முறையில் மனிதரின் தலையில் இணைக்கப்படுகிறது. ஒரு எலக்ட்ரோட்ஸ் ஆயிரம் நியூரான்களைக் கண்காணிக்கிறது. இதனைக் காதுக்கு அருகில் பொருத்தும் கருவி ஒருங்கிணைத்து ஸ்மார்ட்போனின் ஆப்புக்கு தகவல் அனுப்புகிறது. இம்முறையில் கை, கால்கள் செயலிழந்த மனிதர்களுக்கு உதவிகளை வழங்க முடியும் என்கிறது நியூராலிங்க் நிறுவனம். இந்நிறுவனம் மட்டுமல்ல; மூட்டுகள் செயல்படாதவர்களுக்கென பிர

கணினி புரோகிராமிங் அறிவு தேவை!

படம்
 இந்தியாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய கல்வி வாரியங்கள் கணினிபுரோகிராமிங்கை பாடமாக கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளன. இன்று வீட்டு ஹாலில் உள்ள ஸ்மார்ட் டிவிகள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கார்டூன் தொடர்களை ஒரம்கட்டியுள்ளன. வீட்டில் விளையாடும் செஸ் போன்ற விளையாட்டுகளும் கூட அந்த காலத்தில் விளையாடிய விளையாட்டுகளாகிவிட்டன. வீட்டினுள்ளே அல்லது வெளியே விளையாடும் விளையாட்டுகளை விட இணைய விளையாட்டுகள், புதிர்களையே சிறுவர்கள் இன்று விரும்புகின்றனர். எனவேதான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 6,7, 8 ஆம் வகுப்புகளில் விசுவல் பேசிக் மற்றும் ஹெச்டிஎம்எல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.  ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9, 10ஆம் வகுப்புகளில் ஜாவா, சி மொழி ஆகிய பாடங்கள் கற்றுத்தருகின்றனர். ஆனால் இது கட்டாயமல்ல: மாணவர்களின் தேர்வாகவே இருக்கிறது. தற்போது தொடக்கப் பள்ளியில் படிக்கும் 65 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, தற்போதுள்ளவற்றை விட மாறுபட்டதாக இருக்கும் என்று வேர்ல்டு எகனாமிக் ஃபாரம் தன் எதிர்கால வேலைவாய்ப்புகள் என்ற அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. எதிர்கால வாய்ப்புகள் கணினி புரோகிராமிங் ம

டீப் நியூட் ஆப்புக்கு என்ன இன்ஸ்பிரேஷன்?

படம்
எழுபது எண்பதுகளில் கண்ணாடி மூலம் பிறரின் ஆடை தாண்டி பார்க்குற கலாசாரம் இருந்துச்சு. டீப் நியூட் லோகோ கூட அதைத்தான் சொல்லுது. நான் பல பத்திரிகைகள், இதழ்கள் பார்த்துத்தான் இதை டிசைன் பண்ணினேன். இரண்டு, மூணு ஸ்டார்ட் அப் பண்ணினேன். எல்லாமே தோல்வி. அந்த நஷ்டத்தை இதில் ஈடுகட்ட முடியும்னு நம்பினேன். இந்த ஆப்பை செஞ்சதால நான் வாயேரிச ஆள்னு நினைச்சுராதீங்க. ஜஸ்ட் எனக்கு டெக்னாலஜின்னா புடிக்கும். அவ்வளவுதான். இப்போ நீங்க பார்த்த து பெண்களுக்கானது. அடுத்த ஆண்களுக்கானதை ரெடி செஞ்சு வருவேன். நீங்க பாத்த இந்த ஆப் ரெண்டு வருஷ உழைப்பில் ரெடியானது. பகல்ல பாக்குற போட்டோவை இரவுக்கு மாத்தும் டெக்னிக் பத்தி நிறைய படித்து கான் நெட்வொர்க்ஸ் மூலம் இதை செஞ்சேன். நிறையப் பேரு என்கிட்ட கேக்குறாங்க. இது தப்பில்லையா? பெண்களை நிர்வாணமாக காட்டுறதுன்னு... இதை நான் செய்யலீன்னா இன்னொருத்தர் செய்வார். இதை நீங்க தொழில்நுட்பமா பாக்கணும். டீப் நியூட் மட்டுமல்ல இதில் செய்யுறத நீங்க 30 நிமிஷ டுட்டோரியலைப் படிச்சா போட்டோஷாப் மூலமாக செய்யலாமே? Add caption நீங்க எந்த எண்ணத்துல இதில் இணைஞ்சிருக்கீங்களோ அது

கணினியில் நேரம் மாறாது இருப்பது எப்படி?

படம்
கணினியை ஆஃப் செய்து வைத்தாலும் கூட எப்படி சரியான நேரத்தைக் காட்டுகிறது? நெட்வொர்க் டைம் புரோட்டோகால் என்ற வசதிப்படி கணினி செயல்படுவதால் நேரமானது கச்சிதமாக மாறாமல் இருக்கிறது. இந்த புரோட்டோகால் யுடிசி எனும் கோஆர்டினேட் யுனிவர்சல் டைம் என்ற வசதியுடன் இணைந்து செயல்படுகிறது. 1985 ஆம் ஆண்டிலிருந்து நெட்வொர்க் டைம் புரோட்டோகால் அமைப்பு செயல்பட்டு வருகிறது. நன்றி: பிபிசி(செய்தி, படம்)

செயற்கை நுண்ணறிவு கேள்விகள்! - பதில் சொல்லுங்க பார்ப்போம்

படம்
Pexels.com ரோபோ குறித்து மூன்று விதிகளை உருவாக்கி புகழ்பெற்றவர் இவர். இன்றுவரை இவரின் விதிகளை அடிப்படையாக வைத்து ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவரின் லையர் என்ற சிறுகதையில்(மே 1941) இந்த விதிகள் எழுதப்பட்டன. யார் இந்த ஆளுமை? 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் மனிதர்களுக்கு எதிராக ரோபோக்களை பயன்படுத்தக்கூடாது என்று 200 க்கும் மேற்பட்ட டெக் கம்பெனிகள் போராடினர். இந்த போராட்ட அமைப்பின் பெயர் என்ன? ஐபிஎம் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது. இதன் சிறப்பு, நாம் கேட்கும் கேள்விக்கு உடனே டி.ஆர் போல பதில் சொல்லி அசத்தும். மனிதர்களுக்கு சமையல் சொல்லித் தருவதில் கூட திறன் காட்டி அசத்தியது. இந்த கம்ப்யூட்டரின் பெயர் தெரியுமா? சோனி தயாரித்த ரோபோ என்பதுதான் க்ளூ. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் இதன் ஸ்பெஷாலிட்டி. தன் எஜமானருக்கு ஏற்படும் பதினான்கு நோய்களைக் கண்டறிந்து உதவும் தன்மை கொண்டது இந்த ரோபோ. இப்போது நீங்கள் பெயரைக் கண்டுபிடித்திருப்பீர்களே? ரஷ்ய பணக்காரர் 2045 இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தை உருவாக்கினார். மனிதர்களின் மூளையை ரோபோக்கள் கட்டுப்படுத்